வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Short film. Show all posts
Showing posts with label Short film. Show all posts

Thursday, April 2, 2015

வீடு நெடுந்தூரம் (1) - குறும்பட விமர்சனம்

Guhan sir,

Viewed your "veedu neendathuram" in youtube! 

விமர்சனம் செய்தால் படத்தின் சுவாரஸ்யம் சிதைந்து விடுமென்ற வகையான கதைக்கரு என்பதனால் இவ்வாறு என் அபிப்ராயங்களைக் கூறிவிடுகிறேன்! 

முதலில் வழக்கமான அரைத்த மாவு அரைக்கும் பாணியில் இல்லாமைக்கு வாழ்த்துக்கள்! So the "ingate" of the film gets 50% நவீன கதை சொல்லும் யுக்திக்கு 20% ஒரே கதாபாத்திரத்துடன் தயாரிப்புச் செலவைக் குறைத்த சிக்கனத்திற்கு 10% செல்போன் பேச்சு என்று நம்பியிருந்த பார்வையயாளர்களுக்கு போலீஸ்காரர் (அது இரண்டாவது கதாபாத்திரம் என்றாலுமே கணக்கில் வராராததாகத்தான் கொள்ள வேண்டும்!) மூலம் ஒரு Twist ஐ தந்த தந்திரத்துக்கு 5% நட்பின் ஆழத்தை வலியுறுத்திய தரமான கரு விற்கு 10% 

So total 95% கொடுக்கலாம்! 

ஆனால்,  மூடம்பிக்கை என்ற நீரில் நினைத்த அப்பளம் போல ஈஷிக்கொண்டு உள்ளேயும் முழுங்க முடியாமல் வெளியேயும் துப்ப முடியாமல் ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதற்காக Minus 50% போட வேண்டியதாகிறது! 

- ராஜூ பாரதி.

 "வீடு நெடுந்தூரம்" குறும்படத்தை பார்க்க....

Thursday, November 13, 2014

உங்கள எப்படி கூப்பிடுறது ?

அஞ்சலிலியை எதுக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் அழைத்து வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அவளுக்கு உதவி செய்கிறேனா, பிரச்சனை கொடுக்க போகிறேனா என்பது கூட புரியவில்லை. அவள் கேட்டாள் என்பதற்காக அவளுக்காக செய்கிறேன்.

"என்ன கல்யாணம் பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"

இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இருந்தாலும் அவளின் உடல் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. பதினாறு, பதினெழு வயது தான். யாராக இருந்தாலும் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசை வரும்.

"எதுக்கு சிரிக்கிறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?"

 "அப்படியில்ல. சும்மா தான் சிரிச்சேன்."

"நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள்.

என்னுடன் வந்ததில் இருந்து பல முறை இந்த கேள்வியை கேட்டு விட்டாள். அவளாகவே அதற்கு பதில் சொல்லிக் கொண்டாள். நான் எதுவும் பேசவில்லை. சொல்லவும் விருப்பமில்லை.

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா !! " நான் அவளை பார்த்து முறைத்தேன். எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் பெயர் சொல்லி அழைப்பதை என்னால் ரசிக்க முடியவில்லை.

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?"

"நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ"

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" அஞ்சலி கேட்டாள்.

**

"சங்கர் ! ஃப்ரீயா இருக்கியாடா?" மதன் குரலில் ஓர் எதிர்பார்ப்பு கலந்து இருந்தது.

"ஃப்ரீயா தான்டா இருக்கேன் ! "

"சரஸக்கா வீட்டுல புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கு, சூப்பர்  கம்பேனி தரா. நானே ரெண்டு வாட்டி போனேன். நீ வரீயா."

"போடா ! நானே டென்ஷன்ல இருக்கேன்."

"என்னாச்சு ?"

"ரெண்டு வாரம் முன்னாடி பாண்டிக்கு போகும் பொது சூப்பர் பிகர் கம்பேனி கொடுத்தா. காண்டம் கட்டானது கூட தெரியாமா பண்ணியிருக்கேன். அப்போ தெரியல. இப்போ நினச்சா பயமா இருக்கு."

"ஒண்ணுமாகாது. இப்போ எல்லாம் நம்பல விட பொண்ணுங்க உஷார். டென்ஷனாகாத. சரஸக்கா வீட்டுல இருக்குற பொண்ண இரண்டு வாரத்துல சிங்கப்பூர் பேக்-அப் பண்ணுறாங்க. ஒரு வாட்டி ஜாலிய இருந்துட்டு வரலாம்."

சங்கர் மனசு சபலப்பட்டது. இரண்டு வாரம் முன்பு நடந்தை நினைத்து கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை விட மனமில்லை.

 "சரிடா போகலாம்."

 **

"அக்கா... அக்கா..."

"போடா தேவுடியா மகனே. இன்னொரு வாட்டி அந்த பொண்ண பத்தி பேசிட்டு இங்க வந்த உன்ன கொன்னுடுவேன்."

சரஸ்வதி அக்கா கோபமாக போனை வைத்தாள். 'அக்கா' அப்படி சொல்லி பழகிவிட்டது. அந்த வார்த்தைக்கு அவள் தகுதியற்றவள். மாமா வேலை செய்பவள். இருந்தாலும், என்னை போன்ற திருமணமாகாவதர்களின் உடல் பசியை தீர்த்து வைக்க பல பெண்களை வைத்திருக்கிறாள். அதற்காகவது அவளை 'அக்கா' என்று அழைக்க வேண்டியதாக இருக்கிறது.

அங்கு இருக்கும் எல்லா பெண்களை நிர்வாணமாக பார்த்திருக்கிறேன். ஆனால், அஞ்சலியிடம் நிர்வாணத்தை மீறி என்னை பாதித்திருக்கிறது. கண்டிப்பாக காதல் இல்லை. இப்போது, அதற்கு தகுதியானவன் நான் இல்லை. ஆனால், என்னால் அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாளா என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 "இன்னொரு தபா அந்த சங்கர் பய வந்தா சேத்துகாதீங்க..." கோபமாக லோகுவிடம் சொல்லிவிடு சாரஸ்வதி தனது இரண்டு அடியாட்களோடு சிங்கப்பூர் பார்ட்டியை பார்க்க வெளியே சென்றாள்.

எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. சரஸ்வதி அக்காவை சந்திக்க அவள் இடத்திற்கே சென்றுவிட்டேன்.

"டேய் ! உன்னதா அக்கா வர வேண்டாம் சொல்லிட்டாங்கள. அப்ப எதுக்கு மறுதாப வந்த..." லோகு என்னை வழி மறித்தான்

"இல்ல அண்ண. போன வாட்டி பணம் தரல. அந்த கோபம் தான் அக்காவுக்கு. இதோ பாருங்க போன வாட்டி வந்ததும் சேர்த்து இப்போ பணம் கொண்டு வந்திருக்கேன்."

 "சரி... சரி.. கொடு." என்று பணத்தை வாங்கி லோகு எண்ணி பார்த்தான்.

"எதுக்கு 5000 அதிகமா கொடுத்திருக்க."

 "அந்த அஞ்சலி பொண்ண ஒரு நாள் கூட்டிட்டு பொய் ஜாலிய இருக்கலாம் தான்."

"என்னது ஓவுட்டிங்க.. அப்போன 10000 ரூபாய் அச்சே."

"என்ன அண்ணே ! ரெகுலர் கஸ்டமர் அட்ஜஸ்ட் பண்ணமாட்டிங்களா..?"

"வேணும்னா இங்கையே இராத்திரி புல்லா இரு. வெளியே அனுப்ப முடியாது"

முடியாத காரியம். எப்படியாவது அஞ்சலியை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும். வேறு வழியில்லை அவன் கேட்கும் பணத்தை கொடுத்தேன். இது வரை செய்து வந்த பாவத்திற்கு அது பிராயிசித்தம்.

**




"என்ன சார் ஹோட்டல்லுக்கு போகலையா. இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க ?"

"ஒரு டெஸ்ட் எடுத்துட்டு போகலாம்..." என்றேன். அஞ்சலி உள் மனதில் சந்தோஷம்.

"அப்போ என்ன காப்பாத்த போறீங்களா...?"

"உனக்கு ப்ளட் டெஸ்ட் தான் கூட்டிட்டு வந்தேன். நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத."

அஞ்சலி உள்ளுக்குள் நம்பிக்கையிருந்தது. எப்படியாது இந்த நரகத்தில் இருந்து விடுபடுவோம் என்று.

சங்கர் தன்னை காப்பாற்றுவான் என்று நம்பினாள். தன்னை திருமணம் செய்துக் கொண்டால் சரி. வைத்துக் கொண்டாலும் சரி. பிரச்சனையில்லை. வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது. அவ்வளவு தான்.

ஒரு வேளை சரஸ்வதி மாதிரி வேறு யாரிடமாவது தன்னை விற்றுவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தாள். அது பிரச்சனையாக இருக்க போவதில்லை. இப்போது வாழ்கிற வாழ்க்கையை இன்னொரு இடத்தில் வாழப்போகிறோம். ஆனால், சரஸ்வதி வீட்டில் இருந்தால் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். தனது இளமையும், பணத்தை முழுவதுமாக அபகரிக்கப்படும். மீண்டும் இந்தியாவுக்கு வருவது, தனது அம்மாவை தம்பியை பார்ப்பது நடக்காத காரியம். அதனால், தன்னிடம் வரும் கஸ்டமர்களை ஒவ்வொரிடம் இங்கிருந்து அழைத்து செல்லும் படி கெஞ்சுவாள். அவர்கள் சொல்லுவதை எல்லாம் செய்வாள்.

ஆனால், அவளால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. சரஸ்வதிக்கு நெருக்கமானவர்கள் அவள் சொன்னதை போட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஒரு சிலர் அவள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முடிந்தவரை அவளை அனுபவிப்பார்கள்.

இப்போதைக்கு அஞ்சலிக்கு ஒரே வழி சங்கர் நம்பித்தான் ஆக வேண்டும். ப்ளேட் டெஸ்ட் ரிஸல்ட் வந்தது. சங்கர் நிம்மதி பெருமூச்சு விட்டான். அஞ்சலியை தனது பைக்கில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்றான்.

**

"அறிவுக்கெட்ட முண்டோம். அந்த சங்கர இங்க சேக்காத சொன்னா. ஒக்காலி அவன் கூட அனுப்பி வச்சிருக்க..."

"இல்லக்கா ! அவ போன வாடி தர வேண்டிய பணத்த கொடுத்தான்."

 "ஓ....தா.. அவள சிங்கப்பூர் பார்ட்டிக்கு இரண்டு லட்சம் விலை பேசி வச்சிருக்கேன்"

"எங்கக்கா போகப் போறான். ஆச தீர்ந்ததும் இங்க வந்து விட்டாகனும்."

"மயிரு... அவன் ஆசப்பட்டு கூட்டிட்டு போகல. காப்பாத்தனும் கூட்டிட்டு போயிருக்கான். அவன் பிரண்ட் மதன் தெரியும்ல."

 "தெரியும்க்கா..."

 "அவன வச்சி அந்த பையன தேடுங்க.. பஸ் ஸ்டெண்ட், ரயில்வே ஸ்டேஷன் இருக்குற நம்ப ஆளுங்க கிட்ட சொல்லிவை. ஓடுகாலி சிறுக்கி இன்னைக்கு இராத்திரிக்குள்ள வந்தாகனும்"

**

"உங்கள என்ன கூப்பிடுறது?" அஞ்சலி கேள்விக்கு எப்படி சொல்வது.

'அண்ணா' என்று சொல்ல முடியாது. எங்கள் உறவு அப்படியில்லை. பண்ணிரண்டு வயது இடைவேளை உள்ள ஆண், பெணுக்கு அண்ணன், தங்கை தவிர வேறு நாகரிகமாக உறவு சமூகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். வண்டி கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் வந்து நின்றது.

"என்ன கல்யாண பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"

"எதுக்கு சிரிக்கீறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?" 

"அப்படியில்ல. சும்மா தான் சிரித்தேன்."

 "நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள். 

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா" நான் அவளை பார்த்து முறைத்தேன். 

எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் வைத்து அழைப்பது என்னால் ரசிக்க முடியவில்லை. 

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கு வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?" 

 "நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ" 

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" 

அஞ்சலி கேட்டாள். என்னால் பதில் கூற முடியவில்லை. பதில் கூற நேரமும் இல்லை. சரஸ்வதி அக்காவுக்கு பஸ் ஸ்டெண்டிலும், ரயில் நிலையத்திலும் ஏஜெண்ட்டுகள் அதிகம். நிறைய கஸ்டமர்கள் இங்கிருந்து தான் பிடிப்பாள். நாங்கள் வந்திருபது கண்டிப்பாக இந்நேரம் அவளுக்கு தெரிந்திருக்கும். அதற்குள், அஞ்சலியை பாதுகாப்பாக ஒரு பஸ்ஸில் ஏற்றி விட வேண்டும்.

"நீ எந்த ஊருக்கு போக ஆசைப்படுற..."

"உங்க ஊருக்கு தான்."

"நா உன் கூட வரல. வரவும் முடியாது. இந்தா பணத்த வச்சிக்கோ.." என்று என் கையில் இருக்கும் ஐயாயிரத்தை தந்தேன்.

"இந்த தொழில விட்டு நல்ல படியா வேற வேலைய பாத்துக்கோ. சரஸ்வதி அக்கா மாதிரியான ஆளுங்க உன் வயசையும், உடம்பையும் எப்படி பணம் பண்ணலாம் தான் யோசிப்பாங்க..."

 "உங்களுக்கு என்கிட்ட இருந்து எதுவுமே வேண்டாம்னா. எதுக்கு என்ன காப்பாதுனீங்க..." அவள் தடுமாற்றம் தெரிந்தது. கொஞ்சம் காதல் கலந்திருப்பதாக தெரிந்தது. ஆனால், அதையெல்லாம் உணர்ந்து அவளிடம் அன்பாக பேச நேரமில்லை. சரஸ்வதி அக்காவின் ஆட்கள் வருவது போல் தெரிந்தது. அஞ்சலியை ஆந்திராவுக்கு போகும் பஸில் ஏற்றிவிட்டேன்.

அவளின் கண்கள் கலங்கி இருந்தது. அதை துடைக்கவோ, ஆறுதல் சொல்லவோ தோன்றவில்லை. அவள் பாதுகாப்பாக சென்றாள் போதும். சரஸ்ஸக்காவின் ஆட்கள் என்னை பார்த்துவிட்டார்கள். இங்கிருந்து நான் ஓட வேண்டும். அப்போது தான் என்னை துறத்திக் கொண்டு வருவார்கள். அஞ்சலிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஓடத் தொடங்கினேன்.

சரஸ்வதியின் ஆட்களும் என்னை தொரத்தத் தொடங்கினர்.அவர்களை ஏமாற்றிவிட்டு என் வண்டியை எடுக்க சென்றேன். என் வாண்டியை அவர்கள் நோட்டம் விட்டிருப்பார்கள் என்பதை நான் யோசிக்கவில்லை. கழுத்தில் பலமாக ஒருவன் தாக்கினான். நான் மயக்கமானேன். அவர்களின் மாருதி வண்டியில் ஏற்றினான். அங்கிருந்த பயணிகளும், காவலர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தண்ணியடித்தவனை தூக்கிக் கொண்டு செல்வது போல் சென்றனர்.

 சரஸ்வதி அக்கா அந்த வண்டியில் இருந்தாள். கோபமாக என்னை அறைந்தாள்.

"தேவிடியா மவனே... பத்து நிமிஷம் படுத்தானு அவள காப்பாதுறீயா. எங்கடா அவ."

 "சொல்ல முடியாது."

 மீண்டு அடிவிழுந்தது. நெற்றி போட்டில் லோகு துப்பாகி வைத்தான். அப்பவும் சொல்லவும் முடியாது என்றேன்.

"அவள விலை பேசிட்டேன். உனக்கு வேண்ணும்னா வேற பொண்ண எடுத்துக்க. வீணா லவ்வு கிவ்வு சொல்லி, அவளுக்காக அடி வாங்கி சாகதடா..."

எனக்கு சிரிப்பு தான் வந்தது.  ’காதல்’ அந்த வார்த்தைக்கு தகுதியற்றவன் நான்.

"இன்னும் கொஞ்ச நாள்ல எயிட்ஸால சாகப்போறேன். எனக்கு லவ்வா... போடி. தேவுடியா முண்டோம்" என்று அலட்சியமாக சொல்லி, என் தலையில் வைத்த லோகுவின் துப்பாக்கியை நானே அழுத்திக் கொண்டேன்.

வண்டியில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் அங்கு வந்தனர்.

'உங்கள எப்படி கூப்பிடுறது' என்ற அவளின் குரல் மட்டும் என் காதில் ஒளித்துக் கொண்டே இருக்கிறது. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவுக்கு நாகரிகமான பெயரை நீங்களாவது சொல்லுங்கள் !!!

Tuesday, December 18, 2012

சாதத் ஹசன் மாண்டோவின் நூற்றாண்டு !!!

கடந்த ஞாயிறு (16.12.12) மாலை 4 மணிக்கு, பிரசாத் லேப் கல்லூரி அரங்கில் சாதத் ஹசன் மாண்டோவின் நூற்றாண்டு நினைவையூட்டி அவரது சிறுகதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டது.

இந்திய – பாகிஸ்தான் பிரிவினை முன் பிறந்த படைப்பாளியான மாண்டோ, அரசியல் சூழ்நிலையால் பாகிஸ்தான் நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. பிரிவினை முன்பு 3 முறையும், பிரிவினை பிறகு பாகிஸ்தானில் 3 முறையும் தனது படைப்புக்காக சிறை சென்றுள்ளார்.

பிரிவினைப் போது ஏற்ப்பட்ட வலியும், வேதனைகள் மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுப்பட்டவர்களின் குற்றவுணர்வையும் தனது படைப்பின் பிரதிபலித்திருக்கிறார்.

தன்ஷ் ( A String)

குற்றவுணர்வோடு ஒரு மனிதன் குளிப்பதுப் போல் காட்சி தொடங்குகிறது. ஒரு பெண்ணின் அலறல் சத்தமும், அவளை மானபங்கம் படுத்தும் உருவம் வந்து வந்துப் போகிறது. தலைக்கு குளிக்கும் போது அந்த பெண்ணின் வீட்டில் நகைகளை திருடுகிறான். வேறொருவன் அந்த பெண்ணை கற்பழித்து, அவளது சகோதரனை கொலை செய்கிறான். நகையை திருடி செல்லும் போது, நிர்வாணமான பெண்ணின் உடலை பார்த்தும், அவனும் அந்த பெண்ணை புணர்கிறான்.

மீண்டும் அவன் தலைக்கு குளிப்பது போல் காட்சி வருகிறது. திருடிய நகையை தன் மனைவியிடம் கொடுத்து குளிக்க செல்கிறான். இங்கிருந்து முதல் காட்சியோடு படம் தொடர்கிறது. அவன் குளிக்க குளிக்க தண்ணீர் இரத்தமாக மாறுகிறது. தன் முகத்தை எவ்வளவு தெய்த்தும், அவன் மனதில் இருக்கும் குற்றவுணர்வை நீக்கமுடியவில்லை.

அவன் மனைவி திருடிய நகையில் தன்னை அழங்கரித்துக் கொள்கிறாள். அவள் அவனிடம் நெருங்கும் போது, குற்றவுணர்வில் அவளை உதாசினப்படுத்துகிறான். அவள் தன் கணவன் மீது சந்தேகப்பட்டு, வேறொரு பெண்ணுடன் இருந்தாய்யா என்று கேட்க அவன் “ஆமாம்” என்கிறான். கோபத்தில் கத்தியால் அவள் தனது கணவனின் கழுத்தை வெட்ட, இறக்கும் தருவாயில் “அவள் இறந்திருந்தாள்” என்று சொல்லி இறக்கிறான்.

 இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போது ஆண்கள் அயுதங்களால் இறந்தார்கள் என்றால், பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டே இறந்தார்கள். எத்தனையாவது நபர் கற்பழிக்கும் போது அந்தப் பெண் இறந்திருப்பால் என்று சொல்ல முடியாத அளவுக்கு மத மும், குரோதமும் பலரது தலையில் ஏறி இருந்தது. அப்படி இறந்ததே தெரியாமல் புணர்ந்த ஒருவன், புணர்ந்து முடித்த பிறகு அந்தப் பெண் இறந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் மிருகமான மனதில் கொஞ்சம் மனிதத்தன்மை ஏட்டிப்பார்க்கும் போது குற்றவுணர்வாக மாறுகிறது. அதை இந்த குறும்படத்தில் தெளிவாக காட்டுகிறது.



காரமாட் (The Miracle)

மூட நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் இருக்கிறது என்பதை உணர்த்தும் குறும்படம்.

1947ல் இந்திய – பாகிஸ்தான் பிரிவினைப் போது ஒரு இஸ்லாமியன் ஒரு இந்து வியாபாரியை கொன்று, அவன் கடையில் இரண்டு மூட்டை சக்கரையை திருடி தனது வீட்டுக்கு கொண்டு வருகிறான். காவலர்கள் திருடிய பொருளை யார் வீட்டில் இருந்தாலும் அவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்வதை கேட்கிறான். பயத்தில் இரண்டு மூட்டை சக்கரையை கிணற்றில் போட்டு, மறைந்துக் கொள்ள நினைக்கும் போது கினற்றில் விழுந்து இறக்கிறான்.

அடுத்து நாள் குழந்தைகள் தண்ணீரை குடித்து இனிப்பாக இருப்பதை கூறுகிறார்கள். 'அல்லா' இறந்தவனை அனுப்பி கசப்பான தண்ணீரை இனிப்பாக மாற்றினார் இறந்த இஸ்லாமியனை தொழுகிறார்கள்.

பாவிகளை மனிதர்கள் தான் கடவுளாக்குகிறார்கள். கடவுளில்லை. என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.


 Tob Tek Singh ( தோப் டேக் சிங்) 

பாகிஸ்தானின் இருக்கும் மனநல காப்பகத்தில் நடக்கும் கதை. இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று ஒன்றும் புரியாமலையே தங்களை இந்துஸ்தான் என்றும், பாகிஸ்தான் என்றும் பிரித்துக் கொண்டு மனநோயாளிகள் பேசுகிறார்கள். விளையாடும் போது கூட இரண்டு அணிகளும் இதையே பெயராக வைத்து விளையாடுகிறார்கள். அவர்களில் ஒருவனான பிசன் சிங் யாருடனும் ஒட்டாமல் 'தோப் டேக் சிங்' செல்ல வேண்டும் என்கிறான். அவனது மகள் வந்து பார்க்கும் போது கூட தோப் டேக் சிங் செல்ல வேண்டும் என்கிறான்.

இறுதியில் இந்து மற்றும் சீக்கிய மனநோயாளிகளை இந்திய எல்லையில் விட்டுவிட்டு பாகிஸ்தான் காவலாளிகள் செல்கிறார்கள். பிசன் சிங் தோப் டேக் சிங் செல்ல விரும்புவதாக சொல்ல, காவலாளி “அது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. நீ இந்தியாவுக்கு போ !” என்று எல்லையில் விடுகிறார்கள்.

"ஒரு பக்கம் இந்திய முள்வேலி கம்பிகள், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் முள்வேலி கம்பிகள். இரண்டுக்கும் நடுவில் உறங்குகிறது  தோப் டேக் சிங் என்று" சொல்லி, அவன் அங்கையே மயங்கி கீழே விழுகிறான்.

பிரிவினை போது உயிரை விட்டவர்களை விட தனது சுயத்தை இழந்தவர்கள் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குறியது என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.


திற 

சாதத் ஹசன் மாண்டோவின் “Khol do” (Open it) என்ற சிறுகதையை குறும்படமாக எடுத்திருக்கிறார் பிரின்ஸ் அவர்கள்.

குஜராத் மதக்கலவரத்தில் தனது மகள் சகினாவை தேடுகிறார் தந்தை. முகாமில் இருக்கும் சேவாக்காரர்களிடம் உதவி கேட்கிறார். அவர்களும் அந்த பெண்ணை கண்டுபிடித்து முகாமுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அவள் தந்தை இருக்கும் முகாமுக்கு அழைத்து செல்லப்படவில்லை. அந்தப் பெண்ணின் தந்தையிடம் இன்னும் பெண் கிடைக்கவில்லை என்கின்றனர்.

நினைவற்ற ஒரு பெண்ணின் உடல் மருத்துவ முகாமுக்கு வருவதை அந்த தந்தை கேள்விப்பட்டு செல்கிறார். அவள் தனது மகள் ‘சகினா’ என்று பார்த்ததும் அடையாளம் காண்கிறார். மருத்துவர் அந்த தந்தையிடம் “ஜன்னல் கதவை திறங்கள் காற்று வரட்டும்” என்று சொல்ல, மயங்கிய நிலையில் அந்த பெண் காதில் "திற" என்ற வார்த்தை மட்டும் விழுகிறது. அந்த பெண் தனது பெண்ணுருப்பை திறந்து காட்ட செல்கிறாள். கரச் சேவகர்கள் அவளை கற்பழிக்கும் போது ‘திற’ என்று கூறிய வார்த்தைகளோடு சிவப்பாடையில் காட்டியப்படி படம் முடிகிறது.

பூட்டிய மனிதனின் உள்ளத்தை திறப்பது போன்ற கருத்துள்ள படம் என்று நினைத்தால், இறுதிக் காட்சியில் திறக்கப்படும் இடம் நம்மை கண் கலங்க வைக்கிறது. சாதத் ஹசன் மாண்டோ இந்திய - பாகிஸ்தான் பிரிவினை வைத்து எழுதிய கதைக்களனை குஜராத் மதக் கலவரப்பின்னனியில் எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரின்ஸ்.

காலங்கள் மாறினாலும், பின்னனி மாறினால் மனிதனுக்கு இருக்கும் மிருக குணமும், அதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் வலியும் மாறுவதில்லை என்பதை இந்த குறும்படம் சொல்கிறது.

ராஜாங்கத்தின் முடிவு

ஒரு அறையில் தொலைப்பேசியும், ஒரு மனிதனை வைத்து குறும்படத்தை ஸ்வாரஸ்யமாக எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாமல், கிடைக்கும் இடத்தில் தங்கக் கூடியவனாக இருக்கும் கதாநாயகன் ரவி ஒரு வாரம் தன் நண்பன் வெளியூருக்கு சென்றுயிருப்பதால் அவன் அலுவலகத்தில் தங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

கற்பனை உலகத்தில் வாழும் ரவி, நடைமுறை வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்கிறான். அப்போது, அந்த அலுவலக தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொள்ள, அவர்கள் இருவருக்குள் நட்பு உருவாகிறது. பல சமயம் ரவி அந்த பெண்ணை வெறுப்பெற்றுவது போல் பேசுகிறான். அந்தப் பெண்ணின் பெயரையோ, எண்ணையோ ரவி கேட்கவில்லை. ஆர்வமில்லாமல் இருந்தவன், அவள் அழைக்காமல் இருக்கும் சமயத்தில் தவிக்கிறான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தவனுக்கு, அந்தப் பெண்ணின் குரல் அவனை மிகவும் பாதித்திருக்கிறது.

ரவியின் நண்பன் தொலைப்பேசியில் ஊர் திரும்புவதாக சொல்ல, அதை கவலையுடன் அந்தப் பெண்ணிடம் கூறுகிறான். அவன் இராஜாங்கம் முடியப்போகிறது என்று கவலையாக சொல்ல, அன்றைய தினம் தன்னை தொடர்புக் கொள்ளும் எண்ணை தருவதாக சொல்கிறாள். இரண்டு நாளுக்கு ஊருக்கு செல்வதாக சொல்லி அழைப்பு தூண்டிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு நாள் கலித்து அந்தப் பெண் தொலைப்பேசியில் அழைக்க, ரவி இன்றோடு தன் ராஜாங்கம் முடிவதாக சொல்லி அழைப்பை தூண்டித்து இறக்கிறான். தொலைப்பேசி ஒலித்துக் கொண்டே இருக்கும் போது படம் முடிகிறது.

கற்பனை உலகிற்கும், நிஜ உலகிற்கும் நடுவில் வாழும் மனிதர்களுக்கு சமர்ப்பணம் என்று இந்தப்படத்தை முடித்திருக்கிறார்கள். படத்தின் முடிவில் ரவி பாத்திர இறந்ததற்கு காரணம் காட்டவில்லை என்ற கேள்விக்கு வேண்டுமென்றே சொல்லவில்லை. அந்த பாத்திரம் வாழ்வதற்கான அர்த்தமில்லாதப் போது இறப்பதற்கான காரணம் தேவையற்றதாக இருக்கிறது இயக்குனர் கூறினார்.

இந்த ஐந்து குறும்படங்களை திரையிட்ட அருணுக்கும், தமிழ் ஸ்டுடியோவிற்கும் நன்றிகள் பல....!!

Tuesday, July 3, 2012

பெல் அடிச்சாச்சு - குறும்படம்

‘பெல் அடிச்சாச்சு’ என்ற குறும்படம் பார்த்தேன். மூன்று நிமிடம்தான் ஓடுகிறது. திங்கள்கிழமை காலை பள்ளிக்கு செல்ல அடம் பிடிக்கும் சிருவனை, திட்டி பள்ளிக்கு செல்ல சொல்கிறாள் அம்மா. தூக்க கலக்கத்தில் இன்று, ஞாயிறு பள்ளி இல்லை என்கிறான். ஆனால், அம்மா அவனை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்புகிறாள். அவன் பள்ளிக்கூடம் செல்கிறான். பள்ளிக்கூடம் முன் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானத்தில் விளையாடிவிட்டு மகிழ்ச்சியாக வகுப்புக்கு செல்கிறான்.

அப்போது, “பெல் அடிச்சாச்சு...” சீக்கிரம் கொடுடா” என்ற குரல் கேட்டு கற்பனையில் இருந்து மீள்கிறான். முதலில் இடம் பெற்றா காட்சிப் போல் அவன் அம்மா எழுப்ப, பள்ளியில் கடலை விற்க செல்கிறான். ஆம் ! அவன் பள்ளிக்கூடம் முன் கடலை வியாபாரம் செய்யும் தொழிலாளி முதலாளி. கல்வி கற்க ஆசைப்படும் சிறுவனின் கனவு தான் கதை. ஒரே காட்சியை இரண்டு முறை காட்டி வேறு வேறு பரிமாணத்தில் கொடுக்கிறார் இயக்குனர் அருண்குமார்.


குழந்தையை படிக்க வைக்க குழந்தை தொழிலாளிகளை வேலையில் அமர்த்துவது தவறு என்கிறோம். ஆனால், குழந்தை முதலாளிகளை எப்படி படிக்க வைப்பது ? என்பதை இயக்குனர் புரிய வைக்க முயன்றிருக்கிறார். இன்னும் கொஞ்சம் கூடுதல் செலுத்தி சொல்லி இருக்கலாம்.


(நன்றி : பொதிகை மின்னல், ஜூன்,2012)
.

Friday, May 11, 2012

துவந்த யுத்தம் - குறும்படம்

துவந்த யுத்தம் - தமிழர் மீனவர்கள் பிரச்சனையை சொல்லும் குறும்படம். ராமேஸ்வரத்திற்கு மத்திய அமைச்சர் வருவதை அறிந்து அவரை கடத்தி மீனவன் ஜோசப் தன் நண்பனுடன் மீன் பிடிக்க செல்கிறான் . அமைச்சர் தன்னை கடத்தியதற்காக ஜோசப்பை மிரட்டுகிறார். ஜோசப் தங்கள் பிரச்சனையை புரிய வைப்பதற்காக கடத்தி வந்ததாக கூறுகிறான். அப்போது இலங்கை இராணுவம் தூப்பாக்கியால், அவர்கள் கப்பலை நோக்கி சுடுகின்றனர். அவர்கள் கையில் இருக்கும் பணம், பொருளை பரித்துக் கொள்கிறார்கள். அமைச்சர் கை நீட்டி பேச, அவரை சுட துப்பாக்கி எடுக்க ஜோசப்பின் நண்பன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். அவர்களின் மீன் வலைகளை அருக்கவும் ஜோசப்பின் நண்பன் விடவில்லை. அவனை கடலில் தள்ளி, சுட்டுக் கொள்கிறார்கள். ஜோசப்பை தன் நண்பன் இறந்ததை பார்த்து அழுகிறான். அமைச்சர் தன் முன்னால் ஒரு உயிர் பிரிந்ததை பார்த்து உரைந்து போகிறார்.

தாங்கள் தினமும் வாழும் வாழ்க்கை இது தான் என்கிறான் ஜோசப். நாங்கள் அவர்கள் எல்லைக்குள் போகாமலே இலங்கை இராணுவம் தங்களை ஏன் தாக்க வேண்டும் போன்ற கேள்விகளை கேட்கிறான். இதற்கு ஒரு முடிவு வர வேண்டும் என்று தான் கடத்திய காரணத்தை கை கும்பிட்டப்படி கூறுகிறான். அமைச்சர் அவன் கைகளை பிடித்து ஆறுதல் சொல்லுவது போல் கடலை காட்டுகிறார்கள்.

வானோலி செய்தியில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீண்டும் இலங்கை இராணுவம் தாக்கியதாகவும், அதில் ஜோசப் இறந்ததாகவும், ராமேஸ்வரத்தில் மக்கள் போராட்டம் நடத்துவதாகவும் செய்தி கூறுகிறார்கள். "குருதி ஓயவில்லை" என்ற மனதை வருடும் பாடலுடன் குறும்படம் முடிகிறது.

இந்த குறும்படத்தை இயக்கியவர் அஷோக்குமார். இப்படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிட தக்கது.

இணையதளம், புத்தகம் எல்லாம் படித்தவர்கள் மட்டுமே புரிந்துக் கொள்ள விஷயமாக உள்ளது. பாமர மக்களுக்கு பிரச்சனை புரிய வைக்க வேண்டும் என்றால் காட்சி ஊடகமே சரியான வழியாக இருக்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழ் மீனவர்கள் பிரச்சனையை, கூடாங்குளம் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் தான் சராசரி மக்களுக்கு புரியும் என்பதை இந்த குறும்படம் உணர்த்தியுள்ளது. இந்த பிரச்சனைகளை மக்களுக்கு சொல்லும் திரைப்படத்தை விரைவில் எதிர்பார்ப்போம்.


( நன்றி : பொதிகை மின்னல், மே,2012 )



Friday, September 30, 2011

ஒரு நாடகம் அரங்கேறியது !!



2009ல் ரெஸிஷன் நேரத்தில் “ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?” என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகம் எழுதி பதிவிட்டிருந்தேன். அதை, சென்ற வருடம் எங்கள் அலுவலக 'Humour Club' க்காக அரங்கேற்றினோம்.

ஹோட்டல் முதலாளியாக வருவன் அடியேன் தான். ஹோட்டல் சரக்கு மாஸ்டராக சுஜய் நடித்தார். அவருடைய உடல் மொழி, டயலாக் டெலிவரி நாடகத்திற்கு மேலும் நகைச்சுவையுட்டியது.

பதிவியிடும் போது இல்லாத நகைச்சுவை வசனங்களை கூடுதலாக சேர்த்துள்ளோம். அதன் (சுமாரான) வீடியோ தற்போது தான் யூட்யூப்பின் ஏற்றினோம்.

நண்பர்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை கூறவும். நன்றி.

Wednesday, August 17, 2011

போஸ்டர் - குறும்பட விமர்சனம்

நாளைய இயக்குனர் - 2 ல் பார்த்து ரசித்து சிரித்த படம். குறும் படம் என்றால் கருத்து சொல்ல வேண்டும், நீதி இருக்க வேண்டும், நெஞ்சை வருட வேண்டும் போன்ற எழுதப்படாத விதிகளை தகர்த்த படம்.

சிறுகதை, நாவலை வாசித்தவர்கள் திரையில் படமாக பார்க்கும் போது படத்தை எடுத்தவர்களை திட்டாமல் இருக்க மாட்டார்கள். வாசிக்கும் போது கொடுத்த அனுபவம் காட்சிப்படுத்தும் போது இயக்குனர் தவறிவிட்டார் என்பது தான் பலரது விமர்சனமாக இருக்கும். ஆனால், "போஸ்டர்" சிறுகதையை வாசித்த பிறகு குறும்படமாய் பார்க்கும் போது வாசித்த அனுபவத்தை விட திரையில் பார்த்த அனுபவம் சிறப்பாக இருந்தது. இன்னும், சொல்லப் போனால் வாசிக்கும் போது கிடைக்காத நகைச்சுவை உணர்வு, நடிகரின் உடல் மொழியில் சிரிப்பு வர வழைத்தது.

"பட்டப்பகலில் ஒன்றாவது மெயின் ரோட்டில் விபச்சாரம் செய்யும் சாந்தியே உன்னை தட்டிக் கேட்க ஆளில்லையா?" என்ற போஸ்டரை காவல்துறையினர் கிழிப்பது போல் படம் தொடங்குகிறது. பொது இடத்தில், அதுவும் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் இப்படி ஒரு போஸ்டர் ஓட்டியிருப்பது பத்திரிகைக்காரர்களுக்கு தெரிந்தால் தன் வேலைக்கு வெட்டு வந்து விடும் என்று பயப்படுகிறான் இன்ஸ்பெக்டர் சாமிநாதன். பயந்த மாதிரி மேலிடத்தில் இருந்து விசாரிக்க சொல்லி அழுத்தம் வருகிறது.

அதே சமயம், ஒரு பெரிய வீட்டில் வயதான பெண்மனி சாந்தி தன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கற்புற ஆராதனை காட்டுகிறாள். வேலை செய்பவனிடம் தெலுங்கில் தன் வாடிக்கையாளரிடம் புது பெண் வந்திருப்பதை சொல்ல சொல்லுகிறாள்.

சாமிநாதன் அந்த ஏரியாவில் போஸ்டர் ஒட்டுபவர்களை விசாரிக்கிறான். அதில் ஒருவன், "போஸ்டர் ஓட்டியது எங்க ஆளே இருக்க மாட்டான்" என்பதை தீற்கமாக சொல்லுகிறான். தங்கள் ஆட்கள் ஒட்டியிருந்தால் போலீஸால் இவ்வளவு விரைவில் எல்லா போஸ்டர்களையும் அப்புறப்படுத்தியிருக்க முடியாது என்கிறான்.

விபச்சார விடுதியில் இருப்பவன் தன் வாடிக்கையாளருக்கு போன் போடுவதற்கு பதிலாக குடிப்போதையில் காவல்துறைக்கு போன் போட்டு விலாசமும் சொல்லுக்கிறான். காவல்துறையினர் அவர்களை கைது செய்கிறது.

உண்மையில் இந்த போஸ்டர் ஒட்டியது யார் என்பதை குறும்படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இணைய எழுத்தாளர் சங்கர் நாராயண் எழுதிய "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து இயக்குனர் ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த சிறுகதைக்கு கதை எழுத்திய எழுத்தாளரே திரைகதை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.





(நன்றி : ஆகஸ்ட்,2011, பொதிகை மின்னல் - மாத இதழ்)

Wednesday, December 8, 2010

சிறுகதை to குறும்படம்

பொதுவாக கதை எழுதியவரே திரைக்கதை அமைக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்காது. ‘ஒன்பது ரூபா நோட்டு’ நாவலை எழுதிய தங்கர்பச்சன் போல் எழுதியவரே படம் இயக்கினால் மட்டுமே முடியும். கேபிள் சங்கர் எழுதிய ‘ லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ சிறுகதை தொகுப்பில் இருந்து ‘போஸ்டர்’ சிறுகதை குறும்படமாக்கப்பட்டது. இதில், சுவையான தகவல் என்றால் கதை எழுதியவரே திரைக்கதை அமைத்திருப்பது தான். எதோ நானே எழுதிய சிறுகதை படமாக பார்த்ததுப் போல் உணர்வு. நாகரத்னா பதிப்பக வெளியீடு புத்தகத்தில் இருந்து குறும்படம் வந்திருக்கிறது என்றால் பெருமை தானே !!!

வாசித்த கதை திரையில் பார்க்கும் போல் வாசகன் கற்பனையில் இருக்கும் காட்சிகள் மாறுப்படும் என்பதை இந்த குறும்படம் உணர்த்தியது. வாசகன் இடத்தில் இருந்து பார்வையாளன் வட்டத்தில் இருப்பவர்களுக்கு திருப்பி படுத்த சில காம்பிரமைஸ் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால், இந்த கதையில் எழுதிய 90% சதவீத கதையை காட்சியாக ரவிகுமார் கொண்டு வந்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

கோடிக்கணக்கில் முதலீடு போட்டு வாங்கிய படத்தை தியேட்டரில் ஓட வில்லை என்றாலும், இரண்டு மாதமாவது சன் டி.வி, கலைஞ்ர் டி.வியில் விளம்பரம் ஓடும். வருட முடிவில் ‘டாப் 10’ அந்த மொக்கை படங்கள் இடம் பெறும். தான் எழுதிய சிறுகதை குறும்படமாக வந்திருக்கிறது. எந்த ஒரு ரியாக்‌ஷன் இல்லாமல் தன் பதிவில் ஒரு பெட்டி செய்திப் போல் கேபிள் சங்கர் போட்டிருப்பது எனக்கு வருத்தம் தான். ( Widget விளம்பரப்படுத்தி படத்தை ஓட்ட வேண்டாமா !! )

அண்ணே ! ‘சினிமா வியாபாரம் - 2’ இதை எல்லாம் சேர்த்துக்கொங்க !!


லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகம் வாங்க.... இங்கே

படம் பார்க்க...

Friday, November 26, 2010

இரண்டு குறும்படங்கள்

பித்தள சொம்பு

ஜெகன், வி.எஸ்.ராகவன் போன்ற திரைப்பட கலைஞர்களை வைத்து இயல்பான நகைச்சுவையோடு எடுத்திருக்கிறார்கள். ‘ஆல்மைட்டி’ ஆங்கில படத்தை ஞாபகப்படுத்தினாலும், டைம்ங் காமெடி நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.



கடைசி தகவல்

நல்ல கதையை யோசித்து காஸ்டிங், வசனத்தில் கொட்டை விட்டுயிருக்கிறார்கள். இதுப் போன்ற கதையில் சோர்வில்லாத வசனங்கள் மிகவும் முக்கியம். ஒரு கட்டத்திற்கு என்ன சொல்ல போகிறான் என்பதை யூகிக்க முடிக்கிறது.

Thursday, November 11, 2010

சில மொக்கை குறும்படங்கள்

நல்ல துணி எடுக்க நூறு துணியை எடுத்து வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். அது போல தான், நல்ல குறும்படம் பார்க்க சில மொக்கை குறும்படங்களை பார்த்து தொலைய வேண்டியதாக இருக்கிறது. அப்படி நல்ல குறும்படங்களை தேடும் போது கண்ணில் மாட்டிய சில மொக்கை படங்கள். எடுத்துக் கொண்ட கதைக் களம், மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காக இயக்கியவர்களை பாராட்டலாம்.

Someone’s

பள்ளி மாணவன் இயக்கிய குறும்படம் என்பதை தவிர பெரிதாக சொல்ல இதில் இல்லை. மாணவன் என்பதால் என்னவோ கண்டிப்பாக மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக இறுதியில் சொல்லியிருக்கிறார்.



பலன்

நாளைய இயக்குனர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட குறும்படமா ? நகைச்சுவை படமா ? என்று ஒன்றும் புரியவில்லை. படம் எடுக்க வரும் இயக்குனரின் காட்சியை நடிகர்கள் எப்படி மாற்ற வைக்கிறார்கள் என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.



முதல் படி

இறுதி காட்சி வரை இந்த பெண்ணுக்கு என்ன குறை இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. வசனம் ஓரளவுக்கு பரவாயில்லை. நல்ல எண்ணத்திற்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் விமர்சணத்துக்கு அப்பால் இதை பார்க்க வேண்டும்.

Tuesday, November 2, 2010

இரண்டு குறும்படங்கள்

நண்பா

பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்களுக்குள் போட்டி தான் கதை. யார் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்ற ஆரோக்கிய விஷயத்தை வைத்து எடுத்ததை பாராட்டுக்குறியது. இரண்டு சிறுவர்களும் நடிப்பும் க்யூட். இந்த குறும்படத்தில் வரும் குழந்தைகளுக்கான பாடல் நம்மை சிறுவர் உலகத்திற்கு அழைத்து செல்கிறது.

பல விருதுகள் “நண்பா” குறும்படத்திற்கு கிடைத்துள்ளது.



தோட்டா... விலை என்ன ?

படத்தின் ஆரம்பக் காட்சியில் Perfume, SAW போன்றா சீரியல் கில்லர்ஸ் படம் போல் பார்வையாளர்களை யோசிக்க வைத்துவிட்டு, இறுதி காட்சியில் தன் கருத்தை நச் என்று பதிவு செய்திருக்கிறார். சீரியல் கில்லராக நடித்த நடிகர் மிக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

Monday, October 4, 2010

வெற்றிப் பயணம்

'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் ஜாலியான குறும்படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இந்த குறும்படத்தில் படம் எடுக்க முயற்சிப்பது போல் சில இடங்களில் நாமும் சிரிக்க முயற்சிக்க வேண்டியதாக இருக்கிறது. கூட்டு முயற்சியில் நண்பர்களில் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதை ஒரளவு ரசிக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

Wednesday, August 18, 2010

மொக்கை குறும்படங்கள் – கண்டிப்பா பார்க்காதீங்க...!!

திரைப்படத்தை விமர்சிப்பவர்கள் பார்க்கலாம், பார்க்க வேண்டாம் என்று கருத்து சொல்லுபவர்கள், குறும்படத்தை பற்றி சொல்லுவதில்லை. இது நல்ல படம் பாருங்கள் என்கிறார்களே தவிர, மொக்கை படங்களை பற்றி பேசுவதில்லை.

ஒரு குறும்படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்லுவதற்கு அதை பற்றி பேசாமல் இருப்பது நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், “நான் பட்ட துன்பம் பெறுக வையகம்” என்ற நல்ல எண்ணத்தில் இந்த மொக்கை குறும்படங்களை உங்களோடு பகிந்து கொள்ளுகிறேன்.


மண்ணு குதிர



அற்புதம்



5 சகோதரர்கள்



சேம் பிலட்...

Monday, August 9, 2010

படித்ததும் பார்த்ததும் - 9.8.10

'எந்திரன்' பாடல் வெளியீட்டு விழாவில் படத்திற்கு 150 கோடி செலவு செய்ததாக சங்கர் கூறியிருந்தார். விளம்பரம், பாடல் வெளியீட்டு என்று இன்னும் போஸ்ட் பிரோடக்ஷன் வேலையில் 20, 30 கோடி செலவு செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறதாம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழியில் வெளியாகும் படங்களுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் கிடையாது என்று கருத்து நிலவிவருகிறது. அதற்கான விடை செப்டம்பர் மாதம் தெரிந்துவிடும்.

**

திரும்ப வராத கடந்த காலம்
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துகள்களில் அடிக்கடி கேள்ப்படும் எழுத்தாளரின் பெயர் 'தஸ்தயேவ்ஸ்கி'. நூலகங்களுக்கு சென்ற போது தஸ்தயேவ்ஸ்கியின் 'திரும்ப வராத கடந்த காலம்' புத்தகம் கிடைத்தது. கற்பனை உலகில் வாழும் இளைஞன் ஓர் இரவில், நாஸ்தென்கா என்ற பெண்ணை பார்க்கிறான். அவர்களுக்குள் ஏற்ப்படும் உரையாடல் அடுத்த மூன்று நாள் இரவு அவளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. மூன்றாவது நாளில் நாஸ்தென்காவின் காதலை கேள்விப்படும் அந்த இளைஞன், அடுத்த நாள் இரவு தன் காதலை சொல்கிறான். இறுதியில் அவள் காதலை ஏற்ற்க் கொள்கிறாளா என்பது முடிவு. நான்கு இரவுகள் நடக்கும் கதையில் இருவருக்கு நடக்கும் உரையாடல் கவிதை நடையில் உள்ளது. ஆரம்பத்தில், கற்பனை உலகில் வாழும் போது வீடு, மரம் அவனிடம் பேசுவது போன்ற வரிகள் அஃறினைக்கு கூட உயிர் கொடுத்திருக்கிறார்.

விலை : 60, பக்:112
பரத் பதிப்பகம்
1-A, விஸ்வாஸ் ப்ளாட்ஸ்
2,3, பிள்ளையார் கோயில் தெரு,
நெசப்பாக்கம், சென்னை - 78
Pக்: 24719795

***

ஒரு படம் பண்ணனும்

நாளைய இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷக்காக நின்ஜா டீம் இயக்கிய படம். தன்னமிக்கையை பற்றி சொல்லும் ஒரு நகைச்சுவை குறும்படம். விரைவில் 'கருணா'வுக்கு ரசிகர் மன்றம் இணையத்தில் தொடங்கினாலும் தொடங்குவார்கள் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு மனிதன் இயல்பாக சிரிக்க வைக்கிறார்.

Friday, August 6, 2010

முன்னனி நாயகர்களின் நகைச்சுவை அனிமேஷன் !!

பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் முன்னனி நாய்கர்களை பகடி செய்வதுப் போல் பேசுவார்கள். நடந்து காட்டுவார்கள். ஆடுவார்கள். முதன் முறையாக விளம்பரத்துக்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் முன்னனி நாயகர்களை கலாய்த்திருப்பது அல்டிமேட் நகைச்சுவை. குறிப்பாக, விஜயகாந்த் அனிமேஷனை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது.

Rajini Power --- Watch him do the ultimate !!!



Syscom Vijayakanth's Comedy


gsmani2@gmail.com

'Pokkiri' விஜய் டான்ஸ்

Thursday, July 29, 2010

சிரிப்புக்கு நான் Guaranty !

ஐ.டி. துறையை இந்த கலாய்பது என்றால் ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கே சந்தோஷம் தான். அதுவும் PM,TL வைத்து காமெடி பண்ணினால், அவர்கள் ஜூனியர்ஸ் விழு விழுந்து சிரிப்பார்கள்.

'Jagguboys' குறும்படம் ஐ.டி துறையில் இல்லாதவர்களுக்கு கூட புரியும் படி நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள்.சமிபத்தில் வரும் சினிமா படங்களில் நகைச்சுவை காட்சிகளை விட நன்றாகவுள்ளது.குறிப்பாக, ஆணி புடுங்கும் இடம் Ultimate நகைச்சுவை.

22 நிமிட முழு நீள நகைச்சுவை குறும்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க சிரித்தேன்.

ஒவ்வொரு Successful Employee பின்னாடி ஒரு Satisfied Manager இருக்கான் என்ற தத்துவத்தை இந்த குறும்படம் உணர்த்துகிறது.

Part -1



Part -2




Part -3

LinkWithin

Related Posts with Thumbnails