கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உளவுத்துறை ரிப்போர்ட்டை விடக்கட்சிக்காரர்களைத்தான் அதிகமாக நம்புவார். செல்வி ஜெயலலிதாவோ உளவுத்துறையையும் நம்பமாட்டார், கட்சிக்காரர்களையும் நம்பமாட்டார். தனக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யக் கூடியவர்.
*
தமிழகத்தின் வரலாற்றில் கலைஞருக்கு மிக முக்கிய இடமுண்டு. மிகச்சிறந்த ஞாபக சக்தியும், கூர்மையான அறிவும் உடைய தலைவர்கள் அவருக்கு நிகராக இந்திய வரலாற்றில் யாரையேனும் சொல்ல வேண்டுமென்றால் வெகுநேரம் யோசிக்க வேண்டியிருக்கும்.
*
தன் பாதுகாப்பு அதிகாரிகளை நல்ல முறையில் நடத்துவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அவர்கள் சாப்பிட்டார்களா ? என்ன சாப்பிட்டார்கள் ? எது அவர்களுக்கு பிடிக்கும் என்பதையெல்லாம் கவனித்துக்கொள்வார். ஏதாவது விசேஷம் என்றால் அன்பளிப்புகளைத் தாராளமாக வழங்குவார். எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்குப் போவதென்றால் போலீஸாருக்குக் குஷிதான்.
ஆனால், ஒரு விஷயம். எம்.ஜி.ஆரின் மேடைப்பேச்சு அவரது புகழுக்கு ஏற்ற வகையில் தெளிவாக இருக்காது.
*
இப்படி முக்கியமான அரசியல் தகவலை கொடுத்திருப்பவர் தமிழகத்தை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி. 1964 – 1999 வரை 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய வே.இராமநாதன் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
அரசியல் ஆர்வமுள்ளவர்கள், உளவுத்துறை பற்றி தெரிந்துகொள்ள விருப்பமுடையவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
இணையத்தில் வாங்க....
No comments:
Post a Comment