ஒரு காலத்தில் கமல் அரசியலுக்கு வருவார். கமல் தனிக் கட்சி தொடங்குவார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏன் கமலுக்கு கூட இருந்திருக்காது. ஆனால், நடக்கும் நிகழ்வுகளில் பார்த்தால் கமல் அரசியலுக்கு வந்தால் அவர் தொடங்கும் கட்சியின் Agenda என்னவாக இருக்கும் என்பதில் இதை எழுதிகிறேன்.
முதல் Agenda. தேர்தலில் போட்டியிடும் கட்சியாக இருக்காது. அதாவது, அவர் தொடங்கும் கட்சி அரசியல் கட்சியாக இருக்காது. ஒரு இயக்கமாக இருக்கும்.
தேர்தல் அரசியலில் வராததற்கு எதற்காக கட்சி தொடங்க வேண்டும் ? என்ற கேள்வி வரலாம்.
இதே கேள்வியை பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தந்த பதில், “தேர்தல் அரசியல் போட்டியிட்டால், நாம் யாரை எதிர்த்து பேசுகிறோமோ அவர்களோடு சமரசம் செய்துகொள்ள வேண்டியது இருக்கும். அதனால், தனது தி.க இயக்கம் தேர்தல் அரசியலில் போட்டியிடாது” என்றார். இன்று வரை, தி.கவினர் தேர்தலில் பிரச்சாரம் செய்தாலும் எந்த தேர்தலிலும் நேரடியாக போட்டியிட்டதில்லை.
கமல் தனது பல பேட்டிகளில் இதை தான் குறிப்பிட்டுவருகிறார். “தமிழகத்தில் ஆளும் வர்க்கத்தை கேள்விக் கேட்கும் சக்தி வாய்ந்த இயக்கம் இல்லை. தமிழகத்தில் பெரியார் போன்ற தலைவர் இல்லை”.
*
இரண்டாவது Agenda. மக்களை ஆளும் அதிகாரம் தேவையில்லை. மக்களோடு மக்களாக அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேவை.
கமல் அரசியல் அதிகாரத்தை விரும்புபவராக தன்னை காட்டியதில்லை. மற்ற நடிகர்களை போல் தனது படத்தில் ஏழை பங்காளனாகவோ, நல்லவனாகவோ, உத்தப்புத்திரனாகவோ காட்டிக்கொண்டதில்லை. தனது சொந்த வாழ்க்கையை கூட திறந்தப் புத்தகமாகவே வாழ்ந்திருக்கிறார். கட்சி தொடங்கி முதல்வர் ஆசையெல்லாம் கமலுக்கு இருக்காது என்று நம்புகிறேன்.
கமல் தொடங்கும் இயக்கம் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை கேள்வி கேட்கும் முதல் குரலாக இருக்கும் என்று கூறலாம். இன்று பலர் தங்கள் அரசியல் அதிகார அதிருப்தியை சமூக வலைதளங்கள் எதோ ஒரு வகையில் பதிவு செய்துவருகிறார்கள். அதை ஒருங்கிணைக்கும் சக்தி ஒன்று தேவைப்படுகிறது. அதை கமல் மேற்கொள்ளலாம்.
*
மூன்றாவது Agenda. எப்போதும் கமல் சொல்வது தான். ஒரு இந்திய குடிமகனாக சரியாக வரி கட்ட வேண்டும். தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டும்.
கமல் தொடங்கவிருக்கும் இயக்கம் இதை முன்மொழியும். அதற்கானப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
கமல் தேர்தல் அரசியல் தவிர்த்து அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் இயக்கமாக இருந்தால் பலர் அவருக்கு ஆதரவாக வருவார்கள். அவரும் தேர்தல் அரசியலில் குதிக்கும் கட்சியாக இருந்தால் பத்தோடு பதினொன்றாக தான் அவர் இருப்பார்.
**
ஆக கமல் தொடங்கும் இயக்கம் (கட்சி அல்ல)….. ஆளும் கட்சி யாராக இருந்தாலும் (அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க இன்னும் பல) அவர்களை கேள்வி கேட்கும் மக்கள் குரலாக இருக்கும் இயக்கத்தை தான் தொடங்குவார் என்பது என் கணிப்பு.
எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் அரசியலில் கோடிக்கணக்காக பணம் செலவு செய்ய வேண்டும். பொதுகூட்டம், பிரச்சாரம், போஸ்டர் என்று ஆயிரத்தெட்டு செலவுகள் இருக்கிறது. அதற்கு பல கோடிகள் தேவைப்படுகிறது.
கமல் அப்பழுக்கற்ற, 100% உண்மையான கலைஞன். கோடிக்கணக்கான பணம் கிடைத்தால் தேர்தலுக்கு செலவு செய்யமாட்டார். ’மருதநாயகம்’ படம் தான் எடுப்பார்.
2 comments:
இவற்றுடன் ஒரு வகையில் இவர் வசம் உள்ள (ரசிகர்கள் எனும்) அடிமைகளின் வாக்கு பலத்தில் "வொயிஸ்" கொடுக்கிறேன் என ஏனைய போட்டியிடும் கட்சிகளை; கூட்டாளி ரஜனி போல் பயமுறுத்தி வைக்கக் கூட இந்த கட்சி, இயக்கம் வெகுவாக உதவும். இந்த நம்பிக்கையும் இப்போ இவருக்கு தேவையாக உள்ளது.
அத்தனையும் இந்த அட்டாக்கத்தி வீரனுக்கு அம்மா இருந்த போது சும்மா இருந்தது, நன்கு கவனித்தோம்.
தயவு செய்து சாருநிவேதிதாவின் கடைசிப் பதிவையும் படியுங்கள்.
கணிப்பு மிகச்சரியாகத்தான் இருக்கிறது நண்பரே...
Post a Comment