காலையில் வண்டி டயர் பஞ்சராகி, மெக்கானிக் டயர்–டுயூப் இரண்டையும் மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார். ரூ.1500 ஆகும். கையில் பணம் இருந்தும் அதற்கு மதிப்பில்லை.
“கிரெட் கார்ட் வாங்குவியானு” கேட்டேன்.
“இந்தியாவுலேயே பஞ்சர் கடைக்கு வந்து கிரெட் கார்ட் வாங்குவியானு கேட்ட முதல் ஆள் நீங்க தான்!” என்று கேட்பது போல் ரியாக்ஷன் கொடுத்தார்.
1.5. கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் MRF Dealer ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் கிரெட் கார்ட் மூலம் டயர் வாங்கிட்டு வாங்க என்று மெக்கானிக் கூறினார்.
MRF Dealer யிடம் நிலைமையை சொல்ல, என் கையில் இருக்கும் ஒரு ஆயிரம், ஒரு ஐந்நூறு நோட்டை வாங்கி புது டயர் கொடுத்தார்.
**
பெட்ரோல் பங்க்கில் அவரவர் ரூ.100, ரூ.200 க்கு பெட்ரோலுக்கு ரூ.500 நீட்ட, சில்லரை குறைவாக இருக்கும் வேலை செய்யும் பெண் ”சில்லரை அதிகமா இல்லை. மத்தவங்களுக்கு கொடுக்கனும். இரண்டு மூனுப் பேர் ஷேர் பண்ணிக்கோங்க..” என்றாள்.
500/1000 ரூபாய் வாங்க மறுப்பது, பெட்ரோல் பங்க்யை மூடி வைப்பதை விட இது நல்ல யோசனையாக இருக்கிறது.
அடுத்த இரண்டு நாளுக்கு பெட்ரோல் பங்க்கு இரண்டு, மூன்று வண்டியில் சென்று பெட்ரோல் போடுவது நல்லது. அவர்கள் சில்லரைத் தர வேண்டியதில்லை. உங்கள் தேவையும் நிறைவேறுகிறது.
இதுப் போன்ற சூழ்நிலையில் எதிர்ப்பு, ஆதரவு என்ற இரண்டு குரலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. பேஸ்புக், டிவிட்டரில் லைக் மட்டுமே பெற்று தரும்.
ஒருவருக்கு ஒருவர் உதவி, நம்பிக்கை, பரஸ்பர ஒப்புதல் மட்டுமே இதுப் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மீண்டு வர முடியும்.
1 comment:
சிறப்பா சொல்லி இருக்கீங்க.. -- ஒருவருக்கு ஒருவர் உதவி, நம்பிக்கை, பரஸ்பர ஒப்புதல் மட்டுமே இதுப் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மீண்டு வர முடியும் --
Post a Comment