”ஜெமினியை வைத்துப் படம் எடுப்பது சின்னக் குழந்தையை வெச்சு முடிவெட்டற மாதிரி” – நாகேஷ்.
திரையுலகின் மூவேந்தர் நடிகர்களில் ஒருவர். அரசியல் சாயம் இல்லாத நடிகர். காதலை வாழ்க்கையாகக் கொண்டவரின் வாழ்க்கை வரலாறு.
திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து பல நூல்கள் இருக்கிறது. காரணம், எம்.ஜி.ஆர் அரசியல் பிரமுகர். சிவாஜி நடிப்பின் அகராதி. ஆனால், ஜெமினி கணேசன் அப்படியில்லை. கிசுகிசு தவிர எதிலும் சிக்காதவர். பல ஆண்களின் பொறாமையை சம்பாதித்தவர். மக்கள் நடிகர்களுக்கு மத்தியில் இவர் இயக்குனர்களின் நடிகராக இருந்தவர். இயக்குனர் எது தேவையோ அதை மட்டுமே தனது நடிப்பில் கொடுப்பவர். அதனால், ஸ்ரீதர், கே.பாலசந்தர் போன்றவர்களின் விருப்பதிற்குரிய நடிகராக இருந்தார்.
“எப்படி பெண்கள் உங்களிடம் தேடி வந்து பேசுகிறார்கள்” என்று ஜெமினியிட கேட்டப்போது, “பொதுவாக செட்டில் சுமாரான அழுகுள்ள பெண்களிடம் முதலில் பேச்சு கொடுப்பேன். அழகான பெண்கள் தானாகவே வந்து என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்படி என் ட்ரிக் !” என்றார். (Hunterrr Style அறிமுகப்படுத்தியவர் இவரே !! )
மனம் போல் மாங்கல்யத்தில் பைத்தியக்காரன் வேடத்தில் ஜெமினி பிரமாதமாக நடித்திருப்பார். அதைப் பற்றி அவரது முதல் மனைவி பாப்ஜி, “அது ஒன்றும் அவருக்கு க்ஷ்டமானது அல்ல ! அவர் சுபாவமே அப்படித்தானே!” என்று சொல்லிவிட்டார். எவ்வளவு கடுமையான – உண்மையான விமர்சனம்.
சிவாஜி அளவுக்கு நடிப்பு வராது என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டவர். அதேச் சமயம், சிவாஜியின் கால்ஷீட் கிடைக்கவில்லைஎன்றால் அடுத்து தயாரிப்பாளர் அனுகுவது ஜெமினி கணேசனை தான்.
“ஒரு மனிதன் செக்ஸ் எப்போது அற்றுப் போகிறதோ அதற்கு மேல் வாழ்க்கை பயனற்றதுதான். ஆனால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்றால் எத்தனை வயதானாலும் இளமையாக வாழலாம்” – இதை தனது அதிகார பூர்வமான நான்காவது திருமணம் செய்யும் போது கூறியது. அப்போது அவருக்கு வயது 79 !!!
”1934ல் பதிமூன்று வயதில் பள்ளியில் நாடகம் போட்டார்கள். அப்போதும் கிருஷ்ணன் வேஷம்தான் எனக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தது.
நாடகத்தில் குட்டி கிருஷ்ணனாக நடித்த என்னை நிஜ வாழ்க்கையிலும் கிருஷ்ணனாகவே வாழச் செய்துவிட்டது விதி.
இப்போது ‘காதல் மன்னன்’ என்ற பட்டப் பெயரைக் கேட்டாலே மனத்தில் வெறுப்புதான் எழுகிறது.” – தனது கடைசிக் காலத்தில் தனது ‘காதல் மன்னன்’ பட்டத்தை வெறுத்த தருணத்தை அவரே கூறியது.
ஜெமினி யாரையும் விரட்டி விரட்டிக் காதலித்ததில்லை. பெண்கள் அவரைத் தேடி வந்து காதலிப்பார்கள். பின்பு, அவர்களாகவே பிரிந்து செல்வார்கள். அவர் எப்போதும் போல இயல்பாகவே இருப்பார்.
பிராமணராக பிறந்ததால் பிராமணப்பாத்திரத்தை ஏற்றுகொள்வதில் தயக்கம் காட்டினார். ’கௌரவம்’ படத்தில் ஆரம்பத்தில் ஜெமினிக்கு சொல்லப்பட்ட கதை. ஆனால், தன்னை விட சிவாஜி சிறப்பாக செய்வார் என்று கூறியவர் ஜெமினி கணேசன்.
“Youth is not a time of Life. It’s a state of mind. 85 வயசுலயும் இளைஞனைப் பார்க்கலாம் 35 வயசுலயும் கிழவனைப் பார்க்கலாம். நான் இதுல முதல் ரகத்தைச் சேர்ந்தவன்.” – ஜெமினி கணேசன்.
குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் பழைய வெளியீடு.
கிடைப்பது சிரமம். பழையப் புத்தகக்கடையில் அல்லது Lending Library யில் கிடைத்தால் வாசிக்கவும்.
குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் பழைய வெளியீடு.
கிடைப்பது சிரமம். பழையப் புத்தகக்கடையில் அல்லது Lending Library யில் கிடைத்தால் வாசிக்கவும்.
No comments:
Post a Comment