வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label கிழக்கு பதிப்பகம். Show all posts
Showing posts with label கிழக்கு பதிப்பகம். Show all posts

Tuesday, November 22, 2016

காதலன் : ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு - பா. தீனதயாளன்

ஜெமினியை வைத்துப் படம் எடுப்பது சின்னக் குழந்தையை வெச்சு முடிவெட்டற மாதிரி” – நாகேஷ். 

திரையுலகின் மூவேந்தர் நடிகர்களில் ஒருவர். அரசியல் சாயம் இல்லாத நடிகர். காதலை வாழ்க்கையாகக் கொண்டவரின் வாழ்க்கை வரலாறு. திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து பல நூல்கள் இருக்கிறது. காரணம், எம்.ஜி.ஆர் அரசியல் பிரமுகர். சிவாஜி நடிப்பின் அகராதி. ஆனால், ஜெமினி கணேசன் அப்படியில்லை. கிசுகிசு தவிர எதிலும் சிக்காதவர். பல ஆண்களின் பொறாமையை சம்பாதித்தவர். மக்கள் நடிகர்களுக்கு மத்தியில் இவர் இயக்குனர்களின் நடிகராக இருந்தவர். இயக்குனர் எது தேவையோ அதை மட்டுமே தனது நடிப்பில் கொடுப்பவர். அதனால், ஸ்ரீதர், கே.பாலசந்தர் போன்றவர்களின் விருப்பதிற்குரிய நடிகராக இருந்தார். 



 “எப்படி பெண்கள் உங்களிடம் தேடி வந்து பேசுகிறார்கள்” என்று ஜெமினியிட கேட்டப்போது, “பொதுவாக செட்டில் சுமாரான அழுகுள்ள பெண்களிடம் முதலில் பேச்சு கொடுப்பேன். அழகான பெண்கள் தானாகவே வந்து என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்படி என் ட்ரிக் !” என்றார். (Hunterrr Style அறிமுகப்படுத்தியவர் இவரே !!  ) 

மனம் போல் மாங்கல்யத்தில் பைத்தியக்காரன் வேடத்தில் ஜெமினி பிரமாதமாக நடித்திருப்பார். அதைப் பற்றி அவரது முதல் மனைவி பாப்ஜி, “அது ஒன்றும் அவருக்கு க்ஷ்டமானது அல்ல ! அவர் சுபாவமே அப்படித்தானே!” என்று சொல்லிவிட்டார். எவ்வளவு கடுமையான – உண்மையான விமர்சனம். 

சிவாஜி அளவுக்கு நடிப்பு வராது என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டவர். அதேச் சமயம், சிவாஜியின் கால்ஷீட் கிடைக்கவில்லைஎன்றால் அடுத்து தயாரிப்பாளர் அனுகுவது ஜெமினி கணேசனை தான். 

ஒரு மனிதன் செக்ஸ் எப்போது அற்றுப் போகிறதோ அதற்கு மேல் வாழ்க்கை பயனற்றதுதான். ஆனால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்றால் எத்தனை வயதானாலும் இளமையாக வாழலாம்” – இதை தனது அதிகார பூர்வமான நான்காவது திருமணம் செய்யும் போது கூறியது. அப்போது அவருக்கு வயது 79 !!! 

”1934ல் பதிமூன்று வயதில் பள்ளியில் நாடகம் போட்டார்கள். அப்போதும் கிருஷ்ணன் வேஷம்தான் எனக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தது. நாடகத்தில் குட்டி கிருஷ்ணனாக நடித்த என்னை நிஜ வாழ்க்கையிலும் கிருஷ்ணனாகவே வாழச் செய்துவிட்டது விதி. 

இப்போது ‘காதல் மன்னன்’ என்ற பட்டப் பெயரைக் கேட்டாலே மனத்தில் வெறுப்புதான் எழுகிறது.” – தனது கடைசிக் காலத்தில் தனது ‘காதல் மன்னன்’ பட்டத்தை வெறுத்த தருணத்தை அவரே கூறியது. 

ஜெமினி யாரையும் விரட்டி விரட்டிக் காதலித்ததில்லை. பெண்கள் அவரைத் தேடி வந்து காதலிப்பார்கள். பின்பு, அவர்களாகவே பிரிந்து செல்வார்கள். அவர் எப்போதும் போல இயல்பாகவே இருப்பார். 

பிராமணராக பிறந்ததால் பிராமணப்பாத்திரத்தை ஏற்றுகொள்வதில் தயக்கம் காட்டினார். ’கௌரவம்’ படத்தில் ஆரம்பத்தில் ஜெமினிக்கு சொல்லப்பட்ட கதை. ஆனால், தன்னை விட சிவாஜி சிறப்பாக செய்வார் என்று கூறியவர் ஜெமினி கணேசன். 

 “Youth is not a time of Life. It’s a state of mind. 85 வயசுலயும் இளைஞனைப் பார்க்கலாம் 35 வயசுலயும் கிழவனைப் பார்க்கலாம். நான் இதுல முதல் ரகத்தைச் சேர்ந்தவன்.” – ஜெமினி கணேசன்.

குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் பழைய வெளியீடு.

கிடைப்பது சிரமம். பழையப் புத்தகக்கடையில் அல்லது Lending Library யில் கிடைத்தால் வாசிக்கவும்.


Wednesday, December 10, 2014

விவேகானந்தர்: இந்திய மறுமலர்ச்சி நாயகன்

இந்தியாவில் சாம்ராட் அசோகன், சத்திரபதி சிவாஜி, முகலாயர் மன்னர்கள் என்று நம்மை ஆண்ட மன்னர்களின் பட்டியல் எடுத்தால் நீண்டுக் கொண்டே போகும். அவர்களின் வீரமும், சாகசமும் உண்மையாகவும், சிலது கற்பனை கலந்து சொல்லப்படுகிறது. நாட்டை ஆண்டவர்கள் தான் சரித்திர நாயகர்களாக திகழந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் நாட்டை ஆளாமல் மக்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

பல மகாராஜா போர், நிர்வாகம், அரசியல் திறன், நீதி என்று போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி எடுத்த பெயரை அந்த ஒரு சிலர் தனிமனிதனாக எப்படி எடுக்க முடிந்தது என்ற பிரம்மிப்பதை எற்படுத்துகிறார்கள். மன்னர்களுக்கும், அந்த ஒரு சிலருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். மன்னர்கள் நாட்டை ஆண்டார்கள். அந்த ஒரு சிலர் தன்னை தானே ஆண்டார்கள். 

தனக்கென்ற ஒரு நீதி, ஒரு கொள்கை, ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டு மன்னர்களுக்கு நிகராக பெயர் எடுத்திருக்கிறார்கள். அந்த கட்டுப்பாடு, நீதியை மற்றவர்களுக்கு சொல்லி ஏற்க வைத்திருக்கிறார்கள். தெனாலிராமன், பீர்பால் போன்ற புத்திக்கூர்மையாளர்கள், புத்தகர், மகாவீர் என்று மன்னர்கள் அல்லாதவர்கள் சரித்திர புருஷர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிக முக்கியமானவர் ஒருவர் தான் விவேகாந்தர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். 



’நரேந்திரநாத் தத்தா’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரது சீடரானார். 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும், இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். அவர்களின் விவேகானந்தர் முதல்மையாக திகழ்ந்தார். 

இவரின் ஆன்மீக கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வதாக அமைந்துள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு, இவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. 

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது. 

ஒரு முறை, மன்னர் ஒருவர் விவேகானந்தரிடம் எனக்கு உருவ வழிப்பாட்டில் நம்பிக்கையில்லை என்கிறார். கல்லையும், மண்ணையும், மரத்தையும் கடவுளாக எண்ணி வழிபட முடியாது என்கிறார். அப்போது, விவேகானந்தர் மன்னரின் திவானிடம் மன்னரின் புகைப்படத்தை பார்த்து துப்பச் சொல்கிறார். திவான் துப்ப யோசிக்க, விவேகானந்தர் மன்னரிடன் “திவான் அவர்கள் அந்த புகைப்படத்தில் மன்னர் முகம் பொருந்திய படமாக பார்க்கவில்லை. மன்னரை பார்க்கிறார். அதனால், அவர் துப்ப யோசிக்கிறார். நீங்கள் கல், மண் என்று சொல்லுவது மற்றவர்கள் அதில் கடவுள் இருப்பதாகப் பார்க்கிறார்கள்” என்று விளக்கமளித்தார். 

அதேப் போல் உலகின் மிக பெரிய பணக்காரரான ராக்பெல்லர் ஒரே ஒரு நன்கொடை வழங்கியிருக்கிறார். அது விவேகானந்தரின் உரைக் கேட்டப் பின்பு வழங்கியிருக்கிறார் !! 

விவேகானந்தர் பற்றிய வரலாறு, சொற்பொழிவு என்று அத்தனை குறிப்புகளும் நமக்கு எளிதாக கிடைக்கிறது. ஆனால், இந்த புத்தகத்தில் அதையும் தாண்டி ஒரு கூடுதல் சிறப்பு ஒன்று இருக்கிறது. இதில் அவரின் வரலாற்று மட்டுமல்லாமல், வெளிநாட்டில் சொற்பொழிவு மேற்கொள்ளும் போது கிறிஸ்துவ பாதரியார்களால் எதிர்க் கொண்ட எதிர்ப்புகளை சொல்கிறது. விவேகானந்தரை மதம் மாற்றம் செய்ய நடந்த முயற்சியையும் சொல்கிறது. 

இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட இந்தியாவில் இந்து மத கொள்கை, ஆன்மீக சொற்பொழிவு நடத்துவது போன்ற விஷயங்கள் பெரிய சவால் இல்லை. ஆனால், அந்நிய நாட்டில் மற்ற மதத்தினர் முன்பு இந்து மத சொற்பொழிவு ஆற்றுவது என்பது மிகப் பெரிய சவால். கோபப்படுத்துவதற்கும், பகடி செய்வதற்கும் பல கேள்விகள் கேட்கப்படும். அவர்களிடம் கோபப்படாமல் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். அளிக்கும் பதில் பிரமிப்பு ஏற்படுத்த வேண்டும். 

இன்று வணிக நோக்கத்துடன் எத்தனையோ பேர் வெளிநாடுகளில் சொற்பொழிவு செய்கிறார்கள். தங்களை வளர்த்துக் கொள்வதில் பிரதான நோக்கத்துடன் செயல் படுகிறார்கள். ஆனால், எந்த விதப் பிரதிபலன் பார்க்காமல், தனது மதக் கொள்கையை பரப்ப வேண்டும் என்று விவேகானந்தரை போல் யார் செய ல்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த கிழக்கு பதிப்பகத்தின் எழுத்து நடையும், இப்போது வரும் புத்தகத்தின் எழுத்து நடையும் பல வித்தியாசங்கள் தெரிகிறது. முன்பு கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில் குறிப்பாக வாழ்க்கை வரலாறு நூல்கள் வாசிக்க மிக எளிமையாக இருக்கும். நாவல், கதை படிப்பது போன்ற உணர்வு இருக்கும். ஆனால், சமிபத்திய நூல்கள் வடிவமைப்பு பாடப்புத்தக படிப்பதை போன்ற சோர்வு ஏற்படுகிறது. இந்த நூலிலும் பார்க்க முடிகிறது. 

பல சமயம், காவியை வெளிப்படையாக விமர்சிக்கும் அளவிற்கு, நாம் வெள்ளை அங்கியை விமர்சிக்கவில்லை என்ற குற்றவுணர்வு இந்த நூல் படித்து முடிக்கும் போது ஏற்படுத்துகிறது.


***
விவேகானந்தர்: இந்திய மறுமலர்ச்சி நாயகன்
ரஞ்சனி நாராயணன்
கிழக்கு பதிப்பகம், ரூ 150

Wednesday, February 16, 2011

எமர்ஜென்ஸி : ஜெ.பி.யின் ஜெயில் வாசம்

எம்.ஜி.தேவசகாயம்
தமிழில் :எம்.ராம்கி

’எமர்ஜென்ஸி’ என்றவுடன் நம் எல்லோர் நினைவில் வந்து நிற்ப்பது இந்திரா காந்தி தான். கோபக்காரர். பங்லாதேஷ் நாட்டு விடுதலைக்கு உதவியவர். ஈழ விடுதலைக்கு உதவ நினைத்தவர். 26/11 தாக்குதல், இலங்கை இராணுவம் மீது தாக்குதல் என்று தொடர்ந்து இந்தியாவை தாக்குதிலுக்கு எதிர்தாக்குதலுக்கு அஞ்சும் காங்கிரஸ் பிரதமர்களுக்கு மத்தியில் மிகவும் தைரியமானவர். 1971ல் பாகிஸ்தானுடன் யுத்தம், போற்கோவிலில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை தாக்க ‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்று துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்டவர். தன் பதவிக்கு ஆபத்து என்றவுடன் ”ஜனநாயகத்தை எமர்ஜென்ஸியின் மூலமாக காப்பாற்றுகிறோம்” என்று சொல்லி ஜனநாயகத்தை காலில் மிதித்தவர்.

இப்படி, எமர்ஜென்ஸியின் பிரதான நாயகியாக இந்திரா காந்தி இருந்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஒரு வில்லன் இருந்ததை சரித்திர பக்கங்கள் குறிப்பிடாமல் மறந்துவிட்டது. அல்லது மறக்கடிக்கப் பட்டுவிட்டது. அன்றைய இந்திராவின் எமர்ஜென்ஸிக்கு தடையாக இருந்தவர் எழுபது வயது இளைஞன் ’ஜெ.பி’ என்கிற ஜெயபிரகாஷ் அவர்கள். எமர்ஜென்ஸி காலத்தில் வட இந்தியாவில் பல இளைஞர்களுக்கு உத்வேகமாய் இருந்தவர் ஜெ.பி. எமர்ஜென்ஸியின் கைது செய்தவர்கள் விடுதலையான பின்னும் ஜெ.பியை விடுதலை செய்ய இந்திரா சர்வதிகாரம் யோசித்தது. ஜெ.பியை விடுதலை செய்வதும் அல்லது பரோவில் விடுவதும், எமர்ஜென்ஸியை முடிவுக்கு கொண்டுவருவதும் ஒன்று தான் என்று நினைத்தது.



’சஞ்சய் காந்தி’ என்ற இளைஞர் பிரதமராக தடையாக இருந்ததும் இந்த எழுபது வயது முதியவர் தான். அதனால், ஜெ.பி விடுதலை செய்யாமல் காலம் கடத்தினர். டெல்லிக்கு அவர் எழுதிய கடிதங்களை பல கடிதங்கள் அனுப்பப்படமால் இருந்தது. ஜெ.பி உடல்நலத்தின் மீது அரசு பெரிய ஆர்வ காட்டவில்லை. காலதாமதமாக மருத்துவமனையில் அனுமதித்ததால் அவரது சீறுநீரகம் கூட பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பியைப் பற்றி ஒரு வரியின் சொல்ல வேண்டும் என்றால் காமராசர் போல் மிகவும் எளிமையானவர். சிறையில் இருந்த போதிலும் ஜெ.பி நாட்டு மக்களுக்காக கவலைப்பட்டவர். “திருமண சந்தையில் இராணுவ அதிகாரிகளுக்கு என்றும் மதிப்பில்லை” என்று வருத்தப்பட்டார். 1966ல் வறட்சியால் 30 லட்ச மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர். சிறையில் இருந்தப் போது கூட உத்திர பிரதேச மாநிலத்தைப் பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதினார். விறட்சியை பிரதமரிடம் பேச வேண்டும், அந்த சந்திப்பை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த போவதில்லை என்று உறுதியளித்தும் இந்திராவை சந்திக்கும் வாய்ப்பு ஜெ.பிக்கு கிடைக்கவில்லை.

எமர்ஜென்ஸியின் போது ஜெ.பி அடிக்கடி பிரிட்டிஷ் காலத்தை நினைத்து பார்ப்பார். அவர்கள் கூட இவ்வளவு சர்வாதிகாரத்துடன் நடந்துக் கொண்டதில்லை என்று சொல்லுவாராம். ( காமராசர் கூட இப்படி சாகும் முன்பு இப்படி தான் சொன்னாராம்.)

எமர்ஜென்ஸி காலத்தில் இந்தியா ரஷ்யாவின் கை பொம்மையாக இருந்ததை ஜெ.பி குறிப்பிட்டுள்ளார். இந்திராவுக்கு எதிராக அவர் எதோ உலருகிறார் என்று அன்று எல்லோரும் கருதினர். ஆனால், 1990ல் கம்யூனிசம் வீழ்ந்த போது மாஸ்கோவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் சோவியத் அரசின் உளவுத்துறையின் கடுமையாக கண்காணிப்பில் இருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது வெளியே தெரியவந்துள்ளது.

ரஷ்ய உளவுத்துறையின் ஆவணங்கள் குறித்து கிறிஸ்டோபர் ஆண்ட்ரூ, வாசிலி மீத்ரோகின் ஆகியோர் தொகுத்து ’மீத்ரோகின் ஆவணங்கள் : ஜெ.பியும் உலகமும்’ என்ற புத்தகத்தை தொகுத்தனர். அந்த ஆவணப்படி ரஷ்யதான் இந்தியாவுக்கு லஞ்சத்தை அறிமுகப்படுத்தியது. கட்சி நிதி என்ற பெயரில் ஏராளமான பண சூட்கேஸ்களில் அடைக்கப்பட்டு பிரதமரின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எமர்ஜென்ஸி காலத்தில் கைது செய்யப்பட்ட ஜெ.பியை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த தேவசகாயம் அவர்கள் ஜெ.பியுடன் பழகிய தருணங்களை நூலாக எழுதியிருக்கிறார். ஜெ.பி அரசியல் பார்வையும், எமர்ஜென்ஸி முடிவுக்கு வந்தால் இந்திராவுக்கு எதிராக அவர் வைத்திருந்த திட்டங்களை எல்லாம் குறிப்பிட்டுள்ளார் ஜெ.பி. அதில், ஜெ.பியின் முக்கியமான திட்டம், காமராசரை தி.மு.கவுக்கு ஆதரவாக மாற்ற வைப்பது. ஆனால், இந்திராவை பிரதமராக்கி தான் மிக பெரிய தவறு செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்விலே காந்திஜெயந்தி அன்று காமராசர் இறந்தது ஜெ.பி ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேசிய அளவில் மிக பெரிய பலமான கட்சி இல்லை என்பது தான் 1977 வரை அவர்களின் மிக பெரிய பலமாக இருந்தது. ஜனதா கட்சி, பா.ஜ.க என்று பல தேசிய கட்சிகள் வந்தாலும் ஏழைகளை ஏழைகளாக்கும், பணக்காரர்களை பணக்காரர்களாக்கும் காங்கிரஸிடம் தான் மக்கள் மாட்ட வேண்டியதாக உள்ளது.


நூலை வாங்க... இங்கே

ரூ.150, பக்:288
கிழக்கு பதிப்பகம்

**

இணைய புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுயிருக்கும் புத்தகங்களை பார்க்க...!!

Monday, February 7, 2011

ஆர்.எஸ்.எஸ் – மதம், மதம் மற்றும் மதம்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது எனக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. 1947ல் தீவிரமாக செயல்பட வேண்டிய இந்து பிரிவினை வாதத்தை காலம் கடந்து இன்னும் உடும்பு பிடியாக பிடித்திருப்பவர். இவர்கள் என்ன தான் தீவிரமாக செயல்ப்பட்டாலும், இந்து மதத்தில் இருப்பவர்களே கால்வாசி பேர் இவர்களை உண்மையாக ஆதரிப்பது மிக பெரிய விஷயம்.

கடவுளே காலவதியாகிக் கொண்டு இருக்கும் போது மதம் நம்பிக்கை அடிப்படையாக வைத்து மாற்றம் கொண்டு வர நினைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் என்ற என் எண்ணத்தில் இருந்து நான் மாறவில்லை. இந்த புத்தகமும் ஆர்.எஸ்.எஸ் மீது பலர் கொண்டுள்ள எண்ணத்தையும் மாற்றப்போவதில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் சில நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை புரியவைத்திருக்கிறது. மற்றப்படி கட்டுரையின் தொடக்கத்தின் சொன்ன வரியின் இருந்து நான் பின்வாங்கவில்லை.

புத்தகத்திற்கு வருவோம்.

என் ஆஸ்தான குரு பா.ரா அவர்கள் எழுதிய புத்தகம். ஒவ்வொரு புத்தக்க் கண்காட்சியின் அவர் புத்தகத்தை வாங்கி விடுவது வழக்கம். இந்த முறையும் அப்படியே... காஷ்மீர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.


1. அரசியக் கட்சித் தலைவர்கள் தம் வாரிசை அரசியலுக்கு அழைத்து வருவதுப் போல் ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை. இங்கு, குடும்பம் என்பது இயக்கம் மட்டுமே.

2. தனக்கு அடுத்து இவர் தான் தலைவர் என்று முடிவு எடுத்து விட்டால், மற்றவர்கள் ஏன் எதற்கு என்று கேட்பதில்லை. தலைவர் தேர்ந்தெடுக்கும் நபர் தான் அடுத்த தலைவர். இது வரை விமர்சிக்கப்படாத முறை தலைவர்களை தேர்ந்தெடுத்துயிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

3.கோவா சுதந்திரத்திற்கு பிறகும் கோவா போர்த்துகீசிய காலனியின் கீழ் தான் இருந்தது. இராணுவ நடவடிக்கை எடுக்கவோ நேரு மறுத்துவிட்டார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்குள் ஒருவரான ஜகன்னாத் ராவ் ஜோதி நேரே கோவாவில் சத்தியகிரகம் இருந்தற்காக கைது செய்தது. அந்த செயலை எதிர்த்து ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சத்தியகிரகத்தில் இறங்க, 1950 இந்திய சுதந்திர தினத்தன்று போர்த்துகீசிய போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறங்கியது.

ஆர்.எஸ்.எஸ்., சில புரட்சி அமைப்பினரும் சேர்ந்து கோவா காவல் நிலையத்தை கைப்பற்றி தாத்ரா விடுவிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தனர். சரியாக ஒரு வாரத்தில் பல இடங்களில் தாக்குதல் நட்த்தப்பட்டது. இறுதியில் நேரு இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருந்தது. டிசம்பர் 18,1961ல் கோவா இந்தியாவுடன் இணைந்தது.

4. 1962ல் இந்திய- சீனா யுத்தத்தின் போது இந்தியாவில் இருக்கும் ஒரு இடதுசாரி இயக்கங்கள் சீனாவை ஆதரித்தது. கம்யூனிசம் – கேபிடலிசத்திற்கான யுத்தம் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஜவான்களுக்கு உதவியது. வாகனங்கள், ஆயுதம் செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரம் செய்ய தயாராக இருந்தார்கள். பிரதமர் நேருக் கூட இதை எதிர்பார்க்கவில்லை.

1963ல் ஜனவரி 26ல் தேதி நடந்த குடியரசு தின அணி வகுப்பிற்கு அனுமதி தந்தார்.


ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசபக்தி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. பிரச்சனை, அந்த தேசபக்தியின் மீது அவர்கள் மீது பூசும் மதச்சாயத்தில் தான்.

ஆரம்ப அத்தியாயத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை பா.ரா உணர்த்தியிருக்கிறார்.

**


ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான விவாதிக்கப்படும் குற்றங்களை இந்த நூலில் பதில் இல்லை. மிக பெரிய வருத்தம்.

இந்து மதத்தில் இருப்பவர்கள் மத மாறுவதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ். அதில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து ஏன் போராடவில்லை?

பழங்குடியினர் இடத்தில் கூட தங்கி தங்கள் கொள்கையை பரப்ப நினைப்பவர்கள், எத்தனை பழங்குடி இனத்தை சமூகத்தின் முன் உயர்த்தி உள்ளார்கள். ?

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மிசாவில் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்கள் மன்னிப்பு கோரியதும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்திராவின் சர்வதிகாரத்தன எமர்ஜன்ஸியின் போது ஜெபியை தனியே விட்டு ஓடிவந்தவர்களை மேலோட்டமாக ஒரு வரியில் சொல்லியிருப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

”இவர்கள் நேர்மை இல்லாதவர்கள்” என்று ஆர்.எஸ்.எஸ்.யைப் பற்றி ஜெபி குறிப்பிட்டுள்ளார். எமர்ஜன்சஸிப் பற்றி குறிப்பிடும் போது ஜெபி ஆர்.எஸ்.எஸ்.ப் பற்றி விமர்சனத்தையும் குறிப்பிட்டுயிருக்க வேண்டும்.

**

கடைசி ஒரு இரண்டு மூன்று பக்கத்தில் மேலோட்டமாக ஆர்.எஸ்.எஸ் மீது சில குறைகளை சொல்லிவிட்டு இந்த புத்தகத்தை நடுநிலையான புத்தகம் என்று சொல்வதில் எந்த நியாயமுமில்லை. ஆர்.எஸ்.எஸ். பற்றி புரிந்துக் கொள்ளாமல் எதிர்ப்பவர்கள் புரிந்துக் கொண்டு எதிர்க்க இந்த நூல் உதவும்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஹீரோ இயக்கமாக கூறும் நூலாக எனக்கு படுகிறது.

நூலை வாங்க... இங்கே.

ரூ.75. பக் : 144
கிழக்கு பதிப்பகம்

Monday, January 31, 2011

பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம் !

நந்திதா ஹக்சர்

”இந்திய இலங்கைக்கு ஆயுதம் வழங்கி ஈழ கனவை சிதைத்து, பல உயிர்கள் இறந்ததற்கு இந்தியாவும் காரணமாக இருந்ததுள்ளது.

இந்திய ஈழத்திற்கு எதிராக நடந்துக் கொண்டதற்கு காரணம் சீனாவுடனான போட்டியாம்.

சீனாவின் ஆதரவால் இலங்கை விடுதலை புலியை அழித்திருந்தால், நாளை இந்தியாவுக்கு எதிராக மாறும் என்ற அச்சத்தில் இந்தியாவும் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது. இதனால், இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயல் படாது என்று இதுவரை நம்பிவருகிறது. இந்தியா இலங்கைக்கு உதவியதற்கு இதுவும் ஒரு காரணமாக இன்று வரை சொல்லப்படுகிறது.”


இப்படி, இந்தியா – இலங்கை பற்றின பல விமர்சனங்கள் நாம் படிக்கும் வேலையில் மற்றொரு அண்டை நாடான பர்மா மீது இந்தியாவுக்கு இருக்கும் பார்வை நாம் தெரிந்துக் கொள்ள உதவும் நூல் தான் ‘வஞ்சக உளவாளி : பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம்’. Rogue Agent என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம்.

ஜனநாயக நாடான இந்தியா, ஏன் அண்டை நாடான பர்மாவில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவில்லை ? இந்தியாவின் உயர்ந்த விருது வழங்கிய சுகீயை ஏன் காப்பாற்ற நினைக்கவில்லை ?

சட்டத்திற்கு புரம்பாக செயல்படுபவர்களை கைது செய்வார்கள். ஆனால், சட்ட விரோதமாக இந்திய சிறையில் இருக்கும் 36 பர்மிய போராளிகளை இந்தியா ஏன் விடுவிக்கவில்லை ? பல வருடங்களாக அவர்கள் மீது ஏன் குற்றப்பதிரிகைக் கூட தாக்கப்படவில்லை ?

- இப்படி பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த நூல்.



முதல் ஐந்தாறு அத்தியாயங்கள் வழக்கறிஞரான நந்திதா ஹக்சர் தன் 36 கட்சிக்காரர்களைப் பற்றியும், அவர்கள் கைதான வழக்கைப் பற்றியும் சொல்லுகிறார். ஏதோ வழக்கு சம்பந்தமான நூல் என்றே நூறு பக்கங்களை நாம் கடக்க வேண்டிய இருக்கிறது. ஆனால், அதன் பின் அவர் சொல்லும் ஒவ்வொரு சம்பவமும் நம் உளவுத்துறையை நினைத்து வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

தன் நாட்டில் நடக்கும் சர்வதிகாரத்தனத்தை எதிர்த்து போராடும் பர்மிய போராளிகள் இந்திய உதவும் என்று நம்பினார்கள். ஆனால், இந்திய உளவாளிகளோ அவர்களுக்கு உதவ பேரம் பேசியிருக்கிறார்கள். போராளிகளும் கேட்ட பணத்தை தர சம்பதித்துள்ளனர். தங்கள் பணத்தை கர்னல் கிரேவாலுக்கு கொடுத்தனர். இருந்தும், குறிப்பிட்ட தொகை பர்மிய போராளிகளால் தர முடியாத்தால் பேச்சு வார்த்தையை இழுப்பறி செய்துள்ளார் கர்னல் கிரேவால் .

நாலரை ஆண்டுகளாக இந்திய உளவுத்துறையுடன் நடந்த பேரங்களுக்கு பிறகு 10,பிப்ரவரி,1998ல் லேண்ட் ஃபால் தீவில் பேச்சு வார்த்தை நடத்த அழைத்தது. ‘ஆப்ரேஷன் லீச்’ என்ற பெயரில் 6 பர்மிய போராளிகளை பேச்சு வார்த்தையின் போது இந்திய உளவுத்துறை கொலை செய்துள்ளது. 36 பேரை கைது செய்துள்ளது. அவர்களை அந்தமான் சிறைசாலைக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளார்கள். (இந்திய போராளிகளுக்காக பிரிட்டிஷ் அரசு செய்த சிறைசாலை பர்மிய போராளிகளை விசாரிக்க பயன்ப்பட்டுள்ளது)

வழக்கறிஞர் நந்திதா ஹக்சர் போராளிகள் விடுவிக்க பத்து வருடங்களாக போராடி சி.பி.ஐ குற்றப்பத்திரிகை மட்டுமே பதிவு செய்ய வைக்க முடிந்தது. 34 பேர் ( இடைப்பட்ட காலத்தில் 2 பேர் தப்பிவிட்டார்களாம் !) வெளியே வரக்கூடாது என்பதில் சி.பி.ஐ மிக கவனமாக உள்ளது. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் பர்மிய போராளிகளிடம் பேரம் பேசிய கர்னல் கிரேவால் பெயர் குற்றப்பதிரிகையில் இல்லை. வெளி உலகத்திற்கு சுதந்திர பறவையாக அந்த வஞ்சக உளவாளி வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கடைசி சில அத்தியாயங்களில் பர்மா மீது இந்தியா தன் பார்வையை மாற்றிக் கொண்ட காரணத்துடன் சீனாவையும் முடிச்சுப் போடும் போது ஆரம்பத்தில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு விடை தெரிகிறது.

இந்தியா பர்மிய போராளிகள் கைவிட்டத்தில் பர்மா இன்று வரை மியான்மராக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது. எந்த நாட்டிலும் சர்வதிகாரம் நீண்ட நாட்களாக வாழ்ந்ததில்லை. என்றோ ஒரு நாள் மியான்மர் மீண்டும் பர்மாவாக மாறும். ஜன்நாயகம் மலரும். அப்படி மாறும் போது பர்மா இந்தியாவை மன்னிக்குமா என்பது சந்தேகம் தான்.

**

’சீனாவை எதிர்க்க வந்துவிடுமோ’ என்ற அச்சத்தில் தான் ஒவ்வொரு அண்டை நாட்டு விவகாரத்தையும் இந்தியா கையாள்கிறது. நேபால், பர்மா, இலங்கை, பாகிஸ்தான் என்று யாருக்கு எதிராக குரல் கொடுத்தாலும், செயல்பட்டாலும் சீனா சண்டைக்கு வருமோ என்ற அச்சம் அப்பட்டமாக தெரிய தொடங்கிவிட்டது. இந்திய மீனவர்கள் பலர் கொல்லப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.

ஈழம், பர்மா என்று இந்திய உளவுத்துறை கைவிட்ட நாட்டின் பட்டியல் பெருகிக் கொண்டே வருகிறது. பலம் இல்லாதவன் அஞ்சுவதில் தவறில்லை. ஆனால், பலசாலி அஞ்சும் போது அவனுக்கு எதிரிகள் அதிகமாவதை இந்தியா உணர வேண்டும். இந்தியாவை சுற்றி எதிரிகளாக இருப்பது அச்சமும் மிக முக்கிய காரணம்.

கணிணித்துறையில், தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடாக தெரிந்தாலும், துணிச்சலில் நாம் வளரும் நாடு தான்.

நூல் வாங்க... இங்கே

ரூ.170, பக் : 286
கிழக்கு பதிப்பகம்

Tuesday, November 16, 2010

சத்திய சோதனை

இந்திரா பார்த்தசாரதி

இ.பா புத்தகங்கள் என்றால் அரசியல் பகடி செய்யும் எழுத்துக்கள் தான். ’வேதப்புரத்து வியாபாரிகள்’ அபத்தங்களாக சம்பவங்களை கோர்க்கப்பட்டு தற்கால அரசியல்வாதிகளை நக்கலடித்திருப்பார்.’ஏசுவின் தோழர்கள்’ நாவலில் போலிஷ் நாட்டோடு அரசியலோடு இந்தியாவை ஒப்பிட்டு செய்திருப்பார். ‘சுதந்திர பூமி’ நாவலில் ஒரு சமையல்க்காரன் அரசியல்வாதியான கதையை சொல்லியிருப்பார். இதில் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கொள்கையை பகடி செய்திருப்பார். இந்த மூன்று அரசியல் நாவலை கட்டுரையாகக் கூட எழுதியிருக்கலாம். ஏன் நாவலாக எழுதினார் படித்து முடித்த பிறகு தோன்றியது ? கட்டுரையில் சொல்ல வேண்டியதை கதாப்பாத்திரங்களின் விவாதம் மூலம் சொல்லியிருப்பார்.

மிக எளிமையான எழுத்து, அதிக வர்ணனையில்லாத நடை என்பதால் இவரின் மூன்று புத்தங்களை படித்திருக்கிறேன். இ.பாவின் ‘சத்திய சோதனை’ நான் படித்த நான்காவது புத்தகம். இதுவும் அரசியலை பற்றிய சமக்கால நாவல் தான்.

மகாத்மா காந்தி சுயசரிதையின் தலைப்பைக் கொண்ட புத்தகம் தவிர அவரின் சுயசரிதைக்கும், இந்த நாவலுக்கும் எந்த சம்மந்தமில்லை. காந்தியிருந்திருந்தால் தன் புத்தகம் பெயர் இதற்கு வைத்தற்காக மான நஷ்ட வழக்கு போட்டிருப்பார். அவர் இல்லை என்ற தைரியத்தில் இந்த தலைப்பு வைத்துவிட்டார்கள் போல.

தமிழ் அகராதியில் ‘அரசியல்’ என்றால் நாட்டை நிர்வாகிக்கும் கலை. ஆனால் நாம் பயன்ப்படுத்துவது...? தந்திரம், ஏமாற்றுவது, முகமூடி, காலை வாரிவிடுவது, மாட்டிக் கொள்ளால் இருப்பதற்கு... போன்ற காரியங்களுக்கு மாற்றுப் பெயராக தான் இருக்கிறது.

பிரும்மநாயகம் என்ற அரசியல்வாதியின் சுயசரிதை எழுத கோஸ்ட் ரைட்டராக வரும் வாசுதேவன், அவர் செகரெட்டியாக சேருக்கிறான். அங்கு அவருடன் வாசுதேவனுக்கு கிடைக்கும் அனுபவம், அரசியல் தந்திரமும் அவனை பிரம்மிக்க வைக்கிறது. பிரம்மநாயகம் வேட்பாளராக நிருத்திய பிரம்மநாயகத்தின் நண்பர் தணிகை கொலைச் செய்யப்படுகிறார். தணிகையின் கொலை அரசியலுக்காக செய்யப்பட்டதா ? பிரும்மநாயகம் பங்குயிருக்குமா ? என்று பல சந்தேகங்கள் வாசுதேவன் மனதில் ஓடுகிறது. இறுதியில், கொலை பழி வாசுதேவன் மேல் படியாக சந்தர்ப்பங்கள் அமைக்கிறது. அதில் வாசு எப்படி மீண்டான் என்பதை புத்தகம் வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலே சரியான குடிநீர் வசதிகூட இல்லாம இருக்கிறவங்க சதவிகிதம் தெரியுமா உங்களுக்கு ? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க ?’

‘சாராயம் கொடுங்க’

’அரசாங்கத்துக்கு உங்க சிபாரிசு இதுதானா ?’

‘என் சிபாசிசு இல்லேய்யா. அரசாங்கம் இதைத்தானே இப்போ செய்திட்டு வருது ?”


**

’படிச்சு முடிச்சாச்சு. வேலை தேடிக்கிட்டிருக்கேன்.’

வேலை தேடுவானேன் ? கட்சியிலே சேர்ந்திடு !’


’வேதப்புரத்து வியாபாரிகள்’, ‘ஏசுவின் தோழர்கள்’ நாவலில் இருந்த இ.பாவின் அரசியல் நகைச்சுவை இதில் குறைவு தான். எழுத்தாளன் கண்ணோட்டத்தில் நடக்கு கதை இன்னும் அரசியல் நகைச்சுவை கலந்திருக்கலாம்.

தன் முந்தைய நாவலில் திராவிட அரசியலை பகடி செய்தவர், இதில் வன்னிய அரசியலை பகடி செய்திருக்கிறார். குடி பழக்கம் இல்லாதவனாக பேசும் தலைவன் அந்தரங்க நண்பனோடு குடிப்பது போல் அமைத்திருக்கிறார்.

பார்ப்பனிய அரசியல் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி இவர் ஒரு நாவல் எப்போ எழுதப்போகிறார் ??

சமகால அரசியல் நாவல் வரவேற்க ஒன்று தான். இ.பா நாவல் ஒரு தலை பட்சமாக இருக்கிறது என்று தான் தோன்றுகிறது.

நூல் வாங்க... இங்கே


ரூ.100 , பக் : 136
கிழக்கு பதிப்பகம்

Monday, September 27, 2010

நேரு முதல் நேற்று வரை

ப.ஸ்ரீ. ராகவன்



ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆவதற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் பல இருக்கிறது. தகவல், அறிவியல், தொழினுட்பம் என்று பல விஷயங்களை பற்றி கேள்வி ஞானமாவது இருந்திருக்க வேண்டும். ஒரு வருடம் கடுமையாக உழைக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் தவிர எதை பற்றியும் நினைத்துக் கூட பார்க்க கூடாது. இப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பலர் சொல்லும் கருத்துகள் இவை. ஆனால், ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு எப்படி இருக்க வேண்டும், எப்படி மேலான்மை வளர்த்துக் கொள்ள வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பாடுப்பட வேண்டும் என்று சொல்லக் கூடிய புத்தகங்கள் எதுவும் இல்லை.அந்த குறையை இந்த புத்தகம் போக்கியுள்ளது.

ஓய்வு பெற்ற ப.ஸ்ரீ. ராகவன் அவர்களின் ப்ரோபைலே வியக்க வைக்கிறது. மாநில அரசியல் , மத்திய அரசியல் முதல் ஐ.நா வரை பார்த்தவர். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி போன்ற முக்கிய பிரதமர்களிடம் பணியாற்றியவர்.


ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தன் வாழ்க்கையை தொடங்கியதால் வங்காளிகள் பற்றிய தனது அனுபவத்தை அதிகம் பதிய வைத்திருக்கிறார்.

* கண்ணெதிரில் நடக்கும் அநீதியையும் அதிகார வர்க்கத்தின் இறுமாப்பையும் இரக்க மின்மையையும் பொறுத்துக் கொள்ளும் குணம் வங்காளிகளுக்குக் கிடையாது.

* அதிகார தோரனையில் கட்டளையிட்டு அவர்களிடம் வேலை வாங்க முடியாது. ' ஒருவர் முதுகை ஒருவர் தட்டி கொடுத்து தான் வேலை வாங்க முடியும்.
மனிதர்களுக்கான நிறைகுறைகள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், அவர்கள் மிருகங்களாக நடந்துக் கொள்ளமாட்டார்கள்.

* தமிழ் நாட்டில் அதிகார வர்க்கத்தினர் காட்டும் கொடுமைகளையும், சமூக அவலங்களின் சாட்டையடிகளையும் நாம் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். வங்காளிகளுக்கு அந்த தாழ்வு மனப்பான்மை கிடையாது.அதுதான் வித்தியாசம்.

அதே போல், அவர் பணியாற்றிய பிரதமர்கள் பற்றியும் இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஜோதிபாசு பிறகு ஒரு மாநிலத்தில் தொடர்ந்து அதிக ஆண்டுகளுக்கு முதலவராக இருந்தவர் பி.சி.ராய் அவர்கள். 12 ஆண்டுகளுக்கு முதல்வராக இருந்தவர் நாள் முழுவது உழைத்தபோதும், காலையிலும், மாலையிலும் இரண்டு மணி நேரம் ஏழைகளுக்கு அவர் வீட்டில் இலவச சிகிச்சை செய்துவந்தார்.

இந்திரா காந்தி சிறு சிறு விஷயங்களுக்கு கூட அமைச்சர்களை விட அதிகாரிகளை தான் அதிகம் நம்பினார்.

இன்னும், சில இடங்களில் காங்கிரஸின் சாயலை மறைமுகமாகவும், நேரடியாகவும் கிலித்திருக்கிறார்.

**

1994ஆம் ஆண்டு டி.என்.சேஷன் தன் பணிகால அனுபவங்களை அடங்கிய புத்தகத்தில், அவர் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில், அண்ணாதுரை அவர்கள் அமெரிக்க உளவகமான சி.ஐ.ஏயின் கைப்பாவையாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார் என்ற தோனியில் எழுதினார். அந்த புத்தகத்தை திராவிட கடசிகள் தடை செய்ய உச்ச நீதிமன்றம் வரை சென்றனர்.

ஒரு கலெக்டருக்கு புலனாய்வு நிறுவனத்தின் எந்தத் தகவலும் எந்த விதத்திலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிய வேண்டிய தேவை எழுந்தால் கூட, மத்திய உளவுத் துறைக்குத் தெரியாதது மதுரை கலெக்டருக்கு தெரிந்திருக்க முடியாது. பல வருடம் முன் நடந்த சம்பவத்தை இந்த புத்தகம் மூலம் ஞாபகப்படுத்திருக்கிறார். இந்த புத்தகத்தில் இது தேவையா என்று தோன்றுகிறது.

**
ஐ.ஏ.எஸ் குறித்து சுவையான தகவல்கள்

கணவன், மனைவி இருவரும் ஐ.ஏ.எஸ்யில் இருப்பவர்களாக இருந்தால், கூடுமான வரை ஒரே இடத்தில் வேலைகளுக்கு நியமிப்பது என்ற கொள்கையை அரசு கடைப்பிடிக்கிறது.

பல மாவட்டங்களில் போக்குவரத்து வாகனங்கள் கிடையாது என்பதால் 1980ஆம் ஆண்டு வரை ஐ.ஏ.எஸ் பயிற்சியில் குதிரை ஏற்றம் மிக முக்கியமான பயிற்சியாக இருந்தது.

**

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மிக முக்கியமான பங்கு ஒரு புதிய திட்டம் வகுப்பது என்றால், அமைச்சர்களுக்கு துறை சார்ந்த தகவல், அதன் பாதுப்புகள், அதன் அடிப்படியில் எடுக்க வேண்டிய முடிவுகளைப் பற்றி அறிவுரை கூற வேண்டும். அதன் பாதிப்பு, தாக்கங்களை பற்றி அமைச்சருக்கு எடுத்துக்கூற, எழுத்தில் தர அதிகாரிக்கு உரிமை உண்டு. அதையும் மீறி அமைச்சர் செயல்பட விரும்பினால், அதற்கான காரணங்களை விளக்கமாக அமைச்சர் எழுதிக் கையெழுத்திட வேண்டும். அந்த உத்தரவை மதித்து நிறைவேற்றுவது அதிகாரியின் கடமை.

இறுதி அத்தியாயத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அறிவுரை கூறுபதாக இருந்தாலும், அவருக்கும் உள்ளுக்குள் இருந்த பயம் தெரிகிறது.

இப்போது இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் பணி அனுபவத்தை பற்றி எழுதினால் அதில் பெரும் பகுதி ஊழல் பற்றியதாக இருக்கும். சிலர் ஊழலில் மந்திரிகளையே மிஞ்சியவர்கள். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை இந்த நூல் சொல்லுகிறது.

நூலை வாங்க... இங்கே

ரூ.150, பக்: 256
கிழக்கு பதிப்பகம்

Monday, August 23, 2010

சினிமா வியாபாரம் - புத்தக பார்வை

உலகில் சமத்துவமான ஒரு சில விஷயங்களில் சினிமாவும் ஒன்று. பணியாற்றுபவர், திரையரங்கு போன்றவற்றில் பாகுபாடு இருந்தாலும், படம் பார்க்கும் மக்களுக்கு சந்தோஷம் கொடுப்பதில் ‘சினிமா’ என்று பேதம் பார்த்தில்லை.

இணையத்தில் தொடர்ந்து படித்திருந்தாலும், புத்தகமாக படிப்பதில் ஒரு தனி சுகமே இருக்கிறது.

புத்த ஆரம்பத்திலே, ' நல்ல கதை மட்டும் வெற்றி பெற உதவாது' என்று உணர்த்திவிடுகிறார்.




கோலிவுட்டை பற்றி எழுதும் போது சுவையான அனுபவம், படங்கள் பற்றிய தகவல், வியாபார உத்தி என்று பல விஷயங்கள் விளக்கும் போது 'கேபிள்' நம்மோடு பயணம் செய்கிறார். ஆனால், ஹாலிவுட் பற்றி சொல்ல தொடங்கியதும் ஆசிரியராகிவிடுகிறார் . ஒவ்வொன்றுக்கும் விளக்கும் போது அவர் நகைச்சுவை நடை கொஞ்சம் மறைந்து நம்மிடம் இருந்து அந்நியப்படுகிறார்.

இலங்கை யுத்தம் தமிழ் படங்களுக்கு இன்னும் அதிக எதிர்பார்ப்பு ஏற்ப்படுத்தியது என்று சொல்லும் போது எதார்த்த உண்மையாக இருந்தாலும், ஒரு குற்றவுணர்வு நம் உள்ளே தொன்றிக் கொள்கிறது.

ஹாலிவுட்டில் இருந்து டெக்னாலஜி மற்றும் கற்றுக் கொண்டால் போதாது, அவர்களின் வியாபார திறமையை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது.

சினிமா பற்றி தெரியாதவர்கள் கூட இந்த புத்தகம் படித்து பிறகு சினிமா தெரிந்த மாதிரி பேச தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

விநியோகஸ்தர்கள் பற்றி சொல்லும் போது ஏமாற்றும் தயாரிப்பார்களை எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

ஸ்னேகாவின் முதல் படம் 'விரும்புகிறேன்'. ஆனால், 'என்னவளே' முதலில் வெளிவந்து ஒரு புதுமுக இயக்குனர் அவரை அறிமுகப்படுத்திய புண்ணியத்தை கட்டிக் கொண்டார். அதே போல், கேபிள் முதலில் எழுத தொடங்கிய 'சினிமா வியாபாரம்' தான். ஆனால், 'லென் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' சிறுகதை தொகுப்பை முதலில் கொண்டு வந்து அவரை அறிமுகப்படுத்திய புண்ணியத்தை அடியேனுக்கு கிடைத்தது. அவரின் சிறுகதை இந்நேரம் இரண்டாம் பதிப்பு வந்திருக்க வேண்டியது. முதல் பதிப்பை மார்க்கெட்டிங் செய்ய தெரியாமல் அவரின் புத்தகத்தை தேக்கி வைத்துவிட்டேன். (யாராவது 'புத்தக வியாபாரம்' புத்தகம் எழுதியிருக்காங்களா ?) ஆனால், 'சினிமா வியாபாரம்' அவரை பல பேரிடம் கொண்டு சென்றுள்ளது.

இந்த புத்தகத்தை பற்றி சொல்லும் போது சங்கரின் உழைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். நிச்சயமாக சினிமாவில் அடிப்பட்டு, கை சுட்டுக் கொண்டவர்களால் தான் இது போன்ற படைப்பை படைக்க முடியும். 'சினிமா வியாபாரம்' அவரின் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வெற்றி தான்.

சங்கர் சிறுகதை தொகுப்பு போது அவரோடு ஏற்ப்பட்ட சுவையான அனுபவத்தை சொல்லியாக வேண்டும். 'லென் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' சிறுகதை தொகுப்பில் 12 சிறுகதைகளும் பரத்தையர்களை பற்றியோ அல்லது செக்ஸ் பற்றியோ சொல்லும் கதைகளமாகவே அமைந்தது. அதில் ஒரே ஒரு கதை சம்மந்தமில்லாமல் ஒட்டிக் கொண்டது. அது நல்ல கதையாக இருந்தாலும், மற்ற கதையோடு இது அந்நியப்பட்டு இருப்பதை என்னால் உணர முடிந்தது. கண்டிப்பாக படிக்கும் வாசகர்களும் உணர்ந்திருப்பார்கள். அந்த கதை நூலில் இடம் பெற எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அந்த சிறுகதை எழுத பல தகவல் சேகரித்ததாகவும், அதற்காக உழைத்ததையும் ஒரு பதினைந்து நிமிடம் மேல் எனக்கு விளக்கினார். இருந்தும், என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இறுதியில், என்னுள் இருக்கும் எழுத்தாளன் பதிப்பாளனை வென்றுவிட்டான். 13வது கதையாக 'நண்டு' கதையை அந்த புத்தகத்தில் இணைத்துவிட்டேன். எந்த நேரத்திலும் தன் உழைப்பை விட்டுக் கொடுக்க விரும்பாதவர் சங்கர்.

'சினிமா வியாபாரம்' - 350 பக்கங்களுக்கு மேல் வர வேண்டிய புத்தகம், 142 பக்கங்களில் வந்திருக்கிறது. அடுத்த எடிஷனில்... மன்னிக்கவும் ரிவிஷனில் விலையோடு பக்கங்களும் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

Sunday, January 31, 2010

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : டி.ஆர். கார்த்திகேயன் vs கே.ரகோத்தமன்



சென்னை புத்தக மிகவும் எதிர்பார்த்து வாங்கிய புத்தகம். இந்த அளவுக்கு என்னை எந்த புத்தகமும் ஏமாற்றியது இல்லை என்று சொல்லலாம்.ஒரே மூச்சில், படித்து முடித்தேன். படிக்க படிக்க கோபம் தான் வந்தது.

பின்னட்டையில்....
'இதை விட முழுமையான ஆதார பூர்வமான ஒரு கொலை வழக்கு விசாரணை நூல் இதல் முன் தமிழில் வெளிவந்ததில்லை'.

டி.ஆர். கார்த்திகேயன் எழுதிய 'வாய்மையின் வெற்றி' புத்தகத்தை இதற்கு முன் தமிழில் வந்திருப்பதை சொல்லிக் கொள்கிறேன். இது நேரடி தமிழ் நூல் இல்லை. (‘Triumph of Truth – The Rajiv Gandhi Assassination’ புத்தகத்தின் தமிழாக்கம்). ஆங்கில படத்தை பார்த்து படம் எடுத்து விட்டு, தமிழில் இது வரை யாரும் எடுத்ததில்லை என்று சொல்லும் இயக்குனருக்கும், பின்னட்டை விளம்பரத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

கே.ரகோத்தமனின் தனிப்பட்ட எண்ணங்கள் இந்த புத்தகத்தில் இருப்பதை பல இடங்களில் தெரிந்துக் கொள்ள முடிகிறது. பல இடங்களில் விசாரணை கமிஷன் தலைவர் டி.ஆர். கார்த்திகேயனை தாக்கியிருப்பது தெரிகிறது. கொஞ்சம் புலம்பலும் இருக்கிறது. ஓய்வு பெற்ற பிறகு தனது மேலாளரை துணிச்சலாக போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இந்த புத்தகம் பல கேள்விகளை தான் எழுப்ப வைக்கிறதே தவிர, எதற்கும் விடை சொல்லுவது போல் இல்லை.

1.

இவர் தனது புத்தகத்தில், 'சில சயனைட் மரணங்களைத் தடுத்திருக்கலாம். அதிகாரிகளின் மெத்தனத்தாலும் தயக்கத்தினாலும் அது மட்டும் முடியாமல் போனது'.

சி.பி.ஐ பாதுகாப்பில் இருந்த சண்முகம் தப்பித்து தற்கொலை செய்துக் கொண்டதை என்ன சொல்லுவது ? சி.பி.ஐ அஜாக்கிரதை காரணமாக இருந்தாலும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கார்த்திகேயன் புத்தகத்தில் தெரிகிறது.

ஆனால், ரகோத்தமன் எழுத்துகளை படிக்கும் போது ஒரு பத்திரிகையாளர் போல் சொல்கிறார்.( இவர் தான் இந்த புத்தகம் எழுதினாரா ? இவர் சொல்ல இன்னொருத்தர் எழுதினாரா?) அதிகாரிகளின் மெத்தனம் என்பதை சாத குடிமக்கள் கூறலாம். ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதால் உங்களையும் சேர்த்து உங்களுடன் பணியாற்றிய அதிகாரிகளை குறை கூறுவது நியாயமில்லை.



2.

ஜெயின் கமிஷன் விசாரணையின் போது, நீதிபதி ஜெயினே தனது விசாரணைக்கு சிறப்புப் புலனாய்வு குழுவினரிடம், " கார்த்திகேயன் ! நீங்கள் இந்த விசாரணை மிகச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறீர்கள். குறுகிய காலத்தில் எந்த ஆதரத்தையும் விட்டு விடாமல் ஒழுங்காகச் சேகரித்துக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறீர்கள். ஆனால், வழக்கு விவரங்களை மட்டும் எனக்குத் தராமல் மறைத்து வீட்டீர்கள். விசாரணையின் போது பத்திரிக்கைகளுக்கு கசிந்த அளவு செய்திகள் கூட ஜெயின் கமிஷனுக்குக் கிடைத்து விடாதபடி நீங்கள் கவனமாகப் பார்த்துக் கொண்டதை அறிந்த பிறகு தான் நானே சுயமாக மீண்டும் அனைத்துத் தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்று சொன்னார்.

என்னைப் போன்ற விசாரணை அதிகாரிகளுக்கு, மாதக்கணக்கில் இந்த வழக்குக்காக நாயாகா உழைத்தவர்களுக்கு இந்த விமரிசம் எத்தனை மன வேதனை அளித்திருக்கும் !


ஜெயினே கூறியது கார்த்திகேயனை. ஆனால் மன வேதனை இவருக்கா ?? அல்லது கார்த்திகேயனை அவர் விமர்சனம் செய்தது உங்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லையா ?? என்று புரியவில்லை. தன் மேலாளரை குறை சொல்லும் போது நம்மையும் சேர்த்து தான் குறை சொல்கிறார்கள் என்று நீங்கள் எடுத்துக் கொண்டு இருக்கலாம். தன் மேலாளரிடம் உங்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததாக இந்த புத்தகத்தில் தெரியவில்லை.

ராஜிவ் காந்தி வழக்கில் ரகோத்தமன் விசாரிக்க விரும்பிய வைகோ மற்றும் மரகதம் சந்திரசேகர் ( ஸ்ரீ பெரும்புதூர் வெட்பாளர்).

3.

'அத்தனை அரசியல்வாதிகளிடமும் நிகழ்த்தப்பட்ட 'மேலதிகாரிகளின் விசாரணை' மிகவும் மேம்போக்காக அமைந்து விட்டதில் தனிபட்ட முறையில் எனக்கு வருத்தம் உண்டு'. (பல இடங்களில் இவரின் தன்னிலை பார்வை தெரிகிறது.)

எங்களுக்கு மேல் விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டிய கார்த்திகேயன், அதைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்பது புரியாத புதிர்.


இந்த வரிகள் புத்தகத்திற்கு sensationக்காக பயன் படுத்தியது போல் தான் உள்ளது.

நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ளவும். குற்றம் செய்த அரசியல்வாதியே மேம்போக்காக விசாரணை தான் நடத்தப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் மற்றவர்கள் அடித்து விசாரணை செய்ய வேண்டும் எதிர்பார்த்தாரா ? கலைஞரை போல் ஜெயலலிதாவும் தான் அன்றைய நிகழ்ச்சிக்கு போகவில்லை. அதை பற்றி ஏன் குறிப்பிடவில்லை ?

கார்த்திகேயன் புத்தகத்தில் இல்லாத தகவல், இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.
1. விடுதலை புலிகளின் ஒரு சில கடிதங்கள் ( அவ்வளவு முக்கியத்துவமான கடிதங்கள் இல்லை)
2. சுப்பிரமணியம் சுவாமி கிட்டுவை ராவின் உளவாளி என்று சொல்லுவது.
3. சில அரசியல் தலைவர்கள் மீது சந்தேகம் இருந்தும் விசாரிக்காமல் இருப்பது.
மற்றும்
4. கே.ரகோத்தமனின் தனிப்பட்ட மன குமுறல்கள்.

நான் கார்த்திகேயனுக்காக வக்காளத்து வாங்கவில்லை. கே.ரகோத்தமன் குற்றவாளி குண்டில் இருந்து கொண்டு அடுத்த வரை குறை சொல்ல கூடாது என்பதை தான் சொல்லகிறேன்.

கென்னடி மரணம் போல் ராஜீவ் மரணத்தில் இருக்கும் பல மர்மங்கள் வெளிவர போவதில்லை. சுத்தி சுத்தி விடுதலை புலிகள் மீது தான் குற்றம் சொல்ல போகிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு பிறகு விடுதலை புலிகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிதி வழங்கியவர் யார் ? பாக், சீனாவின் மறைமுக தொடர்பு உண்டா ? இப்படி பல தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்.

ராஜிவ் காந்தி கொலையை பற்றி நீங்கள் வாசிக்கும் முதல் புத்தகமாக இருந்த, கண்டிப்பாக இது நல்ல அறிமுக புத்தகம் தான். முன்பே கீழ் காணும் புத்தகங்களை வாசித்திருந்தால் இந்த புத்தகத்தால் பெரிய தகவல் ஒன்றுமில்லை.

Triumph of Truth – The Rajiv Gandhi Assassination – The Investigation, by D.R.Kaarthikeyan and Radhavinod Raju, ('தமிழில் : ‘வாய்மையின் வெற்றி' ராஜிவ் கொலை வழக்கு புலனாய்வு’)
Beyond the Tigers – Tracking Rajiv Gandhi Assassination - Rajeev Sharma.
Assassination of Rajiv Gandhi – Unanswered Questions and Unasked Queries - Subramanian Swamy (தமிழில் அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்று நினைக்கிறேன். பெயர் தெரியவில்லை.)

ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் விலகும் நேரம் - எந்த மர்மமும் இந்த புத்தகத்தில் விலகியதாக தெரியவில்லை.

டிஸ்கி : ஒரு நண்பரிடம் இந்த புத்தகத்தை பற்றி பேசும் போது, அவர் " இது சினிமாவுக்கான நல்ல திரைக்கதை புத்தகம்" என்றார்.

Wednesday, December 2, 2009

மு.க.ஸ்டாலின்

ஜி.ஆர்.சுவாமி

"எல்லோரும் ஸ்டாலினை நான் உருவாக்குவதாகச் சொல்கிறார்கள். அது தவறு. அவரை உருவாக்கி விட்டதே இந்திரா காந்தி தானே ! பேசாமல் கிடந்த அவரை மிசா கைதியாக்கி, சிறையில் போட்டு, அரசியலில் அவரை உருவாக்கியதே இந்திரா காந்தி தானே !"
– கலைஞர்




நாளைய தி.மு.க கட்சியின் எதிர்காலம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் இருக்கிறது எந்த வித சந்தேகமில்லாமல் தற்போதிய அரசியல் சூழல் தெரிகிறது. அவரை பற்றி தி.மு.க கட்சி சாற்பாக பலர் இப்போதே கொடி தூக்கி நூல்கள் எழுத தொடங்கிவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலை ஒரு தலை பச்சமில்லாமல் ஸ்டாலினை பற்றி வந்த புத்தகம் என்று சொல்லும் அளவிற்கு Minimax வெளியீடான ‘மு.க.ஸ்டாலின்’ நூல் அமைந்துள்ளது.

ஸ்டாலின் வாழ்க்கையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர் மிசாவில் கைதானதில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை உறுதி செய்வது போலவே 'அது ஒரு மிசா காலம்' என்ற தலைப்பில் இந்த நூல் தொடங்குகிறது.

ஜார் மன்னன் ஆண்ட ரஷ்யாவை பாரதியார் " இம் என்றால் சிறைவாசம் ! ஏன் ? என்றால் வனவாசம், இவ்வாறு செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே கோலோச்சியது " என்பார். அந்த பிரதிபலிப்பு மிசாவின் போதும் அங்கிகெனாதப்படி இந்திய பெருநாட்டில் எங்கும் ஒரே மாதிரி தான் இருந்தது. இக்கொடுமைக்கு ஈடுக்கொடுக்க முடியாதவர்கள், " எங்களுக்கு தி.மு.கவுக்கும் எந்தத் தொடர்பும் இப்போது கிடையாது, நான் இயக்கத்தை விட்டு விலகி பல நாள் ஆகிவிட்டது" என அறிக்கை விடுவோரும், விளம்பரம் செய்ததோடுமாக இருந்தனர். அந்த சமயத்தில் ஸ்டாலினை கைது செய்து, அவர் கொடுமை படுத்திய காவலர்கள் முயற்சித்தனர். ஸ்டாலினை காப்பாற்றும் முயற்சியில் சிட்டிபாபு இறந்தார். ( சிட்டிபாபு இறந்ததை பற்றி இந்த நூலில் குறிப்பிடவில்லை.)

இப்படி தொடங்கிய ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில் தி.மு.க இளைஞர் அணி முக்கிய பொறுப்பு அவரை மேலும் உயர்த்தியது. ஸ்டாலினுக்கு தோள் கொடுத்த தி.மு.க தலைவர்களுள் முக்கியமானவர் வை.கோபால்சாமி. தோள் கொடுத்தவர் ஒரு கட்டத்தில் எதிர் அணியில் சந்திக்க வேண்டிய சவாலை சமாளிக்க வேண்டிய நிலைமை.

ஆ.தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் மேயராக இருந்த போது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேயருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. விளைவு, மாநகராட்சியின் நிர்வாகப் பணிகளில் தேக்கநிலை ஏற்ப்பட்டது. ஒருவர் இரண்டு பதவியில் இருக்க கூடாது என்பதால் தன் மேயர் பதவியை துறந்தார்.

அதுமட்டுமில்லாமல், முதன் முறையில் போட்டியிட்டு அமைச்சரவையில் சுலபமாக வருவது போல் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி எதுவும் கிடைக்கவில்லை. 1976ல் தொடங்கிய ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில், 2006யில் தான் அமைச்சர் பதவி கிடைத்தது. அதுவும் வாரிசு என்ற பெயரில் கிடைத்த பதவி என்று விமர்சனத்துக்கு ஆளானார்.

அரசியலில் தொடக்கத்திலே பல சவால்கள், விமர்சனங்கள் என்று எப்படி சமாளித்தார் என்பதை இன்னும் விரிவாக இந்த புத்தகம் சொல்லியிருக்கலாம். ஒரு சில இடங்களில் புத்தகம் படிக்கும் எண்ணமே வரவில்லை. நாளெடுகழில் சேகரித்த செய்தி தொகுப்பு போல் இருந்தது. குறிப்பாக, தினகரன் அலுவலகத்தில் தீவைப்பு சம்மவமும், அழகிரி, ஸ்டாலின் உறவுமுறையும் சொல்லலாம். சிறு புத்தகம் என்பதால் மேலோட்டமாக செய்திகளை தான் தெரிந்துக் கொள்ள முடிகிறது.


‘ஒரே இரத்தம்’ என்ற திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவராக நடித்திருப்பார். ஸ்டாலின் வெள்ளித்திரை பிரேவரத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஒரு டி.வி தொலைக்காட்சி தொடரில் கூட நடித்து இருக்கிறார். இவரும் சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தினாரா இல்லையா என்று விபரங்கள் இல்லை.

ஸ்டாலின் பற்றிய வாழ்க்கை குறிப்புகளில் மு.க.முத்து, எம்.ஜி.ஆர் படம் எதற்கு ? ஸ்டாலின் சம்பந்தமான வேறு படத்தை போட்டு இருக்கலாம். எதிர் கட்சியில் இருந்த பெருந்தலைவர் காமராஜர், வி.வி.கிரி போன்றவர்கள் ஸ்டாலின் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். அதை பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

"கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலினுக்கு அது சாதகமாகவும் இருக்கிறது. பாதகமாகவும் இருக்கிறது. சாதகம் அவருக்கு விளம்பரம் கிடைக்கிறது. சுலபமாக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். அதே சமயம் முதல்வரின் மகன் என்பதால் விமர்சங்களும் எழுகிறது. இது பாதகம்." - சோ, துக்ளக் ஆசிரியர் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

இப்படி முன்னனி பத்திரிக்கையாளர் விமர்சனங்களுக்கு ஸ்டாலின் பதில் என்ன ?? ஸ்டாலின் பத்திரிக்கை விமர்சனங்களை எப்படி எதிர்க் கொண்டார் ?? போன்ற விபரங்கள் சொல்ல வேண்டிய ஒன்று.

கலைஞர் குழுமத்தில் சன் டி.வி இருந்த போதும், இப்போது கலைஞர் டி.வி கையில் இருந்தும் ஸ்டாலின் பெரும்பாலும் பேட்டி கொடுத்ததில்லை. அவர் மேல் இருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களை பெரிதாகவும் எடுத்துக் கொண்டதில்லை. அரசியல் விமர்சங்களுக்கு பதில் அளிக்கிறார். மேற் குறிப்பிட்ட ஒரு சில குறைகளை ஸ்டாலினை பற்றி பெரிய புத்தகம் கொண்டு வரும் போது கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்.

தமிழ் நாட்டு அரசியலில் வாரிசு அரசியல் என்ற பதம் தவிர்க்க முடியாதது. ஆனால், அது ஸ்டாலினுக்கும் பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. ! (என் கருத்தல்ல.... இந்த புத்தகத்தில் இருந்த இறுதி வரிகள்)

நூலை வாங்க இங்கே...

பக்கங்கள்.79 விலை.25.
Minimax வெளியீடு

Wednesday, October 28, 2009

இண்டர்வியூ டிப்ஸ்



எஸ்.எல்.வி. மூர்த்தி

படம் பார்த்து விட்டு வரும் ரசிகனிடம், " படம் எப்படி இருக்கு?" என்று கேட்கும் போது, " முதல் அரை மணி நேரம் ஒரே போர் ஸார், அதுக்கு அப்புறம் படம் பார்க்கலாம்" என்று சொல்லுவது போல், ஒரு வாசகனாக இந்த புத்தகத்தை வாசிக்கும் போது தோன்றியது.

‘இண்டர்வியூ டிப்ஸ்' என்ற தலைப்பு வைத்திருப்பதால் இந்த புத்தகம் வேலை தேடும் இளைஞர்/ இளைஞிகளுக்காக என்ற எண்ணத்தோடு தான் படிக்க தொடங்கினேன். ஆனால், முதல் மூன்று அத்தியாயம் படித்ததும் ஒரு சிறு குழப்பம் வந்தது. இந்த புத்தகம் இண்டர்வியூ செல்பவர்களுக்காக ? அல்லது இண்டர்வியூ எடுப்பவர்களுக்காக ? என்று. காரணம் அந்த மூன்று அத்தியாயங்கள் நிறுவனத்தின் தேவைகள், அதற்கு தேவையான ஆட்கள் எண்ணிகை என்று நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் நூல் இருந்தது. அதன் பின் வரும் அத்தியாயங்களில் தான் இண்டர்வியூ செல்வபர்களுக்கு டிப்ஸ்யை வாரி வழ்ங்கி இருக்கிறார்.

1905 ஆம் ஆண்டு ஆல்ஃப்ரட் பினெட் (Alfred Binet) கண்டு பிடித்த தேர்வு முறையை நாம் இன்றளவு பின்பற்றுகிறோம். (இவ்வளவு நாள் யார் இந்த முறையை கண்டு பிடிச்சாங்க தெரியாமல் இருந்தேன்.)

நூறு வருடங்கள் கடந்த பின்னும் அந்த முறையை இன்றளவு நாம் கடைப்பிடிக்கிறோம். அதில் தேர்ச்சி பெற பாவனை, அடிப்படை யூக்தி, நடை, உடை என்று ஆச்சரியப்படு அளவிற்கு தேர்வு முறையை வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் விதியையும் தேர்வு தான் தீர்மானிக்கிறது. வாழ்க்கையின் வெற்றியை தேர்வின் வெற்றி முடிவு செய்கிறது.

இண்டர்வியூ வருபவர்கள் இப்படி தான் வர வேண்டும், இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத சில விதி முறைகள் உள்ளன. புதிதாக கல்லூரி முடித்து வருபவர்களுக்கு அந்த விதி முறைகள் தெரிய நியாயமில்லை. அனுபவம் பெற்ற சில பேரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தான் ஆலோசனை பெற முடியும். இருந்தாலும் அவர்களுக்கு ஒரளவு தான் இது உதவும். இண்டர்வியூ கற்று கொடுக்கும் அனுபவம், அடுத்த இண்டர்வியூக்கு உதவும். அடுத்த இண்டர்வியூ என்ற பேச்ச வராமல், முதல் இண்டர்வியூ வெற்றி பெற நினைப்பவர்கள் ஒரு சிலர் தான் வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெற்றி பெறாத பலருக்கு ஒரு நல்ல வழி காட்டியாக இந்த புத்தகம் இருக்கும்.

மைக்ரோசாஃப்ட், கூகிள் கம்பெனிகள் படாத பாடு பட்டு தயாரித்த ஒரு சில கேள்விகளை குறிப்பிட்டு நம் தலையை சுற்ற வைத்திருக்கிறார். குறிப்பாக இந்த கேள்வி...

'How many golf ball can fit in a schoolbus ?'

இந்த மாதிரி கேள்விக்கு யோசித்து பதில் சொல்வதாக இருந்தால் அந்த வேலையே எனக்கு வேண்டாம். இவ்வளவு சொல்லுபவர் ஏன் மைக்ரோசாஃப்ட், கூகிள் போன்ற நிறுவனத்தில் வேலைக்கு சேரவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இருந்தால், அவர் ஏன் இந்த புத்தகத்தை எழுதிக்கொண்டு இருக்க போகிறார்.

பயோடேட்டா, இணைப்புக் கடிதம், ரெக்ரூட்மெண்ட் ஏஜென்ஸி என்று விண்ணப்பம் அனுப்பும் முறைகளை மிக எளிதாக விளக்கியுள்ளார். அதை போல் இண்டர்வியூ செல்லும் முறைகளையும், அங்கு எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமை, அடிப்படை நல் ஒழுக்கங்கள் போன்ற தகவல்கள் புதிதாய் கல்லூரி படித்து முடித்து விட்டு வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். ( முக்கியமான Target Audience அவர்கள் தானே !)

இவை எல்லாவற்றிக்கும் மேலாக, நாம் எந்த கம்பெனியில் வேலை செய்யலாம் போன்ற தகவலுக்கு To Best Companies to Work for 2008 - சர்வேவையும் கொடுத்திருக்கிறார்கள். இறுதி அத்தியாயத்தில் கொடுத்திருக்கும் 230 கேள்விகள் (50 கேள்விகளுக்கு தான் பதில் உள்ளது) கொடுத்து நேர் முக தேர்வுக்கு வாசகனை முழுமையாக தயார் படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

'இண்டர்வியூ டிப்ஸ்' என்று புத்தகத்தின் தலைப்பு வைத்து விட்டு, புத்தகத்தின் உள்ளே பல இடங்களில் 'பேட்டி' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். படிக்கும் போது படு செயற்கை தனமாக உள்ளது. ( நல்ல வேளை 'பேட்டி ஆலோசனை' என்று புத்தகத்தின் தலைப்பு வைக்கவில்லை)

எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதிய 'ஹலோ ! உங்களை தான் தேடுகிறார்கள்' என்ற புத்தகத்தை வாசித்தவர்களா நீங்கள் ! அப்படி வாசித்திருந்தால் இந்த புத்தகத்தை பாதி படித்தது போல் தான். அந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் இதிலும் உள்ளன. ஒரு சில இண்டர்வியூ கேள்விகள், வேலை செய்வோர் எண்ணிக்கை கணக்கு என்று அசல் அந்த புத்தகத்தில் இருப்பதை அப்படியே காபி அடித்திருக்கிறார்கள். ஸாரி... அப்படியே மறு பதிப்பு செய்திருக்கிறார்கள். (இரண்டு புத்தகத்தின் ஆசிரியரும் எஸ்.எல்.வி.மூர்த்தி தானே !)

இண்டர்வியூ செல்பவர்கள் தங்களை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரளவு தயாராக செல்ல இந்த புத்தகம் உதவும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.


இந்த புத்தகத்தை வாங்க... இங்கே.

பக்கங்கள்.152,
விலை.75
கிழக்கு பதிப்பகம்

Thursday, August 6, 2009

மாலன் எழுதிய "ஜனகணமன"

பிரபல பதிவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது மாலன் பற்றிய பேச்சு அடிப்பட்டது. நான் அவரிடம் "இவர் ஏன் ஈழத்துக்கு ஆதரவு தெரிக்கவில்லை?" என்ற கேட்டப்போது, அந்த பதிவர் " அவர் தீவிர தேசியவாதி. அவர் எழுதிய "ஜனகணமன" புத்தகத்தை படியுங்கள் உங்களுக்கே புரியும்" என்றார்.



அந்த பதிவர் சொன்னார் என்பதற்காக "ஜனகணமன" நூலை படித்தேன். காந்தி, நாதுரம் கோட்சே என்ற இருவர் மனநிலையில் நன்றாக எழுதியிருக்கிறார். குறிப்பாக கோட்சே காந்தியை கொல்ல துடிக்கும் மனநிலையில் பேசும் வசனங்கள் இன்றும் காந்திக்கு எதிராக இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு பகுதி முடியும் வார்த்தையில், அடுத்த பகுதி தொடர்வது போல் எழுதியிருப்பது பாராட்டுக்குறியது. காந்தியை பற்றி மூன்று தலைமுறைகளின் வாதத்தை நன்றாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதற்கான பதில் தான் இல்லை.

ரமணன் ஒருவனை தவிர இந்த புத்தகத்தில் வரும் எல்லா பாத்திரங்கள் நிஜப்பாத்திரங்கள். உண்மையான சம்பவங்கள். 95% உண்மை. 5% மட்டுமே கற்பனை கலந்திருப்பதால் இதை 'நாவல்' என்று கொள்ள முடியுமா தெரியவில்லை. ஆனால், வரலாறு புத்தகமாக கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளலாம்.

கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்பகாலத்தின் புத்தக பதிப்பு. Crown size, ISBN இல்லை. ஆனால், அதே எளிமையான நடையில் இருக்க வேண்டும் என்பதில் கவனம் இன்று வரைக்கும் அவர்கள் பதிப்பிக்கும் புத்தகத்தில் இருக்கிறது. இப்போது இரண்டாம் பதிப்பு 'Demy Size'யில் கிடைக்கிறது.

கல்லூரி படிக்கும் காலத்தில் எனக்கு காந்தி பிடிக்கும். நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" கவிதை நூல் முதல் கவிதையே "மகாத்மாவுக்காக அழுகிறேன்" என்ற கவிதை தான். ஆனால், பல புத்தகங்கள் வாசிப்புக்கு பிறகு காந்தி மீது எனக்கிருந்த எண்ணம் மாறிவிட்டது. அவர் எனக்கு சுயநலவாதியாக தான் தெரிந்தார். கடவுள் இருக்கிறா ? இல்லையா ? என்ற வாதம் இருப்பது போல் காந்தி மகானா ? சுயநலவாதியா ? என்ற வாதம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த புத்தகத்தை படிக்க சொன்ன பதிவரை பற்றி சொல்ல மறந்திட்டேனே...!! வேறு யார்.. நம்ப 'லக்கி' தான்.

Monday, July 27, 2009

மதி வரைந்த 'அடடே - 2'


"இல்லாததை ஈடுசெய்ய மனிதனுக்குக் கிடைத்துள்ளது கற்பனை வளம்; இருப்பதை சகித்துக் கொள்ள கிடைத்துள்ளதுய் நகைச்சுவை"

-ஆஸ்கார் வைல்ட்


பொதுவாக சித்திர புத்தங்கள் என்றால் குழந்தைகளை மனதில் வைத்து தான் வரைவார்கள். அவர்களை கவர்வதை தான் புத்தக வடிவமும் இருக்கும். வயது ஆக ஆக சித்திரம் வரைவது பலருக்கு தூரமான விஷயமாக மாறிவிடுகிறது. Botany, Zoology படிப்பவர்கள் மதிபெண்களுக்காவது வரை வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மற்றப்படி வளர்ந்த பிறகு சித்திரத்தை ரசிக்கும் மனம் வருவதில்லை.

எத்தனை வயதானாலும் நாளிதழில் கேலிகை சித்திரத்தை ( அதாங்க...Cartoon) பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அரசியல், விளையாட்டு, சட்டம் எதுவாக இருந்தாலும் பார்ப்பவனுக்கு குறுநகை வர வைப்பது போல் சித்திரம் இருக்கும். இப்படி கேலி சித்திரத்தில் தமிழில் நமக்கு மிகவும் பிரபலமானவர் ஒருவர் 'மதன்' அவர்கள். இப்போது அவர் எழுத்தாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். மற்றவர் 'மதி' அவர்கள்.

மதி 'தினமணி'யில் வரைந்த முதல் பக்க பாக்கெட் கார்ட்டூன்களை ஆறு நூல்களாக தொகுத்துள்ளார். இதில் இரண்டாவது தொகுப்பு நூல் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மனுஷன் ஒவ்வொரு சமூக நிகழ்வுகளை நையாண்டி செய்திருக்கிறார். யாரை நையாண்டி செய்திருக்கிறாரோ அவர்களே சிரிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சில சாம்பிள்.

தி.மு.க ஆட்சி விலகல் பற்றி...

" இப்படி அநியாயமா அமைச்சர் பதவியும் போச்சே ! கட்சி மட்டும் கூட்டனிலேருந்து விலகினா போதாதா, எதுக்கு அமைச்சர்களும் விலகணும் ?"


" பார்த்தீங்களா டாக்டர், இதுக்காகதான் வரச் சொன்னேன் ! இன்னும் பிர்சார ஞாபகத்துலேயே இருக்கார் !"


டாக்டர் காலில் விழும் தன் அரசியர்வாதி கணவனை கவலைப்படும் மனைவி புலம்பல்.

என்னங்க, மோசம் போய்ட்டோம் ! செய்கூலி இல்லை... சேதாரம்ம் இல்லை... கற்களுக்கு விலை இல்லைன்னு நாம் வாங்கின நகை தங்கமே இல்லையாம் !"

குறிப்பாக காங்கிரஸ்யை அணியாயத்துக்கு கலாய்த்திருக்கிறார்.

" ஏதோ வெகுகாலத்திற்குப் பிறகு தனித்துப் போட்டியிடுகிறோம் ! மீண்டும் அடுத்த தேர்தலில் 'அ.தி.மு.க' அல்லது 'தி.மு.க' கூட்டணிக்கே செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையை எங்களுக்கு எற்படுத்திவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம் !"

தேர்தல் சமயத்தில் கை ரேகை யோசிக்காரனை ப்ளாட்பாரத்தில் இருந்து போலீஸ் விரட்டுவது போல் சித்திரம் என்று பல சித்திரங்களை இதில் குறிப்பிடலாம். நல்ல புத்தகங்களே விற்பனையாகமல் இருக்கும் போது இதுபோல் சித்திர புத்தகங்களை நூலாக வெளியிட்டுயிருக்கும் கிழக்கு பதிப்பகத்தின் சோதனை முயற்சியை பாராட்ட வேண்டும்.

Thursday, July 2, 2009

வாய கொடுத்து புண்ணாக்கிக்காதே சொல்லுறாங்களோ !

ஒரு முறை பேச்சு வழக்கில், நான் 'கிழக்கு பதிப்பகம்' வெளியீடு புத்தகங்களை தான் அதிகம் படிப்பதாக என் மனைவி குற்றம் சுமத்தினாள். நான் 'இல்லை' என்று நிருப்பிக்க கேபிள் சங்கர் ஸ்டையில் கடந்த ஆறு மாதம் (ஜனவரி முதல் ஜூன் வரை) படித்த புத்தகங்களை பட்டியலிட்டேன்.

கிழக்கு பதிப்பகம்

1.அணு : அதிசயம் - அற்புதம் - அபாயம் - என்.ராமதுரை
2.ஆயில் ரேகை - பா.ராகவன்
3.ஸ்...! - முகில்
4.இந்திய பிரிவினை - மருதன்
5.கடல் புரத்தில் - வண்ணநிலவன்
6.அமெரிக்காவில் கிச்சா - 'கிரேஸி' மோகன்
7.சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - யுவ கிருஷ்ணா
8.சிரிப்பு டாக்டர் - முத்துராமன்
9.கேங்டாக்கில் வந்த கஷ்டம் - சத்யஜித் ரே
10ஓபாமா பராக் - ஆர்.முத்துகுமார்
11.1857: சிப்பாய் புரட்சி - உமா சம்பத்.
12.இரா.முருகன் கதைகள் - இரா.முருகன்
13. கிச்சு கிச்சு - ஜே.எஸ்.ராகவன்
14.அறிந்தும் அறியாமலும் – ஞாநி



Prodigy & Minimax

15.செவ்வாய் கிரகம் - என்.ராமதுரை
16.ஜப்பான் -எஸ்.சந்திரமௌலி
17.சீனப்புரட்சி - மருதன்
18.ஐன்ஸ்டைன் - பத்ரி சேஷாத்ரி
19.கன்ஃபூஷியஸ் - என்.ராஜேஷ்வர்
20.அம்பானிகள் பிரிந்த கதை - என்.சொக்கன்
21.தே.மு.தி.க - யுவ கிருஷ்ணா

National Book Trust

22.காயம் பட்ட காகத்தின் கதை - ரமேஷ் பேடி
23.கபீர் - பாரஸ்நாத் திவாரி
24.தண்ணீர்
25.கடற்புறத்து கிராமம் - அனிதா தேசாய்
26.பசித்தவர்கள் - தேவனூரு மாகதேவ்

உயிர்மை பதிப்பகம்

27.என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
28.நிழல் வெளிக்கதைகள் - ஜெயமோகன்

29. தீராக்காதலி - சாரு நிவேதிதா
30. தப்புத் தாளங்கள் - சாரு நிவேதிதா

தி.க வெளியீடு

31.சேது சமுத்திர திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர்
32.பா.ஜ.க.வும் இந்துவாவும் - கி.வீரமணி
33.வேலுபிரபாகரன் கதைகள் – வேலுபிரபாகரன்

மற்ற பதிப்பகங்கள்

34.கடல் புறா ( பாகம் 1,2 & 3) - சாண்டில்யன்
35.எனது சுயசரிதை - சிவாஜி கணேசன்
36.கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா

37.ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
38.இத்தாலியின் யுத்தப்பேய் முசோலினி - ஜெகசுதா
39.வையத்தலைமை கொள் - சேவலயா முரளிரதன்
40.ரங்கூன் பெரியப்பா - தேவன்
41.கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
42.தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
43.கைதி - லியோ டால்ஸ்ராய்

44.தமிழுக்கு இல்லை தேய்மானம் (கவிதை)- இனியவன் G. ஸ்ரீதர்
45.இனிய கீதங்கள் (கவிதை) - கார்முகிலோன்
46.இயற்கை வாழ்வு - நளினி சிவகுமார்
47.Five Point Someone - Chetan Bhagat
48.White tiger - Aravind Adiga

"பாத்தியா ! கிழக்கு புத்தகம் தவிர மத்த பதிப்பகங்கள் வெளியீட்ட புத்தகமும் படித்திருக்கிறேன்" என்றேன்.

" இதே மாதிரி...! இந்த ஆறு மாசத்துல எனக்கு வாங்கி தந்தத சொல்லுங்க... பார்ப்போம் ? ” என்றாள்.

பொல்ட்டில் இருப்பது இரவல் வாங்கி படித்த புத்தகங்கள். மற்ற எல்லாம் புத்தகங்களும் நான் காசு கொடுத்து வாங்கியது. புத்தகத்திற்காக இந்த வருடம் ஒதுக்கிய பட்ஜெட் தாண்டி புத்தகம் வாங்குவதால் இந்த கேள்வி என்னை கேட்டாள்.

“இது உனக்கு தேவையா” என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

“இத தான் வாய கொடுத்து புண்ணாக்கிக்காதே சொல்லுறாங்களோ..”

Thursday, June 11, 2009

இரா.முருகன் கதைகள்

ஒவ்வொரு புத்தக வாசிப்பும் வாசகனாகிய எனக்கு ஒரு அனுபவம். படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கல்லூரி படிப்பு முடிந்தவுடனே மூட்டை கட்டி வைத்துவிட்டேன். இப்போது, புத்தகங்களில் என்னுடைய தேடல் சிந்தனையை தூண்டும் விஷ்யங்கள், தகவல்கள், எழுத்துக்களை வித்தியாசமாக கையாள வேண்டிய யூக்திகளை கற்பது தான்.

எப்படியும் மற்றவர்கள் பாராட்டும் படி நல்ல படைப்பு எழுத வேண்டும். நான் படிக்கும் ஒவ்வொரு நூலும் எனக்கு சொல்லி தரும் ஆசான். ஒரு நூலை படித்து முடித்து விட்ட பிறகு அதன் தாக்கத்தால் நான் எதுவும் எழுதவில்லை என்றால் அந்த நூல் படித்ததற்கு பயனில்லை என்று நினைப்பேன். இப்படி புத்தகம் படிக்கும் போது எனக்குளே சில நிபந்தனை வைத்து தான் படிப்பேன். அப்படி என்னுடைய தேடலுக்கும், உள் நிபந்தனைக்கும் சமிபத்தில் நான் படித்த புத்தகம் 'இரா.முருகன் கதைகள்'.



“சிறுகதை தொகுப்பு நூலை படிப்பதாக இருந்தால் எல்லா கதைகளும் ஒரே மூச்சில் படித்து விட கூடாது. கற்கண்டு மாதிரி இரண்டு, மூன்று கடித்து விட்டு, பிறகு தொடர வேண்டும். படித்து முடித்து விட்ட பிறகு அந்த கதையை பற்றி உணர வேண்டும்" என்று ஒரு மூத்த எழுத்தாளர் பேசியதை கேட்டுயிருக்கிறேன். காரணம், கதையில் வரும் பாத்திரம், சம்பவம் என்று எதுவும் நம் மனதில் தங்காமல் போய்விடும். இதை அனுபவ ரீதியாக 'இரா.முருகன் கதைகள்' படிக்கும் போது உணர்ந்தேன்.

பெரிய புத்தகம். 80 கதைகள். எவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் நினைத்ததில் பாதி கதைகள் மனதில் ஒட்டாமல் இருந்தது. சில கதையின் முடிவில் என்ன சொல்ல வருகிறார் என்று கூட புரியாமல், மீண்டும் இன்னொரு முறை படிக்க வேண்டியதாக இருந்தது. எந்த புத்தகத்தை படிக்க காட்டாத அவசரத்தை இந்த புத்தகத்தை படிக்க ஏன் காட்டினேன் என்று புரியவில்லை.

‘இடப்பெயர்ச்சி’ என்ற கதையில்.... சீங்கப்பூரில் வேலை செய்யும் இளைஞனான அமுதனுக்கு அம்மாவிடம் இருந்து கடிதம் வருகிறது. அவன், அவன் தங்கள் வாழ்ந்து வளர்ந்த வாடகை வீட்டை இடைக்க போவதாக வருத்தப்பட்டு கூறுகிறார். அமுதனும் இடிக்கப் போவதை நினைத்து கவலைப்படும் வேலையில் சீன பெண் மூலம் 'நினைவு சின்னங்கள் சாப்பாடு போடாது' என்பதை உணர்கிறான். 'அம்மாவிடம் வேறு வீடு பார்க்கலாம்' என்று பதில் கடிதம் எழுதுவது போல் கதை முடிகிறது.

சிறுகதை நூல் விமர்சனத்தில் ஒரு கதையை குறிப்பிட்டதோடு நிறுத்துவது தான் சரி என்று நினைக்கிறேன். கதைகளை பற்றி விளக்கிவிட்டால், வாங்கி படிப்பவர்களுக்கு ஸ்வாரஸ்யம் இருக்காது. அதிக விமர்சனம் நூலை வாங்க விடாமல் செய்துவிடும். அந்த தவறை நான் செய்யவிரும்பவில்லை.

இந்த நூலை எழுதிய இரா.முருகன் அவர்கள் பெருமைக்குரிய 'கதா' விருது பெற்றவர். இவரது 'அரசூர் வம்சம்' நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசைப் பெற்றது. அவருடைய எழுத்து நடை, சொல் நடை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்பது அவர் பெற்ற விருதகளே சான்று.

அவருடைய எழுத்து நடையும், சொல் நடையும் சொல்லுவதை விட ஒரு வாசகனாக குறிப்பிட்டு சில குறைகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

'அவரது உரைநடையில் 'ஜம்ப் கட்' உத்தி வெற்றிகரமாக கையாளப்பட்டுருகிறது. இது நனவோடை அல்ல. ஆனால், திட்டமிட்ட, எத்தகவலும், அநாவசியனாகப் பயன் படுத்தாத சேர்க்கை கொண்ட நடை' என்று முன்னுரையில் அசோகமித்திரன் இந்த சிறுகதை தொகுப்பை பற்றி குறிப்பிடுகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில இடங்களில் 'ஜம்ப் கட்' உத்தி வெற்றிகரமாக இல்லை என்பதை சொல்லியாக வேண்டும்.

‘இடப்பெயர்ச்சி’ கதையில்

"குழந்தையை கீழே போட்டுடாதேடா. ஏற்கனவே பொறந்ததும் அப்பாவை முழுங்கியாச்சுன்னு பேரு வாங்கியிருக்கா. கை, கால் சரியில்லாட்டா நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணம் ஆக வேண்டாமா ? குழந்தையை அப்படி தூக்காதேடா ! எறக்கிவிடு காவேரிய"

இந்த வசனம் வந்த அடுத்த வரியில்...

"காவேரிக்கு அடுத்த மாதம் வளைகாப்பு. அம்மாவின் கடிதம் வந்தது"

இப்படி ஒரே கதையில் சில இடங்களில் வாசகனின் சிந்தனைக்கு விடுவதால் அவர் சொல்ல வரும் விஷயத்தை வாசகன் மாற்றி சிந்திக்க வாய்ப்புண்டு.

இரா.முருகன் சீங்கப்பூரில் இருந்தவர் என்பதால் பெரும்பாலான கதைகள் சீங்கப்பூரில் நிகழ்வது போல் அமைகின்றன. அதேப் போல், கதையில் வரும் பெருபாலான பாத்திரங்கள் பிராமணர்களாக இருக்கிறார்கள். பிராமண குடும்பத்தை சுற்றி கதை நகர்கிறது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் பதிய வேண்டுமே தவிர , கதாபாத்திரத்தின் மதம் பதிய கூடாது.

பார்ப்பன எதிர்பாளர்களுக்கு கண்டிப்பாக இந்த சிறுகதைகள் பிடிக்காது. ஆனால், பார்ப்பன ஆதரவாளர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

மற்றப்படி பெரிதாக குறை இந்த புத்தகத்தில் ஏதுமில்லை."இரா.முருகன் கதைகள்" நன்றாக கதை சொல்கிறது.

நூலை வாங்க…

முகவரி :

கிழக்கு பதிப்பகம்
(An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

Wednesday, May 6, 2009

1857 - சிப்பாய் புரட்சி

1857 ஆம் ஆண்டு இந்திய விடுதலை போராட்டங்களுக்கு விதை போட்ட ஆண்டு. பல லட்ச உயிர்களை குடித்த வெள்ளையர்கள், அஞ்சி நடுங்கிய ஆண்டு. பல வெள்ளையர்களின் குடும்பம் பயந்து மீண்டும் இங்கிலாந்து செல்ல வைத்த ஆண்டு. வெள்ளையரை ஹிந்துஸ்தானை விட்டு விரட்ட வேண்டும் என்ற சூடு, சோரணை வந்த ஆண்டும் இதுவே !

கண் மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிகாட்டிக் கொண்டு இருந்த சுதேசி சிப்பாய்கள், மங்கள் பாண்டே எனும் சிப்பாய் மரணம் வட இந்தியர்களை விழிக்க வைத்தது. ஒரு வருடம் மேல் வெள்ளையர்கள் வயிற்றில் நெருப்பு ஏறிய தொடங்கியது. எங்கு ? எந்த இடத்தில் ? யார் தலைமையில் ? புரட்சி வெடிக்குமோ என்று வெள்ளையர்கள் அஞ்சி நடுங்கினர். இவர்களை மேலும் பயம் காட்டியது இந்து, முஸ்லீம் ஒற்றுமை தான்.



பன்றி இறைச்சியும், பசு இறைச்சியும் சேர்த்து தயாரித்த கொழுப்பு தடவப்பட்ட பொருள் பயன்படுத்தப்படுவதாக அறிந்த சுதேசி சிப்பாய்கள் அதை தொட மறுத்தனர். ஒழுங்கு மீறல் காரணமாக அந்த படை பிரிவு கலைக்கப்படுகிறது. எதிர்த்து புரட்சி செய்த மங்கள் பாண்டேவும் தூக்கிலிடப்படுகிறான். இதை தொடர்ந்து டெல்லி, மீரட், பெரேல்லி, ஜான்ஸி, கான்பூர், லக்னோ, குவாலியர் என்று ஒவ்வொரு இடத்திலும் புரட்சி சிப்பாய் புரட்சி வெடிகிறது.

பகதூர் ஷா, ஜான்சி ராணி லட்சுமி பாய், நானா சாகிப், குனவர் சிங், அமர் சிங், பகத்கான், தாத்தியா தோபே என்று பலர் தலைமையில் நடந்த சிப்பாய் புரட்சி, சரியான ஒருங்கிணைப்பு, ஒற்றுமையில்லாமல் படு தோல்வி அடைந்தது.

சிப்பாய் புரட்சியில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்தியர்கள் தான். இந்தியர்களிகளை விரோதிகளாக நினைத்த இந்தியர்கள், முகலாயர்களை எதிரியாக நினைத்த சீக்கியர்கள், புரட்சி முன்வராத மன்னர்கள் என்று பல காரணங்கள் சொல்லலாம். கிழக்கிந்திய கம்பேனியிடம் இருந்த ஹிந்துஸ்தான் இங்கிலாந்து காலனி நாடாக மாறியது வரை எழுத்தாளர் உமா சம்பத் அழகாக விளக்கியுள்ளார்.

ஒரு வேலை சிப்பாய் புரட்சி வெற்றி பெற்றுயிருந்தால், காங்கிரஸ் , காந்தி நமக்கு தேவைப்பட்டுயிருக்க மாட்டார். இந்தியாவும் விடுதலைக்காக 90 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லாமல் இருந்திருக்கும்.

நூலை வாங்க....

உமா சம்பத்.
பக்கங்கள் : 240 , விலை. 100
கிழக்கு பதிப்பகம்

Thursday, March 26, 2009

விடுதலைப் புலிகள் : ஒரு அறிமுகம்

1970 ஆம் ஆண்டு பிரபாகரன் தலைமையில் புதிய தமிழ் புலிகள் (Tamil New Tigers - TNT) என்ற இயக்கத்தை சிங்கள அரசுக்கு எதிராக தொடங்கினார். TNT தொடர்ந்து TELO, EROS என்று ஒவ்வொரு இயக்கங்களும் இலங்கை அரசுக்கு எதிராக தோன்றின. இந்த இயக்கங்கள் சிங்கள அரசுக்கு எதிராக கலவரம், தாக்குதல் என்று நடத்தி வந்தது. 1976 ஆம் ஆண்டு டி.என்.டி. என்ற பெயரை எல்.டி.டி.ஈ (LTTE) என்று மாற்றினர். LTTE என்றால் Liberation Tiger of Tamil Eelam. ஈழத்தமிழர்களுக்காக தனி தேசம். அது தான் தமிழ் ஈழம். LTTE க்கு மட்டுமல்ல இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு தமிழர்களுக்கும் கனவு தேசம் அது தான். இன்று வரை அந்த கனவு தேசத்துக்காக உயிர் கொடுக்கிறார்கர்கள்.



1983 ஆம் ஆண்டு 'கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படும் அந்த கொடுரூர சம்பவம் இலங்கை தமிழர்களை கண்ணீர் கடலில் முழ்கடித்தது. தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவோடு தான் சிங்களர்கள் வீட்டில் இருந்து கிளம்பினர். கண்ணில் பட்ட தமிழர்களை எல்லாம் கொன்று குவித்தனர். லீட்டர் கணக்கில் பெட்ரோல், தமிழர்களின் உடலை பதம் பார்த்தது. தமிழ் பெண்களை உடனே கொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை; அவர்களை கற்பழித்து மூச்சு தினற கொடுமை செய்து கொன்றனர். அவர்கள் சிறுமிகளை கூட விட்டு வைக்கவில்லை. இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட தமிழ் பெண்கள் ஏராளம். அன்று நடந்த கலவரத்தால் வீடு, குடும்பம் இழந்து ஒரு லட்ச தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இடம் தேடி வந்தனர். அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னால் முடிந்த வரையில் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்தார். பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கைக்கு நிவாரண உதவி அளித்தார். அன்றைய அரசியல் காரணமாக இலங்கையை எதிர்க்க இந்தியா விரும்பவில்லை.

இலங்கை அரசு தமிழர்கள் அதிகமாக வசிக்கும் யாழ்ப்பாணத்தின் மீது பொருளாதார தடை விதித்தது. அந்த சமயத்தில் இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார். அவர் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டது மட்டுமில்லாமல் இந்திய அமைதி காக்கும் படை (IPKP) என்ற படையை இலங்கைக்கு அனுப்பினார். இந்திய படையின் வரவால் விடுதலை புலிகளுக்கு எரிச்சலை தந்தது. தமிழகத்தில் இருந்து வரும் உதவியை அவர் முடக்கி வைத்திருந்தார். (புதுமைபித்தன் தனது வாழ்க்கை குறிப்பில் ராஜீவ் காந்தி 'தமிழ் ஈழ' பிரச்சனையில் எம்.ஜி.ஆரை மிரட்டியதை கூறிப்பிட்டுயிருக்கிறார்.)

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தற்கொலை படையில் இருக்கும் பெண்ணை வைத்து தமிழகத்தில் கொன்றனர். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு அமெரிக்கா, இந்தியா நாடுகளில் எல்.டி.டி.ஈ இயக்கத்தை தடை செய்தனர்.

இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் எத்தனையோ பேச்சு வார்த்தைகள் இது வரை நடந்து விட்டது. ஆனால், எந்த ஒரு பேச்சு வார்த்தையும் அவர்களின் சண்டைக்கு மூற்று புள்ளி வைக்கவில்லை.

26 டிசம்பர், 2004 சுனாமி இலங்கையை தாக்கியதில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. எல்.டி.டி.ஈயினர் உடனே நிவாரணப் பணியில் இறங்கினர். சர்வதேச அமைப்புகளில் இருந்து எல்.டி.டி.ஈ உதவிக்கரம் நீட்டினர். அதிபர், பிரதமர் என்று இலங்கையில் ஆட்சி நடத்தினாலும் அவர்களுக்கு போட்டியாக இலங்கை தமிழர்களை காக்கும் பிரபாகரம் வடக்கு, கிழக்கு பகுதியில் ஆட்சி நடப்பது தான் நிதர்சன உண்மை.

சுனாமி அலை ஒய்ந்து நிம்மதி பெரு மூச்சு விடுவதற்குள் அடுத்த கலவரம் வெடிக்க தொடங்கியது. இவர்கள் சண்டையை விளக்கி கொண்டே போனால் இந்த கட்டுரை பக்கம் நிரம்பிக் கொண்டே இருக்கும். இவர்கள் சண்டையை இரண்டு வரியில் சொல்ல வேண்டும் என்றால்....

"இலங்கை தமிழர்களை ஒழிப்பது சிங்களர்களின் லட்சியம்.
தமிழ் ஈழ தேசத்தை பெறுவது தமிழர்களின் லட்சியம். "
இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் வரை
இலங்கையில் கலவரம் வெடித்துக் கொண்டு தான் இருக்கும்.

அங்கு எந்த சமயத்தில் வெடிகுண்டு வெடிக்குமோ என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விடுதலை புலிக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் உயிர் இழப்புகள் மட்டும் நிச்சயம். அவர்களின் மரணத்தை தகவல் தொடர்பு மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. இரத்த வாடையே போது தாக்குதல் நடந்ததை பற்றி தெரிந்துக் கொள்வார்கள். அங்கு காற்றை சுவாசித்ததை போலவே இரத்த வாடை சுவாசித்தவர்கள் அதிகம். அவர்களின் பேனா மை கூட சிவப்பு நிறமாக தான் இருக்கும். பல வெடிகுண்டுகள், சமாதான பேச்சு வார்த்தைகள் எல்லாம் நடந்து ஈழ தமிழர்களுக்கு விடியல் என்பது கனவாகவே இருக்கிறது.

கட்டுரைக்கு உதவிய நூல் :

விடுதலைப் புலிகள் - மருதன்
கிழக்கு பதிப்பகம்

Monday, March 16, 2009

கலீலியோ கலீலி

அந்தக் காலத்தில் கணிதம் படித்தவருக்கு சிறப்பான வேலை என்பது கிடையாது. கணிதம் படிப்பதால் நாட்டில் மதிப்பும் இல்லை; வேலை வாய்ப்பும் இல்லை. கணிதம் கற்றால் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாட வேண்டியதுதான் என்று கலீலியோவின் தந்தை அவருடைய கணிதப் படிப்புக்குத் தடை விதித்து மருத்துவப் படிப்பில் சேர்த்து விட்டார். ஆனால் அவருக்குக் கணிதத்தில் இருந்த ஆர்வம் மருத்துவப் படிப்புடன் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தையும் சேர்த்துப் படிக்க வைத்தது.

அந்தக் காலத்தில் அரிஸ்டாட்டில் எழுதிய அனைத்தையும் ஆதரித்துப் படித்து வந்தனர். இந்த நிலையில் அரிஸ்டாட்டில் எழுதியதைப் படித்த கலீலியோ அதில் பல தவறான கோட்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னார். இதனால் வெறுப்படைந்த கல்லூரிப் பேராசிரியர்கள் இது குறித்து அவரது தந்தைக்கு கடிதம் அனுப்பினர். அவரும் கணிதத்தைக் கைவிட்டு மருத்துவம் படிக்க வலியுறுத்திக் கடிதம் எழுதினார். ஆனால் கலீலியோ அக்கடிதத்தைக் கண்டு கொள்ளாமல் அரிஸ்டாடில் செய்திருந்த பல தவறை சரி என்று ஒத்துக் கொள்ளாமல் அதிலிருக்கும் தவறைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யத் துவங்கினார்.



இதன் வழியாக பெண்டுலத்தின் ஊசல் ஒரே கால அளவில் ஆடுவதை வைத்து நேரம் பார்க்கப் பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது. அதுதான் பெண்டுலம் ஊசல் கடிகாரம். இப்படி அவர் கண்டுபிடித்ததால் வெறுப்படைந்த பேராசிரியர்கள் மருத்துவத்தில் அவரைத் தேர்வடைய விடாமல் தோல்வியடையச் செய்தனர். இதனால் அவருக்கு அடுத்து வயிற்றுப் பிழைப்புக்கு என்ன தொழில் செய்யலாம் என்ற யோசனையும் தோன்றியது. அரைகுறை மருத்துவப் படிப்பால் யாருக்கும் வைத்தியம் செய்ய முடியாது. மன்னருக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் மூலம் கணிதப் பாடத்தில் பேராசிரியராக பணி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அங்கும் கணிதமே படிக்காத ஒருவர் பேராசிரியராகப் பணியில் இருப்பதா என்று போட்டியில் பொறாமையில் பாதிக்கப்பட்டார். வாழ்க்கையை ஓட்ட போதிய பணமில்லாமல் கஷ்டப்பட்டார்.

கலீலியோ பாடம் நடத்தும் போது அதில் மாணவர்கள் ஆர்வமில்லாமல் இருந்து வந்தனர். அப்போது அரிஸ்டாட்டிலின் தத்துவத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்ட இதுவே தருணம் என்று முடிவு செய்து அதிக எடையும் குறைவான எடையும் உள்ள பொருள்கள் ஒரே நேரத்தில் பூமியை வந்தடையும் என்று செய்து காண்பித்தார். ஆனால் அவரது சோதனை வெற்றியைப் பாராட்டாமல் அரிஸ்டாட்டிலின் பழைய புராணமே பாடப்பட்டது.

இப்படியே கன்னர் காம்பஸ் தத்துவத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார். இந்நிலையில் அவருக்கு மரினா கம்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டில் வர்ஜினா என்கிற பெண் குழந்தையும், அதற்கடுத்த ஆண்டு லிவியா என்கிற பெண் குழந்தையும் பிறந்தன. அதற்குப் பிறகு ஐந்து வருடங்களுக்குப் பின்பு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குத் அவரது தந்தை வின்சென்ஸிசோ பெயரை வைத்தார்.

இந்த நிலையில் அவருக்கும், மரின கம்பாவிற்கும் குடும்ப வாழ்க்கையில் சண்டை ஏற்படத் துவங்கியது. அவர்களுக்குள் பிரிவு வந்தது. மகனை மரின கம்பாவிடம் விட்டுவிட்டு மகள்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ப்ளாரன்ஸ் நகருக்குப் போனார். அங்கிருந்த போது தியரி ஆஃப் மோசன் எனும் நீரில் மிதக்கும் பொருள்கள் நகர்வதைக் குறித்து கண்டுபிடித்தார். இதை போலோ சர்பி என்ம் கணித மேதைக்கு அனுப்பி வைத்தார். அதில் அவர் பல குறைகளைக் கண்டு சொன்னார். கலீலியோ மீண்டும் அதுகுறித்து ஆராய்ச்சி செய்து அந்தக் குறிப்புகளை எல்லாம் தொகுத்து "டிமோட்டோ" எனும் நூலை எழுதினார்.

அதன்பிறகு ஹேன் லிப்பர்ஷே கண்டுபிடித்த டெலஸ்கோப் குறித்து மேலும் ஆய்வு செய்தார். அதன் மூலம் விண்வெளியை ஆய்வு செய்யத் துவங்கினார். மில்கி வே எனும் பால்வெளி வீதியைக் கண்டுபிடித்தார். விண்வெளி குறித்த பல தகவல்களைக் கண்டு சொன்னார். நெப்டியூன் கிரகத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார். கலீலியோ புதிய டெலஸ்கோப்பைக் கண்டறிந்து அனைவருக்கும் விண்வெளியைக் காட்டினார். அசந்து போனார்கள்.

இதுபோல் மைக்ரோஸ்கோப், , தெர்மா மீட்டர் என்ரு மருத்துவத்துறைக்கும் சில கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார். கலீலியோவின் கண்டுபிடிப்புகளில் "சூரியக் கரும்புள்ளி" என்பதும் முக்கியமானது. இந்நிலையில் கிறித்துவ மதத்தில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களைத் தெரிவிப்பதாகக் கலீலியோ மீது குற்றம் சுமத்தப்பட்டது. எப்படியொ அதிலிருந்து மீண்டு வெளியே வந்தார். ஆனாலும் அடுத்தும் பல குற்றச்சாட்டுகளை அவர் மீது சில திருச்சபைகள் சுமத்தின. தான் எழுதிய அஸ்ஸையர் என்ற நூலை வெளியிட்டார். அதில் அரிஸ்டாட்டிலின் கொள்கையில் இருந்த தவறுகள் பற்றி விளக்கமாக எழுதியிருந்தார்.

அடுத்து "கோப்பர்னிகன் தியரி" எனும் நூலை எழுதி அவருடைய நண்பரான போப் எட்டாம் அர்பனிடம் வெளியிட உதவும்படி கேட்டுக் கொண்டார். அவர் மதக் கொள்கைகளைத் தாக்காமல் மிகவும் கவனமுடன் எழுதவேண்டும் என்று சொன்னார்கள். அவரும் நூலை எழுதி முடித்து விட்டார். அந்தக் காலத்தில் நூல்கள் வெளியிட திருச்சபையின் அனுமதி பெற வெண்டும். அந்த நூலைப் படித்த திருச்சபையினர் அந்தப் புத்தகத்தை நிறுத்திவிடும்படி சொன்னார்கள். இந்த நூலைப் பார்த்ததும் பொப் எட்டாம் அர்பன் கோபம் தலைக்கேறியது. அந்த நூலில் பைபிளுக்கு எதிரான கருத்துக்கள் பல் இருந்தன.

கலீலியோவின் மீது மத விரோதக் குற்றம் சுமத்தப்பட்டது. விசாரண நடத்தப்பட்டது. "பூமி சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுகிறது" என்று முதலில் சொன்ன கிறித்துவ மதத் துறவி கியோடர்னோ புருனோவை கம்பத்தில் கட்டி உயிருடன் எரித்தனர். அதே போல் கலீலியோவும் "பூமி சூரியனைச் சுற்றவில்லை" என்று சொல்ல வேண்டும் என விசாரணை மன்றம் வலியுறுத்தியது. ஆனால் அறுபத்தேழு வயதான கலீலியோ அப்படிச் சொல்ல மறுத்தார். பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றுதான் சொன்னார். விசாரணை மன்றம் அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

ஒன்பது ஆண்டுகள் வரை வீட்டுக் காவலில் இருந்த கலீலியோ கண்பார்வை இழந்தும் தன் மாணவர்கள் உதவியுடன் இரண்டு நூல்களை எழுதினார். கடைசியில் அவருடைய எழுபத்தெட்டாம் வயதில் மரணமடைந்தார். கலீலியோவின் உடலை பாசிலிகா புனித மடத்தில் அடக்கம் செய்ய போப் எட்டாம் அர்பனும் மற்ற குருமார்களும் எதிர்ப்பு தெரிவிக்க அருகிலுள்ள சாதாரண மக்களுக்கான அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சூரியக் கரும்புள்ளியுடன் பல இயற்பியல் உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொன்ன கலீலியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறித்துவமதத்திற்கு இது ஒரு கரும்புள்ளிதான். இதற்காக 1992 ஆம் ஆண்டில் பொப் இரண்டாம் ஜான் பால் மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்க விசயம்தான்.

வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பவர்கள் சென்னை, Prodigy வெளியிட்ட, குகன் எழுதியிருக்கும் இந்தக் கலீலியோ கலீலி எனும் தலைப்பிலான விஞ்ஞானியின் வாழ்க்கைப் போராட்டத்தைப் படித்துப் பாருங்கள். எழுதியிருப்பவரைப் பாராட்டத் தூண்டும். வாழ்க்கையில் எதையாவது நாமும் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டும்.


நன்றி : முத்துகமலம்.காம்

முகவரி :

கிழக்கு பதிப்பகம்
- Prodigy வெளியீடு -
(Prodigy, An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

Thursday, March 5, 2009

ஒபாமா பராக் !

ஆர்.முத்துகுமார்

‘வெற்றி’ மூன்றெழுத்து ; ‘காதல்’ மூன்றெழுத்து ; ‘வீரம்’ மூன்றெழுத்து ; ‘கவிதை’ மூன்றெழுத்து ; ‘கடமை’ மூன்றெழுத்து ; இன்று உலகம் உச்சரித்து கொண்டு இருக்கும் அமெரிக்க அதிபர் 'ஒபாமா' பெயரும் மூன்றெழுத்து !

எதோ ‘கலைஞர்’ பாணியில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் தொடங்கிவிட்டேன். மன்னித்து விடுங்கள். ஒபாமாவுக்கு வருவோம். இப்போது தான் அதிபராக வெள்ளை மாளிகைக்கு நுழைந்து இருக்கிறார். அவர் முன்னே இருப்பது சவாலாக பிரச்சனைகள் மட்டுமே. எப்படி எதிர் கொள்ள போகிறார் ? என்ன செய்ய போகிறார் ? என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அதற்குள் பலர் (வை.கோ உட்பட) அவரை பற்றி பேசவும், எழுதவும் தொடங்கிவிட்டனர். இப்படி ஒபாமாவை பற்றி பலரும் பேசுவதற்கு ஒரே காரணம்.

எந்த வருடமும் இல்லாமல் எல்லா ஊடங்களும் 2008ல் அமெரிக்க அதிபர் தேர்தல் அதிக கவனம் செழுத்தியது. உலக மக்கள் அனைவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் மிக ஆர்வமாக கவனித்து வந்தனர். பலர் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் ஒரு வருடம் மேல் நடக்கும் என்பது இந்த முறை நடந்த தேர்தலில் தான் தெரிந்துக் கொண்டனர். இதற்கும் ஒரே காரணம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா தான் வெற்றி பெற வேண்டும் பலர் இறைவனிடம் பிரத்தானை நடத்தினர். இதற்கும் ஒரே காரணம் தான்.

ஒபாமா கறுப்பு இனத்தை சேர்ந்தவர். கறுப்பு இனத்தில் வந்து முதல் அமெரிக்க அதிபர் வர வேண்டும் என்பது தான். கடைசியில் அது தான் வெற்றிக்கரமாக நடந்தது. ஒபாமாவின் வெற்றி கறுப்பு இனத்தின் வெற்றி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வெற்றி. மறைந்த அம்பிரகாம் லிங்கன் கண்ட கனவின் வெற்றி. இப்படி ஒபாமாவின் வெற்றியை பற்றி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சமிபத்தில் சுமாராக நடந்த ‘32வது சென்னை புத்தக கண்காட்சியி’ல் ஒபாமா பற்றின புத்தகங்கள் நன்றாக விற்பனையானது என்று 'ஹிந்து' நாளேடு தெரிவித்து இருந்தது. நிச்சயமாக கிழக்கு பதிப்பகத்தின் 'ஒபாமா' நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒபாமா பராக் புத்தகத்திற்கு வருவோம்.

ஒபாமாவின் தாத்தா ஆன்யாங்கோ ஆரம்பத்தில் கிறிஸ்துவராக இருந்தாலும், தான்ஸானியாவுக்கு சென்றிருந்த போது அங்கே இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். அன்றிலிருந்து, இஸ்லாமியச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மற்றும் கொள்கைகள் மீது ஆன்யாங்கோவுக்கு ஆதீத ஈர்ப்பு ஏற்பட்டது. தன்னுடைய பெயரில் ஹூசைன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டார். இரண்டாவது மனைவியான அகுமு ஹபிபாவுக்கு பிறந்த முதல் ஆண் குழந்தை தான் பாரக் ஹூசைன் ஒபாமா (சீனியர்). ஒபாமாவின் தந்தை.

பராக் சீனியர் ஸ்டேன்லி ஆன் டந்காம் என்ற வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்தார். அவர்களின் காதலுக்கு பரிசாக ஆகஸ்டு 4, 1961 அன்று ஹவாயின் தலை நகர் ஹானலூலுவில் ஜூனியர் ஒபாமா பிறந்தார். ஒபாமாவின் முழு பெயர் பராக் ஹூசைன் ஒபாமா ! ஒபாமா இஸ்லாம் இனத்தை சேர்ந்தவர் என்று கூறுபவர்களுக்கு இது தான் பதில்.

தான் ஒரு கறுப்பன் என்பதால் ஒபாமா பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை. ஆனால், ஒரு பத்திரிக்கை செய்தி அவரை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு முறை ஒபாமா பத்திரிக்கை படிக்கும் போது அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின இளைஞன் ஒருவனுக்கு, தான் கறுப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தது. தன் தோலின் நிறத்தை மாற்றிக் கொள்ள ஒரு வேதிப் பொருளை தன் தோளின் மீது தடவிக் கொள்கிறான். அவன் தோல் வெந்து போய் மீக கொடூரமாகி விடுகிறது. இந்த செய்தியை படித்த நடுங்கி போய் விடுகிறார். இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.

ஆரம்ப வயதில் இருந்து இந்தோனேஷியாவில் படித்ததால் கறுப்பினத்துக்கு நடந்த கொடுமைகள் அவருக்கு தெரியாது. அதன் பிறகு ஹாவாயில் இருக்கும் புனாஹூ என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். இது வரை வெள்ளை, கறுப்பு நிற ஏற்ற தாழ்வு பார்க்காத ஒபாமா இங்கு தான் முதல் முதலில் பார்க்கிறார். ஆசிரியர்கள் கறுப்பு மாணவர்களை இரண்டாம் அல்லது மூன்றாம் தர மனிதர்களாக பள்ளியில் நடத்துவது ஒபாமாவுக்கு வருத்தம் அளித்தது. அந்த சமயத்தில் அவரின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்றிருந்ததால் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுயிருந்தார். இதனால் போதை பழக்கமும் ஏற்பட்டது.



போதை பழக்கத்தில் தன்னை அடிமையாக்கி கொள்ளாமல் சற்று சுதாரித்துக் கொண்டு கூடைப்பந்தில் கவனத்தை செலுத்தினார். ஒபாமா வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களை திரைப்பட காட்சி போல் அழகாக ஆர்.முத்துகுமார் அவர்கள் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகத்தில் ஒபாமாவை பற்றி சொன்ன தகவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது.

இந்தோனேஷியாவில் இராமாயணம் மிகவும் பிரபலம். ஒபாமா இந்தோனேஷியாவில் படிக்கும் போது அவருக்கு அனுமானை மிகவும் பிடிக்கும்.


சட்டம் படித்த ஒபாமா தற்காலிகமாக சிட்லி ஆஸ்டின் என்ற சட்ட நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். அவருக்கு பயிற்சியளிப்பதற்காக மிஷல் ராபின்சன் என்று கறுப்பின பெண் நியமிக்கப் படுகிறார். ஆசிரியை - மாணவர் என்று தொடங்கிய பழக்கம், மெல்ல மெல்ல நடபாக வளர்ந்து காதல் உருமாறுகிறது. அவரையே திருமணம் செய்துக் கொள்கிறார்.

'Dream from My father’ என்ற புத்தகத்தை 1995 ஒபாமா எழுதி வெளியிட்டார். ஒபாமாவுக்கு எழுத்தாளர் என்ற இன்னொரு முகமும் உண்டு...!!

தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா தான் கறுப்பினத்தை சேர்ந்தவன் என்றோ, கறுப்பின பிரதிநிதியாகவோ முன் நிறுத்திக் கொள்ளவில்லை. பொருளாதரத்தில் வீழ்ந்து இருக்கும் அமெரிக்காவை மீட்பதை பற்றி தான் பிரச்சாரம் செய்கிறார். அமெரிக்காவின் தேர்தல் முறைகளையும் மிக எளிமையாக புரியவைத்திருக்கிஆர். முத்துகுமார். ( சாதி பெயரை வைத்து ஓட்டு கேட்டும் இந்திய அரசியல்வாதிகள் இதை ஒபாமாவிடம் இருந்து கற்க வேண்டிய விஷயம் )

இன்று ஒபாமாவை அதிபராக பார்க்கும் நாம், கிளிண்டன் தேர்தல் போட்டியிடும் போது ஒரு தொண்டனாக ஈடுப்பட்டை அழகாக காட்டியுள்ளார். கறுப்பின பெண்ணான கரோல் மோஸ்லி பிரான் என்பவர் சிகாகோவிலிருந்து அமெரிக்க மேலலையான செனட் தேர்தல் களத்தில் இருந்தார். கறுப்பர்கள் வாக்குகள் எல்லாம் இந்த வேட்பாளருக்கு தான் கிடைக்கும் என்று ஒபாமாவுக்கு நன்றாக தெரியும். ஆனால், பல கறுப்பர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாமல் இருந்தனர். ஒபாமாவின் திவிரமான பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் பதினைந்தாயிரம் வாக்காளர்களை பதிவு செய்ய வைத்தார். அவர் பதிவு செய்து வைத்த வாக்களார்கள் தான் கரோல் மோஸ்லி பிரா தானை தேர்தலில் வெற்றி பெற வைத்தது.

ஒபாமாவை பற்றி சுவையாக தகவல்களில் மத்தியில் ஒரு அதிர்ச்சியான தகவல்களையும் எழுதியிருக்கிறார். டேனியல் கோலர்ட், பால் ஷ்லெசல்மன் என்ற இரண்டு வெள்ளை இனத்தவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமாவை கொல்ல திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறனர். இன்னும், அமெரிக்காவில் வெள்ளை இன வெறியர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி..! விஞ்ஞானம் வளர்ந்து விட்ட போதுலும் இன்னும் சிலரது மனது பிற்போக்காக சிந்தித்துக் கொண்டு இருக்கிறது.

விருவிருப்பாக சென்றுக் கொண்டு இருக்கும் ஒபாமா புத்தகத்தில் வேகத்தடையாக மூன்றாவது, எட்டாவது அத்தியாயம் இருக்கிறது. கறுப்பர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்குவதில் கொஞ்சம் நீளத்தை தவிர்த்திருக்கலாம். 'ஒரு நாடகம் நடக்கிறது' அத்தியாயத்தில் ஆபிரஹாம் லிங்கன், மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) என்று சொல்லும் இடை சொருகல் போல் உள்ளது. ஒபாமா வாழ்க்கை வரலாற்றில் ஒட்டவில்லை. மற்றப்படி இந்த புத்தகத்தில் குறை என்று சொல்லுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. அதே சமயம், புத்தகம் முடிந்து விட்டது என்று ஆர்.முத்துகுமார் அமைதியாக இருந்து விட முடியாது. இனி வரும் காலத்தில் (குறிப்பாக இந்த ஆண்டில்) ஒபாமா எடுக்க போகும் முக்கியமான முடிவுகள், திட்டங்கள், அறிவிப்புகள் பின் சேர்க்கை செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.

எது எப்படியோ ! ஒடுப்பட்ட கறுப்பினத்தில் இருந்து ஒபாமா என்ற கறுப்பர் அதிபராகியிருக்கிறார். இது ஒபாமாவின் வெற்றி மட்டுமல்ல. கறுப்பினத்தின் வெற்றி ! அவர்களால் இனி எதையும் சாதிக்க முடியும்.

'Yes, they can !'

நூலை வாங்க...

முகவரி

கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

Monday, March 2, 2009

ரைட் சகோதரர்கள்

வானத்தில் பறக்க வேண்டும். வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. இந்த ஆசைகள் எத்தனை பேருக்கு நிறைவேறி இருக்கிறது? பலருக்கும் அந்த ஆசைகள் காற்றாகப் போய்விட்டது. அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. ஏனென்றால் பலரும் தங்கள் ஆசையைச் செயல்படுத்த, வாழ்க்கையில் முன்னேற்றமடைய, முயற்சிகள் எடுப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் ரைட் சகோதரர்கள் பறக்க நினைத்தார்கள். பறந்தார்கள், பலரையும் பறக்க வைத்து விட்டார்கள்.

மில்டன் ரைட் தன் குழந்தைகள் விளையாட வாங்கி வந்த பறக்கும் பொம்மை, அவருடைய குழந்தைகளில் வில்பர் ரைட் மற்றும் ஆர்வில் ரைட் ஆகிய இருவரிடத்திலும் வானில் பறக்கும் புதிய விசையைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தோற்றுவிக்க அந்த முயற்சியில் இறங்கினர். அவர்கள் முயற்சியில் எத்தனையோ தடைகள் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் மாற்றி தங்கள் ஆர்வத்தை விடாமல் தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டேயிருந்தனர்.

வாழ்க்கையை ஓட்டத் தேவையான பணத்திற்கு அவர்கள் பழைய சைக்கிள்களை வாங்கி புதிய சைக்கிள்களாக மாற்றும் சைக்கிள் மெக்கானிக்குகளாக பணிபுரிந்தாலும் பறக்கும் பொருளை உருவாக்கும் எண்ணத்திலிருந்து கீழிறங்காமல், கல்யாணம் எதுவும் முடித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். இவர்களின் எண்ணத்திற்கு உறுதுணையாக இவர்களின் சகோதரி காத்ரீன் ரைட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் உதவி வந்தார்.



கடைசியில் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பிரான்ஸில் இருக்கும் "வி மென்ஸ்" என்ற இடத்தில் வில்பர் ரைட் சகோதரர்கள் தயாரித்த விமானத்தில் நாற்பத்தைந்து வினாடிகள் வானில் பறந்து காட்டினார். அதன் பிறகு ரைட் சகோதரர்கள் 1909-ல் ரைட் கம்பெனி என்ற பெயரில் விமானம் தயாரிக்கும் கம்பெனியைத் துவக்கினர். இக்கம்பெனியில் விமானம் தயாரிக்க துவக்கத்தில் இருந்து உதவி வந்த சார்லி டைலரைக் கவுரவப்படுத்தும் விதமாக முக்கியப் பொறுப்பு கொடுத்து அளவுக்கு அதிகமான சம்பளமும் கொடுத்து வந்தார்கள். இப்போதெல்லாம் காரியம் முடிந்ததா அவனைக் கழற்றிவிடு என்றிருக்கும் நிலையில் ரைட் சகோதரர்கள் பழசை மறக்காத உத்தமர்கள்தான்.

இந்த உத்தம சகோதரர்களை ரைட் சகோதரர்கள் எனும் தலைப்பில் குகன் எழுதியிருக்கிறார். இந்த நூலை சென்னை, Prodigy வெளியிட்டிருக்கிறது. தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலைத் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் தங்கள் நூலகங்களுக்கு வாங்கி ரைட் சகோதரர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

நூலை வாங்க...

கிழக்கு பதிப்பகம்
- Prodigy வெளியீடு -
(Prodigy, An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நன்றி : முத்துகமலம்.காம்

LinkWithin

Related Posts with Thumbnails