வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Tuesday, March 1, 2011

நன்றி... நன்றி... !!!

இணைய புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

இணையத்தில் புத்தகம் வாங்குபவர்கள் குறைவாக இருப்பதால் ஐந்து பேர் வாங்கினாலே மிக பெரிய விஷயம் என்று இருந்தோம். ஆயிரம் ரூபாய்க்கு நூல் விற்றாலே 'புத்தகக் கண்காட்சி' வெற்றி என்று கருதுதினோம். ஆனால், ஒன்பது பேர் இந்த புத்தகக் கண்காட்சியில் ஆர்வமாக புத்தகம் ஆர்டர் கொடுத்திருந்தார்கள். ரூ.2000 வரை புத்தகம் விற்பனையாகியது. (இதில், கோரியர் மற்றும் பதிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டியது போக 300 ரூபாய் கிடைத்தது.)

இந்த ரூ.300 க்கா இவ்வளவு குவ்வல் என்று பலர் நினைக்கலாம்.

புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவது ஒரு பதிப்பாளரின் கடமையோ, புத்தகத்தை வாங்க தூண்டுவது ஒரு விற்பனையாளரின் கடமை. இது வரை தேடி சென்று புத்தகம் வாங்கினால் தான் கழிவு விலையில் புத்தகம் கிடைக்கும் என்ற நிலையில் இருந்து, வீட்டில் இருந்துக் கொண்டே 10% கழிவுடன், மேலும் கோரியர் செலவு இல்லாமல் புத்தகம் பேரலாம் என்று ’We Books’ அறிமுகப்படுத்தியுள்ளது. இதை புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் எதிர்காலத்தில் பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

ரூ.1000 மேல் மளிகை சமான் வாங்கினால் பொருட்கள் வீடு தேடி வரும் போது ரூ.1000 மேல் வாங்கும் புத்தகம் ஏன் வீடு தேடி வரக் கூடாது ?

ஒரு முன்னனி பதிப்பகம் தவிர இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெற்ற சிறு பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை 50% கழிவுடன் கொடுத்தது இந்த புத்தகக் கண்காட்சி யோசனைக்கு உருதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுயிருக்கிறேன்.

இந்த புத்தகக் கண்காட்சி பற்றி தங்கள் பதிவில் வெளியிட்ட நண்பர்களுக்கும், குறிப்பாக கேபிள் சங்கர் (புத்தக கண்காட்சி பற்றி இவர் ‘கொத்து போரோட்டா’வில் எழுதிய பிறகு மூன்று ஆர்டர் கிடைத்தது) அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அடுத்த முறை இணைய புத்தகக் கண்காட்சி நடத்தும் போது 100 புத்தகளோடு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஒரு மாதத்தில் தினமும் மின்னஞ்சல் பார்த்து பதில் அனுப்பி தூங்குவதற்கு 11, 11:30 யானது. இனி கொஞ்சம் நிம்மதியாக தூங்குவேன்.

Monday, February 28, 2011

இணைய புத்தகக் கண்காட்சி... இன்றே கடைசி !!

அன்பு நண்பர்களே,

ஒரு மாதமாக பரப்பரப்போடு இணையத்தில் நடந்த புத்தகக் கண்காட்சி இன்றோடு முடிகிறது. புத்தகம் வாங்கி ஆதரித்த வாசக நல் உள்ளங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.


பலர் இந்த புத்தகக் கண்காட்சி நீடிக்குமா என்று கேட்டார்கள். இதில், பல நடை முறை சிக்கல்கள் உள்ளன. பல பதிப்பகத்தில் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் புத்தகம் வாங்கி இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெற செய்தோம். குறிப்பிட்ட காலத்திற்குள் விற்ற புத்தகத்திற்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விற்காத புத்தகத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் அதை ஆர்டர் போட்டு வாங்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், தினமும் பார்க்கும் மனைவியை விட வாரத்திற்கு ஒரு முறை பார்க்கும் காதலி தான் அழகாக தெரிவாள். நிரந்தர புத்தகக் கண்காட்சி என்று அறிவித்தால், கன்னிமாரா நூலகத்தில் நடக்கும் கண்காட்சிப் போல் தான் இதுவும் இருக்கும். இன்றே கடைசி தினம் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.


அதலால், புத்தகம் வாங்க விரும்புபவர்கள் ’Book Order’ என்ற subject மெயிலில் இன்று இரவு 12 மணிக்குள் ஆர்டருக்கான மின்னஞ்சலை nagarathna_publication@yahoo.in மற்றும் tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். ஒரு தினம் கழித்துக் கூட பணம் செலுத்தலாம் பிரச்சனையில்லை.

மீண்டும்.. ஆதரவு தெரிவித்த வாசகர்களுக்கு....

நன்றி

Monday, October 11, 2010

தேசியக் கொடி

சுதந்திர இந்தியாவின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு குழு அமைக்கப்பட்டது.

1906ல் இருந்து 1947 ஜூலை 21 வரை நமது கொடி பல்வேறு உருவ அமைப்புகளில் இருந்தது.

1947 ஜூலை 22 ஆம் தேதி அரசியல் சபையில்தான் தற்போதுள்ள தேசியக் கொடியை நேரு அறிமுகப்படுத்திப் பேசினார்.

தற்போதுள்ள தேசியக் கொடியை முடிவு செய்த குழுவில் இருந்தவர்கள்.

1. டாக்டர். ராஜேந்திர பிரசாத்
2. அபுல் கலாம் ஆசாத்
3. ராஜாஜி
4. திருமதி.சரோஜினி நாயுடு
5. கே.எம்.முன்ஷி
6. கே.எம்.பணிக்கர்
7. Dr.B.R.அம்பேத்கர்
8. பிராங் அத்தோணி
9. பட்டாபி. சீதாராமைய்யா
10. ஹிராயால் சாஸ்திரி
11. சத்யநாராயண சின்கா
12. பல்தேவ் சிங்
13. எல்.என்.குப்தா



நேரு கூறியதாவது:

1.நமது தேசியக் கொடி கதர்ட்துணியில் இருக்க வேண்டும்.
2. கொடியின் நீள அகலம் இரண்டிற்கு மூன்று 2:3 என்ற விகிதத்தில் இருக்கும்.
3.மேல்பட்டையில் செங்காவி நிறம் இருக்கும்.
4.நடுவில் வெண்மையாக இருக்க வேண்டும்.
5.அடிப்பகுதி பச்சை நிறமுள்ளதாக இருக்கும்.
6.கொடியின் நடுப்பகுதியில் 24 ஆரக்கால்களும் கூடிய,ஓர் ஆழ்நீல நிறத்தில் சக்கரம் மேல் பகுதியையும் ,கீழ்ப்பகுதியையும் தொடாதவாறு வடிவமைக்க வேண்டும்.இது அசோகரால் அமைக்கப்பட்ட சாரநாத் சிம்மஸ் தூபியைக் குறிக்கும் அசோக ம்ன்னர் ஆட்சி,இந்திய ஆட்சியில் முன்னுதாரணம் கொண்டது.உலகலாவிய நற்பெயர் பெற்றது.
7.கொடியின் மேற்புறம் செங்காவி நிறத்துடன் பறக்கவிடப் படவேண்டும்.தலைகீழாகப் (பச்சைநிற்ம்மேல் பகுதியில்)பறக்கவிடக்கூடாது.
8 கொடியில் விள்ம்பரமோ,பொன்மொழியோ கூடாது.
9.கொடியைப் பைகளாக ,மேஜை விரிப்புகளாக வேட்டி சேலைச் கரைகளால் பயன்படுத்த்ப்பட்டது.
10.சூரியன் உதிக்கும் நேரத்தில் ஏற்றி, அஸ்தமனம் ஆகும்போது இறக்கிவிட வேண்டும்.

நன்றி:செங்கரும்பு,ஆகஸ்ட்,2010

Tuesday, September 28, 2010

ஓரின சேர்கையாளர்கள் மிருகங்களா ?

தன் மதர் சூப்பிரியர் ஓரின சேர்கையின் ஆசைக்கு இனங்காமல், மனநோயாளி என்று சொல்லி ஒரு கன்னியாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். அவர் பெரிய பாதரியாரிடம் சொல்லியும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. தன் சுயசரிதையில் தனக்கு ஏற்ப்பட்ட ஓரின கொடுமைகளை விளக்கிய பிறகு பலர் மனநோயாளி புத்தகம் என்றே விமர்சனம் செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது.

*

சென்னை விடுதியின் மேனேஜர் ஒருவர், ஒரு இளைஞனை ஓரின உடல் உறவுக்காக தொல்லைக் கொடுத்தார். வற்புறுத்திய மேனேஜரின் தொல்லை தாங்காமல் இந்த இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான்.

மேனேஜரின் ஓரின வேட்கை அந்த இளைஞனை மிருகமாக மாற்றிவிட்டது.

*



ஜனவரி 24, 1994.

திருப்பதி.

ஐந்தாவது தேசிய அளவில் மகளிர் மாநாடு நடைப்பெறவிருந்தது. பெண் இயக்கங்கள், பெண் முன்னேற்ற அமைப்புகள், பெண்கள் மறுவாழ்வு என்று பல அமைப்புகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை சில புது அமைப்பினரும் வந்திருந்தனர்.

இதற்கு முன் நடந்த நான்கு மாநாட்டில் இல்லாத ஒரு அஜென்டா இந்த மாநாட்டில் சேர்த்திருந்தார்கள். அந்த அஜென்டாவை பார்த்தும் ஒரு சிலர் முனு முனுத்தனர். இன்னும் சிலர் அதை பற்றி பேச எதிர்த்தனர். முதல் முறையாக மகளிர் மாநாட்டில் 'லெஸ்பியனை' பற்றி அஜென்டாவாக சேர்த்திருந்தனர். லெஸ்பியன் பெண்கள் பொருத்தமட்டில் இது தான் முதல் மாநாடு. முதல் முறையாக லெஸ்பியன் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்படிருந்தது.

ஒரு சில எதிர்ப்புகள் மீறி லெஸ்பியன் பற்றி கருத்துகள் அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. எதிர்த்தவர்கள் கூறிய கருத்து " ஓரின சேர்க்கையாளர்கள் மிருகங்கள்" என்றது தான்.

ஓரின சேர்கையாளர்கள் உடல் சுகத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவர்கள், மிருகங்கள் போல் நடந்துக் கொள்பவர்கள், கொலை கூட செய்வார்கள் என்று பல கருத்து நிலவி வருகிறது.

‘செக்ஸ்’ விஷயத்தில் ஓரின சேர்கையாளர்கள் மட்டும் தான் மிருகங்களாக நடந்து கொள்கிறார்களா என்ற கேள்விக்கு முதலில் பதிலளித்தால், மேல் சொன்ன கருத்துக்கு பதில் வந்துவிடும்.

மனைவியின் மரணத்திற்கு பிறகு பாலியல் உறவுக்காக தன் சொந்த மகளை ஒரு பாதள அறையில் அடைத்து இருபது வருடங்களாக ஒருவன் வாழ்ந்து வந்திருக்கிறான் என்ற செய்தியை சமிபத்தில் படித்திருப்பீர்கள். சொந்த மகளை புணர நினைத்தவன் மனிதன் என்பதா அல்லது மிருகம் என்பதா ?

நொய்டாவில் சின்ன சிறுமிகளை வன்புணர்ச்சிக்காக கொலை செய்தவனை இயற்கைக்கு ஒப்பான உறவில் ஈடுப்பட்டவன் என்று யாராலும் சொல்லமுடியாமா ?

இன்னும் மலையடிவாரத்தில் பழங்குடி மக்களின் பெண்கள் அதிகார வர்கத்தினரால் தொல்லைகள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை மனித உணர்ச்சிகள் என்று சொல்லி நம்மால் நிராகரிக்க முடியுமா ? இல்லை நியாயம் தான் படுத்த முடியுமா ?

அளவுக்கு மீறிய செக்ஸ் ஆசை ஒரு மனிதனை மிருகமாக மாற்றிவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மற்ற உறவில் ஜோடி கிடைப்பது போல் எதிர்பால் உறவுகளை விட சுயபால் உறவுக்கு ஜோடி கிடைப்பது சிக்கல் மட்டுமல்ல… இது பகிரங்கமாகத் தேடலில் ஈடுபட முடியாத ஒன்று. அதனால் மற்ற உறவு தேடலில் விட இதில் வன்முறை கூடுதலாக உள்ளது.

இயற்கையான உறவு என்று சொல்லப்படும் ஆண் - பெண் உறவாகட்டும், ஓரின சேர்கையாகட்டும்... செக்ஸ் உணர்வுக்கான உடல் கிடைக்காத போது கிடைத்த உடலில் மீது வன்முறை அதிகமாக இருப்பதை தான் தினமும் செய்திதாளில் பார்க்கிறோம்.

மேல் சொன்ன எல்லா வன்முறைகளும் 'செக்ஸ்' வன்முறையாகவே பார்க்க வேண்டிய ஒன்று. எந்த வன்முறையையும் நம்மால் எப்படி நியாயப்படுத்த முடியாதோ அதே போல் ஓரின சேர்க்கையாளர்கள் இப்படி தான் என்று முத்திரை குத்தவும் முடியாது.

“சுயபால் விழைவு இயற்கைக்கு ஒவ்வாத கொடூரச் செயல். அதனால் தான் மிருகத்தனமான நிலை” என்று சொல்லுபவர்களுக்கு இன்னும் சில உதாரணங்கள்.

விலங்கு, பறவைகளில் தாமே இரு பாலுமாக இருக்கும் வகைகள் இயற்கையிலேயே உண்டு. ஒரு ஜோடி ஆண் பறவைகள் தம்பதியாகக் கூடு கட்டி வாழும் போது முட்டைகளுக்குப் பதிலாக அதே போன்ற தோற்றமுடைய கற்களைச் சேகரித்து வந்து தங்கள் கூட்டில் வைக்கும் பழக்கத்தில் உள்ளன. இவை சில சமயம் வேறு பறவையின் அசல் முட்டையைத் திருடி வந்து தம் கூட்டில் வைத்துப் பொரித்து வளர்ப்பதும் உண்டு !

சுமார் 1500 வகை உயிரினங்களில் சுயபால் விழைவுச் செயல்பாடுகளுக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காட்டெருமை, யானை, சிங்கம், மான், பூனை, சிறுத்தை, நாய், பசு, முயல், ஓட்டைச்சிவிஅங்கி, ஆடு, குரங்கு, கரடி, குதிரை, நரி, கழுகு என்று இன்னும் பல இனங்கள் இந்த பட்டியலில் உண்டு.

( நன்றி : ஞாநியின் 'அறிந்ததும் அறியாமலும்' )

‘சுயபால் விழைவு’ என்பது இயற்கையில் இல்லாத ஒன்று என்ற அணுகுமுறையில் இருந்து மிருக தனமான உணர்வு என்று நிலையில் தான் இன்று பார்க்கிறார்கள். மிருக தனமான உணர்வு என்ற நிலையில் இருந்து மாறினால் தான், மிருகங்களாக பார்க்கும் ஓரினசேர்கையாளர்கள் மனிதர்களாக நடத்த பட முடியும்.

செக்ஸ்காக கொலை செய்பவர்கள், வன்முறையில் இறங்குபவர்கள், கொடூரமாக நடந்துக் கொள்பவர்கள் போன்றவர்களை மிருகங்கள் என்று சொல்லலாம். ஆனால், ஓரினசேர்கையாளர்கள் மிருகங்கள் என்ற பொதுவான பார்ப்பது எந்த வகையிலும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

இதில், ஓரின சேர்க்கையாளர்களால் நடத்தப்படும் செக்ஸ் வன்முறைக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. எதிர்பாலில் செக்ஸ் வன்முறை இருப்பது போல் சுயபாலிலும் உள்ளது என்பதை தான் இந்த கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

Thursday, September 16, 2010

ஓஷோ சொன்ன கதை – 4

சந்தோஷமாக வாழ ஓஷோ அவர்கள் ஒரு கதை சொல்கிறார்.

வயதான கிழவர் தன் நூறாவது பிறந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறார். அவரை பார்த்து வியந்தவர்கள் "எப்படி சந்தோஷமாக வாழ்வதாக கேட்டபோது அவர், " ஒவ்வொரு நாளும் நான் கண் விழிக்கிற போது சந்தோஷமாயிருப்பதா ? வேதனைப்படுவதா ? என்று கேட்டு விட்டு சந்தோஷத்தை தேர்வு செய்கிறேன்" என்றார்.

***


ஒரு ஜென் குரு தன் சீடர்களிடம், " நான் பாட்டிலில் ஒரு வாத்தை போட்டேன். இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது. பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது. எனவே வாத்து வெளியே வர முடியவில்லை. அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே வராவிட்டால் வாத்து செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம். ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை. அது விலைமதிப்புள்ள ஒன்று. என்ன செய்வது என்று நீங்கள் சொல்லுங்கள்" என்றார்.

பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது. தலையை உடைக்கலாம். ஆனால் அது விலைமதிப்புள்ளது. அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து.

அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார். ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு சீடன் கூறினான், " வாத்து வெளியில் தான் இருக்கிறது !"

நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து. எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை விளக்க இந்த கதையை ஓஷோ சொல்லுகிறார்.

***

குருட்ஜீஃப் பின் தன் சீடர்க்கள் முழுமையாக சரணடைதல் தேவைப்பட்டது. அவர் எதை சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட பயிற்சியை கூறுவார். அதை செய்து கொண்டிருக்கும் போது 'நிறுத்து !' என்பார். உடனே நிறுத்திவிட வேண்டும்.

ஒரு நாள் காலையில் கால்வாயில் இறங்கி நடக்கிற போது அவர் நிறுத்து என்று சொல்லிவிட்டு, தன் டென்ட்டிற்குப் போய்விட்டார். நான்கு சீடர்கள் கால்வாயில் நின்றிருந்தனர். யாரோ தண்ணீரைத் திறந்து விட, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது.

குருட்ஜூஃப் உள்ளே போய்விட்டார். அவருக்கு தெரியாது. ஆனாலும் சீடர்கள் காத்திருந்தனர்.

கழுத்துவரை தண்ணீர் வந்து விட்டது. ஒருவன் கரைக்கு ஓடி விட்டன். "இது ரொம்பவும் அதிகம். குருவுக்கு எப்படி தெரியும் ? " என்றான்.

மற்ற இரண்டு சீடர்களும் மூக்குவரை தண்ணீர் வந்ததும் வெளியேறி விட்டனர். ஆனால், ஒரு சீடன் மட்டும் அப்படியே நின்றான். தண்ணீர் அவன் தலையைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூழ்கிக் கொண்டிருந்தான்.

தன் அறையை விட்டு பாய்ந்து வந்த குருட்ஜீஃப் தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றிக் கொண்டு வந்தார்.

மரணத்தில் இருந்து வந்த சீடர் கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக இருந்தான். அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பழைய மனிதன் இறந்து அவன் புதிதாகப் பிறப்பெடுத்திருந்தான்.

அந்த சீடன் குருவை முழுமையாக ஏற்றுக் கொண்டான். தன் மனதையும், அதன் கணக்குகளையும் அவன் நிராகரித்தான். தன் வாழ்வின் மீதான பற்றை நிராகரித்து, உயிராசையைத் துறந்தான். அதனால் அதான் அவனை எதுவும் நகர்த்தி விடவில்லை என்பதை ஓஷோ இந்த கதையின் மூலம் சொல்லுகிறார்.

உதவிய புத்தகம் :-

"My way the way of the white clouds" - ஓஷோ

Saturday, August 28, 2010

நாகரத்னா பதிப்பகம் வேலூரில் என்ன செய்கிறது ??

முதல் முறையாக வேலூரில் 'புத்தகக் கண்காட்சி - நூலாறு 2010' என்ற பெயரில் பிரமாண்டமான புத்தகக் கண்காட்சி நடைப்பெறவுள்ளது. பல புத்தகக் கண்காட்சி நிபந்தனைகளில் இருந்து விடுபட்டு இப்புத்தகக் கண்காட்சி மாறுபட்டு இருக்கிறது.



புத்தகம் பார்க்க வரும் வாசகர்களுக்கு அனுமதி கட்டனம் இல்லை. ஒவ்வொரு முறையும் பணத்தை செலவு நுழைய வேண்டும் என்ற தொல்லை வாசகனுக்கு இருக்காது. ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உள்ளே வரலாம்.

வார நாட்களில் மதியம் 2:30 முதல் இரவு 8:30 வரை நடைபெறும் கண் காட்சியில் இருந்து விடுபட்டு வார நாட்களிலும் காலை 11 முதல் இரவு 8:30 வரை வேலூர் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

குறும்படம், உலக சினிமா திரையிட பிரத்யேக கண்காட்சி அரங்கம் அமைத்திருக்கிறார்கள்.

இவை எல்லாவற்ற்கும் மேலாக ஒரு முக்கியமான விஷயம்.... முதல் முறையாக 'நாகரத்னா பதிப்பகம்' நேரடியாக புத்தக கண்காட்சியில் அடியெடுத்து வைக்கிறது. (ஸ்டால் : 51). உள்ளே நுழைந்தது மூன்றாவது ஸ்டால் !! நாகரத்னா பதிப்பக நூல்களோடு இருவாட்சி, சோலை, பாலவசந்தா... எங்களை போன்ற சிறு பதிப்பகத்தின் நூல்கள் விற்பனை உரிமை வாங்கி விற்கபடுகிறது.

கேபிள், பரிசல் போன்ற பதிவர் நூல்களோடு ஒரு பாதி இலக்கிய சம்மந்தமான நூல்களும், இன்னொரு பாதி மாணவர்களுக்கு சுய முன்னேற்றம், பாட நூல்களும் உள்ளது. வேலூர், காட்பாடி, ஆரணி அருகில் உள்ள பதிவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் நாகரத்னாவின் அரும்பு முயற்சியை ஆதரப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் விபரங்களுக்கு....

***

இன்று(28.8.10), 'கவிதை உலகம்' நூல் வெளியீட்டு விழா தேவநேயப் பாவாணர் நூலகம் கட்டிடம், சிற்றரங்கம் , LLA, அண்ணா சாலை, சென்னை – 2, மாலை 6 மணி நடைபெறவிருக்கிறது.

அனைவரும் வருக !!

Friday, August 27, 2010

ஓரினசேர்கை மீதான வன்கொடுமைகள்

உலகில் அதிக ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மையினர் யார் என்று தெரியுமா ? யூதர்கள். கண்டிப்பாக இல்லை. இஸ்ரேலில் யூதர்கள் தான் பெரும்பான்மையினர். இஸ்லாமியர்களா ? உலகில் இருபதுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஒரு வேளை தமிழர்கள். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு பிரச்சனையில்லையே !! கருப்பு இனத்தினர். அவர்களும் இல்லை. ஆப்பிரிக்கா நாடுகளில் பெரும்பாலான பகுதியில் அவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் தான் ஆள்கிறார்கள். பின்பு எந்த சிறுபான்மையினர் எல்லா பகுதியிலும் ஒடுக்கபடுகிறார்கள். சந்தேகமே இல்லை. எந்த நாடாக இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், இனமாக இருந்தாலும் எல்லா பகுதியிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் ‘ஓரின சேர்கையாளர்கள்’ தான்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை ஓரினசேர்க்கையாளர்களுக்கு வந்துக் கொண்டு தான். அந்த நாட்டின் அந்த நாட்டின் பராம்பரிய குணமும், பழக்க வழக்கமும் அவர்களை பார்க்கும் விதத்தில் வேறாக இருந்தாலும் உளவியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தாக்கப்பட்டு வருகிறார்கள்.



தென் ஆப்பிரிக்காவில் லெஸ்பியனில் ஈடுபடும் பெண்களை கற்பழிப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ஓரின சேர்க்கை என்பது ஒரு வியாதி. அந்த நோய்யை குணப்படுத்த லெஸ்பியன் பெண்களை ‘கரேக்டிவ் ரேப்’ என்ற பெயரில் கற்பழித்தால் சரியாகிவிடுமாம். ஆண் சுகம் தெரிந்து விட்டால் சுயபால் இன்பத்தை கைவிடுவார்களாம். அதனால், லெஸ்பியன் பெண்கள் குணப்படுத்த அவர்கள் விருப்பதிற்கு மாறாக கற்பழிக்க பல சமூக சேவகர்கள் கலத்தில் குத்தித்துள்ளனர்.

2000ல் இருந்தே 'கரேக்டிவ் ரேப்' என்ற பெயரில் பல லெஸ்பியன் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், 2008ல் தென் ஆப்பிரிக்கா கால்பந்து வீராங்கனை ஈடி சிமெலைன் என்ற லெஸ்பியன் பெண் 'கரேக்டிவ் ரேப்' பெயரில் ஒரு குழுவால் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 'கரேக்டிவ் ரேப்' உலக பார்வைக்கு வந்தது. மேலும், வருடத்திற்கு 5 லட்சம் சிறுமி, யுவதிகள் கற்பழிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்கா அரசு ஒத்துக் கொண்டுள்ளது.

பிரேசிலில், 19 வயதான ஓச்வன், தன் பகுதியில் 'மிஸ் கே' போட்டியில் வெற்றிப் பெற்று திரும்பும் போது மர்மமான முறையில் தாக்கப்பட்டான். அடுத்த நாள் அவன் உடல் நிர்வணமாய் கண்டெடுக்கப்பட்டு போது இறக்கும் முன் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. 1980 முதல் 2006 வரை பிரேசிலில் 2800 மேற்பட்ட ஓரின சேர்க்கை ஆண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2002ல் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பாரிஸ் மெயரான 'Bertrand Delanoë 'கே' என்பதால் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் . யிஷாயி என்ற யூதன் 'கே போராட்ட ஊர்வலத்தில் மூன்று கேகளை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளான்.

போர்சுக்கலில், மாற்று பால் அருவை சிகிச்சை செய்துக் கொண்ட Gisberta Salce Júnior' என்பவர், சில வாலிபவர்களால் மூன்று நாள் கற்பழிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுளார்.

நியூசிலாந்தில், ஜெஃப் விட்டிங்டன் என்ற ‘கே’ இளைஞன் இரண்டு ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்தார்.

இவ்வளவு ஏன் ? ஹிட்லரின் மரண முகாமில் ஓரின சேர்கையாளருக்கு தான் முன்னுரிமை. ஹிட்லர் கொன்ற கோடிக்கணக்கானவர்களில் 50,000 ஓரின சேர்கையாளர்களும் அடங்குவார்கள். இறந்த யுதர்களில், ஓரின சேர்கையாளர்கள் கொடுமையான வன்கொடுமைகளுக்கு பலியானார்கள் என்பது பரிதாபத்திற்குறியது.

இன்னும், ஈரான், நைஜிரியா, அரேபியா, சுடான், ஏமன் போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்குகிறது. அதுவும் ஈரானில், 1979ல் இருந்து 4000 ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கி கொன்றுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானில் கூட ஓரின சேர்கையாளர்களுக்கு 2001ல் வரை மரண தண்டனை வழங்கி வந்தார்கள். தாலிபன் வீழ்ந்த பிறகு ஆப்கானிஸ்தானில் ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை நிறுத்தி அபராதம் மட்டும் போட சட்டம் கொண்டு வந்துள்ளனர். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது.

இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு சட்டப்படி அங்கிகாரம் கிடையாது. சமூகப்பார்வையில் நிராகரிப்பு என்ற பெரிய தண்டனை இவர்களுக்கு வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க எதோ சில பகுதிகளில் அங்கிகாரம் பெற்ற இவர்கள் தின வாழ்க்கை நடத்துவதில் சிரமப்படுபவர்கள் பலர் உண்டு. இவர்களை அழிப்பதாகட்டும், எதிர்பதாகட்டும் மொழி, இனம் பாராமல் ஒற்றுமையாக செயல் படுவதில் ஓரின சேர்கையாளர் விஷயத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.


கட்டுரைக்கு உதவிய இணையம்

http://en.wikipedia.org/wiki/Sexual_violence_in_South_Africa

http://en.wikipedia.org/wiki/Violence_against_LGBT_people

Friday, August 20, 2010

'கவிதை உலகம்' நூல் வெளியிட்டு விழா !!

நண்பர்களே !

ஒரு மாதமாக என் பதிவில் இட பக்கத்தில் இருந்த 'கவிதை உலகம்' நூல் வரும் ஆகஸ்ட், 28 ஆம் ( சனிக்கிழமை) வெளியீடப்படுகிறது.



நூலை வெளீய்டுபவர் : திரு. கயல் தினகரன்,
தலைவர், சென்னை மாவட்ட நூலக ஆணையம்

முதல் பிரதி பெறுபவர் : திரு. அரிமா. இளங்கண்ணன்

தொகுப்பு நூலில் இடம் பெற்ற எழுத்தாளர்களுக்கு சான்றிதழை திரு.'அமுதா' பாலகிருஷ்ணன் வழங்கவிருக்கிறார்.

நேரம் : மாலை 6 மணி
இடம் :
தேவநேயப் பாவாணர் நூலகம் கட்டிடம்
சிற்றரங்கம்
LLA, அண்ணா சாலை,
சென்னை – 2

வெளியீட்டு விழாவன்று ரூ.315/- மதிப்புள்ள நாகரத்னா பதிப்பகத்தின் ஏழு நூல்கள் ரூ.250 /- விற்கப்படும்.



விலை.ரூ.35. பக்கங்கள் : 64

56 எழுத்தாளர்கள் எழுதிய 59 கவிதைகள் கொண்ட நூலை ரூ.25/- க்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிபந்தனை..

கீழ் காணும் இரண்டு நூல்களோடு தேர்வு செய்து ஆர்டர் கொடுக்க வேண்டும். (இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டும். தபால் செலவு இல்லை) ஹி...ஹி...

எனது கீதை (கட்டுரை)- குகன் - ரூ.40
நடைபாதை (சிறுகதை)- குகன்- ரூ.40
என்னை எழுதிய தேவதைக்கு (சிறுகதை)- குகன் - ரூ.55
காந்தி வாழ்ந்த தேசம் (கவிதை) - ரூ.45
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்(சிறுகதை)- சங்கர் நாராயணன் - ரூ.50
டைரி குறிப்பும் காதல் மறுப்பும் (சிறுகதை)- பரிசல் கிருஷ்ணா - ரூ.50

உதாரணத்திற்கு, கவிதை உலகம் (ரூ.25) + என்னை எழுதிய தேவதைக்கு (ரூ.45) + டைரி குறிப்பும் காதல் மறுப்பும் (ரூ.50) = ரூ.120/- செலுத்தலாம்.

பணம் செலுத்தும் முறை...

1.பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in / nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பவும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

29.8.10 முதல் புத்தகங்கள் கோரியரில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

நண்பர்கள் இந்த அறிவிப்பை தங்கள் பதிவில் அறிவிக்க, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
அன்புடன்,
குகன்

Thursday, August 19, 2010

ஓஷோ சொன்ன கதை - 3

புத்தரின் சீடன் ஒருவன் அவர் போதனையைப் பரப்ப அவரை விட்டு விலக எண்ணினான். அப்போது அவன் புத்தரிடம், " பெண்களிடம் எப்படி அணுகுவது ?" என்று கேட்டான். துறவிகளுக்கு எப்போதும் இது தான் பிரச்சனை.

புத்தர் கூறினார், " அவர்களை பார்க்காதே ! இது தான் சுலபமான வழி" என்றார்.

ஐயோ ! அது அவ்வளவு சுலபமில்லை. புத்தருக்கு எளிதாக இருக்கலாம். அது நமக்கு உதவாது என்று நினைத்த அந்த சீடன் புத்தரிடம், " பார்ப்பதைத் தவிர்க்க முடியாமல் போனால் என்ன செய்வது?" என்றார்.

" தொடாதே !" புத்தர் கூறினார்.

பார்ப்பது கூட ஒருவகையில் தொடுதல் தான். கண்களால் தொடுதல். ஒரு பெண்ணை மூன்று கணங்களுக்கு மேல் வெறித்துப் பார்த்தால் அவள் கூச்சப்படுகிறாள். உன் கண்களை கைகளாக்கி நீ அவளைத் தொட்டுக் கொண்டுள்ளனர்.

மீண்டும் சீடன், " சில சந்தர்ப்பங்களில் பெண்ணை தொடுகிற நிலையும் ஏற்படுகிறது. ஒரு பெண் தெருவில் விழுந்து கிடந்தால் யாரும் அவளை கவனிக்காத இடமாக இருந்து விட்டால் அவளுக்கு உதவுவதற்காக தொட நேரிடுமே ? அப்போது என்ன செய்வது ?"

புத்தர் சிரித்து விட்டு சொன்னார், "அப்படியானால் விழிப்புடன் இரு"

கடைசியாக புத்தர் கூறியது தான் உண்மை. கண்களை மூடுவது, தீண்டாமல் இருப்பது என்று எதுவும் உதவாது. செக்ஸ் பற்றி விளக்கம் சொல்லும் ஓஷோ சொன்னக் கதை.

***



ஒரு ஜென் துறவி மரணப் படுக்கையில் இருக்கிறார். அன்று மாலை தான் இருக்க மாட்டோம் என்றிந்து அதை அவர் அறிவித்தார். அவரது சீடர்களும், நண்பர்களும் கூடிவிட்டனர், ஒரு பழைய சீடன் குரு இறக்கப் போகும் சேதியறிந்து சந்தைக்கு ஓடி அவருக்கு விருப்பமாக கேக் ஒன்றை வாங்க செல்கிறான். அந்த குறிப்பிட்ட கேக் எங்கும் கிடைக்கவில்லை. இருந்தும், அந்த சீடன் விடாமல் தேடிக் கண்டுபிடித்து விட்டான். குருவும் யாருக்காகவோ காத்திருந்தார் எல்லோரும் அவரைப் பார்த்து வேதனைப்பட்டனர். சீடன் வந்தான்.

அவர் கண்களைத் திறந்து, " நீ வந்து விட்டாயா ? எங்கே என் கேக் ?" என்றார். சீடன் கேக்கை வாங்கி அளவற்ற மகிழ்ச்சியுடன் ருசித்தார்.

இதை பார்த்த ஒருவன் குரு மரணத்தில் நடுங்காமல் ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு குரு, " நான் நடுங்கவில்லை. ஏனென்றால் எனக்கு பயமில்லை. என் உடல் மூப்பு கொண்டாலும் நான் இன்னும் இளைமையாக இருக்கிறேன்."

மீண்டும் அவன், " உங்கள் கடை சேதி என்ன குருவே ?"

குரு புன்னகைத்தார். " கேக் மிகவும் ருசியாக இருக்கிறது " என்றார்.

சாகும் முன்பு இப்போது வாழ்கிற மனிதரின் அடையாளம் இது தான். கேக் ருசியாக இருக்கிறது. மரணம் கூட ஒரு பொருட்டல்ல. அடுத்த கணம் அர்த்தமற்றது என்பதை விளக்கவதற்காக சொல்லப்பட்ட கதை.

***

பழைய ஜென் சம்பிரதாயப்படி ஒரு சீடர் தன் குருவிடம் பத்து வருடங்களாவது சேர்ந்திருக்க வேண்டும்.

ஒரு ஜென் கதையில் பத்து வருடம் முடிந்து ஒரு சீடர் தன் குருவான 'நான் - இன்'னை சந்தித்தார். தான் விலகிச் செல்ல அனுமதி கேட்ட போது நான் - இன், " நீ உன் கால் செருப்புகளை வாசலில் விட்டு வந்திருக்கிறாய். ஆனால் உன் குடையின் எந்தப் பக்கத்தில் செருப்புகளை விட்டாய் ?" என்று கேட்டார்.

ஒரு கணம் அந்த சீடர் தயங்கினார். அந்த தயக்கம் தான் ஒவ்வொரு கணமும் ஜென்னுடன் இல்லாததை அவர் உணர்ந்துக் கொண்டார்.

நாம் செய்யும் எந்த காரியமானாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட சொல்லப்பட்ட கதை.

Tuesday, August 17, 2010

ஓஷோ சொன்ன கதை - 2

ஒரு பிச்சைக்காரன் அனாதை சிறுவன் ஒருவனை வளர்த்து வந்தான். பிச்சைக்காரனின் குடிசை அருகே சுடுகாடு இருந்தது.
இரவில் சிறுவன் சுடுகாட்டுக்குள் சென்று குறும்புகள் செய்யாமல் தடுக்க அவனிடம், "சுடு காட்டுக்குள் இரவில் நுழைந்தால் அங்கிருக்கும் பேய்கள் உன்னைப் பிடித்து தின்றுவிடும்” என்று பயப்படுத்தினான். அந்த சிறுவன் பெரியவனாக வளர்ந்து கல்வியறிவு பெற்ற பின்னும் பேய் பயம் ஓயவில்லை.

பிச்சைக்காரன் வாலிபன் கையில் தாயத்தைக் கட்டி, " இப்போது தெய்வ சக்தி உள்ளது. கடவுள் உனக்கு பேய்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பார்" என்று கூறினான்.

வாலிபன் தைரியமாக சுடுகாட்டை இரவில் தாண்டி வெளியூர் செல்லும் போது, " பேய்களே அஞ்சும் கடவுள் எவ்வளவு பெரிய பேயாக இருக்க வேண்டும் ?" என்று நினைத்து கடவுள் மீது பயம் கொண்டான். முன்பெல்லாம் பேய்யை நினைத்து இரவில் பயந்தவன், கடவுளை நினைத்து பயப்படத் தொடங்கினான்.

விபரீதத்தை உணர்ந்த பிச்சைக்காரன் கொடுத்த தாயத்தை தூக்கி எறிந்து, சுடுக்காட்டில் சென்று பேய்களை பற்றியும், பிசாசுகளை பற்றியும் விளக்கினான். அதன் பிறகு அந்த வாலிபன் மனதில் இருக்கும் பேய்களும், பிசாசுகளு விடைப்பெற்று மனத்தெளிவு பெற்றான்.

தெய்வ பயமும், சரணாகதியும் பற்றி விளக்கும் போது ஓஷோ சொன்ன கதை.

***


வாழ்நாள் முழுவதும் தீமைகளைச் செய்து விட்டு கடைசி நேரத்தில் கடவுளை நினைத்தால் போதுமா என்று ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார். அதற்கு ஓஷோ ஒரு கதை சொல்கிறார்.

பேராசை பிடித்த வியாபாரி ஒருவன் மரணப் படுக்கையில் இருக்கிறான். எந்த நேரமும் அவன் உயிர் பிரிந்துவிடும் நிலையில் இருந்தது. அவன் கண்களை மூடிய நிலையில் இருந்தான். அவன் படுக்கையை சுற்றி கவலையுடன் அவன் மனைவி, மகன், மகள் என்று எல்லோரும் இருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் கண் விழித்த கிழவன், " என் மனைவி உங்கு இருக்கிறாளா ?" என்று கேட்டான். மனைவி, " இதோ இங்கு இருக்கிறேன்" என்றாள். மகள்களைப் பற்றி கேட்டதும் அவர்களும் இருப்பதாக மனைவி கூறினாள். "மகன் எங்கே ?" என்று வியாபாரி கேட்க, அதற்கு அவன் மனைவி " எல்லோரும் இங்கு தான் இருக்கிறார்கள். கவலையை விடுத்து ஓய்வு எடுங்கள்" என்றாள்.

"அப்படியானால் கடையை யார் கவனித்துக் கொள்வது ?" என்று கேட்டான்.

இந்த கதையில் உள்ள வியாபாரியைப் போல கடைசி நேரத்தில் மனிதன் மனதில் அதுவரை இருந்த எண்ணங்களின் சாரம் தான் தோன்றும்.

***

பணத்திற்கும் சொர்க்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்பதற்கு ஓஷோ ஒரு கதை சொல்லுகிறார்.

யாருக்கும் உதவாத ஒரு பணக்கார கஞ்சன் இறந்து சித்திரகுப்தர் முன் நிற்கிறான். அந்த பணக்காரன் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து சொர்க்கத்தின் கதவுகளை திறந்து விடும்படி கூறினான்.

சித்திரகுப்தர் சிரித்தபடி, " பூலோக முறைகள் இங்கு பயன் தராது. சொர்க்கத்தில் நுழையும் தகுதி பெறும் அளவிற்கு நீ யாருக்கு என்ன நன்மைகள் செய்தாய் ?" என்று கேட்டார்.

பணக்காரன் நன்கு யோசித்துவிட்டு, " ஒரு கிழவிக்கு பத்து பைசா தானம் கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர், "இது தவிர, வேறு ஏதாவது நன்மை செய்து இருக்கிறாயா ? " என்று கேட்டார்.

பணக்காரன் மேலும் யோசித்து, " ஒரு அனாதை சிறுவனுக்கு ஐந்து பைசா கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர் "இன்னும் வேறு உண்டா ?" என்று கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்தான்.

அப்போது சித்திரகுபதரின் உதவியாளர் சித்திரகுப்தரிடம், " இந்த பணக்காரனிடம் பதினைந்து பைசாவை திருப்பிக் கொடுத்துவிட்டு அவனை நரத்திற்கு அனுப்பிவிட வேண்டும்" என்றான்.

இந்த கதையில் வெறும் பதினைந்து பைசாவில் சொர்க்கத்தை வாங்க முடியாது என்பதற்காக ஓஷோ கூறினார்.

***

வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை என்று ஒருவன் ஓஷோவிடம் சொல்லும் ஒரு கதை சொல்லுகிறார்.

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. கிராமவாசி ஒருவன் மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் இந்த கிராமவாசி இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். கிராமத்தின் எல்லையில் அவன் நின்று விட்டான்.

அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தான்.

அப்போது அங்கு ஒரு கிழவன் அதை விட சிறிய விளக்குடன் அங்க் வந்தான். அவனும் மலையேற கூறினான். கிராமவாசி கிழவனிடம் சந்தேகத்தை கேட்டப் போது, கிழவன் சிரித்தப்படி "விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும். அவ்வாறே எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் நீ மலையேறிச் செல்லலாம்." என்றான்.

நீண்ட கால திட்டம் போடும் போது, உங்களுக்கு முன் இருப்பதை மறந்து விடு குழம்பக் கூடாது என்பதற்கு ஓஷோ கூறுகிறார்.

**

கதை கிடைத்த புத்தகம்

அர்த்தமுள்ள ரஜனீஷ் - பி.குமார் எம்.ஏ, நர்மதா வெளியீடு

Monday, August 16, 2010

ஓஷோ சொன்ன கதை - 1

ஒரு ஜென் சந்நியாசி மீது கோபம்க் கொண்ட அந்த தேசத்து அரசன், அவரை தூக்கிட உத்தரவிடுகிறான். கொல்வதற்கு முன்பு அவரசன் அவரிடம், " உனக்கு இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கிறது - நீ அதை எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறாய்" என்று கேட்டார்.

இதைக்கேட்ட சந்நியாசி சிரித்தவாறு, " நான் எப்போதும் வாழுவது போல - கணத்துக்குக் கணம் வாழ்கிறேன் ! என்னைப் பொறுத்தவரையில், இந்த கணத்துக்கு மேல் எதுவும் கிடையாது. ஆகவே, எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன ? 24 வருடம் இருந்தால் என்ன ? எனக்கு இதில் எந்த வேற்பாடும் இல்லை. நான் கணத்துக்கு கணம் வாழ்ந்து வந்திருப்பதால், இந்த கணமே எனக்கு அதிகம் தான். இந்த ஒரு கணம் போதும்" என்றார்.

அரசர் ஒன்று புரியாமல் விழித்தார். அப்போது சந்நியாசி அரசரிடம், " நான் உங்களை ஒன்று கேட்க அனுமதி கொடுங்கள். நீங்கள் தொடர்ந்து இரண்டு கணங்கள் ஒரே சமயத்தில் வாழ முடியுமா ?" என்று கேட்டார்.

யாருமே அப்படி வாழ்ந்தது கிடையாது. வாழ்வதற்கு ஒரே வழி, ஒரு சமயத்தில் ஒரு கணம் வாழ்வது தான்.

யோக , யோகி, தியானம் பற்றி விளக்கம் சொல்ல ஓஷோ அவரள் உதாரணத்திற்கு சொன்ன கதை.

***



போதிதர்மர் சீனாவுக்கு சென்ற பொழுது, தன் செருப்பு ஒன்றை தலையிலும், மற்றொன்றை காலிலும் போட்டுக் கொண்டு நடந்தார். இதை பார்த்த அரசர், " நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? இது என்ன முட்டாள் தனம் ? " என்றார்.

அதற்கு போதிதர்மர், " நான் ஜோக் அடிக்கிறேன்" என்றார்.

அரசர், " நாங்கள் ஜோக் அடிக்கும் சாதுவை எதிர்பார்க்கவில்லை" என்றார்.

இதை கேட்ட போதிதர்மர், " ஒரு உண்மையான சாதுவால், எப்படி கடுமையாக இருக்க முடியும்? கடவுள் கடுமையாகவே இல்லை. அவர் எப்போழுதும் விளையாட்டில் தான் இருக்கிறார்" என்றார்.

திருமணம் அன்பது ஆத்மிகமானது அல்ல விளக்கம் சொல்லும் கூறிய கதை.

***

ஓஷோ அவர்கள் தனது சொற்பொழிவின் போது பல ஜென் கதைகள் சொல்லியிருக்கிறார். அதில், ஒன்று....

புகழ்பெற்ற குருவான ஒரு துறவி இறந்துவிட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த குருவின் முக்கிய சீடர், தன் குரு இறந்ததை நினைத்து தேம்பி தேம்பி அழுகிறார். வந்தவர்களுக்கு புரியவில்லை. பற்றற்றவன் அழக்கூடாது - அதுவும் ஆத்மாவுக்கு அழிவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் ஒருவன் அழுததால், அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் சீடரிடம் நேருங்கினான்.

"எதற்காக அழுகிறீர்கள் ?" என்று கேட்டான்.

அந்த சீடர், " என்னால் எப்போதும் 'ஏன்' என்ற கேள்விகளோடு வாழ முடியாது. 'ஏன்' என்ற கேள்வி இல்லாத நேரமும் உண்டு. நான் இப்போழுது அழுகிறேன். அவ்வளவு தான்" என்று பதில் சொன்னார்.


கூட்டத்தில் இருப்பவர் இன்னொருவர், " நீங்கள் எப்போழுதும் ஆத்மாவுக்கு அழிவு கிடையாது என்று சொல்லி வந்தீர்கள். பிறகு ஏன் அழுகிறீர்கள் ?" என்று மீண்டும் கேட்டார்.

அதற்கு, "இப்போழுதும் நான் அப்படிதான் கூறுகிறேன். ஆனால், நான் அழுவதை அதனால் தடுத்து நிறுத்த முடியாது" என்றார்.

ஆத்மாவுக்கு அழிவில்லை என்று சொல்பவன் அழக்கூடாது. ஆனால், அந்தத் துறவி, "என் ஆத்மாவே அழும்போழுதும், என்னால் என்ன செய்ய முடியும் ? என்னால் எதுவும் செய்ய முடியாது. எது என்னிடம் வந்தாலும், நான் அதனுடன் ஒன்றாகி விடுகிறேன். என் கண்களில் கண்ணீர் வருகிறது. நான் அத்துடன் ஒன்றாகி விடுகிறேன்" என்று சொன்னார்.

கதைக் கிடைத்த புத்தகம்

The Great Challenge - ஓஷோ

Thursday, August 12, 2010

ஓரின சேர்கை போராளிகள்

ஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சணங்கள் இந்தியாவில் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பியா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஒதிக்கினாலும் துணிவாக அவர்கள் பேசுவதை மதிக்கிறார்கள். பாச வலையில் பின்னப்பட்ட இந்தியாவில் ஓரின சேர்கையாளர்களர்களை அவர்கள் குடும்பங்கள் நிராகரிப்பதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பல எதிர்ப்புகள் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

இந்த எதிர்ப்புகளையும் மீறி ஒரு சிலர் வாழ்ந்து, அவர்களைப் போல் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒரு சிலர்.....

கிடி தடனி (Giti Thadani)

1980ல் இந்தியாவில் லெஸ்பியன் பரவலாக தெரியப்பட்ட காலத்தில் போராடிய பெண். லெஸ்பியன் திருமணத்தை பற்றியும், லெஸ்பியன் தற்கொலை தடுப்பது பற்றியும் மிக தீவிரமாக பேசியும், எழுதியும் வருகிறார். தன்னை லெஸ்பியன் என்று அறிவித்து, ' Sakhiyani: Lesbian Desire in Ancient and Modern India' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் பத்தாண்டுகளாக சமஸ்கிரத்தத்தை கற்று அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை இதில் தொகுத்துள்ளார். ரிக் வேதத்தில் ‘ஜமி’ என்ற இரட்டை அம்மாக்கள், இரத்த சம்மந்தமில்லாத உஷா, நக்டா தாய் - மகள் உறவு போன்ற குறிப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக, கஜுராஹோ சிலையில் இரண்டு யோனி கொண்ட பெண் சிலைகள் இருப்பதாக சொல்லுகிறார்.

டெல்லியில் இருக்கும் 'Sakhi' (சகி) மற்றும் Red Rose Rendezous Group (சிவப்பு ரோஜா) போன்ற ஓரின சேர்க்கை அமைப்புகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்.

நம் விநாயகர் கூட இரண்டு பெண்களால் உருவானவர் என்று தன் பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். பார்வதி கங்கையில் நீராடும் போது தன் காவலுக்காக விநாயக பெருமானை உருவாக்கிய கதையில், பார்வதிக்கும், கங்கைக்கும் உருவானவர் என்று விளக்குகிறார். இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஓரின சேர்கையை எதிர்க்கும் நிலையில் இந்து மதத்தை தங்களுக்கு ஆதரவாக்க பார்க்கிறார்கள் என்று இவர் ஆராய்ச்சியை எதிர்ப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கிடி தடனி தன் வேத குறிப்புகளை மறு பரிசீலனை செய்து எந்த லாபமும் அடைய முடியாது என்று அவரை எதிர்ப்பவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அப்ஹா பையா (Abha Bhaiya)

பத்து வருடங்களாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, இப்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். லெஸ்பியன் பெண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்ணியத்துக்காவும் போராடி வருகிறார். ‘சங்கத்’ என்ற அமைப்பின் மூலம் திருமணமாகாத பெண்கள், விவாகரத்தான பெண்கள், கன்னியாஸ்திரிகள் போன்றவர்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

மன்வேந்திர சிங் கோஹில் (Manvendra Singh Gohil)




குஜராத்தில் உள்ள ராஜ்பிப்லா சமஸ்தானத்தின் இளவரசராக கருதப்படும் மன்வேந்திர சிங் கோஹில் ஒரு கே. திருமணத்துக்கு பிறகு தனக்கு ஏற்பட்டு இருக்கும் தன் பால் ஆர்வம் மாறிவிடும் என்று நம்பி சந்திரிகா குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். அப்போது தான் ஒரு கே என்று அவருக்கு தெரியவில்லை. தாம்பத்திய வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் 1992ல் விவாகரத்து பெற்றார். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சுற்றி இருப்பவர்கள் நினைத்தார்கள். 2002ல் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஒரு கே என்று உறுதிப்படுத்தினார். தான் கே என்று உணர்ந்த கோஹில், தன்னை போல் பாதிக்கப்பட்டுயிருப்பவர்களுக்கு 'லக்ஷியா' என்ற அமைப்பை தொடங்கினார். ஓரின சேர்க்கை மட்டுமில்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் பரப்பிவருகிறார். தான் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பிந்துமாதவ் கிரே (Bindumadhav Khire)



மராத்திய எழுத்தாளர். திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஆரம்பத்தில் தன்னுடைய ஓரின சேர்கை உணர்வை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், விடுபடவும் முடியாமல் மிகவும் அவதைப்பட்டவர். மிகுந்த மன உலைச்சலுக்கு உள்ளன, பிந்து மாதவ் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு இருக்கும் சன் ப்ரான்சிகோவில் த்ரீகோன் (Trikone) ஓரின சேர்க்கை அமைப்பின் மூலம் தன் குற்றவுணர்வில் இருந்து விடுப்பட்டார். த்ரீகோன் காலாண்டு இதலில் துணை பதிப்பாளராக இருந்து, பின்பு பதிப்பாசிரியரானார். அதன் பின், அமெரிக்காவில் நடந்த ஓரின சேர்கை போராட்டங்களில் கலந்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் தன்னம்பிகை வளர்ந்ததும் தன்னைப் போல் அவதைப்படும் இந்தியர்களுக்கு உதவ இந்தியா திரும்பினார்.

நிறைய புத்தகம் படித்தார். சுயபால் இனத்திற்காக எழுத தொடங்கினார். 2005ல் , 'பார்ட்னர்' என்ற நாவலை எழுதினார். ஓரின சேர்கைப் பற்றிய இந்த நாவல் சுய பால் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு இந்த புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.

அஷோக் ரோவ் ரவி (Ashok Row Ravi)

ஓரின சேர்கையாளரான இவர் மும்பையில் பிறந்தார். சுய பால் இனத்தினருக்காக போராடுவதோடு இல்லாமல், 50000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இந்திய பாரம்பரியத்தை பற்றியும் ஆராய்ச்சி செய்துவருகிறார். மலையாள மணோராமா, சன்டே மைல், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னனி பத்திரிகைகளுக்கு நிருபராக பணியாற்றியிருக்கிறார். 1990ல் பத்திரிகை நிருபர் வேலைக்கு முழுக்கு போட்டு, சொந்தமாக 'பாம்பே தோஸ்த்' என்ற ஓரின சேர்கையாளருக்காக இதழை தொடங்கினார். ஓரின சேர்கை மட்டுமல்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறார். அம்ஸபவர் ஓரின சேர்க்கை அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராகவும் இருந்து வருகிறார்.

இன்னும் பல பேர் ஓரின சேர்கைக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வெளிச்சத்திற்கு வரமால் இருக்கலாம். இன்று நூற்றி ஐம்பது நாடுகளுக்கு மேல் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஓரின சேர்கை திருமணம் சமூகத்தின் அங்கிகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. உலகில் பல நாடுகளில் இவர்கள் போராட்டம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

சரி... போராட்டம் நடத்த அப்படி என்ன இருக்கிறது ? சமூகத்தில் அங்கிகாரம் கொடுக்கவில்லை. ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான். போராட்டம் நடத்தினால் மதிப்பும், மரியாதையும் தானாய் வந்து விடுமா ? என்று கேள்வி எழலாம். நியாயமான கேள்வி தான்.

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான போராட்டங்கள் புரிய வைப்பதற்காகவும், விழிப்புணர்வு எற்ப்படுத்தவும் தான். ஓரின சேர்க்கையால், தற்கொலை நடக்காமல் இருக்க இவர்கள் பாடுபடுகிறார்கள். ஆனால், உலகளவில் ஓரின சேர்கையாளர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை தடுக்க பல போராட்டங்கள் உலகளவில் நடந்து வருகிறது. மிருகத்தை கேவலமாக தண்டிக்கப்பட்டுயிருக்கிறார்கள். ஏன் ? கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதை பற்றி அடுத்த பதிவில்.....

கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication

http://www.sayoni.com/index.php?option=com_content&view=article&id=1947:interview-giti-thadani&catid=61:literature-queer-a-more&Itemid=54

http://www.desicritics.com/2008/05/06/003835.php

http://en.wikipedia.org/wiki/Manvendra_Singh_Gohil

http://en.wikipedia.org/wiki/Ashok_Row_Kavi

Thursday, August 5, 2010

ஓரின சேர்க்கை - உலக தொண்டு நிறுவனங்கள்

மலேரியா, பன்றிகாய்ச்சல், சிக்கன்குனியா போன்ற முக்கிய வியாதிகளுக்கு மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கமே பொருப்பேற்றுகிறது. டி.வி, போஸ்ட்டர், ரேடியோ என்று விளம்பரப்படுத்தி மக்களுக்கு நோய்களை பற்றி விளக்குவார்கள். அதே போல், எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்றபடுத்துவதற்கு அரசாங்கத்தோடு தனியார் தொண்டு நிறுவனங்களும் லாபம் நோக்கமில்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி மக்களுக்கு வியாதிகள் பற்றி புரியவைப்பதாகட்டும், நல்ல திட்டங்களை கொண்டு செல்வதாகட்டும் தொண்டு நிறுவனங்களில் பங்கு கண்டிப்பாக உண்டு.

உயிரை குடிக்கும் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வும், உடல் உறவு பற்றி பாதுகாப்பைப் பற்றி பேசும் தொண்டு நிறுவனங்கள் இருப்பது போல் ஓரின சேர்கை பற்றி மக்களுக்கு புரிய வைக்கவும், அவர்களும் மனிதர்கள் என்று விளக்கவும் சில தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த தொண்டு நிறுவனங்கள் கே, லெஸ்பியன் என்று யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வதில்லை. கௌன்சிலிங் முறையில் அவர்கள் கே, லெஸ்பியன் என்று தெரிந்த பிறகே ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி கே, லெஸ்பியன் இல்லாதவர்கள், தங்களை தவறாக கே, லெஸ்பியன் என்று நினைத்துக் கொண்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப படுகிறார்கள்.



உலகளவில் ஓரின சேர்க்கைக்காக ஒரு சில தொண்டு நிறுவனங்கள் செயல்ப்பட்டு வருகின்றன.

International Lesbian and Gay Association ( ILGA)
International Lesbian Information Service ( ILIS)
International Gay and Lesbian Human Rights Commission ( IGLHRC)
International Lesbian, Gay, Bisexual, Transgender and Queer Youth and Student Organisation (IGLYO)
International Lesbian, Gay, Bisexual, Transgender & Intersex Law Association (ILGLaw)

உலகிலே அதிக கே, லெஸ்பியன் கொண்ட தொண்டு நிறுவனக்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்தில் தான் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 118 கே, லெஸ்பியன் அமைப்புகள் உள்ளது.

International Lesbian, Gay, Bisexual, Trans and Intersex Association (ILGA)

இன்று 600க்கும் மேற்பட்ட கே, லெஸ்பியன் அமைப்பினரை அங்கத்தினராக கொண்ட அமைப்பு. கே, லெஸ்பியன் எதிராக நடத்தப்படும் வன்முறைகள், கொடுமைகள், உரிமை மறுப்பு போன்ற விஷயங்களில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. இன்று உலகளவில் 110 நாடுகளுக்கு மேல் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

கே, லெஸ்பியன் அமைப்புகளில் UN ECOSOC (Economic and Social Council) வின் லாபம் நோக்கமற்ற தொண்டு நிறுவனம் என்ற அங்கிகாரம் பெற்ற முதல் தொண்டு நிறுவனம் ILGA தான்.

அதன்பின் உலகத்தில் உள்ள 3000 கே, லெஸ்பியன் அமைப்பினர் இதில் அங்கத்தினராக உருவாகினார்கள். ஆனால், ஒரு சில காரணத்தால் அடுத்த வருடமே ECOSOC கொடுத்த அங்கிகாரத்தை திரும்ப பெற்றது. அதன் பிறகு, தனியாகவும், மற்ற அமைப்பினருடனும் சேர்ந்து ECOSOC அங்கிகாரத்தை பெற முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இழந்த அங்கிகாரம் மீண்டும் கிடைக்கவில்லை.

இருந்தும், இந்த அமைப்பு செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை.

International Lesbian Information Service (ILIS)

ஒரு கொள்கை தான். ஆனால், கருத்தளவில் வேறுபடுவதால் பல சங்கங்கள், கட்சிகள் உருவாகுவது போல் கே, லெஸ்பியன் போராடும் தொண்டு நிறுவனங்களில் கூட வெவ்வேறாக அமைப்பாக செயல்படுகிறது.

ILGA இயங்குவதில், உறுப்பினர் சேர்வதில் ஒரு சில நிபந்தனைகள் உள்ளது. இதில் உறுப்பினராக தொண்டு நிறுவனங்கள் செக்ஸ் மற்றும் நிற பிரச்சனைகள் முன் நிறுத்தி செயல்பட வேண்டும். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற கே அமைப்பினர் (GASA - Gay Association of South Africa) செக்ஸ் பிரச்சனைகளில் காட்டிய முக்கியதுவத்தை நிறவெறி பிரச்சனைகளில் காட்டவில்லை. அதனால், அவர்கள் உறுப்பினர் ஒரு வருடத்திற்கு ரத்து செய்தது.

கே உறுப்பினர் சேர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை லெஸ்பியன் உறுப்பினர்கள் சேர்ப்பதில் காட்டவில்லை என்ற கருத்து வேறு இருந்தது. ILGA வில் இருந்த அதிருப்தியால் 1982 ல் இத்தாலியில் உள்ள டூரின் என்ற இடத்தில் கூட்டம் நடத்தினார்கள். அதில், பல லெஸ்பியன் பெண்கள் சேர்ந்து ILIS என்ற அமைப்பை தொடங்கினர்.

ஆரம்பித்த வேகத்தில் துண்டு பிரசுரம், பிரச்சாரம் என்று மேற்கொண்ட 'ILIS' அமைப்பு, அதன் பின் பெரிதாக செயல்படாமல் போய்விட்டது.

International Gay and Lesbian Human Rights Commission (IGLHRC)

ரஷ்யயர், அமெரிக்கர் கே, லெஸ்பியன் கூட்டமைப்பால் 1990 ல் இந்த அமைப்பு உருவானது. ஆரம்பத்தில் ரஷ்யாவில் நடக்கும் மனித உரிமைக்கு மட்டும் குரல் கொடுத்து வந்த அமைப்பு பின்பு அமெரிக்கா, ஆப்ரிகா, ஆசியா என்று உலகளவில் பரவ தொடங்கியது. கே, லெஸ்பியனுக்காக வுக்காக உழைக்கும் தோழர் / தோழிகளுக்கு இந்த அமைப்பு ஆண்டு தோறும் பரிசு வழங்குகிறது. ஜூலை 19, 2010 அன்று இந்த அமைப்புக்கு ECOSOCவின் லாபம் நோக்கமற்ற தொண்டு நிறுவனம் என்ற அங்கிகாரத்தை வழங்கியுள்ளது.

International Lesbian, Gay, Bisexual, Transgender and Queer Youth and Student Organisation (IGLYO)

1984ல் ஐரோப்பிய பகுதியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மாணவர்கள், இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு ஐரோப்பிய பகுதியில் கே, லெஸ்பியன் பற்றி உரிமைகள், பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள்.

International Lesbian, Gay, Bisexual, Transgender & Intersex Law Association (ILGLaw)

கே, லெஸ்பியன், இருபால் உறவு வைத்துக் கொள்பவர், பால் மாறியவர்கள் மட்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளாமல் சட்டம் படித்தவர்கள், சட்டத்துறை சம்மந்தப்படவர்களையும் இதில் உறுப்பினராக சேரலாம். ஓரின சேர்கையாளர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவதில் முதன்மையாக திக ழ்கிறது.

இந்தியாவில் செயல் பட்டுவரும் கே, லெஸ்பியன் தொண்டு நிறுவனங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication
http://www.sayoni.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=8&Itemid=54
http://en.wikipedia.org/wiki/International_Lesbian_and_Gay_Association
http://en.wikipedia.org/wiki/International_Lesbian,_Gay,_Bisexual,_Transgender_and_Queer_Youth_and_Student_Organisation

http://en.wikipedia.org/wiki/International_Lesbian,_Gay,_Bisexual,_Transgender_%26_Intersex_Law_Association

Monday, August 2, 2010

படித்ததும் பார்த்ததும் - 2.8.10

எமர்ஜன்சி காலத்தில் உணவு பொருள் வீணாக்கக்கூடாது என்ற சட்டம் கொண்டுவந்தார்கள். திரைப்படத்தில் சண்டை காட்சியில் பழம், பால் கீழே கொட்டுவது போன்ற காட்சிகளை தவித்து போலி உணவு பொருட்களை தான் பயன்படுத்துகிறார்கள். இப்படி உயிர் வாழ தேவையான உணவு பொருளை போராட்டம் என்ற பெயரில் யாருக்கும் பயன்படுத்தாமல் வீணாக்கியிருக்கிறது 'சிவ சேனா' கட்சி. மும்பையில் நடந்த ஒரு போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பை காட்ட 50,000 லிட்டர் பாலை கீழே கொட்டியுள்ளது. பசியால் தினமும் இந்தியாவில் ஐம்பதுக்கு மேற்பட்ட பேர் இறப்பதாக ஒரு புள்ளி விபரம் சொல்லுகிறது. இது போல், உணவு பொருளை வீணாக்குபவர்கள் மீது கட்சி பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசும், மத்திய அரசும் என்ன செய்துக் கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.

மேலும் படிக்க


***

எவ்வளவோ பண்ணுறோம் இத பண்ணமாட்டோமா

ஒரு அமெச்சூர் குறும்படம். உடல் எடை குறைப்பதை நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள். என்னை போல் குண்டாக இருந்தவர்கள் உடல் எடை குறைக்க பட்டபாடை பார்க்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.



***

இணையத்தில் புத்தகம் வாங்க வணிக தளம்


புத்தக கடை வைத்திருப்பவர்கள் வணிக தளம் வைத்திருப்பது தேவையான ஒன்றாக மாறிவருகிறது. இதில், நம் பதிவு நண்பர் 'டிஸ்கவரி புக் பெலஸ்' வேடியப்பன் அவர்கள் ஒரு தளம் தொடங்கியிருக்கிறார்.இனி பதிவர் புத்தகம் வாங்க கே.கே நகர் போக தேவையில்லை. இணையத்தில் வாங்கலாம்.

அந்த தளத்தை பார்க்க

Tuesday, July 27, 2010

லெஸ்பியனும் சில தற்கொலைகளும்

" ஜோஸ்னா ! இனி நாம் இனி பார்க்க முடியாது. நம் பழக்கம் என் அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது."

" நம் இருவரின் காதலை பற்றி சொன்னாய்யா ?"

" சொன்னேன் ஜோஸ்னா ! அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. என் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்"

" உன்னை பற்றி, என்னை பற்றி, நம் உறவை பற்றி முழுவதும் சொன்னாய்யா ஜெயா ?" என்று கலங்கிய குரலில் கேட்டாள் ஜோஸ்னா.

" எல்லாவற்றையும் சொன்னேன். அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் என்ன ? இந்த உலகில் யார் தான் நம் உறவை ஏற்றுக் கொள்ளமுடியும்." என்று கண்ணீர் விட்டு அழுதாள் ஜெய ஸ்ரீ.

"நாம் பிரிவது தான் முடிவா ?"

" நாம் பிரிய வேண்டும் என்பது என் பெற்றோர்களின் முடிவு. அப்படியே சேர்ந்து வாழ நினைத்தாலும், இந்த சமூதாயம் என்ன சொல்லும் ? புத்திக்கெட்ட பெண்கள் என்று தானே. அந்த விமர்சனம் நமக்கு தேவையா"

" தேவையில்லை தான். பிரியாமல் ஒன்றாக இருக்க ஒரு வழி சொல்லவா " என்றாள் ஜெய ஸ்ரீ.

பாலைவனத்தில் பழரசம் கிடைத்தது போல் ஜோஸ்னா முகம் மலர்ந்தது. ஜெய ஸ்ரீ சேர்ந்து சாக எடுத்திருக்கும் முடிவை கூறினாள். ஜெய ஸ்ரீ பிரிந்து வாழ்வதை விட அவளுடன் இறக்க ஜோஸ்னாவும் சம்மதிக்கிறாள்.

இருவரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அடுத்த நாள் செய்தி தாளில் இரண்டு பெண்கள் இறந்ததை விட அவர்கள் இறந்ததற்கு காரணத்தை தான் பெரிதாக எடுத்துக் கொண்டு பேசினார்கள்.

இந்த சம்பவம் 1979 ஆண்டு டெல்லியில் நடந்தது. ( ABVA 1991 : 70)



ஆக்டோபர் 29, 1980 அன்று மல்லிகா, லலிதாம்பிகா (20 வயது) இருவரும் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் விருப்பதத்துக்கு மாறாக காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். (ABVA 1991 : 70)

ஆக்டோபர், 1988 கீதா டார்ஜி என்ற பெண், தன் நர்ஸ் தோழியான கிஷோரி ஷாவிடம் இருந்தது தன் கணவன் பிரிக்கப்பட்டதால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாள். ( இந்தியா டூடே, 1988)

ஆகஸ்ட், 1990, வந்தனா என்ற பெண் தன் தோழி சிம்மி கப்பூருக்கு (21 வயது) திருமணம் நிச்சயமாகி இருந்ததால் அவளை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டாள். (தாகூர் 1990 : 33)

இது போல் தங்கள் லெஸ்பியன் உறவுகளை வெளியே சொல்ல முடியாமல், கணவனுடன் வாழவும் முடியுமால் வாழ்ந்து கொண்டு இருக்கும் பெண்கள், சில சமயம் இது போல் விபரித முடிவை எடுக்கிறார்கள்.. எல்லா இடங்களில் இருக்கும் ஆணாதிக்கத்தனம் இருப்பது போல், ஓரின சேர்க்கையிலும் இருப்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

தென் குஜராத் மாநிலத்தின் இளவரசனாக கருதப்படும் மன்வேந்திர சிங் கோஹில் ஆரம்பத்தில் அவரும் இப்படி தான் இருந்ததாக சொல்லியிருக்கிறார். இப்போது, தன்னை போல் இருக்கும் கே நண்பர்களுக்கு லக்ஷியா என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார். ராஜ்கோட், சூரத், வடோடாரா போன்ற இடங்களில் இந்த அமைப்பு இயங்கிவருகிறது.

நடிகர் வேள் எம்.ஆர்.ராதா தன்னுடைய சிறை அனுபவங்கள் பற்றி எழுதிய புத்தகத்தில், நாடகம் நடத்திய காலங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், தனது நாடகத்தில் நடித்த அழகான யுவன்களை சீமான் மார்கள் அழைத்து சென்றதை சொல்லியிருக்கிறார். ( தகவல் : ஞாநியின் 'அறிந்தும் அறியாமலும்')

‘Page 3' என்ற படத்தில் மேல்தட்டு வர்கத்தினர் அனாதை ஆசிரமத்தில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து உறவு வைத்துக் கொள்வது போல் காட்டியிருப்பார்கள். பணக்கார வர்கத்தினர் தங்கள் பணபலத்தால் சாதித்ததில் ஓரின சேர்க்கையும் ஒன்று என்று படத்தில் காட்டியிருப்பார்கள். போலி சாமியார்கள் மாட்டிய பிறகு, தங்களை தேடி வரும் யுவன்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட செய்திகளை சமிபத்தில் பார்த்து வருகிறோம்.

பணம், பதவி, பொருள் என்று ஏதாவது ஒன்று பயண்படுத்தி ஓரின சேர்கை ஆண்கள் தங்கள் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். இல்லை என்றால், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் குடும்பத்தோடு ஒட்டவும் முடியாமல் விலகிவிடுகிறார்கள். ஆனால், பெண்களால் அப்படி இருக்க முடியவில்லை. குறிப்பிட்டு காலத்திற்கு மேல் தங்கள் திருமணத்தை தள்ளி போட முடியாது. திருமணமான பின்னும் கணவனிடம் உண்மையை சொல்ல முடியாது. பிரிந்து வந்தாலும் தவறான பார்வையில் இருந்து தப்பவும் முடியாது. இப்படி பல சிக்கல்களில் ஆண்களை பெண்கள் ஓரின சேர்க்கையில் அவதை படுகிறார்கள்.

இரண்டு ஆண்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக வாழுவதை ஏற்றுக் கொள்ளும் உலகம் இரண்டு பெண்கள் நீண்ட நாள் ஒன்றாக வாழ முடிவதில்லை. தங்களையும் ஏமாற்றிக் கொள்ள முடியாமல், சமூகத்தையும் ஏமாற்ற முடியாமல் போகும் போது தான் இது போன்ற தற்கொலை நிகழ்வுகள் நடக்கின்றன.

‘திருமணம் வேண்டாம்’ என்று சொல்லும் ஆண்ணையும், பெண்ணையும் விமர்சிப்பதில் எந்த வித்தியாசம் தெரிகிறதோ அதே வேறுபாடு ஓரின சேர்க்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்கள். பல விமர்சனங்கள் வரும் என்று தெரிந்து துணிந்து சில பெண்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றி சொல்லும் போது சேர்ந்து வாழ்ந்தவர்கள் பற்றியும் சொல்லியாக வேண்டும். இல்லையா !

கிராமத்தில் ஆசிரியராக பணி புரிந்த அருணா சொம்பை ஜெய்சிங்பாய் கோகில் ( வயது 31) தன் தோழியாக சுதா அமர்சின் மோகன்சின் ரடன்வாடியா (வயது 29) ஒரு வருடம் மேல் ஒன்றாக வாழ்ந்த பிறகு 'மைதிதி கரர்' (நட்பு ஒப்பந்தம்) என்ற ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக அறிவித்துக் கொண்டனர். (ABVA 1991 : 67 )

ஊர்மிலா என்ற பெண் தான் திருமணம் செய்யவிருக்கும் ஆண்ணை நிராகரித்து விட்டு 28 வயது நிரம்பிய போலீஸ் கான்ஸ்டேபிள் லீலா நம்டேவும் ஒன்றாக வாழ தொடங்கினார். ஊர் மக்கள் இவர்களை கண்டித்தும் கேட்காமல் இருந்ததால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். (ABVA 1991 : 67 - 68, India abroad 1993)

சமூகத்தின் முன் இந்த பெண்கள் நகைச்சுவை பொருளாக தான் தெரிவார்கள். ஊடகங்களும் இவர்களை பற்றி பெரிதாக காட்டுவார்கள். ஆனால், தற்கொலை செய்து கொள்வதாகட்டும், துணிந்து தன்னை பற்றி வெளிப்படையாக சொல்வதாகட்டும் ஓரின சேர்க்கையில் பெண்களுக்கு இருக்கும் துணிச்சல் ஆண்களுக்கு இல்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication
http://www.dnaindia.com/india/report_the-prince-comes-out-of-closet_1018219
http://www3.interscience.wiley.com/journal/118947120/abstract?CRETRY=1&SRETRY=0

Wednesday, July 21, 2010

இன்டர்நெட் திருடர்கள் ஜாக்கிரதை !!

ரமேஷ்க்கு XXX வங்கியில் இருந்து ஒரு ஈ - மெயில்...

உங்கள் வங்கியில் வாடிக்கையாளர் தகவல் தொழில்நுட்ப காரணமாக அழிந்துவிட்டது / பழுதடைந்துவிட்டது . கீழ் காணும் இணையதளத்தில் உங்கள் பயப்பெயர் (Username) மற்றும் கடவுச்சோல் (Password) கொடுக்கவும். நீங்கள் தகவல் கொடுத்தவுடன், உங்களை பற்றிய எல்லா தகவல்களும் எங்கள் தளத்தில் புதுப்பித்து பழைய நிலையில் திரும்பிவிடும்.

உதாரணத்திற்கு. http://www.xxxbank.co.in/yourdetails.html



இந்த தளத்தில் ரமேஷ் சென்றான். பார்ப்பதற்கு வங்கி தளம் போல் இருந்தது. ரமேஷ் தன் வங்கி பயண பெயர், கடவுசொல் போன்ற எல்லா தகவலையும் சரியாக கொடுத்தான். அடுத்த நாள் தன் வங்கி கணக்கை பார்க்கும் போது இருப்பு தொகை பூஜ்ஜியமாக இருந்தது.

ஆரம்ப காலம், இணைய வங்கி தொடங்கும் போது பலர் ரமேஷ் போல் தங்கள் தகவலை கொடுத்து வங்கி கணக்கு, கிரடிட் கார்ட் கணக்கு பணத்தை கதைகள் கேள்வி பட்டிருப்போம்.

நாம் கொடுக்கும் தகவலை வைத்து நம் வங்கியில் இருக்கும் சேமிப்பு பணத்தை யார் வங்கி கணக்கில் வேண்டுமானாலும் மாற்ற முடியும். தொழில் நுட்பம் வளர வளர நுட்பமான திருடர்கள் வந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை தடுப்பது மிகவும் கடினம். அதனால், வங்கியில் இருந்து போன்ற மின்னஞ்சல் வந்தால் அதை நிராகரிப்பதே நல்லது.

இணையத்தில், நமது பயன பெயர் மற்று கடவுச்சொல் ரகசியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நம் வீட்டு சாவி சேர கூடாத நபரிடம் சேர்ந்தால் எப்படி நம் வீட்டு பொருளுக்கு உத்தரவாதம் இல்லையோ.... அது போல், நமது பயன பெயர், கடவுச்சொல், கிரடிட் கார்ட் எண், கிரடிட் கார்ட் CVC எண் மற்றவர்களுக்கு தெரிந்தால் தவறாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

நான் மேலே குறிப்பிட்டது பல விதமான திருட்டுகளில் ஒரு வகை. அவ்வளவு தான்.

ஒரு பிரபல எழுத்தாளரின் மின்னஞ்சலை 'hack' செய்து, அவர் மின்னஞ்சலில் இருந்து அவருடன் தொடர்புள்ள எல்லா மின்னஞலுக்கு ஒரு செய்தி செல்கிறது.

"நான் இங்கிலாந்தில் இருக்கிறேன். வந்த இடத்தில் எனக்கு அவர பணதேவை. என் கையில் 50 பவுன்ட் மட்டுமே உள்ளது. இந்தியாவுக்கு வர எனது நண்பரின் இந்த வங்கியில் பணம் செலுத்துங்கள்" என்று வருகிறது.

இதை படித்த அவருடைய வாசகர், என்ன எதும் விசாரிக்காமல் பணத்தை அனுப்பிவிட்டார்.

பிறகு தான் தெரிந்த்து, மின்னஞ்சல் அனுப்பியவர் எழுத்தாளர் இல்லை. அவருடைய மின்னஞ்சல் களவாடப்பட்டது என்று...!

இது போல் தெரிந்த நபர்களிடம் இருந்து பண உதவி வேண்டும் என்று கேட்டு, குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்லி மின்னஞ்சல் வந்தால், அந்த நபரிடம் போன் போட்டு உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

இன்று தீவிரவாதிகளுக்கு பணம் அந்நிய நாட்டில் இருந்து மட்டும் வருவதில்லை, இது போல ஹாக்கிங் முறையிலும் தங்கள் இயக்கத்திற்கு பணம் திரட்டுகிறார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இப்படி பல நுதன திருடர்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டு இருக்கிறார்கள். இணையத்தில் கிரடிட் கார்ட் / டெபிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

***

என் பழைய கட்டுரை. ஒரு சிற்றிதழ்காக எழுதியது. புதிதாக எதுவும் எழுதாததால் இதை பதிவில் ஏற்றிவிட்டேன்.

Tuesday, July 20, 2010

ஐயப்பன் திருமணமாகாததற்கு இது தான் காரணமா ?

நமது புராண கதையில் எடுத்துக் கொண்டால், சிவன் அப்பாவி தனமாக வேண்டிய வரத்தை அரக்கர்களுக்கு கொடுத்துவிடுவார். விஷ்ணு தன் தந்திரத்தை பயன்படுத்தி அரக்கர்களை ஒழிப்பார். தேவர்களுக்கு பிரச்சனை வரும் என்று தெரியாமல் சிவன் தன் இஷ்டத்துக்கு வரம் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார். அப்படி, ஒரு அரக்கனிடம் அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை வெடித்து இறந்து விடுவதாக வரம் கொடுத்து விடுகிறார். கொடுத்த வரத்தை சோதித்து பார்க்க சிவன் தலையில் கை வைக்க அரக்கன் வருகிறான். விஷ்ணு விஜய் போல் எண்ட்ரி கொடுத்து பெண் வேடத்தில் அரக்கனை கொல்கிறார். விஷ்ணுவின் பெண் உருவத்தை பார்த்து சிவன் மயங்க, இருவருக்கும் 'ஐயப்பன்' என்ற ஆண் குழந்தை பிறக்கிறது. முதல் ஆண் – ஆண் உறவால் பிறந்த குழந்தை 'ஐயப்பன்' என்று புராண கதைகள் சொல்லுகிறது.



புராணத்தின் பல கதைகள் நம்பும் படியானது இல்லை. நல்லது மட்டும் எடுத்துக் கொண்டு கற்பனைகளை ஒதுக்கி வைக்க வேண்டிய கதைகள் பல உள்ளது. இதில் 'கே' உறவில் பிறந்த ஐயப்பன் என்பதை விட, இரண்டு ஆண்ணின் மகன் என்று கொஞ்சம் கௌரவமாக சொல்லுவோம். என்ன தான் அரசக் குடும்பத்தில் வளர்ந்தாலும், இரண்டு ஆண்களுக்கு பிறந்ததால் பெண்கள் மீது ஈர்ப்பு வராமல் திருமணம் செய்யாமல் இருந்தாரா என்ற சந்தேகம் வரலாம்.

விஞ்ஞான ரீதியாக இரண்டு ஆண்ணுக்கும், இரண்டு பெண்ணுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஆனால், லெஸ்பியன், கே தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு இவர்கள் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது. பலர் கே, லெஸ்பியன் போன்றவர்களை மன நோயாளியாக பார்ப்பதால் சட்டப்படி இவர்கள் குழந்தை தத்தெடுப்பதில் சிக்கல் உள்ளது.

இந்தியாவில், ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டியது இருந்தால் திருமணமான ஆண்,பெண் சேர்ந்து தத்தெடுக்கலாம் அல்லது திருமணமாகாத / தனிமையில் வாழும் பெண்கள் தத்தெடுக்கலாம். அதனால், கே, லெஸ்பியன் ஜோடிகள் சட்டப்படி குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. இவர்கள் தத்தெடுக்க மூன்று விதமான பிரச்சனைகளை நேரில் சந்திக்கிறார்கள்.

1. கே, லெஸ்பியன் பராமரிப்பில் வளர்ந்தால் அந்த குழந்தைக்கு தன் பால் உணர்வு குறித்து சந்தேகம் வரலாம். தன்னையும் அவர்கள் வளர்ப்பு பெற்றோர்களை போலவே எண்ணிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
2. குழந்தை கே, லெஸ்பியனுடன் வளர்ந்தால் சுற்றி இருக்கும் சமூகம் இவர்களை மனநோயாளிகளாக பார்ப்பது போல் அந்த குழந்தையை பார்க்கும். அதன் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.
3. கே, லெஸ்பியன் குழந்தைகள் பள்ளியிலோ அல்லது விளையாட்டிலோ அவர்களது நட்பு வட்டத்தில் கேலியாக பேசலாம். உதாசினம் செய்யலாம். இதனால், அந்த குழந்தைக்கு தன் மீது தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்புள்ளது.

கே, லெஸ்பியன் போன்றவர்கள் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு தனிமையாக்கப்பட்ட போதும், அவர்களுக்கு என்று குடும்பம் அமைத்து கொள்ள இது போன்ற நடைமுறை சிக்கல் உள்ளது.

இந்தியாவில் கே, லெஸ்பியன் பற்றின வெளிப்படையாக பேசாமல் இருப்பதால் அவர்களை பற்றி ஆராய்ச்சியோ, சர்வேவோ பெரிய அளவில் எடுக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் வெளிப்படையாக பேசப்படுவதால் அவர்கள் தத்தெடுத்து குழந்தைகளை பற்றின சர்வே ஒன்று வெளியீட்டு இருக்கிறார்கள்.

அதில், கே உறவில் ஈடுபடுபவர்கள் பெண் குழந்தையை தத்தெடுப்பதிலும், லெஸ்பியன் உறவில் ஈடுபடுபவர்கள் ஆண் குழந்தையை தத்தெடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கள் பால் இனத்தில் இருக்கும் குழந்தையை தத்தெடுத்தால் அம்மா, மகள் உறவை / தந்தை, மகன் உறவை கொச்சை படுத்துவார்கள் என்ற அச்சமே காரணமாம்.

இவர்கள் தத்தெடுக்கும் குழந்தைகள் யுவன்/யுவதியாக வளர்ந்த பிறகு செக்ஸ்யில் சாமான்ய யுவன்/யுவதி காட்டிலும் ஆர்வம் குறைவாக இருப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் தத்து குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி கே, லெஸ்பியன் பெற்றோர்கள் பேச தயங்குவதே காரணம் என்று கூறுகின்றனர். அதே சமயம், மற்ற யுவன் / யுவதிகளை விட சமூக காரியங்கள், உதவிகள் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

கே தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் தெளிவு இல்லாதவர்கள். லெஸ்பியன் தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் திறமையானவர்கள் என்ற இன்னொரு கருத்தும் உண்டு.

இப்படி, பல கருத்துகள் வெளியிட்டாலும் கே, லெஸ்பியன் ஜோடிகள் குழந்தைகள் தத்தெடுக்கும் உரிமையை சட்ட ரீதியான உரிமை வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

'செக்ஸ்' என்பது தனிப்பட்ட உரிமை. எந்த பெற்றோர்கள் வளர்த்த யுவன் / யுவதியாக இருந்தாலும் சரி, பெற்றோர்களின் வளர்ப்பு முறைக்கும், செக்ஸ்க்கும் சம்பந்தமில்லை. சுற்றமும், நண்பர்கள் சேர்கை தான் 'செக்ஸ்' பற்றிய விழிப்புணர்வும், மோகமும், புரிதலும் ஏற்ப்படுத்துகிறது என்பதை தான் நடைமுறையில் சந்திக்கிறோம். ‘செக்ஸ் பிடிக்கவில்லை’ என்றால் மருத்துவ ரீதியாக அனுக வேண்டிய ஒன்று தான். ஆனால், யார் மீது ‘செக்ஸ் ஈர்ப்பு’ வருகிறது என்பது மனது சம்பந்தப்பட்டது. இதற்கும், வளர்ப்பு முறைக்கும் சம்மந்தமே இல்லை என்பது தான் அமெரிக்க சர்வே வெளியீட்டுள்ளது.

விநாயகர் கூட தான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவரை சந்தேகப்படாமல் இருப்பவர்கள் ஐயப்பன் திருமணம் ஆகாமல் இருப்பதையும் சந்தேகப்பட கூடாது. அதே போல், அனிதாவுக்கும், கார்த்திக்கும் பிறக்கும் குழந்தையும், ஜானகி, மாலதி இருவரும் தத்தெடுக்கும் குழந்தையும், கௌஷிக், கருணாகரன் தத்தெடுக்கும் குழந்தையும் ஒன்று தான்.

**

ஐயப்பன், விநாயகர் என்று குறிப்பிட்டது புரிதலுக்காக மட்டுமே.... இந்து துரோகம் செய்துவிட்டேன் என்று பின்னூட்டம் போட்டு கட்டுரையை திசை திருப்ப வேண்டாம் என்று பணிவுடம் கேட்டு கொள்கிறேன்.

Wednesday, July 7, 2010

ஓரின சேர்க்கை - எதிரான வாதங்கள்

ஒரு முறை அமெரிகாவில் இருக்கும் என் நண்பனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, " அமெரிக்காவில் ஆண் - பெண் சேர்ந்து சுதந்திரமாக சுற்றும் அளவிற்கு ஆண் - ஆண், பெண் - பெண் சுற்றுவதில் இல்லை" என்றான். எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்தியாவை தவிர எந்த நாட்டையும் பார்க்காத எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். அதற்கு அவன் சொன்ன காரணம், " ஒரு ஆண் - ஆண் நெருக்கமாக பழகினால், அவர்கள் 'கே' என்று சந்தேகப்படுவார்கள்". இரண்டு பெண்கள் ஒரு வீட்டில் தங்கியிருந்தால் அவர்களுக்குள் 'உறவு' இருப்பதாக நினைப்பார்களாம். கே, லெஸ்பியன் ஜோடிகள் அமெரிக்காவில் பரவலாக வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் ஓரின சேர்க்கை வளர தொடங்கினால் உண்மையாக நண்பர்களாக பலகும் ஆண் - ஆண், பெண் - பெண் உறவுகள் கூட பெற்றோர், சுற்றத்தின் கண்களுக்கு சந்தேக பார்வையில் தெரிவார்கள்.

குடும்ப நிகழ்ச்சியில் ஒரு பெண் கலந்து கொண்டால், ' உங்க புருஷன் வரலையா ' என்று கேட்பார்கள். கணவன் வந்தால், ' பொண்டாட்டி வரலையா ' என்று விசாரிப்பார்கள். ஓரின சேர்க்கை வளர தொடங்கினால், ' புருஷன் வரலையா ' என்பதற்கு பதிலாக ' இவங்க புருஷன் ஆணா ? பெண்ணா ?' என்ற கேள்வி வரும். இரண்டு பேரில் 'யார் ஆண் மாதிரி இருப்பீங்க ?' போன்ற கேள்விகள் எதிர்காலத்தில் எழும் அபாயம் உள்ளது.



ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கிகாரமே கிடைத்தாலும், சமூக அங்கிகாரம் கிடைப்பது மிகவும் கடினம். மற்ற திருமணம் போல் ஓரின சேர்க்கை திருமணத்தை பார்க்க மாட்டார்கள். அவர்கள் தத்தெடுக்கும் குழந்தையின் எதிர்காலம் அதே நிலைமை தான். பெற்றோர்கள் பெயர் தெரியாமல் இருப்பதை விட ஒரு பால் இனத்தினரை விண்ணப்ப படிவத்தில் அம்மா, அப்பா நிரப்புவதற்கு சங்கடமாக இருக்கும். அந்த குழந்தையும் தன்னை தத்தெடுத்த பெற்றோர்களை புரிந்துக் கொள்வதில் சிரமம் இருக்கும். வெளியே சொல்லுவதற்கு தயங்கலாம்.

ஆண் - ஆண், பெண் - பெண் உடலுறவு வைத்துக் கொள்ளுவதில் மருத்துவ ரீதியாக உடல் தொல்லைகள் ஏற்ப்படும். ஒரு சில மருத்துவர்கள் இதை மறுத்தாலும், பலர் உடல் தொல்லை வரும் என்று நம்புகிறார்கள். ஓரின சேர்ர்கையாளர்களை மனநோயாளிகளாக பார்க்கும் பார்வையும் இன்னொரு காரணம்.

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணமே செய்துக் கொண்டாலும் சட்டப்படி அவர்கள் உறவுக்கு அங்கிகாரம் இல்லை. எதிர்காலத்தில் ஒருவருக்கு ஏதாவது நடந்தாலோ மற்றவர் அவரின் சொத்துக்களையோ, பணத்தையோ உரிமை கேட்க முடியாது.

ஓரின சேர்க்கை ஆதரிக்க தொடங்கினால், தங்கள் வம்சம் அந்த தலைமுறையோடு நினறுவிடும் என்ற பெற்றோர்களின் பயப்படுகிறார்கள். அதனால், தங்கள் மகள்/ மகன் பற்றி உண்மை தெரிந்ததும் அவர்களை அடித்தோ அல்லது மிரட்டியோ திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்ற பெற்றோர்களின் நிலைமை இன்னும் மோசம். ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர் என்று தெரிந்தால் மற்றவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

பல வருடங்களாக வாழும் கணவன், மனைவிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு பிரியும் போது எந்த அங்கிகாரம் இல்லாமல் ஒன்றாக வாழும் ஆண் - ஆண், பெண் - பெண் மட்டும் எவ்வளவு நாள் ஒத்த கருத்தோடு வாழ முடியும். ஒரு சிலர் ஆரம்பத்தில் இருக்கும் தைரியம் வாழும் போது இருப்பதில்லை. இருவரில் யாரோ ஒருவர் மனம் மாறி எதிர்பால்வினரை திருமணம் செய்து கொண்டு இயல்பாக வாழ நினைத்தால், மற்றவர் வாழ்க்கை பாதிக்கப்படும். ஓரின சேர்கையாளர்கள் நீண்ட நாள் ஒன்றாக வாழ்வதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்தியாவில், 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற பண்பாட்டில் வாழ்பவர்கள். நடைமுறையில், பல பெண்களுடன் ஒரு ஆண் உறவு வைத்துக் கொண்டாலும், ஒரு பெண் கணவனுக்கு தெரியாமல் கள்ளகாதல் இருந்தாலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற வாசகம் நம் எல்லோர் மனதில் பதிந்து ஒன்று. 'ஒருவனுக்கு ஒருவன்', 'ஒருத்திக்கு ஒருத்தி' என்ற வாசகம் மாற்றி பேச யாருக்கும் மனவராது.

ஆதரவான வாதங்களையும், எதிரான வாதங்களையும் இரண்டு பக்கம் ஆராய்ந்தால் ஒரு விஷயம் மிக தெளிவாக தெரிகிறது.

ஓரின சேர்க்கை எதிர்ப்பவர்கள் ' உடல்' சம்பந்தப்பட்ட உறவாக பார்க்கிறார்கள்.
ஓரின சேர்க்கை ஆதரிப்பவர்கள் 'உணர்வு' ரீதியாக பார்க்கிறார்கள்.


இரண்டு பக்கத்தில் நீங்கள் எந்த பக்கம் என்று முடிவு செய்வதை விட, முதலில் நாம் புரிந்து கொள்வோம்.

Tuesday, July 6, 2010

ஓரின சேர்க்கை - சாதகமான வாதங்கள்

ஜூ 27,2010.

சென்னை கடற்கரையில் ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினர். பலர் தன் உரிமைக்காக கோஷங்கள் எழுப்பினர். வானவில் கொடிகளை கையிலேந்தி நடந்தனர். அந்த பேரணியில் வயதானவர்களை பார்த்ததும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி. பரப்பரப்பான தகவல்களை சேகரிக்க அவர்களிடம் நெருங்கிய போது தான் தெரிந்தது அவர்கள் ஓரின சேர்க்கையாளரின் பெற்றோர்கள் என்று !

அந்த போராடத்தில் பங்கு பெற்ற ஒரு அம்மா, " என் பையன் 'கே'னு போன மாசம் தான் தெரியும். எனக்கும், என் கணவனுக்கும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. கொஞ்ச நாள்ல எங்கள நாங்களே சமாதானம் பண்ணிகிட்டோம். அவன் 'கே' நால என் மகன் இல்லனு சொல்ல முடியுமா !" என்றார். மேலும், " என் மகன் சமூக விரோதியில்ல. சமூக பார்வையில வித்தியாசமான பாலுணர்வு உள்ளவன். அவன் உணர்வ நாங்க புரிஞ்சிகிட்ட மாதிரி அவன் மாதிரி இருக்குறவங்களோட பெற்றோரும் புரிஞ்சிக்கனும். என் பையன போல இருக்குறவங்களுக்கு ஆதரவுக்காக எங்க பங்க்கு போராடுறோம்" என்று பெருமையாக கூறினார்.
ஒரு லெஸ்பியன் பெண், " நான் பாலுணர்வால் வித்தியாசமானவள். ஒருவனுடைய திருமதியானவள் என்பதை விட நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு பெண்கள் மீது வரும் ஈர்ப்பு கூட ஆண்கள் மீது வரவில்லை" என்றாள். " பதினெட்டு வயதானவர்கள் தங்கள் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கலாம் என்று சட்டமே சொல்லும் போது, அவர் ஆணாக இருந்தால் என்ன ? பெண்ணாக இருந்தால் என்ன ?. எதிர்பாலினரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி இந்த சமூதாயம் கட்டுப்படுத்தலாம் ?" என்று குரல் உயர்த்தியே பேசி இருக்கிறார்.

ஓரின சேர்க்கையை ஆதரிக்க தொடங்கிவிட்டால் பல குடும்பங்களின் அடுத்த தலைமுறை இல்லாமல் போகும் என்று கேட்டதற்கு, ஒரு லெஸ்பியன் பெண் " உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாங்கள் இந்தியாவை முதல் இடத்தை அடைய உதவுவதற்கு விருப்பமில்லை. மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஓரின சேர்கை உதவி தான் செய்கிறது." இந்த பெண் ஒரு ஆஸ்ரமத்தில் இருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்கிறார். தன் வாரிசாக அந்த குழந்தையின் மீது பாசம் காட்டுகிறார். 'அனாதை' என்ற வார்த்தை ஓரினசேர்க்கையாளர், திருநங்கையர் போன்றவர்களால் குறைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர் பேச்சில் இருந்தது.

**


காதலை கொண்டாடும் படங்களில் இந்த வசனம் இல்லாமல் இருப்பதில்லை.

" லவ் அது ஒரு பிலிங்"
" உலகத்துல காதலிக்காதவங்க யாருமில்ல "
" காதல மறந்திட்டு யாரும் நிம்மதியா வாழ முடியாது"
“ஒருவர் மீது அன்பு, அறவனிப்பு, காதல், பாசம் காட்ட மனசு இருந்தால் போதும். பண காசு தேவையில்லை”

ஆக, காதலிக்க இரண்டு மனது, இரண்டு உயிர் தேவைப்படுகிறது. காதலிக்கும் இரண்டு மனது ஆணும், பெணும் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த இரண்டு மனதும் ஆண்களுடையதாகவோ, பெண்களுடையதாகவோ இருப்பதால் தான் பிரச்சனையே !

இன்று ‘Living together’ கலாச்சாரம் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. திருமணமாகல் ஒரே வீட்டில் ஆண், பெண் தங்குகிறார்கள். எந்த நிபந்தனையில்லாமல் ஒன்றாக வாழ்வதால் இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாளைக்கே பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால், பிரிவதற்கு குழந்தை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதில் ‘Living together’ ஜோடிகள் நினைக்கிறார்கள். ‘Living together’ பற்றி விமர்சிக்காதவர்கள், ஏன் ஓரின சேர்கை திருமணத்தை எதிர்க்க வேண்டும் ? என்று நினைக்க தான் தோன்றுகிறது.

நிலா ரசிகனின் 'யாரோ ஒருத்தியின் டைரி குறிப்பு' புத்தகத்தில் 'லெஸ்பியன்' பற்றி எழுதிய சிறுகதைக்கு ஒரு வாசகி மின்னஞ்சல் எழுதியதை தனது தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வாசகி, சிறு வயதில் ஒரு ஆண்ணால் பாலியல் தொல்லை அனுபவித்திருக்கிறாள். வளர்ந்த பிறகு அவளுக்கு ஆண்கள் மீதே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தன் தோழியுடன் தான் வாழ்ந்துவருதையும் குறிப்பிடிருந்தார். இந்த வாசகி போல் பல சிறுதிமகள் பாலியல் தொல்லைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆண்களை வெறுக்க காரணமானவனை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லாத போது அந்த பெண்ணின் உணர்வுக்களுக்கு பூட்டு போடுவது எந்த வகையில் நியாயம்.

பலர் ஓரின சேர்க்கையாளர்களை மனநோயாளிகள் என்று கூறுகிறார்கள். இதுவரை ஓரின சேர்க்கை பற்றி படித்த புத்தகங்கள், நண்பர்கள் மூலம் சேகரித்த தகவலில் நான் புரிந்து கொண்டது அவர்கள் மன நோயாளிகள் அல்ல. மனநோயாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று ஒன்று சேர வெருக்கும் போது அவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்கள் அடித்து, மிரட்டி திருமணம் செய்து வைக்கிறார்கள். சுற்றத்தின் உதாசின பார்வையும், மிரட்டலும் தங்கள் உணர்வை மறைக்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் உணர்வுகளை கொன்று வாழ்கிறார்கள். தன்னம்பிக்கை, தைரியம் உள்ளவர்கள் தங்கள் பாலுணர்வை வெளிப்படுத்தி துணிச்சலாக வாழ்க்கிறார்கள்.

ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் யாரும் பணமோ பொருளோ எதிர்பார்க்கவில்லை. 'இவர்களும் மனிதர்கள் தான்' என்ற அங்கிகாரத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்.

திருமணமான ஆண் - பெண் இருவரையும் குடும்பமாக பார்க்கும் சமூகம், ஆண் - ஆண் , பெண் - பெண் என்று ஒன்றாக வாழ்பவர்கள் குடும்பமாக பார்க்க வேண்டும் என்பது தான் இவர்களின் போராட்டம்.

****

அடுத்த பதிவில் ஓரின சேர்க்கை பற்றி எதிரான வாதங்ககளை பார்ப்போம்.

Thursday, June 10, 2010

ஓரின சேர்க்கை புரட்சி : ஸ்டோன் வால் சம்பவம்

நியூ யாக் நகரத்தின் அருகில் உள்ள கிரீன்விச் விலேஜ் இடத்தில் கிருஸ்டபர் தெருவில் உள்ளது ஸ்டோன்வால் ஹோட்டல்.

விடுமுறை நாட்களில் மூன்று டாலர் அனுமதி கட்டனமாக வசூலிக்கப்படும். இரண்டு டிக்கெட் கொடுப்பார்கள் மற்றும் இரண்டு கிலாஸ் டிரின்க்ஸ். வேண்டியதை குடிக்கலாம். இத்தனைக்கும் அந்த ஹோட்டலுக்கு மது விற்க லைசன்ஸ் வழங்ப்படவில்லை. முறையான எமர்ஜென்ஸி எக்ஸிட் வழியும் கிடையாது. எந்த வழியில் வந்தோமோ அந்த வழியில் தான் செல்ல வேண்டும். இருந்தும், அந்த ஹோட்டலில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டு இருக்கும். பாட்டும், கும்மாளமும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

காரணம், அந்த ஹோட்டல் ஓரின சேர்க்கையர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட ஹோட்டல். அங்கு வருபவர்கள் எல்லோரும் கே, லெஸ்பியன் உறவில் ஈடுபடுபவர்கள். ஆனால், அங்கு உறவில் ஈடுபட அனுமதியில்லை. குடிக்கலாம். பாடலாம். ஆடலாம். மற்ற படி போதை மருந்து, விபச்சாரம், பணம் கைமாற்றுவது போன்ற எந்த வித சட்ட விரோதமாக செய்ய அனுமதியில்லை. இருந்தும், போலீஸ் மாதம் ஒரு முறையாவது ரைட் வருவார்கள்.

போலீஸ் வந்ததும் கலர் விளக்கு அனைத்து வெள்ளை விளக்கு போடப்படும். ஆடியவர்கள், அடையடித்தவர்கள் எல்லோரும் அமைதியாகி விடுவார்கள். போலீஸ் விற்க அனுமதியில்லாத மதுபானங்களை பரிமுதல் செய்வார்கள். யாராவது அரை நிர்வாணமாக, ஆபாசமாக உடையணிந்தால் அவர்களையும் கைது செய்வார்கள்.

ஸ்டோன் வால் ஹோட்டலில் 'ட்ரேக்' (Drag) நடனம் மிகவும் பிரபலம். ஆண் ராணி போல் வேடமிட்டு ஆடுவதும், பெண் ராஜா போல் வேடமிட்டு ஆடுவதும் பலர் ரசித்து பார்ப்பார்கள். இப்படி நடனமாடுபவர்கள் கூட முறையான உடையணிய வேண்டும். இல்லையென்றால் ரைட் வந்த போலீஸ் இவர்களையும் கைது செய்யும்.
சில சமயம் ஹோட்டலில் வேலை செய்பவர்களை கூட கைது செய்திருக்கிறது.

இப்படி எல்லாம் பார்த்து பழகிபோனவர்களுக்கு அன்று இரவு நடந்த சம்பவம் ஒரு பெரும் புரட்சி ஏற்ப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.



ஜூன் 28, 1969

காலை 1:20 மணி இருக்கும். இரண்டு காவல் அதிகாரிகள் காஸ்ட்ரோ தெருவில் நுழைந்தனர். அங்கு கையில் மது கோப்பையுடன் பலர் ஜோடி ஜோடியாக நடந்த வண்ணம் இருந்ததை கவனித்தனர். பொது இடம் என்று பார்க்காமல் சில ஜோடிகள் அங்கையே உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தனர். ரௌவுன்ட்ஸ் வந்த அதிகாரிகளுக்கு இதை பார்க்க அருவருப்பாக இருந்தது. ஆனால், எந்த ஜோடியும் இதை பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் அவர்களாகவே இருப்பது இது போன்ற இடத்தில் தான். அரசாங்க பார்வையில் இவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். ஆம் ! அன்றைய தேதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களை அப்படி தான் அமெரிக்கா கருதிவந்தது.

இந்த தெருவில் போலீஸ் வருவதும், ரைட் நடத்தி வெளியே துரத்துவதும் அவர்களுக்கு பழகிப் போன ஒன்று. பொழுது போகவில்லை என்றால் போலீஸ் அடிப்பதும், காவலில் இரண்டு மூன்று நாள் வைப்பதும் ஓரினசேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், புதிதாக வந்தவர்களுக்கு இந்த விபரம் தெரியாது. போலீஸ் ரைட்டுக்கு ஹோட்டல் உள்ளே நுழைந்ததும் வழக்கம் போல் வெள்ளை விளக்கு எரிந்தது. பாட்டு, ஆட்டம், அரட்டை நின்று நிசப்த்தம் நிழவியது. புதியவர்களுக்கு பயம். தங்களை கைது செய்து விடுவார்களோ, நாளை நமது முகம் பேப்பரில் வந்தால் குடும்ப மானம் என்ன ஆகும் என்ற கவலை வேறு.

பெண் ஓரின சேர்க்கையாளர்களை பெண் போலீஸ் வைத்து சோதனை செய்தனர். ஆண் ஓரின சேர்யாளர்கள் தங்கள் அடையாள அட்டையை காட்டினர். மதுபானங்களை ஹோட்டலில் இருந்து பரிமுதல் செய்தனர். வழக்கத்துக்கு மாறாக 200 பேர்க்கு மேல் இருந்ததால் சோதனை செய்து ஒவ்வொருவராக வெளியே அனுப்பிக் கொண்டு இருந்தனர். ஒரு சிலரை மட்டும் கைது செய்தனர்.

வெளியே வந்தவர்கள் உள்ளே தங்கள் நண்பர்களுக்காக காத்திருந்தனர். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று உள்ளூர பலர் பயந்து கொண்டு இருந்தனர். எப்படியாவது காவலர் பிடியிலிருந்து தப்பிக்க ஒருவர் நினைத்தார். ஆனால், காவலர் அவரை விடவில்லை. பிடித்துக் கொண்டனர். பத்திரிகையில் தன் பெயர், படம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் காவலரை தள்ளினார். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் காவலரை தாக்கியது இது முதல் தான் முறை.

சோதனைக்கு வந்த காவலர்களில் ஒருவர் ஸ்தம்பித்தார். இரண்டு காவலர் அடித்தவனை பிடித்த போது, யாரோ ஒருவர் " We shall Overcome" என்ற பாடலை பாடினார். அந்த பாடல் அமெரிக்க மக்கள் சிவில் உரிமைக்காக பாடப்படும் கீதம். இந்த பாடலை பாடியதும், வெளியே இருந்த ஓரின சேர்க்கையாளர் உத்வேகம் பிறந்தது. உள்ளிருக்கும் தங்கள் நண்பர்களை காவலர் பிடியில் இருந்து கொண்டு வர முயன்றனர். அவர்களை தடுக்க காவலர்கள் தாக்கினர். அடிப்பட்டவர்களும் திரும்பி தாக்க தொடங்கினர். சோதனைக்கு வந்த காவலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுவரை அடிவாங்கியவர்கள் திருப்பி அடித்தது சற்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கிரிஸ்டோபர் தெருவே விடியற்காலை வரை கபளிகரமாக இருந்தது.

அடுத்த நாள் செய்திதாலில் இது தலைப்பு செய்தியாக இருந்தது.

"கே பவர் !!! " (Gay Power)

LinkWithin

Related Posts with Thumbnails