மக்கள் நலக் கூட்டணி மூலம் அ.தி.மு.க தனது ‘B team' வைத்து வெற்றிப் பெற்றது எப்படி மறுக்க முடியாதோ,. அதேப் போல் தி.மு.க தரப்பில் இரண்டு முக்கிய தவறு இருப்பதை மறைக்க முடியாது.
முதல் காரணம்,
காங்கிரஸூடன் உறவு. அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தால் அதிகமாக 20 சீட் கொடுத்திருக்கலாம். ஜி.கே.வாசன் காங்கிரஸ்யை இரண்டாக உடைத்த நிலையில் அவர்களுக்கு 41 சீட் கொடுத்தது மிகப் பெரிய தவறு.
தி.மு.க - அ.தி.மு.க போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில், அதிமுக 'Close Margin' தான் வெற்றிப் பெற்று இருக்கிறார்கள். ஆனால், அதிமுக - காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் அதிமுக ‘Comfortable Win' நிலைமையை பார்க்க முடிகிறது.
இரண்டாவது காரணம்,
தி.மு.க ஸ்டாலின் தலைமை ஏற்க தயாராக இருக்கிறார்கள். 96ல் அவர் மேயராக கொண்டு வந்த திட்டங்களை மக்கள் மறக்கவில்லை. கனிமொழியும் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று தெரிக்கிறது.
ஆனால், கலைஞர் இன்னும் தன்னை முதல்வர்’ வேட்பாளர் என்று அறிவிப்பது கட்சிக்குள்ளே அதிருப்தி ஏற்படுத்தி வருகிறது.
மேலும்,
அழகிரி’ தி.மு.கவுக்கு எதிராக கருத்து கூறுவதும், கட்சி தலைமை அமைதியாக இருப்பதும் தொண்டர்களின் உற்சாகத்தை குறைத்தது என்று சொல்லலாம்.
இருந்தாலும்,
2011ல் எதிர்கட்சி இடத்தை இழந்தது, 2014ல் பாராளமன்றத் தேர்தலில் ஒரு சீட் கூட வெல்லாமல் இருந்தது... இப்படி இருந்த தி.மு.கவை தனி மனிதனாக ஸ்டாலின் பெரும்பான்மை கொண்ட எதிர்க்கட்சியாக மீட்டெடுத்திருக்கிறார். தமிழகத்தில் முதல் முறையாக அதிக இடங்கள் கொண்ட ( 99 சீட் ) எதிர்க்கட்சியாக கொண்டு வந்திருக்கிறார்.
அதிமுக வெற்றிப் பெற்றாலும், அவர்களின் கட்சி எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், திமுகவின் கட்சி எதிர்காலத் தலைமை யார் என்று காட்டியிருக்கிறது.
ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் !!
No comments:
Post a Comment