நண்பர்களே,
ஒரு புத்தகத்தில் விற்பனையாளர்களுக்கு வரும் லாபம் 25-30% மட்டுமே !!
Maximum Sales Maximum Profit எல்லாம் மளிகைக் கடைக்கு பொருந்தும். புத்தக விற்பனைக்கு பொருந்தாது. மாதம் மாதம் ரூ.2000 வாங்குபவரா நீங்கள்... வேண்டாம் ஒரு முறை 2000 ஆர்டர் கொடுத்துப் பாருங்கள் அதிகப்படியாக 10-15% கொடுக்க முடியும். அதற்கு மேல் கூட எங்களால் தர முடியாது. தபால் செலவு கூட நீங்கள் தான் ஏற்க வேண்டியது இருக்கும்.
பதிப்பாளர் எங்களுக்கு கொடுக்கும் கழிவில் இருந்து தான் நாங்கள் உங்களுக்கு கொடுக்க முடியும். எங்கள் லாபம் அனைத்தும் கொடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
ஒரு சில புத்தகங்கள் அதிக கழிவு (50% வரை) வழங்குகிறோம் என்றால், பதிப்பாளர் குறிப்பிட்ட நூல்களை விற்று தருவதற்காக அதிக கழிவு எங்களுக்கு கொடுக்கிறார்கள். அதில் இருந்து நாங்கள் உங்களுக்கு கொடுக்கிறோம். அவ்வளவு தான்.
Flipkart / Amazon எப்படி கொடுக்கிறது என்று கேள்வி கேட்பீர்கள் ?
இதை அவர்களிடம் நீங்கள் கேட்டால் பதில் வராது. Reliance போன்ற பெரிய நிறுவனத்துடன் ரோட்டில் விற்பனை செய்யும் வியாபாரியோடு ஒப்பிடுவதற்கு சமம்.
Flipkart / Amazon எல்லா தமிழ் புத்தகங்கள் கிடையாது. கிடைக்கவும் கிடைக்காது. காரணம், அவர்கள் கேட்கும் கழிவை எந்த பதிப்பாளர்களால் கொடுக்க முடியாது. வருடத்திற்கு 100 - 300 கோடி நஷ்டத்தில் அவர்களால் வெற்றிக்கரமாக இயங்க முடியும். அப்படி தான் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். என்னால் ரூ.100 நஷ்டத்தில் கூட இயங்க முடியாது.
Flipkart / Amazon யில் 200 - 300 பேர் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் முதலீடு வருகிறது.
Wecanshopping.com - தமிழ் இணைய புத்தக அங்காடி தனி மனிதன் நடத்துவது. புத்தகம் வாங்கி, பேக்கிங் செய்வது, கஸ்டமரை தொடர்பு கொள்வது என்று நான் தனி மனிதனாக இயங்குகிறேன். wecanshopping.com என்ற இணையதளம் வைத்திருப்பதால், பெரிய நிறுவனம் எல்லாம் கிடையாது.
உங்களுக்கு அதிக கழிவு ( 20% - 30% என்று வைத்துக் கொள்வோம் ) கொடுத்துவிட்டு சாப்பாட்டு நான் என்ன செய்யலாம் என்று நீங்கள் சொல்லுங்கள்.
ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள்....
நான்
உங்கள் பணத்தை திருடவில்லை.
நீங்கள் எனக்கு பிச்சைப் போடவில்லை !
- வீ கேன் புக்ஸ்
No comments:
Post a Comment