1941.
இரண்டாம் உலகப் போர் பரப்பரப்பாக நடந்துக் கொண்டு இருந்த சமயம். நாலாகப் பக்கமும் ஜெர்மனியின் நாஜி கொடி வெற்றிக் கரமாக பரந்துக் கொண்டிருந்த நேரம். ஹிட்லர் சாதாரண மனிதரில்லை. நிஜமாகவே ஜெர்மனியை ரட்சிக்க வந்த தேவதூதன் என்று சொல்லும் அளவிற்கு வெற்றிகள் குவிந்தது அல்லது அதற்கான அறிகுறியாவது தெரிந்துக் கொண்டு இருந்தது.
ஹிட்லர் தளபதிகளுடன் யுத்தத்தை குறித்து ஆலோசனை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, ஒருவன் ஹிட்லரின் அனுமதிப் பெற்று உள்ளே வந்தார்.
“ஹெயில் ஹிட்லர்” என்று சொன்னப்பிற்கு தனது கையில் இருக்கும் காகிதத்தை ஹிட்லரிடம் கொடுத்தார். அதை திறந்து படிக்கும் போது ஹிட்லர் அதிர்ச்சியடைந்தார்.
அந்த செய்தி யுத்தத்தை குறித்து எதாவது இருக்கிறதா என்று ஹிட்லரின் தளபதிகள் கேட்டனர். ஆனால், அவர் அமைதியாக இருந்தார்.
சிறிது நேரம் கழித்து மௌனமாக தனது தளபதிகள், “ஜெர்மனியின் மன்னர் இரண்டாம் கெய்சர் காலமானார்” என்றார்.
ஹிட்லரோடு இருந்த தளபதிகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி என்பதை விட வியப்பாக இருந்தது. அதற்கு காரணம்…. கெய்சரின் மரணச் செய்தி அல்ல… ஹிட்லரின் நடவடிக்கை.
இறந்துப் போன கெய்சருக்கு 81 வயது இருக்கும். முதல் உலகப் போர் முடிந்ததும், ஜெர்மனி முழுவதுமாக சரணந்து, பொருளாதாரத்தில் அதாளப்பாதத்தில் தள்ளி விட்டுவிட்டு நெதர்லாந்தில் குடிபெயர்ந்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் ஜெர்மன் மக்கள் பசியிலும், பஞ்சத்திலும் மாண்டுக் கொண்டு இருந்தனர். அந்த நிலையிலும், பிரான்ஸூக்கு முதல் உலகப்போரில் நஷ்ட ஈடுக் கொடுப்பதை பற்றி ஜெர்மனிக்கு ஆணை வந்துக் கொண்டு இருந்தது.
தன்னால் ஜெர்மனி பெரிய நஷ்டத்தை சந்தித்தது நினைத்து கெய்சர் கவலைப்படவில்லை. நெதர்லாந்தில் சந்தோஷமாக இருந்தார். எதோ ஹில்டர் தலைத்தூக்கிய பிறகு ஜெர்மனி வேகுண்டு எழுந்திருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.
முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் என்று சர்வக் காலமும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஹிட்லர் கெய்சர் மீது மரியாதை வைத்திருந்தார்.
“அவர் மன்னராக இருக்கும் போது அவர் படையில் இராணுவ வீரனாக இருந்திருக்கிறேன். சரணாகதியை எந்த மன்னரும் விரும்ப மாட்டார். ஜெர்மனி சரணடைய வேண்டும் என்று முடிவு எடுக்கும் போது அவர் மனம் எவ்வளவு பாடுப்பட்டிருக்கும். பல தலைமுறைகளாக ஆண்டவர்களுக்கு மனம் துவண்டுப் போய்யிருக்கும்” என்று ஹிட்லர் அவருக்காக வருந்தினார்.
ஹிட்லருக்கு யூதர்கள், கம்யூனிஸ்டுகள் மீது இருக்கும் கோபத்தில் பாதிக் கூட மன்னர் மீது இல்லை. இரக்கமும், அனுதாபம் மட்டுமே இருக்கிறது. யூதர்களின் சூழ்ச்சியால் தானே அவர் போரில் சரணடைய வேண்டியதாக இருந்தது. இல்லையென்றால், மன்னர் இறுதி வரைப் போராடிப்பார் என்று ஹிட்லரின் கருத்தாக இருந்தது.
அது மட்டுமில்லாமல், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள் யுத்தத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள். மன்னர் யுத்தத்தின் ஒவ்வொரு போக்கையும் தீர்மாணித்தவர்.
என்ன தான் இருந்தாலும், அவர் ஜெர்மனியில் மன்னர். ஜெர்மனியின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், நாகரிகத்திற்கும் மன்னரின் குடும்பம் அரும்பாடுப்பட்டிருக்கிறது. அதற்கு ஜெர்மனியியும், நாஜி வீரர்கள் என்றும் கடமைப்ப்பட்டிருக்கிறது.
ஜெர்மனியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றாலும், ஜெர்மனைப் பார்த்து பல நாடுகள் அஞ்சினாலும், பெரிய சர்வதிகாரியாக ஹிட்லர் திகழ்ந்தாலும்… அவரை தன் நாட்டின் மன்னராக தான் நினைத்தார்.
”இறந்த மன்னரின் கெய்சரின் உடலை ஜெர்மனுக்கு எடுத்து, தகுந்த அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்” என்று ஹிட்லர் கூறினார்.
”யுத்த வேலைகள் ஆயிரம் இருக்கிறது. எவ்வளவு இராணுவப் படை அனுப்ப வேண்டும், எங்கு என்ன ஆயுதம் அனுப்ப வேண்டும், திட்டங்கள் வகுக்க வேண்டும், தாக்குதல் பற்றி பேசியாக வேண்டும். இதைப் பற்றியெல்லாம் பேசுவதை விட்டு, சராசரி அரசியல்வாதிப் போல் ஓடிப்போன மன்னரை ஜெர்மனிக்கு எடுத்து வந்து அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறாரே. இது இப்போதைக்கு தேவையா. அவருக்காக ஹிட்லர் மரியாதை செலுத்தினாலும், அவர் மீது இருக்கும் விமர்சனம் மாறிவிடப் போகிறதா” என்பது ஹிட்லரின் தளபதிகள், வேலையாட்கள் நினைத்துக் கொண்டனர். ஒருவருக்கும் ஹிட்லர் முன் நின்று பேச தைரியமில்லை.
ஜெர்மனியில் முதல் உலகப் போரின் தோல்வியின் வஞ்சம் தான் இரண்டாம் உலகப் போர் என்று சொல்லி வந்த நிலையில், இரண்டாம் கெய்சர் மீது ஹிட்லருக்கு இருந்த மரியாதையை இதை காட்டுகிறது.
ஆனால், இரண்டாம் கெய்சர் ஜெர்மனிக்கு செல்வதை விரும்பவில்லை. ஜெர்மன் துருப்புகள் மீது வெறுப்பு கொண்டிருந்தார். எக்காரணத்திற்காகவும் தனது உடல் ஜெர்மனுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்று கூறியிருந்தார். அவரின் விருப்பப்படி அவர் இறந்தப் பிற்கு அவரது உடலை ஜெர்மனுக்கு அனுப்பப்பாமல் நெதர்லாந்திலேயே அடக்கம் செய்தனர். இருந்தாலும், நாஜிகள் அவருக்கு செலுத்த வேண்டிய இறுதி மரியாதையை செலுத்தினர்.
ஹிட்லர் ஜெர்மனியை பெரிய வல்லரசாக மாற்றப் போவதை பார்க்காமல் இரண்டாம் கெய்சர் இறந்துவிட்டார் என்ற வருத்ததை போக்க தான், அவரது உடலாவது ஜெர்மனியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதை அவர் விரும்பவில்லை என்ற வருத்தத்தை காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை இரண்டாம் உலக யுத்தம் அவரின் நேரத்தை எடுத்துக் கொண்டு இருந்தது.
முன்னாள் ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற ஒரு அரசியல் தலைவர் கண்ணீர் சிந்தி அழும் போது, நடிக்கத் தெரியாத மனிதர் என்று இணையதளம் புகழாரம் சூட்டினார்கள். அவர் நல்லவர் என்றால், பல வச்சரசு நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் போது தனது பழைய மன்னருக்கு இறுதி மரியாதைக் கொடுக்க நினைப்பது அதை விட பெரிய உயர்ந்த குணம்.
உதவியது :
Inside the Third Reich - Albert Speer
ஹிட்லர் : சொல்லப்படாத சரித்திரம் - முகில்
https://en.wikipedia.org/wiki/Wilhelm_II,_German_Emperor
7 comments:
இதை விட ஒரு அசிங்கமான பதிவை நான் படித்ததே இல்லை. பைத்தியக்கார கொலைகாரன் இட்லர் செய்த அநியாய அக்கிரமங்கள் பக்கத்தில் இன்றைய ISIS செய்யும் செயல்கள் 1/100 இருக்காது. சக மனிதர்களை பெருச்சாளிகளை விட கேவலமாக துன்புறுத்தி சாகடித்த மனித குல அவமானத்தின் சின்னமான இவனை இன்று நல்லவனாக சித்தரிக்க முயற்சிப்பது ஏதோ சந்தேகத்தை கிளப்புகிறது. ஒரு வேளை இவனது வரலாற்றை முழுமையாக படிக்காத நீங்கள் ஒரு முட்டாளா?
Thanks குகன்... pls write more... please make an collection such history...
@மாசிலா, everyone has own view on everything... don't force others to see on your eye... however Hitler is killer and destroyed one community, history proven that; here view about that his kind nature, such vegetarian; not even looked at other girls....
ஹிட்லர் பற்றி நமக்கு இருக்கும் பார்வை இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்றவர்களால் கொடுக்கப்பட்டது. அது அமெரிக்க-ரஷ்ய நாடுகள் தங்கள் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்டது. நாமும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது சர்வாதிகாரத்தனம். ஹிட்லருக்கு இருந்த இன்னொரு முகம் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இப்படியாவது குகன் போன்ற சிலர் எழுதட்டும்.
இட்லர் ஒரு வடிகட்டிய முட்டாள். இந்த முட்டாளின் பைத்தியக்கார நடத்தையால் பல் இலட்ச கணக்கான யூதர்கள் அநியாயமாக செத்தது மட்டுமல்லாமல் 2.உ. போரின் முடிவில் பல இலட்ச ஜெர்மனியர்களும் அநியாயமாக செத்து போனார்கள். தான் செய்த பெரும் தவறுகளுக்கு பொறுப்பேற்க தைரியமற்ற இந்த கோழை கடைசியில் அற்பத்தனமாக தற்கொலை செய்துகொண்டான். இந்த மாதிரியான பாதகன் இட்லருக்கு இன்று பூ சூடி ஆராதனை செய்யும் நீங்கள் நாளைக்கு ஸ்டாலின், மா ஓ, பின் லேடன் கூட நல்லவர்கள் என சொன்னாலும் சொல்லுவீர்கள்.
எனவே உங்களை போன்ற பொய் புரளிகளை பரப்பும் அரையணா பதிவர்களுக்கு சரியான சூடு கொடுத்து தக்க இடத்தில் அடக்கி வைக்க வேண்டியது எனது கடமை. இல்லை என்றால், வரலாற்றை மறைத்து திரித்து எழுதும் உம்மை போன்றவர்களின் புரட்டுகளை இளைய சமூகத்தினர் நம்பிவிடுவர்.
இட்லர் ஒரு வடிகட்டிய முட்டாள். இந்த முட்டாளின் பைத்தியக்கார நடத்தையால் பல் இலட்ச கணக்கான யூதர்கள் அநியாயமாக செத்தது மட்டுமல்லாமல் 2.உ. போரின் முடிவில் பல இலட்ச ஜெர்மனியர்களும் அநியாயமாக செத்து போனார்கள். தான் செய்த பெரும் தவறுகளுக்கு பொறுப்பேற்க தைரியமற்ற இந்த கோழை கடைசியில் அற்பத்தனமாக தற்கொலை செய்துகொண்டான். இந்த மாதிரியான பாதகன் இட்லருக்கு இன்று பூ சூடி ஆராதனை செய்யும் நீங்கள் நாளைக்கு ஸ்டாலின், மா ஓ, பின் லேடன் கூட நல்லவர்கள் என சொன்னாலும் சொல்லுவீர்கள்.
எனவே உங்களை போன்ற பொய் புரளிகளை பரப்பும் அரையணா பதிவர்களுக்கு சரியான சூடு கொடுத்து தக்க இடத்தில் அடக்கி வைக்க வேண்டியது எனது கடமை. இல்லை என்றால், வரலாற்றை மறைத்து திரித்து எழுதும் உம்மை போன்றவர்களின் புரட்டுகளை இளைய சமூகத்தினர் நம்பிவிடுவர்.
@மாசிலா
// இந்த மாதிரியான பாதகன் இட்லருக்கு இன்று பூ சூடி ஆராதனை செய்யும் நீங்கள் நாளைக்கு ஸ்டாலின், மா ஓ, பின் லேடன் கூட நல்லவர்கள் என சொன்னாலும் சொல்லுவீர்கள். // ஸ்டாலின், மா ஓ,பின் லேடன் நல்லவர்கள் என்று சொல்லும் ஆட்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ? எதோ ஒரு கொள்கையில் ஒழிந்துக் கொண்டு அவர்கள் இன்றும் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறார்கள்.
ஹிட்லரின் முதல் நான்கு ஆண்டு ஆட்சியை எடுத்துக் கொண்டால் யாரும் செய்யாத சாதனை. இறுதிக் காலக்கட்டத்தில் அவர் செய்த முட்டாள் தனத்தை வைத்து சாதனையை மறக்கடிக்க வேண்டும் என்பது தான் சோவியத் - அமெரிக்கா நாடுகளின் எண்ணம். ஹிட்லரின் தவறை நியாயப்படுத்த முடியாது. ஆனால், அவர் தவறு செய்தவர் என்று சொல்லும் நாடுகள் யாரும் குற்றமற்றவர்களில்லை.
இந்திய சுதந்திரத்திற்கு போராடிய நேதாஜி சந்திரபோஸ், பிரிட்டிஷாரின் பார்வையில் ஒரு தீவிர வாதி.
மணியாச்சி சம்பவத்தில் வெள்ளையனை கொன்றவர் தீவிரவாதி
தன இனத்தை, இனத்தவர்களின் நாடுகளை, பிரித்தாள நினைத்தவர்களை எதிர்க்க, முள்ளை முள்ளால் எடுக்க நினைத்த பின் லேடன் மேலை நாட்டவர்க்கு தீவிர வாதி
தன நாட்டில் உற்பத்திசெய்யும் பெற்றோலியத்தை வைத்து, அதன் தேவையின் வலிமையை வைத்து, உலகை ஆட்டி படைத்து விடுவாரோ என்ற பயத்தில், சதாமையும், அவரது நாட்டையும் சீரழித்த மேலைநாடுகள் சதாமையும் தீவிர வாதியாக தான் சித்தரித்தன.
பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொன்ற ஹிட்லர் கொடுமைக்காரன் என்றால்,
1948 இல் இருந்து தினமும், சிறுவர் முதியவர் பெண்கள் என்று பாராமல் தினமும் நூற்றுக்கணக்கானோரை இன்று வரை கொன்று ஒழிக்கும், மேலை நாட்டார் உருவாக்கிய இஸ்ரேலை என்ன வென்று சொல்ல ?
ஒவ்வொருவருடைய பார்வையும் வெவ்வேறு விதம், நண்பர் மாசிலா அவர்களே
காசுக்காக உலக நிகழ்வுகளை, அந்தந்த கால அரசுகளின் அடிப்பொடிகள் மாற்றி எழுதி, காலம் காலத்திற்கும் மனித இனத்திற்குள் ஒற்றுமை இன்மையை தூண்டி விட்ட, விடும் கபோதிகள் பலரிருக்கிறார்கள் !!!
Post a Comment