கலாய்க்கும் போது கோபம் வருவது இயற்கை தான். தவறில்லை. அந்த கோபத்திலும் கலாய்த்தவனை கடுப்பாகும் அளவிற்கு திருப்பி கலாய்க்க வேண்டும். இல்லையென்றால் அமைதியாக வலிக்காத மாதிரி இருந்துவிட வேண்டும்.
நம்மை கலாய்த்தவன் என்ன சொன்னானோ அதுவே திருப்பி சொல்வது முட்டாள் தனம். அதையும் பெருசா கலாய்ப்பதாக நினைத்து மொக்கை மாதிரி கலாய்ப்பது பெரிய காமெடியில் முடியும்.
பதில் விளம்பரப் போஸ்டர் அப்படி தான் இருக்கிறது.
திருவாரூர் எம்.எல்.ஏ. தொகுதி பக்கம் வராமல் இருப்பதும், முதல்வர் தன் மக்களை பார்க்காமல் இருப்பதும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?
சட்டசபை எப்போதும் ஆளும் கட்சியால் மட்டுமே நடத்தப்படுகிறது. எந்தக் காலத்தில் எதிர்கட்சியினர் சட்டசபைக்கு வருகிறார்கள்?
தி.மு.க ஸ்லோகன் பயன்படுத்தி அ.தி.மு.கவின் ஸ்லோகன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கோகனையாவது சொந்தமாக சொல்லியிருக்கலாம். அல்லது எதிரியின் ஸ்லோகத்தை காப்பியடிக்காமல் இருந்திருக்கலாம்.
பால்குடம் தூக்குபவர்களையும், ஸ்டிக்கர் ஒட்டிபவர்களையும், தண்ணீரில் பிராத்தனை செய்பவர்களையும் நம்பினால் வேளைக்காவாது.
பேசாமல் மோடியை ப்ரோமொட் செய்த மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் அ.தி.மு.க மேலிடம் டை-அப் வைத்து கொள்வது நல்லது. இல்லையென்றால் இந்த தேர்தல் முழுக்க மொக்கை மாதிரி போஸ்டர் அடித்து மொக்கை வாங்கிக் கொண்டு இருப்பார்கள்.
குறிப்பு : தி.மு.கவும் தேவையில்லாமல் 18 கோடி செலவு செய்திருக்கிறது. அதற்கு பதிலாக சௌந்தர்ய பாண்டியனை கதாநாயகனாக வைத்து ஐந்து படம் தயாரிக்கிறோம் என்று சொல்லி விஜய்காந்துடன் கூட்டனி பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம்.
No comments:
Post a Comment