வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, July 30, 2009

LIC பாலிஸி போட்டுவது... சமூக சேவை !



என் வலது பக்கம் இருக்கும் 'LIC' விளம்பரத்தை பார்த்து "எந்த ஆஸ்ரமத்துக்கு பணம் தருவீங்க" என்று ஒரு நண்பர் கேட்டார். கண்டிப்பாக ஆன்மீக ஆஸ்ரமத்திற்கு கிடையாது என்றேன். யாருக்கு உண்மையாக பணத்தேவை இருக்கிறதோ அவர்களுக்கு உதவ வேண்டும். அவ்வளவு தான். அதற்கு நன்கொடையாக வாங்கமால் 'LIC' பாலிஸி பிடித்து அதன் மூலம் வரும் வருமானத்தை மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும்.

தனி 'Widget' போடும் போதே இதற்கு தனியாக பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு இப்போது தான் நேரம் கிடைத்தது.

'LIC' பாலிஸி கமிஷனை நம்பி என் குடும்பம் இல்லை. என் குடும்பத்திற்கு என் ஒருவன் சம்பளம் மட்டும் போதும் என்ற 'Disclaimer' போட்டு தொடங்குகிறேன்.

எஸ்.ராமகிருஷணன் எழுதிய 'துணையெழுத்து' படித்தவர்கள் மனதில், அதில் வரும் வாட்ச்மென் என்றைக்கும் வாழ்வான். தன் சம்பளத்தை ஒரு பகுதியை மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவனின் நல்ல எண்ணத்தை காட்டும். எவ்வளவு சம்பளம் வாங்கியும் என் தேவை பூர்த்தி செய்யமுடியவில்லை என்று நினைத்தவர்களை அந்த வாட்ச்மென் வெட்கப்பட வைத்திருப்பார். அந்த எண்ணம் எனக்கு ஏன் இல்லை என்று என்னையே பல முறை கேட்டுக் கொண்டேன்.

என் குடும்ப சூழ்நிலை என் வருமானத்தை ஒரு பகுதியை ஒதுக்க முடியாது. ஆனால், கூடுதல் வருமானம் சம்பாதிக்க முடியும். அதில் வரும் வருமானத்தில் நாலும் பேருக்கு உதவ முடியும். நாலு பேருக்கு உதவுவதற்கு பணம் கேட்பதற்கு பதிலாக, பாலிஸி கேட்பது கொஞ்சம் வித்தியாசமான முயற்சியாக தெரிந்தது. அது மட்டுமில்லாமல் இரு தரப்பினருக்கும் பயன் பெறுவர். பாலிஸி எடுத்தவருக்கு அயூல் காப்பீடும், அதில் வந்த வருமானம் மற்றவருக்கு உதவியும் செய்ய முடிகிறது.

LIC முகவராக LICக்கு விளம்பரம் தேடி தரவில்லை. அரசாங்க அயூள் காப்பீடு என்பதால் பணம் போட்டவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும். எந்த வித சிக்கலும் இருக்காது.

எந்த ஆஸ்ரமத்துக்கு நன்கொடை கொடுத்திருக்கிறோம் என்ற விபரத்தை பாலிஸி போட்ட ஒரு மாதத்தில் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

உதவ முடிந்தவர்கள் உதவுங்கள். நீங்கள் நாலு பேருக்கு உதவ நினைத்தால் இதை யோசனையாக எடுத்துக் கொண்டு செயல் படுத்துங்கள்.

ஏதாவது செய்யனும் பாஸ்...!!!

Wednesday, July 29, 2009

கவிஞர் கண்ணதாசன்



எழுத்தாளனுக்கு இருக்கும்
வறுமை சாபத்தை போக்கிய
முதல் கவிஞன் !
தன் பழக்கத்தால்
வறுமை கோட்டை தொட்ட
சராசரி மனிதன் !

படித்த படிப்பு
இவர் கவிதைக்கு தடைப்போடவில்லை
படிக்கும் கவிஞர்களுக்கு
புத்தகமாக இருந்தவர் !

நாத்திகனாய் தொடங்கி
ஆத்திகனாய் வாழ்ந்தவர் !
காதலை அனுபவித்து
அதை தூற்றவும் செய்தவர் !

பாட தெரியாதவர்களையும் பாட வைத்தவர் !
பாட்டாலே தனக்கு மரணமில்லை
என்று கர்வமாக கூறியவர் !
தன் ஒவ்வொரு பாடலிலும்
உயிருடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர் !

எல்லா தரப்பு மனிதனாக வாழ்ந்து காட்டியவர் !
தான் வாழ்ந்த மனநிலையை
தன் எழுத்துக்களால் உணர்வை பதிவு செய்தவர் !

இவர் போல் வாழ்க்கையை ரசித்தவர் யாருமில்லை
இவர் போல் வாழ்க்கையில் இழந்தவரும் யாருமில்லை !

Tuesday, July 28, 2009

குழந்தை சொன்ன நகைச்சுவை கதை



எதிர் நாட்டு படையெடுப்பில் மன்னர் செய்வதறியாமல் இருந்தார். எதிரியின் படைகள் 2000 பேர்கள். தன்னிடம் இருப்பதும் வேறும் 500 மட்டும் தான். எதிரி முற்றுகையிட்டால் எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் குழம்பி போய் இருந்தார். அப்போது அவர் குழப்பத்தை தீர்க்க ஒரு முனிவர் வந்தார்.

மன்னர் தன் நிலைமையை முனிவரிடம் சொன்னர். அதற்கு, முனிவர் " படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுங்கள்" என்கிறார். மன்னர் வியப்பாக முனிவரை பார்த்தார். போர் வர போகிறது. யுத்த திட்டங்கள் வகுத்தாக வேண்டும். இவர் என்னவென்றால் தன் படை வீரர்களுக்கு "விளக்கெண்ணெய் கொடுக்க சொல்கிறாரே !" என்று குழம்பினார்.

எப்படியும் 2000 பேர் கொண்ட படை வீரர்களை சமாளிப்பது கடினம். முனிவர் சொல்லுவதை செய்து பார்ப்போம் என்று தன் படை வீரர்களுக்கு விளக்கெண்ணெய் கொடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் விளக்கெண்ணெய் குடித்த படை வீரர்கள் பத்து பத்து பேராக கழிவறை சென்று வந்தனர். இதை பார்த்த மன்னருக்கு பயம் மேலும் அதிகரித்தது.

எதிரி படை வந்து விட்டதாக மன்னருக்கு செய்தி வருகிறது. எதிரி நாட்டு மன்னரிடம் ஒரு தூதுவன் சமாதானம் பேச அனுப்பியிருந்தான். மன்னருக்கு ஒரு ஆச்சரியம். சண்டைக்கு என்று வந்தவன் எப்படி சமாதானம் பேச ஆள் அனுப்புகிறான் புரியாமல் குழம்பி நின்றான். அப்போது தூதுவன் " ஒற்றன் மூலம் உங்கள் படை பலத்தை பார்த்தோம். பத்து பத்து பேராக உள்ளேவும் வெளியே வருவதை நோட்டம் விட்டோம். உங்கள் படைபலம் 5000 பேர் என்று தெரிந்த பிறகு தான் சமாதானம் பேச வந்திருக்கிறோம்" என்றான்.

மன்னை புக்கையுடன் சமாதானம் பேசினார்.

"அன்றிலிருந்து விளக்கெண்ணெய் குடித்தால் எல்லா பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது." - இப்படி ஒரு கதை சொன்னது பகுத்தறிவாளரோ அல்லது எழுத்தாளரோ இல்லை. ஐந்தாவது படிக்கும் சிறுவன்.

குழந்தை எழுத்தாளர் பற்றி நடந்த பயிற்சி பட்டறை முனைவர். நடராஜன் அவர்கள் சொன்ன தகவல். குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நகைச்சுவை திறன் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொன்ன கதை இது.

Monday, July 27, 2009

மதி வரைந்த 'அடடே - 2'


"இல்லாததை ஈடுசெய்ய மனிதனுக்குக் கிடைத்துள்ளது கற்பனை வளம்; இருப்பதை சகித்துக் கொள்ள கிடைத்துள்ளதுய் நகைச்சுவை"

-ஆஸ்கார் வைல்ட்


பொதுவாக சித்திர புத்தங்கள் என்றால் குழந்தைகளை மனதில் வைத்து தான் வரைவார்கள். அவர்களை கவர்வதை தான் புத்தக வடிவமும் இருக்கும். வயது ஆக ஆக சித்திரம் வரைவது பலருக்கு தூரமான விஷயமாக மாறிவிடுகிறது. Botany, Zoology படிப்பவர்கள் மதிபெண்களுக்காவது வரை வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மற்றப்படி வளர்ந்த பிறகு சித்திரத்தை ரசிக்கும் மனம் வருவதில்லை.

எத்தனை வயதானாலும் நாளிதழில் கேலிகை சித்திரத்தை ( அதாங்க...Cartoon) பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அரசியல், விளையாட்டு, சட்டம் எதுவாக இருந்தாலும் பார்ப்பவனுக்கு குறுநகை வர வைப்பது போல் சித்திரம் இருக்கும். இப்படி கேலி சித்திரத்தில் தமிழில் நமக்கு மிகவும் பிரபலமானவர் ஒருவர் 'மதன்' அவர்கள். இப்போது அவர் எழுத்தாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். மற்றவர் 'மதி' அவர்கள்.

மதி 'தினமணி'யில் வரைந்த முதல் பக்க பாக்கெட் கார்ட்டூன்களை ஆறு நூல்களாக தொகுத்துள்ளார். இதில் இரண்டாவது தொகுப்பு நூல் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மனுஷன் ஒவ்வொரு சமூக நிகழ்வுகளை நையாண்டி செய்திருக்கிறார். யாரை நையாண்டி செய்திருக்கிறாரோ அவர்களே சிரிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சில சாம்பிள்.

தி.மு.க ஆட்சி விலகல் பற்றி...

" இப்படி அநியாயமா அமைச்சர் பதவியும் போச்சே ! கட்சி மட்டும் கூட்டனிலேருந்து விலகினா போதாதா, எதுக்கு அமைச்சர்களும் விலகணும் ?"


" பார்த்தீங்களா டாக்டர், இதுக்காகதான் வரச் சொன்னேன் ! இன்னும் பிர்சார ஞாபகத்துலேயே இருக்கார் !"


டாக்டர் காலில் விழும் தன் அரசியர்வாதி கணவனை கவலைப்படும் மனைவி புலம்பல்.

என்னங்க, மோசம் போய்ட்டோம் ! செய்கூலி இல்லை... சேதாரம்ம் இல்லை... கற்களுக்கு விலை இல்லைன்னு நாம் வாங்கின நகை தங்கமே இல்லையாம் !"

குறிப்பாக காங்கிரஸ்யை அணியாயத்துக்கு கலாய்த்திருக்கிறார்.

" ஏதோ வெகுகாலத்திற்குப் பிறகு தனித்துப் போட்டியிடுகிறோம் ! மீண்டும் அடுத்த தேர்தலில் 'அ.தி.மு.க' அல்லது 'தி.மு.க' கூட்டணிக்கே செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையை எங்களுக்கு எற்படுத்திவிடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம் !"

தேர்தல் சமயத்தில் கை ரேகை யோசிக்காரனை ப்ளாட்பாரத்தில் இருந்து போலீஸ் விரட்டுவது போல் சித்திரம் என்று பல சித்திரங்களை இதில் குறிப்பிடலாம். நல்ல புத்தகங்களே விற்பனையாகமல் இருக்கும் போது இதுபோல் சித்திர புத்தகங்களை நூலாக வெளியிட்டுயிருக்கும் கிழக்கு பதிப்பகத்தின் சோதனை முயற்சியை பாராட்ட வேண்டும்.

Thursday, July 23, 2009

நினைவில் நின்ற நண்பர்களுக்கு...



நாம் எதிர்பார்க்கவில்லை
சந்திப்போம் என்று !
நாம் எதிர்பார்க்கிறோம்
பிரியப்போகிறோம் என்று !
நான் எதிர்பார்க்கிறேன்
என்னை மறக்கமாட்டீர்கள் என்று !

தலைமுடி நரைத்தப் பிறகு
தலைமுறை ஒன்று கடந்த பிறகு
என்றோ ஒரு நாள் சந்தித்தால்...

நன்றாய் பழகினோம் என்று
நாம் பேசிய வார்த்தைகள்
நினைவில் இருந்தால்...
அன்று கூறுவோம்
நம் நட்பு கடல் என்று !

எங்கள் நினைவுகளை
நெஞ்சில் பதித்துவிட்டேன்
என் கையெப்பப் புத்தகத்தில்
கையெழுத்து இடுங்கள் !

உங்கள் முகங்களை
நினைவில் நிருத்திக் கொண்டேன்
இருப்பினும் உங்கள்
புகைப்படங்கள் தாருங்கள் !

காலம் நினைத்தால் மீண்டும் சந்திப்போம்
சரித்திரம் படைத்தவர்களாக !
நீங்கள் சரித்திரம் படைக்க
என் வாழ்த்துக்கள் !!

( கல்லூரி பிரிவு உபசாரத்தின் போது சொன்ன கவிதை )

Wednesday, July 22, 2009

என்னை எனக்கே காட்டிய 'நாடோடிகள்' படம் !



பலர் இந்த படத்தை எனக்கு வேலை வைக்காமல் அதிகமானவே விமர்சித்துவிட்டார்கள். இந்த படத்தை பற்றி என் கருத்தை மட்டும் பதிவு செய்கிறேன்.

பள்ளியில் படிக்கும் போது பெரும்பாலானவர்கள் வீட்டில் போன் இருப்பதே பெரிய விஷயம்.நண்பன் தன் காதலியிடம் பேச என் வீட்டு போன்னை பயன்படுத்திக் கொள்வான். நானும் காதலுக்கு உதவுகிறோம் என்று பெருமையாக நினைத்துக் கொண்டேன். ஆனால், +2 முடியும் போது இருவரும் சண்டை போட்டு பிரிந்து விட்டார்கள். நான் என் நண்பனுக்கு அறிவுரை கூறியும் அவன் ஈகோ அந்த பெண்ணிடம் பேசவிடமால் செய்தது. கடைசியில், என் வீட்டு டெலிபோன் பில் அதிகமானது தான் மிச்சம்.

'இந்தியா - சுதந்திரம் 50' என்ற தலைப்பில் நண்பனின் காதலி பள்ளியில் கட்டுரை போட்டி வைத்தார்கள். என் இன்னொரு நண்பன் அவளுக்காக கட்டுரை எழுதி தர சொன்னான். அப்போது அவன் அந்த பெண்ணிடம் தன் காதலை சொல்லவில்லை. நான் என் நண்பனுக்காக கட்டுரை எழுதி கொடுத்தேன். அவனும் தான் எழுதியதாக சொல்லி அந்த பெண்ணிடம் கட்டுரையை கொடுத்தான். கட்டுரை போட்டியில் அந்த பெண் மூன்றாவது பரிசு வென்றாள். அதன் பிறகு அவன் தன் காதலை சொல்லின்னான். அந்த பெண்ணும் ஏற்றுக் கிடைத்தது. ஒரு நல்ல காதலுக்கு என் கட்டுரை உதவியதை பெருமையாக நினைத்துக் கொண்டேன். மூன்று வருடம் கலித்து அவனை ஒரு கடையில் வேறு ஒரு பெண்ணோடு பார்த்தேன்.

பள்ளி, கல்லூரி படிக்கும் காலத்தில் காதலுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் நண்பர்களை 'மாமா'வாக்கிய நண்பனின் கதை தான் நாடோடிகள். இந்த பலர் பல விதமாதமான விமர்சணத்தை முன் வைத்திருக்கிறார்கள். நண்பன் சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட், தங்கையை நண்பன் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளும் அண்ணன், அப்பாவுக்காக காதலை விட்டுக் கொடுக்கும் மகன் என்று இரண்டாவது பாதியில் பாசப்போராட்டதை காட்டியிருக்கிறார்கள். உதவி செய்த நண்பன் பேசாமல் உதாசிணம் செய்யும் போது ஏற்படும் வலியை அழகாக செதுக்கியிருக்கிறார்கள்.

நண்பர்களை பைத்தியக்காரர்களாக நினைக்கும் காதலர்களை மிரட்டியாவது ஒன்றாக சேர்த்து வாழ வைக்க வேண்டும் என்பதை இந்த படம் காட்டுகிறது. 'வழி தவறாக இருந்தாலும், போற இடம் கோயில் என்பதால்' தவறாக தெரியவில்லை.

பல நண்பர்கள் மனதில் ஒளிந்து இருக்கும் கோபத்தை சசிகுமார், சமுத்திரகனி வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.....!!

அப்பா, அம்மாவுக்காக இல்லாவிட்டாலும் சேர்த்து வைத்த நண்பர்களுக்காவது காதலர்கள் சேர்ந்து வாழ நினைத்தால் அதுவே இந்த படத்தின் உண்மையான வெற்றி !

Sunday, July 19, 2009

மொழியற்றவள்

விடுயற்காலை 5.45 மணி. சூரியன் கொஞ்சமாய் எட்டி பார்க்கும் வேளை. ஆட்டோவில் இருந்து அவசரமாக இறங்கினான் தியாகு.

"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... பெங்களூர் வரை செல்லும் சகாப்தி எக்ஸ்பர்ஸ் இன்னும் பத்து நிமிடத்தில் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் இருந்து புரப்படும்" என்று சென்ட்ரல் ரயில் அறிவிப்பை கேட்டதும் விரைந்தான்.

தன் பெட்டியை தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக பல பேரை இடித்துக் கொண்டு இரண்டாம் ப்ளாட்பாரத்திற்க்கு ஒடினான். இடித்தவர்களிடம் 'மன்னிப்பு' கேட்க கூட தியாகுவுக்கு நேரமில்லை. இடிப்பட்டவர்கள் திட்டியதை காதில் கேட்காதவாரு விரைந்து கொண்டு இருந்தான்.



வேகமாக ஒடிவந்ததில் இரண்டு நிமிடம் முன்னதாகே வந்தடைந்தான். தன் இறுக்கையை பார்த்து அமர்வதற்கும், ட்ரெயின் எடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தன் டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு ரயில் பெட்டி 'C4'ஐ தேடினான்.

'C1...C2...C3........C4'

"அப்பாடா வந்தாச்சு" என்று உள்ளூர நினைத்துக் கொண்டு பெட்டிக்குள் எறினான்.

ரயில் பெட்டி முழுக்க ஏ.சி. இடது பக்கம் மூன்று பேரும், வலது பக்கம் இரண்டு பேரும் அமர சீட்டு வரிசையாக இருந்தது. வலது பக்கம் இருந்த தனது சீட் எண்.19 நெருங்கும் போது பக்கத்து சீட்டில் ஒரு பெண் குழுந்தையோடு இருப்பதை பார்த்தான். அவள் பார்க்க வட இந்திய பெண் போல் தெரிந்தாள். தன் பெட்டியை மேலே வைத்து விட்டு, ஒரு புத்தகத்தை எடுத்து படித்தான்.

என் முன் இறுக்கையில் இருந்து ஒரு பாட்டியிடம் இந்தியில் ஏதோ பேசினாள். தியாகுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்த வட இந்திய பெண் எழுந்தாள். தியாகு எழுந்து அவளுக்கு வழி விட்டான். அந்த பெண் முன் இறுக்கையில் பாட்டி பக்கத்தில் அமர்ந்தாள். கை குழந்தையோடு ஒரு ஆடவர் பக்கத்தில் அமர அவளுக்கு பல சங்கடங்கள் இருப்பதை தியாகுவால் உணர முடிந்தது. அந்த பெண் செல்ல, பாட்டி பக்கத்தில் அமர்ந்து இருந்த பதினாறு வயது தக்க ஒரு யூவதி எழுந்து தியாகு பக்கத்தில் அமர்ந்தாள். அவள் சற்று நடுங்கிய படி தான் தியாகு சீட்டுக்கு வந்தாள். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்பது அவள் கண்கள் காட்டிக்கொடுத்தது.

ட்ரெயின் புறப்பட்டு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆணும், பெண்ணும் தியாகு முன் பக்கத்தில் இருந்த பாட்டியிடன் காலை வணங்கி சிரித்து பேசினார்கள். பார்க்க இருவரும் புதிதாக திருமணமானவர்கள் போல் இருந்தனர். தங்களை சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் பாட்டி காலை தொட்டு வணங்க அவர்கள் யோசிக்கவில்லை. ஒருவருக்கு மரியாதை கொடுக்க இடம் அவர்களுக்கு தடையாக தெரியவில்லை. அந்த தம்பதியர்கள் இருவரும் பாட்டியின் இடது பக்கத்து இறுக்கையில் அமர்ந்து, கை குழந்தை வைத்திருக்கும் பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். அந்த ஆண் தன் பக்கத்தில் அமர்வான் என்று தியாகு எதிர்பார்த்தான். அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

தியாகு புத்தகத்தை படித்துக் கொண்டு தூங்கிவிட்டான். அப்போது தான் அவனுக்கு தூங்கியது போல் இருந்தது, அதற்குள் ஒருவர் அவனை எழுப்பி காலை சிற்றூண்டி கொடுத்தார். சிற்றூண்டியை தன் கையில் வாங்கிக் கொண்டு தன் கடிகாரத்தை பார்த்தான். கடிகாரம் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. தன் பக்கத்து இறுக்கையில் இருக்கு யூவதி குழந்தைக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தாள். அந்த குழந்தையிடம் சிரித்து பேசி சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அந்த புதுமண தம்பதியர்கள் முன்பே சாப்பிட்டு முடித்திருந்தனர். புது தம்பதியர்களுக்கு அந்த யூவதியிடம் இருந்து குழந்தையை வாங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் குழந்தையின் அம்மா சாப்பிட்ட பிறகு ஒரு பால்பூட்டியை யூவதியிடம் கொடுத்தாள்.

பசி முகத்துடன் அந்த யூவதி பால்புட்டி கழுவ எடுத்து சென்றாள். கழுவிய புட்டியை குழந்தையின் அம்மாவிடம் கொடுத்த போது சரியாக கழுவாததிற்கு திட்டினாள். அப்போது தான் தியாகுவுக்கு தெரிந்தது அந்த யூவதி வேலை செய்யும் வேலைக்கார பெண் என்று !

இவர்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் ஒரு ஆடவன் பக்கத்தில் அமர ஏற்றுக் கொண்டு இருப்பார்களா ? எல்லோரும் சாப்பிடும் போது அவளை மட்டும் குழந்தையை பார்க்க சொல்லியிருப்பார்களா ? சின்ன விஷயத்துக்கு எல்லோருமுன் திட்டுவார்களா ? என்று பல கேள்விகளை தியாகு தன் மனதில் நினைத்துக் கொண்டான்.

பெங்களூர் வந்ததும் மேலே இருக்கும் அவன் பெட்டியை எடுக்கும் போது தெரியாமல் அவன் கை யூவதி மேல் படுகிறது. அச்சத்தில் நடுங்கினாள். இவ்வளவு நேரம் அவள் உள்ளூர நடுங்கி அமர்ந்ததை அந்த நொடியில் தியாகுவுக்கு தெரிந்தது. ரயிலில் இருந்து இறங்கியதும் பரிதாபமாக அந்த யூவதியை பார்த்தான். குழந்தையும், குழந்தையின் பையையும் சமந்துக் கொண்டு அந்த யூவதி சென்றாள். குழந்தை பெற்ற தாய் எந்த சுமையும் இல்லாமல் தன் பாட்டியுடனும், புதுமண தம்பதியர்களுடனும் பேசிக் கொண்டு நடந்தாள்.

Thursday, July 16, 2009

எஸ்.ராமகிருஷ்ணனும், இரண்டு சிறுகதை நூல்களும்

மனுஷன் கட்டுரையில் கொள்ளுரார்னா சிறுகதையிலும் மனதை கசிய வைக்கிறார். சமிபத்தில் அவருடைய இரண்டு சிறுகதை நூலை படிக்கும் நேரம் கிடைத்தது.

பால்ய நதி

முதல் கதை " கானகப்புலியின் மனைவி". கதையை படித்து முடித்த பிறகு மாயாஜால கதைகள் அடங்கிய தொகுப்பாக இருக்குமோ என்று நினைத்தேன். அடுத்த கதையான " ஒளியை வாசிக்கின்றவன்" கதையில் பழைய டாக்கிஸ்ல் வேலை செய்த 'டாக்கி' வேலையை நினைவு படுத்தும் கதையாக எழுதியிருக்கிறார்.

"மினர்வா சலூன்" - ரங்கூன் புலம் பெயர்ந்த தமிழனின் கதை என்று நினைத்தால், கிரைம் கதையாக முடிகிறது.

'இரு குரல்' - எதோ தற்கால கதை நிகழு என்று வாசித்தால், கடைசியில் கண்ணகி கதை என்று முடித்திருக்கிறார். ஒவ்வொரு கதையின் முடிவை யூகிக்க முடியாமல் இருந்தால் பரவாயில்லை. இவர் காலத்தையே யூகிக்க முடிக்காமல் இறுதியில் அந்த முடிச்சை அவிழ்ப்பது மிகவும் அருமை.

எஸ்.ராமகிருஷ்ணின் ஐந்தாவது சிறுகதை தொகுப்பு இது !

விலை.60. பக்கங்கள் : 120, உயிர்மை பதிப்பகம்.


நடந்து செல்லும் நீருற்று



‘பிழை திருத்துபவடின் மனைவி’ நிலைமை சொல்லி முதல் கதையிலே நம்மை நெகிழவைக்கிறார். பிழை திருத்துபவரின் மனைவி நிலைமையே இப்படி என்றால் எழுத்தாளரின் மனைவி நிலைமை பற்றி யோசிக்க கூட முடியவில்லை. 'சேர்ந்திசைப்பவர்கள்' கதையில் சத்பாலை இசை குழு பெயரில் மௌனத்தை இசையாக உணர வைத்திருக்கிறார்.

'பனாரஸ்' திகிலான கதை.

'பதினைந்து வயதில் ஒருவன்' கதையில் ஆத்தியப்பன் கதாபாத்திரம் மூலம் நம் பாலியத்தை கொஞ்சம் எட்டிபார்க்க வைத்திருக்கிறார்.

'ஒரு நகரம், சில பகல்கனவுகள்' கதை ஆங்கிலத்தில் வந்த vantage point படத்தை ஞாபகம் படுத்துகிறது. ஏற தாழ நம் 'ஆயுத எழுத்து' படம் போல தான். இருந்தாலும் 'பயோனியர் லாட்ஜ்' வரலாற்று சுருக்கம் மிகவும் அருமை.

அதிக வர்ணனைகளும், சம்பாஷைகளும் கதையை ஒரே இடத்தில் இருப்பது போல பிம்பத்தை தோற்றுவிக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணின் ஆறாவது சிறுகதை தொகுப்பு இது !

விலை.70. பக்.120, உயிர்மை பதிப்பகம்.

சிறுகதை பெயரில் ஏன் கதையை இவ்வளவு பெரிதாக எழுதுகிறார் என்ற சந்தேகம் மட்டும் இருந்துக் கொண்டே இருக்கிறது.

ஒரு வேளை இதை தான் பின் நவீனத்துவம் சொல்லுறாங்களோ...!

Wednesday, July 15, 2009

கணினி தேவதை

தந்தையின் கட்டாயத்திற்காக தான் கணினி கற்கும் இடத்திற்கு வந்தேன். கணினி வகுப்பு வரும் போது மனதில் எத்தனை முறை வெடித்துக் கொண்டேன் தெரியுமா..... தேவதை நீ அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நான் அங்கு சேர்ந்ததற்கு அர்த்தம் பிறந்தது.

கணினி கற்க வந்த எனக்கு கன்னி மனதை கற்க ஆவல் வந்தது. கன்னி மனதை படிப்பதற்கு உலகத்திலே இதற்கு மட்டும் தான் எந்த கல்லூரிகளும் இல்லை, பல்கலைக்கழகங்களும் இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் கற்கிறார்கள். எந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் வருந்தாத இளைஞர் படைகள் இதற்கு மட்டும் வருந்தும்.

ஐய்யோ...தோல்வியா ... இதில் மட்டும் தோல்வியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எதிலும் தோற்றாலும் அடுத்த முயற்சியில் வென்று விடலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்..... காதலில் அடுத்த முயற்சி என்பது வெறோரு பெண்ணாகத் தான் இருக்கும்.... அவளை மறந்து வேறொரு பெண்ணா...? அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை....

பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தால் காதலிக்க வேறொரு பெண்ணை தேடலாம். தேவதை காதலித்து தோற்றவன் வேறோரு தேவதையை எங்கு போய் தேடுவது. கிளியோபட்ரா அழகில் கூட மூக்கு நீளம் என்ற குறை உண்டு. உன் அழகில் நிறைகள் மட்டுமே உள்ளன. எனக்கு தெரிந்து இந்த மண்ணில் இருப்பது ஒரு தேவதை .... அதுவும் அவள் மட்டும் தான்.... இதில் தோல்வியே இருக்க கூடாது... தோற்றாலும் என் மரணத்திலே தான் முடிய வேண்டும்.



நீ தீண்டுவதற்கு அந்த Keyboard என்ன தவம் செய்ததோ.... உன் விரல் நுணி படுவதற்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்துக் கூட தமிழ் கற்குமடி.... உன்னிடம் பேசுவதற்காக... தமிழை வளர்க்க சங்கங்கள் தேவையில்லை. உன்னை போல் தேவதை போதும் தமிழ் வளர்ந்து விடும். உன்னால் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள்..... உலகம் முழக்க தமிழ் பறப்புவதற்கு உன்னை போன்ற தேவதைகளே மண்ணில் பிறக்க வேண்டும்.

வீட்டில் எலி என்றால் அஞ்சுவாய் என்று சொன்னாவளே.... ஆனால் கணினிப்பொறி முன் எலியைத் (Mouse) தான் பிடித்துக் கொண்டு இருக்கிறாய். உன்னை பயமுட்டிய எலி, பல்லி, பூச்சிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும்.... உன்னை பய முட்டியதற்காக ! அவைகள் எல்லாம் உன்னை தரிசிக்க வந்தது என்று உனக்கு புரியவில்லையா... எலி, பூச்சிகளுக்கு வாயில்லை உண்மையை சொல்வதற்கு.... அதற்கு வாய் இருந்தால் அது கூட உன்னை பற்றி கவிதை பாடும்...
இந்த கணினி கூட ஐந்து நிமிடத்தில் பதில் அளிக்கும். ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளை விடுவது தான் என்னை பாதிக்கும். Sherlock நாவலில் கூட அடுத்தது என்ன நடக்கும் என்று கனித்து விடலாம். நீ அடுத்தது என்ன பேசுவாய் என்று கனிப்பதே மிகவும் கடினம். கணினி இயங்கும் வேகம் தெரியும். ஆனால், உன் இதயம் இயங்கும் வேகத்தை அறிய கணினிக் கூட தோற்கும்.

உன் அறிமுகம் கிடைத்தற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால்..... நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன். நீ எனக்கு கிடைத்த பிறகு மற்றவர் பொறாமை என்னை என்ன செய்யும்.

மானிடனாய் பிறத்தல் அறிது என்ற வாக்கியம் உண்மை என்று இன்று தான் புரிந்துக் கொண்டேன். இந்த பல்லி, எலிகளுக்கு இல்லாத பாக்கியம் எனக்கு கிடைத்தே.....!
பெண்ணைப்பார்த்தால் காதல் கவிதை தான் வரும்.... தேவதை உன்னை பார்த்தால் காதல் காவியமே வரும். உன்னை பார்த்த இக்கணம் தோன்றிய கவிதை இது...

246 தமிழ் எழுத்துக்கள் வாடுது....
'நீ' என்ற எழுத்து மட்டும்
புன்னகை சிந்தியது...
உன் பெயரை விட அதிகம்
உன்னிடம் உச்சரிப்பவர்கள்
அந்த எழுத்தை தானே ...

கவிதை எழுத கற்று தந்த உன் அழகு.... கொடுக்க தைரியத்திற்கும் தடைப் போட்டது. தடைகள் எல்லாம் தகர்க்கும் வரை உன்னை வர்ணிக்கும் என் கவிப்பணி தொடரும்.....

Tuesday, July 14, 2009

தேக்வாண்டோ

விளையாட்டுத்துறையில் முன்னேறி வரும் வீரர்களில் மிக முக்கியமானவர் இருபது வயதான தேக்வாண்டோ வீரர் 'ராம்போ' ரவி. தேசிய அளவில் நடந்த 'தேக்வாண்டோ' போட்டியில் தமிழ சார்பில் தங்கப்பதக்கம் வென்றவர். சமிபத்தில் 'தின சூரியன்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி.

வணக்கம் திரு.ரவி ! தமிழக சாற்பில தங்கப்பதக்கம் வாங்கின உங்களுக்கு... தேக்வாண்டோ மேல எப்படி இவ்வளவு ஆர்வம் வந்தது ?

என் பிரெண்ட்ஸ் நிறைய பேரு கிரிக்கெட், டென்னிஸ்னு அதில ஆர்வமா விளையாடுனாங்க. எனக்கு யாரும் ஆர்வம் செலுத்தாத விளையாட்ட விளையாடி என் மூலம் அந்த விளையாட்ட தமிழ் நாட்டுல நிறைய வேரு விளையாடனும். அதான் என் ஆசை. அதனால தான் நான் தேக்வாண்டோ மேல ஆர்வம் செலுத்தினேன்.



எங்க வாசகர் பல பேருக்கு தேக்வாண்டோ பத்தி தெரியாது. அத பத்தி கொஞ்சம் விளக்கம் சொன்னா நல்லாயிருக்கும் ?

1965ல் கொரியன் ஒட்டப் பந்தய அமைப்புடன் சேர்ந்த கொரியன் தேக்வாண்டோ அமைப்பு உருவாச்சு. தேக்வாண்டோனா 'கடினமான' அல்லது 'வெளிப்புற' நடை கொண்ட ஒரு வீரமிக்க கலைனு சொல்வோம். தசைச் சக்திய வர்ணிக்க இப்படி சொல்லுவாங்க ! எதிரே வரும் சக்தி நம் மேல தாக்காமல் அதன் திசையை மாற்று செய்வது இந்த கலையோட முக்கிய பண்பு !

தேக்வாண்டோ சண்டையில எது ரொம்ப முக்கியம் ?

ஸ்டான்ஸ் ரொம்ப முக்கியம். அடிக்கும் போது சரி. தடுக்கும் போது சரி. நாம வேண்டிய விளைவுகள உண்டாக்கனும்னா எதிரி கிட்டயிருந்து சரியான தூரத்துல இருக்கனும். தாமதம் இல்லாம பதிலடி கொடுக்கவும் ஸ்டான்ஸ் உதவும்.

எத்தன விதமானா ஸ்டான்ஸ் இருக்குனு தெரிஞ்சிக்கலாமா ?

அட்டென்சன் ஸ்டான்ஸ், பேரலல் ரெடி ஸ்டான்ஸ்னு இப்படி பல ஸ்டான்ஸ் இருக்கு. எல்லாருக்கும் சீரான ஒரே மாதிரி உயரம் கிடையாது. சிலரு உயரமா. ஒரு சிலரு குட்டையா இருப்பாங்க. ஸ்டான்ஸ்வோட தன்ம எடை பகிரது, உயரம், நீளம், அகலம் இதவச்சு தான் சரியா சொல்ல முடியும்.

உங்க விளக்கத்துக்கு நன்றி ரவி ! எங்களுக்காக தேக்வாண்டோ இருக்குற போஸ் கொடுத்தா... பத்திரிக்கையில படம் போட உதவியா இருக்கும்.

மலர்ந்த முகத்தோடு 'ராம்போ' ரவி தன் இருக்கையில் இருந்து எழுந்தார். இரு கால்களையும் இரு பக்கமும் நீளமாக அகற்றி முட்டிகளை மடங்காதவாறு நின்றார்.

புகைப்படக்காரர் ஒரு படம் எடுத்துக் கொண்டார்.

இருகால்களை பக்கவாட்டில் விரித்துத் தரையைத் தொடும்படி அமர்ந்தார்.

புகைப்படக்காரர் இன்னொரு படம் எடுத்துக் கொண்டார்.

செங்குத்தான உடம்பை முன் புறமாக வளைத்து இடது காலைத் தொடுமாறு காலைக் கைகளால் பிடித்தப்படி அழுத்தினார்.

ஸார் ! உங்களோட வருங்கால லட்சியம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க ?

இந்தியா சார்பில ஒலிம்பிக் போட்டியில கலந்திட்டு பதக்கம் வாங்குறது தான் என் லட்சியம். நல்ல ஸ்பான்ஸர் கிடைச்சா சிங்கப்பூர் போய் ட்ரெய்னிங் எடுத்துப்பேன்.

உங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க எங்கள் வாழ்த்துக்கள் !!

'தின சூரியன்' பத்திரிக்கையில் பத்து ஆண்டு முன் தான் அளித்த பேட்டியை பார்த்தான் ரவி. பத்து வருடங்களாக அவன் பேட்டி வந்த பத்திரிக்கை அவனுடைய கண்ணீரை பார்த்துள்ளது. பழைய ஞாபகம் வரும் போதெல்லாம் பெட்டியில் இருந்து தன் பேட்டி வந்த பத்திரிக்கையை பார்ப்பான். படித்து முடித்த பிறகு கண்ணீர் சிந்துவான்.

அவனோடு விளையாட்டு துறையில் ஈடுப்பட்ட அவனது நண்பர்கள் கிரிக்கெட்டில் ஐ.சி.எல்., ஐ.பி.எல் என்று உலகம் சுற்றி சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். இவனுக்கு சரியான ஊக்கமும், உதவியும் கிடைக்காததால் ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக வேலை செய்துக் கொண்டு இருக்கிறான்.

Monday, July 13, 2009

விகடனில் நான் எழுதிய நகைச்சுவை

இந்த வார விகடனில் (15.7.09) நான் எழுதிய நகைச்சுவை வெளிவந்துள்ளது.

பக். 19.

"ஐ.டி. ஆபீஸ்ல வேலை பார்த்தவரை நம்ம ஹோட்டல்ல சூபர்வைஸரா போட்டது தப்பாப் போச்சு"

" ஏன் என்ன ஆச்சு ?"

" சாம்பார்ல உப்பு அதிகம் ஆயிட்டா என்ன பண்ணணும்னு கூகுள்ல தேடிக்கிட்டு இருக்காரு..."


ஒரு சிறு வருத்தம் என்னவென்றால் அந்த நகைச்சுவை வேறு ஒருவரின் பெயரில் (டி.பெருமாள்) வெளிவந்துள்ளது.

இந்த நகைச்சுவை என் அலுவலக நாடகத்திற்காக நான் எழுதியது. இதை "ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? " (ஜனவரி.30,09) என்ற தலைப்பில் நான் முன்பே பதிவு போட்டுயிருக்கிறேன். பதிவை மிகவும் ரசித்த நண்பர் ஒருவர் தான் இதை செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

எப்படியோ நான் எழுதிய நகைச்சுவை விகடனின் வந்தது சந்தோஷம் தான். நண்பர் டி.பெருமாளுக்கு நன்றி !!

[ விகடனை பார்த்த என் அலுவக நண்பர் ( நாடகத்தில் கூகுள் தேடும் நபராக நடித்தவர்) எனக்கு போன் போட்டு தெரிவித்தார். அவருக்கு என் நன்றிகள் பல....]

Sunday, July 12, 2009

அப்துல் ரகுமானே இது நியாயம் தானா...?

அது ஒரு 'பெண்கள் தினம்'. பெண்களை பற்றி பெருமையாக கவிதை எழுதி தர வேண்டும் என்று ஒரு அழகிய யூவதி கேட்டிருந்தாள். கட்டிளம் காளை சும்மா இருப்பானா... உடனே பேனா எடுத்து கவிதை எழுதிக் கொடுத்தான். கொடுத்தவன் தனியாக கொடுக்க கூடாதா.... நண்பன் முன் கொடுத்தது தான் வந்தது பிரச்சனை. அந்த கட்டிளம் காளை கொடுத்தது அப்துல் ரகுமான் எழுதிய 'ஆலாபனை' நூலில் இருக்கும் முதல் கவிதை. அந்த நண்பன் உண்மையை போட்டு உடைத்துவிட்டான். அந்த யூவதி கோபித்துக் கொண்டு சென்று விட்டாள். அதன் பின் கட்டிளம் காளை உண்மையான கவிதை எழுதினாலும் யாரும் நம்புவதில்லை.

சினிமா துறை சாராத கவிஞர்கள் பற்றி கேட்டால் யோசிக்காமல் பலர் சொல்லுவது 'அப்துல் ரகுமான்'. கல்லூரி நாட்களில் ‘ஆலாபனை’, இரண்டு வருடம் முன்பு 'இது சிறகுகளின் நேரம்' என்று இவரின் இரண்டு புத்தகத்தை வாசித்திருக்கிறேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் எழுதிய நூல் படிக்க இப்போது தான் சந்தர்ப்பம். நூலின் பெயர் ' மரணம் முற்றுப்புள்ளி அல்ல....!'

'இமைகளைக் காப்போம்' தலைப்பில்

நெற்றிக்கண்
கண்டதும் காதல் எரிந்தது

சாம்பலின் கௌரவப் பெயர் திருநீறு

பெற்றோர்களை கொன்றுவிட்டுப்
பிள்ளைகளுக்கு அனாதை ஆஸ்ரமம்
கட்டிக் கொடுப்பது போல், தூக்கத்தைக் கொன்றுவிட்டுத்
தூக்க மாத்திரைகளைத் தயாரித்துத் தருகிறது
அறிவியல்


‘இறந்த நான்’ தலைப்பில்

இறந்த காலத்தின் ஏதோ ஒரு கணத்து நான்.
ஆம், இறந்துவிட்ட நான் !
கணத்திற்குக் கணம்
நான் மாறிக் கொண்டிருக்கிறேன் !

இதோ ! இந்த புகைப்படம்
என் பிணந்தான்
கண்ணாடிச் சமாதியில் புதைக்கப்பட்ட பிணம்.


'மலட்டு தாய்' தலைப்பில்

பிறப்பில்லாமல் இறப்பா ?
முதலில் இறப்பென்றால்
என்ன அர்த்தம் ?
பிறப்பென்றால்
உயிர்ப் படைப்பு அல்லவா ? உயிரற்றதைப்
பிறப்பு என்று எப்படிச் சொல்வது ?


நான் கல்லூரியில் படித்த அதே அப்துல் ரகுமான் தான். அவர் எழுத்துக்களில் இளமைக் குறையாமல் இருக்கிறது.

இந்த புத்தகம் படித்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். கட்டுரையில் விடுப்படு கொஞ்சம் கவிதை பக்கம் ஒதுங்கலாம் என்று புத்தகத்தை எடுத்தேன். ஆனால், இந்த நூல் அவர் எழுதிய 'பால் வீதி' நூலுக்கு உரையாக எழுதியிருக்கிறார். அவர் கவிதைக்கு அவரே உரையெழுதிய காரணத்தை தன் முன்னுரையில் சொல்லியிருந்தார்.

'டைட்டில்' கார்ட்டை forward செய்து படம் பார்ப்பது போல் விளத்தை படிக்காமல் புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டேன். மீண்டும் கட்டுரையா என்று என்னை முகம் சுலிக்க வைத்தாலும் இடை இடையே அவரின் கவிதை குளிர வைத்தது. இருந்தாலும் புத்தகம் படித்து முடித்ததும் 'முழு கவிதை' நூலை படித்த திருப்த்தியில்லை. ( இது கவிதை நூல் அல்ல....அவர் கவிதைக்கு உரைநடை என்று விளத்தை படித்த பிறகு என் புத்திக்கு எட்டியது.)

நான் ஏமாந்ததற்கு மூன்று பேர் காரணம்.

கட்டுரையை கவிதைப் போல் (வரிக்கு நான்கு வார்த்தை) அச்சடித்த ‘National’ பதிப்பகம்.

'உரைநடையை' கூட கவிதைப் போல் அழகாய் எழுதிய அப்துல் ரகுமான்.

‘அப்துல் ரகுமான்’ பெயரை மட்டும் பார்த்து எதையும் கவனிக்காமல் நூலை எடுத்த நான்.

இந்த நூலை வாசிக்க விரும்புபவர்கள் முதலில் 'பால் வீதி' நூலை வாசித்து விட்டு வாசிங்கள். :)

மரணம் முற்றுப்புள்ளி அல்ல
அப்துல் ரகுமான்
விலை.35, பக் : 88
நேஷனல் பப்ளிஷர்ஸ்
2, வடக்கு உஸ்மான் சாலை,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்),
தியாகராய நகர், சென்னை - 17.
Ph:- 2834 3385

கலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி !!

செத்துப்போன எழுத்தாளரிகளின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்கள் வாரிசுகளுக்கு பணம் வழங்கி வந்த அரசு, எனக்கு தெரிந்து முதல் முறையாக ஒரு எழுத்தாளர் உயிருடன் இருக்கும் போதே நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது.



முதியோர் இல்லத்தில் இருக்கும் 'சாகித்ய அகாதமி'(வேருக்கு நீர்-நாவல்,1973) விருது பெற்ற ராஜம் கிருஷ்ணனின் நூல்கள் நாட்டுடைமையாக்கி அவருக்கு 3 லட்ச ரூபாய் உதவி தொகையை ‘கலைஞர்’ அவர்கள் நேரில் சந்தித்து வழங்கியிருக்கிறார்.

இந்த தொகை ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர் நூலை நாட்டுடைமையாக்கிய 'கலைஞர்' அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் !!

Friday, July 10, 2009

மனித வெடிக்குண்டு

ஆத்ம விஸ்வாசம் இல்லாத துறவிகளே !
பல ஆத்மாக்களைக் கொள்ள துணிந்த பாவிகளே !

பிணத்தைக் கண்டு
வாழ்க்கையை புரிந்துக் கொண்ட
புத்தரை ஏட்டில் படித்தேன் !
பல பேரை பிணங்களாக மாற்றும் உன்னை
நாள் இதழ்களின் தினமும் படிக்கிறேன் !

உலக வர்த்தத்தை
இடித்து தள்ளியதில்
என்ன லாபம் உனக்கு ?
பல உயிர்க் கொன்ற
உன் வெற்றியை
நீ பரிசாய் அளித்தது யாருக்கு ?



நீயும் இறக்கிறாய்
மற்றவரையும் சாகடிக்கிறாய்
இதனால் உலகில்
என்ன மாற்றம் வந்தது ?

ஒரே நாளில் தொடர் குண்டுகள்!
பீதியில் மக்கள் !
புதையலை தேடுவது போல்
குண்டுகளை தேடும் காவதுறையினர் !
எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு
தள்ளிய சந்தோஷத்தில் நீங்கள் !

உனக்கு நீயே எதிரியானாய்
மற்றவரையும் எதிரியாய்
நினைத்து கொன்று திர்த்தாய் !

நீ நாட்டுக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டாம்
உனக்கு நீ விஸ்வாசமாக இரு…
மற்றவர் இறக்காமல் இருப்பதற்கு…

******

கவிதைக்கான புகைப்படத்தை தேடும் போது கிடைத்த GIF படம். பார்த்து ரசியுங்கள்.

Thursday, July 9, 2009

அழகிய தோழியே…!!

பல நாட்கள் காத்திருந்த என் உணர்வுகளுக்கு இன்று தான் உத்வேகம் பிறந்தது. இதற்காக எத்தனை நாள் தவமிருந்தேன். என் மனதில் பூட்டி வைத்திருந்தேன். சொல்ல துணிந்த பிறகு ஆழ்கடலின் ஆழம் பார்ப்பது எதற்கு...? ஒரு முடிவோடு தான் பூர்ணிமாவை பார்க்க புரப்பட்டேன். இன்று என் மனதில் ஒலித்து வைத்த காதலை சொல்வதற்கு....

பூர்ணிமா அழகில் டையனாவோ ஐஸ்வர்ய ராயோ இல்லை. பார்க்க சுமாராக தான் இருப்பாள். யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். குறிப்பாக ஆண்கள் இருக்கும் பக்கம் போகவே மாட்டாள். எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவே சோகமாக முகத்தை வைத்திருப்பாள். அவள் சிரிக்காமல் இருப்பதால் எங்கள் கல்லூரியில் அவளுக்கு 'சோனியா அகர்வால்' என்ற பட்டப் பெயரும் அவளுக்கு உண்டு.

யாரிடமும் பேசாத பூர்ணிமா என்னிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவாள். அவளுக்கு பாட தெரியும் என்பது அவளுடன் பழகிய பிறகு தான் எனக்கு தெரியும். நான் அவளை கல்லூரி ஆண்டுவிழாவில் பாட சொன்னேன். பல ஆண்கள் கூடிய மேடையின் முன் பாட முதலில் தயங்கினாள். நான் கட்டாயப்படுத்தியதில் அவள் பாட சம்மதித்தாள்.



கல்லூரி ஆண்டு விழாவில் 'வசீகரா' பாடலை பாடினாள். அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் அவள் பாட்டுக்கு கிடைத்தது. பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கியதும், இரண்டு பேர் அவளை பாராட்டினர். அவர்கள் ‘ஆண்கள்’ என்பதால் பூர்ணிமா அவர்களின் பாராட்டுக்கு 'நன்றி' கூட கூறாமல் வந்து விட்டாள். எனக்கு அவள் செய்தது பிடிக்கவில்லை. நான் அவளிடம் அவள் செய்த தவறை சுட்டிக்காட்டினேன். எல்லா பெண்களை போல என்னிடம் சண்டைப் போட்டுக் கொண்டு பேசாமல் சென்றாள்.

இரண்டு நாளுக்கு மேல் அவளால் என்னிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவள் தான் உள்ளூர ஆண்களை வெறுப்பதை கூறினாள். காரணத்தை கேட்டேன். நடுங்கிய குரலில் பதிலளித்தாள். நான் அதிர்ந்து நின்றேன்.

பூர்ணிமாவுக்கு பத்து வயது இருக்கும் போது அவள் அப்பாவுக்கு வேலை மாற்றல் காரணமாக வெளியூர் செல்ல வேண்டியதாக இருந்தது. அவளுடைய அம்மாவும் அப்பாவுடன் செல்ல வேண்டிய நிலைமை. ஒரு வருடத்தில் தனக்கு வேலை மாற்றம் வாங்கி மீண்டும் இதே ஊரில் வந்து விடலாம் என்று நினைத்த பூர்ணிமாவின் அப்பா, தன் தூரத்து உறவினர் வீட்டில் தங்க வைத்தார். ஒரு வருடம் வரை அங்கு இருந்து படிக்க சொல்லி அவள் பெற்றோர் வெளியூர் சென்றனர். அந்த தூரத்து உறவினர் ஒரு வகையில் பூர்ணிமாவின் அப்பாவுக்கு அண்ணன் முறை. பூர்ணிமாவின் பெற்றோர்கள் ஊருக்கு சென்று பத்து நாள் வரை அவள் பெரியப்பா நன்றாக தான் பார்த்துக் கொண்டார். அதன் பிறகு தான் அவளுக்கு தெரிந்தது அவளுடைய பெரியப்பாவின் உண்மையான சுயரூபம்.

இரவு நங்கு தூங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அவள் உடலில் எறும்பு ஊர்ந்து செல்லுவது போல் இருந்தது. தட்டி விட்டாள். பிறகு தான் தெரிந்தது அது அவள் பெரியப்பாவின் கை என்று ! பூர்ணிமா அவரை தடுத்தாள். கட்டாயப்படுத்தி முத்தமிட்டான். அவளை நிர்வாணமாக்கி மோப்பம் பிடிக்கும் நாய் போல் அவள் உடலை மோர்ந்தான். தடவினான். இன்னும் விவரிக்க முடியாத வார்த்தைகளில் அவள் பெரியப்பாவால் கொடுமைப்படுத்தப்பட்டாள். ஒரு நாள் அல்ல... இரண்டு நாள் அல்ல... இரண்டு மாதம் அந்த பெரியப்பனால் இரவில் நரக வேதனை அனுபவித்தாள். பயத்தில் அவளுக்கு காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சலில் பள்ளிக்கு சென்று வந்தாள். வீட்டுக்கு வருவதை பயப்படுவாள். அவளின் நிலைமை அங்கு தான் வந்தாக வேண்டும். அப்பா, அம்மாவிடம் போனில் சொல்லுவதற்கு கூட பயந்தாள்.

நாளுக்கு நாள் அவன் கொடுமை அதிகரித்து வந்ததில் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். ஊரில் இருந்து அவள் அப்பா, அம்மா வர வழைக்கப்பட்டனர். பூர்ணிமா அவள் அம்மாவை கட்டிபிடித்து அழுதாள். தன் அம்மாவிடம் அவளுக்கு சொல்ல தைரியமில்லை. தனக்கு நடந்தது என்ன என்று தெரிந்தால் தானே சொல்லுவதற்கு...! அந்த அறியாத வயதில் அந்த பெரியப்பா எதற்காக தன்னிடம் இப்படி நடந்துக் கொண்டார் என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் பெற்றோர்கள் அவர்களுடனே அழைத்து சென்றனர்.

விபரம் தெரியும் வயதில் பூர்ணிமாவுக்கு தனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. அந்த காமந்தனை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததை நினைக்கும் போதெல்லாம் தன் உடலை கூட வெறுத்தாள். சில சமயம் காரணமில்லாமல் தன் உடலை அவளே காயப்படுத்திக் கொண்டாள். அந்த வெறுப்பு வளர வளர ஆண்கள் மீது அவளுக்கு வெறுப்பு அதிகமானது. தன் அப்பாவை உட்பட ஆண்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாள். எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்ற முடிவுக்கே அவள் வந்துவிட்டாள்.

பூர்ணிமா தன் கதையை சொல்லி முடித்ததும் என் மடியில் படுத்து அழுதாள். நான் ஆறுதலாக அவள் தலையை தடவினேன். என்னை அறியாமல் அவள் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. அப்போது எனக்கு வந்த எண்ணம் பெரிதாக தெரியவில்லை. நாளாக நாளாக பூர்ணிமா மீது இருப்பது 'காதல்' என்று உணர்ந்தேன். பூர்ணிமா என் வாழ்நாள் முழுக்க என்னுடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது. நேரில் அவளை பார்க்கும் போதெல்லாம் சொல்ல தயங்கினேன். இன்று தான் எனக்கு தைரியம் பிறந்தது.

பூர்ணிமாவிடம் சென்றேன்.

"இவ்வளவு நாள் என் மனசுல இருக்குறத சொல்ல போறேன். ஐ லவ் யூ ! பூர்ணிமா !!"

"உனக்கு என்ன பைத்தியமா..."

அவள் கத்தி முடித்தப்பின் என் கதையை கூறினேன். தன் கதையை தைரியமாக சொன்ன பூர்ணிமாவிடம் இன்று தான் என் கதையை சொல்ல போகிறேன். அவளை போல நானும் சிறு வயதில் மூன்று ஆண்களால் பாதிக்கப்பட்டவள். பல இரவு காமந்தர்களால் ஆடையில்லாமல் இருந்திருக்கிறேன்..

என் கதை யை சொல்ல சொல்ல அழுதுவிட்டேன் .

" காயத்ரி..! அழாதே..." என்று கண்களை துடைத்தாள். நான் அவள் கரத்தை பற்றிக் கொண்டேன். எனக்கு நடந்த சம்பவத்தை மறக்க வெளியே சிரித்து பேசிக் கொண்டு இருந்தேன். ஆனால், பூர்ணிமாவிடம் தான் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது.

பூர்ணிமா முகத்தில் " இது நடக்குமா" என்ற கேள்வி தெரிந்தது.

நான் உச்ச நீதி மன்ற தீர்ப்பை காட்டினேன்.

****

தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து
"உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான இரண்டாவது ஆக்கம் !

Wednesday, July 8, 2009

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களே இப்படி தான் !

“வயதும் ஆசையும் வளர, வளர கால்கள் வீட்டில் இருப்புக்கொள்ள மறுக்கின்றன.”- இது ஒரு உண்மையான ‘தேசாந்திரி’யின் வார்த்தை.

‘அறை எண்.305ல் கடவுள்’ படத்தில் ஒரு வசனம் வரும். பிரகாஷ் ராஜ் 'டெல்லி' கணேஷ்யிடம் " பரிசல்காரனுக்கு பணம் கொடுத்து நடு கடல் வரைக்கும் போய் இருக்கீங்களா..! என்னைக்காவது நாலும் பிச்சக்காரங்களுக்கு சாப்பாடு போட்டிருக்கிங்களா..!!" என்று கேட்பார். இத்தனை நாள் வாழ்க்கை ரசிக்கிறோம் என்ற பெயரில் எதுவும் செய்யாமல் இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு குத்தும். அந்த குற்றவுணர்வு எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் எனக்குள் நிகழும் சம்பவம் இது.

இவர் இதில் குறிப்பிட்ட இடங்களை எல்லாம் லீவ் போட்டு பார்த்துவிட வேண்டும் ஆசை. தொடர்ந்து இரண்டு நாள் லீவ் கேட்டாலே பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். லீவ் போட்டாலும் குடும்பத்தை விட்டு எஸ்.ராமகிருஷ்ணன் போல் தனியாக சுற்றிப்பார்க்கவும் முடியாது. இப்படி பல வேலை நிமத்தங்களில் முடிக்கிடக்கும் என் கண்களை அவ்வபோது எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் தான் திறக்கிறது.



சீங்கப்பூர் பற்றிய பயணக்கட்டுரை, அமெரிக்கா போகலாமா என்ற தலைப்பில் புத்தகங்களில் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், குறிப்புகள் இருக்கும். அந்த புத்தங்களும் விற்றுப்போகும். ஆனால், 'இந்தியாவை' பற்றிய பயணக்கட்டுரை நாம் பெரும்பாலும் படிக்க நினைப்பதில்லை. படிப்பதை விட பார்ப்பதே சிறந்தது என்று முக்கியமான இடங்களை நேரில் பார்க்க செல்கிறோம். நாம் பார்க்க நினைக்காத இடங்களையும், சரித்திரம் மறந்து போன இடங்கள் பற்றியும் எஸ்.ராமாகிருஷ்ணன் எழுதிய 'தேசாந்திரி' நூலில் படித்தேன். ஒரு எழுத்தாளர் பார்க்க நினைக்கும் இடத்திற்கும், சராரி மனிதன் ஒரு இடத்தை பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்று அந்த புத்தகம் படித்து முடித்த பிறகு உணர முடிந்தது.

நம் பாடப்புத்தங்களில் ஒரு வரி செய்தியாக, தகவலாக வந்த இடங்களை பற்றி குறிப்பிட்டு அந்த இடத்தில் மகத்துவத்தை சொல்கிறார். வரலாறு இடங்களை மறப்பதாலும், அழிப்பதாலும் வருங்கால சங்கதியர்களுக்கு நாம் எப்பேர்ப்பட்ட தீங்கு செய்கிறோம் என்று இதில் உணர முடிகிறது.

1.சாராநாத்தின் புத்தசிலை
2.நல்லதங்காள் விழுந்த கிணறு
3.மணியாச்சி ரயில் நிலையம் ( கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதனால் சுடப்பட்ட இடம்)
4.புனித தாமஸ் மலை
5.அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம்
6.கூவாகத்தில் நடக்கும் அரவாணிகள் விழா
7.கன்னியாகுமரி மாவட்டத்தின் கிரிப்பாறை மலைப்பகுதியில், வெள்ளாம்பி என்ற இடத்தில் இருக்கும் ஆதிவாசிகள்.
8.கடலில் முழ்கிய தணுஷ்கோடி
9.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளிய மரம்
10.பழநி இருக்கும் குதிரை வண்டி
11.கொச்சியில் உள்ள ஒடேசா என்ற மக்கள் சினிமா இயக்கம்
12.கடற்கரை மணல்
13.கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த வீடு
14.அடையாறு ஆலமரம்.

மேல் குறிப்பிட்ட ஒரு சில இடங்கள் நாம் அன்றாடம் சென்னையில் பார்த்து வரும் இடங்கள் தான். அந்த இடத்தை பற்றி தெரிந்திருந்தாலும், எஸ்.ராமகிருஷ்ணன் போல் ரசிக்க முடியுமா என்று தோன்றவில்லை.

“சாராநாத்தில் ஒரு நாள்” கட்டுரையில் " இதுவும் புத்தர் சிலை தான். ஆனால், இன்னமும் இது சிற்பமாகவில்லை” என்ற வரி வரும். இந்த வரியை உள்வாங்கி நான் எழுதியது.

“மனிதன் - இயங்கிக் கொண்டு இருக்கும் இயந்திரம்
இயந்திரம் - இயங்காமல் இருக்கும் மனிதன்”


இயந்திரம் செய்யும் சில வேலைகளை கூட நாம் செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்ட இந்த வரிகள்.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களே இப்படி தான் ! அவர் எழுத்து என்னையும் எழுத வைத்துவிடும்.

Monday, July 6, 2009

தேவதை தோழி

நான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன். உன்னிடம் பேச தொடங்கினால்...... என் வார்த்தைகள் உனக்காக மட்டும் தான் உயிர் வாழும்.

உனக்கு சொந்தமான வார்த்தைகளை எப்படி நான் எப்படி மற்றவர்களிடம் பேச முடியும். அப்படி பேச தொடங்கிவிட்டால் என் வார்த்தைகள் என்னோடு சண்டை போடாதா... தேவதை உனக்காக வாழ்ந்த வார்த்தைகள் மற்றவருக்கு பயன்பட்டால் யாருக்கு தான் கோபம் வராது.



நான் என் மீது நம்பிக்கை இல்லாததால் தான் உன்னிடம் பேசவில்லை. ஆனால், நீ என்னை சோதிப்பதற்காகவே என்னிடம் வந்து பேசுகிறாய். ஒவ்வொருவரும் உன்னிடம் பேச ஆசைப்படும் போது, நீயே என்னிடம் வந்து பேசினாய். என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் எல்லாம் தடுமாறி போய்விட்டது. விலகிச் செல்லத்தான் நினைக்கிறேன். உன் வலையில் விழுந்து விட வேண்டும் என்றே என்னிடம் பேச சூல்லுரைத்தாய்.

நீ என்னிடம் பேசுவதால் எத்தனை ஆண்களுக்ளின் பொறாமை சம்பாதித்தேன் தெரியுமா ? உன்னிடம் என்ன பேசினேன் என்று எத்தனை ஆண்கள் உன் தோழிகளிடம் விசாரித்தார்கள் தெரியுமா ? நாம் காதலர்களா என்று ஒரு தனிப்படை குழு நம் விசாரித்துக் கொண்டு இருப்பது நமக்கே தெரியாமல் போனது.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் உன்னை பற்றி கேட்கும் போது.... நீ என் தோழி மட்டுமே தான் என்று என் வாய் சொன்னது.... மனமோ போய் ஏன் சொல்கிறாய் ? என்று கேட்டது....

என் காதலை முதலில் உன்னிடம் தானே சொல்ல வேண்டும்.... மற்றவர்களிடம் சொன்னால் என்ன பயன் ? மூன்று ஆண்டுகள் காதலை சொல்லாமல் கழித்துவிட்டேன். நாட்கள் செல்ல செல்ல உன்னிடம் உள்ள காதல் வளர்ந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தைரியம் குறைந்துக் கொண்டே வந்தது.

ஒருவன் என்னிடம் வந்து உன்னை காதலிப்பதாக சொல்லி , அதற்கு தூதாக என்னை செல்ல சொல்கிறான். அவனை அடிக்க துடித்தது கைகள், ஆனால் ‘நட்பு’ என்று சொல்லிய வார்த்தை ‘காதல்’ என்று மாற்றிவிடும் கூட்டங்கள் என்னை சூழ்ந்து இருந்தது. அவனுக்கு உதவி செய்ய மறுத்த வந்துவிட்டேன். அவனோ தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.

ஒரு முறை என் காதலை சொல்ல வந்த நேரத்தில் , அவனும் உன்னிடம் காதலை சொன்னான். எவ்வளவு நாள் தான் நான் சொல்வேன் என்று நீ எனக்காக காத்துக் கொண்டு இருப்பாய். நீ அவன் காதலை ஏற்கும் காட்சியை கண்டேன். என் மௌனத்திற்கு தண்டனை உன் காதலை இழந்ததை என் கண்ணில் கண்டேன். தோல்வி ஒன்றும் எனக்கு புதிதல்ல..... இது தண்டனை, என் மௌனத்திற்கு கிடைத்த தண்டனை. நட்பை கலங்க படுத்த கூடாது என்று நினைத்தற்கு தண்டனையாக உன் காதலை இழந்தேன். அது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எண்ணிடம் பேச்சை குறைத்துக் கொண்டாய்.... அவனிடம் அதிகம் பேச தொடங்கிவிட்டாய்.... நானும் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறேன். உனக்காக நான் எழுதிய கவிதைகளுடன்.

Saturday, July 4, 2009

சாரு நிவேதிதா எழுதிய 'தப்புத்தாளங்கள்'

“உலகிலேயே அதிக உழைப்பை எடுத்துக் கொண்டு அதிக இழப்பை ஏற்ப்படுத்தக் கூடிய தொழிலான இந்த எழுத்துத்துறைக்கு வந்திருக்காவிட்டால் நான் ஒரு பயணியாகியிருப்பேன்.” - எழுத்து தொழில் மூலம் எத்தனை அவமான சந்திருந்தால் இப்படி ஒரு வார்த்தை வரும்.

நான் சாருவின் எழுதுக்களை படித்திருந்தாலும் அவர் மேல் எனக்கு பெரிய ஈடுபாடு ஒன்றுமில்லை. ஆனால், அவரின் 'தப்புத்தாளங்கள்' புத்தகம் படித்த பிறகு அவர் மேல் தனி மரியாதை வந்திருக்கிறது. சாருவை திட்டி எழுதுபவர்கள் தயவு செய்து சாரு எழுதிய இந்த புத்தகத்தை படித்து விட்டு எழுதுங்கள்.

எஸ்.ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி" புத்தகத்தில் இந்தியாவில் நாம் மறந்து போன இடங்களை பற்றி விளக்குகிறார். சாருவின் 'தப்புத்தாளங்கள்' புத்தகம் மூலம் உலகத்தின் இருக்கும் ஒரு சில கருப்பு சம்பவங்களை தெரிய வைத்திருக்கிறார்.



'ஐரோப்பிய அக்ரஹாரம்' கட்டுரையில் ஜெர்மனியர்களின் இயந்திர வாழ்க்கை, பாரிஸ்யில் இருக்கும் கத்தாகோம்ப் (மனித எழும்புகளால் கட்டப்பட்ட சாம்ராஜியம்), பாலைவன சிறைச்சாலை என்று ஒவ்வொன்றாக அழகான வர்ணித்திருக்கிறார்.

குறிப்பாக 'தொழுகை-தவம்-துறவு' கட்டுரையில் ஒரு மனிதனை எவ்வளவு அருவருப்பாக கொல்ல முடியுமோ அவ்வளவு அருவருப்பான முறையில் கொலை செய்த்திருப்பதை காட்சியாக கண் முன் கொண்டு வந்திருக்கிறார். அரபிய எழுத்தாளர்கள் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு இருப்பதை இந்த புத்தகத்தில் மூலம் பதிவு செய்திருக்கிறார். இதில் குறிப்பிடும் ஒவ்வொரு சம்பவங்களும், கொடூர மரணங்களும் விவரிக்க இயலாது. வாசகர்கள் படித்து உணர வேண்டியது.

ஒரு இடத்தில் " தற்கொலைக்கு தப்பித்துக் கொள்வது மரணத்தை விட மோசமானது" என்று குறிப்பிடும் போது ‘சாருவின் பச்’ தெரிகிறது. அந்த வலி தற்கொலையில் தோற்று வாழ்பவர்களுக்கே தெரியும்.

இவை எல்லாவற்றிருக்கும் மேலாக அவர் இந்த புத்தகத்தில் குறிப்பிடும் நாவல்கள் பெரிய பட்டியலிடலாம். என்னால் முடிந்தவரை குறிப்பிட விரும்புகிறேன்.

Cities of Salt- அப்துல் ரஹ்மான் முனிஃப்
The Wounded Civilzation – வி.எஸ்.நைப்பால்

Louis Ferdinand Celine (1894-1961) எழுதிய
Journey to the End of the Night (1932)
Deathg in the Instalment plan (1936)
North (1960)

லான்ஹீன்ஸ் எடுத்த முக்கியமான படங்கள்
The Blood of the Condor (1968)
The Corage of the People (1971)
The Principal Enemy(1973)
Getout (1977
The flags of Down (1983)
The Clandestine Nation (1989)

லத்தீன் அமெரிக்கவின் புகழ்பெற்ற ஆவணப்படம் :-
The Battle of Chile(Paticio Guzman,1976)
The Hour of the Furnaces (ஃபெர்னாந்தோ ஸொலானால், அர்ஜென்டீனா,1967)

Bukowsky – Post office
Zayanab at Ghanzali – Day from my life (1977) - இவரது சிறை குறிப்புகள்
Nawal El Saadaw – Memoirs from the Women’s Prison, 1986

மாலிகா ஔஃபிகர் - Stolen lives : 20 years in a Desert jail.
Tahar Ben Jellown – This Building absence of Light.
My Dear Jamal – Joyce Edling அவர்கள் Jamal Benomar எட்டு வருட சிறை அனுபவங்களை எழுதியிருக்கிறார்.

அப்தல்லத்தீப் லாபி - Rue du Retour (French) (ஆங்கிலத்தில் - Street of Return ).
இவரின் மற்ற நாவல்கள்…
1. The Eye & The Night (1969)
2. Wrinkles of the Lion (1989)
3. The Bottom of the Jar (2003)

Jill Gay – The Patriotic Prostitutes

இந்த நூலில் "அடிமையின் கனவு" மொழிபெயர்ப்பு சிறுகதை நன்றாக இருந்தது. இத்தனை நாவலை பற்றி குறிப்பிடும் சாரு அவர்கள், வம்பு சண்டை தவிர்த்து இந்த புத்தகங்களில் இரண்டையாவது மொழிபெயர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Friday, July 3, 2009

பைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ் !

‘Rabbit Proof Fence’ என்ற உலகம் படம் காட்ட போகும் என் நண்பர் பைத்தியக்காரனுக்கு நன்றி... !! அவசியம் வந்து கலந்துக் கொள்கிறேன்.

"சாரு: ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்" என்ற பதிவில் சாருவை வன்மத்தில் உச்சில் சென்று திட்டியதை படித்தேன். அதை கண்டிக்கவோ, அறிவுரை கூறவோ விரும்பவில்லை இல்லை.

சாரு நாகார்ஜுனன் மீது வைத்தது இரண்டு குற்றச்சாட்டுகள்.

முதல் குற்றம்

“அன்றைக்கு என்னுடன் முதல் தொகுதி மட்டுமே வெளியிட்டிருந்தவர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம்-ரமேஷ், கோணங்கி, சாருநிவேதிதா போன்ற பலரும் இன்று பல நாவல்களின் ஆசிரியர்களாக மாறிவிட்டார்கள். இன்று புதியதாக நிறைய எழுத்தாளர்கள் எழுத வந்திருக்கிறார்கள். இந்தப் பத்து வருடங்களில் என்ன ஆகி இருக்கிறது என்று பார்த்தோமேயானால் பொதுவான ஒரு Trend என்பதில்லை” என்று நாகார்ஜுனன் பேட்டியளித்திருக்கிறார்

இதை படித்தது சாதான வாசகனுக்கே கோபம் வரும். சாருக்கு கோபம் வருவது தவறொன்றுமில்லை.

எழுத்தாளர்கள் மனித உணர்ச்சிக்களை பதிவு செய்கிறார்கள். உலகத்தை அறிமுகம் செய்பவர்கள். சிந்தனையை தூண்டிவிடுபவர்கள். எந்த பலனும் எதிர்பார்க்காமல் எழுதுபவர்கள். அவர்களை பார்த்து “பொதுவான ஒரு Trend என்பதில்லை” என்றால் யாருக்கு தான் கோபம் வராது. ‘எழுத்து’ ஒன்று சினிமா இல்லை. ஒருவன் 'காதல்' படம் எடுத்தால் அதே ட்ரெண்ட்டில் நாலு பேர் படம் எடுத்து கல்லா நிரப்பிவதற்கு.... ! ‘தவம்’ போல் ஒரு சிலர் எழுதி வருகிறார்கள். அவர்கள் எதுவும் யாரிடம் இருந்து எதிர்பார்ப்பதில்லை. எழுத்தை ‘பணம்’ என்று நினைப்பவர்கள் தான் ‘Trend’ பற்றி யோசித்து ‘கல்லா’ நிரப்ப வேண்டும்.

நாகார்ஜுனன் ‘ஸீரோ டிகிரி’ பற்றி சொல்லாததால் தான் சாரு "Mummy Returns!” " என்ற பதிவு எழுதியதாக குற்றம் சுமத்துவது அபத்தம். எப்போதும் தன் எழுத்தை பற்றியும், தன் புத்தகத்தை பற்றியும் மற்றவர்கள் பேச வேண்டும் என்று நினைப்பதற்கு....சாரு ஒன்று அரசியல்வாதியல்ல... எழுத்தாளர். அவருக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் அவர் குடும்பத்தை இழுத்து கேவலப்படுத்தாமலாவது இருங்கள்.

இரண்டாவது குற்றம்.

என்னை அதிகம் கோபப்படுத்தியது " எஸ்.ராமகிருஷ்ணன் பாபா படத்திற்கு வசனம் எழுதியதாக” நாகார்ஜுனன் சொன்னது தான். உங்கள் தவறை மின்னஞ்சலில் சொல்லாமல் தனி பதிவு மூலம் சொல்லுவதற்கு காரணம் இது தான்.

சுஜாதாவிற்கு பிறகு எந்த வம்புக்கும் போகாதவர் எஸ்.ராமகிருஷ்ணன் தான். அதிக வாசகர்களை கவர்ந்து வருபவரும் ராமகிருஷ்ணன் தான். தமிழக அரசு விருது பெற்ற 'நெடுங்குருதி', பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட 'உப பாண்டவம்', 'துணையெழுத்து' போன்ற புத்தகங்களை பத்தாண்டுகளில் நாகார்ஜுனன் வாசித்திருக்க நியாயமில்லை. ( நாகார்ஜுனன் ஒருவர் இருப்பதே அறிமுகம் செய்தது எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு தான்.)

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தை யாராலும் உதாசினம் செய்ய முடியாது. நம் மனதின் ஏக்கம். உள்ளூர நாம் பல நாள் குமுறியது. பல நாள் ஒலித்து வைத்து வேதனை. எல்லாம் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து மூலம் உணர்ந்திருக்கிறேன். அவர் எழுத்தை வாசித்தவர்களின் அனுபவமும் இதுவாக தான் இருக்கும். அவரை பாமரன் போல் 'பாபா படத்துக்கு வசனம் எழுதியதாக' சொல்லுவது....சிறுபுள்ள தனம்.

இந்த இரண்டு குற்றத்திற்கும் நீங்கள் பதில் சொல்லாமல் சாருவை தனிப்பட்ட முறையில் அவர் குடும்பத்தையும் சேர்த்து எழுதியது மிகவும் அநாகரிகமானது. நாகார்ஜுனன் ஆதரவாளர் என்ற முறையில் அவர் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை சொல்லலாம். கருத்து சண்டை இருக்கலாம். தனிப்பட்ட முறையில் குடும்பத்தை பற்றி பேசுவது, எழுதுவது.... தேவையில்லாதது. தேவையற்றது.

சாருவின் எழுத்துக்கள் சமிபக்காலமாக வம்பு சண்டையாக இருப்பது உண்மை. 'சாரு' - எப்போது பழையப்படி எழுத போகிறார் என்று ஏங்கும் வாசகர்களில் நானும் ஒருவன். சாரு அவர்கள் 'வம்பு சண்டை' பதிவுக்கு நேரத்தை விரணயம் செய்வதற்கு, 'தப்புத்தாளங்கள்', 'ஸீரோ டிகிரி' போன்ற புத்தகங்களுக்கு இரண்டாம் பாகம் எழுதினால் வாசகர்களான நாங்கள் சந்தோஷப்படுவோம்.

இதை எல்லாம் சொல்வதால் 'நான் - சாரு ஆதரவாளர்' என்று நினைக்க வேண்டாம். நான் 'எஸ்.ராமகிருஷ்ணனின் தீவிர வாசகன்' என்ற முறையில் தான் இந்த பதிவை எழுதினேன்.

‘No tension’- பைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ்.....!!

டிஸ்கி : சாருவை பற்றி தப்பா எழுதினால் 'நூறு ஹிட்' விழும் தெரியும். ஆனா... 'நூறு பின்னூட்டம்' வரும்னு பைத்தியக்காரன் பதிவில் இருந்து தெரியுது...!! எத்தன பேரு தான் அவர திட்டுறது. அவரும் வழிக்காத மாதிரி இருக்குறது...!!

Thursday, July 2, 2009

வாய கொடுத்து புண்ணாக்கிக்காதே சொல்லுறாங்களோ !

ஒரு முறை பேச்சு வழக்கில், நான் 'கிழக்கு பதிப்பகம்' வெளியீடு புத்தகங்களை தான் அதிகம் படிப்பதாக என் மனைவி குற்றம் சுமத்தினாள். நான் 'இல்லை' என்று நிருப்பிக்க கேபிள் சங்கர் ஸ்டையில் கடந்த ஆறு மாதம் (ஜனவரி முதல் ஜூன் வரை) படித்த புத்தகங்களை பட்டியலிட்டேன்.

கிழக்கு பதிப்பகம்

1.அணு : அதிசயம் - அற்புதம் - அபாயம் - என்.ராமதுரை
2.ஆயில் ரேகை - பா.ராகவன்
3.ஸ்...! - முகில்
4.இந்திய பிரிவினை - மருதன்
5.கடல் புரத்தில் - வண்ணநிலவன்
6.அமெரிக்காவில் கிச்சா - 'கிரேஸி' மோகன்
7.சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - யுவ கிருஷ்ணா
8.சிரிப்பு டாக்டர் - முத்துராமன்
9.கேங்டாக்கில் வந்த கஷ்டம் - சத்யஜித் ரே
10ஓபாமா பராக் - ஆர்.முத்துகுமார்
11.1857: சிப்பாய் புரட்சி - உமா சம்பத்.
12.இரா.முருகன் கதைகள் - இரா.முருகன்
13. கிச்சு கிச்சு - ஜே.எஸ்.ராகவன்
14.அறிந்தும் அறியாமலும் – ஞாநி



Prodigy & Minimax

15.செவ்வாய் கிரகம் - என்.ராமதுரை
16.ஜப்பான் -எஸ்.சந்திரமௌலி
17.சீனப்புரட்சி - மருதன்
18.ஐன்ஸ்டைன் - பத்ரி சேஷாத்ரி
19.கன்ஃபூஷியஸ் - என்.ராஜேஷ்வர்
20.அம்பானிகள் பிரிந்த கதை - என்.சொக்கன்
21.தே.மு.தி.க - யுவ கிருஷ்ணா

National Book Trust

22.காயம் பட்ட காகத்தின் கதை - ரமேஷ் பேடி
23.கபீர் - பாரஸ்நாத் திவாரி
24.தண்ணீர்
25.கடற்புறத்து கிராமம் - அனிதா தேசாய்
26.பசித்தவர்கள் - தேவனூரு மாகதேவ்

உயிர்மை பதிப்பகம்

27.என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
28.நிழல் வெளிக்கதைகள் - ஜெயமோகன்

29. தீராக்காதலி - சாரு நிவேதிதா
30. தப்புத் தாளங்கள் - சாரு நிவேதிதா

தி.க வெளியீடு

31.சேது சமுத்திர திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர்
32.பா.ஜ.க.வும் இந்துவாவும் - கி.வீரமணி
33.வேலுபிரபாகரன் கதைகள் – வேலுபிரபாகரன்

மற்ற பதிப்பகங்கள்

34.கடல் புறா ( பாகம் 1,2 & 3) - சாண்டில்யன்
35.எனது சுயசரிதை - சிவாஜி கணேசன்
36.கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா

37.ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
38.இத்தாலியின் யுத்தப்பேய் முசோலினி - ஜெகசுதா
39.வையத்தலைமை கொள் - சேவலயா முரளிரதன்
40.ரங்கூன் பெரியப்பா - தேவன்
41.கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
42.தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
43.கைதி - லியோ டால்ஸ்ராய்

44.தமிழுக்கு இல்லை தேய்மானம் (கவிதை)- இனியவன் G. ஸ்ரீதர்
45.இனிய கீதங்கள் (கவிதை) - கார்முகிலோன்
46.இயற்கை வாழ்வு - நளினி சிவகுமார்
47.Five Point Someone - Chetan Bhagat
48.White tiger - Aravind Adiga

"பாத்தியா ! கிழக்கு புத்தகம் தவிர மத்த பதிப்பகங்கள் வெளியீட்ட புத்தகமும் படித்திருக்கிறேன்" என்றேன்.

" இதே மாதிரி...! இந்த ஆறு மாசத்துல எனக்கு வாங்கி தந்தத சொல்லுங்க... பார்ப்போம் ? ” என்றாள்.

பொல்ட்டில் இருப்பது இரவல் வாங்கி படித்த புத்தகங்கள். மற்ற எல்லாம் புத்தகங்களும் நான் காசு கொடுத்து வாங்கியது. புத்தகத்திற்காக இந்த வருடம் ஒதுக்கிய பட்ஜெட் தாண்டி புத்தகம் வாங்குவதால் இந்த கேள்வி என்னை கேட்டாள்.

“இது உனக்கு தேவையா” என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

“இத தான் வாய கொடுத்து புண்ணாக்கிக்காதே சொல்லுறாங்களோ..”

Wednesday, July 1, 2009

வெட்டப்படாத 'நிர்வாணம்'

தொப்புல் தெரிவது போல் சேலைக்கட்டி என் முன் கண்மணி நின்றாள். மெல்லிய இடை, அளவான மார்பு, சுண்டி இழுக்கும் கண்கள், முதுகுவரை கூந்தல் என்று தமிழ் சினிமாவுக்கு பொருத்தமான கதாநாயகியாக இருந்தாள். அவளின் போறாத நேரம் ஒருவனால் ஏமாற்றப்பட்டு விலை மாதுவாக தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள். வயதானவராக இருந்தாலும், இளைஞனாக இருந்தாலும் அவர்களை திருப்த்தி செய்து அனுப்பி வைப்பவள். இந்த தொழிலில் கண்மணியின் 'கஸ்டம்மர் சர்விஸில்' அடிச்சிக்க ஆளேயில்லை என்று என் நண்பன் சேகர் மூலம் கேள்வி பட்டுயிருக்கிறேன்.

சேகரிடம் கண்மணியையுடன் இரவு கழிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவன் என் வீட்டு விலாசத்தை அவளிடம் கொடுத்து என்னை பார்க்க அவளை அனுப்பினான்.

"நீங்க தானே ரவி !"

" நா கண்மணி. சேகர் அனுப்ச்சாரு..."

" உள்ள வாங்க....." என்றேன்.

இது போன்ற விஷயங்களில் எனக்கு முன் அனுபவம் இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு இது தான் முதல் முறை. வீட்டில் யாருமில்லை. என் மனைவி திருத்தனியில் இருக்கும் அவள் அம்மா வீட்டுக்கு சென்றது எனக்கு வசதியாக இருந்தது.



கண்மணியை என் படுக்கை அறைக்கு அழைத்து சென்றேன். அவள் என் அறையை ஒரு நோட்டம் விட்டு என்னை பார்த்து சிரித்தாள். நான் அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக உற்றுபார்த்தேன். குறிப்பாக அவளுடைய இடை.

" உங்களுக்கு புடவ ஒ.கேவா. வேற ட்ரெஸ் போட்டு வரவா..." என்றாள்.

"எதுக்கு ட்ரெஸ்...?" என்றேன்.

என் அறையில் பட்டாசு கொளுத்தி போட்டது போல் "ஆஹா....!!" என்று சிரித்தாள். அப்போது தான் அவள் கை பையில் மாற்று துணியுடன் வந்திருப்பதை கவனித்தேன். இருந்தும், என் கண்கள் அவள் இடையில் இருந்து எடுக்க முடியவில்லை.

" இந்த மாதிரி விஷயத்துக்கு ட்ரெஸ் தேவையில்ல தான். ஒவ்வொரு ஆம்பளைங்க ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. அதுக்கு தான்"

" புரியல...."

" சில ஆம்பலங்களுக்கு புடவ கட்டி வந்தா மூடு வரும். அத ரசிச்சு கலட்டுறதுல அவங்களுக்கு இன்னும் மூடு வரும். அந்த மாதிரி சுடிதார், மிடி, ப்ராக், ஆப் ஸாரினு... ஒவ்வொரு ஆம்பளைங்களுக்கு ஒரு டேஸ்ட்...." என்றாள்.

அவள் பேச்சை கேட்டவுடன் இடையில் இருந்து அவள் முகத்தை உற்று பார்த்தேன். அவள் சொன்னதுக்கு என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.

" ஆசைய தீத்துக்கனும்னு வராங்க. அவங்க ஆச படுற மாதிரி ட்ரெஸ் பண்ணி கழட்டுறதுல அவங்களுக்கு கிக் இருக்கு. உங்களுக்கு எப்படி ?" என்றாள்.

'கஸ்டம்மர் சர்வீஸ்' மட்டுமல்ல் 'கஸ்டம்மர் சாட்டிஸ்பேக்ஷனில்' கூட இவளை அடிச்சிக்க முடியாது என்று நினைத்தேன். அவள் புடவையில் அழகாகத் தான் இருந்தாள். ஆனால், நான் அவளை வரச்சொன்னது புடவை கட்டிய அழகை ரசிக்க அல்ல... அவளுடைய நிர்வாணத்தை. விலைமாதுவிடம் ரசிக்கப்பட வேண்டிய முதல் விஷ்யமும் அது தான். கடைசி விஷயமும் அது தான்.

" கொஞ்ச இருங்க... " என்று சொல்லி என் அறையில் இருக்கும் பீரோவை திறந்தேன். அதில் இருந்து என் மனைவியுடைய நகையை எடுத்தேன். ஒவ்வொரு நகையும் என் மனைவிக்காக பார்த்து பார்த்து நான் எடுத்தது. என் மனைவிக்கு அவள் அம்மா வீட்டு சீர்வரிசை நகையே அதிகமாக இருந்ததால் இந்த நகையை அவ்வளவாக போடுவதில்லை. அதிக நகை போடும் சந்தர்ப்பமும் என் மனைவிக்கு அமையவில்லை. அவளுக்காக நான் எடுத்த நகையை கண்மணியிடம் கொடுத்தேன்.

"எதுக்கு இவ்வளவு நக..." என்று வியப்பாக கேட்டாள்.

" ட்ரெஸ் இல்லாம... இந்த நகைய மட்டும் போட்டுட்டு வாங்க...." என்றேன்.

அதிர்ச்சி கலந்து வியப்புடன் என்னை பார்த்தாள். தன் ஆடைகளை கலைத்து நிர்வாணத்தை ரசித்த ஆண்களை பார்த்திருக்கிறாள். நிர்வாணமாக வர சொல்லி அனுபவித்த ஆண்களிடம் படுத்திருக்கிறாள். ஒன்றாய் குளித்தவன், குடி போதையில் வந்தவன், பிறந்த மேனியோடு பேசியவன் என்று பல வித ஆண்களை கடந்து வந்திருக்கிறாள். இன்று தான் முதன் முறையாக தன் நிர்வாணத்திற்கு ஒருவன் தங்கம் பூச நினைத்திருக்கிறான்.

கஸ்டம்மர் எது சொன்னாலும் மறு பேச்சு பேசாமல் செய்பவள் ஒரு கனம் யோசித்து என்னையே பார்த்தாள். தன் ஆடைகளை எல்லாம் கலைத்து விட்டு நகையை அணிந்து கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடத்தில் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அவள் மார்ப்பு நான் கொடுத்த தங்க சங்கிலி மறைத்திருந்தது. இடுப்பில் கட்டிய தங்க ஒட்டியானத்தில் மணி அவளுடைய பெண் உருப்பை மறைந்திருந்தது. என் மனைவிக்காகவே ஒட்டியானத்தில் தங்க மணிகள் தொங்குவது போல் செய்திருந்தேன். இப்போது கண்மணி அணிந்து கொண்டு தங்க மாளிகை போல் என் முன் வந்து நினறாள்.

நகைகளை அணிந்த படி என் படுகையில் உட்கார சொன்னேன். அவளும் உட்கார்ந்தாள். நான் என் கையில் ஒரு பென்ஸிலை எடுத்து சீவினேன். தங்கம் பதிந்த கண்மணியின் மேனியை வரைந்தேன். அவள் இடுப்பு, மார்ப்பு, கண்,கை, உதடு என்று அங்கம் அங்கமாக ரசித்து அப்படியே வரைந்தேன். கண்மணியும் பொறுமையாக இரண்டு மணி நேரம் அசையாமல் நான் வரைவதற்காக அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

" கொஞ்ச இருங்க... பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும் " என்றேன்.

அவள் கண்களை மெதுவாக வரைந்து ஒவியத்தை முடிதேன்.

" இப்போ ஒ.கே. ரிலாக்ஸ் அயிட்டு உங்க ட்ரெஸ போட்டுக்கோங்க...." என்றேன்.

அவள் ஒன்று புரியாமல் என்னை பார்த்தாள். எதுவும் செய்யாமல் அவளை அடையை போட சொன்னது அவளுக்கு வியப்பாக இருக்கலாம். இது என்னுடைய பொழுது போக்கு, கலை ஆர்வம் என்று அவளுக்கு தெரியாது. இது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமுமில்லை.

" அவ்வளவு தானா... என்ன வரையுறதுகா கூப்டிங்க...." என்று சொல்லி கொண்டு நான் வரைந்த ஓவியத்தை பார்த்தாள். அவளுடைய பிரம்மிப்பை கண்களில் பார்த்தேன். தன்னை இவ்வளவு தத்துருபமாக ஆபாசம் இல்லாமல் நிர்வானமாக நான் வரைந்த ஓவியம் அவளுக்கு வியப்பாக இருந்திருக்கும். தங்க நகை அணிந்து அவள் தேகத்தை இயற்கை போல் வரைந்து காலகள் பிலாஸ்டிக்கால் அழிந்துக் கொண்டு வருவது போல் வரைந்திருந்தேன்.

என் கல்லூரி நாட்களில் இது போல் எத்தனையோ விலைமகளை நிர்வணமாக வரைந்து மரம், கடல், மலை என்று சேர்த்திருக்கிறேன். அதில் அவர்களுடைய நிர்வாணம் தெரியவதில்லை. என்னுடைய கலை தான் தெரியும். எத்தனையோ என் ஓவியத்திற்காக பரிசுகள் வாங்கியிருக்கிறேன். அப்பா சம்பாதித்த சொத்துக்கள் இருந்தாலும் இது போல ஓவியம் வரைவதில் தான் எனக்கு சந்தோஷம்.

" உங்க பெய்ட்டிங். ரொம்ப அழகா இருக்கு. இதுல என்ன சொல்லுறீங்க....?"

“ இயற்கை நிர்வாணமா இருந்தா தான் அழகு... பிலாஸ்டிக் ஆடை கொடுத்தா அழிஞ்சு போய்ட்டும்”,என்றப்படி புன்னகையுடன் மூவாயிரத்தை நீட்டினேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

" ஒண்ணும் நடக்கல்ல.. எதுக்கு பணம்" என்றாள்.

" இந்த பணம் என் பெய்டிங்க்கு மாடலிங் பண்ணதுக்கு...." என்று சொல்லி கொடுத்தேன். ஆனால், அவள் வாங்க மறுத்தாள்.

" இந்த உடம்ப நிர்வாணமா நிறைய பேர் பார்த்திருக்காங்க... முதல் தடவையா இயற்கையோட பார்க்க போறாங்க... அதுக்கு பணம் வாங்கி உங்க கலைய அசிங்க படுத்த விரும்பல...." என்றாள்.

தன் உடலில் இருந்து நகைகளை கலட்டி நான் கொடுத்த தங்க பேட்டியில் வைத்தாள். அவள் அணிந்து வந்த புடவையை மீண்டும் அணிந்து கொண்டாள். நடு இரவானதால் இரவு தங்கி காலை போக சொன்னேன்.

"குடும்ப பொண்ணுங்க தான் இராத்திரி போக பயப்படனும். என் வேலைய இராத்திரியில தானே..." என்று சொல்லி நகர்ந்தாள்.

திடீர் என்று என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என்னை திரும்பி பார்த்தாள்.

" உங்க கிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே...."

" சொல்லுங்க...." என்றேன்.

" நீங்க சுகத்துக்காக வர சொன்னீங்கனு நினைச்சேன். வரையுறதுக்கு உங்க மனைவிய இதே மாதிரி நிக்க சொல்லி வரஞ்சிருக்கலாமே. யாருக்கு தெரிஞ்சிருக்க போது..."

" என் மனைவியோட நிர்வாணத்த நா காமத்தோடு பார்க்குறேன். உங்க மாதிரி பொண்ணுங்களோட நிர்வாணத்த கலை கண்ணோட்டமா பார்க்குறேன்" என்றேன்.

கலை இருக்கும் இடத்தில் காமம் வரதாது. காமம் இருக்கும் நேரத்தில் கலை வராது. என்றைக்கும் கலையையும், காமத்தையும் நான் சேர்த்து வைத்து பார்ப்பதில்லை. கண்மணி கதவு திறந்து வெளியே செல்லும் நேரத்தில்.... வெளியே இருந்து "டீரிங்... டிரிங்..." காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

ஊருக்கு சென்ற மனைவி வந்து விட்டாளோ என்ற பயம் என்னை ஆட்கொண்டது. அவளுக்கு இது போன்ற விஷயத்தை புரிந்துக் கொள்ளும் அறிவில்லை. அப்படியே புரிந்துக் கொண்டாலும் தன் கணவன் இன்னொரு பெண்ணின் நிர்வாணத்தை பார்ப்பதை யார் தான் பொருத்துக் கொள்வார். கண்மணிக்கு உள்ளூர பயன் இருந்தது. தன்னால் என் குடும்ப வாழ்க்கை கெட்டு விடுமோ என்று பதறினாள். நான் கண்மணியை எங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று மறைந்திக்க சொன்னேன்.

பதினெட்டு டிகிரி எ.சி இருந்தும் எனக்கு வேர்த்தது. பயந்தப்படி கதவை திறந்தேன். என் நண்பன் சேகர் நின்றுக் கொண்டு இருந்தான்.

"டேய் எதுகுடா இந்த நேரத்துக்கு வந்த..." என்று பயம் கலந்து கோபத்தில் கத்தினேன்.

" டென்ஷன் ஆகாத மச்சி...! ஒரு பொண்ணு அனுப்பி வெச்சோமே. எப்படி இருந்துச்சுனு கேட்கலாம் வந்தேன்." என்றான்.

" அது நாளைக்கு கேக்குறது. ஒரு நிமிஷத்துல பயந்திட்டேன்."

" என்ன பொண்ணாட்டி ஞாபகமா...." என்று கேனத்தனமாக சிரித்தப்படி என் அறையை தேடி பார்த்தான்.

" எங்கடா கண்மணி. போய்ட்டாலா...." என்றான். அவன் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது. இந்த நேரத்தில் அவன் அதுக்கு கண்மணியை தேடுகிறான் என்று புரிந்தது. இதற்கு மேல் அவனிடம் பேசவும் எனக்கு கூச்சமாக இருந்தது. பூஜை அறையில் ஒழிந்து இருக்கும் கண்மணியை வெளியே வர சொன்னேன். என்ன நடந்தது என்று தெளிவாக சேகரிடம் விளக்கினேன்.

" நீ வேஸ்ட் மச்சி ! காலேஜ் படிக்கும் போது இப்படி தான் இருந்த. இப்போவுமா... " என்று சொல்லி கண்மணியை ஒரு மாதிரியாக பார்த்தார். " மச்சி ! இவ்வளவு தூரம் இவ வந்துட்டா... சும்மா அனுப்ப முடியுமா... இன்னைக்கு ஒரு நாள் உன் ரூம நாங்க யூஸ் பண்ணிக்கிறோமே..." என்றான்.

செய்த உபகாரத்திற்கு பதில் உதவி கேட்கிறான். பாவம் என்னால் இன்று இரவு கண்மணிக்கு வருமானம் இல்லாமல் போய்விட்டது. வேறு வழியில்லாமல் 'சரி' என்றேன். அவர்கள் இருவரும் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டார்கள்.

நான் ஹாலில் படுத்துக் கொண்டேன். என் மனைவிக்காக செய்த நகையை ஒரு விலை மாதுவுக்கு போட்டது நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். " என் கலைக்கு மனைவிக்காக ஆசையாக செய்த நகையின் மதிப்பை குறைத்து விட்டேனே " என்று அழுதப்படி படுத்தேன். குற்றவுணர்ச்சியில் எனக்கு தூக்கம் வரவில்லை.

அந்த ஓவியத்தை ஓவிய கண்காட்சியில் வைத்தேன்.

" ச்சே... அந்த இடத்த போய் மறைச்சு வரைஞ்சிருக்கான் பாரு. கொஞ்சம் காட்டுற மாதிரி வரைய கூடாது" என்று ஒருவன் தன் அருகில் இருந்த நண்பனிடம் கூறினான்.

----

தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து "உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம் !

பின்குறிப்பு :- ஒன்று முதல் மூன்று பக்கங்கள் என்று அறிவித்திருந்த "உயிரோடை" சிறுகதை போட்டி, 1500 வார்த்தைகள் வரை இருக்கலாம் என்று அறிவித்திருப்பதால்... நானே சென்சார் செய்த 'நிர்வாணம்' கதை எந்த வித சென்சார் இல்லாமல் மீண்டும் (6 பக்கங்கள்) பதிவெற்றியிருக்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails