வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 30, 2009

வீடு வாடகைக்கு - 4

காட்சி - 1, காட்சி - 2, காட்சி - 3

காட்சி - 4

ஏகாம்பரம் : வாப்பா... என்ன இந்த மாசம் வாடகையா...
சுந்தர் : இல்ல ஸார்...எனக்கு வேலை போய்ட்டுச்சு,, ஊருக்கு போலாம் இருக்கேன்.

ஏகாம்பரம் : நேத்து வரைக்கும் வேலைக்கு போய்ட்டு தானே இருந்த !
சுந்தர் : இப்போ இப்படி தான் ஸார்... எப்போ வேலையில இருந்து தூக்குறாங்கனு தெரிய மாட்டீங்குது...

ஏகாம்பரம் : சரிப்பா....நீ ஊருக்கு போய் இரண்டு மாசம் இருந்திட்டே வா...
சுந்தர் : நா ரூம்ம காலிப் பண்ணுறேன்.

ஏகாம்பரம் : ரொம்ப சந்தோஷம்... ! ( அப்பாடா இனிமே இரண்டு பேர சமாளிக்க தேவையில்ல...)
சுந்தர் : அட்வான்ஸ் இப்ப கொடுத்தீங்கனா..!

ஏகாம்பரம் : யோவ் ! Notice கொடுக்காம ஒரு லட்சம் கேட்டா என்ன பண்ணுறது,
சுந்தர் : Notice கொடுக்காம தான் எங்கள வேலைய விட்டு அனுப்சாங்க...



ஏகாம்பரம் : சரி...! இரண்டு நாள்ல எப்படியாவது பணத்த கொடுக்குறேன்.

[ சுந்தர் மாடிக்கு போகாமல் வெளியே செல்கிறான். கொஞ்ச நேரத்தில் ரங்கன் வீட்டுக்கு வருகிறான். ]

ஏகாம்பரம் : ஐயோ...ராத்திரி வர வேண்டியவ பகல்ல வந்திருக்கானே.... என்னப்பா உடம்பு சரியில்லையா...
ரங்கன் : எனக்கு வேல போய்டுச்சு...

ஏகாம்பரம் : உனக்கும் வேல போய்டுச்சா...
ரங்கன் : உனக்கும்னா....!

ஏகாம்பரம் : ஒண்ணுமில்ல சொல்ல வந்தத சொல்லு..
ரங்கன் : ஊருக்கே போலாம் இருக்கேன். அட்வான்ஸ் கொடுத்தா...

ஏகாம்பரம் : அடபாவிங்களா... ! ( இப்படி எல்லாரும் சேர்ந்து அட்வான்ஸ் கேட்டா...நா எங்க போறது...) அட்வான்ஸா சொல்லுறதுக்கு பேரு தான் அட்வான்ஸ்... இப்ப கேட்டா என்ன பண்ணுறது...?
ரங்கன் : இப்பவே தரனும் இல்ல.... இரண்டு நாள் கழிச்சு தாங்க.

[ ரங்கன் மாடிக்கு செல்ல...]

ஏகாம்பரம் : இரு..இரு.. மேல கிளினிங் வேல நடக்குது.
ரங்கன் : என்ன ஸார்... எப்ப பார்த்தாலும் கிளிங் வேல சொல்லுறீங்க..

ஏகாம்பரம் : ( அவசரத்து அந்த போய் தேனே வருது... )நீ தான் நிறைய கோட்டு போட்டிருக்க. அத கிளின் பண்ண வேண்டாம். போ..போ.. போய்ட்டு கொஞ்ச நேரம் கலிச்சு வா...
ரங்கன்: ஆபிஸ்ல இதே தான் சொன்னாங்க... நீங்களுமா...!!

[சொல்லி விட்டு ரங்கன் வெளியே செல்கிறான். கொஞ்ச நேரத்தில் ரங்கனும், சுந்தரும் சேர்ந்து வருகிறார்கள் ]

ஏகாம்பரம் : என்னது இரண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க.... தனி தனி வந்தாலே சமாளிக்க முடியாது...
சுந்தர் : ஏய்யா...ஒரே வீட்ட இரண்டு பேருக்கு வாடக விட்டு இரண்டு அட்வான்ஸ் வாங்கியிருக்க...

ரங்கன் : இதுவரைக்கும் நாங்க கொடுத்த வாடக, அட்வான்ஸ் கொடுக்குற... இல்ல கன்ஸூமர் கோர்ட்க்கு போவோம்.
ஏகாம்பரம் : பிச்சக்காரனில இருந்து சாப்ட்வேர் வரைக்கு கன்ஸூமர் கோர்ட்க்கு சொல்லி மிரட்டுறாங்களே...

சுந்தர் : பணத்த கொடுக்குறீயா இல்லையா...
ஏகாம்பரம் : இருங்கையா... கொண்டுவந்து கொடுக்குறேன்.

[ஏகாம்பரம் உள்ளே சென்று பணத்தை எடுத்து வருகிறான். சுந்தர், ரங்கன் பணத்தை வாங்கி செல்கிறார்கள். ]

கார்த்திக் : பாத்தியப்பா... இதுக்கு தான் ரொம்ப பேராசப்படக் கூடாது சொல்லுறது..
ஏகாம்பரம் : இப்ப எதுக்கு இத சொல்லுற...

கார்த்திக் : 'டிராம்மானா ஒரு மெசேஜ் சொல்லனும்ல..

[ ஏகாம்பரம் வீடு காலி என்று போட் மாட்டுகிறான் ]

ப்ரோக்கர் : வீடு காலி போடு பார்த்தேன். மூனு ஷிப்ட்ல வேல செய்ற பசங்க. ஒரு ரூம்ம மூனு பேருக்கு வாட விடுவோம்.
ஏகாம்பரம் : உன்ன தான்டா தேடுறேன். டேய் கார்த்திக் உன்ன பீரோ சொன்னவ வந்திருக்கான் வாடா...

[ ஏகாம்பரம், கார்த்திக் இருவரும் சேர்ந்து பிரோக்கரை அடிக்கிறார்கள். ]

-- முற்றும் --

Monday, June 29, 2009

வீடு வாடகைக்கு - 3

காட்சி - 1 , காட்சி - 2

காட்சி - 3

இரண்டு மாதங்களுக்கு பிறகு...

[ ஏகாம்பரம்,கார்த்திக், ரங்கன், 'BPO' சுந்தர், ராமநாதன் ]

ரங்கன் : ஸார் ! இந்த மாச வாடகை...
ஏகாம்பரம் : ரொம்ப தெங்க்ஸ் ! கேட்காம வாடக தர...

ரங்கன் : ஒரு சின்ன விஷயம்... என் ரூம்முல யாரோ தங்கி இருக்குற மாதிரி இருக்கு. வச்ச இடத்துல பொருள் இருக்க மாட்டீங்குது...
ஏகாம்பரம் : அதுவா ! அந்த பையன் கிட்ட சொல்லுறேன்...

ரங்கன் : என்னது அந்த பையனா...!!
ஏகாம்பரம் : அந்த பையனா சொன்னேன்..! ‘என்’ பையன் படிக்கிறதுக்கு மாடிக்கு வரான்ல அதான். அவன் கிட்ட சொல்லிடுறேன்.

ரங்கன் : அப்புறம் இன்னொரு விஷயம்.
ஏகாம்பரம் : என்ன ஜட்டிய காணோமா...?



ரங்கன் : ஐயோ இல்ல ஸார் ! ஊருல இருந்து அப்பா வராரு... ஒரு நாள் இங்க தங்குறாரு.
ஏகாம்பரம் : அதெல்லாம் முடியாது. உனக்கு மட்டும் தான் வாடகைக்கு வீடு விட்டேன். உங்க அப்பா வர கூடாது.

ரங்கன் : என்ன ஸார் ! இந்நேரம் அப்பா சென்டரல் இறங்கி வேளச்சேருக்கு வந்திட்டு இருப்பாரே...!
ஏகாம்பரம் : ஐயோ...அந்த பையன் வர நேரமாச்சு... உங்க அப்பா இருந்தா எப்படி சமாளிப்பேன்.

[ரங்கனின் அப்பா ராமநாதன் உள்ளே வருகிறார்.]

ராமநாதன் : ரங்கா ! எப்படி இருக்க ?
ரங்கன் : நல்ல இருக்கேன் அப்பா ! இவர் தான் அவுஸ் ஓனர்.

ராமநாதன் : வணக்கம் !
ஏகாம்பரம் : வணக்கம்

ராமநாதன் : மாடிக்கு போய்ட்டு ரிப்ரஷ் பண்ண்ணிடு வரேன்..
ஏகாம்பரம் : உக்காருங்க கொஞ்ச நேரம் பேசுவோம்.

ராமநாதன் : ட்ரெயின்ல வந்த கலைப்பு...பத்து நிமிஷத்துல வந்திடுறேன்.
ஏகாம்பரம் : சீக்கிரம் வந்திடுங்க ஸார்..!

[ இருவரும் மாடிக்கு சென்றனர்]

ஏகாம்பரம் : இப்ப என்ன பண்ணுறது தெரியலையே

[ ‘BPO’ சுந்தர் வீட்டுக்குள் வருகிறான் ]

சுந்தர் : குட் மார்னிங் ஸார் !
ஏகாம்பரம் : தம்பி ! தம்பி ! மாடிக்கு போகாதீங்க...

சுந்தர் : எதுக்கு ?
ஏகாம்பரம் : மேல கொஞ்சம் கிளினிங் வேல நடக்குது... நீங்க என் ரூம்ல எ.சி எல்லாம் போட்டு இருக்கேன். அங்க தூங்குக...

சுந்தர் : உங்களுக்கு ப்ராப்ளம் இல்லையே...
ஏகாம்பரம் : நீங்க மேல போனா தான் எனக்கு ப்ராப்ளமே...!

[சுந்தர் உள்ளே சென்று தூங்கிறான். மாலை வரை ராமநாதன் கீழே இறங்கி வரவில்லை]

ஏகாம்பரம் : பத்து நிமிஷத்துல வரேன் சொன்னான். சாய்ந்திரமாச்சி வராம இருக்கான். இவன் குழிக்குறானா பாத்ரூம்லே தூங்கிட்டானா !!

[சுந்தர் எழுந்து வெளியே வருகிறான் ]

சுந்தர் : ரொம்ப தெங்க்ஸ்... உங்க ரூம் நல்ல இருக்கு. நா மாடிக்கு போய் குழிச்சிட்டு வேலைக்கு கலம்புனும்
ஏகாம்பரம் : இரு..இரு..! என்னப்பா நீ காலையில செய்யுற வேலை எல்லாம் இராத்திரி செய்யுற..

சுந்தர் : நைட் ஷிப்ட் வேல செய்யுறவங்க எல்லாரும் அப்படிதான்.
ஏகாம்பரம் : ஓ அப்படியா...!! நீ.. நீ.. நீ.. என் வீட்ட முழுசா பார்த்திருக்க இல்ல. கார்த்திக் அண்ணனுக்கு வீட சுத்தி காட்டி...

[ கார்த்திக் ‘BPO’ சுந்தரை அழைத்து செல்ல... சரியா ராமநாதன் வீட்டுக்குள் நுழைகிறார்.]

ராமநாதன் : ஸார் ஸார் ! ட்ரெயின்ல வந்த கலைப்பு... தூங்கிட்டேன்.
ஏகாம்பரம் : பாத் ரூம்முலேவா...!!

ராமநாதன் : பேட் ரூம்ல தான். பையனும் வேலைக்கு போய்ட்டானா... என்ன எழுப்ப ஆளியில்ல..
ஏகாம்பரம் : என் கிட்ட முன்னாடி சொல்லியிருந்தா எழுப்பியிருப்பேனே..!

ராமநாதன் : அது யாரு உங்க பெரிய பையனா ! [சுந்தரை பார்த்து கேட்கிறார்]
ஏகாம்பரம் : ஆமா...

[வீட்டை சுத்தி பார்த்த’BPO’ சுந்தர் ஏகாம்பரம் அருகே வருகிறான் ]

சுந்தர் : ஒ.கே ஸார் ! உங்க வீடு ரொம்ப நல்ல இருக்கு. நா மாடிக்கு போறேன்.
கார்த்திக் : அப்பா நானும் அவர் கூட போறேன்.

[ஏகாம்பரம் ஒன்றும் புரியாமல் விழிக்கிறான் ]

ராமநாதன் : உங்க பையன் சொன்னீங்க... உங்க ஸார் கூப்பிடுறான்.
ஏகாம்பரம் : அவன்.. அவன் மரியாதையான பையன்... அப்பாவ கூட 'ஸார்' கூப்பிடுவான்

ராமநாதன் : இரண்டாவது பையன் 'அப்பா' கூப்பிடுறான்.
ஏகாம்பரம் : அவன் மரியாத தெரியாத பையன். அதான் 'அப்பா' கூப்பிடுறான்.

ராமநாதன் : (ஓ பட்டினத்துல 'ஸார்'னா ரொம்ப மரியாத போலிருக்கு... ) சரி ! அத விடுங்க...! என் பையன் எப்படி ? நேரத்துக்கு வீட்டுக்கு வரானா....!
ஏகாம்பரம் : கரேட்டா தூங்குறதுக்கு வீட்டுக்கு வரான். என்ன இரண்டு வாட்டி பகல் நேரத்துல பொண்ணுங்க கூட வண்டியில போறத பார்த்தேன்.

ராமநாதன் : என் பையன் கொஞ்சம் ஜாலியான டைப். சரி ஸார் ! நா ஊருக்கு போறேன். பையனுக்கு போன் போட்டு சொல்லிட்டேன். மாடிக்கு போய் என் துணி எல்லாம் எடுக்கனும்.
ஏகாம்பரம் : இருங்க எதுக்கு உங்களுக்கு சிரம்மம். ( மாடியை பார்த்து ) டேய் கார்த்திக் ! ஸார் துணி எல்லாம் எடுத்திட்டு வா...!

[ கார்த்திக் மாடியில் இருந்து எல்லா துணியும் பொட்டியில் வைத்து கொண்டு வருகிறான்.]
கார்த்திக் : இந்தாங்க...!

ராமநாதன் : இது என் பொட்டியில்லைங்க…
ஏகாம்பரம் : உங்க பொட்டி எந்த கலரு...??

ராமநாதன் : உங்க மாதிரி கறுப்பு...
ஏகாம்பரம் : டேய் கார்த்தி மேல் 'சிவப்பு' கலர் பொட்டி இருக்கும் எடுத்துவா..

(கார்த்திக் மீண்டும் மூச்சிரைக்க பொட்டி எடுத்து வருகிறான்.)

கார்த்திக் : இந்தாங்க...!
ராமநாதன் : தம்பி ! பாத் ரூம்ல என் சோப்பு இருக்கு அதையும் எடுத்திட்டு வந்திரேன்.

[கார்த்திக் மீண்டும் சென்று சோப்பு டப்பாவோடு வருகிறான்]

ராமநாதன் : ஐயோ ! என் கண்ணாடி டேபிளைய இருக்கு. அதையும் எடுத்திட்டு வந்திரேன்.
கார்த்திக் : போங்க ஸார் ! என்னால முடியல்ல மூச்சு வாங்குது.

ராமநாதன் : சரி ! நானே மாடிக்கு போய் எடுத்துக்கிறேன்.
ஏகாம்பரம் :டேய் ! உனக்கு மூச்சு வாங்குறதால என் மூச்சு போய்டும் போல இருக்கே . போய் எடுடா !

ராமநாதன் : இல்லனா அந்த மரியாதைனா பையன எடுத்து வர சொல்லுங்க...
ஏகாம்பரம் :ஐய்யோ வேண்டாம் ஸார்... இவனே எடுத்து வருவான். எடுத்து வாடா...

[ கார்த்திக் மீண்டும் மாடிக்கு சென்று எடுத்து வருகிறான் ]

ராமநாதன் : சரி ஸார் ! வீட்டுக்காரம்மா எப்ப வருவாங்க...!
ஏகாம்பரம் : அடுத்த வாரம் வராங்க..!

ராமநாதன் : அப்படியா... அடுத்த வாரம் வந்து ஒரு மாசம் தங்கிட்டு போற மாதிரி வரேன்.
ஏகாம்பரம் : என்னது ஒரு மாசம்மா.......!!

[ ராமநாதன் பொட்டியை எடுத்துக் கொண்டு செல்கிறான் ]

கார்த்திக் : ஏப்பா ! உங்களுக்கு வேண்டாத வேல. பேசாம ஒருத்தர காலி பண்ண சொல்லுங்க..
ஏகாம்பரம் : அதாண்டா..நானும் யோசிக்குறேன். என்னால சமாளிக்க முடியல்ல..

[‘BPO’ சுந்தர் உள்ளே வருகிறான்]

சுந்தர் : நா வேலைக்கு போறேன். ஒரு சின்ன விஷயம் ?
ஏகாம்பரம் : என்னது ?

சுந்தர் : நாளைக்கு காலையில அம்மா ஊருல இருந்து வராங்க.. அவங்கிட்ட இந்த சாவி கொடுத்திடுங்க...
ஏகாம்பரம் : என்னது 'அம்மா'வா???? டேய் அப்பாவ சமாளிக்கலாம், தாத்தாவ சமாளிக்கலாம்... அம்மாவ சமாளிக்க முடியாதுடா... பேசாம அவங்க வேற இடம் பார்த்து போக சொல்லு...!!

(தொடரும்.... )

Sunday, June 28, 2009

வீடு வாடகைக்கு - 2

காட்சி - 1 படிக்க

காட்சி - 2

[ ஏகாம்பரம், பிச்சைக்காரன் ( பிரோக்கர் கந்தசாமி), கார்த்திக், ரங்கன், 'BPO' சுந்தர் ]

அடுத்து சாப்ட்வேர் என்ஜினியர்

ஏகாம்பரம் : யோவ் ப்ரோக்கர் ! பிரச்சனையில்லாத சாப்ட்டான வாடகை தர ஆள காட்டு..

ப்ரோக்கர் : கவலப்படாதீங்க அடுத்து வர போறது சாப்ட்வேர் இன்ஜினியர் தான்.

[ போன் போட்டு 'சாப்ட்வேர்' ரங்கனை அழைக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரும் அந்த வீட்டுக்கு வருகிறான். ]

ரங்கன் : ஸார் ! உள்ள வரலாமா...!
ப்ரோக்கர் : வாங்க ரங்கன் ( ஏகாம்பரத்திடம்) இவர் பேரு ரங்கன். சாப்ட்வேர் கம்பெனியில வேல செய்யுறாரு

ஏகாம்பரம் : ஓ... அப்படியா ! தம்பி உங்க கம்பெனியில எந்த மாதிரி வேல செய்யுறீங்க..
ரங்கன் : கம்ப்யூட்டர்ல கோடிங் அடிக்கிறது..



ஏகாம்பரம் : குறுக்கலையா... நெடுக்கலையா....?
ரங்கன் : இல்லைங்க... லைன் பை லைனா கோர்ட் அடிப்போம். உங்களுக்கு எப்படி சொல்லனும் புடியல்லையே...

ஏகாம்பரம் : டி.வியில புரியாம கோடு வர மாதிரி... புரியாம கோர்டிங்க் அடிப்பீங்க..
ப்ரோக்கர் : ஸார் ! அவரு எந்த வேல செஞ்சா என்ன ... நீங்க சொல்லுற வாடகை தராரா கேளுங்க...

ஏகாம்பரம் : மாச வாடக 10,000 ! அட்வான்ஸ் ஒரு லட்சம். என் சின்ன பையன் அடிக்கடி மாடி ரூம்ல தான் படிப்பான். நீ வெளியே போகும் போது உன் ரூம் சாவி என் கிட்ட கொடுத்திட்டு போகனும்.
ரங்கன் : (கொஞ்ச நேரம் யோசித்து) சரிங்க..! ஆனா ஒரு சின்ன ரெக்வெஸ்ட்.

ஏகாம்பரம் : சொல்லு...
ரங்க : நா காலையில போய்ட்டு ராத்திரி தான் வருவேன். வீட்டுல இருக்குற என் பொருள பத்திரமா பாத்துக்கனும்.

ஏகாம்பரம் : கவலப்படதா... என் சின்ன பையன் உன் பொருள பத்திரமா வச்சிப்பான்....ச்சே பாத்துப்பான். போதுமா.
ரங்கன் : அப்போ...இப்பவே என் திங்க்ஸ், பணம் கொண்டு வந்து வெச்சிடுறேன். சாய்ந்திரம் வந்து அட்வான்ஸ் கொடுக்குறேன். எனக்கு ஒன் அவர் தான் பரிமிஷன் கொடுத்தாங்க. நான் சீக்கிரம் போகனும். வரேன் ஸார் !

( ரங்கன் அவசரமா செல்கிறான்.)

ஏகாம்பரம் : ப்ரோக்கர் ! சொன்ன மாதிரி பார்ட்டி கொண்டு வந்திட்ட...உன் கம்மிஷன் எவ்வளவு ?

( 'BPO' சுந்தர் உள்ள வருகிறார்)
சுந்தர் : Is any Room available for accomadation ?
ஏகாம்பரம் : யாருய்யா அவன்... உன் மாதிரி இங்கிலீஷ்ல பிச்ச எடுக்குறவனா...

ப்ரோக்கர் : எங்க சங்கத்துல இவன பார்த்தேயில்ல...இருங்க... ( சுந்தரிடம் ) தம்பி ! நல்லா பேசுறீங்க...ஆனா ஒண்ணும் புரியல்ல...

சுந்தர் : ஸார் ! இங்க வீடு காலியா இருக்கா...
ப்ரோக்கர் : நீங்க யாரு..?

சுந்தர் : என் பேரு சுந்தர்.BPO கம்பெனியில வேலை செய்யுறேன். ராத்திரி போன காலையில தான் வருவேன்.
ஏகாம்பரம் : இப்ப தான் ஒருத்தனுக்கு வாடக...

( ப்ரோக்கர் ஏகாம்பரத்தை தனியாக அழைத்து செல்கிறான்)

ப்ரோக்கர் : வீட்டுக்கு வர ஸ்ரீ தேவியும், கொல்ல பக்கமா வர லட்சுமி வேண்டாம் சொல்ல கூடாது..
ஏகாம்பரம் : ஸ்ரீ தேவி, லட்சுமி சொல்லுற... உண்மைய சொல்லு நீ எந்த மாதிரி ப்ரோக்கர் ?
ப்ரோக்கர் : விளையாடதீங்க ஸார் ! அவ காலையில போய் ராத்திரி வருவான். இந்த பைய ராத்திரி போய்ட்டு காலையில வருவான். ஒரே வீட்ட இரண்டு பேருக்கு வாடகை விடுவோம்.

ஏகாம்பரம் : யோவ் ! வம்பாய்யிடும் வேண்டாம்.
ப்ரோக்கர் : யோசிச்சு பாருங்க.. 20 ஆயிரம் வாடகை, இரண்டு லட்சம் அட்வான்ஸ் எப்படியிருக்கும்.

ஏகாம்பரம் : நல்லா தான் இருக்கு... ஆனா வேண்டாம்...
ப்ரோக்கர் : எல்லா நா பாத்துக்கிறேன் வாங்க ( சுந்தரை பார்த்து ) தம்பி ! 10,000 வாடகை, ஒரு லட்சம் அட்வான்ஸ் ஓ.கேவா ?

சுந்தர் : சரிங்க... ராத்திரி வந்து என் பொட்டி எல்லாம் வச்சிட்டு குடிவந்திடுறேன்.
ஏகாம்பரம் : ஏன்ப்பா ராத்திரி வர...

சுந்தர் : ராத்திரி வேல செஞ்சு செஞ்சு... எல்லா வேலையும் ராத்திரி செஞ்சே பழகி போச்சு..

( சுந்தர் வெளியே செல்கிறான்.)

ப்ரோக்கர் : ஸார் ! ஒரே வீட்டுக்கு இரண்டு பார்ட்டி பிடிச்சு கொடுத்திருக்கேன். கம்மிஷன் 20% கொடுத்தா நல்லாயிருக்கும்.

ஏகாம்பரம் : சரி ! இந்தா நாலாயிரம்...

ப்ரோக்கர் : நா கேட்டது அட்வான்ஸ் இருந்து 20%.

ஏகாம்பரம் : என்னது நாற்பதாயிரமா... இவங்க ஒரு வருஷம் மேல இந்த வீட்டுல தங்கட்டும். அப்புறம் பார்க்கலாம்.

(கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ப்ரோக்கர் வெளியே செல்கிறான். அவர் கொஞ்ச நேரத்தில், மகன் கார்த்திக் உள்ளே வருகிறான். )

ஏகாம்பரம் : வாடா ! எக்ஸம் எப்படி எழுதுன... என்னடா ! நெத்தியில இங்க்கு !
கார்த்திக் : எக்ஸம் எழுதும் போது பேப்பர்ல இங்க் கொட்டிடுச்சு... அதான் நெத்தியில இருக்குற விபூதிய வச்சு உரிஞ்சிட்டேன்.

(தொடரும்.... )

Saturday, June 27, 2009

வீடு வாடகைக்கு - 1

காட்சி - 1

[ ஏகாம்பரம், பிச்சைக்காரன் ( பிரோக்கர் கந்தசாமி), கார்த்திக், வரதன்]

ஏகாம்பரம் பேப்பர் படித்துக் கொண்டு இருக்கிறான். வெளியே பிச்சைக்காரன் பிச்சை கேட்க வருகிறான்.

பிச்சைக்காரன் : ஐய்யா... சாமி !
ஏகாம்பரம் :டேய் கார்த்திக்..! உள்ள பழைய சாதம் இருக்கு... வெளியே இருக்குற பிச்சகாரனுக்கு போடு !

( உள்ளே இருந்து ‘குண்டு’ கார்த்திக் பிச்சைக்காரனுக்கு சாதம் கொண்டு வருகிறான் )

பிச்சைக்காரன் : என்ன பழைய சாதம் கொண்டு வர... புதுசா செஞ்சிக் கொண்டு வா..!

(பேப்பர் படித்துக் கொண்டு இருந்த ஏகாமபரம் கோபமாக எழுந்து வருகிறான்)

ஏகாம்பரம் : பிச்சைக்காரனுக்கு பழைய சாதம் போடாம...என்னத பொடுறது...?

பிச்சைக்காரன் : பழைய சாதம் போட்ட... நான் கன்ஸூம்மர் கோர்ட் போய் உன் மேல கேஸ் போடுவேன்.



ஏகாம்பரம் : அடபாவி ! பிச்சைக்காரங்க கன்ஸூம்மர் கோர்ட்க்கு போக ஆரம்பிச்சா... பழைய சாதத்த அவங்க வீட்டு புருஷங்க தான் சாப்பிடனும்...

ஒரு நிமிடம் பிச்சைக்காரனை உற்று பார்க்கிறார்.

ஏகாம்பரம் : உன்ன பார்த்தா பிச்சக்காரன் மாதிரி தெரியல... பென்ட்,ஷர்ட் போட்டு பக்கா பார்மல்ஸ்ல இருக்க...

பிச்சைக்காரன் : இது தான் எங்க ட்ரெஸ் கோட்...

ஏகாம்பரம் : உங்களுக்கு ட்ரெஸ் கோட்லாம் வந்தாச்சா...! (Software Enggineer மாதிரி பேசுறான்) சரி..சரி.. இனிமேட்டு தான் சமைக்கனும். பழச சாப்பிட்டா சாப்பிடு இல்லனா கலம்பு...

பிச்சைக்காரன் : சாப்பிடு இல்லனா விடு... “வீடு வாடகைக்கு” போர்டு போட்டிருக்க..வாடகை எவ்வளவு...?
ஏகாம்பரம் : எதுக்கு கேக்குற..

பிச்சைக்காரன் : நான் பார்ட் டைம்மா பிரோக்கரா இருக்கேன் !
ஏகாம்பரம் : ஏன்டா... என் பொண்டாடி வீட்டுல இல்லன்சிட்டு... என்ன தப்பு பண்ண வைக்க நினைக்கிறியா..

பிச்சைக்காரன் : ஸார் ! நா அந்த மாதிரி பிரோக்கர் இல்ல... வீட்டு பிரோக்கர் !
ஏகாம்பரம் : வீட்டு ப்ரோக்கரா... இப்படி தெளிவா சொல்லு.. ('அம்பாசமுத்திரத்துல அம்பானி' இவனா இருப்பானா....)

பிச்சைக்காரன் : உள்ள போய் மத்த விஷயம் பேசலாமா...
ஏகாம்பரம் : பென்ட், ஷர்ட் போட்டு நீட்டா தான் இருக்க...சரி ! உள்ள வா..

பிச்சைக்காரன் : உங்க வீட்டுல எத்தன பேரு ?
ஏகாம்பரம் : நானும், என் பொண்டாடி, இரண்டு பசங்க... பெரிய பையனும், பொண்டாடியும் ஊருக்கு போய்யிருக்காங்க. இவ என் இரண்டாவது பையன் கார்த்திக். +2 படிக்கிறான்.

பிச்சைக்கார ப்ரோக்கர் : என்ன ஸார் ! இரண்டாவது பையன் சொன்னீங்க... இரண்டு பேரு வந்து நிக்குறாங்க..
ஏகாம்பரம் : யோவ் ! அவ ஒருத்த தான் கண்ணு வைக்காத...

ப்ரோக்கர் : கண்ணா... பிரோவே வைக்கலாம் போல இருக்கு...

கார்த்திக் : அப்பா ! நீங்க பேசிட்டு இருங்க எனக்கு எக்ஸமுக்கு டைமாச்சு...
ஏகாம்பரம் : இருப்பா... ( பூஜை படத்தில் இருந்து விபூதி நெற்றியில் பூசி) நல்லப்படியா பரிட்சை எழுது...

கார்த்திக் : ஐயோ அப்பா ! கண்ணுல விபூதிய போட்டீங்க.. பக்கத்து பையன் பேப்பர் பார்த்து எழுதலாம் இருந்தேன். இப்போ என் பேப்பர் பார்க்க முடியாம இருக்கே..!

ஏகாம்பரம் : சாமி விபூதிடா... காபி அடிக்கிறதுக்கு கூடவே இருப்பாரு..! எவன் பேப்பரையோ பார்த்து நல்லா எழுது..

( கார்த்திக் வெளியே செல்கிறான் )

ஏகாம்பரம் : சொல்லுப்பா...!
ப்ரோக்கர் : வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு ?

ஏகாம்பரம் : வாடகை 5000. அட்வான்ஸ் 50,000.
ப்ரோக்கர் : என்ன ஸார் ! வேளச்சேரியில வீடு வச்சிட்டு கம்மியா வாடகை சொல்லுறீங்க.. 10,000 வாடகை, 1 லட்சம் அட்வான்ஸ் கொடுக்குற பார்ட்டியா புடிச்சி தரேன்.

ஏகாம்பரம் : அவ்வளவு வாடகைக்கு ஆள் வருவாங்களா...!
ப்ரோக்கர் : நாலு பார்ட்டி இருக்காங்க.. இப்பவே போன் போட்டு வர சொல்லுறேன். நீங்களே பேசிக்கோங்க...

ப்ரோக்கர் செல் மூலம் 'பேங்க்' ஊழியர் வரதனை வரவழைக்கிறார்.

ஏகாம்பரம் : என்னைய்யா... போன் போட்டு அரை மணி நேரமாச்சு... பார்டி வரானா இல்லையா...

ப்ரோக்கர் : இருங்க வந்திருவாரு...
வரதன் : 3/11 வீடு இது தானே... (பிரோக்கரை பார்த்து) அட நீங்க இங்க தான் இருக்கீங்களா...

ப்ரோக்கர் : தம்பி பேரு வரதன்.. பேங்க்ல வேல செய்யுறாரு...
ஏகாம்பரம் : அப்படியா.. ரொம்ப நல்லது... வீடு பாக்குறதுக்கு முன்னாடி வாடகைய சொல்லிடுறேன்... 10000 வாடகை, 1 லட்சம் அட்வான்ஸ்..

வரதன் : வாடகைய ‘EMI’ கட்டலாமா...
ஏகாம்பரம் : உன் தல மட்டும் தனியா இங்க தங்க போகுதா... உடம்பு சேர்த்து தானே... வாடகை முழுசா தரனும்...

வரதன் : வீடு நீங்க வாங்குனதா... உங்க பரம்பர சொத்தா...
ஏகாம்பரம் : ம்..கல்யாண சீர்வரிசையா வந்தது...

வரதன் : வீட்டோ Parent Document, House tax எல்லாம் இருக்குல..
ஏகாம்பரம் : யோவ்.. வீடுல தங்க வந்தியா...வாங்க வந்தியா... நீ என் வீட்டுக்கு வேண்டாம் கலம்பு

வரதன் : போய்யா.... உன் வீடு எனக்கு வேண்டாம்... ( பிரோக்கரை பார்த்து ) வெளிய வா உன்ன பாத்துக்கிறேன்.

ஏகாம்பரம் : என்னைய்யா இந்த மாதிரி ஆள என் வீட்டுல தங்க வைக்குற..

ப்ரோக்கர் : இருங்க ஸார்...! டென்ஷன் ஆகாதிங்க... அடுத்து வர பார்ட்டி 'சாப்ட்' பர்சன் 'சாப்ட்வேர்'ல வேல செய்யுறாரு..

(தொடரும்.... )

Thursday, June 25, 2009

வாடிய பிஞ்சுகள்



பறவைப் போல பறக்கும் வயதில்
பேரூந்து பயணிகளிடம் பிச்சை கேட்க !
பரதம் ஆடும் பொழுதில்
பாவாடை கிழிந்து தெருவோரம் கிடக்க !
சித்தரங்கள் வரையும் இடத்தில்
சிறுவர் தொழிலாளி உருவெடுக்க !
முல்லை மலர்ப்போல் சிரிக்க வேண்டிய சிறுமி
முரவாசல் வேலைக்காக காத்துக்கிடக்க !

சின்ன சிறு பெட்டியுடன்
பள்ளி செல்லும் நேரத்தில்
சிவகாசி தீப்பெட்டி
தொழிற்சாலையில் வேலை செய்ய....

வாடிய மலர்களுக்காக
வாடிய நெஞ்சங்களே !
மீண்டும் ஒரு முறை வாடும்
இந்த பிஞ்சுகளுக்காக.....



இளைஞர்கள் கையில்
உள்ளதோ எனது தேசம்
இளைஞர்களாக மாறவேண்டிய
சிறுவர்களுக்கு வனவாசம் !

எங்கு போகிறது எனது தேசம்
என்ற வினாவுடன் நான் இருக்கிறேன்
அவர்கள் வாழ்க்கையின் விடைக்காக
வினாவுடன் யாரிடம் செல்ல வேண்டுமோ ?

Monday, June 22, 2009

Test tube தேவதை

வெள்ளை நிற தேவதை வெள்ளை நிற ஆடையில் Chemistry lab.... கையில் test tube ஏந்தி நின்று இரந்தாள்.

Test tube மூலம் குழந்தை பெறாலாம் கண்டு பிடித்தவன் கூட தன் ஆராய்ச்சி குறிப்புகளை அழித்துவிடுவான். காரணம், test tube ஏந்திய தேவதை அத்தனை அழகு.... Test tube குழந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி கூட அவனிடம் வாழ்ந்து குழந்தை பெற ஆசைப்படுவான். தன் தேசம் மறந்து இந்தியாவிலே தங்கி விடுவான். அவளிடம் பேசுவதற்காகவே தமிழை கற்றுக் கொள்வான்.



வேறு தேசத்தவன் கூட அவளுக்காக தமிழ் கற்ற வேண்டும் என்று சொல்லும் போது ..... தமிழ் தெரிந்த நான் சும்மாவா இருக்க முடியும்.... என் தோழர்கள் படையுகளுடன், test tube ஏந்திய தேவதையிடம் சென்றேன்.

Chemistry lab முழுக்க திரவம் நாற்றம்..... அங்கு நுழைந்ததற்காக என்னை தூற்றிய நண்பர்கள்.... நான் மட்டும் அந்த தேவதை குரல் கேட்கும் ஆவலில் கால்கள் நடந்தது. நண்பர்களில் வார்த்தைகளை கேட்க காதுகள் மறுத்தது.....

அவள் இருக்கும் இடத்தை அடைந்தேன். அங்கு மட்டும் மல்லிகை வாசம் தூக்கி வாரிப்பொட்டது. அவள் கைப்பட்டதால் திரவம் கூட மல்லிகை வாசம் விசுதோ என்ற சந்தேகம். ஒவ்வொரு bottle லும் ஒவ்வொரு திரவங்கள்..... sulphuric acid, hydrolic acid. Sodium chloride என்று திரவங்களின் பெயர்களை சொல்லி எல்லோருக்கும் விளக்கிக் கொண்டு இருந்தாள். திரவங்களின் பெயர் எனக்கு எதற்கு..... அந்த தேவதை பெயர் தெரிந்துக் கொள்ள தானே காத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தனை பெயர்களை சொன்னவள் அவள் பெயரை சொல்லவில்லை.

நண்பர்கள் என்று எண்ணி என் எதிரிகளை தான் அழைத்து சென்று இருக்கிறேன். அந்த தேவதை ரசிக்க விடாமல் அந்த இடத்தை விட்டு செல்ல உத்தரவிட்டார்கள். நான் மறுத்தும் என்னை இழுத்து சென்றார்கள். மனதில் நண்பர்களை திட்டிக் கொண்டு அந்த தேவதை இருக்கும் இடத்தை விட்டு சென்றேன்.

மறு நாள் அதே கல்லூரி பொருட்காட்சி..... மீண்டும் அந்த தேவதை சந்திக்க என் முழு எண்ணமாக இருந்தது. உடன் எந்த நண்பர்களையும் அழைத்து செல்லவில்லை. அவள் இருக்கும் Chemistry lab க்கு மனம் விரைந்து ஓடியது. அந்த தேவதை இருந்த இடத்தில் வேறொரு கோதை நின்றுக் கொண்டு இருந்தாள். எத்தனை கோதை அங்கு நின்றாலும் அந்த தேவதை போல் வருமா..... திரவத்துக்கு கூட வாசம் தரும் அவள் ஸ்பரிசம் கிடைக்குமா ? .... என்று மனதில் ஏக்கங்கள் மட்டுமே நிறம்பியது. கண்களில் வெருமை தெரிந்தது.

Test tube குழந்தையை கண்டு பிடித்தவன். cloning முறையில் அவளின் இன்னொரு உருவை செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது. வானத்தில் ஒரு நிலவுக்கு தான் மதிப்புண்டு.... செயற்கை கோளுக்கு என்ன மதிப்பு ... தகவல் தருவதை தவிர செயற்கைகோளால் என்ன பயன்....? நிலவு மட்டுமே எல்லோராலும் ரசிக்க முடியும். இந்த பூமி ரசிக்க அந்த ஒரு தேவதை போதும்..... அவளை cloning முறையில் இன்னொரு உருவை உருவாக்கினாலும் அது செயற்கை தனமாக தான் இருக்கும்.... நிலவு பூமி கண்ணுக்கு தெரியாமலா போகும்.... அந்த தேவதை என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் அந்த தேவதை நடந்த சுவடுகளை தேடி மனம் போனப் போக்கில் செல்கின்றேன்.

Friday, June 19, 2009

நிர்வாணம் - சிறுகதை

தொப்புல் தெரிவது போல் சேலைக்கட்டி என் முன் கண்மணி நின்றாள். மெல்லிய இடை, அளவான மார்பு, சுண்டி இழுக்கும் கண்கள், முதுகுவரை கூந்தல் என்று தமிழ் சினிமாவுக்கு பொருத்தமான கதாநாயகியாக இருந்தாள். அவளின் போறாத நேரம் விலை மாதுவாக தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள். இந்த தொழிலில் கண்மணியின் 'கஸ்டம்மர் சர்விஸில்' அடிச்சிக்க ஆளேயில்லை என்று என் நண்பன் மூலம் கேள்வி பட்டு அவளை வர சொன்னேன்.

வீட்டில் யாருமில்லை. என் மனைவி திருத்தனியில் இருக்கும் அவள் அம்மா வீட்டுக்கு சென்றது எனக்கு வசதியாக இருந்தது.

கண்மணியை என் படுக்கை அறைக்கு அழைத்து சென்றேன். அவள் என் அறையை ஒரு நோட்டம் விட்டு என்னை பார்த்து சிரித்தாள். நான் அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக உற்றுபார்த்தேன். குறிப்பாக அவளுடைய இடை. அவள் புடவையில் அழகாகத் தான் இருந்தாள். ஆனால், நான் அவளை வரச்சொன்னது புடவை கட்டிய அழகை ரசிக்க அல்ல... அவளுடைய நிர்வாணத்தை. விலைமாதுவிடம் ரசிக்கப்பட வேண்டிய முதல் விஷ்யம் அது தான்.



பீரோவை திறந்து என் மனைவியுடைய நகையை எடுத்தேன். ஒவ்வொரு நகையும் என் மனைவிக்காக பார்த்து பார்த்து நான் எடுத்தது. அவளுக்காக நான் எடுத்த நகையை கண்மணியிடம் கொடுத்தேன்.

ஆடைகள் எல்லாம் கலைத்து விட்டு நகையை மட்டும் அணிந்து வர சொன்னேன். அதிர்ச்சி கலந்து வியப்புடன் என்னை பார்த்தாள். தன் ஆடைகளை கலைத்து நிர்வாணத்தை ரசித்தவன், நிர்வாணமாக வர சொல்லி அனுபவித்தவன், ஒன்றாய் குளித்தவன், குடி போதையில் வந்தவன், பிறந்த மேனியோடு பேசியவன் என்று பல வித ஆண்களை கடந்து வந்திருக்கிறாள். இன்று தான் முதன் முறையாக தன் நிர்வாணத்திற்கு ஒருவன் தங்கம் பூச நினைத்திருக்கிறான்.

நான் சொன்னதிற்காக தன் ஆடைகளை எல்லாம் கலைத்து விட்டு நகையை அணிந்து கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடத்தில் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அவள் மார்ப்பு நான் கொடுத்த தங்க சங்கிலி மறைத்திருந்தது. இடுப்பில் கட்டிய தங்க ஒட்டியானத்தில் மணி அவளுடைய பெண் உருப்பை மறைந்திருந்தது. என் மனைவிக்காகவே ஒட்டியானத்தில் தங்க மணிகள் தொங்குவது போல் செய்திருந்தேன். இப்போது கண்மணி அணிந்து கொண்டு தங்க மாளிகை போல் என் முன் வந்து நின்றாள்.

நகைகளை அணிந்த படி என் படுகையில் உட்கார சொன்னேன். அவளும் உட்கார்ந்தாள். நான் என் கையில் ஒரு பென்ஸிலை எடுத்து சீவி, தங்கம் பதிந்த கண்மணியின் மேனியை வரைந்தேன். அவள் இடுப்பு, மார்ப்பு, கண்,கை, உதடு என்று அங்கம் அங்கமாக ரசித்து அப்படியே வரைந்தேன். அதன் பின் வரைந்த அவள் உருவத்திற்கு வண்ணங்கள் பூசினேன். கண்மணியும் பொறுமையாக இரண்டு மணி நேரம் அசையாமல் நான் வரைவதற்காக அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

அவள் கண்களை மெதுவாக வரைந்து ஒவியத்தை முடிதேன்.

" இப்போ ஒ.கே. ரிலாக்ஸ் அயிட்டு உங்க ட்ரெஸ போட்டுக்கோங்க...." என்றேன்.

அவள் ஒன்று புரியாமல் என்னை பார்த்தாள். எதுவும் செய்யாமல் அவளை ஆடையை போட சொன்னது அவளுக்கு வியப்பாக இருக்கலாம். இது என்னுடைய பொழுது போக்கு, கலை ஆர்வம் என்று அவளுக்கு தெரியாது. இது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமுமில்லை.

அருகே வந்து நான் வரைந்த ஓவியத்தை பார்த்தாள். அவளுடைய பிரம்மிப்பை கண்களில் பார்த்தேன். தன்னை இவ்வளவு தத்துருபமாக ஆபாசம் இல்லாமல் நிர்வாணமாக நான் வரைந்த ஓவியம் அவளுக்கு வியப்பாக இருந்திருக்கும். தங்க நகை அணிந்து அவள் தேகத்தை இயற்கை போல் வரைந்து காலகள் பிலாஸ்டிக்கால் அழிந்துக் கொண்டு வருவது போல் வரைந்திருந்தேன்.என் கல்லூரி நாட்களில் இது போல் எத்தனையோ விலைமகளை நிர்வாணமாக வரைந்து மரம், கடல், மலை போன்ற இயற்கையோடு சேர்த்திருக்கிறேன். அதில் அவர்களுடைய நிர்வாணம் தெரியவதில்லை. என்னுடைய கலை தான் தெரியும்.

" உங்க பெய்ட்டிங். ரொம்ப அழகா இருக்கு. இதுல என்ன சொல்லுறீங்க...?"

“ இயற்கை நிர்வாணமா இருந்தா தான் அழகு... பிலாஸ்டிக் ஆடை கொடுத்தா அழிஞ்சு போய்ட்டும்” என்றப்படி புன்னகையுடன் மூவாயிரத்தை நீட்டினேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

பணத்தை வாங்காமல் தன் உடலில் இருந்து நகைகளை கலட்டி நான் கொடுத்த தங்க பேட்டியில் வைத்தாள். அவள் அணிந்து வந்த புடவையை மீண்டும் அணிந்து கொண்டாள்.

" உங்க கிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே...."

" சொல்லுங்க...." என்றேன்.

" நீங்க சுகத்துக்காக வர சொன்னீங்கனு நினைச்சேன். வரையுறதுக்கு உங்க மனைவிய இதே மாதிரி நிக்க சொல்லி வரஞ்சிருக்கலாமே. யாருக்கு தெரிஞ்சிருக்க போது..."

" என் மனைவியோட நிர்வாணத்த நா காமத்தோடு பார்க்குறேன். உங்க மாதிரி பொண்ணுங்களோட நிர்வாணத்த கலை கண்ணோட்டமா பார்க்குறேன். கலை இருக்கும் இடத்தில் காமம் வரதாது. அதே மாதிரி , காமம் இருக்கும் நேரத்தில கலை வராது. நா எப்போதும் கலையையும், காமத்தையும் சேர்த்து வச்சி பார்க்குறதில்ல " என்றேன்.

அந்த ஓவியத்தை ஓவிய கண்காட்சியில் வைத்தேன்.

" ச்சே... அந்த இடத்த போய் மறைச்சு வரைஞ்சிருக்கான் பாரு. கொஞ்சம் காட்டுற மாதிரி வரைய கூடாது" என்று ஒருவன் தன் அருகில் இருந்த நண்பனிடம் கூறியதை கேட்டேன்.

***********
தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து
"உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம் !

Sunday, June 14, 2009

ABCD சொல்லும் குழந்தை

ஜூன் மாதம் தொடங்கிவிட்டது. விடுமுறை முடிந்து குழந்தைகள் பழையப்படி தங்கள் புத்தக மூட்டையை சுமந்த வண்ணம் பார்க்கிறேன். என் நண்பரின் குழந்தையை இந்த வருடம் தான் 'Pre-KG' சேர்த்திருக்கிறார்கள். மூன்று வயது குழந்தை 'Pre-KG' வகுப்பில் எப்படி படிக்கும் என்பது ஒரு சின்ன கற்பனை.

அரசியல்வாதியின் குழந்தை...

A- ADMK
B - BJP
C - Congress
D - DMDK
E - இளைஞர் அணி DMK (Elainjar Ani DMK )
F - Forward block



ரௌடியின் குழந்தை

A - அறிவாள் ( Arival )
B - Blade
C - Cycle chain
D - Dada
E – Escape

சாப்ட்ஃவேர் என்ஜினியரின் குழந்தை

A - Ajax
B - Bug
C - C++
D - Database
E - Electronic Mail
F – Forward

தமிழ் பற்றுள்ள குழந்தை

A – அறிவாளி (Arivali)
B – பாக்கியசாலி ( Bakkiyasali)
C – சிந்தனை ( Cinthanai)
D – டமாரம் ( Damaram)
B – ஏழ்மை (Ezmai)

இயக்குனரின் குழந்தை

A - Angle
B - Bottom Shot
C - Close up shot
D - Direction
E – Editing

Last but not least....
.
.
.
.
.
.
.
.

பதிவரின் குழந்தை

A - About us
B - Blogger
C – Comment
D – டன்டனக்கா (Dandanaka)
E – எதிர்வினை (Ethirvinai)
F - Follower

Thursday, June 11, 2009

இரா.முருகன் கதைகள்

ஒவ்வொரு புத்தக வாசிப்பும் வாசகனாகிய எனக்கு ஒரு அனுபவம். படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கல்லூரி படிப்பு முடிந்தவுடனே மூட்டை கட்டி வைத்துவிட்டேன். இப்போது, புத்தகங்களில் என்னுடைய தேடல் சிந்தனையை தூண்டும் விஷ்யங்கள், தகவல்கள், எழுத்துக்களை வித்தியாசமாக கையாள வேண்டிய யூக்திகளை கற்பது தான்.

எப்படியும் மற்றவர்கள் பாராட்டும் படி நல்ல படைப்பு எழுத வேண்டும். நான் படிக்கும் ஒவ்வொரு நூலும் எனக்கு சொல்லி தரும் ஆசான். ஒரு நூலை படித்து முடித்து விட்ட பிறகு அதன் தாக்கத்தால் நான் எதுவும் எழுதவில்லை என்றால் அந்த நூல் படித்ததற்கு பயனில்லை என்று நினைப்பேன். இப்படி புத்தகம் படிக்கும் போது எனக்குளே சில நிபந்தனை வைத்து தான் படிப்பேன். அப்படி என்னுடைய தேடலுக்கும், உள் நிபந்தனைக்கும் சமிபத்தில் நான் படித்த புத்தகம் 'இரா.முருகன் கதைகள்'.



“சிறுகதை தொகுப்பு நூலை படிப்பதாக இருந்தால் எல்லா கதைகளும் ஒரே மூச்சில் படித்து விட கூடாது. கற்கண்டு மாதிரி இரண்டு, மூன்று கடித்து விட்டு, பிறகு தொடர வேண்டும். படித்து முடித்து விட்ட பிறகு அந்த கதையை பற்றி உணர வேண்டும்" என்று ஒரு மூத்த எழுத்தாளர் பேசியதை கேட்டுயிருக்கிறேன். காரணம், கதையில் வரும் பாத்திரம், சம்பவம் என்று எதுவும் நம் மனதில் தங்காமல் போய்விடும். இதை அனுபவ ரீதியாக 'இரா.முருகன் கதைகள்' படிக்கும் போது உணர்ந்தேன்.

பெரிய புத்தகம். 80 கதைகள். எவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் நினைத்ததில் பாதி கதைகள் மனதில் ஒட்டாமல் இருந்தது. சில கதையின் முடிவில் என்ன சொல்ல வருகிறார் என்று கூட புரியாமல், மீண்டும் இன்னொரு முறை படிக்க வேண்டியதாக இருந்தது. எந்த புத்தகத்தை படிக்க காட்டாத அவசரத்தை இந்த புத்தகத்தை படிக்க ஏன் காட்டினேன் என்று புரியவில்லை.

‘இடப்பெயர்ச்சி’ என்ற கதையில்.... சீங்கப்பூரில் வேலை செய்யும் இளைஞனான அமுதனுக்கு அம்மாவிடம் இருந்து கடிதம் வருகிறது. அவன், அவன் தங்கள் வாழ்ந்து வளர்ந்த வாடகை வீட்டை இடைக்க போவதாக வருத்தப்பட்டு கூறுகிறார். அமுதனும் இடிக்கப் போவதை நினைத்து கவலைப்படும் வேலையில் சீன பெண் மூலம் 'நினைவு சின்னங்கள் சாப்பாடு போடாது' என்பதை உணர்கிறான். 'அம்மாவிடம் வேறு வீடு பார்க்கலாம்' என்று பதில் கடிதம் எழுதுவது போல் கதை முடிகிறது.

சிறுகதை நூல் விமர்சனத்தில் ஒரு கதையை குறிப்பிட்டதோடு நிறுத்துவது தான் சரி என்று நினைக்கிறேன். கதைகளை பற்றி விளக்கிவிட்டால், வாங்கி படிப்பவர்களுக்கு ஸ்வாரஸ்யம் இருக்காது. அதிக விமர்சனம் நூலை வாங்க விடாமல் செய்துவிடும். அந்த தவறை நான் செய்யவிரும்பவில்லை.

இந்த நூலை எழுதிய இரா.முருகன் அவர்கள் பெருமைக்குரிய 'கதா' விருது பெற்றவர். இவரது 'அரசூர் வம்சம்' நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசைப் பெற்றது. அவருடைய எழுத்து நடை, சொல் நடை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை என்பது அவர் பெற்ற விருதகளே சான்று.

அவருடைய எழுத்து நடையும், சொல் நடையும் சொல்லுவதை விட ஒரு வாசகனாக குறிப்பிட்டு சில குறைகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

'அவரது உரைநடையில் 'ஜம்ப் கட்' உத்தி வெற்றிகரமாக கையாளப்பட்டுருகிறது. இது நனவோடை அல்ல. ஆனால், திட்டமிட்ட, எத்தகவலும், அநாவசியனாகப் பயன் படுத்தாத சேர்க்கை கொண்ட நடை' என்று முன்னுரையில் அசோகமித்திரன் இந்த சிறுகதை தொகுப்பை பற்றி குறிப்பிடுகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில இடங்களில் 'ஜம்ப் கட்' உத்தி வெற்றிகரமாக இல்லை என்பதை சொல்லியாக வேண்டும்.

‘இடப்பெயர்ச்சி’ கதையில்

"குழந்தையை கீழே போட்டுடாதேடா. ஏற்கனவே பொறந்ததும் அப்பாவை முழுங்கியாச்சுன்னு பேரு வாங்கியிருக்கா. கை, கால் சரியில்லாட்டா நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணம் ஆக வேண்டாமா ? குழந்தையை அப்படி தூக்காதேடா ! எறக்கிவிடு காவேரிய"

இந்த வசனம் வந்த அடுத்த வரியில்...

"காவேரிக்கு அடுத்த மாதம் வளைகாப்பு. அம்மாவின் கடிதம் வந்தது"

இப்படி ஒரே கதையில் சில இடங்களில் வாசகனின் சிந்தனைக்கு விடுவதால் அவர் சொல்ல வரும் விஷயத்தை வாசகன் மாற்றி சிந்திக்க வாய்ப்புண்டு.

இரா.முருகன் சீங்கப்பூரில் இருந்தவர் என்பதால் பெரும்பாலான கதைகள் சீங்கப்பூரில் நிகழ்வது போல் அமைகின்றன. அதேப் போல், கதையில் வரும் பெருபாலான பாத்திரங்கள் பிராமணர்களாக இருக்கிறார்கள். பிராமண குடும்பத்தை சுற்றி கதை நகர்கிறது. கதையில் வரும் கதாபாத்திரங்கள் பதிய வேண்டுமே தவிர , கதாபாத்திரத்தின் மதம் பதிய கூடாது.

பார்ப்பன எதிர்பாளர்களுக்கு கண்டிப்பாக இந்த சிறுகதைகள் பிடிக்காது. ஆனால், பார்ப்பன ஆதரவாளர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

மற்றப்படி பெரிதாக குறை இந்த புத்தகத்தில் ஏதுமில்லை."இரா.முருகன் கதைகள்" நன்றாக கதை சொல்கிறது.

நூலை வாங்க…

முகவரி :

கிழக்கு பதிப்பகம்
(An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

Tuesday, June 9, 2009

LKG பையனின் காதல்

க்ரேஸ்கல் கோட்டை இளவரசியே
ஷீலாவுக்கு நீ தான் போட்டியே !
பயணம் செய்யும் அழகிய டோரா
உன் புஜ்ஜியாக நான் வரவா !

மிக்கியாக நான் இருக்கிறேன்
உன் இதய டிஸ்னியில் இடம் தருவாயா !
பும்பாவாக கேள்வி கேட்கிறேன்
பதில் சொல்ல வருவாயா !



எலும்பு மனிதனின் மந்திரகோளா !
பவர் ரேன்ஜரின் லேசர் தூப்பாக்கியா !
ஜாக்கி சானின் அதிரடி சாகசம் போல்
இதயத்தை புரட்டி போட்டாயே !

ஹீமேன் கை வாளை போல்
உந்தன் விழி உள்ளதடி !
சுண்டி இழுக்கும் விழி வலையில்
ஸ்பைடர் மேனுன் விழ்வானடி !

வாண்டுப் போல் உன்னை சிரிக்க வைப்பேன்
நம் காதல் எரியாவுக்குள் யாரையும் விட மாடேன் !!

Wednesday, June 3, 2009

உலக சினிமாவை காட்ட போகும் பைத்தியகாரனுக்கு நன்றி

எஸ்.ராமாகிருஷ்ணன் எழுதிய "தேசாந்திரி" புத்தகத்தை படிக்கும் போது, கொச்சியில் உள்ள ‘ஒபேசா’ என்ற மக்கள் சினிமா இயக்கம் கிராமம் கிராமமாக சென்று உலக திரைப்படங்களை திரையிடப்படுவதை சொல்லுவார். 'உலக சினிமா'வை கிராமத்து மக்கள் எப்படி எல்லாம் ரசிக்கிறார்கள் என்று விளக்கி இருப்பார். படத்தை பார்த்த கிராமத்து மக்கள் தங்களால் முடிந்த அளவு பொருள் உதவியை சினிமா இயக்கத்திற்கு கொடுப்பார்கள். இப்படி நல்ல ரசனை உள்ள மக்கள் இருப்பதால் தான் கெரளாவில் மட்டும் நல்ல திரைப்படங்கள் வருகின்றன.

கெரளா கிராமத்து மக்களின் ரசனை இப்படி இருக்க, நகரத்தில் வாழும் நாம் மட்டும் 'சிவாஜி', 'வில்லு', 'படிக்காதவன்', 'தோரனை' போன்ற படங்களை பார்க்கும் சாபத்தில் ஆளாகி இருக்கிறோம். இந்த சாபத்தில் இருந்து விடுப்படுவது கடினம் தான். ஆனால், கொஞ்சம் இளைப்பாருவதற்காக நம்ப ‘பைத்தியக்காரன்’ அவர்கள் 'இலவசமாக உலக திரைப்படங்களை பார்க்கலாம்' பதிவின் மூலம் உலக திரைப்படங்களை நம் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறார். சிறுகதை போட்டி மூலம் பதிவர்களின் சிந்தனை தூண்டி விட்டவரின்… அடுத்த புதிய முயற்சி இது ! அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

இதுவரை 'உலக சினிமா' என்று படித்து வந்த பதிவர்களுக்கு, பார்க்கவும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதுவும் நான் முதன் முதலில் பார்த்து ரசித்த ‘கிம் கி டுக்’ இயக்கிய " Spring, Summar, Fall, Winter and Spring" படம்.

இந்த படத்தை பற்றின நான் எழுதின விமர்சனத்தை பார்க்க... இங்கு பார்க்கவும்.

என் பதிவை பைத்தியக்காரன் பதிவில் குறிப்பிட்ட வண்ணத்துபூச்சியார் நன்றி :)

Tuesday, June 2, 2009

சிவாஜி கணேசனின் 'எனது சுயசரிதை'

தொகுப்பாசிரியர் : டாக்டர் டி.என். நாராயணஸ்வாமி

கணேச மூர்த்திக்கு சிறு வயதில் இருந்தே நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசை. ஒரு தேசியவாதிக்கு மகனாக பிறந்த கணேசமூர்த்தி 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' நாடகத்தில் வெள்ளைக்காரப் பட்டாளத்தில் ஒருவனாக நடித்தான். விஷயம் தெரிந்த அவரது தந்தை 'அடேய் கூத்தாடிப் பயலே ! உனக்கு என்ன தைரியம் இருந்தா, நீ என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்' என்று கூறி அடித்தார்.

அந்த சிறு வயதில் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்ட கணேசமூர்த்தி ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளை என்பவரின் நாடகக் கம்பெனியான 'மதுரை ஸ்ரீ பாலகான' சபாவில் சேர்ந்தான். அங்கு பெரும்பாலும் பெண் வேஷம் தான் போடுவான். கணேசமூர்த்தி அங்கையே தங்கி, உண்டு, நடிப்பை கற்று கொண்டு வந்தான். யாரும் அவனுடைய வீட்டை பற்றி கேட்கவில்லை. காரணம், அவர் அந்த கம்பெனியில் சேரும் போது 'எனக்கு தாய் தந்தை இல்லை' என்று போய் சொல்லி தான் சேர்ந்தான். அவர் தான் நம் ‘நடிகர் திலகம்’ ‘சிவாஜி’ கணேசன்.

திரைப்பட கலைஞர்களால் 'அப்பா' என்று மரியாதையாக அழைக்கப்பட்டவர். நடிகர்களுக்கு பல்கலைக்கழகமாக திகழ்பவர். 'செவாலியே', 'தாதா சாகேப் பால்கே' என்று பல பெருமைக்குரிய பட்டங்களை பெற்றவர். திரைப்படங்களில் நடிக்கும் போது நாடகத்திலும் நடித்தவர். நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாக மாறக்குடியவர். இந்த பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர் ‘நடிகர் திலகம்’ ‘சிவாஜி’ கணேசன்.

இராமாயண நாடகத்தில் சீதை, பரதன், இந்திரஜித், சூர்ப்பனகை என்று மாற்றி மாற்றி வேஷம்ப் போட்டுயிருக்கிறார். இரண்டு பெண் வேஷம், இரண்டு ஆண் வேஷம் போடுவதால் தன்னிடம் கதாப்பாத்திரத்திற்கு தேவையான பெண் தன்மையில்லாமல் போனது அவரே ஏற்றுக் கொண்டு இருக்கிறார். பிறகு இது ஒரே நாடகத்தில் இரண்டு பால் வேஷம் போடுவதை தவிர்த்தார்.



அண்ணாதுரை அவர்கள் எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில் கணேசன் முதல் முறையாக 'சிவாஜியாக' நடித்தார். அண்ணாதுரை காகபட்டராக நடித்தார். அந்த நாடகத்தை பார்த்த தந்தை பெரியார் அவர்கள் கணேசனை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அவர் பெயரோடு 'சிவாஜி' என்ற பெயர் ஒட்டிக் கொண்டது.

‘பராசக்தி’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான். என்ன காரணத்தினாலோ அவர் நடிக்க மறுத்துவிட்டார். அப்போது, புது முக நடிகனான கணேசனை தேடி கண்டு பிடித்து டெஸ்ட் எடுத்தனர். முதல் வார்த்தையே 'சக்ஸஸ்' என்று சொல்ல சொன்னார்கள். அவரும் சொன்னார். இதை பார்த்த எ.வி.மெய்யப்ப செட்டியார் 'என்னப்பா இந்த புது பையன் 'சத்தத், சத்தத் என்கிறான்' என்று கேலி செய்தார். சவுண்ட் இன்ஜினியர் 'மீன் மாதிரி வாயை திறக்கிறான்' என்றார். பிறகு, ‘பராசக்தி’ படம் வெற்றி பெற்ற பிறகு 'அந்த நாள்' படத்தில் நடிக்க 'சிவாஜியை வைத்து எடுங்கள்' என்று எ.வி.மெய்யப்ப செட்டியாரே கூறினார்.

வில்லனோ ஹீரோவோ எதுவாக இருந்தாலும் தான் நடிக்கும் பாத்திரத்திற்கு பெருமை சேர்க்க குடியவர் சிவாஜி. திரையில் நல்லவனாக நடித்து அரசியலில் தாக்கு பிடிக்க தெரியாதவர்.



எம்.ஜி.ஆரை தன்னை அண்ணன் என்று சொல்லிக் கொண்டாலும் அவர் தன்னை முந்திக் கொண்டு சென்ற கதையும் அவர் தனது சுய சரிதையில் குறிப்பிடாமல் இல்லை.

1956ல் புயல் நிவாரணத்திற்காகக் பலர் நிதி வசூல் செய்து கொடுத்தனர். அண்ணாதுரை அவர்கள் அதிகமாக வசூலித்துக் கொடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் போது சிவாஜியை அழைக்கப்படவில்லை. எம்.ஜி.ஆரை மேடையில் கௌரவித்தனர். அண்ணாதுரை அவர்கள் சிவாஜியை பற்றி கேட்கும் போது " கணேசனால் வர முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்கள். தன்னை இப்படி தான் தி.மு.கவில் ஓரம் கட்டிய விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.

" ஒருவன் தன் திறமையாலும், உழைப்பாலும் மக்கள் மதிப்பை பெறுகின்ற நேரத்திலும், நன்றாக வளர்ந்து வருகின்ற நேரத்திலும், அவர்களைத் தட்டி கீழே இறக்கப் பார்ப்பார்கள். அப்போது எச்சரிக்கையாக இருந்தால் தான் அரசியலில் நிலைத்திருக்க முடியும். அதற்கு உதாரணம், அரசியலில் நிலைத்தவர் என் அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்கள். அரசியலில் தள்ளப்பட்டவன் நான்"

"Ugly American" படத்தில் நடித்த மார்லர் பிராண்டோ சிவாஜியிடம் " சத்யஜித்ரே எடுத்த படத்தை கூறுகிறார். அதில் வரும் காட்சிகளை பார்த்து கண்ணீர் வந்துவிட்டதாக குறி, " it was a good entertainment film" என்று சொல்லி முடித்தார்.

அதற்கு சிவாஜி, " நீங்கள் பணக்காரர். அவர் எடுத்த படம் உங்களுக்கு என்டெர்டெய்ன்மெண்டாக உள்ளது. நான் அந்த நாட்டின் வாழ்பவன். எங்கள் மக்கள் மாற வேண்டும். வறுமை நீங்க வேண்டும். நாடு வளர வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக எங்களுக்கு நாங்களே எடுத்தக் கொண்ட படம் " என்றார். அதற்கு மார்லர் பிராண்டோ பதில் சொல்ல முடியாமல் திகைத்தார்.

"ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில்" கட்டப்பொம்மன் படத்திற்கு சிறந்த நடிகனுக்கான விருதும், எகிப்து அதிபர் நாசர் விருந்தினராக சிவாஜியை சந்தித்தது, நயகரா மேயராக ஒரு நாள் இருந்தது, சிவாஜி அஞ்சல் தலை என்று பல கௌரவங்கள் அவரை அழங்கரித்துள்ளன.

'Sivaji' Ganesan is always a legend.

விலை.135, பக்கங்கள் : 318
பதிப்பாளர் : சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட்
25, பெஸன்ட் ரோடு, ராயப்பேட்டை, சென்னை - 14
தொலைபேசி: 28350126/28350127

LinkWithin

Related Posts with Thumbnails