விசாரணை படம் எற்ப்படுத்திய பாதிப்பில் இருந்து மீள்வற்குள் லாக்கப் நூலை படித்துவிட வேண்டும் என்று ஒரே மூச்சில் படித்தேன்.
இருபது அத்தியாயத்தில் முதல், கடைசி அத்தியாயம் தவிர மற்ற எல்லா அத்தியாயத்தில் காவலர்களில் அடக்குமுறை தான் தெரிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் எப்படி அடிவாங்கப் போகிறார்கள் என்ற பதட்டம் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் படிக்கும் நமக்கே குமார், ரவி, நெல்சன், மொஹதீன் நால்வர் அடிவாங்குவதை படிக்க சலிப்பு எற்பட்டுவிடுகிறது. ஆனால், சிறை கம்பிகளுக்கு நடுவே எப்படி சலிக்காமல் அடிவாங்கி, தாங்கள் செய்யாத தவறை ஒத்துக் கொள்ளாமல் மன உறுதியுடன் இருந்தார்கள் என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.
இறுதியில் நீதிபதி, “எதற்காக சிரமப்படுகிறீர்கள் ? குற்றத்தை ஒத்துக் கொண்டிருந்தால் தண்டனைக் காலமே முடிந்திருக்கும்” என்கிறார். தீர்ப்பு எழுதும் நீதிபதிக் கூட இந்த சிஸ்டமில் இருந்து மீள முடியாதவராக இருக்கிறார் என்ற நிதர்சன உண்மையாக இருக்கிறது.
பலர் Auto – fiction என்ற பெயரில் தமிழில் என்ன என்னவோ எழுதிகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், தமிழில் வந்த சிறந்த Auto – fiction நூலில் ’லாக்கப்’ முக்கிய நூலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விசாரணை படத்தை பற்றி எப்படி எழுத வேண்டும் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு நாவலை இந்த அளவுக்கு கௌரவப்படுத்திய படம் வந்ததில்லை என்று சொல்லலாம்.
வெற்றிமாறன் லாக்கப் நாவலை வைத்து முதல் பாதியை தான் எடுத்திருக்கிறார். இரண்டாவது பாதியை இயக்குனருக்கான கற்பனை திறனில் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
அவர் நினைத்திருந்தால் “Inspired” என்ற வார்த்தை பயன்படுத்தி எழுத்தாளரை அப்படியே விட்டுவிட்டுருக்கலாம். ஆனால், தனக்கான பாராட்டு கிடைத்த இடத்தில் எழுத்தாளருக்கும் சேர்த்து அங்கிகாரத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்காகவே வெற்றி மாறனை பாராட்டியாக வேண்டும்.
காவலர்களை ஹீரோக்களாக காட்டி வந்த தமிழ் சினிமாவில் முதல் முறையாக அவர்களின் நிஜ முகத்தை காட்டியிருக்கிறது இந்தப் படம்.
லாக்கப் - அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
விசாரணை – அவசியம் பார்க்க வேண்டிய படம்.
1 comment:
//லாக்கப் - அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். //
அவசியம் படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன், இறை நாட்டம்!
Post a Comment