கரடி கூட்டத்தின் தலைவனும், சிறுத்தை கூட்டத்தின் தலைவனும் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டனர். அதில், சிறுத்தை வேட்டையாடும் மிரங்களில் பாதி கரடி கூட்டத்திற்கும், கரடி வேட்டையாடும் மிருங்களில் பாதி சிறுத்தை கூட்டத்திற்கும் கொடுக்க வேண்டும்.
இதனால், ஒரு நாளுக்கு இரண்டு விதமான மிருங்களை இரண்டு கூட்டமும் சுவைக்க முடியும். இந்த உடன் படிக்கை இரண்டு கூட்டத்திற்கும் பிடித்திருந்தது. இரண்டு கூட்டத்திற்கும் பரம திருப்தி.
ஒவ்வொரு நாளும் இரண்டு மிருக இறைச்சியை சுவைத்த சந்தோஷத்தில் இரண்டு மிருகக் கூட்டங்களும் இருந்தன. ஆனால், நாளாக நாளாக சிறுத்தையின் தலைவன் மனம் மாறத்தோடங்கியது.
பழைய மிருக இறைச்சி , சுவையில்லாத பாகத்தை கரடியிடம் கொடுத்து நல்ல மிருக இறைச்சியை வாங்க தொடங்கியது. தரமில்லாத இறைச்சிக்கு சுவையான இறைச்சி கிடைப்பதால் சிறுத்தை நமக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்று மகிழ்ந்தது. ஆனால், அது நீண்ட நாள் நீடிக்கவில்லை.
முதலில் கரடியின் தலைவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், கரடி கூட்டத்தினர் சுவையில்லாத இறைச்சிக்கு தங்கள் உழைப்பை வீணாக்குகிறோம் என்று கூற தொடங்கினர்.
இதனால், கரடி கூட்டத்தினர் சிறுத்தையிடம் இறைச்சி மாற்றத்தை நிறுத்திக் கொண்டது. அது மட்டுமில்லாமல் தங்கள் கூட்டத்தினரை இரண்டாக பிரிந்து சென்று இரண்டு விதமான மிருகங்களை வேட்டையாட தொடங்கியது. அதனால், எப்போதும் போல கரடி கூட்டத்திற்கு இரண்டு மிருக இறைச்சி கிடைத்தது.
Management நீதி :
இன்றைய லாபத்திற்காக வாடிக்கையாளரை ஏமாற்றத் தொடங்கினால், நாளைய வியாபாரம் இல்லாமல் போகும்.
No comments:
Post a Comment