கதிரேசன் என்கிற சிங்கக்குட்டி காட்டில் வழி தெரியாமல் தவித்தது. அப்பா சிங்கம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்பா சிங்கமும் தனது குட்டி கதிரேசனை தேடி அலைந்தது.
அப்போது, சிங்கக்குட்டி தன்னை போன்ற குட்டி கரடியைப் பார்த்தது. இரண்டும் நேருக்கு நேர் முறைத்தது. அப்பா சிங்கம் வேட்டையாடும் போது சண்டைப் போட்டிருப்பதை கதிரேசன் பார்த்திருக்கிறான். தனியாக மாட்டியிருக்கிறோம் என்று அஞ்சாமல் சண்டைப் போட வேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டது. குட்டி கரடி தாக்கும் முன்பே கதிரேசன் தாக்கத் தொடங்கினான். குட்டி கரடி வலியில் துடித்தது. கத்தியது.
நம்மால் பிரச்சனையை சமாளிக்க முடியும்.
வேட்டையாட முடியும் என்று கதிரேசனுக்கு நம்பிக்கை வந்தது. ஆனால், வலியில் அலரிய குட்டி கரடியின் குரல் கேட்ட அப்பா கரடி அந்த இடத்துக்கு வந்தது.. முன்பு கிடைத்த வெற்றியில் கதிரேசன் உருவத்தில் பெரிய கரடியிடம் மோத சென்றது.
ஒரே அடி... குட்டி கதிரேசன் பறந்து விழுந்தான். தன்னால் பெரிய கரடியிடம் மோதி வெற்றிப் பெற முடியாது என்று புரிந்துக் கொண்டான். ஆனால், அப்பா கரடி விடுவதாக இல்லை. தன் குட்டியை தாக்கிய குட்டி சிங்கத்தை கொல்ல வந்தது.
நல்ல வேளை. அப்பா சிங்கம் அந்த இடத்தில் வர, கதிரேசன் தப்பித்தான். குட்டி கதிரேசனுக்கு விழுந்த அடிப்போல், பெரிய கரடிக்கு விழுந்தது. குட்டி கரடியும், பெரிய கரடியும் ஓடிப்போனது.
Management நீதி :
சிறு பிரச்சனை தீர்வு காணும் போது சில நம்பிக்கை பிறக்கும். அந்த நம்பிக்கையில் பெரிய பிரச்சனையை கையாளக் கூடாது. மேலாளரிடம் கூறி பெரிய பிரச்சனைக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த பிரச்சனைக்கு நம்மால் முடிவு எடுக்க தகுதியிருக்கோ அதற்கு மட்டுமே முடிவு எடுப்பது நல்லது.
No comments:
Post a Comment