வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 4, 2015

மிருகம் சொல்லும் Management கதைகள் - 3

அதே காடு. அதே சிங்க ராஜா. தலைமை நரி. அதற்கு கீழ் இரண்டு நரி. அதற்கு கீழ் பண்ணிரண்டு வேட்டை நாய்கள்.



முன்பை விட அளவுக்கு அதிகமாகவே உணவு கிடைக்கிறது. பண்ணிரண்டு வேட்டை நாய்களுக்கு பதிலாக பத்து வேட்டை நாய் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இரண்டு வேட்டை நாய்யை வெளியே அனுப்பிவிடலாம் என்று சிங்கம் கருதியது. தலைமை நரி எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்கவில்லை.

தலைமை நரிக்கு கீழ் இருக்கும் இரண்டு நரிகளை சிங்கம் அழைத்தது.

"பண்ணிரண்டு வேட்டை நாய்களில் வேலை சரியாக அல்லது குறைவாக செய்யும் வேட்டை நாய்யைப் பற்றி சொல்லுங்கள். அதை நமது கூட்டத்தை விட்டு விளக்கிவிடலாம். தேவையில்லாமல் அதற்கு நாம் ஏன் வேலை, உணவு கொடுக்க வேண்டும்" என்று கூறியது.

சிங்கத்தை எதிர்த்து அந்த இரண்டு நரிகள் எதுவும் பேசவில்லை. பேசினாலும், எடுப்படாது என்பது அதற்கு நன்கு தெரியும். அதனால், ஒரு காகிதத்தில் இரண்டு பேரை எழுதி சிங்கத்திற்கு நரி அனுப்பியது.

அதில், அந்த இரண்டு நரிகளின் பெயர் இருந்தது.

இந்த இரண்டு நரியை நீக்கிவிட்டால், பண்ணிரண்டு வேட்டை நாய்களை தான் வேலை வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பதை சிங்கம் உணர்ந்தது. அதனால், யாரையும் கூட்டத்தை விட்டு சிங்கம் அனுப்பவில்லை.

Management நீதி : :

உண்மையான மேலாளர் தனது வேலை காப்பாற்றிக் கொள்ள தனது கீழ் இருப்பவர்களை பலியாடாக்க கூடாது. தனது வேலையை விட அவர்களின் வேலை பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உணர்ந்தால் தான், அவர்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியும். தங்கள் வேலைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து உண்டு என்று தெரிந்தால், அவர்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது. மேலாளர்களால் வேலை வாங்குவதும் சிரமம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails