அதிகாலை வேளை சூரியன் சுடும் நேரத்தில் சிங்கம் தனது குகையில் உறக்கம் கலைந்து வெளியே வந்தது. அப்போது அந்த வழியாக நரி வாக்கிங் வர ” இப்போது நேரம் என்னவென்று தெரியுமா ? என் கை கடிகாரம் ஒட வில்லை.” என்று கேட்டது.
நரி தனது கடிகாரத்தின் நலன் கருதி, “மிகவும் கஷ்டமான காரியம்... நகங்கள் கொண்ட கையில் செய்தால்... அந்த கடிகாரம் அழிந்துவிடும்” என்றது.
ஆனால், சிங்கம் விடுவதாக இல்லை. “ஒன்றும் ஆகாது.... நான் சரி செய்வேன்”
”இது முட்டாள் தனமாக உள்ளது. நீண்ட நகங்கள் கொண்ட கையால் சரி செய்ய முடியாது.” என்று நரி எவ்வளவோ சொல்லியும் சிங்கம் கேட்பதாக இல்லை.
"என்னால் சரி செய்ய முடியும்" என்று சொல்லி அந்த கடிகாரத்தை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் நுழைந்தது. சற்று நேரத்தில் வேளியே வந்தது. நரிக்கு ஒரே அதிர்ச்சி. ஓடாத கடிகாரம் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது
நரி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தன் கடிகாரத்தை வாங்கி சென்றது. சிங்கம் சோம்பலை முறித்துக் கொண்டு மீண்டும் தன் உறங்க தொடங்கியது.
அப்போது ஒரு ஓநாய் சிங்கத்தின் குகைக்கு வந்தது.
”இன்று உன் குகைக்குள் தொலைக்காட்சி பார்க்க வரலாமா ? என் தொலைக்காட்சிப் பேட்டி உடைந்து விட்டது.” என்று ஓநாய் கேட்டது.
”என்னிடம் உன் தொலைக்காட்சி பெட்டியை கொடு. நான் சரி செய்து தருகிறேன்” என்று சிங்கம் கூறியது.
ஓநாய் சிங்கம் சொன்னதை நம்பவில்லை.
“இதை நான் நம்புவேன் என்று நினைக்கிறாயா? எப்படி உன் நீண்ட நகங்கள் கொண்ட கையினால் சரி செய்வாய் ?”
”கவலை வேண்டாம். என்னால் முடியும். ” என்று கூறியது.
ஓநாய் தன் தொலைக்காட்சி பெட்டியை சிங்கத்திடம் கொடுத்தது. சிங்கம் அந்த தொலைக்காட்சி பெட்டியை தன் குகைக்குள் எடுத்து சென்றது. சற்று நேரத்தில் சரி செய்து தொலைக்காட்சி பெட்டியை ஓநாய்யிடம் கொடுத்தது. தொலைக்காட்சியில் நன்றாக படம் தெரிந்தது.
ஓநாய் மிகழ்ச்சியுடன் வாங்கி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தது.
இதில் நமக்கு தெரியாத காட்சி :
சிங்கத்தின் குகைக்குள் ஆறு முயல்கள் இருந்தன. ஆறு முயல்களும் மென்னையான கைகளையும், நல்ல அறிவு திறனும் இருப்பதால் அந்த பணியை செம்மையாக முடித்தன. சிங்கம் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை மட்டுமே பார்த்தது.
Management நீதி :
மேலாளர் எல்லா வேலையையும் தானே செய்து முடிக்க வேண்டும் என்பதில்லை. அவர் சொல்வதை சரியாக வேலை செய்பவர்களை நிர்வாகித்தால் போதும். தான் செய்தது போல் பெயர் எடுக்கலாம்.
2 comments:
கதை நல்லா இருக்குங்க.
Story exactly fits into todays' IT industry.
Post a Comment