22 வருடகளுக்கு மேல் முடிவதையாத ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் புத்தகம்.
இராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் பிரபாகரன் உயிரோடு (?) இல்லை. அதை செய்த சிவராசன், தனு உயிருடன் இல்லை. கொலைக்கு உடந்தையாக இருப்பவர்களை மட்டும் இத்தனை வருடங்கள் சிறையில் இருக்கிறார்கள்.
பேரறிவாளன் குற்ற மற்றவன், குற்றவாளி என்கிற வாதம் தேவையில்லாதது. இனி அதைப் பற்றி பேசி எந்த பலனுமில்லை. தனது பாதி வாழ்க்கையை சிறையில் தண்டனையாக கழித்தவனுக்கு உதவியாக இருக்கப் போவதுமில்லை. அவனின் மிச்ச வாழ்க்கையாவது தன்னுடன் இருக்க வேண்டும் என்கிற ஒரு தாயின் விருப்பத்தை புரிந்துக் கொள்ள இந்த நூல் உதவுகிறது.
ஈழத்துக்கு பிறகு பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் உயிர்கள் தான் தமிழ்நாட்டில் அதிக அரசியல் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த அரசியலுக்கும், இவர்களின் வழக்கும் முடிவுக்கு வரவருவதாக தெரியவில்லை.
மூவர் உயிரின் அரசியலுக்கு பின்னால் ஒரு தாயின் போராட்டம் இருக்கிறது. தனது மகனை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற போராட்டம்.
அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கிறது. இதில் எது வெல்லும் என்று அவரவர் பண பலத்தை பொருத்தது. இந்த நியாயங்களுக்கு நடுவில் ஒரு அபலத் தாயின் குரல் சராசரி மக்கள் காதில் படுவது மிகவும் கடினம். அப்படி காதில் வாங்கியவர்கள் முடிந்தவரை நான்கு காதுகளுக்கு எடுத்துச் செல்லலாம்.
இதில் இந்த தாய் வெற்றி பெற்றாலும், இழந்த 22 வருடங்கள் மீண்டு வரப்போவதில்லை என்கிற சோகம் இருந்துக் கொண்டே இருக்கும்.
1 comment:
வணக்கம்
உண்மைதான் கடந்த காலங்கள் கடந்தவைதான் வரும் காலம் பற்றி சிந்திப்போம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment