பெரியாரால் பல சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கடவுள் மறுப்பு, பெண் சுதந்திரம், தாழ்த்தப்பட்டவர்களாக போராடியது என்று பட்டியலிட்டே போகலாம். அவர் அப்போதைய போராட்டங்கள் அந்த காலத்தில் முதன்மை பிரச்சனையாக இருந்தது. அதனால், மக்களின் ஆதரவு இருந்தது. பலர் வரவேற்றார்கள்.
ஆனால், நாற்பது வருடங்கள் கடந்து இன்னும் அதே பிரச்சனையை திராவிடக் கழகத் தோழர்கள் முன்னேடுத்து செல்வதை ஏற்புடையதாக தெரியவில்லை.
‘கடவுள் மறுப்புடையவன்’ கோயில் பக்கம் போவதில்லை. கோயிலுக்குள் அனுமதிக்கப்படாதவனுக்கே அது பெரிய விஷயமாக தெரியவில்லை.
“என்னை கோயிலுக்கு அனுமதிக்கலனப் போடா.தலைக்கு மேலே ஆயிரம் வேலை இருக்கு. மூனு வேல சாப்பாட்டுக்கே பிரச்சனையா இருக்கு. இதுல கோயில் வேறய்யா !!” என்று அடுத்த விஷயத்திற்கு சென்றுவிடுகிறான். அப்படி இருக்கும் போது தற்போதிய போராட்டம் பெரிய பாதிப்பு ஏற்படுத்த போவதில்லை.
பெரியாரின் கொள்கையைப் படி சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்டவர்கள் ‘தாலி’ என்பது ‘Optional’ ஒரு விஷயமே. கட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. கலவியின் போதும், கணவன் – மனைவி சண்டையின் போது தாலியை எடுத்தெறிவதும், அடக்கு கடையில் வைப்பதும் அன்றாட விஷயமாக மாறிவிட்ட சூழலில் இருக்கிறோம்.
அதை ’தாலி அகற்றும் நிகழ்ச்சி’ என்று நடத்துவதில் சமூகத்தில் என்ன பாதிப்பு ஏற்படுத்தப் போகிறது. தாலியை விட பெண்கள் சுதந்திரத்திற்கு வேலியாக பல விஷயங்கள் தற்காலத்தில் இருக்கிறது. அதை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது.
பெண் சுதந்திரத்திற்காக போராடிய பெரியார் தற்போது இருந்திருந்தால்…
** பெண் உடை மாற்றுவதை ரகசியமாக படம் பிடிக்கும் கேமிராக்களை உடைத்து எறிய வேண்டும் என்று போராட்டம் நடத்திருப்பார்.
** ஹோட்டல், ஜவுளிக்கடை, ஹோட்டல், ரெஸாட்டுகளில் சோதனை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பார். அந்தரங்கத்தை ரகசியமாக படம் பிடிக்கும் நிறுவனத்தை மூட போராட்டம் நடந்திருக்கும்.
** பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் ஆண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்கிற சட்டத்தை கொண்டு வர போராடியிருப்பார்.
பெரியாரால் பெண்கள் வீட்டில் இருந்து சுதந்திரம் அடைந்துவிட்டார்கள். ஆனால், சமூகத்தில் சுதந்திரம் அடையவில்லை. அதற்கான போராட்டத்தை இவர்கள் கையில் எடுக்க வேண்டும். தற்காலத்தில், தாலி ஒரு அலங்கார பொருள் மட்டுமே !!!
தமிழக அரசு நடத்தும் டாஸ்மார்க்கிலே மாட்டு இறைச்சி கிடைக்கிறது. டாஸ்மார்க் மூடப்பட வேண்டும் என்று போராட்ட நடந்துவதற்கு பதிலாக, “மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் தேவையா ?” என்கிற கேள்வி எழுகிறது.
திராவிடக்கழக போராட்டத்தை விமர்சிக்கும் ’சும்மா’ நண்பர்கள், தற்போதைய நிகழ்க்கால பிரச்சனையை பற்றி போராடப்போவதில்லை. ’சும்மா’ நண்பர்கள் சிந்திக்கப் போவதில்லை. அவர்களுக்கு திராவிடக் கட்சிகளை விமர்சிப்பது தான் பிரதான நோக்கம். அரசியல் நோக்கம் இருக்கிறது.
அதே சமயம், போராடும் திராவிடத் தோழர்கள் தேவையான பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பாமல், எந்த தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு விஷயத்திற்கு போராட்டத்தையும், நேரத்தையும் செலவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
போராட்டுபவர்கள் தங்களுக்காக இல்லாமல், தங்களை எதிர்த்து பேசுபவர்களுக்கும் சேர்த்து தான் போராடுகிறார்கள். அதில் அரசியல் நோக்கம் இருக்கக் கூடாது.
பெரியாரின் போராட்டங்கள் அப்படி தான் இருந்தது.
தற்போதைய சமக்காலப் போராட்டங்கள் அப்படி நடக்கவில்லை.
No comments:
Post a Comment