வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, February 28, 2011

இணைய புத்தகக் கண்காட்சி... இன்றே கடைசி !!

அன்பு நண்பர்களே,

ஒரு மாதமாக பரப்பரப்போடு இணையத்தில் நடந்த புத்தகக் கண்காட்சி இன்றோடு முடிகிறது. புத்தகம் வாங்கி ஆதரித்த வாசக நல் உள்ளங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.


பலர் இந்த புத்தகக் கண்காட்சி நீடிக்குமா என்று கேட்டார்கள். இதில், பல நடை முறை சிக்கல்கள் உள்ளன. பல பதிப்பகத்தில் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் புத்தகம் வாங்கி இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெற செய்தோம். குறிப்பிட்ட காலத்திற்குள் விற்ற புத்தகத்திற்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விற்காத புத்தகத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் அதை ஆர்டர் போட்டு வாங்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், தினமும் பார்க்கும் மனைவியை விட வாரத்திற்கு ஒரு முறை பார்க்கும் காதலி தான் அழகாக தெரிவாள். நிரந்தர புத்தகக் கண்காட்சி என்று அறிவித்தால், கன்னிமாரா நூலகத்தில் நடக்கும் கண்காட்சிப் போல் தான் இதுவும் இருக்கும். இன்றே கடைசி தினம் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.


அதலால், புத்தகம் வாங்க விரும்புபவர்கள் ’Book Order’ என்ற subject மெயிலில் இன்று இரவு 12 மணிக்குள் ஆர்டருக்கான மின்னஞ்சலை nagarathna_publication@yahoo.in மற்றும் tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். ஒரு தினம் கழித்துக் கூட பணம் செலுத்தலாம் பிரச்சனையில்லை.

மீண்டும்.. ஆதரவு தெரிவித்த வாசகர்களுக்கு....

நன்றி

Friday, February 25, 2011

நல்லா பண்ணுடா !!

புத்தகம் விற்பதில் எந்தளவுக்கு நான் தீவிரமாக இருக்கிறேன் என்று என்னால் சென்ற ஞாயிறு (20.2.11) அன்று உணர முடிந்தது. அன்று மாலை, என் பள்ளி நண்பனின் ஜானகிராமன் திருமண மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி. பள்ளி முடிந்து 12 வருடம் கலித்து நினைவில் வைத்துக் கொண்டு பலரை அழைத்துயிருக்கிறான். அதே சமயம், வாரம் ஒரு நாளவது புத்தக ஸ்டால் போட வேண்டும் என்று பதிப்பகத்தில் தீவிரமாக இருக்கிறேன்.

இந்த இடத்தில் ஜானகி ராமனை பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும். நண்பர்களின் திருமணத்திற்கு போனில் அழைத்தாலே நேரில் சென்று பரிசோடு வாழ்த்துபவன். அழைத்த நண்பனை விட அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் நண்பர்களை பார்க்க அவ்வளவு ஆர்வம் அவனுக்கு உண்டு. மாப்பிளையை வாழ்த்தும் போது, "கங்கிராட்ஸ் மச்சான் ! நல்லா பண்ணுடா " என்பான். மணப்பெண் உட்பட பக்கத்தில் இருப்பவர்கள் சிரிப்பார்கள். ஒரு சிலர் முகம் சுலிப்பார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டான். எல்லோர் திருமணத்தில் இந்த வசனத்தை மாற்றுவதில்லை. என் திருமணம் நிகழ்ச்சி உட்பட எங்கள் பள்ளி நண்பர்கள் நிகழ்ச்சியில் இப்படி தான் செய்துயிருக்கிறான்.

இப்போதைக்கு ஜானகிராமனை புராணத்திற்கு தற்காலிக புள்ளி வைத்துவிடுவோம்.

அன்றைய தினம் 'LLA' நூலகத்தில் புத்தக ஸ்டால் போட்டேன். அங்கு இரண்டு நிகழ்ச்சி இருந்தும் கூட்டமும் இல்லை, எந்த புத்தகமும் விற்பனையாகவில்லை. ஒரு விதத்தில் நல்லதாக பட்டது. ஏழு மணிக்கே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வீட்டுக்கு வந்தேன். ஜானகிராமனுக்காக வாங்கிய பரிசை பேக் செய்து 8 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்றேன்.

என் வகுப்பில் படித்த 53 மாணவர்களில் 23 பேர் வரை வந்திருந்தார்கள். 12 வருடம் கலித்து பழைய நண்பர்கள் ஒருகினைந்து ஒரு இடத்தில் சந்திப்பது மிக பெரிய விஷயம். ஒவ்வொருவருக்கும் பல வேலைகள். குடும்பத்திற்காக செலவு செய்வது ஞாயிறு ஒரு தினம் தான். அந்த தினமும் நண்பனுக்காக ஒதுக்குவது மிக பெரிய சவாலக இருக்கிறது. ( ஒரு வேளை புத்தகம் நன்றாக விற்பனையாகியிருந்தால் நான் கூட சென்று இருப்பேனா என்பது சந்தேகம் தான்.)

அதற்காக ஜானகிராமனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

23 பேரில் ஒரு சிலரை பள்ளி முடித்து இன்று தான் தான் சந்திக்கிறேன். ஸ்ரீ குமாருக்கு தலை முடி முழுவதும் காலி. பிரசாத், பிரதாப் இருவருக்கும் பாதி மூடி காலி. ஒல்லியாக இருந்த ஞான பிரகாஷ், அன்பு இருவரும் தொப்பை போட்டு இருந்தார்கள். கோபி, பிரபு மேலும் உடல் பெருத்து இருந்தார்கள். சச்சின், சரத் இருவருக்கும் திருமணமாகி அவரவர் மனைவியுடன் வந்திருந்தார்கள். எனக்கும் தலை முடி நரைத்து இருந்தது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எங்களுக்கு இருந்த உருவத்தை தொலைத்திருந்தோம். ஆனால், மீண்டும் பள்ளியில் சென்று வகுப்பில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோர் மனதில் இருந்தது.

’நட்பு பிரியாதது’ தத்துவம் சொன்னாலும் இரண்டு பேர் பெயரை நான் மறந்திருந்தேன். என்னைப் போல் ஒரு சிலர் பெயரை நினைவுப் படுத்த சிரம்மப்பட்டார்கள்.

கல்லூரி நண்பர்களுக்கும், பள்ளி நண்பர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கல்லூரி நண்பர்கள் பெரும்பாலும் ஒரே துறையில் இருக்க வாய்ப்புள்ளது. (என் கல்லூரி நண்பர் பெரும்பாலும் I.T துறை). பள்ளி நண்பர்கள் அப்படியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் இருந்தனர். இருவர் சொந்தமாக தொழில் நடத்திக் கொண்டுயிருக்கிறார்கள். சினிமா, சிவில், மார்க்கெட்டிங் என்று அவரவர் துறை கதைகளை பேசிக் கொண்டுயிருந்தோம்.
அடுத்த நாள் வேலை இருப்பதை நினைக்கும் போது சாப்பாட்டு ஞாபகமும், நண்பனை வாழ்த்த வேண்டும் என்ற ஞாபகமும் வந்தது. அப்போது, பிரபு தன் திருமண நிகழ்ச்சியில் ஜானகிராமன் சொன்னதை எங்களிடம் சொல்லி, “அவன ஒரு வழி பண்ணனும்...” என்றான்.

திருமணம் ஆன மூன்று பேர் அதற்கு அதரவாக இருந்தனர். எல்லோரும் கொண்டு வந்த பரிசு போருட்களையும், மொய் கவட்ரையும் வாங்கி பெயருக்கு பக்கத்தில் எழுதினான். ஒரு சிலர் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. எங்களில் பலர் அவன் எழுதுவதை நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தோம். எங்கள் பரிசு பொருளில் பிரபு எழுதுவதை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

சாப்பிடுவதற்கு முன்பு, மாப்பிள்ளை வாழ்த்த அனைவரும் பெரும் படையாக மேடை ஏறினோம். மணப்பெண்ணின் பக்கத்தில் இருந்த ஜானகியை தளுவியும் , கை கொடுத்தும் நாங்கள் சொன்ன வாழ்த்து, “ மச்சான் கங்கிராட்ஸ், நல்லா பண்ணுடா” என்று சொல்லி பரிசு பொருட்களை கொடுத்தோம்.

பரிசு பொருளை வாங்கிய மணப்பெண்ணின் அம்மாவின் முகம் மாறியிருந்தது. “நல்லா பண்ணுடா” என்று எழுதியதை பார்த்தது.

Monday, February 21, 2011

இந்தியா டுடே விமர்சனம்

சுரேகா எழுதிய “நீங்கதான் சாவி” நூலின் விமர்சனம் இந்தியா டுடே (23 பிப்ரவரி,2011) இதழ் 53வது பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. நூலின் விமர்சனத்தை வாசிக்க....



நூலை வாங்க...

இணைய புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுயிருக்கும் புத்தகங்களை பார்க்க...!!

Thursday, February 17, 2011

நகைச்சுவை குறும்படங்கள்

Youtubeயை துழாவிய போது கிடைத்த சில நகைச்சுவை காலேஜ் குறும்படங்கள்.logic, Camera angle என்று எதுவும் பார்க்காதீர்கள். ஜாலியாக ரசியுங்கள்.

உங்கள் கல்லூரியில் படித்த நண்பர்கள், நினைவுகள் கண்டிப்பாக ஞாபகத்தில் வருவார்கள்.

சின்னக்களவாணி



2 இட்லி 2 வடை



முத்தம்

Wednesday, February 16, 2011

எமர்ஜென்ஸி : ஜெ.பி.யின் ஜெயில் வாசம்

எம்.ஜி.தேவசகாயம்
தமிழில் :எம்.ராம்கி

’எமர்ஜென்ஸி’ என்றவுடன் நம் எல்லோர் நினைவில் வந்து நிற்ப்பது இந்திரா காந்தி தான். கோபக்காரர். பங்லாதேஷ் நாட்டு விடுதலைக்கு உதவியவர். ஈழ விடுதலைக்கு உதவ நினைத்தவர். 26/11 தாக்குதல், இலங்கை இராணுவம் மீது தாக்குதல் என்று தொடர்ந்து இந்தியாவை தாக்குதிலுக்கு எதிர்தாக்குதலுக்கு அஞ்சும் காங்கிரஸ் பிரதமர்களுக்கு மத்தியில் மிகவும் தைரியமானவர். 1971ல் பாகிஸ்தானுடன் யுத்தம், போற்கோவிலில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை தாக்க ‘ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்று துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்டவர். தன் பதவிக்கு ஆபத்து என்றவுடன் ”ஜனநாயகத்தை எமர்ஜென்ஸியின் மூலமாக காப்பாற்றுகிறோம்” என்று சொல்லி ஜனநாயகத்தை காலில் மிதித்தவர்.

இப்படி, எமர்ஜென்ஸியின் பிரதான நாயகியாக இந்திரா காந்தி இருந்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஒரு வில்லன் இருந்ததை சரித்திர பக்கங்கள் குறிப்பிடாமல் மறந்துவிட்டது. அல்லது மறக்கடிக்கப் பட்டுவிட்டது. அன்றைய இந்திராவின் எமர்ஜென்ஸிக்கு தடையாக இருந்தவர் எழுபது வயது இளைஞன் ’ஜெ.பி’ என்கிற ஜெயபிரகாஷ் அவர்கள். எமர்ஜென்ஸி காலத்தில் வட இந்தியாவில் பல இளைஞர்களுக்கு உத்வேகமாய் இருந்தவர் ஜெ.பி. எமர்ஜென்ஸியின் கைது செய்தவர்கள் விடுதலையான பின்னும் ஜெ.பியை விடுதலை செய்ய இந்திரா சர்வதிகாரம் யோசித்தது. ஜெ.பியை விடுதலை செய்வதும் அல்லது பரோவில் விடுவதும், எமர்ஜென்ஸியை முடிவுக்கு கொண்டுவருவதும் ஒன்று தான் என்று நினைத்தது.



’சஞ்சய் காந்தி’ என்ற இளைஞர் பிரதமராக தடையாக இருந்ததும் இந்த எழுபது வயது முதியவர் தான். அதனால், ஜெ.பி விடுதலை செய்யாமல் காலம் கடத்தினர். டெல்லிக்கு அவர் எழுதிய கடிதங்களை பல கடிதங்கள் அனுப்பப்படமால் இருந்தது. ஜெ.பி உடல்நலத்தின் மீது அரசு பெரிய ஆர்வ காட்டவில்லை. காலதாமதமாக மருத்துவமனையில் அனுமதித்ததால் அவரது சீறுநீரகம் கூட பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பியைப் பற்றி ஒரு வரியின் சொல்ல வேண்டும் என்றால் காமராசர் போல் மிகவும் எளிமையானவர். சிறையில் இருந்த போதிலும் ஜெ.பி நாட்டு மக்களுக்காக கவலைப்பட்டவர். “திருமண சந்தையில் இராணுவ அதிகாரிகளுக்கு என்றும் மதிப்பில்லை” என்று வருத்தப்பட்டார். 1966ல் வறட்சியால் 30 லட்ச மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர். சிறையில் இருந்தப் போது கூட உத்திர பிரதேச மாநிலத்தைப் பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதினார். விறட்சியை பிரதமரிடம் பேச வேண்டும், அந்த சந்திப்பை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த போவதில்லை என்று உறுதியளித்தும் இந்திராவை சந்திக்கும் வாய்ப்பு ஜெ.பிக்கு கிடைக்கவில்லை.

எமர்ஜென்ஸியின் போது ஜெ.பி அடிக்கடி பிரிட்டிஷ் காலத்தை நினைத்து பார்ப்பார். அவர்கள் கூட இவ்வளவு சர்வாதிகாரத்துடன் நடந்துக் கொண்டதில்லை என்று சொல்லுவாராம். ( காமராசர் கூட இப்படி சாகும் முன்பு இப்படி தான் சொன்னாராம்.)

எமர்ஜென்ஸி காலத்தில் இந்தியா ரஷ்யாவின் கை பொம்மையாக இருந்ததை ஜெ.பி குறிப்பிட்டுள்ளார். இந்திராவுக்கு எதிராக அவர் எதோ உலருகிறார் என்று அன்று எல்லோரும் கருதினர். ஆனால், 1990ல் கம்யூனிசம் வீழ்ந்த போது மாஸ்கோவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் சோவியத் அரசின் உளவுத்துறையின் கடுமையாக கண்காணிப்பில் இருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது வெளியே தெரியவந்துள்ளது.

ரஷ்ய உளவுத்துறையின் ஆவணங்கள் குறித்து கிறிஸ்டோபர் ஆண்ட்ரூ, வாசிலி மீத்ரோகின் ஆகியோர் தொகுத்து ’மீத்ரோகின் ஆவணங்கள் : ஜெ.பியும் உலகமும்’ என்ற புத்தகத்தை தொகுத்தனர். அந்த ஆவணப்படி ரஷ்யதான் இந்தியாவுக்கு லஞ்சத்தை அறிமுகப்படுத்தியது. கட்சி நிதி என்ற பெயரில் ஏராளமான பண சூட்கேஸ்களில் அடைக்கப்பட்டு பிரதமரின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எமர்ஜென்ஸி காலத்தில் கைது செய்யப்பட்ட ஜெ.பியை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த தேவசகாயம் அவர்கள் ஜெ.பியுடன் பழகிய தருணங்களை நூலாக எழுதியிருக்கிறார். ஜெ.பி அரசியல் பார்வையும், எமர்ஜென்ஸி முடிவுக்கு வந்தால் இந்திராவுக்கு எதிராக அவர் வைத்திருந்த திட்டங்களை எல்லாம் குறிப்பிட்டுள்ளார் ஜெ.பி. அதில், ஜெ.பியின் முக்கியமான திட்டம், காமராசரை தி.மு.கவுக்கு ஆதரவாக மாற்ற வைப்பது. ஆனால், இந்திராவை பிரதமராக்கி தான் மிக பெரிய தவறு செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்விலே காந்திஜெயந்தி அன்று காமராசர் இறந்தது ஜெ.பி ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேசிய அளவில் மிக பெரிய பலமான கட்சி இல்லை என்பது தான் 1977 வரை அவர்களின் மிக பெரிய பலமாக இருந்தது. ஜனதா கட்சி, பா.ஜ.க என்று பல தேசிய கட்சிகள் வந்தாலும் ஏழைகளை ஏழைகளாக்கும், பணக்காரர்களை பணக்காரர்களாக்கும் காங்கிரஸிடம் தான் மக்கள் மாட்ட வேண்டியதாக உள்ளது.


நூலை வாங்க... இங்கே

ரூ.150, பக்:288
கிழக்கு பதிப்பகம்

**

இணைய புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுயிருக்கும் புத்தகங்களை பார்க்க...!!

Monday, February 14, 2011

காதல் - பெண் பார்வையில்...!!

வெளியே செல்லும் போது
தும்பல் சத்தம்
நான் வெளியே செல்ல தடைவிதித்தேன்
என் அன்பை ரசித்தான்
நாத்திகனாகிய அவன் !

**
நான் கோபமாய் பேசும் போது
என் மீது கோபப்படாமல் அமைதியாய் இருக்கிறாய் !
உன் மேல் கோபம் அதிகமாகிறது
என் மீது உனக்கு இல்லாத உரிமையா !!

**



என் தோழியிடம் பழகாமல் இருக்க
பல பொய்கள் அவளைப் பற்றி சொன்னேன்
பொய் என்று தெரிந்தும்
என் தோழியிடம் பேசாமல் இருந்தாய்
என் காதலுக்காக !!

**

நீ எழுதிய கவிதைகளை
என் கவிதைகள் என்று
உன்னிடத்தில் கொடுக்கிறேன்
உன் கவிதைக்கு சொந்தக்காரி
நான் தானே !!

**

பத்து கடை அழைந்து
எனக்காக பரிசைக் கொடுத்து

”பிடிச்சிருக்கா..!” என்றாய்

”போடா...!
கொடுப்பது நீயாக இருக்கும் போது
எப்படி பிடிக்காமல் இருக்கும்.” என்றேன்

**

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!!

நான் எழுதிய காதல் சிறுகதை நூலை வாங்க... இங்கே !

இணைய புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுயிருக்கும் புத்தகங்களை பார்க்க...!!

Thursday, February 10, 2011

அண்ணாவுக்கு கிடைத்தது பணக்காரர் தயவா? ஏழையின் ஆதரவா?

ஓர் இயக்கத்தின் உண்மையான வளர்ச்சியைக் காட்டு வது எது? அவ்வியக்கத்துக்குக் கிடைத்திருக்கிற பணக்காரர்களின் ஆதரவா? அவ்வியக்கத்தின் பால் ஏழைகள் காட்டும் நேசமா?பணக்காரர்கள் ஆதரித்தால் பணம்தான் கிடைக்கும். ஏழைகள் ஆதரித்தால் தான் இயக்கத்தில் உயிரோட்டம் இருக்கும்.

இக்கருத்தை,அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு மாநாட்டில் சுவையான ஒரு நிகழ்ச்சியைக் கூறி விளக்கினார்கள்.



நான் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தபோது,செட்டிநாடு ராஜா வீட்டில் விருந்து.பொப்பிலி ராஜா முதல் தமிழ் நாட்டுப் பணக்காரர்கள் யாவரும் வந்திருந்தனர்.மறுநாள் நான் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்.ராஜா தன் காரைக் கொடுத்து, காரைகுடியில் ரயில் ஏற என்னை அனுப்பினார். வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் இடையில் நின்றது. டிரைவர் இறங்கி ஏதேதோ செய்து கொண்டிருந்தார். ரயில் நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது. நான் டிரைவரிடம் “என்னைய்யா வண்டியைக் கிளப்ப முடியுமா? முடியாதா? நான் ரயிலுக்குப் போய் ஆக வேண்டுமே”என்று படபடப்பாக்க் கேட்டேன்.

டிரைவர் நிதானமாக,”இப்ப எதுக்கு அவசரப்படுறீங்க? அவசர அவசரமா மெட்ராஸ் போயி,இன்னும் நாலு பணக்காரங்களை வாழ வைக்கப் போறீங்களா?” என்று குத்தலாகக் கேட்டார். யார் மூலமாகவோ ரயில் நிலையம் சென்றேன்.

ஜஸ்டிஸ் கட்சியெல்லாம் மறைந்து, நமது கட்சி ஆரம்பித்து இப்போது சில நாள்களுக்கு முன் செட்டி நாட்டுப் பகுதிக்குப் பேசப் போனேன். கூட்டம் முடிந்தது. நம் மாவட்ட செயலாளர் ஒரு காரில் என்னை ரயில் நிலையத்துக்கு அனுப்பிவைத்தார்.இப்போது நிஜமாகவே கார் ரிப்பேர். இறங்கி ரோட்டில் நிற்கிறேன். ஒரே இருட்டு, ரயிலுக்கு நேரமாகிறதே என்ற அவசரம்.
அப்போது ஒரு பெரிய கார் வந்து நின்றது.

டிரைவர் இறங்கிவந்து “என்னண்ணா கார் ரிப்பேரா?நான் ஸ்டேக்ஷனுக்குத்தான் போறேன்.வண்டியிலே ஏறிக்கங்கண்ணா”என்றார்

”இது யார் வண்டி?” என்றான்.”ராஜா வண்டி”என்றார்.

”வேண்டாம், என்னை அழைத்துச் சென்றது தெரிந்தால்,ராஜா உங்களைக் கோவிச்சுக்குவார்” என்றேன். பரவாயில்லை. ஏறுங்கண்ணா”என்று வற்புருத்தி ஏற்றிக் கொண்டார்.

நான் சிந்தனை வயப்பட்டேன்.ராஜா அன்று நம்மிடம் இருந்தார்.டிரைவர் நம்மை எதிர்த்தார். இப்போது டிரைவர் நம்மை நம்மோடு. ஆனால் ராஜா நம்மோடு இல்லை. டிரைவரின் ஆதரவுதான் நம்மை வளர்த்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.”

இவ்வாறு அண்ணா எது வளர்ச்சியின் அடையாளம் என்று விளக்கினார்.

ஏழைகள் ஆதரிக்குமாறு இயக்கம் நடத்தினால் வளரலாம்.செல்வர்கள் ஆதரவு செல்வத்தைத் தரும். இயக்கத்திற்க்கு வளர்ச்சி தராது.

அண்ணா எத்தனை பெரிய தலைவர் என்று புரிகிறதா?

சொன்னவர்;இ.ரெ.சண்முகவடிவேல்.

’அண்ணா’ படம் வைத்து கட்சி நடத்தும் இரண்டு கட்சிக்கும் எப்போது உணர்வார்களா ??

***

தொண்டர்களால் உயர்ந்தவன் நான்

அண்ணா ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்தார். நின்று பேச வசதியாக்க் கை வைத்துக் கொண்டு பேசும்படியாக ஒரு மேடை வைத்திருந்தனர்.

அண்ணா அந்த மேடையருகே சென்று நின்றார். சராசரி உயரத்துக்கும் குறைவான அண்ணாவை மறைத்த மேடையை அகற்றுமாறு கூச்சலிட்டனர்.

அப்போது ஓர் அன்பர் ஓடிப்போய் ஒரு கள்ளிப் பெட்டியைக் கொண்டுவந்து போட்டு,அதில் நின்று பேசுமாறு அண்ணாவை வேண்டினார்.

அண்ணா இப்படித்தான் தன் பேச்சை ஆரம்பித்தார், ”தொண்டர்களால் உயர்ந்தவன் நான்.”என்பது இப்போது புரிந்திருக்கும்.”

இதை கேட்ட கடல் போல் குழுமியிருந்த மக்கள் ஆர்ப்பரித்து முழங்கினர்.

***

இணைய புத்தகக் கண்காட்சிக்காக இரண்டு சி.டிக்கள் இடம் பெறுகிறது.

சி.டி

67.அமரர் கல்கியின் படைப்புகள் - ரூ.199 ( 10 புதினங்கள் மற்றும் 75 சிறுகதைகள்)
68.தமிழ் புதினங்கள் 1 - ரூ.99 ( 20 புதினங்கள் )

புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுயிருக்கும் முழு புத்தக பட்டியலை பார்க்க .....

Monday, February 7, 2011

ஆர்.எஸ்.எஸ் – மதம், மதம் மற்றும் மதம்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது எனக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. 1947ல் தீவிரமாக செயல்பட வேண்டிய இந்து பிரிவினை வாதத்தை காலம் கடந்து இன்னும் உடும்பு பிடியாக பிடித்திருப்பவர். இவர்கள் என்ன தான் தீவிரமாக செயல்ப்பட்டாலும், இந்து மதத்தில் இருப்பவர்களே கால்வாசி பேர் இவர்களை உண்மையாக ஆதரிப்பது மிக பெரிய விஷயம்.

கடவுளே காலவதியாகிக் கொண்டு இருக்கும் போது மதம் நம்பிக்கை அடிப்படையாக வைத்து மாற்றம் கொண்டு வர நினைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்க்காரர்கள் என்ற என் எண்ணத்தில் இருந்து நான் மாறவில்லை. இந்த புத்தகமும் ஆர்.எஸ்.எஸ் மீது பலர் கொண்டுள்ள எண்ணத்தையும் மாற்றப்போவதில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் சில நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை புரியவைத்திருக்கிறது. மற்றப்படி கட்டுரையின் தொடக்கத்தின் சொன்ன வரியின் இருந்து நான் பின்வாங்கவில்லை.

புத்தகத்திற்கு வருவோம்.

என் ஆஸ்தான குரு பா.ரா அவர்கள் எழுதிய புத்தகம். ஒவ்வொரு புத்தக்க் கண்காட்சியின் அவர் புத்தகத்தை வாங்கி விடுவது வழக்கம். இந்த முறையும் அப்படியே... காஷ்மீர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.


1. அரசியக் கட்சித் தலைவர்கள் தம் வாரிசை அரசியலுக்கு அழைத்து வருவதுப் போல் ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை. இங்கு, குடும்பம் என்பது இயக்கம் மட்டுமே.

2. தனக்கு அடுத்து இவர் தான் தலைவர் என்று முடிவு எடுத்து விட்டால், மற்றவர்கள் ஏன் எதற்கு என்று கேட்பதில்லை. தலைவர் தேர்ந்தெடுக்கும் நபர் தான் அடுத்த தலைவர். இது வரை விமர்சிக்கப்படாத முறை தலைவர்களை தேர்ந்தெடுத்துயிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

3.கோவா சுதந்திரத்திற்கு பிறகும் கோவா போர்த்துகீசிய காலனியின் கீழ் தான் இருந்தது. இராணுவ நடவடிக்கை எடுக்கவோ நேரு மறுத்துவிட்டார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்குள் ஒருவரான ஜகன்னாத் ராவ் ஜோதி நேரே கோவாவில் சத்தியகிரகம் இருந்தற்காக கைது செய்தது. அந்த செயலை எதிர்த்து ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சத்தியகிரகத்தில் இறங்க, 1950 இந்திய சுதந்திர தினத்தன்று போர்த்துகீசிய போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறங்கியது.

ஆர்.எஸ்.எஸ்., சில புரட்சி அமைப்பினரும் சேர்ந்து கோவா காவல் நிலையத்தை கைப்பற்றி தாத்ரா விடுவிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தனர். சரியாக ஒரு வாரத்தில் பல இடங்களில் தாக்குதல் நட்த்தப்பட்டது. இறுதியில் நேரு இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருந்தது. டிசம்பர் 18,1961ல் கோவா இந்தியாவுடன் இணைந்தது.

4. 1962ல் இந்திய- சீனா யுத்தத்தின் போது இந்தியாவில் இருக்கும் ஒரு இடதுசாரி இயக்கங்கள் சீனாவை ஆதரித்தது. கம்யூனிசம் – கேபிடலிசத்திற்கான யுத்தம் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஜவான்களுக்கு உதவியது. வாகனங்கள், ஆயுதம் செய்யும் தொழிற்சாலையில் 24 மணி நேரம் செய்ய தயாராக இருந்தார்கள். பிரதமர் நேருக் கூட இதை எதிர்பார்க்கவில்லை.

1963ல் ஜனவரி 26ல் தேதி நடந்த குடியரசு தின அணி வகுப்பிற்கு அனுமதி தந்தார்.


ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசபக்தி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. பிரச்சனை, அந்த தேசபக்தியின் மீது அவர்கள் மீது பூசும் மதச்சாயத்தில் தான்.

ஆரம்ப அத்தியாயத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை பா.ரா உணர்த்தியிருக்கிறார்.

**


ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான விவாதிக்கப்படும் குற்றங்களை இந்த நூலில் பதில் இல்லை. மிக பெரிய வருத்தம்.

இந்து மதத்தில் இருப்பவர்கள் மத மாறுவதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ். அதில் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து ஏன் போராடவில்லை?

பழங்குடியினர் இடத்தில் கூட தங்கி தங்கள் கொள்கையை பரப்ப நினைப்பவர்கள், எத்தனை பழங்குடி இனத்தை சமூகத்தின் முன் உயர்த்தி உள்ளார்கள். ?

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மிசாவில் கைது செய்யப்பட்டனர். பின்னர், இவர்கள் மன்னிப்பு கோரியதும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்திராவின் சர்வதிகாரத்தன எமர்ஜன்ஸியின் போது ஜெபியை தனியே விட்டு ஓடிவந்தவர்களை மேலோட்டமாக ஒரு வரியில் சொல்லியிருப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

”இவர்கள் நேர்மை இல்லாதவர்கள்” என்று ஆர்.எஸ்.எஸ்.யைப் பற்றி ஜெபி குறிப்பிட்டுள்ளார். எமர்ஜன்சஸிப் பற்றி குறிப்பிடும் போது ஜெபி ஆர்.எஸ்.எஸ்.ப் பற்றி விமர்சனத்தையும் குறிப்பிட்டுயிருக்க வேண்டும்.

**

கடைசி ஒரு இரண்டு மூன்று பக்கத்தில் மேலோட்டமாக ஆர்.எஸ்.எஸ் மீது சில குறைகளை சொல்லிவிட்டு இந்த புத்தகத்தை நடுநிலையான புத்தகம் என்று சொல்வதில் எந்த நியாயமுமில்லை. ஆர்.எஸ்.எஸ். பற்றி புரிந்துக் கொள்ளாமல் எதிர்ப்பவர்கள் புரிந்துக் கொண்டு எதிர்க்க இந்த நூல் உதவும்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஹீரோ இயக்கமாக கூறும் நூலாக எனக்கு படுகிறது.

நூலை வாங்க... இங்கே.

ரூ.75. பக் : 144
கிழக்கு பதிப்பகம்

Saturday, February 5, 2011

இணைய புத்தகக் கண்காட்சி - சில அனுபவங்கள்

We Can Books இணைய புத்தகக் கண்காட்சி அறிவித்த நாள் அன்று, ஒரு நண்பரிடம் அழைப்பு வந்தது.

“ஸார் ! உங்க Online book fair நல்ல யோசனை. எங்க பதிப்பக புத்தகமும் வைக்க முடியுமா ! அதுக்கு நாங்க ஏதாவது செய்யனுமா” என்று கேட்டார்.

அறிவித்த சில மணி நேரத்தில் இப்படி ஒரு அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. அவரின் புத்தக தலைப்பு அனைத்தும் விற்பனையாக கூடியது.

நீங்கள் புத்தக கடைக்கு கொடுக்கும் சலுகை விலையோடு புத்தகம் கொடுங்கள் போதும். எந்த பண உதவியும் வேண்டாம் என்றேன்.

என் நெருங்கிய நண்பர்கள் புத்தகம் கொடுப்பவர்களிடம் ஏதாவது பணம் வாங்குறியா ! அவங்க தபால் செலவுக்கு பணம் தராங்களா...! என்று பல கேள்விகள்.

தபால் செலவு, 10% தள்ளுபடி எல்லாம்.. எனக்கு கொடுக்கும் சலுகை விலையில் இருந்து தான் வாசகர்களுக்கு கொடுக்கிறேன்.

இதனால், உன் லாபம் குறையுமே என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். எல்லா விஷயங்களுக்கும் லாபத்தை மனதில் வைத்துக் கொண்டு நடத்தினால் எந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. இந்த முயற்சியில் எனக்கு கிடைக்கப் போவது குறைந்த லாபம் தான். இருந்தாலும், புத்தகத்தில் லாபம் கிடைப்பது மிக பெரிய சாதனை !!!

எந்த ஓரு முயற்சிக்கும் ஒரு தொடக்கம் வேண்டும். அது தான் இந்த அறிவிப்பு. இந்த யோசனை நாளை பெரிய பதிப்பகங்கள் பயன்படுத்திக் கொண்டால் லாபம் வாசகர்களுக்கும் கிடைக்கும்.

புத்தக விற்பனையாளர் செய்யும் போது பதிப்பகங்கள் செய்ய முடியாது !!

மேலும், சில புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறும். புத்தகத்திற்கான பட்டியலை பார்க்க....
http://guhankatturai.blogspot.com/2011/02/we-can-books.html

**

முதல் ஆர்டர்

இணைய புத்தகக் கண்காட்சி அறிவிப்பை பெங்களூரை சேர்ந்த ஒரு தோழி இரண்டு புத்தகத்தை ஆர்டர் செய்திருந்தார். தமிழக அல்லாத முகவரி என்பதால் புத்தகம் அனுப்புவதைப் பற்றி நேரடியாக தொடர்பு கொண்டேன்.

” ஸார் ! உங்க ஐடியா சூப்பர். சென்னைக்கு வர முடியாத என்னை மாதிரி ஆளுங்களுக்கு இது பெரிய Gift” என்று பாராட்டினார்.

ஒரு நிமிடத்தில் என்னை நினைத்து நானே பெருமைப்பட்டுக் கொண்டேன். அதே சமயம் என் மீது எனக்கே கோபம் வந்தது. தமிழகத்தில் இருப்பவர்கள் எப்படியாவது தமிழ் புத்தகம் சலுகை விலையில் கிடைக்கும். ஆனால், வெளி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பது மிகவும் கடினம். இதைப் பற்றி யோசிக்காமல் இருந்தது என் தவறு தான்.

அந்த தோழி கோரியர் செலவு அவர் ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார். இருந்தும் புத்தகத்திற்குரிய விலையை மட்டும் வங்கி கணக்கில் செலுத்துமாறு சொன்னேன். என்னுடைய நோக்கம் வாசகர்கள் தபால் செலவு இல்லாமல் புத்தகம் பெற வேண்டும். ’கோரியர் கட்டணம்’ என்ன தான் உயர்ந்தாலும் இதில் இருந்து நாங்கள் மாற போவதில்லை.

தமிழ்நாட்டு அல்லாத வாசகர்கள் புத்தகத்தின் விலையை மட்டும் கொடுத்தால் போதுமானது (குறைந்தது ரூ.200 இருக்க வேண்டும்). தபால் செலவு கொடுக்க வேண்டியதில்லை. இவர்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி தர முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

**

இணைய புத்தக்க் கண்காட்சிக்காக எனக்கு தெரிந்த அமெச்சூர் டிசைனில் ஒரு லோகோவை தயார் செய்திருக்கிறேன். இந்த கண்காட்சிப் பற்றி தங்கள் பதிவில் ஒரு மாதத்திற்கான அறிவிப்பை தெரிவித்தால் ’We Can Books’ அரும்பு முயற்சிக்கு உதவியாக இருக்கும்.



அட்வான்ஸ் நன்றிகள்

அன்புடன்,
குகன்

Wednesday, February 2, 2011

We Can Books இரண்டாம் ஆண்டு !!

சென்ற வருடத்தில் நாகரத்னா பதிப்பகத்தை தொடங்கி இரண்டு மாதத்தில் ‘We Can Books distributors’ தொடங்கினோம். எங்கள் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் விதமாக இணையத்தில் புத்தகக் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இணையத்தில் புத்தக்க் கண்காட்சி நடத்துவது எளிதில்லை. தள்ளுபடி தருவது கடினம். தபால் செலவு ரூ.25 முதல் ரூ.50 வரை வாய்ப்புள்ளது. ஆனால், இந்த இணைய கண்காட்சியில் இரண்டும் வாசகர்களுக்கு நாங்கள் தருவதாக இருக்கிறோம்.

10% தள்ளுபடி மற்றும் தபால் செலவு இலவசம்.

இந்த புத்தக்க் கண்காட்சியில் மற்ற பதிப்பக புத்தகங்கள் இடம் பெறுவதால் ரூ.150க்கு மேல் வரும் ஆர்டருக்கு மட்டும் தபால் செலவு இலவசமாக வழங்கும் நிலையில் இருக்கிறோம்.

அதற்கு கீழ் (ரூ.150) ஆர்டர் தருபவர்கள், 50% கொரியர் பணம் செலுத்தினால் போதுமானது.

இந்த இணைய புத்தகக் கண்காட்சியில் இடம் பெறும் புத்தக பட்டியல் கீழே !!

சிறுகதை
1. நடைபாதை (குகன்) - ரூ.40 (பக்.112)
2. என்னை எழுதிய தேவதைக்கு (குகன்) - ரூ.55 (பக்.96)
3. லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் (சங்கர் நாராயண்) – ரூ.50 (பக்:80)
4. டைரி குறிப்பும் காதல் மறுப்பும் (பரிசல் கிருஷ்ணா) – ரூ.50 (பக்.80)
5. வைரஸ் புன்னகை (தமிழினியன்) – ரூ.40
6. வசீகர பொய்கள் (எஸ்.ஷங்கர்நாராயணன்) – ரூ.60
7. இரத்த ஆறு (எஸ்.ஷங்கர்நாராயணன்) – ரூ.60
8. தகப்பன்சாமி (பத்ரிநாத்) ரூ.25
9. துணிலும் இல்லை துரும்பிலும் இல்லை (ம.ந.ராமசாமி) – ரூ.25
10. சலாம் இஸ்லாம் (களந்தை பீர்முகமுது) – ரூ.50
11. மீண்டும் ஒரு காதல் கதை (சங்கர் நாராயண்) – ரூ.90

கவிதை
12. காந்தி வாழ்ந்த தேசம் (கவிதை தொகுப்பு) – ரூ.45 (பக்.80)
13. கவிதை உலகம் (கவிதை தொகுப்பு) – ரூ.35 (பக்.64)
14. நிஜமற்றுப் போன நம் கனவுகள் (ஈழ கவிதைகள்) – ரூ.25 (பக்.48)
15. SMS ஹைக்கூ ( ஹைக்கூ தொகுப்பு) – ரூ.10 (பக்.32)
16. நெல்மணி (ஹைக்கூ) - ரூ.10 (பக்.32)
17. நீ...நான்..நிலா (இளையபாரதி) –ரூ.40

நாவல்
18. நீர்வலை (எஸ்.ஷங்கர்நாராயணன்) - ரூ.70 – (தமிழக அரசு விருது பெற்றது)
19. மில் (ம.காமுத்திரை) - ரூ.150 – ( ஆனந்த விகடன், சுஜாதா நினைவு 2010 விருது பெற்றது)


மாணவர்களுக்கான புத்தகங்கள்

20. உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி (கனியன் செல்வராஜ்) – ரூ.10 (பக்.22)
21. கம்ப்யூட்டர் கையேடு ( என்.சொக்கன்) – ரூ.100
22. VAO : மாதிரி வினா விடை – ரூ.99
23. நினைவுத் திறன் வளர்த்தல் – ரூ.25 (பக்.64)
24. வள்ளுவர் காட்டும் தனி மனித நிர்வாகம் – ரூ.30 (பக்.80)
25. எம் மாணவனையும் பொன்னாக்கலாம் – ரூ.40 (பக்.96)
26. சிந்திக்க வைக்கும் சிறப்பான விடுகதைகள் – ரூ.40 (பக்.96)
27. படித்தவுடன் மனபாடம் - ரூ.40 (பக்.96)
28. மாணவர்களுக்கான யோகாசங்கள் - ரூ.50 (பக்.96)
29. புத்தி தரும் பஞ்சதந்திர கதைகள் - ரூ.40 (பக்.96)
30. கட்டுரை களஞ்சியம் (கட்டுரை தொகுப்பு) – ரூ.60
31. தைவான் நானோடிக் கதைகள் (மதுமிதா) – ரூ.40


சுயமுன்னேற்றம்

32. எனது கீதை (குகன்) – ரூ.40 (பக்.112)
33. நீங்கதான் சாவி (சுரேகா) – ரூ.50 (பக்.80)
34. வளமுடன் வாழ்வோம் வா (துருவன்) – ரூ.40 (பக்.112)
35. வரம் தரும் வாழ்வு (துருவன்) – ரூ.75 (பக்.160)
36. சூரியனுக்கு சுபிரபாதம் (ஜெயந்தி சங்கர்) – ரூ.35

அரசியல்

37. ராஜீவ் கொலை வழக்கு (ரகோத்மன்) – ரூ.130
38. மாவோயிஸ்ட் ( பா.ராகவன்) – ரூ.70
39. இலங்கை இறுதி யுத்தம் ( Nitin A.Gokhale) – ரூ.120
40. இந்திரா Vs ஜெ.பி : எமர்ஜன்ஸி – ரூ.150
41. அகதி வாழ்க்கை (கலையரசன்) - ரூ.100
42. போபால்: அழிவின் அரசியல் ( மருதன்) – ரூ.135
43. ஆர்.எஸ்.எஸ் : மதம், மதம் மற்றும் மதம் (பா.ராகவன்) – ரூ.75
44. மகாத்மா கொலை வழக்கு (என்.சொக்கன்) – ரூ.130
45. ஸ்பெக்ட்ரம் சர்ச்சை ( பத்ரி ) – ரூ.40
46. இந்திய வரலாறு (ராமச்சந்திர குஹா) பாகம் 1 & 11 –ரூ.250 & ரூ.350
47. வஞ்சக உளவாளி ( நந்திதா ஹக்சர்) – ரூ.170
48. தமிழ்நாடு எல்லைப் போராட்டம் (அ.பெரியார்) – ரூ.100

வாழ்க்கை வரலாறு

49. தேவர் : ஒரு வாழ்க்கை ( பாலு சத்யா ) – ரூ.75
50. கிளியோபாட்ரா ( முகில்) – ரூ.90
51. கலீலியோ கலீலி (குகன்) – ரூ.25
52. ராஜராஜ சோழன் (ச.ந.கண்ணன்) – ரூ.80

பிற

53. ஆர்ய சமாஜம் (மலர்மன்னன்) – ரூ.65
54. யூத மதம் (முகில்) – ரூ.25
55. பிரியாணி வகைகள் – ரூ.25
56. செட்டி நாடு அசைவ சமையல் – ரூ.25
57. இந்துத்துவம் : எளிய அறிமுகம் (அரவிந்தன்) – ரூ.25
58. ஓஷோ :ஹைக்கூ புரிதல் (செல்லம்மாள் கண்ணன்) – ரூ.30
59. என் வானம் நான் மேகம் (மா.அன்பழகன்) – ரூ.200
60. அரவாணிகள்: பன்முக அடையாளங்கள்(வெ.முனிஷ்)-ரூ.125

61 இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி ? - ரூ.50
62பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி ? - ரூ.50
63. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் - ரூ.50
64. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் - ரூ.60
65. சுவையான 100 இணையதளங்கள் - ரூ.60
66. பசியின் நிறம் வெள்ளை - ரூ.70

சி.டி
67. அமரர் கல்கியின் படைப்புகள் - ரூ.199 ( 10 புதினங்கள் மற்றும் 75 சிறுகதைகள்)
68. தமிழ் புதினங்கள் 1 - ரூ.99 ( 20 புதினங்கள் )
நாகரத்னா பதிப்பகம் சிறப்பு தள்ளுபடி

நாகரத்னா பதிப்பகத்தின் ரூ.375 மதிப்புள்ள 9 நூல் = ரூ.300 + தபால் செலவு இல்லை. (20% தள்ளுபடி)

நாகரத்னா பதிப்பகத்தின் ரூ.195 மதிப்புள்ள 4 சிறுகதை நூல் = ரூ.175 + தபால் செலவு இல்லை.

கேபிள் சங்கர் (சங்கர் நாராயண்) யின் ரூ.230 மதிப்புள்ள 3 நூல்கள் = ரூ.200 + தபால் செலவு இல்லை.

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
சினிமா வியாபாரம்
மீண்டும் ஒரு காதல் கதை

தாங்கள் விரும்பும் புத்தகப்பட்டியலை 'Book Order' என்று Subjectல் குறிப்பிட்டு, nagarathna_publication@yahoo.in மற்றும் tmguhan@yahoo.co.in மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் முகவரி மற்றும் அலைபேசி விபரங்களுடன் அனுப்பவும்.

தாங்கள் கேட்கும் புத்தகங்கள் எங்களிடம் இருப்பதை உறுதி செய்த பின்னர் உங்களை தொடர்பு கொண்டு பணம் செலுத்தும் விபரங்களை தெரிவிக்கிறோம்.

நீங்கள் ஆர்டர் செய்யும் எல்லா புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
வெளி மாநிலத்தில் இருப்பவர்கள் தயவு செய்து புத்தகம் அனுப்ப தமிழக முகவரி கொடுக்கவும்.

இந்த அறிவிப்பை தங்கள் பதிவிலோ, இணையத்திலோ வெளியீடுபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள் !!

இந்த கண்காட்சி பிப்ரவரி 2 முதல் 28 வரை மட்டுமே !!

Tuesday, February 1, 2011

அறிவாளியும், நாதாரியும்

வெளியே செல்லும் முன் பத்து ஐந்து நிமிடம் மௌனமாக இருக்க வேண்டும் என்று ராஜகோபால் பல முறை சொல்லியும் பத்மா கேட்பதில்லை. கிளம்பும் போது எதையாவது மறந்து வைத்து விடுவான். இல்லை என்றால் கோபமாக வண்டி ஓட்டுவான். வெளியே செல்லும் முன் கிடைக்கும் பத்து நிமிட அமைதி தான் ஞாபகமாக எல்லாவற்றையும் எடுத்து செல்லவும், அமைதியாக வண்டி ஓட்டவும் உதவும். அது பத்மாவுக்கு புரிவதில்லை.

எப்போதும் வெளியே செல்லும் போது தான் எதையாவது பேசிக் கொண்டே இருப்பாள். இன்றும் அப்படி தான். பத்மா திட்டுவதை காதில் வாங்கிக் கொண்டே வெளியே வந்தான் ராஜகோபால். அவள் திட்டுவது புதுசு இல்லை என்றாலும், இன்று கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டாள்.

காலை, ராஜகோபாலிடம் படித்த மாணவன் அவன் வீட்டுக்கு வந்திருந்தான்.

" ஸார் ! நா ஜோசப். உங்க கூட படிச்ச ஸூடண்ட். என்ன தெரியுதா !" என்றான்.

" உள்ள வாப்பா. வருஷத்துக்கு இர நூறு பேரு என் கிட்ட படிக்கிறாங்க. எல்லாரையும் ஞாபகம் வச்சிக்க முடிய மாட்டிங்குது" சிரித்தப்படி தன் மாணவனை வரவேற்றான் ராஜகோபால்.

"இல்லனா மட்டும் இந்த மனுஷன் ஞாபகம் வச்சு எல்லாத்தையும் செஞ்சிடுவான்" என்று ராஜகோபலின் மனைவி உரக்க திட்டியபடி அடுப்பங்கரையில் பாத்திரத்தை உருட்டினாள்.

வந்த மாணவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், ராஜகோபாலுக்கு பலகிவிட்டது. ஜோசப் மெதுவாக உள்ளே நுழைந்தான்.

" நீ எந்த பெட்ச்ல என் கிட்ட படிச்ச..."

"2003 பெட்ச். உங்க க்ளாஸ்ல நா தான் நாதாரி பையன்"

தன் வகுப்பில் அதிகம் கேள்வி கேட்கும் மாணவனை ’அறிவாளி’ என்றும், அதிகம் சேட்டை செய்யும் மாணவனை ’நாதாரி பயல்’ என்று அழைப்பது ராஜகோபாலின் வழக்கம். இப்படி, அவர் வகுப்பு எடுக்கும் ஒவ்வொரு க்ளாஸிலும் ஒரு அறிவாளியும், நாதாரி பயலும் கண்டிப்பாக இருப்பார்கள். அந்த வகுப்பில் இரண்டு மாணவர்களுக்கு பிரோகிதர் இல்லாமல் அதுவே பட்ட பெயராக நாமம் சுட்டப்படுவார்கள்.

வகுப்பில் நுழைந்ததும், அறிவாளி மாணவனிடம் எதாவது படிக்க சொல்லி அவன் கேள்வி கேட்பதை தடுப்பார். நாதாரி மாணவனை அடிக்காமல் அந்த வகுப்பை விட்டு வெளியே போக மாட்டார். அவன் எப்போ சேட்டை செய்வான் என்று அவர் பிரம்பு காத்துக் கொண்டு இருக்கும்.

தன்னை ’நாதாரி’ என்று ஜோசப் சொன்னதும் ராஜகோபாலுக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் தான் ஆசிரியரானது போல் இருந்தது. தன் வார்த்தைக்கு மதிப்பில்லாத வீட்டில் தன் பழைய பாடத்தை கேட்ட மாணவனை பார்க்கும்ப் போது தொழைந்த சந்தோஷம் கிடைத்தது போல் உணர்ந்தார்.

"பத்மா ! காபி கொண்டா ". அமர்ந்தப்படி கொஞ்ச அதிகார தோரனையில் மாணவனுக்கு காபி கேட்டான்.

“பிரிஸ்பால் ஸ்டிபம் எங்கே இருக்காரு தெரியுமா ஸார் ?”

“அவரு ரிடையர் ஆயிட்டு, பையனோட அமெரிக்காவுல செட்டில் ஆய்ட்டாரு”

ராஜகோபாலும், ஜோசப்பும் தங்கள் பழைய கதைகளை பேசிக் கொண்டு இருந்தனர்.

பதினைந்து நிமிடமாகியும் ராஜகோபால் பத்மாவிடம் சொன்ன காபி வரவில்லை. இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது முகம் தெரியாத ஒருவன் உள்ளே நுழைந்தான்.

"யாருப்பா நீ"

" ஸார் ! இவன் தான் ரமேஷ். நம்ம க்ளாஸ் அறிவாளி. என் கூட தான் வந்தான்"

" ஓ...அப்படியா ! எப்படிப்பா இருக்க. உள்ள வராம ஏன் வெளியேவ இருந்த "

" இல்ல சார். கார் வைக்க இடமில்ல. வச்சிட்டு வரதுக்கு நேரமாச்சு"

"ஸார் ! நேரமாச்சி. நான் வரேன்." காபிக்காக காத்திருந்த ஜோசப் சமையலறையில் பத்மாவுக்கு கேட்குபடி சொன்னான்.

"இருப்பா.... பத்மா....". இது வரை மனைவியை அழைத்த குரல் கத்துவது போல் மாறியது.

முகம் கடுகடுப்புடன் இரண்டு காபி டம்பலரை வந்து வைத்து விட்டு சென்றாள். வந்த மாணவர்களை பார்த்து ஒரு புன்முறுவல் சிரிப்புக் கூட சிரிக்கவில்லை.

ஜோசப்பும், ரமேஷூம் காபியை குடித்த வேகத்தில், ஜோசப் தன் திருமண பத்திரிகையை நீட்டினான்.

“அவசியம் குடும்பத்தோட என் கல்யாணத்துக்கு வரனும்” என்றான்.

அழைப்பிதழ் வைத்த இரண்டு நிமிடத்தில் ஜோசப்பும், ரமேஷூம் சென்றனர்.
மனைவியிடம் ஏன் இப்படி நடந்து கொண்டாய் என்று கேட்கும் தைரியம் ராஜகோபாலுக்கு இல்லை. அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்துக் கொள்ள , " பத்மா ! எனக்கும் ஒரு காபி !" என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் முகம் சிவப்பாய் இருந்ததை பார்த்தான்.

" காபி பொடியில்ல. வந்தவங்களுக்கு போட்டு கொடுத்திட்டேன். அவங்களால எனக்கும் காபியில்ல..."

வாழ்க்கை முழுவதும் மாணவர்களுக்கு தமிழ் வகுப்பு எடுத்துவிட்டு, மனைவிக்கு தமிழ் பன்ப்பாடு தெரியாமல் போனதை இந்த வயதுக்கு மேல் சொல்லி என்ன பயன்.

" இந்த மனுஷன ஞாபக வச்சி இரண்டு பேரு வந்துட்டா பெரிய மனுஷன் நினைப்பு. போய் காபி பொடி வாங்கிட்டு வாங்க " என்று கணவனை விரட்டினாள்.

பத்மா கோபமாக பேசினாலும், உண்மை தான். வேலை ஓய்வு பெற்ற பிறகு எந்த மாணவன் தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டு வந்திருக்கிறான். யார் தன்னை நினைவில் வைத்துக் கொண்டு இருக்க போகிறார் என்று நினைத்தப்படி காபி வாங்க சென்றான்.

**

சிங்கப்பூர் விமான நிலையம்.

முரளி தன் குழந்தையுடன் சிங்கப்பூர் ஆர்லைஸ் விமானத்தை பிடிக்க சென்றுக் கொண்டு இருந்தான். விமானம் பிடிக்கும் நோக்கத்தில் தங்கள் பெட்டியை இழுத்துக் கொண்டு சென்ற போது ரவி மீது மோதிவிடுகிறது.

" ஆ....."

" ஸாரி சார் ! தெரியாம பட்டுடிச்சு...." என்றாள் முரளியின் மனைவி.

மனைவி வரதாததை திரும்பி பார்த்த அவளின் கணவன் முரளி, " என்னம்மா ஆச்சு...!" கொஞ்சம் பதற்றத்துடன் வந்தான்.

அடிப்பட்டவன் கொஞ்சம் நேரத்தில் அடையாளம் கண்டுக் கொண்டான் முரளி.

" டேய் அறிவாளி ! நீயாடா......"

ரவி முகம் கொஞ்சம் மாறியது. தன்னுடன் பள்ளியில் படித்த முரளி என்று அடையாளம் கண்டுக் கொண்டான்.

" ஏய் ! நீ நாதாரி பய தானே "

தன் கணவன் ’நாதாரி’ என்று ரவி சொன்னதும் கோபம் வந்ததும். முரளி தன் மனைவியிடம் ரவியை பற்றி சொல்கிறான்.

கொஞ்சம் பேசிக் கொண்டு இருந்தனர்.

"அது என்ன அறிவாளி, நாதாரி பட்ட பேரு " என்று முரளியின் மனைவி கேட்க, " அந்த பேர எங்களுக்கு வெச்சதே எங்க ராஜகோபால் சார் தான்" என்றான் முரளி.

LinkWithin

Related Posts with Thumbnails