வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 26, 2009

கிச்சு கிச்சு

ஜே.எஸ்.ராகவன்

கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்பகால நூல் என்பதை முதல் பக்கத்தில் இருந்த மைலாப்பூர் விலாசத்திலேயே புரிந்துக் கொண்டேன். அண்ணா நகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் அவர்கள் எழுதிய 'தமாஷா வரிகள்' கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர். கிழக்கு பதிப்பகத்தின் புத்தக பட்டியலை பார்க்கும் போது ஜே.எஸ்.ராகவன் புத்தகங்களை பார்த்திருக்கிறேன். வாங்கி படிக்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தின் வேறு புத்தகங்கள் கண்ணில் பட அதை வாங்கி விடுவேன். அதுமட்டுமில்லாமல், நகைச்சுவை புத்தகங்கள் ஒரு முறைக்கு மேல் படிக்க நினைத்தாலும் ஆர்வம் வருவதில்லை என்பது இன்னொரு காரணம். எதோ கண்ணிமரா நூலகத்தின் புன்னியத்தில் இந்த நூலை எடுத்து படித்தேன்.

ரொம்ப எதிர்பார்த்து எடுத்ததாலோ என்னவோ என் எதிர்பார்ப்பை பாதி கூட புர்த்தி செய்யவில்லை. இருந்தாலும், சில நல்ல நகைச்சுவை கட்டுரைகள் பிடிக்காமல் இல்லை.

"உலகமே தட்டையா ?" கட்டுரையில் ஒரு அம்மா கடையில் தட்டை பற்றி கேட்பதும், கடைக்காரன் 'இல்லை' என்று சொல்லுகிறார். அந்த அம்மா விடாமல் கடைக்காரனை தொல்லை பண்ணி தட்டை கேட்கிறார். கடைக்காரனும் கஷ்டப்பட்டு தேடி கொண்டு வந்து அந்த அம்மாவிடம் கொடுக்க கலர், அளவு பார்த்து விட்டு 'நானே செய்துகிறேன்' என்று சொல்கிறார். இவ்வளவு நேரம் அந்த அம்மா 'தட்டை' கேட்டதற்கு காரணம் ஒரு மாதிரி வடிவத்திற்காக தான்.

"வாக்கிங் விநாயகர்" கட்டுரையில் தோப்பை குறைக்க விநாயகரை காலையில் வணங்க வேண்டும். ( ஞான பழத்தை வாக்கிங் போய் பெற்றதால் 'வாக்கிங் விநாயர்'). வேடன் கண்ணப்பன் மாதிரி விநாயகரை காலில் ஷூ போட்டுக் கொண்டு கும்பிடலாம். ( லேசு போட்ட ஷூவை லேசில கழட்ட முடியுமா).

இந்த புத்தகத்தில் ரசிக்க தக்க நகைச்சுவை கட்டுரை என்றால் "சொல்லாதே வாய் திறந்து" தான். மேடையில் வரவேற்புரை செய்பவர் ஒவ்வொருவரை அறிமுகம் படுத்தும் போதும் அவரை தன் மனதுக்குள் திட்டுகிறார். ஒரு இடத்தில் "பட்டங்கள் பல வாங்கியவர்" என்று சொல்லி தன் மனதுக்குள் " பட்டங்கள் தான் வாலோடு பறக்கும். ஆனால், இவர் பட்டங்களுக்காக ஆவலாக பறப்பவர்" என்று குமுறுகிறார்.

அதே ஒரு சில கட்டுரைளில் இருக்கும் நகைச்சுவை துணுக்குகளை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

*. தேவர்கள் வேடமிட்டு வந்ததால் அந்த இடத்திற்கு பெயர் "வேடம்" தாங்கல்.

*. தூண்டு எப்போதுமே மல்டி பர்பஸ். குடை, கைகுட்டை......

*. போன்ல லவ் தான் பண்ணுவாங்க... இன்டர்வியூமா எடுப்பாங்க....

*. 'அருள்மிகு ஆசிரியசாமி' கட்டுரையில் படைக்கும் கடவுளே புகழ்ச்சிக்கும், துதிக்கும் மயங்கும் போது படைக்கும் கதைகளை பரிசீலிக்கும் ஆசிரியர்கள் இதில் வேறுபடுவார்களா...?

*. 'எங்கே கேள்வி - பதில் ?' கட்டுரையில் உண்ட உணவிலுள்ள கலோரிகளை எரிக்காமல் வாகனங்களில் உள்ள எரிபொருள்களை எரித்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பில்லை இவ்வகை வாகனப் பிரியர்கள் அதிகரித்து வரும் நிலையில் வாகங்கள் தவிர்த்து நடக்க வேண்டும்.

பல கட்டுரைகள் விவேக் போல் 'மேசேஜ்' சொல்லும் முயற்சியில் நகைச்சுவை தொலைந்துவிடுகிறது. ஒரு சில கட்டுரைகளில் ஒண்ணுமே இல்லை என்று தோன்றுகிறது.

"கிச்சு கிச்சு" கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டி தான் சிரிக்க வைக்கிறாங்க.... :)

விலை.60.
கிழக்கு பதிப்பகம்

Tuesday, February 24, 2009

சாரு நிவேதிதாவின் 'தீராக்காதலி'

பதிவர் வட்டத்தில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர் என்றால் அது ‘சாரு நிவேதிதாவாக’ தான் இருக்க முடியும். அவரை சூடாக விமர்சிப்பவர்கள் அவர் எழுதிய 'ஸீரோ டிகிரி' மீதும், 'ராஸ லீலா' மீதும் பலர் முன் நிருத்தி உள்ளனர். பலருக்கு அவருடைய கட்டுரை தீரனும், தேடல்களும் தெரியாமல் இருக்கிறது. அவருடைய தேடலை புரிந்துக் கொள்ள நினைப்பவர்கள் 'தீராக்காதலி' நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

காலத்தால் மறந்து விட்ட 'சூப்பர் ஸ்டார்' எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து புத்தகம் தொடங்குகிறது. அவர் நடித்த 'அரிசந்திரா' (மூன்று தீபாவளி கண்ட படம்) இன்றும் எந்த படங்களாலும் முறியடிக்க முடியாத சாதனை படமாக இருக்கிறது. கொலை வழக்கில் கைதாகி, அதனால் தன் சொத்தும், புகழும் இழந்தவர் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் விடுதலையான பிறகு சியாமளா (1952), புது வாழ்வு (1957), சிவகாமி (1959) என்று மூன்று படங்கள் நடித்திருக்கிறார். இந்த படங்களுமே தோல்வியடைந்தன. காலத்திற்கேற்ற படங்கள் அவர் நடிக்காமல் பாட்டை நம்பி படம் எடுத்ததால் அவர் தோல்விக்கு காரணம் என்ற இந்த நூலில் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

அன்றைய 'சூப்பர் ஸ்டார்' பாகவதர் போல், நடிப்பு திலகத்திற்கு பி.யு.சின்னப்பா இருந்திருக்கிறார். இவர் கதநாயகனாக நடித்த 'சதிலீலாவதியில் தான் M.G.R, N.S.K அறிமுகம் ஆகியுள்ளனர்.

அடுத்து இந்த நூலில் இடம் பெற்றவர் 'இசை மன்னர்' என்று கருதப்பட்ட எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள். குடித்து குடித்து இள்மையிலே தன் வாழ்க்கை முடித்துக் கொண்ட இசை மாமேதை. இறுதி நாட்களில் அவர் எழுதிய கடிதங்களும் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

உண்மையில் இந்த நூலின் நாயகி சொன்னால் "தீராக்காதலி" இருந்த (வாழ்ந்த) நடிகை கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் தான். இன்று வரை பலர் மனதில் அவ்வையாராக வாழ்ந்து கொண்டு இருக்கும் சுந்தராம்பாள் அவர்களின் இளமைக்காலம் மிகவும் சோகமானவை. நல்ல குரல் வளம் கொண்ட சுந்தராம்பாள் அவர்கள் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டார். கிட்டப்பாவுடன் சட்ட ரீதியான திருமணம் நடக்காவிட்டாலும் அவர் மரணத்திற்கு பிறகு சாமியாராக தான் வாழ்ந்திருக்கிறார். கிட்டப்பா 28வது வயதில் இறக்கும் போது சுந்தராம்பாளுக்கு வயது 25 ! கும்பிடுவதற்கு இரண்டு கைகள் வேண்டும். காதலுக்கு இரண்டு உள்ளங்கள் வேண்டும். அந்த விஷயத்தில் சாரு சொல்வது போல் சுந்தராம்பாள் அவர்கள் "ஒரு தனி பிறவி தான்".

வில்லனாக நடித்த எம்.ஆர்.ராதா இந்த புத்தகங்களில் சொல்லும் இரண்டு சம்பவங்கள் மூலம் நாயகனாக தெரிகிறார்.

1. எம்.ஆர்.ராதா நாடகம் நடத்தும் ஊர்களில் அதிக வசதிகளை எதிர்பார்க்க மாட்டார். " நமது நாடங்களை நடத்துபவர்கள் மிகவும் ஏழைகள். இந்த நாடகத்தைக் கொண்டு தான் கடனை அடைக்க வேண்டும். ஒரு வாரத்திற்காவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களிடம் ரொம்ப வசதிகள் எதிர்பார்க்காதீர்கள் !" என்று கூறுயவர்.

2. 1956ல் கலைஞரை எதிர்த்து எம்.ஆர்.ராதாவை நிற்குமாறு வற்புற்த்திய கி.வீரமணியிடம் " கருணாநிதி நம்ப ஆளாச்சே.... அதோடு, அய்யாவுக்கு தேர்தலெல்லாம் பிடிக்காது. அதெல்லாம் அயோக்கியத்தனம்னு சொல்லியிருக்காரு..." என்று கூறி மறுத்துவிட்டார் எம்.ஆர்.ராதா

எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரையில் எல்லாம் நமக்கு தெரிந்த விஷயத்தை தான் சொல்லியிருக்கிறார். புத்திதாக ஒன்றுமில்லை. நூலின் வணிக நோக்கத்திற்காகவே எம்.ஜி.ஆர் பற்றின கட்டுரை சேர்க்கப்பட்டது போல் தெரிகிறது.

அட்டைப்படத்தில் சினிமா கலைஞர்களையும், புத்தகத்தில் 'தீராக்காதலி' என்ற தலைப்பை பார்த்ததும் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றியதாக இருக்கும் என்ற ஆவல் இருந்தது. ( ஒரு வேலை எழுதியது சாரு நிவேதிதா என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம்). நாம் மறந்த கலைஞர்களை நினைவு படுத்தும் வகையில் இந்த நூல் இருக்கிறது.


விலை. 80
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை - 18.

Sunday, February 22, 2009

நவீன இராமாயணமும், அரசியலும்

காட்சி - 1

இராமர் : அனுமான் ! இலங்கைக்கு சென்று இராவணனை எச்சரித்து விட்டு. என் சீதைக்கு ஆருதல் சொல்லிவிட்டு வா....

அனுமான் : எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். பேசாமல் சீதையை நானே அழைத்து வந்து விடுகிறேன்.

இராமர் : அது என் வீரத்திற்கு இழுக்கு... என் சீதையை நான் தான் மீட்பேன்

அனுமான் : சிறு பிள்ளை போல் அடம் பிடிக்காதே இராமா... நான் சீதையை மீட்டு வந்தால் பிரச்சனை இத்தோடு முடிந்து விடும்.

இராமர் : என் சொல் படி கேட்பது தான் உன் வேலை.

அனுமான் : (மனதுக்குள்) மேல் அதிகாரிகள் எப்போது தான் தனக்கு கீழ் இருப்பவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க போகிறாரோ...

அனுமான் தன் வாலை கலட்டி வைத்தார்.

இராமர் : ஏன் வாலை கலட்டி விட்டாய்..?
அனுமன் : நேற்று சுட்டி டி.வியில் 'இராமாயணம்' படம் பார்த்தேன். என்னை போன்ற உருவம் உள்ள ஒருவனின் வாலை எரித்தார்கள். எதற்கு வம்பு என்று கலட்டி விட்டேன்.

இராமர் : சபாஷ் சரியான சிந்தனை

அனுமான் : நேற்று நீங்கள் பி.எஸ்.வீரப்பா படம் பார்த்தீர்களா..???

இராமர்: ம்.. வெட்டி பேச்சு பேசாமல். இதோ என் மோதிரத்தை சீதைக்கு காட்டு. அப்போது தான் அவள் உன்னை என்னை சேர்ந்தவன் என்று நம்புவாள்...

அனுமான் : பெண்களின் சந்தேகம் பற்றி எனக்கு தெரியாதா...!!

இராமர் : ம்ம்ம்.. சீக்கிரம் செல்...

அனுமான் : சரி... இராமா...

காட்சி – 2

இராவணன் அரசபை

இராவணன் : யார் நீ...?
அனுமான் : நான் அனுமான். இராமனின் தூதுவன்.

இராவணன் : எதற்காக இங்கே வந்தாய் ?
அனுமான் : முதலில் தூதுவனுக்கான மரியாதை கொடுத்து நாற்காலி போடுங்கள்.

இராவணன் : எனக்கு சமமாக உனக்கு நாற்காலியோ... ஆ..ஆ (சிரிப்போலி அரங்கமே அதிர்கிறது...)

அனுமான் : ( மனதுக்குள் ) அவசரப்பட்டு வாலை இந்தியாவில் வைத்து விட்டேனே. இப்போது நாற்காலிக்கு எங்கு போவது…?

அப்போது ஒருவன் வந்து அனுமானுக்கு நாற்காலி போடுகிறார்.

இராவணன் : யார் நீ...??

அவன் : நான் ABT Parcel service ஆளு... இவர் எங்க Brand Ambassador. இவருக்கு என்ன என்ன தேவையோ நாங்க தான் ஸ்பான்சர் பண்ணுறோம்.

இராவணன் : ஓ.. ஸ்பான்சரை கையோடு அழைத்து வந்துவிட்டாயா... நீ வந்த நோக்கம் என்ன...??

அனுமான் : சீதையை இராமனிடம் ஒப்படைத்து விட்டு. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

இராவணன் : மறுத்தால்.....

அனுமான் : என் இராமரை போரில் நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.

இராவணன் : போருக்கு தயார் என்று உன் இராமனிடம் போய் சொல்....

அனுமான் : என் இராமனை எதிர்க்கும் அளவிற்கு வீரம் நிறைந்த படை உன்னிடம் உண்டா....?

இராவணன் : இல்லை தான். ஆனால், இந்தியாவில் இருந்து போர் உத்தரவு வராது என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படியே போர் பற்றி யோசித்தாலும் அடுத்த ஆட்சி வந்துவிடும். நடந்ததை மறந்துவிடுவார்கள்.

அனுமான் : (மனதுக்குள்) (நம் பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான்) சரி.. நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்.

காட்சி - 3

அனுமான் வீர ஆவேசமாக பேசிவிட்டு சீதையை பார்க்க ஆசோகவனத்திற்கு சென்றார்.
அனுமான் : வணக்கம் தாயே... நான் அனுமான். இராமனின் விசுவாசி.
சீதை : உன்னை எப்படி நம்புவது

அனுமான்: இதோ இராமரின் கொடுத்த மோதிரம்.
சீதை : இதே மாடல் மோதிரம் தான் அவர் வைத்திருக்கிறார். ஆனால், இது போலி போல் தெரிகிறதே. அவரது மோதிரம் சொக்க தங்கம் ஆயிற்றே...

அனுமான் : என்ன போலி மோதிரமா...??
( தன் மனதுக்குள் இராமனை அழைத்து பேசுகிறார்.)

அனுமான் : இராமா ! ஏன் போலி மோதிரம் கொடுத்தீர்கள் ?
இராமன் : தங்கம் விலை பதினைந்தாயிரம் தாண்டிவிட்டது. உன்னை நம்பி எப்படி கொடுப்பது...

அனுமான் : என் இராமரா என்னை சந்தேகம் படுவது. நான் தீக்குளித்தே ஆக வேண்டும்...!

அந்த சமயத்தில் இராவணன் அங்கு வருகிறார்.

இராவணன் : அனுமான் ! இன்னும் இந்தியாவுக்கு செல்ல வில்லையா...! இலங்கையில் தமிழர்களை தான் கொல்லுவோம். வட இந்தியர்களை கொல்ல மாட்டோம். உயிர் மேல் ஆசை இருந்தால் ஓடிவிடு...

காட்சி - 4

அனுமான் உயிருக்கு பயந்து இந்தியாவுக்கு வருகிறார். இராமனிடம் நடந்தை எல்லாம் சொல்லுகிறார்.

இராமர் : அனுமான் ! யுத்தத்திற்கு நம் படையை தயார் படுத்து. இலங்கைக்கு, இந்தியாவுக்கும் பாலம் அமைத்து அதில் நாம் செல்லுவோம்.

ஒருவன் : நீங்கள் பாலம் கட்ட நாங்க அனுமதிக்க மாட்டோம்.
அப்போது ஒருவன் வந்து எதிர்த்து குரல் எழுப்புகிறார்.

இராமன் : யார் நீ...?
அரசியல்வாதி : நான் அரசியல்வாதி ! பாலத்தை வைத்து தான் நாங்கள் அரசியல் பண்ணுகிறோம். இராமரே வந்து பாலம் அமைக்க நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். எங்கள் உத்தரவு இல்லாமல் நீங்கள் தனியாக சண்டை போடவோ அல்லது பாலம் கட்டவோ முடியாது.

இராமன் : அனுமான் ! இது என்ன புது பிரச்சனை..?
அனுமான் : அப்போதே..இராவணன் சொன்னான். இந்தியாவில் அவ்வளவு எளிதில் போர் உத்தரவு வராது என்று. ஆரம்பமே பிரச்சனை தொடங்கி விட்டது. இவர்கள் பேசி போர் உத்தரவு போடுவதற்குள் நீங்கள், நான், இராவணன் அனைவரும் கிழவர்களாகி விடுவோம்.

அரசியல்வாதி : சந்தோஷம்.... இராவணன் கிழவனானதும் சீதையை அவனே இந்தியாவில் விட்டு விடுவான். எங்கள் ஆட்சி தான் சீதையை மீட்டது என்று சொல்லி மீண்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம்.

அனுமான் : பேசாமல் நாம் இங்கையே இருந்து விடுவோம் இராமா

இராமன் : அதை பற்றி தான் நானும் யோசிக்கிறேன்.

Friday, February 20, 2009

பாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம் - 2

முதல் பாகம்

" எனக்கு இரண்டு வயசு இருக்கும் போது அம்மா இறந்துடாங்க. அப்பா தான் என்ன வளர்த்தாரு. ஒரு ஆம்பில மாதிரி கராத்தே, ஜிம்னு எல்லாத்திலையும் என்ன என்கரேஜ் பண்ணது அப்பா தான். ஒரு ஆம்பள மாதிரி தான் என்ன வளர்த்தாரு. நானும் ஒரு ஆம்பளைக்கு இருக்குற தைரியத்தோடு வளர்ந்தேன். அதனாலையே எனக்கு ஆம்பளைங்க மேல ஈர்ப்பு இல்ல. அப்புறம், நா காலேஜ் படிக்கும் போது அவரும் இறந்துட்டாரு..."

" அடிபாவி... நா என்ன கேள்வி கேக்குறேன். நீ என்ன பதில் சொல்லுற. உன் கதை கேக்கவா இவ்வள்வு தூரம் வந்தேன்.." என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

என் முகம் ஒரு மாதிரியாக இருப்பதை உணர்ந்துக் கொண்டாள்.

" என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா...???"

"அப்படி எல்லாம் இல்ல..."

" நா நேரா உங்க கேள்விக்கு பதில் சொல்லுறேன். எங்க அப்பா செத்ததுக்கு அப்புறம் என் பிரண்ட்டோட அப்பா தான் என்ன படிக்க வச்சாரு. சொந்த மக மாதிரி பாத்திக்கிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் உண்மையான பிரண்ட்ஸ்னு அவங்க அப்பா, அம்மா ரொம்ப நம்பினாங்க. ஆனா ! எங்களுக்குள்ள பிரண்ஷிப் மீறின உறவு இருந்ததுனு அவங்களுக்கு தெரியாது..."

ரம்யா சொல்லுவதை ஒவ்வொன்றாக பேப்பரில் எழுதினேன். அவள் நான் எழுதுவதை கவனித்துக் கொண்டு மேலும் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

" என் பிரண்ட யார் தப்பா பார்த்தாலும் சரி, கிண்டல் பண்ணுலும் சரி நா அவங்கள சும்மா விட்டதில்ல. என் பிரண்ட சைட் அடிச்ச இரண்டு பசங்கள பப்ளிக் ப்ளேஸ்ல அடிச்சிருக்கேன்." என்று தன் தொழி மீது இருந்த காதலை கூறினாள்.

" உங்க ஆசைக்கு எப்படி உங்க தோழி சம்மதிச்சாங்க....??" என்றேன்.

" எனக்கு எப்படி ஆம்பளைங்க மேல் ஈர்ப்பு இல்லையோ. என் பிரண்டுக்கு ஆம்பளைங்கனா பயம்.
என் கிட்ட எல்லாத்தையும் சொல்லுவா. நா அவள தொட்டு தொட்டு பேசுறது அவளுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. ஒரு நாள் நாங்க இரண்டு பேரும் எக்ஸாமுக்கு கம்பைன் ஸ்டடி பண்ணும் போது அவங்க அப்பா, அம்மா ஊருக்கு போய் இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது 'அது' நடந்திடுச்சு. எங்க ரெண்டு பேருல நான் தான் ஆண். அவ தான் பெண்..." என்றாள்.

யப்பா...யப்பா... அவள் சொல்ல சொல்ல.. எனக்குள் எதோ செய்வது போல் இருந்தது. இவ்வளவு அழகான பெண் எந்த ஆண்ணின் மீதும் ஈர்ப்பு இல்லை என்று சொல்லும் போது ஆண் இனத்திற்கே இழப்பு என்று தோன்றியது.

" உங்க இரண்டு பேருக்கு இன்னும் 'உறவு' இருக்கா...

" இப்படி கடைசி வரைக்கும் இருந்திருலாம் நினைச்சோம். ஆனா, எங்க 'உறவு' அவங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு. என்ன வீட்ட வீட்டு அனுப்பிச்சிடாங்க. அவளுக்கும் கல்யாணம் அயிடுச்சு. " என்று தன் 'லெஸ்பியன்' கதையை சொல்லி முடித்தாள்.

எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. விபச்சாரம் வயிறு பிழைப்பு நடத்தும் தொழில் என்று சொன்னால் கூட விபச்சாரிகள் மீது ஒரு கருணை வரும். அவர்கள் கதைக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு சோகம் இருக்கும். ஆனால், ஒரு பெண் தன்னை 'லெஸ்பியன்' என்று சொல்லிக் கொள்ள அசாத்திய துணிச்சல் வேண்டும். வெளிப்படையாக அவள் சொன்ன பிறகும் இந்த சமுதாயம் அவளை எப்படி பார்க்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

"சொல்லுறேனு தப்பா நினைக்காதீங்க.... ஒவ்வொரு ஆண்ணும் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காம கஷ்டப் படுறாங்க. இப்படி பொண்ணுங்க ஆண் துணை வேண்டாம்னு நினைச்சா... நம்ப நாட்டுல அடுத்த தலைமுறைக்கு ஒண்ணு இருக்காது. " என்று நான் சொல்லி முடிப்பதற்குள் ரம்யா கோபமாக பேச தொடங்கினாள். " ஜன தொகையில இந்தியா இரண்டாவது இடத்துல இருக்கு. இப்படி நாங்க எல்லாரும் 'லெஸ்பியன்' உறவு வச்சிகிட்டாலும் இந்தியாவுக்கு இராண்டுவது இடத்துல இருந்து மூனாவது இடத்துக்கு போக ரொம்ப நாள் ஆகும்."

அவள் சொன்ன பதிலில் எனக்கு சிரிப்பு தான் வந்தது. உணர்ச்சி பூர்வமாக ஒருவர் பேசும் போது நான் சிரித்தால் நன்றாக இருக்காது என்பதற்காக அமைதியாக எனக்கு இருந்த இன்னொரு சந்தேகத்தையும் கேட்டேன்.

" ஒரு சின்ன சந்தேகம். ஒர் இன சேர்க்கை தப்புனு நீங்க நினைச்சது கூட பார்த்த தில்லையா..." என்றேன்.

" லெஸ்பியங்குறது என்னோட பெட் ரூப் விஷ்யம். அத மத்தவங்க எட்டி பார்க்குறது தான் தப்பு. என்னோட உணர்வுகள் நான் கொலை பண்ண விரும்பல. நா எதுக்கு தைரியமா உங்களுக்கு இன்டர்வியூ கொடுத்தேனா.... என்ன மாதிரி பல பெண்கள் தங்கள் உணர்வுகள கொல்ல முடியாம ஒரு ஆண கல்யாணம் பண்ணிகிட்டு வாழுறாங்க. சில பேர் தற்கொலை பண்ணிக்கிறாங்க. என்னோட பேட்டி அவங்களுக்கு தைரியத்த கொடுக்கும்." என்று மிக துணிச்சலோடு கூறினாள்.

நான் அவளையே உற்று பார்த்தேன். அவள் முகத்தில் சலனமில்லை. குற்ற உணர்ச்சி என்பது சிறிது கூட இல்லை. அவள் உருவத்தில் மட்டுமே பெண்ணாக இருக்கிறாள். நிஜமாகவே தைரியத்தில் ஆண்ணை விட மிஞ்சியவள் என்று புரிந்துக் கொண்டேன்.

எனக்கு அவளிடம் தொடர்ந்து பேச வேண்டும் போல் இருந்தது. என் கேள்விக்கு அவள் பதில் சொல்லும் போது எனக்கு இன்னொரு கேள்வி பிறக்கிறது.

" மேடம். உங்க கிட்ட கடைசி கேள்வி....கேக்கலாம்மா...." என்றேன்.

"சொல்லுங்க...."

" உங்க பிரண்ட் இப்போ எப்படி இருக்காங்க... அவங்க புருஷனோட சந்தோஷமா இருக்காங்களா....!"

" இல்ல... அவ இன்னும் என்னை நினைச்சிட்டு அப்படியே இருக்குறா...." என்றாள்.

"அப்படியேனா.....?????? புரியல்ல..."

"இன்னும் அவ புருஷன் கூட 'உறவு' இல்லமா தான் இருக்கா...." என்றாள்.

" நீங்க தப்பா நினைக்கலேனே... உங்க பிரண்டையும் நான் இன்டர்வியூ பண்ணனும். அவங்க அட்ரஸ் போன் நம்பர் கிடைக்குமா...?" என்று கேட்டேன்.

அவள் அட்ரஸ், போன் நம்பர் கொடுக்க நீண்ட நேரம் யோசித்தாள்.

" கவல படாதீங்க. உங்கள பத்தி எழுதும் போது கற்பனை பேரு வச்சி தான் எழுதுவேன். அவங்களுக்கு, உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது. அதுக்கு நான் கிராண்டி..:" என்று அவளுக்கு என்னை பற்றின நம்பிக்கை கொடுத்தேன்.

" நா போன் நம்பர் கொடுக்கனும்னு அவசியமில்ல. என் பிரண்டு உங்க ஓய்ப் வர்ஷா தான். ரொம்ப பயந்திட்டு இருந்தா. நான் தான் அவளுக்கு தைரியம் சொல்லி உங்கள கான்ட்டேக் பண்ணி எங்க விஷயத்த பத்தி உங்களுக்கு சொன்னேன்.

" என்னது....? என் மனைவி லெஸ்பியனா........!!!!!!!!!!!" அதிர்ச்சியுடன் தலைசுற்றலும் வந்தது.

" சுந்தர் ! இப்போ என்ன முடிவுடா எடுக்க போறே...???" என்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.


சுந்தர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்களாவது சொல்லுங்கள் ????

Wednesday, February 18, 2009

பாலுணர்வு கதை : அவளும் நானும் ஒர் இனம்

(இது பாலுணர்வு சம்மந்தப்பட்ட கதை மட்டுமே...! பாலுணர்வை தூண்டும் கதையல்ல...!! )

"வர்ஷா...ஆபிஸ்க்கு டைம் ஆச்சி. லன்ட்சு ரெடியா" என்று என் மனைவி வர்ஷாவை அவசர படுத்தினேன். எங்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. ஒவ்வொரு விஷயங்களையும் எனக்காக பார்த்து பார்த்து செய்வாள். என் அம்மா கூட இப்படி கவனித்ததில்லை. அன்பின் உருவாக இருந்தாள். 'அந்த' விஷயம் மட்டும் எங்களுக்குள் நடக்க வில்லை என்றாலும், அவள் காட்டிய கனிவு, புன்னகை எதிலும் கலப்படமில்லாதவை.

திருமணமான புதிதில் அவளுக்கு ‘இந்த’ உறவில் விருப்பமில்லாமல் இருந்தாள். நானும் அவளை கட்டாய படுத்தவில்லை. அதன் பின் என் வேலை தொல்லைகள் எங்கள் உறவுக்கு தடைப்போட்டது. பத்திரிக்கை நிருபரான நான் பல நாட்கள் இரவு வரை வேலை செய்ய வேண்டும். இரவு இரண்டு, மூன்று மணி கூட வீட்டுக்கு வந்திருக்கிறேன். புன்னையுடன் கதவு திறந்து என்னை வரவேற்பாள். ஒரு முறை கூட நான் காலதாமதமாக வந்ததிற்கு திட்டியதில்லை. என்னிடம் ஒர் இரு வார்த்தைகள் பேசி விட்டு தூங்கிவிடுவாள். இருவரும் ஒரே படுக்கையில் தான் படுக்கிறோம். ஆனால், உறவு கொள்வதில்லை.

வர்ஷா எனக்கு கொடுத்த லன்ட்சை எடுத்துக் கொண்டு அவசரமாக என் பத்திரிக்கை ஆபிஸ்க்கு சென்றேன்.

" என்ன சுந்தர் ! இவ்வளவு லேட்டு....??" என்றார் எடிட்டர்.

" ஏன் ஸார் ! கேக்க மாட்டிங்க. வேலைய முடிச்சிட்டு நைட் லேட்டா தான் வீட்டுக்கு போனேன். அதுக்கு பாராட்டாதீங்க. லேட்டா வந்ததுக்கு மட்டும் கேள்வி கேலுங்க..." என்று சகித்துக் கொண்டான்.

" சரி ! கோச்சிக்காத... அந்த பொண்ணுங்க எல்லாம் வைட் பண்ணுறாங்க. சீக்கிரம் போய் கவர் பண்ணு..." என்று சொல்லி எடிட்டர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

தினமும் இப்படி யாரையாவது கவர் பண்ண வேண்டிய வேலையை கொடுத்து விட்டு அவர் போய் விடுவார். எல்லாம் சரி செய்தியையும் சேகரித்த பிறகு வெட்டுவதற்கு மட்டும் சரியான நேரத்தில் வந்துவிடுவார்.

" வா சுந்தர் போவோம்மா... டைம் ஆச்சு..." என்றான் கேமிராமேன்.

" இவன் அடுத்த தொல்லை...." என்று மனதில் நினைத்துக் கொண்டு கேமிராமேனனுடன் சென்றேன்.

எங்கள் அலுவலக விருந்தினர் அறையில் காத்திருந்த பெண்களிடம் பேட்டி எடுப்பதற்காக அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்றோம். மொத்தம் ஆறு பெண்கள் இருந்தார்கள். அனைவரும் பாலியல் தொழில் செய்பவர்கள். பாலியல் தொழிலாளர்களை பற்றி ஒரு செய்தி தொகுப்புக்காக அவர்களை அழைத்திருந்தோம். பொதுவாக இது போன்ற விஷயங்களுக்கு நிருபர்கள் தேடி செல்வார்கள். என் எடிட்டருக்கு இது போன்ற விஷயங்களில் அனுபவம் அதிகம். அவர்களை அலுவகத்திற்கே அழைத்து வந்து பேட்டி எடுக்க வைத்துவிட்டார்.

அந்த ஆறு பெண்களில் இரண்டு பெண்கள் அதிக கவர்ச்சியுடன் உடை அணிந்திருந்தனர். எங்கள் இருவரையும் 'உறவுக்கு' அழைப்பது போல் அவர்கள் பார்வை இருந்தது. நான் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், கேமராமென் அந்த இரண்டு பெண்களை வலைத்து வலைத்து போட்டோ எடுத்தான். எப்படி எடுத்தாலும் பத்திரிக்கையில் போடும் போது முகத்தை மறைத்து தான் போடுவோம். இருந்தாலும், புகைப்படம் எடுப்பது எங்கள் சம்பிரதாயம்.

ஒரு வழியாக பாலியல் தொழிலாளர்களை பேட்டி எடுத்து விட்டு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். பேட்டி கொடுத்ததற்காக எடிட்டர் அந்த பெண்களுக்கு ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

அவர்கள் கூறியதை செய்தியாக தொகுத்து எடிட்டருக்கு அனுப்பினேன். எல்லாம் வேலை முடிவதற்குள் மாலை ஆறு மணியானது. இன்றாவது வீட்டுக்கு சீக்கிரம் செல்லலாம் என்று வண்டி எடுக்க சென்றேன். என் செல்போன் மணி ஒலித்தது. எடுத்தேன்.

" ஹலோ... சுந்தர் இருக்காருங்களா.." எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.

" ஆமாங்க.... சுந்தர் தான் பேசுறேன். சொல்லுங்க என்ன விஷயம்..." என்றேன்.

" என் பேரு ரம்யா. நீங்க பாலியல் பத்தின செய்தி போட போறதா கேள்வி பட்டேன். அத பத்தி உங்க கிட்ட பேசனும்...." என்றாள்.

இவளும் ஒரு பாலியல் தொழிலாளியாக தான் இருப்பாள். பேட்டிக் கொடுப்பதால் நூறு ரூபாய் வருகிறது என்றால் சும்மாவா ???

"ஸாரி மேடம்...! இப்போ தான் ஆறு செக்ஸ் வொர்க்கர் இன்டர்வியூ எடுத்து நீயூச் கம்போஸ் பண்ணேன். அடுத்த வீக் வேணும்னா நா உங்கள கான்டக்ட் பண்ணுறேன்..." என்றேன்.

" நான் செக்ஸ் வொர்க்கர் இல்ல.... லெஸ்பியன் !" என்றாள்.

எனக்கு தூக்கி வாறி போட்டது. 'பாலியல்' பற்றின செய்தி என்றவுடன் 'செக்ஸ் வொர்க்கர்' மட்டும் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஓர் இன சேர்க்கை ( லெஸ்பினயன், கே ) போன்றவர்கள் ஏன் நினைவுக்கு வருவதில்லை என்ற கேள்வி எனக்குள்ளே கேட்டு கொண்டேன். ஒரு பெண் தான் விபச்சாரி என்று சொல்வதை விட 'லெஸ்பியன்' என்று சொல்லுவதற்கு அதிக துணிச்சல் வேண்டும். கண்டிப்பா இந்த பெண்ணை இன்டர்வியூ எடுத்தே ஆகனும் என்று தோன்றியது.

" உங்கள எங்க பார்க்கலாம்...." என்றேன்.

" நுங்கபாக்கம்ல இருக்குற இஸ்பானி சென்டர்க்கு வர முடியுமா..." என்றாள்.

" பக்கத்துல தான் இருக்கீங்களா... நான் பத்து நிமிஷத்துல வந்திடுறேன்...." என்று சொல்லி வண்டியை எடுத்தேன். அவளிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை மனதில் ஒரு முறை சொல்லிக் கொண்டே வந்தேன். பத்து நிமிடத்தில் வர இடத்திற்கு ஐந்தே நிமிடத்தில் வந்து விட்டேன்.
இஸ்பானி சென்டரில் பல அழகான பெண்கள் நின்றுக் கொண்டு இருந்தார்கள். செல்போனுக்கு கால் வந்த நம்பருக்கு தொடர்பு கொண்டேன். என் எதிரில் நின்ற ஒரு பெண் தன் செல்போனை எடுத்தாள்.

" ஹலோ நான் ரம்யா பேசுறேன். வந்துடீங்களா....!!" என்றாள்.

அந்த பெண் தான் ரம்யா என்று உறுதி செய்துக் கொண்டேன்.

பக்கத்தில் இருப்பவளுக்கு போன் போட்டு அம்பது பைசா தண்டம் என்று நினைத்துக் கொண்டேன். அங்கு இருந்த ஒரு காபி ஷாப்பில் இருவரும் சென்று அமர்ந்தோம். சிம்ரன் தேகமும், ஸ்ரீ தேவி முகமும், ரம்பா உதடும் என்று மொத்த கோடம்பாக்கமே அவள் உருவத்தில் வந்து நின்றது. "ச்சே... போன வாரம். சினிமா கவரேஜ் பண்ணதுல இருந்து வர்ணனையில கூட சினிமா நடிகை தான் வரனுமா !" என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

" நீங்க எப்போ இருந்து லெஸ்பியனா இருக்கீங்க....?" என்றேன்.

எத்தனை வருஷமா எழுதுறீங்க, டான்ஸ் அடுறீங்க என்று கேள்வி கேட்டு தொடங்கி எனக்கு அதே மாதிரியான கேள்வி தான் அவளிடமும் வந்தது.


(தொடரும்.....
கொஞ்சம் பெரிய கதை என்பதால் அடுத்த பதிவில் முடிவடையும் )

Tuesday, February 17, 2009

சிட்டி பேங்க் CEO வுக்கு ‘ஜே’ முன் உதாரணம் ! ஓபாமா வைத்த ‘ஆப்பு’ !!

வெள்ளி மதியம் (13.2.09) சாப்பிடும் போது என் செல்போனில் ஒரு செய்தி வந்தது. சிட்டி பேங்க் 'CEO' விக்ரம் பன்டிட் இனி தான் ஒரு டாலர் மட்டும் சம்பளமாக வாங்க முடிவு எடுத்திருக்கிறார்.

அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியால் பல நிறுவனங்கள், வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த பொருளாதார வீழ்ச்சியால் சிட்டி பேங்க் பெரிதும் பாதிக்க பட்டுள்ளது. தங்களுடைய 'BPO' நிறுவனமான 'e-serve' வை நடத்த முடியாமல் 'TCS' நிறுவனத்துக்கு விறுதை பலருக்கு நினைவிருக்கும். மார்ச் நிதி ஆண்டில் பல கோடி நஷ்டத்தை காட்ட வேண்டியது இருக்கும் என்பதை உணர்ந்த விக்ரம் பன்டிட், தன் வங்கி லாபம் கிடைக்கும் வரை தான் ஒரு டாலர் சம்பளம் வாங்க போவதாக அறிவித்துள்ளார்.

இதை என் அலுவலக நண்பனிடம் கூறிய போது, "இது என்ன பெரிய விஷயம். நம்ப ஜே ஒரு ரூபாய் சம்பளம் வாங்களையா...." என்று சிரித்துக் கொண்டு கூறினார். ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எடுத்திருக்கும் முடிவை நம் அரசியலோடு முடிச்சு போட்டதை நினைத்து எனக்கு சிரிப்பு தான் வந்தது.

விக்ரம் பன்டிட் இந்த முடிவு அரசியல் தந்திரம் கொண்டதாக கூட இருக்கலாம். தலைமையில் இருப்பவரே ஒரு டாலர் சம்பளம் வாங்கும் போது ஊழியர்கள் குறைக்கும் அடுத்த நடவடிக்கைக்கு எந்த பிரச்சனை வராமல் தடுக்க கூட இருக்கலாம்.

******

நேற்று முன் தினம் (15.2.09), ஒபாமா அமெரிக்க இந்தியர்களுக்கு 'ஆப்பு' வைப்பது போல் ஒரு அறிவிப்பு கொடுத்துள்ளார்.

அரசிடம் நிதி உதவி பணம் வாங்கிய எல்லா நிறுவனங்களும் வெளிநாட்டவர்களை (எச்-1பி விசாவில் வேலை செய்பவர்கள்) வேலையில் அமர்த்த கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளார். வெளிநாட்டில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வரி கொடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். இந்த நிபந்தனைக்கு முழுமையாக ஒப்புக்கொண்டு, நிதியைப் பெற்றுக் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனங்கள், ஒட்டுமொத்தமாக இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

“இனி அடுத்த இரு ஆண்டுகளுக்கு எச்-1பி விசாவில் யாரையும் வேலைக்கு அமர்த்த மாட்டோம்” என அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெற்றுள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும் அறிவித்துவிட்டன.

இந்த எச்1பி விசாவில் அதிகம் பணி நியமனம் பெறுவோர் இந்தியர்களாகவே இருந்தனர். இதனால் ஒரு லட்ச இந்தியர்களுக்கு வேலை போக வாய்ப்புள்ளது. அது மட்டுமில்லாமல் அமெரிக்காவில் இருந்து இந்தியா கிடைத்துக் கொண்டு இருக்கும் BPO வேலைகளுக்கும் பாதிக்கப்படலாம். மார்ச் மாதத்திற்கு மேல் நிலைமை மோசமாகும் என்பது நன்றாக தெரிகிறது.

இந்த வருஷம் ஆரம்பமே சரியில்லை.

Monday, February 16, 2009

ஒவ்வொரு நிமிஷமும் சென்னைக்கு ஆபத்து...!

'மணிரத்னம்' படத்தில் வருவது போன்ற இரவு. நான் தனியாக நடந்துக் கொண்டு இருந்தேன். இந்த இரவு நேரத்தில் என்னை ஒரு நிழல் தொடர்வது போல் இருந்தது. என் கை துப்பாக்கியை எதற்கும் தயார் நிலையில் வைத்திருந்தேன். எதிரி என்னை தாக்க வரும் போது நான் தாக்குவதை விட அவர்களை தேடி சென்று தாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த நிழல் இன்னும் என்னை தொடர்ந்து கொண்டு இருந்தது. நான் நடக்கும் என் கண் எதிரில் ஒரு முட்டு சந்து தென்ப்பட்டது. அந்த நிழலிடம் தப்பிப்பது போல் அந்த முட்டு சந்து பாதையில் ஒலிந்துக் கொண்டேன். அந்த நிழல் என்னை விடுவதாக தெரியவில்லை. அது என்னை பின் தொடர்ந்து முட்டு சந்தில் நுழைந்தது. நான் அந்த உருவத்தை பின் புறம் இருந்து தாக்கு என் கை துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டினேன்.

" யார் நீ... எதுக்காக என் பின்னாடி வர...?"

" நீங்க சி.ஐ.டி சங்கர் தானே...!"

" ஆமா... நீ யாரு...?"

" என் பேரு கதிரேசன். ஹோட்டல்ல சர்வரா இருக்கேன். நா வேலை செய்ற ஹோட்டல்ல இரண்டு பேரு சென்னைய அழிக்க டைம் பாம் வைக்க போறதா பேசிக்கிட்டாங்க...!"

" மை காட்... ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ளைன்ட் பண்ணல..."

" எனக்கு போலீஸ்னா பயம்... கோர்ட் கேஸ்னு அலைய முடியாது. விஷயம் தெரிஞ்சு அவங்க என்ன கொன்னுட்டா... அதான் சொல்லல்ல..."

" சரி... என்ன எப்படி உனக்கு தெரியும் !"

" தினமும் உங்கள பத்தி பேப்பர்ல படிக்கிறேனே... உங்க திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..."

" சரி... உனக்கு அவங்க எங்க இருக்காங்கனு தெரியுமா..."

" தெரியும் சார்... வாங்க காட்டுறேன் "

அந்த இருட்டில் நானும், கதிரேசனும் சென்னை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளை தேடி சென்றோம். ஒரு நகரத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றால் அவர்களிடம் எப்பேர்ப்பட்ட வெடிகுண்டுகள் இருக்கும் ? அதை எங்கிருந்து கொண்டு வந்தார்கள். இவர்களை இயக்குவது யார் ? இப்படி பல கேள்விகள் என் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

இத்தனை கேள்விகளுக்கு நடுவில் எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. கதிரேசனை நம்பலாமா...? தீடிர் என்று வந்தான். வெடிகுண்டு வைக்கிறார்கள் என்றான். நானும் அதை நம்பி அவனுடன் வந்துவிட்டேன். ஒரு வேளை என்னை கொல்ல எதிரியின் சூழ்ச்சியாக இருந்தால்... ? எதற்கும் நான் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

" சங்கர் சார் ! அவங்க அந்த கம்பி ரூம் குள்ள தான் இருக்காங்க.."

எனக்கு சந்தேகம் அதிகமானது. எதற்கு முன் எச்சரிக்கையாக போலீஸ் ஹெட் குவாட்டர்ஸ்க்கு போன் போட்டு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். என் செல்போனை எடுத்து தகவலை சொல்லி நான் இருக்கும் இடத்தை பற்றியும், தீவிரவாதிகளை பற்றியும் தெரிவித்தேன்.

" சங்கர் சார் ! சிக்கீரம் வாங்க ... நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் சென்னைக்கு ஆபத்து...!"

ஒரு வேளை அவன் சொல்வது உண்மையாக இருந்தால் என்ன செய்வது ..? சென்னையை காப்பாற்ற வேண்டும். நான் என் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு கம்பி அறையில் நுழைந்தேன். அங்கு இரண்டு பேர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். எனக்கு அதிகம் பழக்கமான முகம் போல் இருந்தது.

" இந்திரன், ராமு இவர்கள் எப்படி இங்கே..?" - நான் யோசித்து முடிப்பதற்குள் கதிரேசன் கம்பி அறையை பூட்டினான்.

" ஏய்... என்ன பண்ணுற உன்ன சுட்டுடுவேன் " - என் கை துப்பாக்கியால் அவனை சுட்டேன். என் துரதிஷ்டம் என் கை துப்பாக்கி சுடவில்லை.

" இன்னொரு வாட்டி இப்படி நடந்தா... உங்க வேலைய விட்டு தூக்கிடுவேன்.." என்று தன் இரண்டு கம்பௌன்டர்களை கடிந்து கொண்டான் கதிரேசன்.

" எல்லோரையும் கவனிக்க தான் உங்களுக்கு சம்பளம் ஒழுங்க கவனமா வேலைய பாருங்க"

"சாரி டாக்டர்..இனிமே இப்படி நடக்காது.." - கம்பௌன்டர் தயக்கத்துடன் கூறினான்.

"ம்ம்... எந்த பைத்தியமும் தப்பிச்சு போகாம பாத்துக்கோங்க. ஜாக்கிரதை" - என்று கூறியப்படி டாக்டர் கதிரேசன் நகர்ந்தார்.

" இந்திரன், ராமு கவலப் படாதீங்க. போலீஸ்க்கு நா போன் பண்ணி விஷயத்த சொல்லிட்டு தான் வந்தேன்..."

"போன் எங்கே...?" என்று ஆர்வத்துடன் கேட்டா இந்திரன்.

" இதோ பார் கையில் தான் இருக்கு..." - தன் கையில் இருந்த பொம்மை போனை காட்டினான் சங்கர்.போலீஸ் வேலையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக ஆசைப்பட்டு அது முடியாமல் தோல்வியடைந்ததால் பைத்தியமான சங்கர்.

நன்றி: முத்துகமலம்.காம்

Thursday, February 12, 2009

ஒரு ரூபாய் பாக்கி!

"ஹலோ...! சந்திருவா... நா மணி பேசுறேன்...இந்த சண்டேக்கு எங்க போகலாம்..."

"எங்க போலாம்னு நீயே சொல்லு...."

"ம்... வண்டலூர் ஜீ-விற்க்குப் போவோம்... அங்கே போய் ரொம்ப வருசமாச்சு..."

"சரி ! நீ அப்படியே அடையாறிலிருந்து ராஜ் பவன்கிட்ட வந்திடு. நான் பைக்கில் அங்க வந்து பிக்கப் செய்துக்கிறேன்.."

"ஒ.கே ! சந்திரு..."

மணியுடன் பேசிய சந்திரு தன் செல்போனை பாக்கெட்டில் போட்டபடி திரும்பி பார்த்தான் . அவன் அம்மா கோபத்தோடு நின்றாள்.

"என்னம்மா கோபமா பார்க்குறீங்க...?" என்றான் சந்திரு.

"வாரத்துக்கு ஒரு நாள் வர்ற சண்டேயில கூட வீட்டில தங்காம அப்படி என்னடா சுத்துற... வாரம்தோறும் சண்டேயில் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கனும்னு... நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். லீவுல வீடு தங்கறதேயில்ல... ஊர் சுத்தறதை ஒரு கொள்கையாவே வச்சிருக்கியா..."

"சும்மா... வாரத்துக்கு ஒரு ரிலாக்ஸ் வேண்டாமாம்மா..."

"ஊரில இருக்குறவங்க...எல்லாம் உங்கள மாதிரி தான் இருக்காங்களா... வாரத்திற்கு ஒரு நாள் கொடுக்கிற லீவுலயும் இப்படி சுத்தப் போறது நல்லாவா இருக்கு..." அம்மா கோபத்துடன் வெடித்தாள்.

"மத்தவங்கள பத்தி எனக்கு கவல இல்லம்மா..! வார லீவுல கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாமுன்னுதான் நானும் மணியும் இப்படி எங்கேயாவது போறோம்... இந்த இளம் வயசுல சுத்தாம வயசான காலத்திலயா சுத்தப் போக முடியும்." என்று பதிலுக்கு இவனும் அம்மாவிடம் வாக்குவாதம் செய்தான்.

சந்திரு தன் அம்மாவுடன் பேசிக் கொண்டே தனது பேண்ட் சர்ட்டை மாற்றிக் கொண்டான்.

பைக் சாவியைக் கையில் எடுத்து சுழற்றியபடி " அம்மா... கோவிச்சுக்காதம்மா... நாங்க இன்னைக்கு வண்டலூர் ஜீ-விற்குப் போயிட்டு வந்துடுறோம். மதியம் அப்படியே வர்ற வழியில சாப்பிட்டு வந்துடுவோம். நீ நைட்டுக்கு மட்டும் டிபன் பண்னி வச்சா போதும்மா... அப்பா கிட்டயும் நீங்களே சொல்லிடுங்க...' என்றபடி கிளம்பினான்.

ராஜ் பவனுக்கு அருகில் நின்றிருந்தான் மணி.

"சந்திரு... ஏண்டா லேட்டு..." என்றான் மணி.

"ஒன்னுமில்லடா... வழக்கம் போல வீட்டுல அம்மா அட்வைஸ் பண்ணாங்க..."

"சரி...சரி...விடு..எல்லோர் வீட்டிலயும் இருக்கிறதுதானே...!" என்றபடி பைக்கின் பின்னால் அமர்ந்து கொண்டான் மணி.

அந்த பைக் வண்டலூரை நோக்கிச் சென்றது.

வண்டலூர் ஜீ-வில் சண்டே என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

சந்திரு பைக்கை அங்கிருந்த ஸ்டாண்டில் நிறுத்துவதற்காகக் கொண்டு சென்றான்.

ஸ்டாண்டிலிருந்த காண்டிராக்டர் பைக்கை அங்கே நிறுத்துவதற்காக நான்கு ரூபாய்க்கான ரசீது ஒன்றை அவனிடம் கொடுத்தார்.

சந்துரு தனது பர்ஸிலிருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.

"என்னிடம் நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லை... சில்லரையாகக் கொடுங்க..."என்றார் அந்த ஸ்டாண்டிலிருந்தவர்.

"என்னங்க... இவ்வளவு கார் பைக் இங்கே நிறுத்தியிருக்காங்க... நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லைங்கிறீங்க..." என்றான் சந்திரு.

"இங்க வர்ற எல்லோரும் நூறும் ஐநூறுமாக் கொடுத்தா சில்லரைக்கு நான் எங்கே போறது..."

"தொழில் செய்ற நீங்க சில்லரை வாங்கி வச்சுக்கனும்..." என்றான் சந்திரு.

"நான் எவ்வளவு சில்லரையைத்தான் வாங்கி வச்சுக்கிறது...?"

"டேய் சந்திரு... ஏண்டா அவருகிட்ட தேவையில்லாமல் சண்டை போட்டுக்கிட்டிருக்க...." என்றபடி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஸ்டாண்டிலிருந்தவரிடம் கொடுத்தான் மணி.

அந்த ஸ்டாண்டுக்காரர், "சார் ஒரு ரூபாய் சில்லரை இல்லையே..."என்றார் மணியிடம்.

மணியும் உடனே "இருக்கட்டும் பரவாயில்லை...நீங்களே வச்சுக்குங்க..." என்றபடி "வாடா சந்துரு...போகலாம்" என்றான்.

"ஹலோ... பாக்கி ஒரு ரூபாயைக் கொடுங்க..." என்றான் சந்திரு.

"சார் சில்லரையில்லன்னு... நான் சொல்றேன்... நீங்க வேணும்னா நான்கு ரூபாயைக் கொடுங்க..." என்றபடி அந்த ஐந்து ரூபாய் நாணயத்தைச் சந்திருவிடம் திருப்பிக் கொடுத்தான்.

"நூறு ரூபாயைக் கொடுத்தாலும் சில்லரை இல்லேங்கிறீங்க...ஐந்து ரூபாயைக் கொடுத்தால் அதுக்கும் பாக்கி ஒரு ரூபாய் இல்லேன்னு சொல்றீங்க..."

"சார் நீங்க பிரச்சனை பண்ணனும்னே வந்திருக்கீங்களா... எனக்கு அடுத்த கஸ்டமர் காத்துக்கிட்டு இருக்காங்க..."

"பாக்கி ஒரு ரூபாயைக் கொடுன்னு கேட்டா...அது உங்களுக்குப் பிரச்சன பண்ணுற மாதிரி இருக்கா..."

"அப்போ... நீங்க சரியான சில்லரையத் தாங்க..."

"எங்க கிட்ட சில்லரயில்ல..."

"என்ன சார் உங்களோட பெரிய தொந்தரவா இருக்கு... நீங்க சில்லரை மாத்திட்டு வாங்க..."

"நான் ஏன் சில்லரை மாத்திட்டு வரனும்? நீங்க போய் சில்லரைய மாத்தி பாக்கி ஒரு ரூபாயைக் கொடுங்க"

"சார் ஒரு ரூபாய் நாணயம் சில்லரையாத் தர மாட்டாங்க... எல்லாம் காயின் பாக்ஸ் போனிற்குத் தேவைன்னு அதைக் கொடுக்க மாட்டேங்கிறாங்க..."

"எதைச் சொன்னாலும் ஒரு ரூபாய் தரக் கூடாதுன்னு நீங்க ஒரு முடிவோட இருக்கிறீங்க... நானும் ஒரு ரூபாயை வாங்காமல் போறதில்லன்னு முடிவெடுத்துட்டேன்..." என்ற சந்திருவை " விடுடா சந்திரு...ஒரு ரூபாய் தானடா... வாடா போகலாம்" என்றபடி இழுத்தான் மணி

ஸ்டாண்டில் தனது பைக்கை நிறுத்த வந்திருந்த மற்றொருவர் அவரது பைக்குக்கு தன்னிடமிருந்து ஒரு ரூபாய் நாணயமாக நான்கு நாணயங்களை அவரிடம் கொடுத்து, "இந்தாங்க...எனது பைக்குக்கு ரசீதைக் கொடுங்க...அவருக்கும் பாக்கி ஒரு ரூபாயைக் கொடுத்து அனுப்புங்க..." என்றார்.

வேகமாக அந்த நாணயங்களைப் பெற்றுக் கொண்ட அவர், ஒரு ரூபாயை சந்திருவிடம் கொடுத்து "நீங்க முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க சார்" என்றார்.

நாங்க இடத்தைக் காலி பண்றது இருக்கட்டும். இப்படியே ஒவ்வொரு பைக்குக்கும் ஒரு ரூபாய் எடுத்தால் உங்களுக்கு தினசரி இப்படி வர்ற ரூபாய் நூறு இருநூறுன்னு கிடைக்கும் அப்படித்தானே..." என்று விடாமல் அவரிடம் மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தான் சந்திரு.

அந்த ஸ்டாண்டுக்காரர் அடுத்து நிறுத்தப்பட்ட பைக்குகளுக்கு ரசீது கொடுப்பதற்காக நகர்ந்தார்.

"ஏன் சந்திரு அவருதான் பாக்கி ஒரு ரூபாயைக் கொடுத்திட்டாருல்ல...அப்புறம் ஏன் சண்ட போடுற..." என்ற மணி சந்திருவின் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தான்.

"இப்படி ஒரு ரூபாய் சில்லரை தட்டுப்பாடு வருதுன்னா...அந்த ஒரு ரூபாய்க்கு சரியான மதிப்புள்ள மிட்டாய் அல்லது வேறு ஏதாவது பொருளைக் கொடுக்கலாமில்ல... இவங்க வேணுமின்னே பாக்கியைக் கொடுக்கிறதில்ல...பைக்கு வைத்திருக்கிறவனெல்லாம் ஒரு ரூபாயைத் திருப்பிக் கேட்டுக்க மாட்டான்னு... நினைக்கிறாங்க...." என்று சற்று தள்ளி நின்றிருந்த அந்த ஸ்டாண்டுக்காரர் காதில் படும்படி சத்தமாகச் சொன்னான்.

சந்திருவின் சத்தத்தை அந்த ஸ்டாண்டில் பைக் நிறுத்த வந்த யாரும் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. அவர்கள் ஒரு ரூபாய் பாக்கியை வாங்க அக்கறை காட்டியதாகவும் தெரியவில்லை. ஐந்து ரூபாயாகக் கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

சந்திரு அருகிலிருந்த கடைக்குச் சென்று இருபது ரூபாய்க்கு வாழைப் பழங்களை வாங்கி தனது நூறு ரூபாயை மாற்றி சில்லரை பெற்றுக் கொண்டான்.

"என்னடா இவ்வளவு பழம் நமக்கெதுக்குடா?" என்கிற மணியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வண்டலூர் ஜீ-விற்குள் செல்வதற்கான நுழைவுச்சீட்டைப் பெற்று வந்தான்.

அவர்கள் வண்டலூர் ஜீ-விற்குள் சென்றனர்.

மரத்தில் தாவித் திரிந்து கொண்டிருந்த குரங்குகளைப் பார்த்த சந்திரு தான் வாங்கி வந்திருந்த பழங்களை ஒவ்வொன்றாக பிரித்து அங்கிருந்த ஒவ்வொரு குரங்கிற்கும் ஒன்றாக வீசி எறியத் துவங்கினான். அவைகளும் அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டு அடுத்த மரத்திற்குச் சென்று தின்னத் தொடங்கியது.

சந்திருவை வியப்பாக பார்த்தான் மணி.

"என்னடா மணி, அப்படிப் பார்க்கிற... பாக்கி ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேரம் சண்டை போட்ட சந்திரு இப்படி இருபது ரூபாய்க்கு வாழைப் பழத்தை வாங்கி வந்து குரங்குக்கு வீசி எரிந்து கிட்டிருக்கானேன்னுதானே..."

மணியிடமிருந்து எந்த பதிலுமில்லை.

சந்திரு மணியிடம் தொடர்ந்தான்.

"நாம எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம். இப்படி வாயில்லா ஜீவன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம். ஏன் தானமோ, தர்மமோ கொடுக்கலாம். ஆனா ஒரு ரூபாய் கூட ஏமாற கூடாது..."

அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த மணியிடம், "இப்படித்தாண்டா மக்கள் எதிலும் அக்கரையில்லாமல் இருக்கிறாங்க... ஒரு ரூபாய்தானே, இரண்டு ரூபாய்தானேன்னு விட்டுடுறாங்க... ஒரு பொருள் வாங்கினாலும் அதில போட்டிருக்கிற விலையைக் காட்டிலும் ஒன்றிரண்டு கூட சொன்னாலும் அதை ஏனென்று கேட்காம வாங்கிட்டுப் போகிறாங்க... பஸ்ஸில் சில்லரைக்காசைக் கேட்டு வாங்குறதில்லே... ரேசன் கடையில் வாங்குற பொருளில் எடை குறைந்தாலும் கேட்கிறதில்ல... எதையும் இவங்க திருப்பிக் கேட்காமல் இருக்கிறதால தவறுகள் கூடிக்கிட்டே போகிறது.

தாங்கள் வாங்குற சம்பளம் போக இப்படி எக்ஸ்ட்ரா வருமானம் வரும்னு அவங்களும் தவறைத் தைரியமாச் செய்துக்கிட்டு இருக்காங்க... நாம் செய்யும் இந்த சின்ன தவறு அவர்களைப் பெரிய தவறுக்கு கொண்டு போகுது... மக்கள் எப்போதுதான் தங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் இருப்பாங்களோ... அப்போதுதான் தவறும் தொடராது...! ஏமாற்றமும் வராது...! " என்று வருத்தத்துடன் சந்திரன் புலம்பிக் கொண்டே வந்தான்.

"அவனது புலம்பலில் ஒரு உண்மையும் இருக்கிறது." என்று நினைத்த மணியின் மனதிற்குள் " இனி நம்முடைய பணத்தைத் தேவையில்லாமல் எங்கும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது." என்கிற எண்ணம் மேலிட " சந்திரு, நீ செய்தது சரிதாண்டா...ஒரு ரூபாய்தானேன்னு நாம் விட்டு விடும் நமது சிறிய தவறு. அவர்களைத் தொடர்ந்து தவறு செய்ய வைத்து விடுகிறது." என்றான்.

இருவரும் வண்டலூர் ஜீ-வைச் சுற்றிவிட்டுத் திரும்பி பைக்கை எடுப்பதற்காக வந்தனர்.

அங்கே அந்த ஸ்டாண்டுக்காரர் பைக்கை நிறுத்திவிட்டு ரசீது வாங்கும் ஒருவரிடம், "சார், நீங்க கொடுத்த ஐந்து ரூபாயில் மீதி ஒரு ரூபாய் பாக்கிக்கு என்னிடம் சில்லரை இல்லை... இந்தாங்க அதுக்குப் பதிலாக ஒரு ரூபாய் சாக்லேட்" என்று ஒரு சாக்லேட்டை கொடுக்க, அதை வாங்கிய அந்த பைக்குக்காரர் அதைத் தனது குழந்தையிடம் கொடுக்க அது சிரித்தவாறே மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டது.

சந்திருவுக்கு தனது ஒரு ரூபாய் பாக்கிக்கான வாக்குவாதம் இப்போது அந்த ஸ்டாண்டுக்காரரிடம் ஏதோ ஒரு புதிய மாறுதலை உருவாக்கியிருப்பதைப் போல் தெரிந்தது.


நன்றி : முத்துகமலம்.காம்

Wednesday, February 11, 2009

'கமலா' - வெற்றி பெற்ற போஸ்ட் கார்ட் சிறுகதை

பதிவர் நண்பர்களுக்கு வணக்கம்,

நம் உரத்தசிந்தனை இலக்கிய மாத இதழ் நடத்திய 'போஸ்ட் கார்ட்' சிறுகதை போட்டியில் நான் எழுதிய 'கமலா' சிறுகதை வெற்றி பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற வருடம் 'மனசாட்சி சொன்னது' என்ற சிறுகதைக்கு நம் உரத்தசிந்தனை சிறந்த கதை என்று தேர்வு செய்துள்ளது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
குகன்

----

கமலா

சண்முகம் கமலாவின் தோள் மீது ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் போட்டுக் கொண்டு பேசிப்படி நடந்து வந்தான்.

"எத்தன வருஷமா இந்த தொழில்ல இருக்க..." என்றான் சண்முகம்.

"இரண்டு வருஷமா ஸார்...!" என்றாள்.

சண்முகத்தின் காம பார்வை கமலாவின் தேகத்தை மொய்த்து கொண்டு இருந்தது. இந்த வேலைக்கு என்று வந்த பிறகு ஆண்ணின் தீண்டல் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அமைதியாக நடந்தாள்.

" நீ பேசாம இந்த இடத்த விட்டுட்டு என் கூடவே தங்கிக்கோ.." என்று கூறி அசட்டு தனமாக சிரித்தான். கமலா அவனை தாங்கி நடந்தபை அறையில் விட்டு வெளியே வந்தாள். சேவைக்கும், தொழிலுக்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் பேச விருப்பமில்லாமல் பொறுமையாக நர்ஸ் கமலா அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள்.

Tuesday, February 10, 2009

இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள் ???

சென்ற வாரம் ஒரு மலேஷியாவில் இருந்து வாசகி தன் மகளின் பள்ளியில் பேச்சு போட்டி நடப்பதாகவும், அதற்கான தலைப்பில் 'கட்டுரை' எழுதி தர முடியுமா என்று கேட்டுக் கொண்டார். நம்மையும் ஒரு நல்ல பதிவர் (??) என்று நம்பியிருக்கிறார் என்பதற்காக ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதி மின்னஞ்சல் அனுப்பினேன்.இதற்கு முன் அந்த வாசகி யார் என்று கூட தெரியாது. எதோ என் பதிவு அவர்களுக்கு பிடித்திருக்கலாம். கேட்டுவார். நானும் எழுதி கொடுத்து விட்டேன். அவர் மகள் வெற்றி பெற்றாரா என்று கூட தெரியவில்லை.

அவர் என்னிடம் கேட்ட தலைப்பு " இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள்". இந்த தலைப்பை படித்ததும் எனக்குள் பல கேள்விகள். இந்த போட்டிகள் நடத்துவதால் பங்கு பெற வேண்டும் என்பதற்காக பலர் தங்கள் கற்பனை தட்டி எழுதுகின்றனர். ( வெற்றியை முக்கியமாக கருதுவதில்லை.)

எந்த வித உள் நோக்கமில்லாமல் உண்மையாகவே இலக்கிய போட்டிகள் நடத்தி எழுத்தாளர்களை ஊக்கவிக்கிறார்களா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே என் மனதில் உள்ளது. 1000, 5000 ரூபாய் என்று ஒரு சிறுகதைக்கோ அல்லது கவிதைக்கோ கொடுக்கிறார்கள். வெற்றி பெற்ற எழுத்தாளர்களும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், போட்டி நடத்துபவர்கள் என்ன பயன் பெறுகிறார்கள். எந்த லாபம் இல்லாமல் போட்டி நடத்துவார்களா...! இல்லை அவர்கள் போட்டி நடத்துபது மூலம் தேடிக் கொள்ளும் விளம்பரமா என்று புரியவில்லை.

ஒரு எழுத்தாளர் பார்வையில் எழுதிய கட்டுரையை கீழே குறிப்பிட்டுள்ளேன். எந்த வார்த்தைகளும் மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன்.


-----

இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள்

ஒரு திறந்த மைதானத்தில் பதினொரு பேர் கொண்ட இரு அணி வீரர்களை எந்த இலக்கும், விதிமுறைகளும் இல்லாமல் பந்தை இரண்டு பக்கமும் அடிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்....? அவர்கள் பந்தை அடித்தப்படி விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அந்த விளையாட்டுக்கு முடிவு என்பதே கிடையாது. பார்வையாளர்களும் அந்த விளையாட்டை பார்க்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கும் அலுப்பு தட்டிவிடும். ஆனால், இதே விளையாட்டை காலளவு, விதிமுறைகள், இலக்கு என்று நிர்ணயம் செய்து விளையாடினால் ரசிகர்கள் திரண்டு வந்து பார்ப்பார்கள். இரண்டு அணிகளும் பந்தை தங்கள் இலக்கை நோக்கி அடித்து விளையாடுவார்கள். ரசிகர்களும் கைதட்டி ஆராவாரம் செய்வார்கள்.

இலக்கிய போட்டிகளும் அப்படி தான். ஒவ்வொரு எழுத்தாளனும் எழுத்து துறையில் நுழையும் போது 'கவிதை' என்ற நுழைவு தேர்வு மூலம் தான் உள்ளே வருகிறான். காலம் செல்ல செல்ல வளர்ந்த நிலையில் கட்டுரை, சிறுகதை, புதினம் என்று அவனது எழுத்துக்களும் வளர்ச்சி அடைகின்றன. ஒரு நல்ல எழுத்தாளரால் எல்லாமே எழுத முடியும். ஆனால், அவன் எதில் சிறந்து விளங்குகிறான் என்பதை இலக்கிய போட்டிகள் தான் அவனுக்கு உணர்த்துகிறது. இலக்கிய போட்டிகளில் வளர்ந்த எழுத்தாளர்கள் ஒருவனின் கவிதையோ அல்லது சிறுகதையோ தேர்வு செய்யும் போது எழுத்துலகில் மிக பெரிய அங்கிகாரம் கிடைக்கிறது. அவன் எழுதிய அந்த படைப்புக்கும் வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுகிறது.

எந்த ஒரு எழுத்தாளனையும் இலக்கிய போட்டிகள் போல் வாசகர்களிடம் எதுவும் கொண்டு செல்வதில்லை. புகழ் பெற்ற இதழிலோ அல்லது நாளேடுகளிலோ எழுதுபவர்கள் குறிப்பிட்ட வாசகர்கள் வரை தான் சென்றடைகிறார்கள். ஆனால், இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற படைப்புகள் பெரும் அளவில் வாசகர்களின் ஆதரவு கிடைக்கிறது. இன்றும், சாகித்ய அகாதமி விருது, தமிழ அரசு விருது பெற்ற நூல்கள் வாசகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு பெற்றுள்ளது. அந்த நூலின் விற்பனைக்கும் இலக்கிய போட்டியின் முடிவுகள் உதவுகிறது.

இலக்கிய போட்டிகள் எழுத்தாளனை அங்கிகரிப்பதோடு அல்லாமல் வாசகனுக்கு நல்ல படைப்புகள் எளிதில் சென்றடைய வழி வகுத்துக் கொடுகிறது.

---

எழுத்தாளர் பார்வையில் இலக்கிய போட்டிகள் மிகவும் முக்கியம். ஆனால், போட்டிகள் நடத்துபவர்களின் பார்வையில் தேவை விளம்பரம் மட்டும் தானா...அல்லது அதையும் மீறி ஏதாவது ஒன்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா !!

ச்ச.. யாரை தான் சந்தேகம் படனும் அறிவிருக்கா... எதோ காசு இருக்குறவங்க போட்டி நடத்துறாங்க ! எழுத்தாளர் போட்டியில் கலந்துக் கொள்ளுறான். உனக்கு என்ன வந்தது.இப்படினு நீங்கள் கேட்கலாம். அப்படி கேட்டாலும் அதில் உண்மை இருக்கிறது. இருந்தாலும், என் சந்தேகம் நியாயமாக தான் எனக்கு படுகிறது. நீங்க என்ன சொல்லுறீங்க... ????

Monday, February 9, 2009

நடேசன் பார்க்கில் (8.2.09) புலிகளின் கூட்டம்

நேற்று (8.2.09), மாலை 4 மணியளவில் நடேசன் பார்க்கில் இலங்கையில் நடக்கும் போருக்கு எதிராக ஐம்பதுக்கு மேற்பட்ட வலைப்பதிவர்கள் சந்தித்தோம். தவிர்க்க முடியாத காரணத்தால் 4 மணி கூட்டத்திற்கு 5.15 மணிக்கு தான் வந்தேன். (‘ஞாயிறு’ என்பதால் மதியம் ஆழ்ந்து தூங்கிவிட்டேன்)

பாதியில் கலந்துக் கொண்டதால் பலரது அறிமுகம் கிடைக்காமல் போனது.

ஒரு நண்பர் " ஒரு வாரத்திற்காவது மொக்கை பதிவுகளை நிறுத்திக் கொண்டு, இலங்கை போருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்று சொன்னார். (எனக்கும் இது சரியாக தான் படுகிறது.)

இலங்கை பிரச்சனைக்கு தமிழர்கள் மட்டும் குரல் கொடுத்தால் மட்டும் போதாது. மற்ற மாநிலத்தவர்களுக்கும் நம் உணர்வுகளை புரியவைக்க வேண்டும். அதற்கும் ஆங்கிலத்தில் ப்ளாக் எழுதுபவர்களை அனுகி 'முத்துகுமார்' இறுதி கடிதத்தை ஆங்கிலத்தில் பதிவு போட வேண்டும் என்று பலர் வலியுருத்தினர்.

ஒருவர் அடுத்த வாரம் பெங்களூரில் அடுத்த வாரம் இலங்கை பிரச்சனை பற்றி கூட்டம் போட போவதாக கூறினார். இலங்கை பிரச்சனை பற்றி ஒரு சிறு குறிப்பு பிரசுரம் போட வேண்டும் என்பதை பற்றியும் பேசப்பட்டது.

இறுதியில், ஐந்து நிமிடம் இறந்த 'முத்துகுமார்' அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி விட்டு கூட்டம் கலைந்தது.

தேநீர்க்காக கொஞ்ச நேரம் சுற்றி விட்டு கடைசியில் பார்க் பக்கத்தில் இருக்கும் கடையில் தேநீர் அருந்தினோம்.

கூட்டம் முடினதும் நான், கார்க்கி, முரளிகண்ணன் பேசிக் கொண்டு இருந்தோம். முரளிகண்ணன் அவர்கள் வலை திரட்டிகளை பற்றியும், தமிழிஷ் பற்றியும் பல தகவல்கள் கூறினார். தகவல்கள் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.

லக்கிலுக்கிடம் அவர் எழுதிய புத்தகம் பற்றி பேச வேண்டும் நினைத்தேன். அவரை சுற்றி பெரும் கூட்டமே சுழ்ந்துக் கொண்டு இருந்ததால், அதிகம் பேசமுடியவில்லை.

'விடுப்பட்டவை' பாலா இருந்திருந்தால் இன்னும் பல தகவல் கிடைத்திருக்கும்.

அண்ணன் கேபிள் சங்கரிடம் அவரது 'நிதர்சன கதைகள்' பற்றி பேசிய பிறகு அந்த இடத்தை விட்டு நான் சென்று விட்டேன்.

இலங்கை பிரச்சனையை அரசியல் பண்ணுபவர்கள் மத்தியில் நம்மால் ஒரு தீபம் ஏற்ற முடிந்தாலே போதும். ஒரு தீபம் வைத்து பல தீபங்கள் ஏற்ற முடியும் என்ற நம்பிக்கையில் செல்வோம். நல்லது நடந்தால் சரி...!

ஏதாவது விடுப்பட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Saturday, February 7, 2009

தமிழுக்கு இல்லை தேய்மானம்

இனியவன் G. ஸ்ரீதர்

இது வரை நான் படித்த புத்தகங்கள், விமர்சனங்கள், ரசித்த வரிகள் என்று தனி தளத்தில் எழுதி வந்தேன். இனி 'குகனின் கட்டுரை' தளத்தில் ‘நான் விரும்பி படித்த புத்தகங்கள்’ பற்றி எழுத முடிவு எடுத்துள்ளேன். ( அந்த தளத்தில் எழுதப்படும் அத்தனை கருத்துகளும் இங்கு எழுத‌ப்படும். வேறு எதற்கு... எல்லாம் 'ஹிட்' அதிகமாக தான்.)

சரி ! புத்தகத்திற்கு வருவோம். ஒரு இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் நண்பர் 'ஸ்ரீதர்' அவர்களின் அறிமுகம் கிடைத்தது. பார்த்த சில நிமிடங்களிலே அவர் எழுதிய 'தமிழ்க்கு இல்லை தேய்மானம்' கவிதை தொகுப்பை என்னிடம் கொடுத்தார். ( கவிதை நூல்களுக்கு அரசு ஆணை கிடைக்காததால் இப்படி ‘Visiting Card’ போல் கொடுக்க வேண்டி இருக்கிறது.)

பா.விஜய் அணிந்துரையோடு கவிதை நூல் தொடங்குகிறது.

"வெற்றிலைச் சாறில் வெள்ளம் எடுப்பேன்
வெற்றியும் தோல்வியும் சமமாய்
சுமப்பேன்"

என்ற முதல் கவிதையான 'உறுதிமொழி' கவிதையில் என்னை கவர்ந்துவிட்டார். அடுத்து, 'அம்மா' பற்றி சொல்லும் போது 'ஆண்டவன் எழுதிய அணிந்துரை' என்று எழுதியிருப்பது மிகவும் அருமை.

கடிகாரத்தை பற்றி சொல்லும் போது…
"நேரத்தைக் காட்டுவது உன் வேலை
நேரத்தை கடத்துவதே எங்கள் வேலை"

இளைஞனின் கவிதை நூல் வெளியிட்டால் கண்டிப்பாக 'காதல்' கவிதை இருக்கும். 'காதல்' கவிதை இருந்தால் கவிதை நூலுக்கே தனி சிறப்பு வருகிறது.

நீயும் நானும் தலைப்பில்
'சட்டையடி நீ எனக்கு
சட்டைப் பை நான் உனக்கு !
சட்ட சபை நீ எனக்கு
சபா நாயகன் நான் உனக்கு !'

கரியானாலும் காதலே’ தலைப்பில்
நிலக்கரிக் கூட
நான் நேசிக்கிறேன்
காரணம்
அவளுக்கு சொந்த ஊர்
நெய்வேலி !

நான் படிக்கும் இன்னொரு கவிதை நூல் என்ற மனதோடு தான் படித்துக் கொண்டு வந்தேன். 80வது பக்கத்தில் 'சுரணை' கவிதை படித்தவுடன் இந்த நூலை பற்றி தளத்தில் சொல்லியாக வேண்டும் என்ற முடிவே செய்துவிட்டேன்.

‘சுரணை’ தலைப்பில்..

கடவுள்களை அடித்தால்
பக்தர்களுக்கு வலிக்கிறது !
தலைவர்களை அடித்தால்
தொண்டர்களுக்கு வலிக்கிறது !
நடிகர்களை அடித்தால்
ரசிகர்களுக்கு வலிக்கிறது !
மிருகங்களை அடித்தால் கூட
ஜீவ காருண்யர்க்கு வலிக்கிறது !
இலங்கையில் தமிழர்களை
படுகொலை செய்கிறார்கள்
இங்கே பலருக்கு
சுரணையே இல்லை.

இலங்கை பிரச்சனை அரசியலாக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த கவிதை சுரணை கொடுக்காது. ஆனால், தமிழர்களுக்கு கண்டிப்பாக 'சுரணை' கொடுக்கும் என்பது நிச்சயம்.

பாரதி புத்தகலாயம் இந்த கவிதை நூலை வெளியிட்டுள்ளது. திரைப்படத்துறையில் நுழைவதற்கு முக லட்சனங்களும், கவி திறனும் ஸ்ரீதருக்கு உண்டு. இன்னும் பல படைப்புகள் படைப்புகள் படைக்க அவரை நம் பதிவர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

விலை. 35
பாரதி புத்தகலாயம்
421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,+
சென்னை – 108
தொலைப்பேசி : 2433 2424 , 2433 2924

Friday, February 6, 2009

நடிகர் சீரன்ஜிவியின் அரசியல் வரவு

சமிபத்தில் Business World நடத்திய கருத்து கணிப்பில் 2009 ஆம் ஆண்டு கவனிக்க தக்க நபர்களில் நடிகர் (அரசியல்வாதி) சிரன்ஜிவி இருப்பதை பார்த்து அதிர்ந்துவிட்டேன்.

நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது எதோ புது வீடு வாங்குவது மாறிவிட்டு வருகிறது. இப்படி விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், டி.ராஜேந்திரன் என்று சொந்தமாக கட்சி தொடங்கிபவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும். நடிகர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் அவர்கள். எப்படி தமிழ் நாட்டு நடிகர்களுக்கு எம்.ஜி.ஆர் முன்னோடியாக இருந்தாரோ ஆந்திரா மாநிலத்திற்கு என்.டி.ராம ராவ் இருக்கிறார்.



‘தெலுங்கு தேசம் கட்சி’ தொடங்கி குறுகிய காலத்தில் வெற்றி கனியை சுவைத்தவர். எப்படி 1982 ஆம் ஆண்டு என்.டி.ஆர் (ராமா ராவ்) வரவை மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்களோ அதே அளவிற்கு கை தட்டல்களும், ஆரவாரமும் நடிகர் சீரன்ஜிவிக்கு கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 26, 2008 அன்று என்.டி.ஆர் போலவே திருப்பதியில் பிரஜா ராஜ்ஜியம் பார்ட்டி ( மக்கள் ஆளும் கட்சி) தொடங்கினார். ஒன்பது லட்சம் மேல் மக்கள் திரண்டு சீரஜிவியின் கடிசிக்கு அலையாக திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

"எனக்கு அரசியல் தெரியாது. ஆனால், மக்கள் படும் கஷ்டம் தெரியும்" என்று கூறினார். சீரன்ஜிவியின் கட்சியின் ஆதரவாக அவரது சகோதரர்கள் நாகேந்திர பாபு, பவன் கல்யான் துணையாக இருக்கிறார்கள். கட்சி தொடங்கும் போது குடும்பத்துடன் தொடங்கியிருக்கிறார்.

சீரன்ஜிவியின் கட்சிக்கு ஆந்திராவில் கிடைத்த வரவேற்பை பார்த்தவர்கள் சட்டசபை தேர்தலில் 35 முதல் 50 இடங்களும், பாராள மன்ற தேர்தலில் ஐந்து - ஆறு இடங்களும் கிடைக்கும் என்று கருத்து கூறியுள்ளனர். போலீஸ் காஸ்டேபின் மகனான சீரன்ஜிவி பி.காம் பட்டதாரி. நடிப்பதற்காக 1977 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தவர் '47 நாட்கள்', 'இராணுவ வீரன்' என்று இரண்டு தமிழ் படங்கள் நடித்தார். தெலுங்கில் அவர் நடித்த 'கைதி' என்ற படம் வெற்றி பெற்றது மூலம் திரை உலகில் நிலையான இடம் பெற்றார். அரசியலுக்காக சீரன்ஜிவி கையில் எடுத்திருக்கும் சமூக பிரச்சனை தெலுங்கான போராட்டம். விவசாயிகளிடம் பேசி தன்னால் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இவர் வரவை மற்ற கட்சிகள் விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை ஆந்திராவில் நடக்கும் அரசியல்வாதிகளின் பேச்சில் இருந்து புரிந்துக் கொள்ளமுடிகிறது. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல் ஆந்திரா அரசியலில் மின்னுவாரா ? அல்லது நமது சிவாஜியை போல் கட்சியை முடிவிட்டு மீண்டும் நடிக்க வருகிறாரா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Thursday, February 5, 2009

முடியாத காதல் கதை

" ஹலோ வணக்கம்.... நான் பிரியா பேசுறேன். நீங்க யாரு பேசுறது ?"

" நா திண்டிவணத்துல இருந்து ஷோபா பேசுறேன்"

"சொல்லுங்க ஷோபா... எப்படி இருக்கீங்க..?"

"நா நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க...?"

"யம்மாடி...ஆத்தாடி. உன்ன என்னக்கு தரியாடி...!!"

" கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி தூத்திக்குடி..."

" நீங்கள் பார்த்துக் கொண்டு இருப்பது........"

" ச்சே..." - கோபத்துடன் என் கையில் இருந்த ரிமோட்டை தூக்கி வீசினேன்.

இசையருவி, சன் மீயூசிக், ஜெயா மீயூசிக், ராஜ் மீயூசிக் என்று தமிழில் இருக்கும் எல்லா இசை சேனல்களை போட்டு பார்த்துவிட்டேன். நான் எதிர்பார்க்கும் அந்த விஷயம் மட்டும் இன்னும் வரவில்லை. மூன்று ஆண்டுகளாக என் மனதில் அலைமோதிய ஆசை. என் கல்லூரி படிப்பு தொடங்கி இன்று வரை ஒவ்வொரு நொடியும் நான் அனு அனுவாய் செத்ததற்கு பலன். என் வாழ்க்கையில் வரும் சந்தோஷம் எல்லாம் தமிழ் இசை சேனல்களில் எதோ ஒன்றில் தான் இருக்கிறது.

பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று என்று என் காதலை நினைக்க வேண்டாம். என் காதல் வித்தியாசமானது. முடிவில்லாதது. என் காதலை கதையை பற்றி எத்தனை முறை கூறினாலும், எனக்கு அலுப்பு தட்டுவதில்லை. நீங்களும் ஒவ்வொரு முறை புதிதாய் கேட்பது போல் உணர்வீர்கள். என் காதல் கதையை நீங்கள் முடிக்க நினைத்தாலும் இதில் நீங்கள் தொலைந்து போவீர்கள். சிறு பயத்தை மனதில் வைத்துக் கொண்டு என் காதல் கதையை கேளுங்கள்...

என் மூன்று வருட தவத்தை இன்று தான் அவளிடம் சொன்னேன். அவள் பெயர் அமுதா. எனக்கென்று பிறந்த தேவதை. எனக்காவே வடிவமைத்து பிரம்மன் செதுக்கி பூமியில் பிறக்க வைத்த தேவதை. அவள் மீது யார் ஆசை வைத்தாலும் தெய்வ குத்தமாகிவிடும். எனக்காக அவளை கடவுள் அவளை படைத்த போது, மற்றவர்கள் அவளை சகோதரியாக தான் பார்க்க வேண்டும். என் கோபத்தை விட, கடவுளின் கோபத்திற்கு நிச்சயம் எல்லோரும் பயப்படுவீர்கள். அதனால், என் அமுதாவை நீங்கள் சகோதரியாக பாருங்கள். இப்படி, என் கல்லூரியில் படிப்பவர்களை மிரட்டி இருக்கிறேன். நான் நல்லவன் என்று காட்டிக் கொள்ள நண்பர்களிடம் கெஞ்சியிருக்கிறேன். ஆனால், அவளிடம் மட்டும் பேச ஒரு வார்த்தை கூட வரவில்லை. இன்று தான் என் மௌனத்தை கலைத்தேன். என் அமுதாவை இல்லை... தேவதையை அழைத்து தனியாக பேசினேன்.

" மூனு வருஷமா நா உன்ன லவ் பண்ணுறேன். அது உன்னக்கே நல்லா தெரியும். நம்ம படிப்பு கெட்டு போக கூடாது தான் நா இதுவரைக்கும் சொல்லல்ல.. ஐ லவ் யூ அமுதா..."

அமுதா எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

" என்ன அமுதா... நா சொன்னதுக்கு பதிலே சொல்லல்ல..."

"கொஞ்சம் டைம் கொடு... நா அப்புறம் பதில் சொல்லுறேன்.."

" எப்போ...எவ்வளவு நாள் ?"

மூன்று வருடங்களாக சொல்ல காத்திருந்த என் இதயத்திற்கு, என் காதலை சொன்ன பிறகு காத்திருக்க முடியவில்லை. அவளிடம் இருந்த பதில் வர போகும் நாட்களை என்ன வேண்டுமா என்று மனம் பதறியது.

" ரொம்ப டைம் எடுத்துக்க மாட்டேன். இன்னைக்குள்ள சொல்லுறேன்..."

"உனக்கு போன் பண்ணட்டா..."

" இல்ல வேண்டாம். நா எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்..."

இவ்வளவு பெரிய விஷயத்த எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் சொல்லுறா... என்ன பண்ணுறது..

" காதல் வந்துவிட்டால்
Missed Call கொடுத்து
காதலை தொலைப்பவர்கள் – பெண்கள் !
Out-going Call செய்து
காதலை தக்கவைத்து கொள்பவர்கள் – ஆண்கள் !!"

புது கவிதை மனதில் எழுதிக் கொண்டேன். என் காதல் உறுதியாகும் வரை இது போன்ற கவிதையில் என் காதலை சிதைத்துவிட விரும்பவில்லை.

" என் நம்பர் உனக்கு தெரியுமா..."

" உன் செல்போனுக்கு இல்ல... தமிழ் மீயூசிக் ச்சேனலுக்கு ஏதாவது ஒண்ணுக்கு அனுப்புவேன்.."

" என்ன ச்சேனல் சொல்லு...."

" அது தான் சஸ்பென்ஸ்... என் பதில் ஏதாவது ஒரு தமிழ் ச்சேனல்ல வரும்... பாரு !"

இன்றே என் காதல் தேர்வுக்கு முடிவு தெரிய போவதை நினைத்து சந்தோஷப்படுவதா ? எந்த ச்சேனலில் பதில் வரும் என்று தெரியாமல் விழிப்பதா ? என்று ஒன்றும் புரியவில்லை. தன் காதலுக்கு முடிவு சொல்ல... இப்படி ஒரு உத்தியை கொண்டுவந்தது என் அமுதாவாக தான் இருக்கும்.

ஒவ்வொரு ச்சேனல் கீழில் யார் யாரோ அனுப்பிய தகவல் வந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், என் அமுதா அனுப்பியதை இவர்கள் ஒளிப்பரப்ப நேரமாகுமா... வேறு ஏதாவது தமிழ் ச்சேனலாக இருக்குமா என்று இன்னொரு சந்தேகம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ச்சேனலை மாற்றிக் கொண்டு வருகிறேன். என் அமுதா அனுப்பியது போல் எந்த பதிலும் வந்ததாக தெரியவில்லை.

ஒவ்வொரு நிமிடமும் டைம் பாம் நேரம் கடப்பது போல் இருந்தது.

ஒரு ச்சேனலில் தொலைப்பேசி மணி ஒலித்தது. என் கவனம் முழுக்க ச்சேனல் கீழ் வரும் பதிலை எதிர்பார்த்து இருந்தது.

அந்த ச்சேனல் தொகுப்பாளர் பிரியா போனை எடுத்து பேசினாள்...

(மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்......! )

****

பின்குறிப்பு : இப்போ தலைப்பின் அர்த்தம் தெரிஞ்சிருக்குமே... :)

நன்றி : தமிழோவியம்.காம்

Tuesday, February 3, 2009

கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை

செந்தில் இன்டர்வியூக்கு போறாரு. இன்டர்வியூ ப்பேனல்ல நம்ம கவுண்டமணி கேள்வி கேட்டா எப்படி இருக்கும்...

செந்தில் : உள்ள வரலம்மா...?
கவுண்டமணி : அதான் வந்துட்டல.... அப்புறம் என்ன கேள்வி...

செந்தில் : அண்ணே... நீங்களா அண்ணே...
கவுண்டமணி : யாருடா நீ..??

செந்தில் : என்ன தெரிய... நான் பேச்சிமுத்து பேரன் ..
கவுண்டமணி : ஞாபகம் வரல...

செந்தில் : நீங்க கூட என்ன அப்போ அப்போ எட்டி உதைபிங்க அண்ணே...
கவுண்டமணி : அட கொக்கா மக்கா நீயா... இங்கயும் வந்துடியா...

செந்தில் : இன்டர்வியூ எடுங்கண்ணே...
கவுண்டமணி : டேய்... கடையில துணி எடுங்க னுற மாதிரி கேக்குற... சரி உன் வயசுக்கு தகுந்த மாதிரி கேக்குறேன்.... ஆமா உன் வயசு என்ன...?

செந்தில் கை விரலை எண் ணிக் கொண்டு இருக்கிறான். அதன் பிறகு…

செந்தில் : ம்ம்.... 32 வயது ஆகுது அண்ணே...

கவுண்டமணி : (சற்று வித்தியாசமான பார்வையில் ) உன் ஹைட் என்ன...?

செந்தில் : இருங்க ஒரு நிமிஷம்...
கவுண்டமணி : டாய் நா தாரி பயலே... என்னடா பண்ணுற...

செந்தில் : இருங்க அண்ணே...
செந்தில் இன்ச் டேப் வைத்து தன் உயரத்தை அளக்கிறான் .

செந்தில் : 5 அடி 3 அங்குளம் அண்ணே..
கவுண்டமணி : சானி தலையா... திட்டி திட்டி உன் பெயரே மறந்து போச்சு...

செந்தில் மனதுக்குள் பாட்டு பாடி கொண்டு இருக்கிறான். அதன் பிறகு...

செந்தில் : என் பேரு செந்தில் அண்ணே...
கவுண்டமணி : டாய்... உன் பெயர சொல்றதுக்கு எவ்வளவு நேரம்மா... அப்படி மனசுக்குள்ள என்னடா பேசிகிட்ட...

செந்தில் : பாட்டு பாடி பார்தேன் அண்ணே..
கவுண்டமணி : கொயாலா... இன்டர்வியூவுக்கு வந்து பாடி பார்த்தியா... என்னடா பாட்டு...

செந்தில் : ஹெப்பி பர்த்து டே டூ யூ.... ஹெப்பி பர்த்து டே டூ யூ. ஹெப்பி பர்த்து டே டூ செந்தில்... ஹெப்பி பர்த்து டே டூ யூ... பாடுனேன்...
கவுண்டமணி : டேய்... எனக்கு வேலைய போனாலும் பரவயில்ல... உன்ன மிதிக்காம விட மாட்டேன்...

( பின்குறிப்பு : ஆங்கில நகைச்சுவையை தழுவி கொஞ்சம் என் கற்பனையும் சேர்த்து எழுதியிருக்கிறேன். இது ஒரு நகைச்சுவையா என்று உங்களுக்கு தோன்றலாம். 'குண்டக்க - மண்டக்க' படித்த ஒரு அன்பு வாசகர் “கவுண்டமணி – செந்தில்' வைத்து ஒரு காமெடி எழுதுங்கனு “ கேட்டுக் கொண்டார். அதன் முயற்சியே இந்த நகைச்சுவை. வடிவேலுவை வைத்து சோலோவாக கூட காமெடி பண்ணலாம். 'கவுண்டமணி - செந்தில்' வைத்து காமெடி பண்ண கொஞ்சம் கஷ்டம் என்பதை இந்த நகைச்சுவை எழுத தொடங்கும் போது புரிந்துக் கொண்டேன்.

நான் எழுதியதை நானே நிராகரித்தால் எப்படி....? அதான் பதிவில் ஏற்றிவிட்டேன். )

Monday, February 2, 2009

வாய்தா வாங்கும் வழக்குகள்

நம் நாட்டில் விசாரனை முடிந்து எல்லா வழக்குகளுக்கும் தீர்ப்பு வருவதற்கு முன்னூறு ஆண்டுகள் ஆகும். தீர்ப்புகள் தள்ளிச் செல்லவே நீதி மன்றங்கள் மீது நம்பிக்கை இழக்கிறோம். நீதி மன்றங்கள் சரியாக இயங்கினால் தான் எந்த நாட்டையும் முன்னேற்ற முடியும். அதை சரியாக வழி நடத்த தெரியாமல் தான் நாம் தடுமாறிக் கொண்டு இருக்கிறோம்.

ஆரபு நாட்டில் திருடுபவர்களுக்கு தூக்கு தண்டனையாம். ஒருவன் இயலாமை காரணமாக திருடும் போது காவல் துறையிடம் பிடிப்பட்டு விடுகிறான். அவனை தனியாக தண்டித்தால் யாருக்கும் தெரியாது என்று மக்கள் மத்தியில் தூக்கிலிட்டு கொன்றார்கள். அந்த திருடனின் மரணத்தை மக்கள் கூட்டமாக வந்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்பொது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவன் தன் பணம் பரிப்போனதாக அலருகிறான். எந்த கடுமையான தண்டனை வைத்தாலும் தவறு செய்பவர்கள் தவறு செய்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

நம் நாட்டில் தீர்ப்புகள் தாமதமாய் வருவதால் நல்லவர்களை கூட தீய வழி செல்ல வழி வகுக்கிறார்கள். 1996ல் ஒரு மானைக் கொன்ற வழக்குகாக ஒரு நடிகனுக்கு 2006ல் எழு வருடம் தண்டனை வழங்கப் பட்டது. அந்த நடிகர் மானைக் கொள்ளாமல் இருந்திருந்தால் இடைப்பட்ட காலத்தில் அந்த மானே வயதாகி இறந்திருக்கும்.

1983 ஆம் ஆண்டு ஒருவன் ஒரு குடும்பத்தையே வெட்டிக் கொலை செய்து இருக்கிறான். அவனுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியும் உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ஜனாதிபதி கருணை மனு என்று இருபது வருடம் கடந்து 2003ல் தான் அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவெற்றப் பட்டது. அவனை தூக்கில் இடும் போது அவனுக்கு வயது ஐம்பத்தியெட்டு. இன்னும் சில நாள் அவனே வயதாகி இறந்திருப்பான்.

உடல் சரியில்லை என்று மருத்துவ மனையில் சேர்பவனும், நீதிக்காக நீதி மன்றத்தில் வழக்குப் போட்டவனும் நிம்மதியாக இருப்பதில்லை. காரணம் ஒரு புறம் பணம் செலவாய் செல்லும், மறுபுறம் அங்கும் இங்கும் அலைந்து திரிய வேண்டும். மருத்துவமனைக்கும், நீதி மன்றத்திற்கும் செல்லாதவனே நிம்மதியாக வாழ்கிறான்.

இன்றைய இளைஞர்கள் (என்னையும் உட்பட) வழக்கறிஞர் தொழிலை பெரிதாக நினைப்பதில்லை. எல்லோரும் மருத்துவம், பொறியியல் பற்றியே சிந்திக்கிறார்கள். மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், வா.உ.சிதம்பதரார் பிள்ளை போன்றவர்கள் வழக்கறிஞர் தொழிலில் இருந்து தான் வந்தார்கள். ஆனால், இன்று பெரும் பாலும் அந்த படிப்பை விரும்பி படிப்பதில்லை. மருத்துவம், பொறியியல் கிடைக்காதவனே வழக்கறிஞர் படிப்பை படிக்கிறான். வேறு வழியில்லை எதாவது படித்தாக வேண்டும் என்று வழக்கறிஞர் படிப்பாகிவிட்டது.

சரி வாய்தா வாங்கும் வழக்குகளை பற்றியும், மாணவர்கள் வழக்கறிஞர் விரும்பி படிக்கவில்லை என்பதையும் செய்திதாள்கள், தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இதை எப்படி சரி செய்வது....???

நம் நாட்டில் காவல்துறை மட்டுமே இருபத்தி நான்கு மணி நேரம் இயங்குகிறது. நீதி மன்றங்கள் அல்ல. கொலை, திருட்டு, மற்றவரை ஏமாற்றுவரு இப்படி இருபத்தி நான்கு மணி நேரத்தில் எந்த தவறு வேண்டுமானாலும் நடக்காலம் என்பதற்காக காவல்துறை ஒவ்வொரு மணி நேரம் பணியாற்றுகிறார்கள். ஆனால் தவறு செய்தவனுக்கு விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு நீதி மன்றங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 வரை. ( பிரமாண பண்டிகை நாளில் 11.30 மணிக்கு நீதி மன்றம் தொடங்கும்).

மக்களுக்கு தேவையான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும். அப்பொது தான் தீர்ப்பை மற்றவர்களுக்கும் மதிப்பார்கள். காலம் கடந்து கடவுளே தீர்ப்பு வழங்கினாலும் அந்த கடவுளை கூட தூக்கி எறியும் காலமட் இது. அதனால் நீதி மன்றங்கள் இருபத்தி நான்கு மணி நேரம் இயங்க வேண்டும். இன்னும் தெளிவாய் சொல்ல போனால் 24 X 7 மணி நேரம் நீதி மன்றங்கள் மக்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டும்.

ஏன் சாத்தியமில்லை....? இரவு நேரத்தில் தாய் பசு இறந்த தன் கன்றுக்காக மனுநீதி சோழனிடம் செல்லவில்லை. மனுநீதி சோழன் இரவு நேரம் என்று வழக்குக்கு வாய்தாவா கொடுத்தார் ? அந்த வழக்கில் விசாரித்து தவறு செய்தவன் மகனென்று பார்க்காமல் தேரில் ஏற்றி கொல்லவில்லை. அந்த காலத்தில் இருபத்தி நான்கு மணி நேரம் நீதி மன்றங்கள் நடந்தன. நீதிபதிகளாக அரசர்கள் இருபத்தி நான்கு மணி நேரம் தீர்ப்பு வழங்கினார்கள். காலம் கடக்க வெள்ளையன் வந்து நம்மை ஆட்சி செய்ய நீதி மன்றத்திற்கு நேரமும், சனி, ஞாயிறு விடுமுறை என்று விதித்து விட்டான். அதையும் நாம் மறக்காமல் தொடர்கின்றோம்.

இன்று பல தனியார் நிறுவனமும் அதிகம் லாபம் காண்பது இருபத்தி நான்கு மணி நேரம் உழைப்பு தான். ஒரு நாளை மூன்று எட்டு மணி நேரங்களாக பிரித்து, ஒவ்வொரு எட்டு மணி நேரமும் ஒவ்வொரு ஊழியர்கள் உழைக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Shift basis work என்பார்கள். நம் நீதி மன்றங்களும் அப்படி இயங்க வேண்டும்.

நீதி மன்றத்தில் இருபத்தி நான்கு நேரம் வழக்குகள் விசாரித்தால் எல்லா வழக்குகளும் தீர்ப்பு கிடைக்கும். அப்படி என்றால் இப்பொது இருக்கும் நீதிபதிகளை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். அவர்களுக்கு எற்றார் போல் ஒரு நாளைக்கு எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து வேலை செய்யலாம்.

வழக்கறிஞர்கள் எண்ணிக்கை உயர்த்த மாணவர்கள் மத்தியில் வழக்கறிஞர் தொழிலை பற்றி உயர்வான எண்ணத்தை பெருக்க வேண்டும். மருத்துவம் போல் வழக்கறிஞர் தொழில் சேவை என்று உணர்த்த வேண்டும்.

நம் நாட்டில் சிறைசாலையில் இருக்கும் கைதிகளில் இருபது சதவீதம் மட்டுமே தீர்ப்பு வழங்கப் பட்டவர்கள். மீதி எண்பது சதவீத கைதிகள் தீர்ப்புகளுக்காக நீதி மன்றங்களுக்கு அலைத்தும் செல்வதுமாய் இருக்கிறார்கள். இந்திய சிறைசாலையில் சுமராக எண்பது லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு நாளுக்கு நீதி மன்றத்திற்கு அலைத்து செல்லும் செலவு பத்து ரூபாய் என்று வைத்துக் கொண்டால் எண்பது லட்சத்திற்கு எட்டு கோடி செலவாகிறது. வருடத்துக்கு ஒரு கைதியை சுமராக இருபது முறை நீதி மன்றத்திற்கு அலைத்து செல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட எண்பது லட்ச கைதிகளுக்கு 160 கோடி செலவாகிறது. கைதிகளுக்காக தேவை இல்லாமல் இத்தனை கோடி செலவு செய்கிறார்கள். தீர்ப்புகள் தள்ளிப் போடுவதால் அரசாங்கத்திற்கு இத்தனை கோடி செலவாகிறது. குறைவான காலத்தில் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினால் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் செலவுகள் குறையும்.

( தாய் மண் (இலக்கிய மாத இதழ்) : மார்ச், 2007 )

LinkWithin

Related Posts with Thumbnails