வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, June 20, 2016

இறைவி - திரைவிமர்சனம்

புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்ததால் இந்தப் படத்தை பார்க்க முடியவில்லை. இப்போது தான் பார்க்க நேரம் கிடைத்தது.

ஆண் கதாப்பாத்திரத்தை கொண்டு பெண்ணியத்தை பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த வித்தியாச திரைமொழிக்காகவே வாழ்த்தலாம். குழந்தைகள் தவிர்த்து குடும்பத்தோடு பார்க்கலாம்.

எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி நடிப்பை பற்றி பலர் பாராட்டிவிட்டார்கள். ஆதனால், அதைக் கடந்து மற்றவர்கள் சொல்லாததை சொல்ல விரும்புகிறேன்.



முதல் பாதியில் வரும் மலர் பாத்திரம் என்னை மிகவும் வசீகரித்தது. சினிமாவில் காதல் வேறு, காமம் வேறு என்று காட்டிய முதல் பாத்திரம் இது தான். “என் கணவனை உறுகி உறுகி காதலிச்சேன்” என்று சொல்லும் பெண், தன் உடல் தேவைக்கு ஒரு ஆண் தேடிக் கொள்வதை பல ஆண்களுக்கு பிடிக்காமல் போகலாம். வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண், இன்னொரு திருமணம் மூலம் தான் வாழ வேண்டும் என்று சமூகம் எதிர்ப்பார்ப்பதை உடைத்திருக்கிறார்.

அடுத்து வடிவுக்கரசி பாத்திரம். முதல் காட்சியில் வசனம் பேசிவிட்டு, படம் முழுக்க படுத்தப் படுக்கையில் இருக்கிறார். அவர் குணமடைவார் என்று கணவர் ராதா ரவி காத்திருக்கிறார். ஒரு குடும்பத்தலைவி இல்லையென்றால் அந்த குடும்பம் எப்படி சீரழியும் என்பதை அந்த பாத்திரத்தை வைத்து உணர்த்துகிறார்.

வாழும் வயதில் கணவனை பிரிந்திருக்கும் பெண்ணுக்கு எவ்வளவு போராட்டமோ, வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் மனைவியை பிரிந்து வாழும் கணவனின் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் என்பதை ராதாரவி பாத்திரம் காட்டுகிறது.

தயாரிப்பாளர் பாத்திரம் மட்டும் நிறைய லாஜிக் உதைக்கிறது. கடன் வாங்கி படம் எடுத்தவன், அரை வாங்கியதற்காக தானும் நஷ்டப்பட்டு, அடுத்தவனையும் அழிக்க நினைப்பானா ? என்பது சந்தேகம் தான்.

ஒரு ஆண் தவறு செய்யும் முன் தன்னை நம்பி ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உணர்ந்தால், பல தவறுகள் நடக்காது. அப்படி அந்தப் பெண்ணை நினைக்காமல் தவறு செய்ய தொடங்கினால், தன்னையும் மட்டுமில்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் சேர்த்து பாதிக்கும் என்பதை ‪‎இறைவி‬ காட்டியிருக்கிறது.

ஒரு ஆண்ணை தவறு செய்யாமல் இருக்க வைப்பதே ’பெண்’ தான். (தவறு செய்ய வைப்பதும் பெண் தான். ஆனால் இதில் காட்டவில்லை).

 படம் Slow தான். ஆனால், Bore இல்லை.

Thursday, June 16, 2016

விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் "போர்த்திரை "

சினிமா, வரலாறு இரண்டும் எனக்கு பிடித்தமான விஷயம். அதனால், விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் “போர்த்திரை” புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது.

வழக்கமான சினிமா விமர்சனம் போல் இல்லாமல், சினிமா எடுக்கப்பட்ட அரசியல் நிலவரத்தையும் சேர்த்து சொல்கிறார். அவர் முன்மொழியும் பல படங்கள் அந்த நாட்டின் அரசியல் புரியவில்லை என்றால், படத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது. ஒரு சில படங்கள் அவர் கூறிய அரசியல் பிரச்சனைக்காகவே பார்க்கலாம். 



ஹிட்லரையும், இரண்டாம் உலகப் போரை சுற்றியும் எடுக்கப்பட்ட பல படங்கள் பலருக்கு தெரிந்ததிருக்கும். ஆனால், வியட்நாம் போர், சீனா – ஜப்பான் போர் போன்ற யுத்தங்களை பேசும் படத்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புத்தகம் பல போர் படங்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. 

இறுதியில் எழுத்தாளர் சுஜாதாவிடம் வெளிநாட்டு நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் சொல்ல முடியாமல் தினறியது ‘நச்’. உண்மையில் தமிழ் இயக்குனர்கள் யாரும் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. சினிமா பிரியர்கள், வரலாற்று பிரியர்கள் இருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் !! 

 வாழ்த்துகள் விஜய் ஆம்ஸ்ட்ராங் !!

Friday, June 10, 2016

மிருகம் சொல்லும் Management கதைகள் - 12

பெரிய காட்டை ஆளும் சிங்கம், உலகில் தான் தான் பெரிய நீதிபதி என்ற கர்வம் இருந்தது. தவறு செய்பவர்கள் தண்டிக்க விதவிதமான தண்டமை முறையை கண்டுப்பிடித்து வந்தது.

முக்கியமான பொய் சொல்பவர்களை வெறிப்பிடித்த காட்டு நாய் ஒன்றை கடிக்க வைத்துக் கொன்று வந்தது. அதனால், அந்த காட்டில் சிங்கத்திற்கு எதிராக தவறு செய்யவே மற்ற மிருகங்கள் அஞ்சியது.

ஒரு முறை, சிங்கத்தின் மந்திரியான நரி பொய் சொன்னதை சிங்கம் கண்டுப்பிடிக்க, அதை கட்டி வைத்து வெறிப்பிடித்த நாய்யிடன் அடைக்க வேண்டும் என்கிறார். அப்போது, நரி “நான் தங்களிடம் நீண்ட நாட்களாக விஸ்வாசமாக இருந்திருக்கிறேன். என் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும். “ என்றது.



”உன் ஆசை என்ன ?”

“என்னை கொல்லப்போகும் நாய்க்கு நான் சேகவம் செய்து இறக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள்” என்றது.

சிங்கமும் சம்மதித்தது. நரி தினமும் அந்த நாய்க்கு உணவளித்து, குளிப்பாட்டி நட்போடு பலகியது.

பத்து நாள் கலித்து, சிங்கம் நரிக்கு தண்டனை அளிக்க வெறிப்பிடித்த நாய்யிடம் விட, அது கடிக்காமல் நரியின் கட்டை கடித்து காப்பாற்ற முயற்சித்தது.

சிங்கம் வியப்பாக பார்த்தது. நரி, “சிங்க ராஜா ! பல வருடங்களாக உங்களுக்கு சேவை செய்தேன். மரண தண்டனை வழங்கினீர்கள். இந்த நாய்க்கு பத்து நாட்கள் தான் சேவை செய்தேன். தனது நன்றியை காட்டியிருக்கிறது. பார்த்தீர்களா ?” என்றது.

சிங்கம் தன் தவறை உணர்ந்தது.

“உண்மை தான் மந்திரி. இனி பொய் சொல்பவர்கள் நாயிடம் விட மாட்டேன். அதற்கு பதிலாக முதலைகளிடம் விடுகிறேன்.” என்றது.

நரி அதிர்ச்சியடைய, தனது எடுப்பிடி சிங்கத்திடம் நரியை முதலை இருக்கும் இடத்தில் வீச உத்தரவிட்டது.

மேனேஜ்மெண்ட் நீதி : 

மேலாளர் முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்ற தான் நினைப்பார்.

Tuesday, May 24, 2016

Yes, I am Yasmin ! - டிடெக்டிவ்

பெண் துப்பறியும் நிபுணர்களை பற்றிய தமிழில் வந்த முதல் புத்தகம் என்று சொல்லலாம். என்ன தான் பெண்ணியம், பெண் உரிமை பேசினாலும் பெரும்பாலான பெண்கள் சமூகத்தில் ஆண் காட்டிய பாதையில் தான் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்களே அஞ்சக்கூடிய ‘ஜெம்ஸ்பாண்ட்’ வேலையான துப்பறியும் வேலையை தேர்ந்தெடுத்திருக்கிறார் யாஸ்மின். 



துப்பறியும் துறையில் தன்னை தேடி வந்த வழக்குகள், அதை எப்படி எதிர்கொண்டார், அதை கையாளும் போது சந்தித்த சவால்கள் என்று யாஸ்மின் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்தப் புத்தகத்தில் பெண் உளவாளி, RAW பற்றிய ஒரு சில தகவல்களும் உண்டு. 

யாஸ்மினின் வாழ்க்கை வரலாற்று நூலாக இருந்தாலும், வெளிநாட்டு உளவாளிகளை பற்றிய தகவல்கள் என்று இந்த புத்தகத்திற்கு தேவையில்லாதது என்று தோன்றுகிறது. 

யாஸ்மின்னை பேட்டிக் கண்டு சலீம் அக்பர் என்பவர் எழுதியிருக்கிறார். யாஸ்மின் நேரடியாக எழுதியிருந்தால் அல்லது அவரே நேரடியாக விளக்குவது போல் எழுதப்பட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். 

**
 Yes, I am Yasmin ! - டிடெக்டிவ் 
- சலீம் அக்பர்
- Rs.100

 இணையத்தில் வாங்க… 

Monday, May 23, 2016

புத்தக விற்பனை பற்றி வீ கேன் புக்ஸ்

நண்பர்களே, 

ஒரு புத்தகத்தில் விற்பனையாளர்களுக்கு வரும் லாபம் 25-30% மட்டுமே !! 

Maximum Sales Maximum Profit எல்லாம் மளிகைக் கடைக்கு பொருந்தும். புத்தக விற்பனைக்கு பொருந்தாது. மாதம் மாதம் ரூ.2000 வாங்குபவரா நீங்கள்... வேண்டாம் ஒரு முறை 2000 ஆர்டர் கொடுத்துப் பாருங்கள் அதிகப்படியாக 10-15% கொடுக்க முடியும். அதற்கு மேல் கூட எங்களால் தர முடியாது. தபால் செலவு கூட நீங்கள் தான் ஏற்க வேண்டியது இருக்கும். 

பதிப்பாளர் எங்களுக்கு கொடுக்கும் கழிவில் இருந்து தான் நாங்கள் உங்களுக்கு கொடுக்க முடியும். எங்கள் லாபம் அனைத்தும் கொடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஒரு சில புத்தகங்கள் அதிக கழிவு (50% வரை) வழங்குகிறோம் என்றால், பதிப்பாளர் குறிப்பிட்ட நூல்களை விற்று தருவதற்காக அதிக கழிவு எங்களுக்கு கொடுக்கிறார்கள். அதில் இருந்து நாங்கள் உங்களுக்கு கொடுக்கிறோம். அவ்வளவு தான். 

Flipkart / Amazon எப்படி கொடுக்கிறது என்று கேள்வி கேட்பீர்கள் ? 

இதை அவர்களிடம் நீங்கள் கேட்டால் பதில் வராது. Reliance போன்ற பெரிய நிறுவனத்துடன் ரோட்டில் விற்பனை செய்யும் வியாபாரியோடு ஒப்பிடுவதற்கு சமம். 

Flipkart / Amazon எல்லா தமிழ் புத்தகங்கள் கிடையாது. கிடைக்கவும் கிடைக்காது. காரணம், அவர்கள் கேட்கும் கழிவை எந்த பதிப்பாளர்களால் கொடுக்க முடியாது. வருடத்திற்கு 100 - 300 கோடி நஷ்டத்தில் அவர்களால் வெற்றிக்கரமாக இயங்க முடியும். அப்படி தான் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். என்னால் ரூ.100 நஷ்டத்தில் கூட இயங்க முடியாது. 

Flipkart / Amazon யில் 200 - 300 பேர் வேலை செய்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் முதலீடு வருகிறது. 

Wecanshopping.com - தமிழ் இணைய புத்தக அங்காடி தனி மனிதன் நடத்துவது. புத்தகம் வாங்கி, பேக்கிங் செய்வது, கஸ்டமரை தொடர்பு கொள்வது என்று நான் தனி மனிதனாக இயங்குகிறேன். wecanshopping.com என்ற இணையதளம் வைத்திருப்பதால், பெரிய நிறுவனம் எல்லாம் கிடையாது. 

உங்களுக்கு அதிக கழிவு ( 20% - 30% என்று வைத்துக் கொள்வோம் ) கொடுத்துவிட்டு சாப்பாட்டு நான் என்ன செய்யலாம் என்று நீங்கள் சொல்லுங்கள். ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள்.... 

நான் 
உங்கள் பணத்தை திருடவில்லை. 
நீங்கள் எனக்கு பிச்சைப் போடவில்லை !

- வீ கேன் புக்ஸ்

LinkWithin

Related Posts with Thumbnails