புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்ததால் இந்தப் படத்தை பார்க்க முடியவில்லை. இப்போது தான் பார்க்க நேரம் கிடைத்தது.
ஆண் கதாப்பாத்திரத்தை கொண்டு பெண்ணியத்தை பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த வித்தியாச திரைமொழிக்காகவே வாழ்த்தலாம். குழந்தைகள் தவிர்த்து குடும்பத்தோடு பார்க்கலாம்.
எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி நடிப்பை பற்றி பலர் பாராட்டிவிட்டார்கள். ஆதனால், அதைக் கடந்து மற்றவர்கள் சொல்லாததை சொல்ல விரும்புகிறேன்.
முதல் பாதியில் வரும் மலர் பாத்திரம் என்னை மிகவும் வசீகரித்தது. சினிமாவில் காதல் வேறு,
காமம் வேறு என்று காட்டிய முதல் பாத்திரம் இது தான். “என் கணவனை உறுகி உறுகி காதலிச்சேன்” என்று சொல்லும் பெண், தன் உடல் தேவைக்கு ஒரு ஆண் தேடிக் கொள்வதை பல ஆண்களுக்கு பிடிக்காமல் போகலாம். வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண், இன்னொரு திருமணம் மூலம் தான் வாழ வேண்டும் என்று சமூகம் எதிர்ப்பார்ப்பதை உடைத்திருக்கிறார்.
அடுத்து வடிவுக்கரசி பாத்திரம். முதல் காட்சியில் வசனம் பேசிவிட்டு, படம் முழுக்க படுத்தப் படுக்கையில் இருக்கிறார். அவர் குணமடைவார் என்று கணவர் ராதா ரவி காத்திருக்கிறார். ஒரு குடும்பத்தலைவி இல்லையென்றால் அந்த குடும்பம் எப்படி சீரழியும் என்பதை அந்த பாத்திரத்தை வைத்து உணர்த்துகிறார்.
வாழும் வயதில் கணவனை பிரிந்திருக்கும் பெண்ணுக்கு எவ்வளவு போராட்டமோ, வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் மனைவியை பிரிந்து வாழும் கணவனின் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் என்பதை ராதாரவி பாத்திரம் காட்டுகிறது.
தயாரிப்பாளர் பாத்திரம் மட்டும் நிறைய லாஜிக் உதைக்கிறது. கடன் வாங்கி படம் எடுத்தவன், அரை வாங்கியதற்காக தானும் நஷ்டப்பட்டு, அடுத்தவனையும் அழிக்க நினைப்பானா ? என்பது சந்தேகம் தான்.
ஒரு ஆண் தவறு செய்யும் முன் தன்னை நம்பி ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உணர்ந்தால், பல தவறுகள் நடக்காது. அப்படி அந்தப் பெண்ணை நினைக்காமல் தவறு செய்ய தொடங்கினால், தன்னையும் மட்டுமில்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் சேர்த்து பாதிக்கும் என்பதை இறைவி காட்டியிருக்கிறது.
ஒரு ஆண்ணை தவறு செய்யாமல் இருக்க வைப்பதே ’பெண்’ தான். (தவறு செய்ய வைப்பதும் பெண் தான். ஆனால் இதில் காட்டவில்லை).
படம் Slow தான். ஆனால், Bore இல்லை.
No comments:
Post a Comment