இறைவி படத்தின் Inspiration என்று பலர் கூறியதால் ,
படத்தை பார்த்த கையோடு இந்த நாவலை வாசித்துவிட்டேன்.
சுஜாதாவின் வழக்கமான மர்மம், நகைச்சுவை ஸ்கோப் இல்லாத கதைக்களன். ஆனால், வழக்கமான வேகம் கொண்ட எழுத்துநடை. ஒரு மணி நேரத்தில் வாசித்து முடிக்ககூடிய குறுநாவல்.
நாவலில் வரும் சோமுவின் பாத்திரமும், இறைவியில் விஜய்சேதுபதியின் பாத்திரம் ஒன்று தான். மீனா பாத்திரத்தில் அஞ்சலி, ஜகன் பாத்திரத்தில் பாபி சிம்ஹா, தேவராஜன் பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா காஸ்ட்டிங் செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு இயக்குனருக்கான கற்பனை திறனுக்கு எஸ்.ஜே.சூர்யா பாத்திரத்திற்கு கதை பகுதி உருவாக்கி படம் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதேப் போல், விஜய்சேதுபதி மலரோடு இருக்கும் உறவும் இயக்குனருடைய கற்பனை தான்.
க்ளைமாக்ஸ் தவிர்த்து நாவலில் இருப்பதை அனைத்தும் இறைவியில் இருக்கிறது. அப்படியென்றால், எப்படி Inspiration என்று சொல்ல முடியும் ?
நாவலை தழுவி திரைப்படம் எடுக்கும் போது அப்படியே காட்சிப்படுத்த முடியாது என்பது உண்மை தான். ஆனால், நாவல் வரும் நாயகனை இரண்டாவது கதாநாயகனாகவும், துணை பாத்திரத்தை முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகனாக்கியிருப்பதும் தான் ஏன் என்று புரியவில்லை. கதை தழுவல் தெரியக்கூடாது என்பதாலா ?
Inspiration என்ற வார்த்தையில் எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டிய சரியான அங்கிகாரம் கிடைக்காமல் செய்துவிடுகிறது. அதனால், ”ஜன்னல் மலர்” நாவலுடைய Inspiration தான் ”இறைவி” படம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இறைவி – Based on அல்லது Adapted from “ஜன்னல் மலர்” நாவல் என்று சொல்லுவதே சரி என்று தோன்றுகிறது!!
No comments:
Post a Comment