வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 21, 2016

இறைவியும், ஜன்னல் மலர் நாவலும் !!

‎இறைவி‬ படத்தின் Inspiration என்று பலர் கூறியதால் , படத்தை பார்த்த கையோடு இந்த நாவலை வாசித்துவிட்டேன். 

சுஜாதாவின் வழக்கமான மர்மம், நகைச்சுவை ஸ்கோப் இல்லாத கதைக்களன். ஆனால், வழக்கமான வேகம் கொண்ட எழுத்துநடை. ஒரு மணி நேரத்தில் வாசித்து முடிக்ககூடிய குறுநாவல். 



நாவலில் வரும் சோமுவின் பாத்திரமும், இறைவியில் விஜய்சேதுபதியின் பாத்திரம் ஒன்று தான். மீனா பாத்திரத்தில் அஞ்சலி, ஜகன் பாத்திரத்தில் பாபி சிம்ஹா, தேவராஜன் பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா காஸ்ட்டிங் செய்யப்பட்டிருக்கிறது. 

ஒரு இயக்குனருக்கான கற்பனை திறனுக்கு எஸ்.ஜே.சூர்யா பாத்திரத்திற்கு கதை பகுதி உருவாக்கி படம் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதேப் போல், விஜய்சேதுபதி மலரோடு இருக்கும் உறவும் இயக்குனருடைய கற்பனை தான். 

க்ளைமாக்ஸ் தவிர்த்து நாவலில் இருப்பதை அனைத்தும் இறைவியில் இருக்கிறது. அப்படியென்றால், எப்படி Inspiration என்று சொல்ல முடியும் ?

நாவலை தழுவி திரைப்படம் எடுக்கும் போது அப்படியே காட்சிப்படுத்த முடியாது என்பது உண்மை தான். ஆனால், நாவல் வரும் நாயகனை இரண்டாவது கதாநாயகனாகவும், துணை பாத்திரத்தை முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகனாக்கியிருப்பதும் தான் ஏன் என்று புரியவில்லை. கதை தழுவல் தெரியக்கூடாது என்பதாலா ? 

Inspiration என்ற வார்த்தையில் எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டிய சரியான அங்கிகாரம் கிடைக்காமல் செய்துவிடுகிறது. அதனால், ”ஜன்னல் மலர்” நாவலுடைய Inspiration தான் ”இறைவி” படம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

இறைவி – Based on அல்லது Adapted from “ஜன்னல் மலர்” நாவல் என்று சொல்லுவதே சரி என்று தோன்றுகிறது!!


Monday, June 20, 2016

இறைவி - திரைவிமர்சனம்

புத்தகக் கண்காட்சி சமயத்தில் வெளிவந்ததால் இந்தப் படத்தை பார்க்க முடியவில்லை. இப்போது தான் பார்க்க நேரம் கிடைத்தது.

ஆண் கதாப்பாத்திரத்தை கொண்டு பெண்ணியத்தை பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த வித்தியாச திரைமொழிக்காகவே வாழ்த்தலாம். குழந்தைகள் தவிர்த்து குடும்பத்தோடு பார்க்கலாம்.

எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி நடிப்பை பற்றி பலர் பாராட்டிவிட்டார்கள். ஆதனால், அதைக் கடந்து மற்றவர்கள் சொல்லாததை சொல்ல விரும்புகிறேன்.



முதல் பாதியில் வரும் மலர் பாத்திரம் என்னை மிகவும் வசீகரித்தது. சினிமாவில் காதல் வேறு, காமம் வேறு என்று காட்டிய முதல் பாத்திரம் இது தான். “என் கணவனை உறுகி உறுகி காதலிச்சேன்” என்று சொல்லும் பெண், தன் உடல் தேவைக்கு ஒரு ஆண் தேடிக் கொள்வதை பல ஆண்களுக்கு பிடிக்காமல் போகலாம். வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண், இன்னொரு திருமணம் மூலம் தான் வாழ வேண்டும் என்று சமூகம் எதிர்ப்பார்ப்பதை உடைத்திருக்கிறார்.

அடுத்து வடிவுக்கரசி பாத்திரம். முதல் காட்சியில் வசனம் பேசிவிட்டு, படம் முழுக்க படுத்தப் படுக்கையில் இருக்கிறார். அவர் குணமடைவார் என்று கணவர் ராதா ரவி காத்திருக்கிறார். ஒரு குடும்பத்தலைவி இல்லையென்றால் அந்த குடும்பம் எப்படி சீரழியும் என்பதை அந்த பாத்திரத்தை வைத்து உணர்த்துகிறார்.

வாழும் வயதில் கணவனை பிரிந்திருக்கும் பெண்ணுக்கு எவ்வளவு போராட்டமோ, வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் மனைவியை பிரிந்து வாழும் கணவனின் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் என்பதை ராதாரவி பாத்திரம் காட்டுகிறது.

தயாரிப்பாளர் பாத்திரம் மட்டும் நிறைய லாஜிக் உதைக்கிறது. கடன் வாங்கி படம் எடுத்தவன், அரை வாங்கியதற்காக தானும் நஷ்டப்பட்டு, அடுத்தவனையும் அழிக்க நினைப்பானா ? என்பது சந்தேகம் தான்.

ஒரு ஆண் தவறு செய்யும் முன் தன்னை நம்பி ஒரு பெண் இருக்கிறாள் என்பதை உணர்ந்தால், பல தவறுகள் நடக்காது. அப்படி அந்தப் பெண்ணை நினைக்காமல் தவறு செய்ய தொடங்கினால், தன்னையும் மட்டுமில்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் சேர்த்து பாதிக்கும் என்பதை ‪‎இறைவி‬ காட்டியிருக்கிறது.

ஒரு ஆண்ணை தவறு செய்யாமல் இருக்க வைப்பதே ’பெண்’ தான். (தவறு செய்ய வைப்பதும் பெண் தான். ஆனால் இதில் காட்டவில்லை).

 படம் Slow தான். ஆனால், Bore இல்லை.

Thursday, June 16, 2016

விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் "போர்த்திரை "

சினிமா, வரலாறு இரண்டும் எனக்கு பிடித்தமான விஷயம். அதனால், விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் “போர்த்திரை” புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது.

வழக்கமான சினிமா விமர்சனம் போல் இல்லாமல், சினிமா எடுக்கப்பட்ட அரசியல் நிலவரத்தையும் சேர்த்து சொல்கிறார். அவர் முன்மொழியும் பல படங்கள் அந்த நாட்டின் அரசியல் புரியவில்லை என்றால், படத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது. ஒரு சில படங்கள் அவர் கூறிய அரசியல் பிரச்சனைக்காகவே பார்க்கலாம். 



ஹிட்லரையும், இரண்டாம் உலகப் போரை சுற்றியும் எடுக்கப்பட்ட பல படங்கள் பலருக்கு தெரிந்ததிருக்கும். ஆனால், வியட்நாம் போர், சீனா – ஜப்பான் போர் போன்ற யுத்தங்களை பேசும் படத்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புத்தகம் பல போர் படங்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. 

இறுதியில் எழுத்தாளர் சுஜாதாவிடம் வெளிநாட்டு நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் சொல்ல முடியாமல் தினறியது ‘நச்’. உண்மையில் தமிழ் இயக்குனர்கள் யாரும் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. சினிமா பிரியர்கள், வரலாற்று பிரியர்கள் இருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் !! 

 வாழ்த்துகள் விஜய் ஆம்ஸ்ட்ராங் !!

Friday, June 10, 2016

மிருகம் சொல்லும் Management கதைகள் - 12

பெரிய காட்டை ஆளும் சிங்கம், உலகில் தான் தான் பெரிய நீதிபதி என்ற கர்வம் இருந்தது. தவறு செய்பவர்கள் தண்டிக்க விதவிதமான தண்டமை முறையை கண்டுப்பிடித்து வந்தது.

முக்கியமான பொய் சொல்பவர்களை வெறிப்பிடித்த காட்டு நாய் ஒன்றை கடிக்க வைத்துக் கொன்று வந்தது. அதனால், அந்த காட்டில் சிங்கத்திற்கு எதிராக தவறு செய்யவே மற்ற மிருகங்கள் அஞ்சியது.

ஒரு முறை, சிங்கத்தின் மந்திரியான நரி பொய் சொன்னதை சிங்கம் கண்டுப்பிடிக்க, அதை கட்டி வைத்து வெறிப்பிடித்த நாய்யிடன் அடைக்க வேண்டும் என்கிறார். அப்போது, நரி “நான் தங்களிடம் நீண்ட நாட்களாக விஸ்வாசமாக இருந்திருக்கிறேன். என் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும். “ என்றது.



”உன் ஆசை என்ன ?”

“என்னை கொல்லப்போகும் நாய்க்கு நான் சேகவம் செய்து இறக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதி தாருங்கள்” என்றது.

சிங்கமும் சம்மதித்தது. நரி தினமும் அந்த நாய்க்கு உணவளித்து, குளிப்பாட்டி நட்போடு பலகியது.

பத்து நாள் கலித்து, சிங்கம் நரிக்கு தண்டனை அளிக்க வெறிப்பிடித்த நாய்யிடம் விட, அது கடிக்காமல் நரியின் கட்டை கடித்து காப்பாற்ற முயற்சித்தது.

சிங்கம் வியப்பாக பார்த்தது. நரி, “சிங்க ராஜா ! பல வருடங்களாக உங்களுக்கு சேவை செய்தேன். மரண தண்டனை வழங்கினீர்கள். இந்த நாய்க்கு பத்து நாட்கள் தான் சேவை செய்தேன். தனது நன்றியை காட்டியிருக்கிறது. பார்த்தீர்களா ?” என்றது.

சிங்கம் தன் தவறை உணர்ந்தது.

“உண்மை தான் மந்திரி. இனி பொய் சொல்பவர்கள் நாயிடம் விட மாட்டேன். அதற்கு பதிலாக முதலைகளிடம் விடுகிறேன்.” என்றது.

நரி அதிர்ச்சியடைய, தனது எடுப்பிடி சிங்கத்திடம் நரியை முதலை இருக்கும் இடத்தில் வீச உத்தரவிட்டது.

மேனேஜ்மெண்ட் நீதி : 

மேலாளர் முடிவெடுத்துவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்ற தான் நினைப்பார்.

LinkWithin

Related Posts with Thumbnails