வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 20, 2015

காதல் கபடி !

Note : Inspired from பட்டுக்கோட்டை பிரபாகரின் “முதலாம் காதல் யுத்தம்” (சிறுகதை)


“விஷயம் தெரிஞ்சிடுச்சுல. அவன எப்படியாவது கட் பண்ணிடு” என்று போனின் எதிர்முனையில் குரல் கேட்டது. 

“என்ன.. கொலையா?” ஷாக்கானாள். 

 “கட் பண்ணனுமானா… கழட்டிவிடனும் சொன்னேன். இப்படி டியூப் லைட்டா இருக்க.அதான் அவன் உன் தலைமே நிக்குறான்” 

” சரி டி. “நாம லவ் பண்ண அப்புறம், எதுக்கு அவங்கள தனியா கொலை பண்ணனும்”. 

தனது தோழி இப்படி சொன்னதும் சொப்ணாவுக்கு சிரிப்பு வந்தது. எக்காரணத்திற்காகவும் தினேஷ்யிடம் சிரித்துவிடக் கூடாது என்பது தோழி யோசனை சொல்லியிருந்தாள். 

”சரி ! நா பேசிட்டு உனக்கு கால் பண்ணுறேன்.” என்று போன்னை துண்டித்தாள். சொப்ணாவுக்கு தினேஷ் மேல் கோபமாக இருந்தாள். அவள் தோழியின் யோசனை கேட்டப்பிறகு கோபம் அதிகமாகியிருந்தது. தினேஷ் பார்க்கிங் லாட்டில் வண்டியை வைத்துவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான். அப்போது, கதவு திறக்கும் போது தினேஷ் மீது கதவு இடித்தது.

”சாரி சார்… சாரி சார்…” என்று பதட்டமாக ஹோட்டல் சேகியூரிட்டி கூறினான்.  
தினேஷ் கோபப்படாமல் சிரித்தப்படி “இட்ஸ்.. ஒகே” என்று நகர்ந்தான். எதையுமே கூலாக கையாள வேண்டும் என்று நினைப்பவன். தினேஷ் சொப்ணா அமர்ந்திருக்கும் டேபிள் நோக்கி வந்தான். 

 “ஹாய் ! சொப்ணா” என்று கூறி சிரித்துக் கொண்டே அமர்ந்தான். சொப்ணா முகத்தில் புன்னகையில் இல்லை. எரிச்சல் குடி புகுந்திருந்தது. எதோ விபரிதமாக பேசப் போகிறாள் என்பதை அவள் முகத்தில் தெரிந்தது. ஆனால், கோபத்தில் சொப்ணா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். 

”என்ன சொப்ணா ! வரச் சொல்லிட்டு எதுவும் பேசாம இருக்க” என்றான். 

 ”Can we breakup?” என்றாள் சொப்ணா. 

 “வாட் ?” தினேஷூக்கு அதிர்ச்சியாக இருந்தது. 



“நாம பிரிஞ்சடலாமானு இங்கிலீஷ்ல கேட்டேன்?” பல்லை கடித்துக் கொண்டு கேட்டாள். 

எந்த விஷயத்தையும் ஒன்று இரண்டு முறை சொன்னால் தான் தினேஷ் செய்வான் என்பது சொப்ணாவுக்கு தெரியும். ஆனால், பிரிய வேண்டும் என்பதை கூடவா இரண்டு முறை சொல்ல வேண்டும் என்பது சொப்ணாவுக்கு எரிச்சலாக இருந்தது. 

 ”நான் பேசிட்டேன் தினேஷ். நீ தான் இப்போ பேசமா இருக்க?” 

‘காபி சாப்பிடலாமா?’ என்கிற கேள்விக்கு ‘சரி’ என்றோ, ‘வேண்டாம்’ என்றோ, கேள்வி தன் கேள்விக் குறியை அணிவதற்கு முன்பே பதிலைச் சொல்லிவிட முடியும். பல நாள் கைகளை வருடி கடற்கரை ரசித்த காதலியை எந்த காரணம் இல்லாமல் பிரியவதற்கு என்ன பதில் கூற முடியும். எப்போதும் போன்ற சந்திப்பு என்று தான் தினேஷ் நினைத்தான். இறுதி சந்திப்புக்காக சந்திப்பு என்பதை தினேஷ் எதிர்பார்க்கவில்லை. 

 இப்படி ஒரு முடிவுக்கு வர காரணம் என்ன ? இந்தக் கேள்விக்கு எப்படி உடனே பதில் சொல்வது? அதற்குக்குள் சர்வர் வந்து நின்றான். 

”சார் ! யுவர் ஆர்டர்” 

இரண்டு கேள்விகளுக்கு எந்த கேள்விக்கு பதிலளிப்பது தினேஷ் முழித்தான். 

முதலில் சர்வரை அனுப்புவோம் என்று, “இரண்டு ஸ்வீட் கார்ன் சூப்” என்றான்.  
“இல்ல.. எனக்கு ஸ்வீட் கார்ன் வேண்டாம். டோமேட்டோ ஹாட் சூப்” என்றாள்.

சர்வர் இருவரை பார்த்து சிரித்தான். அவன் சொப்ணாயை பார்த்து வழிந்தது, தினேஷ் கோபத்தை வர வழைத்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தான். 

 “ஹலோ ! சொல்யாச்சுல. ஸ்விட் கார்ன், டோமேட்டோ ஹாட் சூப் கொண்டு வாங்க..” என்று கூறி தினேஷ் சர்வரை அனுப்பினான். 

சர்வர் சென்ற பிறகு, “என்னோட இண்டர்ஸ்ட் தெரியாம நீயே எப்படி ஆர்டர் பண்ணுவ” என்று சொப்ணா சீறினாள். 

“உனக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்குமே சொன்னேன்.” 

“இப்போ புடிக்கல..” 

 “ஸ்வீட் கார்ன் சூப்பா… இல்ல நானா ?” என்றான் தினேஷ். 

சொப்ணா முறைத்தாள். 

“ஏன் சொப்ணா. என்னாச்சு ?” சொப்ணா மௌனமாக இருந்தாள். 

தினேஷ் மீது இருக்கும் கோபத்தை வெளியே காட்டிவிடக் கூடாது எச்சரிக்கை உணர்வா அல்லது பொது இடம் என்கிற உணர்வா என்று தெரியவில்லை. பேசும் ஒவ்வொரு வார்த்தையை வீணாக்கக் கூடாது, அதே சமயம் சொல்ல வந்தது சரியாக சொல்லிவிட வேண்டும் என்பதில் சொப்ணா கவனமாக இருந்தாள். 

 ”நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”. கோபம் இப்போது அதட்டலாக மாறியிருந்தது. 

 ”நீயும் தான் சொல்லலை. பேசாம இரண்டு பேரும் காரணம் சொல்ல வேண்டாம். அப்படி சூப் குடிச்சுட்டு, பீச்சுக்கு போவோமா” என்றான். 

சொப்ணா தினேஷிடம் ரசிப்பது இந்த குணத்தை தான். எந்த பிரச்சனையையும் கேப்டன் தோனி போல் நடந்துக் கொள்வான். ஆனால், தற்சமயம் இந்த குணம் சொப்ணாவை கோபத்தை அதிகப்படுத்தியது. 

”நாம பிரியலாம் சொல்றேன். அதுக் கூட உனக்கு விளையாட்ட தெரியுதா..? 

“என்ன காரணம் சொல்லாம நீ பேசும் போது, எப்படி ரியாக்ட் பண்ணனும் தெரியல..” 

”காரணம் தெரியாதா?” 

”உன் மனதுசுல இருக்குற காரணம் தெரியாது.” 

” வசந்தி. அவ தான் காரணம். தோழி, தங்கச்சி மாதிரி சொல்லி தப்பிக்க பாக்காதே !” 

சொப்ணா கோபமாக பேசுவதை பக்கத்து டேபிள் இருக்கும் குழந்தை அமைதியாக பார்த்தது. தினேஷ் அந்த குழந்தையை பார்த்து சிரித்து ஒன்றும் நடக்காதது போல் காட்டிக் கொள்ள நினைத்தான். 

“கொஞ்சம் அமைதியா பேசு. இது ஹோட்டல். மத்தவங்க பாக்குறாங்க. அசிங்கமா நினைக்கப் போறாங்க” 

”நீ நடந்துக்கிட்டது அசிங்கமா இல்ல, நான் பேசறதுதான் அசிங்கமா இருக்கா?”

”ஒ.கே. ஒரு காலத்துல நா அவள காதலிச்சேன். அப்புறம் பிரிஞ்சிட்டோம். நா தேவதாஸ் அலையாம உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கனும் நினைக்கிறது தப்பா ? ”

“நீ பண்ண தப்ப நியாயப்படுத்தா தினேஷ்?”

”தப்பே பண்ணல்ல. எப்படி நியாயப்படுத்த முடியும்!” சொப்ணாவின் கையில் ஹோட்டல் மேஜை மீது தட்டு மீது இருந்தது. கோபத்தில் தினேஷ் தலை உடைத்துவிடலாமா என்று யோசித்தாள். செய்த தவறை விட அவன் பேசிய நியாயம் தான் அவளுக்கு உருத்தலாக இருந்தது. சொப்ணா தினேஷிடம் இதற்கு மேல் பேச வேண்டுமா என்ற எண்ணம் தோன்றியது. 

”காதல் தப்பில்லனா. ரெண்டாவது காதல். மூனாவது காதல் எப்படி தப்பாகும் ?”

“பொறுக்கி தனத்துக்கு இப்படி ஒரு விளக்கத்த யாராலும் கொடுக்க முடியாது “

“இது பொறுக்கி தனம்னா. ஒரு கம்பேனியில வேலைவிட்டு அனுப்பும் போது இன்னொரு கம்பேனிக்கு வேலைக்கு போறவங்களும் பொறுக்கிங்களா ?”

 “அப்போ நா போனாலும் இன்னொருத்திய லவ் பண்ணுவ...” 

“சார் ! ஹார்ட் சூப் இல்ல. வேற ஏதாவது சூப் ?” சர்வர் இடையில் நுழைந்தான். மீண்டும் இரண்டு கேள்வி. எதற்கு பதில் சொல்வது ?. 

”சொப்ணா ! வேற எதாவது சூப் வேணும்னா சொல்லு…” என்று தினேஷ் கேட்டான். “நீ பதில் சொல்லாத வரைக்கும் சர்வர் உன்ன பார்த்து வழிவான்” என்று தினேஷ் மனதில் சொப்ணாக்கு சொல்லுவதுப் போல் சொல்லிக் கொண்டான். 

 “எனக்கு ஹாட் சூப் தான் வேணும்” என்று சொப்ணா உறுதியாக கூறினாள்.

“மேடம் ! எல்லா சூப்புமே ஹாட்டா தான் இருக்கும்”. சொப்ணா கோபம் இன்னும் தலைக்கேறியது. 

 “இருக்குற பிரச்சனையில் இவன் வேற நேரம் காலம் தெரியாம மொக்கை பொடுறான்.” ஒரு வேலை சொப்ணாவை பிரிய நேர்ந்தால் கண்டிப்பாக இந்த சர்வரை ஒரு வழி செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ”யோவ் ! நான் ஆர்டர் பண்ண ஸ்வீட் கார்ன் சூப் மட்டும் கொண்டு வா…” என்று சர்வரிடம் கோபமா கூறி அனுப்பினான். 

பக்கத்து டேபிள் குழந்தை கையில் இருப்பதை சாப்பிட்டப்படி கூர்மையாக கவனிக்கிறது. சர்வர் சென்றப் பிறகு, “பி பிராக்டிக்கல் சொப்ணா” தினேஷ் அவளை சமாதானப்படுத்த முயற்சித்தான். 

”நமக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் மறைச்சிருப்பியா?” மீண்டும் அதே கேள்வியை சொப்ணா கேட்டாள். 

”ஷ்யூர்! சொல்லுற அளவுக்கு இது பெரிய விஷயம் இல்ல.” 

”ஆமா. பல பேர காதலிக்கிறது ஆம்பளைகளுக்கு பெரிய விஷயம் இல்லாம இருக்கலாம். பொம்பளைக்கு அப்படியில்ல” 

”நீ எவ்வளவு கோபப்பட்டு பேசினாலும் இந்த விஷயத்துல எனக்கு கோபம் வராது சொப்ணா”. தினேஷ் சிரித்துக் கொண்டே கூறினான். 

”என் கோபம் நியாயமானது நீ ஒத்துக்கிற” 

”அர்த்தமில்லாத கோபம். நா பெரிசா எடுத்துக்கல” 

”முதல் காதல் விஷயத்த விட நீ பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு.” 

”உன் கேள்வி தாக்குதல்ல இருந்து என் தற்காப்பு பண்ணிக்குறேன்.” 

”செஞ்ச தப்புக்கு சாரி சொல்லும் நாகரிகம் இல்ல. குறைஞ்ச பட்சம் வசந்தி பிரிஞ்ச காரணத்தையாவது விளக்கி நியாயப்படுத்துவ எதிர்ப்பார்த்தேன். அதுவும் செய்யல. யூ டிஸ் அப்பாயிண்டட் மீ” 

”காரணத்த தெரிஞ்சு என்ன பண்ணப் போற சொப்ணா ?” 

“எந்த காரணத்துக்காக வசந்திய பிரிஞ்சியோ அதே காரணத்துக்காக என்ன பிரிய மாட்டேனு என்ன நிச்சயம் தினேஷ்.” 

 சொப்ணா வார்த்தையில் பிரிந்துவிடலாம் என்று கூறினாலும், உள்ளத்தில் அப்படி நினைக்கவில்லை என்பது இந்த கேள்வியில் உணர முடிகிறது. இன்செக்யூராக உணர்கிறாள். வசந்தி பிரிந்ததைப் போல அவளை பிரிந்துவிடக் கூடாது நினைக்கிறாள் என்பது தினேஷுக்கு புரிகிறது. தானும் எக்காரணத்திற்காகவும் கோபத்தில் வார்த்தையைக் கொட்டிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். 

”முடிவா என்ன சொல்ல வர தினேஷ்.” 

 “பிரியுற முடிவ மாத்திக்க சொல்லுறேன். சேன்ஜ் யூவர் டிசிஷன் சொல்றேன்.”

“அவர்ஸ் இருந்து யுவர்ஸ் ஆயிடுச்சு. அது தான் டிசிஷன்.” 

”இந்த முடிவுல உனக்கு சந்தோஷம் இருக்குனு நீ சொல்லு.” 

“மனசுக்கு புடிச்ச பொண்ணுக்கிட்ட பொய் சொன்னது உன் மனச உருத்தவே இல்லை. இப்படிப்பட்ட ஆள் கூட வாழனும் நினைக்கிறியா?” 

”மனசுக்கு புடிச்ச பொண்ணு கஷ்டப்படக் கூடாது மறைச்சேன். தப்பு நீ நினைக்கிறீயா?” 

சொப்ணா மவுனமானாள். 

 “என் காதல் விஷயம் தெரிஞ்சுல நீ சந்தோஷ்ப்பட்டியா. இந்த நிமிஷம் வைக்கும் உன்னையும் கஷ்டப்படுத்தி, என்னையும் கஷ்டப்படுத்துற. அப்படிப்பட்ட விஷயத்த உன் கிட்ட எப்படி சொல்ல சொல்லுற.” 

 ”வாழ்க்கை முழுக்க உனக்கு சந்தோஷம் தரனும் நினைச்சேன். அது தப்புனு சொல்லுறீயா? நா சாரி சொல்லுறதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, நா சொன்னது அப்புறம் நீ நார்மல்ல இருக்க மாட்ட. நா சொல்லப் போற சாரிய விட நா மறைச்சதுல இருந்த காதல்ல நீ மொதல்ல புரிஞ்சிக்கனும். ”

சொப்ணாவின் கண்கள் மெல்ல கலங்க தொடங்கியது. 

 ”வாழ்க்கை முழுக்க நாம நிறைய சாரி சொல்லுற தருணங்கள பாக்கனும் ஆசைப்படுறேன். ” சொப்ணாவால் எதுவும் பேசமுடியவில்லை. 

சர்வர், “ஒன் ஸ்வீட் கார்ன் சூப்” என்று தினேஷ் முன் வைக்கிறான். 

சொப்ணா தினேஷின் அனுமதியின்றி எடுக்கிறாள். ”இன்னொரு பவுல் கொண்டு வாங்க…" என்று சர்வரிடம் கூறினாள். 

சர்வர் , “இன்னொரு ஸ்வீட் கார்ன் சூப்பா?” “இல்ல... Empty bowl. நாங்க ஒன் பை டூ சாப்பிடுறோம்” என்று சிரித்தப்படி கூறினாள். தினேஷ்வும் சிரித்தான். சர்வர் தலை சொரிந்துக் கொண்டு சென்றான். 

“சூப் ஒன் பை டூ ஒ.கே. நீ கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்ல..”

”நாம என்ன பேசினோம்?” 

”பிரிஞ்சிடலாமானு கேட்டியே…” 

”அப்படி பேசுனோமா ?” என்று குறும்பாக சொல்லி பக்கத்து டேபிளை பார்த்தாள். பக்கத்து டேபிளில் இருக்கும் குழந்தை அவர்களை பார்த்து கைத்தட்டி சிரித்தது. 

சொப்ணா பிரெண்ட் போன் செய்தாள், அவள் எடுக்காமல் அந்த அழைப்பை தூண்டித்தாள்.

கல்லூரி நாட்களில் மனோகருடன் இருந்த காதலை தினேஷிடம் கூறிவிட வேண்டும் என்று சொப்ணா பல நாட்களாக நினைத்தாள். கடைசி வரை தினேஷிடம் சொல்லக் கூடாது என்று இப்போது முடிவெடுத்தாள். தினேஷ் மீது இருக்கும் காதல் ஒரு காரணம். ஆண்கள் என்றுமே ஆண்கள் என்பது இன்னொரு காரணம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails