சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’
சா.கந்தசாமியின் ‘தொலைந்து போனவர்கள்’
வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்...’
சிவ சங்கரின் ‘ஒரு மனிதனின் கதை’
நீல.பத்மநாபனின் “தலைமுறைகள்’
அகிலனின் "சித்திரப்பாவை
ஜெயகாந்தனின் "பாரீசுக்குப் போ"
இப்படி தூர்தர்ஷனின் வந்த தொலைக்காட்சி தொடர் சி.டி கிடைக்க வாய்ப்பிருக்கிறதா ? யாராவது இணைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இன்று 1000 எபிசோட் கொண்ட நூறு சீரியல் இருந்தாலும் 26 வாரம் வந்த இந்த தொடர்களுக்கு நிகராக இருக்க முடியாது.
மூப்பது வருடங்களுக்கு முன்பு “உண்மையே உன் விலை என்ன?”, “துக்ளக்” போன்ற நாடகங்களை படமாக எடுக்க தெரிந்த சோவுக்கு “எங்கே போகிறான் பிரமணன்” நாவலை தொடராக எடுக்கத் தெரியவில்லை. கலைஞரின் “ரோமாபுரி பாண்டியன்” தொடரும் அப்படி தான் இருக்கிறது.
மேகா சீரியல் பார்த்து பெண்கள் கெட்டது போல், பல இயக்குனர்களும் கெட்டு போய் இருக்கிறார்கள். அவர்களுக்கு மேல் குறிப்பிட்ட தொடர்கள் ஒரு Reference ஆக இருக்கும்.
Youtube ல் தேடினால் பல பழைய இந்தி சீரியல் கிடைக்கும் அளவிற்கு தமிழ் தொடர்கள் கிடைக்கவில்லை. அதை பார்த்தாலாவது ஒரு கதையை எப்படி தொடராக எடுக்க முடியும் என்கிற பாடம் டி.வி இயக்குனர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
நாவலை திரைப்படமாக எடுப்பதை விட, அதன் சாரம் கெடுக்காமல் தொலைக்காட்சி தொடராக எடுப்பது சுலபம். அந்த பணியை இன்று இருக்கும் 30 தமிழ் சேனல்கள் யாராவது ஒருவர் செய்தால் நன்றாக இருக்கும்.
உண்மையில், 80, 90களில் எடுக்கப்பட்ட 26 வாரத் தொடர்கள் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம் !!
No comments:
Post a Comment