வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, June 18, 2014

சினிமா 1913 -2013 – 6. இயக்குனர்களின் சினிமா

"சார் ! நீங்க நூறு பேர ஒரு கொம்பால சுத்தி சுத்தி அடிக்கிறது. அதுலையும் கடைசி பத்து பேரு உங்க சுண்டு விரல் பட்டதும் விழுந்துடுறாங்க..."

 "இந்த படத்துல மூனு ஹீரோயின். மூனு பேரு உங்கள மாத்தி மாத்தி லவ் பண்ணுறாங்க. ஆனா, நீங்க கண்பார்வையில்லாதவளுக்கு வாழ்க்கை கொடுக்குறீங்க.."

 "உங்க அப்பா, அம்மாவ ஒருத்தர் கொன்னுடுறான். அவன நீங்க வளர்ந்து அப்புறம் பழி வாங்குறீங்க" 

“ஒரே பாட்டுல பெரிய பணக்காரர் ஆகுறீங்க..”

 தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்களின் இன்றைய நிலை இது தான். கதாநாயகர்களுக்கு என்று பத்து கதைவைத்து திருப்பி திருப்பி எடுத்து, தங்கள் நாயகர்களை திருப்தி படுத்துகிறார்கள். நாயகர்களை சந்தோஷப்படுத்துவது போல் கதை சொல்லிவிட்டால் சினிமாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று நிலை. நாயகன் சம்மதித்துவிட்டால், தயாரிப்பாளரும் தானாகவே வந்துவிடுகிறார். ஆனால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தான் சலித்துவிட்டது.

 சினிமாவை தொடங்கிய காலத்தில் இயக்குனர்கள் தான் பிரதானம். இயக்குனர் சொன்னதை செய்வார்கள். நடிகர், நாயகிகள், மற்றவர்கள் அனைவரும் அவர் சொல்லும் வேலை தான் செய்பவர்கள். இன்றும் அப்படி தான். ஆனால், படப்பிடிப்பு தளங்களில் தயாரிப்பாளர், இயக்குனர்கள் காட்டிலும் நாயகனுக்கு தான் அதிக மரியாதை வழங்கும் சூழ்நிலை.

 1930, 1940 களில் இயக்குனர்களுக்கான சினிமா இல்லை. தியாகராஜர் பாகவதர், சின்னப்பா போன்றவர்களுக்கு மவுசு இருந்தாலும் தின வேலைகளின் நடுவில் திரைப்படத்திற்கு செலவு செய்து படம் பார்க்கும் அளவிற்கு இல்லாத காலக்கட்டம். சினிமா வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இல்லாத காலக்கட்டத்தில் மிக முக்கியமாக திகழ்ந்த இயக்குனர்களை பார்ப்போம்.

ராஜா சாண்டோ 



  புதுகோட்டையில் பிறந்த ராஜா சாண்டோ அவர்கள் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முகம். மௌனப்படக் காலங்களில் இருந்து மறக்க முடியாத சகாப்தம். இன்று பல இயக்குனர் தயாரித்து நடிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ராஜா சாண்டோ தான் முன்னோடி.

 தமிழ் சினிமாவில் முத்த காட்சிகளை அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இதிகாசப் படங்களில் இருந்த தமிழ் சினிமாவை சமூகக் கதைகளை படமாக்கினார். "உங்கள் கதையை படமாக பார்க்க தவறாதீர்கள்" என்று விளம்பரப்படுத்தினார். தமிழ் சினிமாவின் எடுக்கப்பட்ட மௌனப்படங்கள் இப்போது ஒன்று கூட காணக்கிடைக்கவில்லை என்றாலும், இவரைப் பற்றிய பதிவுகள் மட்டும் அழிந்து போகவில்லை.

 ’பக்த போதனா’ (1922) மௌனப் படத்தின் மூலம் நடைக்க தொடங்கியவர், 'ஸ்நேக் ஜோதி' (1928) என்ற மௌனப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். பேசும் படம் வந்த பிறகு தமிழ், ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி நடித்திருக்கிறார். ‘சந்திரகாந்தா’ என்ற படத்திற்கு திரைக்கதையும் அமைத்திருக்கிறார்.

 இவர் இயக்கிய கடைசி படம் தியாகராய பாகவதர் நடித்த 'சிவகாமி' (1943). அந்த படத்தில் தயாரிப்பாளருடன் கருத்துவேறுபாட்டோடு படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இறுதியில் அந்தப்படத்தின் தயாரிப்பாளரே இயக்க வேண்டியதாக இருந்தது.

40, 50 களில் இருந்த மிகப் பெரிய சினிமா கலைஞர்கள் எல்லாம் இவரோடு பணியாற்றியிருக்கிறார்கள். தமிழக அரசு இவர் பெயரில் வருடா வருடம் தமிழ் சினிமாவுக்கு முக்கிய பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

கே.சுப்பிரமணியம்

 பிரபல பரத கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை. ராஜா சண்டோவின் மௌனப்படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்.

 'பவளக்கோடி' படத்தின் மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். அந்தபடத்தில் தான் எம்.கே.தியாகராய பாகவதரும் அறிமுகமானர். தமிழ் சினிமாவில் முதல் தடை செய்யப்பட்ட படமான 'தியாக பூமி' படத்தை இயக்கியவரும் இவர் தான். பாலயோகி, சேவா சாதனம் போன்ற படங்களையும்இயக்கியிருக்கிறார்.

எல்லி டங்கன் 



 கே.பி.சுந்தரம்மாளுக்கு ஒரு லடசம் ரூபாய் சம்பளம் வழங்கியதாக சொல்லும் ‘நந்தனார்’ (1935) படம் தான் இவருடைய முதல் படம். ஆனால், இயக்குனரின் பெயர் மனிக் லால் தண்டோன் என்பவர் இருந்தது. அதன் பின் இவர் இயக்கி, எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதிலீலாவதி’ (1936) படம் இவருக்கு அதிக பெயர் எடுத்துக் கொடுத்தது.

 அமெரிக்காவில் பிறந்த டங்கன் அவர்கள் தனது நண்பரோடு இந்திய சினிமாவில் பணியாற்றத்தொடங்கினார். பின்னாளில், 1950ல் வரை தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக மாறிவிட்டார். இரு சகோதரர்கள், அம்பிகாபதி, மீரா, மந்திரி குமாரி, பொன்மூடி போன்ற பல படங்களில் தமிழில் இருக்கியிருக்கிறார். 1950களுக்கு பிறகு ஆங்கில படங்கள் இயக்குவதில் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார்.

ஆர். பத்மநாபன் 

 1930களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர். ஆரம்பத்தில் திரைப்படங்களில் விநியோகம் செய்வதில் தொடங்கிய இவரது திரைப்பயணம் திரைப்படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்தார். சேது பந்தம், ஆசை, துரோபதி வஸ்த்ராபிஹாரம் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

டி.ஆர். சுந்தரம் 



இன்று தமிழ் சினிமாவில் எத்தனையோ கார்ப்பிரேட் நிறுவனங்கள் படங்களை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் கார்ப்பிரேட் கலாச்சாரம் இல்லாத காலத்தில் கார்ப்பிரேட் நிறுவனம் போல் ‘மார்டன் தியேட்டர்’ நிர்வாகம் செய்திருக்கிறார். இரண்டு மாதத்திற்கு ஒரு படமாவது மார்டன் தியேட்டரில் மூலம் வெளிவரும் அளவிற்கு அவரது நிறுவனம் செயல்பட்டது.

 சதி அகால்யா, பத்ம ஜோதி , மாணிக்கவாசகர், உத்தம புத்திரன் போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். திரையுலகின் தயாரிப்பாளர்கள் தான் ‘முதலாளி’. ஆனால், தமிழ் திரையுலகில் முதலாளி என்று கூறினால் அது டி.ஆர்.சுந்தரம் அவர்கள் தான். இன்னும் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். படச் சுருல் அழிந்தது போலவே அவர்களுடைய பெயர்களும் அழிந்துவிட்டது. ஒரு படத்தின் வெற்றி இயக்குனர் கையில் இருந்தாலும், வியாபாரத்திற்கு நாயர்கள் நம்பி தான் இருக்கிறது.

அதையும் மீறி சில இயக்குனர்கள் ரசிகர்களுக்கான படங்களை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, மே இதழ், 2014

Tuesday, June 17, 2014

உல்லாசக்கப்பல் பயணம் நூல் வெளியீட்டு விழாவின் வீடியோ !

யுவ கிருஷ்ணாவின் வரவேற்புரை




நூல் குறித்தும், பயணங்களை பற்றியும் பத்ரி பேசியது



நூல் குறித்தும், பெண் எழுத்தாளர் பற்றியும் சல்மா பேசியது




நூலை இணையத்தில் வாங்க...


Friday, June 13, 2014

சினிமா 1913 -2013 – 5. ஆவணப்படங்கள்

(Disclaimer : இது என்னுடைய தேடலின் பட்டியல். இன்னும் நல்ல ஆவணப்படங்கள் இருக்கிறது. விடுப்பட்டிருந்தால் அது என்னுடைய தேடலின் குறையே !)

குடும்ப நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பது, திருமணத்தை வீடியோ படம் பிடிப்பது, குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று நம் வாழ்நாளில் பசுமையான நினைவுகளை பதிவு செய்து அன்றாட விஷயம். தங்கள் வாழும் நாட்களின் நினைவுகளை பதிவு செய்வது, பின்னாளில் அதுவே ஆவணமாக மாறுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதராஸ் மகாணத்தில் வெள்ளையர்கள் எடுத்தப்படம், சென்னை எப்படி இருந்ததற்கு காட்டுகிறது. ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நடத்தும் போது எடுத்தப்படம், அணு ஆயுதத்தின் விபரிதத்தை எதிர்காலத்திற்கு சொல்கிறது. ஈழத்தில் ஏழுபதுகளில் எடுக்கப்பட்ட ஒரு படம் யாழ்பாணம் பல்கலைக்கழகம் இருந்தத்தற்கு சாட்சியாக இருக்கிறது.

பண்டைய பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டிருந்தால் எவ்வளவு ஆவணமாக இருந்திருக்கும் பலருக்கு தோன்றும். இன்று விடைத் தெரியாத பல கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும். அப்படி ’சினிமா’ என்ற ஒளி பொழுதுப்போக்கு சாதனமாக மட்டுமில்லாமல் முந்தைய வரலாற்றை பதிவு செய்யவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல பாடமாகவும் பல ஆவணப்படங்கள் இருகின்றன.




வியாபார நோக்கம் இல்லாமல் முடிந்தவரை வரலாற்றை பதிவு செய்தும், எதிர்காலத்தில் கொண்டு செல்லவும் உதவியாக இருந்திருக்கிறது. திரைப்படங்களுக்கு இருக்கும் வணிகம் இதற்கு இல்லாததால் ஆவணப்படம் எடுப்பவர்கள் பல சோதனைகள் சந்திக்க வேண்டியது தான் இருக்கிறது.

இந்தியாவின் முதல் ஆவணப்படம் உண்மை நிகழ்வுகளை படம் எடுப்பது என்கிற ரீதியிலே எடுக்கப்பட்டது. டாக்டர் ஆர்.பி.பராஞ்சபே (இவர் இயக்குநர் சாய் பராஞ்சபேயின் தாத்தா) என்ற வழக்கறிஞருக்கு பம்பாய் சந்பாத்திக் கடற்கரையில் பொதுமக்கள் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்வை 1901-ஆம் ஆண்டு ஹரிசந்திர சகாரம் பட்வடேகர் என்பவர் படமாக எடுத்தார். நூறு வருடங்கள் பம்பாய் சந்பாத்திக் கடற்கரை, பொது மக்கள் கூட்டம் போன்ற விஷயங்களில் இந்தப் படம் ஆவணமாக இருக்கிறது.

இந்திய முதல் திரைப்படத்தை எடுத்த பால்கே, தான் படம் எடுப்பதை கேமிரா மூலம் பதிவு செய்திருக்கிறார். படக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது, பிலிம் ரோல் சரிப்பார்ப்பது என்று மௌனப்படத்தின் காலத்திலேயே பதிவு செய்திருக்கிறார். இதை பாடம் வகை சேர்ந்த படம் என்று சொல்லலாம். இன்று, தங்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பதை படம் பிடித்து பட விளம்பரத்து பயன்படுத்துவதை பார்க்கிறோம். ஷங்கர் முதல் அறிமுகமாகும் இயக்குனர்கள் வரை இதை கையாள்கிறார்கள். சன் டி.வி, விஜய் டி.வியில் படப்பிடிப்பு பற்றி அனுபவங்களை பகிரும் போது பயன்படுத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னோடியாக பால்கே இருந்திருக்கிறார்.

1903 முதல் 1911 வரை எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் படங்களின் நிகழ்வுகள் சம்மந்தப்பட்டது தான். இந்திய அரசரின் திருமண விழாக் காட்சிகள், டெல்லி தர்பார் காட்சிகள், தசரா திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின், தினசரி வாழ்க்கை காட்டும் படங்களாக எடுக்கப்பட்டன.

தமிழ் சினிமாவில் ஆவணப்படங்களுக்கும், குறும்படங்களுக்கும் வரவேற்பு இல்லாதக் காலத்தில் அதற்காக பாடுப்பட்டவர் பீ.லெனின் அவர்கள். எடிட்டிங் துறையில் பிரபலம் என்றாலும், குறும்படங்கள் இயக்கியிருப்பது பலருக்கு தெரியாது. குத்துச்சண்டை வீரனைப் பற்றி அவர் இயக்கிய ‘நாக் அவுட்’ குறும்படம் பல விருதுகள் பெற்றுள்ளது.

வருடம் தோறும் லெனின் அவர்களை கௌரவிப்பதற்காக தமிழ் ஸ்டூடியோ ‘லெனின் விருது’ என்று சிறந்த ஆவணப்பட இயக்குனர்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆம்ஷன் குமார், ஆர்.ஆர்.சீனிவாசன், லீனா மணிமேகலை போன்றவர்கள் இந்த விருதை பெற்றுள்ளார்கள்.

தமிழ் ஆவணப்படங்கள் உலகளவில் எடுத்து சென்ற பெருமை சொர்ணவேல் அவர்களுக்கு இருக்கிறது. இவர் இயக்கிய தங்கம், வில், ஐ.என்.ஏ, கார்கில் போன்ற ஆவணப்படங்கள் மிக முக்கியமானவை.



முன்பெல்லாம் பல ஆவணப்படங்களை பொதிகைத் தொலைக்காட்சி மட்டும் பார்க்க முடிந்தது. சமீபத்தில் தந்தி டி.வியில் முருகன், சாந்தன், பெறளிவாணன் போன்றவர்களின் தூக்கி தண்டனையை ரத்து செய்வதாக எடுப்பப்பட்ட ‘உயிர்வலி’ ஆவணப்படம் போட்டிருக்கிறார்கள். இப்படி ஆவணப்படத்திற்கு ஊடகங்களில் ஆதரவு கிடைப்பது மிக சொற்பமே !

தமிழில் எடுக்க வேண்டிய ஆவணப்படங்கள் இன்னும் நிறைய இருந்தாலும், அதை பயன்படுத்திக் கொள்ள இன்றைய ஊடகங்கள் தயாராக இல்லை. அதை பெரிதாக அங்கிகரிக்கவும் இல்லை என்பது தான் உண்மை. இன்று பல தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் இருக்கின்றன. தமிழில் வரும் ஆவணப்படங்களை அவர்கள் ஒளிப்பரப்பினால், ஆவணப்பட எடுப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

முன்பு 1967ல் ஆவணப்படத்திற்கு பிலிம் பேர் விருதுகள் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. எதோ சில காரணங்களுக்காக 1998ல் அந்த விருது வழங்குவதை நிறுத்திவிட்டனர். தென்னிந்திய பிலிம் பேர் திரைப்பட விழாவிலும் ஆவணப்படத்திற்கு விருதுகள்கிடையாது.

உலகில் சினிமாவுக்காக விருதாக இருக்கும் ஆஸ்கர் விருதுகளில் குறும்படத்திற்கும், ஆவணப்படத்திற்கும் விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். ஆனால், சினிமா வளர்க்கிறோம் என்ற பெயரில் திறமையை ஊக்கவிப்பதாக சொல்லி விருது வழங்குபவர்கள் ஆவணப்படங்களை கண்டுக் கொள்வதில்லை என்பது தான் நிதர்சன உண்மை.

கதையே இல்லாமல் திரைப்படம் எடுக்கலாம். வெற்றி பெறலாம். ஆனால், எந்த வித தகவலும், திட்டமும் இல்லாமல் ஒரு ஆவணப்படத்தை எடுக்க முடியாது.

படம் எடுக்கப் போகும் களனை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். அதைப் பற்றி படிக்க வேண்டும். அதை திரையில் எது பதிவு செய்ய வேண்டும், வேண்டாம் என்ற முடிவு எடுத்து அதற்கான திட்டம் இருக்க வேண்டும்.

வருங்காலத்திற்கு பாடமாகவும், பதிவாகவும் இருக்க போகும் ஆவணப்படத்திற்கு சந்தை விருதுகள் மட்டுமில்லாமல், ஊடகங்களின் ஆதரவு இருந்தால் இன்னும் விரைவாக முன்னேற முடியும்.

தமிழில் சில முக்கியமான ஆவணப்படங்கள்.
பீ – இயக்குனர் சு.அமுதன்,
நதியின் மரணாம் – சீனிவாசன்,
பேசாமொழி – செந்தமிழன்,
காவிரிப்படுகை : துரோகமும் துயரமும் - யாமினி,
தேவதைகள் – லீனா மணிமேகலை,
மூன்றாம் தியேட்டர் – அம்ஷன் குமார்

கட்டுரைக்கு உதவியது
சொல்லப்படாத சினிமா – ப,திருநாவுக்கரசு

நன்றி : நம் உரத்தசிந்தனை, எப்ரல் இதழ், 2014

Wednesday, June 11, 2014

மஞ்சப்பை - திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்தவருக்கு நகர வாழ்க்கை எவ்வளவு அந்நியமாக இருக்கிறது என்பதை இந்த படம் காட்டுகிறது. ஒரு சில காட்சிகள் நாடகத்தனமாக இருந்தாலும், மனிதனுக்கு மனிதன் சராசரி புரிதலில் கூட எத்தனை இடைவேளை இருப்பதை உணர முடிகிறது.


ராஜ்கிரண் முகத்தில் கோபம், பாசம் தவிர பெரிய ரியாக்ஷன் எதிர்பார்க்க முடியாது என்று இருந்தவர்களுக்கு, அப்பாவித்தனமாக முகபாவனை பார்த்து அதிர்ந்து போயிருப்பார்கள்.

அவருக்கு நகைச்சுவைக்கான நடிப்பு வரவில்லை என்றாலும், தனது செய்கையால் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். பாசத்துடன் விமலுக்கு செய்யும் ஒவ்வொரு விஷயமும், அவருக்கு பாதகமாக முடிய கோபப்படாமல் விமல் அமைதியாக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து விமல் கோபப்படும் போது ராஜ்கிரண் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.

படத்தை ராஜ்கிரண் மட்டுமே தூக்கி நிறுத்துகிறார். மிகவும் அப்பாவியான கிராமத்து தாத்தாவாக நன்றாக பொருந்தியிருக்கிறார். விமல், லட்சுமி மேனன் இருவரும் துணை பாத்திரங்கள் தான். பெரிதாக வேலையில்லை.

மரணத்தில் படம் முடித்துவிடுவார்களோ என்று நினைக்கும் போது, வேறு மாதிரியான சோக முடிவை வைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் பாதி வழக்கம் போல் சினிமாத்தனமாக தெரிந்தாலும், ராஜ்கிரணின் முதல் பாதி சேட்டைக்காக ஒரு முறை பார்க்கலாம்

Friday, June 6, 2014

இந்திய உளவுத்துறை RAW - நூல் விமர்சனங்கள்

மின்னஞ்சலில் வந்த விமர்சனங்கள்...

Sir,
This is Selva murugan, Assistant director .
I am interested to knw abt all Intellienge Security and all.
Now i am start reading of RAW . That this is very useful. And i got cleared lot.
Beside i am reading a mayavalai By Raghavan.

Bye

Regards
M.Selvamurugan.

**
மதிப்பிற்குரிய திரு குஹன் அவர்களே,

                          உங்களுடய ரா புத்தகத்தை புத்தக திருவிழா வில் வாங்கினேன். மிகவும் அருமையான புத்தகம்.வார்த்தைகள் இல்லை.

புத்தகத்தில் பல இடங்களில் நான் ஒரு இந்தியன் என்பதற்கு மிகவும் பெருமையாக இருந்தது. அதுவும் பாகிஸ்தான் அணுகுண்டு சோதனையில் இந்திய உளவாளியின் பணியை மிகவும் அற்புதமாக எழுதி என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டிர்கள்.

இந்த புத்தகத்தை எழுதியதிற்கு மிகவும் நன்றி நண்பரே.உங்களுக்கு பாராட்டுகள் போதாது. மேலும் உங்களை பாரட்டும் அளவுக்கு நான் தகுதி பெறவில்லை.மிகவும் நல்ல அனுபவம் உங்கள் புத்தகம். மேலும் மேலும் நீங்கள் எழுதவேண்டும்.

ஜெய் ஹிந்த் !

அன்புடன்,
மு. சதீஷ்

**



முக புத்தகத்தில் வந்த விமர்சனங்கள்

Inboxல் கருத்தை பகிர்ந்தவர்கள்.

RAW Book was well written, but it was severely biased

- Mariano Anto Bruno Mascarenhas

*

நேற்றைய புத்தகக் கண்காட்சியில் வாங்கிய உங்களுடைய 'ரா' புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து விட்டேன். அவளவு informative வும் interesting வும் இருந்தது , வேகம் குறையாமல் ஒரே சீராக இருந்தது, உலக அரசியலை பற்றியும் ஒரு நல்ல புரிதலை கொடுத்தது உங்கள் புத்தகம். வாழ்த்துக்கள் குகன்.

அன்புடன்
ப்ரியவிக்னேஷ்.

**
ரா புத்தகத்தைப் பற்றி ஸ்டேடஸ் போட்டவர்கள்

குகன் அவர்கள் எழுதியிருக்கும் இந்திய உளவுத்துறை ரா எவ்வாறு இயங்குகிறது ? என்கிற நூலை படித்து முடித்தேன். ரா என்கிற இந்திய உளவு அமைப்பைப்பற்றி இத்தனை ஆழமான அதே சமயம் சுருக்கமான நூல் இதுவரை தமிழில் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும் . அறுபத்தி ஐந்தின் போருக்கு பின்னர் உருவான ரா அமைப்பு வங்கதேச உருவாக்கத்துக்கு தேவையான ராணுவ பயிற்சி,தகவல் சேகரிப்பு,பிரசாரம் ஆகியவற்றை செய்து சாதித்தது.

கங்கா என்கிற விமானத்தை பாகிஸ்தானில் வெடிக்க விட்டு அதன் மூலமும் இரு பாகிஸ்தான் பகுதிகளுக்கு இடையே தொடர்பு ஏற்படாமல் சாதித்திருக்கிறார்கள். கவ்ஹாடாவில் பாகிஸ்தான் அணுசக்தி சார்ந்து இயங்குவதையும் இந்தியா அறிந்து வைத்திருந்தது. சீனாவை கவனிக்க வைக்கப்பட்ட அமெரிக்க உதவியுடன் தயாரான கருவி காணாமல் போனது திகிலான பக்கம். மாலத்தீவில் உமா மகேஸ்வரன் ஆட்சியை கைப்பற்ற முயன்ற பொழுது அதை இந்தியா ராவின் உதவியுடன் முறியடித்தது சுவையான பக்கம் என்றால் அப்படி நடக்க ப்ளான் போட்டு கொடுத்ததே ரா தான் என்கிற வாதத்தையும் சேர்த்தே நூல் பதிவு செய்கிறது. அந்த மீட்பின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து விலகி மாலத்தீவை இந்தியா பக்கம் சேர்க்கும் கச்சிதமாக நிறைவேறியது !


இந்திரா படுகொலை,ராஜீவ் படுகொலை,மும்பை குண்டுவெடிப்புகள்,கார்கில் யுத்தம்,மும்பை தாக்குதல் ஆகியவற்றில் கோட்டை விடுகிற வேலையையும் ரா செய்திருக்கிறது என்பதையும் நூல் விருப்பு வெறுப்பில்லாமல் சொல்கிறது நூல் .

சியாச்சினில் பாகிஸ்தானுக்கு முன்னர் முந்திக்கொண்டு போய் நின்றது,இரண்டாவது முறை சீக்கிய பொற்கோயில் உள்ளிருந்து தீவிரவாதிகள் எடுத்துக்கொண்ட பொழுது தொடர் முற்றுகையில் கோயிலை அசுத்தப்படுதவிட்டு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவித்து காலிஸ்தான் இயக்கத்தின் போராட்டத்தை பிசுபிசுக்க வைத்தது,போக்ரான் குண்டு வெடிப்பை அமெரிக்காவுக்கு தெரியாமல் நிகழ்த்தியது என்று நீளும் ராவின் சாதனைகள் இந்தியா ஒரு நாடாக நீடித்திருக்க அவசியம் என்று அழுத்தமாக பதிவு செய்து நூல் முடிகிறது .

- பூ.கொ. சரவணன்

**
Guhan Kannan 'Raw' interesting reading...like a top notch thriller surrounded with Various information..also a revisit to the most important events that changed the fate of our Country and world politics.

- C.J.Rajkumar, cinematographer

**

பொதுவாக எனக்கு சுயசரிதையோ, இல்லை நிகழ்வுகளின் தொகுப்பையோ படிப்பதில் எனக்கு பெரியளவில் ஈடுபாடு இருந்ததில்லை. நண்பர் எழுதிய புத்தகம் என்பதால் தான் இந்த புத்தகத்தை வாங்கினேன்.. (ஏற்கனவே அவருடைய பெரியார் ரசிகனை வாசித்துள்ளேன்). ஒப்பிடுவது தவறு தான் எனினும் பெரியார் ரசிகன் எழுதிய கனத்தை விட raw எழுதும்போது இன்னும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளது அவர் எழுத்தில் தெரிந்தது.. அவ்வளவு தகவல்கள் கொடுத்துள்ளார். “ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’, கங்கா விமான எரிப்பு, சிக்கிம் இணைத்த நிகழ்வு, ஆட்சி மாற்றத்தால் உண்டான சிக்கல், உலகமயமாக்கல் மூலம் வரும் இன்னல், காலிஸ்தான் பிரச்சினை, கனிஷ்கா குண்டுவெடிப்பு, honey trap இத்யாதி இத்யாதி.. இதில் பல விஷயங்களின் outline மட்டுமே தெரிந்த எனக்கு இந்த விஷயங்களின் உள்விவகாரங்களை அழகாக விளக்கி கொடுத்துள்ளார்.

பிளஸ்

தகவல்களின் கோர்வை
ஆர்ப்பாட்டமில்லாத எழுத்து

மைனஸ்

2 புத்தகங்களாக எழுத வேண்டிய விஷயங்களை ஓரே புத்தகத்தில் தொகுக்க நினைத்தது. (பல நிகழ்வுகள் எனக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது)
நண்பர் என்ற முறையில் ஒரு வேண்டுகோள்.

இனி அடுத்ததாக raw குறித்து எழுதுவதாக இருந்தால் தனி புத்தகமாக வெளியிடுங்கள். முதல் பதிப்பை வாங்கியவர்களை விட இரண்டாம் பதிப்பை வாங்கிய எனக்கு அதிக தகவல்கள் கிடைத்துள்ளது. இனி இதோடு சில பகுதிகள் சேர்த்து மூன்றாம் பதிப்பு என்று வெளியிட்டால்...

- Lanza del Vasto

**

இந்திய உளவுத்துறை RAW நூலை இணையத்தில் வாங்க..

Thursday, June 5, 2014

தந்தை காதலுக்காக போராடும் மகன்

உலத்தின் எத்தனையோ காதல் கதைகளை கேள்விப்பட்டிருப்போம். படித்திருப்போம். பார்த்திருப்போம். ஆனால், நம் கண் முன்னே வாழ்ந்த மிக பெரிய காதலர்கள் பெற்றோர்கள் என்பது நமது பொருளாதார வாழ்க்கையில் உணர சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மகன் முன்னான் பெற்றோர்களும் காதலர்களாக இருப்பதுமில்லை.

Road Home (Chinese) படத்துக்கு பிறகு மகன் பார்வையில் பெற்றோர்களின் காதலை உணர்ந்தும் கதைக்களன்.



படத்தின் கதை என்வென்றால் நாக சைத்தன்யா, சமந்தாவின் மகன் நாகர்ஜூனா. நாகர்ஜூனா, ஷ்ரேயாவின் மகன் நாகேஸ்வர ராவ். அதாவது, தனது நிஜ அப்பாவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார்கள். தங்களது நிஜ மகனை படத்தில் 'அப்பா' என்று தந்தை அழைக்கிறார்கள். தங்களது நிஜப் பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஷ்ரேயா முதியவரான நாகேஷ்வர ராவ்விடம் தாய் உள்ளமோடு நடந்துக் கொள்கிறார். சமந்தாவும் நாகர்ஜூனாவோடு அம்மா பாசத்தோடு தோழியாக இருக்கிறார்.

கேட்பதற்கு குழப்பமான கதையென்றாலும், ரசிப்பதற்கு படத்தில் நிறைய இருக்கிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நாகேஸ்வர ராவ் நடித்தப் படம். சில கலைஞர்களுக்கு உள்ளூர என்ன தோன்றும் என்று சொல்ல முடியவதில்லை. இது தான் தனது கடைசி படம் என்பதால் என்னவோ தனது பேரன் நாக சைத்தன்யாவோடும், மகன் நாகர்ஜூனாவோடும் நடித்திருக்கிறார். அதிகமாக நடிக்க வாய்ப்பில்லாத பாத்திரமாக இருந்தாலும், ரசிகர்கள் அவரை கடைசியாக திரையில் பார்த்த சந்தோஷத்தை கொடுத்திருக்கிறார்.

நாக சைத்தன்யாவுக்கு போட்டி மகேஷ் பாபு, ராம் சரண் போன்றவர்கள் இல்லை. அவர் அப்பா நாகர்ஜூனா தான். மனுஷன் இன்னும் இளமையாக தெரிகிறார்.

படத்தில் நகைச்சுவை காட்சி என்று சொல்வதென்றால், தாத்தா பேரனுக்கு நடக்கும் உரையாடல் மட்டும் தான்.

தமிழில் ‘அலை’ என்ற மொக்கைப் படத்தை இயக்கிய விக்கரம் குமார் தான் இந்த படத்தின் இயக்குனர். தமிழில் மொக்கைப் படத்தை எடுத்தவர்கள் தெலுங்கில் மட்டும் எப்படி நல்ல படம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

அக்கினேனி குடும்பம் போல் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், முத்துராமன் போன்றவர்களின் குடும்பம் மூன்று தலைமுறையாக இருக்கிறார்கள். ஆனால், மூத்த தலைமுறை இல்லாதது இந்த படத்தை தமிழில் பார்க்க முடியாதது.

வேண்டுமென்றால் சிவக்குமார், சூர்யா, கார்த்தி வைத்து இந்த படத்தை எடுத்தால் ஒரளவுக்கு ரசிக்கும் படியாக இருக்கும்.

Tuesday, June 3, 2014

கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

எனக்கு எந்த பெண்ணும் பிடிக்காது என்று ஒருவன் கூறினால் என்றால்... ஒன்று அவன் காமத்தை விரும்பாதவனாக இருக்க வேண்டும். அல்லது அவன் ஓர் பால்சேர்க்கையாளராக இருக்க வேண்டும்.

அதேப் போல், எனக்கு எந்த அரசியல் தலைவரும் பிடிக்கவில்லை என்று ஒருவன் கூறினால்... ஒன்று அவன் அரசியல் ஆர்வமில்லாதவனாக இருக்க வேண்டும். அல்லது அரசியல் அறிவு இல்லாதவனாக இருக்க வேண்டும். 

எல்லா பெண்களிடம் எதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதற்காக எந்த ஆண் மகனும் பெண் இனத்தையே தள்ளி வைக்க முடியாது. கிடைக்கும் பெண்ணின் நிறைகளை நினைத்து, குறைகளை மறந்து வாழ வேண்டிய நிலையில் இருக்கிறான்.

 அதுப் போலதான், நமக்கு இருக்கும் அரசியல் தலைவர்கள். யாரோ ஒருவரை தேர்வு செய்து தான் ஆக வேண்டும். அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் கிடைக்காது. எனக்கு கிடைத்த தமிழ்நாட்டு தலைவர்களில் எனக்கு ’கலைஞர்’ பிடிக்கும். அதற்காக என்னை சுற்றி இருப்பவர்கள் மூலம் மூலம் பல விமர்சனம் சந்தித்திருக்கிறேன். தி.மு.கவினர் சொல்ல வேண்டிய பதிலை நான் சொல்லியிருக்கிறேன். பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் இருந்திருக்கிறேன். ஆனால், ஒரு முறைக் கூட கலைஞரை நான் வெறுத்ததில்லை.

எனக்கு பிடித்த கலைஞர் பத்தாண்டுகளாக காணவில்லை என்ற வருத்தம் உள்ளூர இருக்கிறது. 70, 80 களில் இருந்த கலைஞர் எங்கு சென்றார் என்று பல முறை வருந்தியிருக்கிறேன். ஆனால், கலைஞரை என்னால் ஒதுக்க முடியாது. இவ்வளவு ஏன் ? அரசியல் அறிவு அற்றவர்களாலும் அவரை ஒதுக்க முடியாது.

நான் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. தி.மு.கவின் பல செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், எனக்கு கலைஞர் பிடிக்கும். அது தான் அவரின் பலம். தி.மு.க என்ற கட்சியை தாண்டி கலைஞருக்கு அபிமானிகள் அதிகம். ரசிகர்கள் அதிகம். இவர் காலில் விழுந்து ஆசிப் பெற்றவர்கள் யாரும் தன்மானத்தை இழந்து விழுவதில்லை.

கலைஞர் மீது மக்களுக்கு இருக்கும் கோபம், இனிப்பு வாங்கி தராத அப்பா மீது குழந்தைக் காட்டும் கோபம். அம்மா மீது மக்களுக்கு இருக்கும் அன்பு, இனிப்பு வாங்கி தந்த மாமா மீது இருக்கும் அன்பு. இனிப்பு கரைந்ததும் மாமா மீது இருக்கும் அன்பு குழந்தைக்கு குறைந்துவிடும். இனிப்பே வாங்கி தரவில்லை என்றாலும் அப்பாவை தேடி குழந்தை வந்துவிடும்.

அரசியலை தாண்டி தனக்கென்று இன்று வரை ஒரு கூட்டம் வைத்திருக்கும் ஒரே தலைவர்... கலைஞருக்கு மட்டும் தான்.

கலைஞரைப் பற்றி நான் தொகுத்த நூல்... இணையத்தில் வாங்க

LinkWithin

Related Posts with Thumbnails