வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Telugu Movie. Show all posts
Showing posts with label Telugu Movie. Show all posts

Thursday, July 16, 2015

பாகுபலி - திரை விமர்சனம்

பிரமிக்க வைக்கும் பிரமாண்டம். எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தியளவில் தன்னை முக்கியமான இயக்குனராக மாறியிருக்கிறார். ஒரு படத்தை இரண்டு பாகமாக வெளியீட்டு லாபம் சம்பாதிக்கும் உத்தியில் வெற்றிப் பெற்றுயிருக்கிறார். ( ரத்த சரித்திரம் 1, 2ல் ராம்கோபால் வர்மா சறுக்கிய இடம்). 

அடிமைப் பெண் + மஹாபாரதம் சேர்ந்த கலவை தான் கதை. சொதப்பல் திரைக்கதையான ‘மித்’ படத்தை அபாரமான ’ மஹதீரா’ வாக எடுத்தவருக்கு, அடிமைப் பெண் படத்தை ‘பாகுபலியாக’ எடுப்பதில் பெரிய விஷயமில்லை. 

இரண்டாம் பாகம் வரும் வரை இது முழுமையான திரைக்கதை இல்லை என்பதால் அதைப்பற்றி இங்கு பேச விரும்பவில்லை. 

படம் நன்றாக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எனக்கு தெலுங்கு படத்தை தமிழில் பார்த்த உணர்வு தான் ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் காட்சிகள். தூதுவன் ஒருவனை தேடும் இடத்தில் பாட்டு, பல இடங்கள் வசனங்கள் உதடு ஒட்டாமல் இருப்பது, கதாநாயகனை போர் வீரனாக காட்டுவதை விட சூப்பர் ஹீரோவாக காட்டும் முயற்சி... எல்லாம் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட தெலுங்கு படம் தான். இந்த படத்தை தெலுங்கில் பார்த்திருந்தால் அதிக பாதிப்பு இருந்திருக்கும். கண்டிப்பாக பாகுபலி-2 தெலுங்கில் தான் பார்க்க வேண்டும்.

‘நான் ஈ’யில் சந்தானத்துக்கு இரண்டு காட்சிகள் வைத்து, ’தமிழ் படம்’ என்று நம்ப வைத்த்திருப்பார். அந்தளவுக்கு அடிப்படை வித்தியாசத்தை கூட இதில் கொடுக்கவில்லை. சத்யராஜ் இருப்பதால் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். ஆனால், அவர் இரு மொழி நடிகனாகி நீண்ட நாட்களாகிறது. 

’மஹதீரா’வில் ராம் சரண் சண்டையின் போது இருக்கும் வீரம் பிரபாஸிடம் இல்லை என்றோ தோன்றுகிறது. ராம்சரண் ‘மஹதீரா’வில் நூறு பேரை வீழ்த்தும் போது ஏற்படுத்திய பிரமிப்பு பிரபாஸ் ஆயிரம் பேர் வீழ்த்தும் போது வரவில்லை. உடல்மொழியிலும், பேச்சிலும் இரண்டு பாத்திரத்திற்கும் பிரபாஸ் வித்தியாசமில்லை. 

மிர்ச்சி, ரேபுல், பில்லா போன்ற படங்களில் நடித்தது போலவே சாதாரனமாகவே நடித்துவிட்டார். 2.5 வருடம் தனது கால்ஷிட் கொடுத்து, உடலை மெருக்கேற்றியளவிற்கு ராஜாக் காலத்துக்கு கதைக்கு பிரபாஸ் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. 



பாகுபலிக்கு சரியான தேர்வு ராம்சரண் தான். ஒரு வேளை தமிழ், தெலுங்கு (இரு மொழி) படமாக முன்பே திட்டமிட்டிருந்தால் ‘நாகர்ஜூனா’ அல்லது ’சூர்யா’ சரியான தேர்வு. இவர்களில் 2.5 வருட கால்ஷிட் கிடைப்பது சிரமம் என்பது வேறு விஷயம். தெலுங்கில் எடுத்து முடித்த பிறகு இரு மொழிப்படம் என்று வணிகத்திற்காக விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது. 

போர்க்களத்தில் இருக்கும் வில்லனின் நடிப்பும் அப்படி தான். ’மஹதீரா’வில் ஸ்ரீஹரி ராம்சரண்னை கொல்ல நூறு பேரை அனுப்புவார். ஒரு கட்டத்தில் ராம்சரண் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்பார். தனது படை வீரர்கள் இறப்பதை விட ராம்சரணின் வீரத்தை ரசிப்பார். கண்ணிலும், குரலிலும் மனுஷன் பின்னியிருப்பார். இதில் முகத்தில் சாயம் பூசப்பட்ட எதிரி (சாய்குமார் என்ற நினைக்கிறேன்). ஒரே மாதிரியான முகபாவனை. தனது படை எதிரி படைகளை தும்சம் செய்யும் போது சரி, இரண்டு இளவரசர்கள் தன்னை தாக்க வரும் போது சரி ஒரே மாதிரியான முகப்பாவனை. கோபம், ஆவேசம், அச்சம் காட்ட வேண்டிய எதிரி பாத்திரத்தை முகத்தில் சாயம் பூசி நடிக்க வேண்டாம் என்று முடிவு கட்டிவிட்டார் என்று நினைக்கிறேன். 

டெக்கினிக்கலான விஷயத்தில் அதிகமாக கவனத்தை செலுத்தியதால் இப்படி ஏற்பட்டதா என்று தெரியவில்லை. சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பு பற்றி தனி பதிவாக சொல்ல வேண்டும். இந்த படத்தை முழுமையாக நடித்தவர்கள் இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான். 

அனுஷ்கா இரண்டாம் பாகத்தில் மிரட்டுவார் என்று நம்புகிறேன். ஆனால், அதற்கு முன் ’ருத்ரமாதேவி’ வந்துவிட்டால், ரசிகர் அனுஷ்காவை அந்த படத்தோடு தான் ஒப்பிடுவார்கள். ராஜமௌலிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். 

எதிர்காலத்தில் பொன்னியின் செல்வன் (நாவல்), பானிபட் யுத்தம், வீர சிவாஜி போன்ற கதைகளை திரைப்படமாக எடுக்கும் நம்பிக்கையை ‘பாகுபலி’ கொடுத்திருக்கிறது. பல சரித்திரக்கதைகளுக்கு திரைக்கதை அமைக்கப்படலாம். அதற்கான வணிகமும் இருக்கிறது என்பதை ராஜமௌலி சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதற்காகவே அவரை வாழ்த்த வேண்டும்.

Thursday, June 5, 2014

தந்தை காதலுக்காக போராடும் மகன்

உலத்தின் எத்தனையோ காதல் கதைகளை கேள்விப்பட்டிருப்போம். படித்திருப்போம். பார்த்திருப்போம். ஆனால், நம் கண் முன்னே வாழ்ந்த மிக பெரிய காதலர்கள் பெற்றோர்கள் என்பது நமது பொருளாதார வாழ்க்கையில் உணர சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மகன் முன்னான் பெற்றோர்களும் காதலர்களாக இருப்பதுமில்லை.

Road Home (Chinese) படத்துக்கு பிறகு மகன் பார்வையில் பெற்றோர்களின் காதலை உணர்ந்தும் கதைக்களன்.



படத்தின் கதை என்வென்றால் நாக சைத்தன்யா, சமந்தாவின் மகன் நாகர்ஜூனா. நாகர்ஜூனா, ஷ்ரேயாவின் மகன் நாகேஸ்வர ராவ். அதாவது, தனது நிஜ அப்பாவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார்கள். தங்களது நிஜ மகனை படத்தில் 'அப்பா' என்று தந்தை அழைக்கிறார்கள். தங்களது நிஜப் பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஷ்ரேயா முதியவரான நாகேஷ்வர ராவ்விடம் தாய் உள்ளமோடு நடந்துக் கொள்கிறார். சமந்தாவும் நாகர்ஜூனாவோடு அம்மா பாசத்தோடு தோழியாக இருக்கிறார்.

கேட்பதற்கு குழப்பமான கதையென்றாலும், ரசிப்பதற்கு படத்தில் நிறைய இருக்கிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நாகேஸ்வர ராவ் நடித்தப் படம். சில கலைஞர்களுக்கு உள்ளூர என்ன தோன்றும் என்று சொல்ல முடியவதில்லை. இது தான் தனது கடைசி படம் என்பதால் என்னவோ தனது பேரன் நாக சைத்தன்யாவோடும், மகன் நாகர்ஜூனாவோடும் நடித்திருக்கிறார். அதிகமாக நடிக்க வாய்ப்பில்லாத பாத்திரமாக இருந்தாலும், ரசிகர்கள் அவரை கடைசியாக திரையில் பார்த்த சந்தோஷத்தை கொடுத்திருக்கிறார்.

நாக சைத்தன்யாவுக்கு போட்டி மகேஷ் பாபு, ராம் சரண் போன்றவர்கள் இல்லை. அவர் அப்பா நாகர்ஜூனா தான். மனுஷன் இன்னும் இளமையாக தெரிகிறார்.

படத்தில் நகைச்சுவை காட்சி என்று சொல்வதென்றால், தாத்தா பேரனுக்கு நடக்கும் உரையாடல் மட்டும் தான்.

தமிழில் ‘அலை’ என்ற மொக்கைப் படத்தை இயக்கிய விக்கரம் குமார் தான் இந்த படத்தின் இயக்குனர். தமிழில் மொக்கைப் படத்தை எடுத்தவர்கள் தெலுங்கில் மட்டும் எப்படி நல்ல படம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

அக்கினேனி குடும்பம் போல் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், முத்துராமன் போன்றவர்களின் குடும்பம் மூன்று தலைமுறையாக இருக்கிறார்கள். ஆனால், மூத்த தலைமுறை இல்லாதது இந்த படத்தை தமிழில் பார்க்க முடியாதது.

வேண்டுமென்றால் சிவக்குமார், சூர்யா, கார்த்தி வைத்து இந்த படத்தை எடுத்தால் ஒரளவுக்கு ரசிக்கும் படியாக இருக்கும்.

Thursday, July 15, 2010

தெலுங்கு திரை உலகனின் 'உலக சினிமா'

100% கமர்ஷியல் திரை உலகம் என்ற முத்திரை குத்தப்பட்ட தெலுங்கு படங்களில் சமீபத்திய படமான 'வேதம்' படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 'ஆரியா' படத்தில் காதலில் ஈர்த்த அல்லு அர்ஜூன், நம்ப அனுஷ்கா மற்று 'கேபிள்' சங்கர் பதிவு போன்ற காரணங்களால் இந்த படத்தை பார்த்து விட வேண்டும் என்று தோன்றியது.

ஐந்து பேர் கதை தொடங்கியதுமே 'மல்டி செக்மன்ட் ஸ்டோரி டெல்லிங்' பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் புரிந்துக் கொள்ள முடிந்தது.

இசை உலகில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று அம்மா சொன்ன இராணுவ வேலையை நிராகரித்து தன் காதலி, நண்பர்களுடன் ஹைதிரபாத் வருகிறான் மனோஷ் மன்சு. சுயநலவாதியான அவன் ஒரு சர்தாஜி உதவி செய்ததும் பொது நலவாதியாக மாறுகிறான். விபத்தில் மாட்டி தவிக்கும் ஒரு கர்ப்பி பெண்ணுக்கு உதவ தன் வண்டியில் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்.

கந்து வட்டிக்கு பணம் வாங்கி அசலை கொடுத்த பிறகும், வட்டி கட்டிக் கொண்டு இருக்கும் நாகைய்யாவின் பேரனை கந்து வட்டிக்காரன் தூக்கிச்சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்த தன் பேரனை மீட்க தன் மருமகளின் கிட்னி விற்க ஹைதிராபாத் வருகிறான். கிட்னி கொடுத்த மருமகள் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

இந்துக்களால் கருவிலே தன் குழந்தை இழந்து இந்தியாவை விட்டு ஷார்ஜாவுக்கு செல்ல திட்டமிடுகிறான் ரஹிம். முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி என்று கருதும் போலீஸ்க்காரன், அவன் உறவினர்களின் தீவிரவாதி ஒருவனை கைது செய்யும் போது ரஹிம்மை சேர்த்து செய்கிறான். போலீஸிடம் இருந்து தப்பிக்கும் காலில் குண்டடி பட்டு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறான்.




விபச்சாரம் செய்யும் சரோஜா, தன் திருநங்கை தோழியுடன் விபச்சார விடுதியில் இருந்து தப்பித்து ஹைதிராபாத்துக்கு வருகிறாள். ஆனால், அவளை வைத்து தொழில் செய்த பெண்ணின் ஆட்கள் சரோஜாவை விடாமல் துரத்துகிறார்கள். அவர்களிடம் தப்பிக்கும் போது தன் திருநங்கை தொழிக்கு கத்தி குத்து பட, அவளை அழைத்து கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு வருகிறாள் சரோஜா.

யாரை பற்றி கவலைப்படாமல் தன் காதலி தான் உலகம் என்று வாழுகிறாள் கேபிள் ராஜூ. அவளிடம் பணக்காரனாக நடித்து, இரவு விருந்துக்கு பெரிய ஹோட்டலில் இரண்டு பாஸ் வாங்கி வருவதாக சொல்கிறான். ஒரு பாஸ் 20,000 ரூபாய் என்று இருக்க, 40,000 ரூபாய்யை மருமகள் கிட்னியை விற்ற நாகைய்யாவிடம் பணத்தை திருடுகிறான். இறுதியில் மனம் மாறி, அரசாங்க மருத்துவமனையில் நாகைய்யாவிடம் பணத்தை கொடுக்க வருகிறான்.

ஐந்து கதாப்பாத்திரங்கள் எவ்வேறு இடத்தில் தொடங்கி ஒரு இடத்தில் சந்திக்கும் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நான்கு பேர் முற்றுகை ஈடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.

ஆங்கில படங்களில் Babel, 21 Grams போன்ற வெற்றி படங்கள் இந்த திரைக்கதை யுக்தியை தான் பயண்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் Babel நான்கு நாடுகளில் நடக்கும் கதை இறுதி காட்சி ஒரே புள்ளியில் வந்து முடியும். ஹாலிவுட்டில் பயன்படுத்திய திரைக்கதை யுக்தியை நம் நாட்டுக்கு ஏற்ற வாறு திரைக்கதை அமைத்திருப்பது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.



தமிழ் படத்தில் கூட இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பதை பார்த்து விடலாம். தெலுங்கு படங்களில் மிகவும் அபூர்வம். அப்படியே இரண்டு நாயகர்கள் என்றால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நடிகள் தான் நடிப்பார்கள். அல்லு அர்ஜூன், மனோஜ் மன்சு போன்ற நடிகர்கள் இணைந்து நடிப்பது மிக விஷயம். வில்லனை விரல் நீட்டி மிரட்டுபவர்கள். நூறு பேர் வந்தாலும் அடித்து உதைக்க கூடிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்கள். 'கேபிள் ராஜூவாக அல்லு அர்ஜூனும், விவேக் சக்கரவர்த்தியாக மனோஜ் மன்ச்சுவும் வாழ்ந்திருப்பது ‘மாசாலா’ படம் பார்த்தவருக்கு சாபவிமோச்சனம் கிடைத்தது போல் இருந்தது. ஒரு தீவிரவாதியிடம் இருந்து பல ஆயிரம் பேர் காப்பாற்ற இரண்டு நாயகர்கள் போராடுவதும், அதற்கான முடிவை தேர்ந்தெடுப்பதும் தெலுங்கு படங்களில் வராத முடிவு. ( இரண்டு 'மாஸ்' ஹீரோக்கள் சாதன குடிமகனாக நடித்திருப்பது என்னால் இன்னும் நம்பமுயவில்லை. )

கண்ணில் அதிக மைய்யும், லோ ஹிம் புடவையும், பின் முதுகு தெரியும் படியான ஜாக்கெட்டும் என்று அசல் விபச்சாரியாகவே வருகிறார் அனுஷ்கா. தன் திருநங்கைக்காக டாக்டரிடம் கெஞ்சும் போது, " உங்க கூட எத்தன வாட்டி வேணும்னாலும் படுகிறேன். அவள காப்பாத்துங்க !" என்று கெஞ்சும் போது கதாப்பாத்திரம் மீறி அவள் மேல் பரிதாபப்பட வைக்கிறது.

வசனங்கள் ஒவ்வொன்றும் ரொம்ப ஷார்ப். குறிப்பாக ஒரு இடத்தில் கூட பன்ச் டைலாக் இல்லை.

கிட்னி விற்க செல்லும் தன் மருமகளிடம் நாகைய்யா, " ஏழைகளுக்கு இருக்குற பெரிய சொத்தே அவங்க உடம்பு தான்" என்று சொல்லும் இடமாகட்டும்,

போலீஸ் ஸ்டேஷனில் அனுஷ்கா, " நாங்க உடம்பில இருக்குற துணிய அவுத்து போட்டு சம்பாதிக்கிறோம், நீங்கள் துணியப்போட்டு சம்பாதிக்கிறீங்க" என்ற இடமாகட்டும்,

ஷார்ஜா செல்லும் ரஹிம்மிடம் அவர் தந்தை, " நிறைய முஸ்லீம் இருக்குற இடத்துல இந்து பயப்படுறதும், நிறைய இந்துக்கள் இருக்குற இடத்துக முஸ்லீம் பயப்படுறதும் சகரஜம். மாப் சைக்காலஜி" என்று சொல்லும் இடம் மிக அருமை.

அதுவும் இறுதி காட்சியில், அல்லு அர்ஜூன் மனோஜிடம் " உங்க பெயர் என்ன பாஸ் ?" என்று கேட்கும் இடம் கண்ணில் நீர் வராத குறை.

'வேதம்' தமிழில் 'வானம்' என்ற பெயரில் வெளிவரயிருக்கிறது. அல்லு அர்ஜூன் நடித்த ட்ரேக்கில் சிம்பு நடிக்கவிருக்கிறார். 'விண்ணைதாண்டி வருவாயா' படத்திற்கு முன் 'வானம்' பட அறிவிப்பு வந்திருந்தால் நான் அதிர்ந்து போய்யிருப்பேன். முந்த படத்தில் கொடுத்த நம்பிக்கை, சிம்பு சோதப்பாமல் செய்வார் என்று நம்பலாம். மற்ற நான்கு ட்ரேக்குக்கும் டப்பிங் செய்வார்கள் என்றே தோன்றுகிறது.

படத்தின் இசை, கெமிராமென், டைரக்டர்... அதை பற்றி எல்லாம் நமக்கு தெரியாது. நான் என்ன 'கேபிள்' சங்கரா.... படத்தை பார்த்து ரசித்த ஒரு சாதான ரசிகனின் விமர்சனம் இது.

LinkWithin

Related Posts with Thumbnails