ஒரு நாட்டை ஆட்சி செய்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. கார்ப்ரேட் நிறுவனங்கள். அவர்களின் மகுடிக்கு அதிகாரவர்கம் ஆடுகிறது என்று நினைத்திருந்தேன். ஆனால், அந்த அம்பானி, அதானி போன்ற கார்ப்ரேட் நிறுவனங்களையே ஆட்டி வைக்கும் ஒரு குழு இருக்கிறது. பில் கேட்ஸ், வாரன் ஃபவர்ட் போன்று உலகின் நம்பர் 1 பணக்காரர் பந்தயத்தில் அவர்கள் கலந்து கொள்ளவதில்லை. அந்த நம்பர் 1 பணக்காரர் யார் என்பதை தீர்மானிப்பவர்கள் !!
நம்பர் 1 பணக்காரர்களை விட அதிகப் பணம் வைத்திருப்பவர்கள். அதிகாரம் வைத்திருப்பவர்கள். உலகத்தை நோட்டம் விடுபவர்கள். இந்த உலக அரசியலை தங்களுக்காக மாற்றுபவர்கள். தங்களுக்கு எதிராக இருப்பவர்களை ஒழித்து கட்டுபவர்கள். எல்லா சம்பவங்களுக்கு பின்னால் அவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களின் பெயர் ”இல்லுமினாட்டி”.
இவர்களின் அருளில்லாமல் எதுவும் நடவாது. யாராவது எதிர்த்தால் அவர்களுடைய உடலில் ஒரு அணுவும் அசையாது. அடையாளம் தெரியாமல் தொலைந்து போவார்கள். அல்லது திட்டமிட்ட விபத்தில் இறப்பார்கள். வழக்கு, நீதி மன்றம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள்.
ராக் ஃபெல்லர், ஜான் எஃப்.கென்னடி, லீ குவான் யூ என்று இல்லுமினாட்டி பெயர்களை இந்த நூல் பட்டியலிடுகிறது. ஒரு கட்டத்தில் இந்த உலகத்தில் யார் தான் உண்மையான உழைப்பில் உயர்ந்தார்கள் என்ற சந்தேகத்தை இந்த நூல் விதைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மை சுற்றியிருக்கும் உலகத்தை சந்தேகப்பட வைக்கிறது.
ஒவ்வொரு அத்தியாயம் மிக ஸ்வாரசியமாக இருக்கிறது என்பதை விட மிக அதிர்ச்சியான தகவல் கொண்டிருக்கிறது.
அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
**
இல்லுமினாட்டி
– கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
- Rs.133
1 comment:
படித்தேன். படித்ததும் பக்கத்துக்கு வீட்டுக்காரரை கூட சந்தேகமாக பார்க்க ஆரம்பித்துவிட்டேன். இலுமினாட்டி பற்றி இத்தனை விபரங்கள் ஒருவர் அறிந்துகொள்ள முடிந்தால் அது இலுமினாட்டியே இல்லை. . எதோ சும்மா ஒரு சீப் த்ரில்க்கான வாசிப்பு. அவ்வளவே. சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
Post a Comment