வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 31, 2010

ஜுலை முதல் டிசம்பர் வரை

இந்த ஆறு மாதங்களாக மிக குறைவான புத்தகங்களை படித்திருக்கிறேன். மிக குறைவாகவே எழுதியிருக்கிறேன். பதிப்பாளன் எழுத்தாளனை விழுங்கி விட்டானோ அஞ்சுயிருக்கிறேன். படிக்க வேண்டிய புத்தகங்கள் மூவாயிரம் ரூபாய் மேல் வாங்கி வீட்டில் அப்படியே தீண்டப்படாமல் கிடக்கிறது.

வரும் வருடமாவது உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு வருடமும் மாறாமல் இருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களாக படித்த புத்தகங்கள்.

கிழக்கு

1.சினிமா வியாபாரம் – சங்கர் நாராயணன்
2.சத்திய சோதனை - இந்திரா பார்த்தசாரதி
3.கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை – ஜோதி நரசிம்மன்
4.கதி வாழ்க்கை - கலையரசன்
5.நாதுராம் விநாயக் கோட்ஸே - சி.என்.எஸ்
6.நேரு முதல் நேற்று வரை - ப.ஸ்ரீ. ராகவன்

7.திரும்ப வராத கடந்த காலம்-ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
8.மகாபுல்வெளி - ஆன்டன் செகாவ்
9.நான் கண்ட சீனா - நடிகர் ராஜேஷ்
10.பெரியார் பெருமைகள் 100 - தொகுப்பு:சபிதா ஜோசப்
11.சொன்னார்கள் -2 - சுகி சிவம்
12.வெட்டுப் புலி - தமிழ்மகன்
13.ஹக்கூ ஒரு அறிமுகம் - சுஜாதா

14.மறக்க முடியுமா ? - புரட்சிப்பாடகர் கத்தார்
15.மனசே டென்ஷன் ப்ளீஸ் ! -நளினி
16.ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் – அன்வர்

கவிதை

17.உயிர்க் கவிதைகள் - மு.முருகேஷ்
18.மயிரு - யாத்ரா
19.சண்டைத்தோழி - கட்டளை ஜெயா

20.Same sex marriage Pro & Con - A Reader - Andrew Sullivan
21.Rescaling Transnational "Queerdom": Lesbian and "Lesbian" Identitary–Positionalities in Delhi in the 1980s -- Paola Bacchetta

நாகரத்னா பதிப்பகத்தில் ஆறு மாத்த்தில் வெளிவந்த நூல்கள்

கவிதை உலகம் – கவிதை தொகுப்பு
நீங்கதான் சாவி – சுரேகா
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி – கனியன் செல்வராஜ்

இந்த வருடம் உருப்படியாக செய்ததது நான் எந்த புத்தகமும் எழுதாதது தான். ’கவிதை உலகம்’ நூலை தொகுத்த்தோடு சரி ! இன்னும் சில வருடங்களுக்கு புத்தகம் எழுதாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். வருடத்தில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

சென்னை 34வது புத்தக கண்க் காட்சியில் நாகரத்னா பதிப்பகம் புத்தகங்கள் கிடைக்கும் இடம்.

பாலவசந்தா பதிப்பகம் – ஸ்டால் எண். 448
அணைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கம் – ஸ்டால் எண். 272.


மேலும், இரண்டு, மூன்று ஸ்டால்களில் எங்கள் பதிப்பக புத்தகங்கள் இடம் பெறலாம். பின்னர் அறிவிக்கப்படும்.

அனைவரும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!

***

ஜனவரி முதல் ஜூன் வரை படிக்க.

Thursday, December 30, 2010

அழகான ராட்சசி !

அழகான ஆண்ணுடன் உறவு கொள்கிறாள். இரவு முழுக்க தன் காம பசியை தீரும் அளவிற்கு அவனை அனுபவிக்கிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த ஆண்ணால் முடியாவிட்டாலும் தன் தேவை தீரும் வரை அந்த பெண் விடவில்லை. தன் காமம் தீர்ந்த பிறகு தனக்கு சுகம் கொடுத்த ஆண்ணை கொடூரமாக கொலை செய்கிறாள் அந்த பெண்.

எதோ Basic Instant, Spieces ஆங்கிலப்படத்தின் கதை இல்லை. நிஜவாழ்க்கையில் வாழ்ந்த ஒரு பெண் இப்படி வாழ்ந்திருக்கிறாள். தனக்கு திருப்தி தராத ஆண்ணின் உருப்பை அறுத்திருக்கிறாள். ஆழகான பெண்களை பல விதமான விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் கொலைச் செய்திருக்கிறாள். இவளின் காம பசிக்கு பலியான ஆண்கள் அதிகம். கொடூரமான ஆராய்ச்சிக்கு பலியான பெண்கள் ஏராளம். அவளுக்கு துணையக சில பெண் ஊழியர்கள் இருந்திருக்கிறார்கள். ஆராய்ச்சிக்கு வரும் பெண்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்ததால் சில ஆண் அதிகாரிகளும் அவளின் புண்ணியகாரித்தை ஆதரித்தார்கள்.

ஒரு பெண் இப்படி செய்திருக்க முடியுமா ? பெண்ணுக்கு என்ன தான் காம பசி இருந்தாலும் ஆண்களை கொலைச்செய்யும் சைகோவாக இருந்திருக்க முடியுமா ? அந்த ஊரில் சட்டமே இல்லையா ? என்ற பல கேள்விகள் நீங்கள் கேட்கலாம். அதற்கு பதில் அவள் செய்தது சட்டப்படி சரி தான். காரணம், அந்த பெண்ணால் பாதிக்கப்பட்ட ஆண்களும், பெண்களும் யூதர்கள். அந்த கொடூர செயலை செய்தவள் நாஜியின் மரண மூகாமான புசென்வல்ட் (Buchenwald) (1937- 1941), மஜ்டானெக் ((Majdanek 1941-1943) தலைமை அதிகாரியான இல்சா கோச்.



பெண் என்றால் பேய் இறங்கும் என்பார்கள். பேயே பயப்படும் அளவிற்கு இல்சா போன்ற பெண்கள் இருப்பதால் தான் இந்த பழமொழி வந்திருக்குமோ என்று தோன்றும் அளவிற்கு வாழ்ந்திருக்கிறாள்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு யூதர்கள் எப்படி எல்லாம் கொடுமை செய்யப்பட்டார்கள், நாஜி படையினர் என்ன கொடுமை செய்தனர் என்று பல தகவல்கள் வெளிவந்தன. பல யூதப் பெண்கள் நாஜி படையினரின் காமத்து பலியாகியிருக்கிறார்கள். குழந்தைகளை விஷ வாயுப் போட்டு கொன்றுயிருக்கிறார்கள். முதியவர்கள் மூகாமுக்கு அழைத்து செல்லும் முன் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு அதிகாரியும் நல்லவர் என்று சொல்ல முடியாமல் தங்கள் தகுதிக்கு ஏற்றாற் போல் கொடுமைகள் செய்துள்ளனர். இப்படி, நீண்டுக் கொண்டுயிருக்கும் பட்டியலில் ஆண்களும் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை சொல்லித்தானாக வேண்டும்.

சாதாரன பெக்ட்ரி ஊழியனின் மகளாக பிறந்து, கணக்கு பாடத்தில் ஆர்வம் கொண்டு அதையே பாடமாக ஏற்று படித்தாள் இல்சா கோச். முதல் உலக போரில் ஜெர்மனுக்கு ஏற்ப்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலும் அவளுக்கு வேலை இருந்துள்ளது. எல்லோரைப் போலவே சாதாரன பெண்ணாகத் தான் வாழ்ந்திருக்கிறான். 1932ல் நாஜியில் உறுப்பினரானாள். அங்கு ’கரல் ஓட்டோ கோச்’ என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டாள். ஹிட்லர் மரண முகாம் அமைக்கும் வரை அவள் சராசரி பெண்ணாகத் தான் பலருக்கு தெரிந்திருக்கிறாள். அவளின் கணவன் கர்ல் ஓட்டோ கோச்சுக்கு Buchenwald முக்கிய தலைமை பொறுப்பு கிடைத்தப் போது அவளும் தன் கணவனோடு மூகாமுக்கு சென்றாள்.

தன் கணவனின் தூண்டுதலில் பெயரில் முதலில் கைதிகளை கொடுமைப்படுத்தினாள். வெட்டவெளியில் ஒரு கைதி இன்னொரு கைதியை பலாத்கார செய்ய வைத்து ரசித்தாள். பெண் கைதிகளை ஆண் இராணுவ அதிகாரிகளுக்கும், அழகான யூத ஆண்களை தனக்கும் என்ற எழுதப்படதா ஒப்பந்தப்படி வன்கொடுமை நடத்தினாள். பல பெண் கைதிகளின் உறுப்பின் மின்சாரம் பாச்சி மகிழ்ந்திருக்கிறாள். ஒவ்வொருவரின் மரணமும் இல்சாவுக்கு கேளிகையானது.

1941ல் அவளின் கணவனுக்கு 'Majdanek' மாற்றாலாகி சென்றபோது கூட கணவன், மனைவி இருவரின் அட்டக்காசம் ஓயவில்லை. ஒரு கட்டத்தில் கணவன், மனைவி இருவரும் எஸ்.எஸ். படையினரால் கைதி செய்யப்பட்டனர். யூதர்களை வன்கொடுமை செய்த குற்றதிற்காக அல்ல. எஸ்.எஸ் படை பிரிவினர் பணத்தை தவறாக பயன்ப்படுத்தியதற்காக. எஸ்.எஸ் நீதி மன்றத்தில் ஓட்டோ கோச்சுக்கு மரண தண்டனை வழங்கியது. இல்சா அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டாள். இருந்தும் அவள் செய்த பாவம் அவளை விடவில்லை. ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்க அரசு யுத்த குற்றவாளிகளில் அவளை கைது செய்தது.

ஆறு ஆண்டுகள் மரண மூகாமில் அவள் நடத்திய கொடுமை வாழ்நாள் கடைசி வரை அனுபவித்தாள். தன் வாழ்க்கை முழுக்க நீதி மன்றமும், தண்டனையும் மாறி மாறி பார்க்க வேண்டியதாக இருந்து. 1967ல் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டாள்.

ஹிட்லர் கொடுமையான செயல்கள் செய்ததால் அவன் கீழ் இருக்கும் அதிகாரிகளும் அப்படி கொடுமை செய்தார்களா ! அல்லது ஹிட்லரின் இராணுவ அதிகாரிகள் பலர் கொடுமை செய்ததால் ஹிட்லருக்கு கெட்ட பெயரா என்ற சந்தேகம் வர தொடங்கியுள்ளது. காரணம், ஹிட்லரை விட அவன் கீழ் இருக்கும் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செய்த கொடுமைகள் பல இருக்கிறது.

இன்றும், தலைமையில் இருப்பவர்களை விட அவர்களுக்கு கீழ் இருப்பவர்களின் ஊழலும், அட்டகாசமும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை நாம் அனுபவைத்துக் கொண்டுயிருக்கிறோம்.

தலைமை மட்டுமல்ல அவர்கள் கீழ் வேலை செய்பவர்களும் நல்லவர்களாக இருக்க மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் !!

Wednesday, December 29, 2010

ஹைக்கூ கவிதைகள் - 7

பசியோடு வாடும்
விவசாயிகளுக்காக
மந்திரி உண்ணாவிரதம் !

**

பெற்றோர்களை சுமக்காத
கரங்கள் சுமக்கிறது
கடவுளை !

**

ஒரே சாலையில்
இரண்டு ஊர்வலம்
மரணமும், கடவுளும் !

**

மனைவியை எதிர்த்து
கணவனின் பிரசவம்
புத்தக வெளியீடு !

**

நீங்கதான் சாவி புத்தகம் வாசித்த ஒரு வாசகர் என்னிடம் சொன்ன ஹைக்கூ

சாவிகள் தொலைகின்றன
சாவிக்கு
பூட்டு !

Tuesday, December 28, 2010

நூல் வெளியிட்டும், விமர்சனமும் !

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மறக்க முடியாத ஒரு நிகழ்வு. இது வரை வந்த நூல்களின் விமர்சணமும், கருத்துகளும் இன்னும் மேலும் பல ஆண்டுகள் பயணம் செய்ய உதவியாக இருந்தது.

விழா நிகழ்வில் நடந்த சில குறிப்புகள்.

பரிசல் கிருஷ்ணா எழுதிய டைரி குறிப்பும் காதல் மறுப்பும்பற்றி ‘கல்வெட்டு’ சொர்ணபாரதி

சிறுகதை என்பதை விட சின்ன கதை என்று சொல்லி புத்தகத்தை பற்றி தொடங்கினார். பெரும்பாலான கதைகள் ஜனரக பத்திரிக்கைகளுக்கு எழுதப்பட்ட கதைகளாக தான் இருக்கிறது. மனதை வருடும் படியான கதை இல்லை என்பதை கூறினார்.

BUTTERFLY EFFECT, இருளின் நிறம், டைரி குறிப்பும் காதல் மறுப்பும் கதைகளை மேற்கோள் காட்டி பேசினார். பரிசல் தனது ஒவ்வொரு கதையிலும் இறுதியில் திரைப்படத்திற்கு தேவையான ட்விஸ்ட் வைத்திருப்பதை கூறினார்.

குகன் எழுதிய என்னை எழுதிய தேவதைக்கு பற்றி மணிஜீ

'என்னை எழுதிய தேவதைக்கு' தலைப்புக்கு பதிலாக 'என்னை எழுதிய தேவதைகளுக்கு' என்று பன்மையில் தலைப்பு வைத்திருக்கலாம் என்று சொல்லி தொடங்கினார்.

எனக்கும், அவருக்கும் நட்பு தொடர வேண்டும் என்றால் இந்த புத்தகத்தை விமர்சணம் செய்யாமல் இருப்பது நல்லது என்று கூறினார். (இதுக்கு நாலு வார்த்தை என்னை திட்டியிருக்கலாம்.)

தனிப்பட்ட முறையில் அவருக்கு புத்தகம் பிடிக்காததால் பெரிதாக விமர்சணத்தை முன் வைக்கவில்லை. ஆனால், தன் மனைவிக்கு இந்த புத்தகம் பிடித்திருப்பதாக சொன்னார். ( முன்பே தெரிந்திருந்தால் அவரை விமர்சணம் செய்ய அழைத்திருக்கலாம்)

கேபிள் சங்கர் எழுதிய 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' பற்றி அமிர்தம் சூர்யா

தனக்கும், சங்கருக்கும் ஆரம்பித்த நட்பின் கதையை சொல்லிவிட்டு புத்தக விமர்சணத்திற்கு வந்தார். நிகழ்ந்த மூன்று நூல் விமரசணங்களில் சூர்யாவின் விமர்சணம் தான் நிறைவாக இருந்தது.

தனது விமர்சணத்தில் அவர் சொல்ல வந்த முக்கிய கருத்து. சங்கர் தன்னோடு பாதையை முன்பே தெளிவாக தீர்மானித்து விட்டதால் அவர் காமம் கலந்த கதையை எழுதுவார். அவரால், வேறு சமூக கருத்துள்ள கதை எழுதத் தெரிந்தவர் என்றாலும் தன் பாதையில் கவனமாக இருப்பதை கூறினார்.


4:45க்கு வருவதாக சொன்ன சீமான் அவர்கள் 6:20 மணிக்கு வந்தார். நூல் வெளியிடுபவர் தாமதமாக வந்தால் நூல் விற்பனை எப்படி பாதிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். ஒரு சிலர் உயிர்மை நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டனர். இருந்தும், சீமான் வந்த போது கூட்டம் நிறைவாக இருந்தது.

நீங்க தான் சாவி பற்றி சீமான்

புத்தகத்தை பற்றி சொல்லும் போது முகப்பு அட்டைப்படத்தை மிகவும் பாராட்டினார்.

மனிதன் பென்சிலாக இருக்க வேண்டும் என்று குரிப்பிட்டு இருக்கும் 'பென்சில் வாழ்க்கை' கட்டுரையை சிலாகித்து பேசினார். 'தட்டிக் கேளுங்கள்' என்ற கட்டுரையை நாட்டில் நடக்கும் பிரச்சனையை குறித்து பேசப்படும் கட்டுரையை மேற்க் கோள் காட்டியிருக்கிறார்.

உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி

இந்த நூலை அவர் படிக்கவில்லை. நமது வாழ்க்கைக்கு வழி நம் கையில் தான் இருக்கிறது. குரங்குக் கூட கை ரேகை இருக்கிறது. அது ஜோசியனிடம் கை காட்டுவதில்லை. ஆனால், மனிதன் தான் தன் கையை நம்பாமல் ரேகையை நம்புவதாக கூறினார்.

பதினைந்து நிமிடம் வரை பேசிய அவர் துளிக் கூட அரசியல் கலக்காமல் பேசியது ஆறுதலாக இருந்தது. விழா நிகழ்ச்சிக்கு சால்வை போடுவதிற்கு பதிலாக புத்தகம் கொடுக்க வேண்டும் என்பதை கூறினார். ( பதிப்பகம் தொடங்கி சிறப்பு விருந்தனர்களுக்கு நினைவு பரிசாக புத்தகம் கொடுப்பதால் தப்பித்தேன்.)

இந்த விழாவில் சில நல்ல பாடங்களை கற்றுக் கொண்டேன்.அதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

மேல் குறிப்பிட்டுள்ள அத்தனை புத்தகங்களும் 34வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

Monday, December 27, 2010

நாகரத்னா பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் !!

உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி நூலை சீமான் வெளியிடுகிறார்.


சுரேகா, கனியன் செல்வராஜ், சீமான், மனோஜ் கிருஷ்ணா (’ஊர் காவலன்’ படத்தில் ரஜினி தம்பியாக நடித்தவர்), குகன்

நீங்கதான் சாவி நூலை சீமான் வெளியிடுகிறார்.

சுரேகா, சீமான், மனோஜ் கிருஷ்ணா (’ஊர் காவலன்’ படத்தில் ரஜினி தம்பியாக நடித்தவர்), குகன்



வேடியப்பன், சீமான், குகன், சுரேகா







இறையாண்மையை பற்றி சிறுவனுக்கு சீமான் விளக்குகிறார்.




காவேரி கணேஷ், இளங்கோ, நர்சிம்

Saturday, December 25, 2010

நூல் வெளியீட்டு விழா !!



நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தோழர் சீமான் அவர்கள் கலந்துக் கொண்டு, சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவிஎன்ற நூலையும் மற்றும் கனியன் எழுதிய உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ நூலையும் வெளியிடுகிறார்.

மேலும், நாகரத்னா பதிப்பகத்தின் மூன்று நூல்கள் விமர்சண நிகழ்வும் நடக்கவிருக்கிறது.

கேபிள் சங்கர் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ நூலை விமர்சணம் செய்பவர் அமிர்தம் சூர்யா ( ‘கல்கி’ துணை ஆசிரியர்)

பரிசர் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’ நூலை விமர்சணம் செய்பவர் ’கல்வெட்டு’ சொர்ணபாரதி ( ‘’கல்வெட்டு பேசுகிறது’ இலக்கிய மாத இதழ் ஆசிரியர்)

குகன் எழுதிய ’என்னை எழுதிய தேவதைக்கு’ நூலை விமர்சணம் செய்பவர் தோழரும், பதிவருமான மணிஜி அவர்கள்.

நிகழ்ச்சி 4:30 மணிக்கு தொடங்கி 6:30 மணிக்குள் முடிந்துவிடும்.

Wednesday, December 22, 2010

ஹைக்கூ கவிதைகள் - 6

விவசாயம் கண்ணில் தெரியவில்லை
டாஸ்மார்க்
நடத்துபவர்களுக்கு !

**

சுதந்திர
குளியல்
அகதி முகாமில் !

**

அரசாங்க அறிவிப்பு
விடுமுறை எடுத்துக் கொண்டது
மழை !

**

அண்டை நாட்டு
சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறது
இந்திய ஜனநாயகம் !

**

வெளிநாட்டுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டார்
புத்தர் !

**
சட்டவிரோதமாக
தண்டனை அனுபவித்தனர்
சிறையில் போராளிகள் !

Tuesday, December 21, 2010

நாகரத்னா பதிப்பக நூல் வெளியீட்டு விழா!!



நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தோழர் சீமான் அவர்கள் கலந்துக் கொண்டு, சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவி’ என்ற நூலையும் மற்றும் கனியன் எழுதிய ‘உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ நூலையும் வெளியிடுகிறார்.

மேலும், நாகரத்னா பதிப்பகத்தின் மூன்று நூல்கள் விமர்சண நிகழ்வும் நடக்கவிருக்கிறது.

கேபிள் சங்கர் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ நூலை விமர்சணம் செய்பவர் அமிர்தம் சூர்யா ( ‘கல்கி’ துணை ஆசிரியர்)

பரிசர் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’ நூலை விமர்சணம் செய்பவர் ’கல்வெட்டு’ சொர்ணபாரதி ( ‘’கல்வெட்டு பேசுகிறது’ இலக்கிய மாத இதழ் ஆசிரியர்)

குகன் எழுதிய ‘என்னை எழுதிய தேவதைக்கு’ நூலை விமர்சணம் செய்பவர் தோழரும், பதிவருமான மணிஜி அவர்கள்.

நிகழ்ச்சி 4:30 மணிக்கு தொடங்கி 6:30 மணிக்குள் முடிந்துவிடும்.

உயிர்மை வெளியீட்டு , கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்று காரணம் சொல்லாமல் அனைவரும் நிகழ்ச்சி வருக....

Friday, December 17, 2010

2010 சிறந்த அரசியல், சினிமா !!!

இப்போதெல்லாம் அரசியல், சினிமா இரண்டு தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை. ஒன்று சினிமாவை வைத்து அரசியல் நடக்கிறது. இல்லை என்றால் சினிக்காரர்கள் அரசியல் செய்கிறார்கள். அதனால், இரண்டும் சேர்ந்து காக்டைல் நகைச்சுவை.

இந்த வருடம் சிறந்த அரசியல்வாதி ?
ஆ.ராசா
(அறுபது வருட இந்திய அரசியல் நடந்த எல்லா ஊழலை தன் ஒரே ஊழலில் முந்தி சென்றுள்ளார். )

இந்த வருடம் அரசியல் புது வரவு ?
'இளைய தளபதி' விஜய்.
(ரஜினி மாதிரி வருவேன்...வருவேன்... சொல்லிக்கிட்டே இருக்காம நிஜமாவே வந்திருவாரோ நினைக்க வச்சிட்டாரு)

குஷ்பு ( ஒரு வழியா எல்லா கேஸ்ல இருந்து வெளியே வந்தாச்சு )

இந்த வருடம் சிறந்த கட்சி ?
காங்கிரஸ்
( ஒருவர் தி.மு.கவுக்கு எதிராக பேசுவார்.
இன்னொருவர் தி.மு.கவோடு தொழமையாக இருப்பார்.)

அடுத்த வருடம் யார் யாரோட கூட்டனி ?
அந்த முடிவு எடுக்க தெரியாம தானே எல்லா கட்சியும் தவிச்சிக்கிட்டு இருக்கு.(அதுவரைக்கும் பத்திரிகை நல்ல விற்பனையாகும்)

2011ல்ல யாரு ??

ஜெயலலிதா : தி.மு.க தவிர எல்லா கட்சிகளும் அ.தி.மு.கவுடன் கூட்டனி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். 2011ல் மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

விஜய்காந்த் : என் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டனி வைத்துக் கொள்ள தயார்.

ராமதாஸ் : தமிழ் நாட்டில் மூன்றாவது அணி அமைந்து, அவர்கள் ஆட்சி அமைய வேண்டும்.

சரத்குமார் : எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை. எந்த கட்சியும் எங்களை பார்த்து பயப்பட வேண்டாம்.

கலைஞர் : தமிழக மக்கள் எங்கள் ஆட்சியை விரும்பவதால் அடுத்த வருடம் தேர்தலே இல்லை.


இந்த வருடம் நடந்த சிறந்த கூட்டம் ?
சினிமாக்காரர்கள் பத்திரிகையாளர்களை திட்டியக் கூட்டம் தான்.
(குடும்ப பெண்களை (!) தவறாக எழுதியதை கண்டித்து பத்திரிகை குடும்ப பெண்களை திட்டியது)

இந்த சிறந்த தண்டனை ?
முதல்வர் முன் உண்மையை மேடையில் சொன்னதற்காக அஜீத் முதல்வர் பேரன் படத்தில் நடிப்பது.


இந்த வருடம் டாப் 5 படங்கள்


சன் டி.வி :-

1.எந்திரன்
2.சிங்கம்
3.தில்லாலங்கடி
4.சுறா
5.ஆடுக்களம் ( படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியேவா !!!)


கலைஞர் டி.வி :-

1.பெண் சிங்கம்
1.மதராசபட்டினம்
2.தமிழ்படம்
2.பையா
3.விண்ணை தாண்டி வருவாயா
3.மைனா
4.நான் மகான் அல்ல
4.பாஸ் (எ) பாஸ்கரன்
5.வ - குவாட்டர் கட்டிங்
5.இரத்த சரித்திரம்

( 18 எம்.பி வச்சிக்கிட்டு 8 மந்திரி சீட் கேட்டவராச்சே !)

ஜெயா டி.வி :-

எல்லா படங்களை கலைஞர் வாரிசுகள் வாங்கிவிட்டதால், இந்த நிகழ்ச்சி ஜெயா டி.வியில் ரத்து செய்யப்படுகிறது.

மக்கள் டி.வி :-

இந்த வருடம் தமிழ் படமே வரவில்லை.

இந்த வருடம் சிறந்த நடிகர் ?
விஜய் தான். ( அரசியலில் நிஜமா நடிக்க தெரியனும். சினிமாவிலே சுமாரா நடிக்கிறாரு. எப்படி சமாளிக்க போறாரோ !!)


இந்த வருடம் சிறந்த நடிகை ?
தமனா ( சன் டி.வி. சிபாரிசு) மற்றும் நமீதா (கலைஞர் டி.வி சிபாரிசு )

எந்த வருடமும் சிறந்த தயாரிப்பாளர் ?
சன் குழுமம்

Thursday, December 16, 2010

வெட்டுப் புலி : தமிழ்மகன்

சென்ற வருடம், இரண்டு மாதமாக செலவிட்டு, மெனக்கிட்டு எழுதிய நாவல் 'அந்த மூன்று பெண்கள்'. ஆகஸ்ட் 15, 1947ல் பிறந்தவன் வாழ்க்கையில் மூன்று பெண்கள் அவனின் திராவிடக் கொள்கையை எப்படி மாற்றுக்கிறார்கள் என்பது தான் கதை கரு. திராவிட பதிவாக பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் கெஸ்ட் அபிரன்ஸாக அந்த நாவலில் வருவார்கள்.

1947 முதல் தற்காலம் வரை கதை நடக்கிறது. எழுதி முடித்த பிறகு அழியா காவியத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சி. புத்தகமாக்கும் முன்பு நண்பர்களின் கருத்தைக் கேட்கலாம் என்று என் நெருங்கிய நண்பன் ஒருவனிடம் கொடுத்தேன். (அவன் எழுத்தாளன் இல்லை. வாசகன் மட்டுமே).

படித்து விட்டு அவன் கூறிய கருத்து, " இனிமே எழுதுறத விட்டுடு" என்பது தான். என் நாவலை படிக்க சொன்னதிற்காக ரூ.500 அபராதம் (சரக்கு) வாங்கிக் கொண்டான். அது சரி, ‘வெட்டுப் புலி’ நாவல் விமர்சணத்தில் சொந்த புராணம் எதற்கு ? நானும் மிஷ்கின்ப் போல் ஆகிவிட்டேனா என்று நினைக்க வேண்டாம்.

வெட்டு புலி நாவலைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்லிவிட்டு பிறகு சொல்கிறேன்.



தமிழ்மகன் எழுதிய 'எட்டாயிரம் தலைமுறை' சிறுகதை தொகுப்புக்கு தமிழக சிறந்த சிறுகதை தொகுப்புக்கு பரிசு கிடைத்தது. இதில் கலைஞர், எம்.ஜி.ஆரை திட்டியிருப்பதால் கண்டிப்பாக இந்த புத்தகத்திற்கு தமிழக அரசு விருது கிடைக்காது. எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுப்பில் ஒரு சில கதைகள் என்னை கவர்ந்ததால் இந்த புத்தகம் வாங்கினேன்.

1930ல் தொடங்கி தற்காலத்தில் வரை திராவிட பரிமாற்றத்தை பதிவு செய்திருக்கிறார்.

ஒரு நாவல் இயக்கத்தின் வரலாற்றை பதிவு செய்ய இயலுமா என்று பிரம்மிக்கும் அளவிற்கு எளிய நடையில் பல முக்கிய சம்பவங்கள் பதிவாகிறது.

நாற்பதுகளில் பெரியார் கொள்கையில் பிராமிண அல்லாதவர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டனர். ஆனால், தற்காலத்தில் பெரியாரின் கொள்கையை பிராமணர்கள் விரும்புவதை ஒரு இடத்தில் காட்டியிருப்பது ரசிக்கதக்கது.

லட்சுமண ரெட்டியின் முந்தைய, பிந்தைய தலைமுறைகள் கொண்டு நாவல் செல்கிறது. மேலும், கிளை கதாபாத்திரங்கள் வாயில திராவிட கொள்கை, நம்பிக்கை அழிந்து வருவதையும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வசனங்கள் பாத்திரத்திற்கு ஏற்றதாக இருப்பதால் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தை யூகிக்க முடியவில்லை. ஒரு பாத்திரம் திராவிடத்தை விரும்பி ஆதரத்து பேசினால், கடவுளை நம்பும் பாத்திரம் நேர்மாறாக பேசுகிறது. இரண்டுக்கும் பதில் அளிக்க முடியாமல் இருக்கும் கதை நகர்கிறது.

தியாகாரசன் “அவனுங்களால தான் நம்ம் வாழ்க்கை இப்படி நாறிக்கிட்டு இருக்குது” என்று பார்ப்பனர்களை திட்டும் போது, எதிர் கருத்துள்ள மனைவி தன் கழுத்தில் தொங்கும் நகையையும், புடவையும் அவசரமாகப் பார்த்துவிட்டு நல்லாத்தானே இருக்கிறோம் என்று எறிட்டுப் பார்த்தாள். மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.


இந்த நாவலில் பெரிய குறையாக என் கண்ணில் பட்டது இரண்டு விஷயம் தான்.

1.

நவம்பர் 1, 1956 அன்று மொழிவாறியாக மாநிலம் பிரிக்கப்பட்டதைப் பற்றி எந்த குறிப்புகளும் இதில் இல்லை. பெரியார், அண்ணா போன்றவர்கள் காட்டாத எல்லை போரை மா.போ.சி அவர்கள் போராடி சென்னை வரை தமிழ் நாட்டுக்கு மீட்டு தந்தார். திராவிடர்கள் ஆர்வம் காட்டாத எல்லை போரை திராவிட புனைவில் ஆர்வம் காட்டாமல் குறிபிடாமல் விடுப்பட்டு போனது.

2.
திராவிர வரலாறு பற்றிய புனைவாக இருந்தாலும் சாதியை விட முடியவில்லை. ரெட்டி, நாயகர், மலையாளி என்று ஜாதி பெயரை திராவிட கதாபாத்திரங்கள் பேசும் அதை எதிர்த்து வாசகனாக குரல்க் கொடுக்கிறோம். அதையும் காதில் வாங்கிக் கொள்ளாத அரசியல்வாதிப் போல் வாசகனும் அடுத்த பக்கத்திற்கு கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. (அன்றைய திராவிடர்கள் குறித்து ஆசிரியரின் பகடியாகக் கூட இருக்கலாம்)

எனினும் இந்த வருடத்தில் வந்த மிக சிறந்த நாவலில் கண்டிப்பாக 'வெட்டுப் புலி’ நாவல் இடம் பெறும் என்று நினைக்கிறேன்.

நான் எழுதிய 'அந்த மூன்று பெண்கள்' நாவலுக்கும், வெட்டுப் புலிக்கும் என்ன சம்மந்தம் என்பதற்கு பதில் சொல்ல வில்லையே !!!

நண்பனின் கருத்தை பெரிதாக அந்த நாவலை திருத்தி எப்படியாவது புத்தகமாக்கலாம் என்று இருந்தேன். இருந்தும், சில பகுதிகள் எனக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. வெட்டுபுலி நாவலை படித்ததும் நான் எழுதிய ஒரு சில இடங்கள் இதில் பெற்று இருப்பதை உணர முடிந்தது.

அந்த நாவலை மாற்றி புத்தகமாக வந்தால், ஒன்று பெயர் கெட்டுவிடும் அல்லது Inspiration (உருவி) எழுதிய நாவலாக கருதப்படும். அதனால், Shift + Delete and Enter.

உயிர்மை பதிப்பகம்
ரூ.220, பக். : 378

Tuesday, December 14, 2010

பெரியார் பெருமைகள்

பெரியாரின் கேள்வி நேரம்

அப்போவெல்லாம் ஐயா பேசற கூட்டங்கள்லே,கேள்வி-பதில் நிகழ்ச்சி கண்டிப்பா இருக்கும்.எந்த கக்ஷ்டமான கேள்விக்கும் அப்பவே ஐயா அருமையான பதில் சொல்வாரு.

அந்த கேள்விக்கு பதில்களை யாரவது தொகுத்திருந்தா இன்னைக்கு அதை ஒரு அருமையான புத்தகமா வெளியிடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும்.

அன்னைக்கு காரைக்குடி கூட்டத்திலேயும் அது மாதிரி கேள்வித்தாளைத்தான் ஐயாகிட்டே கொடுக்கிறாங்கனு நெனச்சுக்கிட்டு நாங்க எல்லாம் பேசாம இருந்துட்டோம்.வழக்கமா ஐயா முதல்லே மைக்லே அந்தக் கேள்வியை படிச்சுட்டு அப்புறம் தன்னோட பதிலை சொல்வார் .ஆனா அன்னைக்கு அந்த தாளை படிச்சுட்டு ஒன்னும் சொல்லாம பக்கதிலே இருந்த அண்ணாக்கிட்டே அதைக் கொடுத்திட்டார்.அண்ணா படிச்சு பார்த்த்தும் லேசா சிரிச்சுட்டே மைக்குக்கு வந்து பொது மக்களை பார்த்து

இங்கே யாரோ ஒரு தாள்லே தன்னோட பெயரை மட்டும் எழுதிட்டு கேள்வியை எழுத மறந்திட்டாரு.ஆகையினால் அந்த தாளை நம்ம இராம.சுப்பையாவிடம் கொடுக்கிறேன், அவர் அதை உங்களிடம் கொண்டு வருவார்.அது யாரோட பேரோ அவங்க மேடைக்கு வந்து மீண்டும் தங்கள் கேள்விகளை கொடுக்கலாம்னு சொல்லிவிட்டு அதை எங்கிட்ட தந்தார்.அந்த தாள்லே “நான் ஒரு முட்டாள்னு” எழுதியிருந்தது.

இதை கேள்வினு நினைச்சுக்கிட்டு பெரியார் மைக்கிலே படிப்பார்ங்கிற நோக்கத்திலே யார் அதை கொண்டு வந்து கொடுத்தானோ அவனே அன்னைக்கு பெரிய முட்டாள் ஆயிட்டான். அண்ணாவோட குறும்பும் புத்திசாலிதனமும் ஐயாவையே ஆச்சிர்யப்பட வைச்சுடுச்சு. இப்படி அனுபவத்தை சொல்கிறார் இராம.சுப்பையா

**



பெரியாரின் பன்பு

இடுக்காட்டில் இராஜாஜியின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் வி.வி.கிரி வந்தருந்தார். சுடுகாட்டில் அவர் நின்று கொண்டிருந்தார். பெரியார் அவர்கல் அருகில் ஒரு சக்கர-நாற்காலியில் அமர்ந்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தார். அந்த நிலையிலும், பெரியார் என்னையும் விடுதலை சம்பந்தத்தையும் அருகில் அழைத்து “என்னை இறக்கி கீழே உட்காரவையுங்கள், கிரியை இந்த வண்டியில் உட்கார சொல்லுங்கள்.அவர் குடியரசு தலைவர்.அவர் நிற்கும் போது நாம் அமர்ந்திருப்பது மரியாதையாக இல்லை,என்றார்.

ஜனாதிபதி கிரியிடம் இதை தெரிவித்தபோது பெரியாரின் பண்பைக்கண்டு பெரிதும் வியந்து போனார். என்கிறார் முன்னால் அமைச்சர் ராசாராம்.

எழுந்து நிற்கமுடியாத அந்த தள்ளாத வயதிலும் குடியரசு தலைவரின் பதவிக்கு மரியாதை கொடுத்த பெரியாரின் இந்த பண்பு .ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை நிற்க வைத்துவிட்டு தாம் மட்டும் உட்கார்ந்து கொண்டு பேசிய பெரியவாள் சின்னவாள்களுக்குத் தெரியுமா?

**

1929 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு சொற்பொழிவுக்காக நானும் பெரியாரும் சென்றிருந்தோம்.எதிர்ப்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக எதிர்ப்பு நோட்டீசுகள் சில போட்டிருந்தார்கள்.அதில் ”பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர்.நாத்திகர்.அவரை இன்று பேசவிடக்கூடாது“ என்றிருந்தது.

கூட்டம் மாலை 6 மணிக்கு.ஆனால் 6.30 ஆகியும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களும் எங்களை அழைத்தவர்களும் வரவில்லை.”பேசாமல் திரும்பி போய்விடுவது நல்லது”என்றேன். அவரும் சரி என்று இரயில் நிலையத்திற்க்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன்னார்.
வண்டியில் அமர்ந்ததும் பெரியார் வண்டிகாரணிடம் கூட்டம் நடக்கும் இட்த்தின் வழியாக இரயிலடிக்கு போகும் படி சொன்னார். அந்த இடம் வந்த்தும் பெரியார் பார்த்தார்.சுமார் 500 பேர்கள் அங்கு கூடியிருந்தனர்.மேடையில் நாற்காலி எதுவுமில்லை. எங்களை வரவழைத்த ஆட்களும் இல்லை.

உடனே பெரியார் வண்டியை நிறுத்தச் சொல்லி தனியாகவே போய் மேடையில் ஏறினார்.
“பொது மக்களேநான் உங்கள் முன் இப்போது பேச வரவில்லை.ஒரு உண்மையைச் சொல்லி போகவே வந்தேன்.

புராணங்களை போய் என்று நான் சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள்.அது நான் சொல்லவில்லை. சைவ புராணங்களை எல்லாம் பொய் என்று கண்டுபிடித்து சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்களையெல்லாம் பொய் என்று கண்டுபிடித்து சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங்களுமே பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு. ஆக புராணங்களை போய் என்று சொன்னவர்கள் சைவ-வைணவப் பண்டிதர்கள்தான் இதை சொல்லி போக தான் வந்தேன். என் மேல்பழி போடாதீர்கள்.” என்று பெரியார் சொன்னதும் ஓயாமல் கை தட்டி மக்கள் ஆரவாரம் செய்தார்கள். அங்கு தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பெரியார் பேசினார் அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள்.

சொன்னவர் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம்.

**
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு

1970ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரைவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர் சந்திர சேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுபாடு சம்பந்தமான ஆராய்ச்சியாளர் அவர்.

வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர்.அவர் பெரியாரை சந்தித்து மக்கள் தொகையை கட்டுபடுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?”என்றார்.

“பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள். சரியாகிவிடும்” என்றார் பெரியார்.

கேட்டவருக்கு புரியவில்லை .பெரியார் விளக்கி சொன்னார்.

”உன் மனைவிக்கும் வேலை உன் மகளுக்கும் வேலை,அவர்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிடமாட்டார்.ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்து போய்விடும்” என்றார் பெரியார்.

ஆச்சிர்யப்பச்சு போனார் அந்த அறிஞர்.

“உலகத்தில் வேறு யாரும் சொல்லாத உங்களின் ஒரிஜினல் ஆலோசனை இது” என்று கூறினார் அந்த அறிஙர்.எனவே அவரை (பெரியாரை)ப் பிற்போக்குவாதி என்பதும். அவருடைய கருத்துக்களால் வீழ்ச்சியடைந்தோம் இன்பதும் நேர்மையான குற்றச்சாட்டாக தெரியவில்லை.”

என்கிறார் சிந்தனையாளன் ஆசிரியர் தோழர் வே. ஆனைமுத்து.

தககல் :
பெரியார் 100 பெருகிவந்த பெருமைகள்
தொகுப்பு:சபிதா ஜோசப்
நக்கீரன் வெளியீடு

Monday, December 13, 2010

இரண்டாம் ஆண்டு விழா

வரும் டிசம்பர் 25 அன்று, நாகரத்னா பதிப்பகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மேலும், இரண்டு புத்தகம் வெளியீட்டு விழாவும் மற்றும் விமர்சன கூட்டமும் நடைப்பெறவுள்ளது.

நீங்கதான் சாவி
சுரேகா
பக் : 80, ரூ.50

பதிவரும், இயக்குனருமான சுரேகா அவர்கள் எழுதிய சுயமுன்னேற்ற கட்டுரைகள். கடந்த 8 ஆண்டுகளாக 250க்கு மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் எடுத்திருக்கிறார். அந்த அனுபவம் இந்த புத்தகம் எழுத உதவியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.




உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
கனியன் செல்வராஜ்
பக் : 24, ரூ.10

திருப்பூர் தொழிற்சாலையில் வேலை செய்யும் கனியன் செல்வராஜ் எழுதிய முதல் கட்டுரை நூல். இவருக்கு திருச்சி ஜெயம் கலைத் தொடர்பு மையம் இந்திய அரசு நேருயுவகேந்திராவுடன் இணைந்து ஜெ. ஜகத்ரெட்சகன் தலைமையில் “கவிகலைமணி விருது” வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.




மற்றும்

கேபிள் சங்கர் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’
பரிசல் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’
குகன் எழுதிய ‘என்னை எழுதிய தேவதைக்கு...’

ஆகிய மூன்று சிறுகதை தொகுப்பின் விமர்சணங்களும் நடைப்பெறவுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரமுகர்களைப் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

இடம் :

டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர்.
சென்னை.

Thursday, December 9, 2010

சினிமா : ஹைக்கூ கவிதைகள் - 5

துண்டு விழ வேண்டும்
விரும்பும் தயாரிப்பாளர்
கெமிரா முன் நடிகை !

**

நடிப்பில் இருந்து
ஓய்வு எடுக்க விரும்பவில்லை
அரசியலில் நடிகன்

**



அம்மாவும், மகளும்
போட்டிப் போட்டுக் கொண்டார்கள்
ஆடை குறைப்பில் !

**

காமம் தீர்ந்த பின்னும்
பத்திரிகையில் பேட்டிக் கொடுத்தனர்
'நாங்கள் நண்பர்கள்' என்று !

**

Wednesday, December 8, 2010

சிறுகதை to குறும்படம்

பொதுவாக கதை எழுதியவரே திரைக்கதை அமைக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்காது. ‘ஒன்பது ரூபா நோட்டு’ நாவலை எழுதிய தங்கர்பச்சன் போல் எழுதியவரே படம் இயக்கினால் மட்டுமே முடியும். கேபிள் சங்கர் எழுதிய ‘ லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ சிறுகதை தொகுப்பில் இருந்து ‘போஸ்டர்’ சிறுகதை குறும்படமாக்கப்பட்டது. இதில், சுவையான தகவல் என்றால் கதை எழுதியவரே திரைக்கதை அமைத்திருப்பது தான். எதோ நானே எழுதிய சிறுகதை படமாக பார்த்ததுப் போல் உணர்வு. நாகரத்னா பதிப்பக வெளியீடு புத்தகத்தில் இருந்து குறும்படம் வந்திருக்கிறது என்றால் பெருமை தானே !!!

வாசித்த கதை திரையில் பார்க்கும் போல் வாசகன் கற்பனையில் இருக்கும் காட்சிகள் மாறுப்படும் என்பதை இந்த குறும்படம் உணர்த்தியது. வாசகன் இடத்தில் இருந்து பார்வையாளன் வட்டத்தில் இருப்பவர்களுக்கு திருப்பி படுத்த சில காம்பிரமைஸ் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால், இந்த கதையில் எழுதிய 90% சதவீத கதையை காட்சியாக ரவிகுமார் கொண்டு வந்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

கோடிக்கணக்கில் முதலீடு போட்டு வாங்கிய படத்தை தியேட்டரில் ஓட வில்லை என்றாலும், இரண்டு மாதமாவது சன் டி.வி, கலைஞ்ர் டி.வியில் விளம்பரம் ஓடும். வருட முடிவில் ‘டாப் 10’ அந்த மொக்கை படங்கள் இடம் பெறும். தான் எழுதிய சிறுகதை குறும்படமாக வந்திருக்கிறது. எந்த ஒரு ரியாக்‌ஷன் இல்லாமல் தன் பதிவில் ஒரு பெட்டி செய்திப் போல் கேபிள் சங்கர் போட்டிருப்பது எனக்கு வருத்தம் தான். ( Widget விளம்பரப்படுத்தி படத்தை ஓட்ட வேண்டாமா !! )

அண்ணே ! ‘சினிமா வியாபாரம் - 2’ இதை எல்லாம் சேர்த்துக்கொங்க !!


லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகம் வாங்க.... இங்கே

படம் பார்க்க...

Monday, December 6, 2010

உயிர்க் கவிதைகள் : மு.முருகேஷ்

சிறுகதை, நாவல், கட்டுரை என்று வாசிக்க தொடங்கிய பிறகு கவிதை புத்தக வாசிப்பு மிக அறிதாக விட்டது. நண்பர்கள் கட்டாயப்படுத்தி தினித்தால் ஒழிய கவிதை புத்தகங்கள் சமிபத்தில் வாசிக்கவில்லை.

நேற்று (5.12.10) நடந்த ‘ஹைக்கூ திருவிழா’ நிகழ்ச்சியில் இரண்டு மாதம் கழித்து ‘நாகரத்னா பதிப்பக’ சார்பாக புத்தக சந்தை நடத்தினேன். நிகழ்ச்சி நடக்கும் போது மு.முருகேஷ் எழுதிய ‘உயிர்க் கவிதைகள்’ படிக்க வாய்ப்பு கிடைத்தது.

மு.முருகேஷ் அவர்கள் வந்தவாசி இருந்து வந்தவர் மட்டுமல்ல ஹக்கூ கவிதைகளை அதிகம் தந்தவாசியும் கூட. ஹைக்கூ எழுத்தாளர்களில் முக்கிய கருதப்படுபவர். ஹைக்கூ எழுத பல எழுத்தாளர்களை ஊக்கவிப்பவர். இப்படி இவரைப் பற்றி கேள்வி எனக்கு, நேற்று தான் முதல் முறை சந்தித்தேன். (ஆனால் அவரிடம் பேசவில்லை) முதல் முறையாக அவரின் புத்தகத்தை வாசித்தேன்.

புத்தகத்தில் இடம் பெற்ற எல்லா ஹைக்கூ கவிதைகளும் குழந்தைகளை மையமாக கொண்டது. ஒவ்வொரு கவிதைக்கு பொருத்தமான புகைப்படங்கள். புகைப்படத்தோடு அவரின் ஹைக்கூவை வாசிக்கும் போது படத்தில் குழந்தையின் உணர்வுகள் நம்மை பற்றிக் கொள்கிறது.

அதில் ஒரு சில ஹக்கூ என்னால் வாசித்தும் மறக்க முடியவில்லை.

சிரித்துத்தான்
மறக்க வேண்டியுள்ளது
பசியை !

**

கொஞ்சமாய் உணவு
சண்டையில்லாமல் பகிர்ந்துண்ணும்
நாயும் குழந்தையும் !

**

அம்மா அப்பா எப்ப வருவாங்க ?
பார்வையால் கேட்கும்
சுனாமியில் தப்பிய குழந்தைகள்

**

இருட்டில் தான் படிக்கிறான்
வெளிச்சமாகும்
நாளைய வாழ்க்கை !

**

கிழிசலைத் தைக்கும் தாய்
விளையாட்டால் கிழிக்கும்
குழந்தை.


ஒவ்வொரு ஹக்கூவிலும் குழந்தைகளிடம் ஒலிந்திருக்கும் சோகத்தை சொல்லுகிறார். கவிதைக்கு பொருத்தமான தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்கள் மிகவும் கச்சிதம். பொதுவாக புகைப்படங்கள் கொண்ட கவிதை தொகுப்பு காதலை சுமந்து தான் வரும். முதல் முறையாக குழந்தையின் உணர்வுகளை சுமந்து வருவதை பார்க்கிறேன்.

குழந்தைகளுக்கான ஒரு உலகம் இருப்பது எல்லோருக்கு தெரியும். எல்லோரும் குழந்தைப் பருவத்தை தாண்டி தான் வந்திருக்கிறோம். வளர்ந்த பிறகு மறந்து விடுகிறோம். குறைந்த பட்சம் மற்ற குழந்தையின் உலகத்தை கெடுக்காமல் இருக்க நம்முடைய குழந்தைப் பருவ உலகத்தை மறக்காமல் இருக்க வேண்டியதாக உள்ளது.

பக்: 48. விலை ரூ.30
அகநி வெளியீடு
வந்தவாசி – 604 408
பேசி: 94443 60421

Friday, December 3, 2010

வினோத் காம்லி

அலுவலகத்தில் நுழைந்ததுமே காலை வெட்டிப்பேச்சாக கிரிக்கெட்டை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். நேற்று நியூசிலாந்து எதிரான ஒரு நாள் ஆட்டத்தில், விராத் கோலி சதம் அடித்தது தான் பேரிய பேச்சாக இருந்தது.

" என்ன பேட்டிங்... கவர் டிரைவ், பிலிக் ஷாட் என்னாவா ஆடுறான் " வியாந்தான் சுந்தர்.

" போன மேட்ச் தான் ஆஸ்திரேலியா கிட்ட 100 போட்டான். அடுத்த மேட்சல நூறு.... நீ பாரு அடுத்த சச்சினா வருவான் " என்று ரிசப்ஷனிஸ்ட் கமலி சொன்னாள்.

மூன்று ஆட்டங்களில் நன்றாக ஆடினால் தலையில் தூக்கி வைத்துக் கொள்வதும், முக்கியமான ஆட்டத்தில் சரியாக விளையாடத போது ஊழல் செய்த அரசியல்வாதியைப் போல் உருவப்படத்தை எரிப்பதும் சகஜமாகிவிட்டது. கிரிக்கெட் வீரர்களுக்கும் இது பழகிவிட்டது.

என்னைப் பொறுத்தவரையில் விராத் கோலி இரண்டு வருடத்திற்கு இந்திய அணியில் இடத்தை தக்க வைத்துக் கொண்டான். மூன்று விக்கெட் விழுந்தால் விக்கெட் விழுவதை நிறுத்தி விளையாடும் பொறுமையான ஆட்டக்காரர் இல்லை. ஒரு நாள், 20-20 ஓவர் ஆட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரெத்தேகிய ஆட்டக்காரன். டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி நிறுபிக்கும் வரை ஒருவனின் உண்மையான ஆட்டத்தை தீர்மானிக்க முடியாது என்பது என் கருத்து.

" என்ன ராம் ! எதுவுமே பேசாம இருக்க.. ?" என்றாள் அக்கவுன்டட் ரமா. என்னிடம் எதிரான கருத்து இருக்கும் என்பதை அவளுக்கு நன்றாக தெரியும். வெட்டிப் பேச்சை சூடான விவாதமாக்க அவளின் நோக்கம் புரிந்தது.

" விராத் கோலி கேம் பெரிய விஷயமா தெரியில்ல. அவன் இல்லனா ரெய்னா, யுவராஜ் அடிச்சிருப்பாங்க..." என்றேன்.

" இவ எப்போதுமே இப்படி தான். யாரையும் என்கரேஜ் பண்ணவே மாட்டான்" என்று என் மேல் இருந்த தனிப்பட்ட கருத்தை சொன்னான் சுந்தர். இரண்டு பெண்கள் முன் என் காலை வாரிவிட நல்ல சந்தரப்பம் அவனுக்கு கிடையாது.


" ஒருத்தனோட உண்மையான விளையாட்ட பத்தி தெரிஞ்சிக்கனும்னா டெஸ்ட் மெட்ச் தான் பெஸ்ட். அதுல அவன் நல்ல விளையாடட்டடும். அவன அடுத்த சச்சின் சொல்லுறேன். அதுவரைக்கும் கோலி இன்னொரு யுவராஜ் சிங் தான்" என்றேன்.

என் கருத்தில் நான் தீவிரமாக இருந்தது சுந்தருக்கு பிடிக்கவில்லை. கமலி, ரமாவும் எங்கள் வாதத்தை ஆர்வமாக கேட்டார்கள். காலை அலுவலகத்தில் இதை விட நல்ல பொழுபோக்கு அவருகளுக்கு கிடைக்கவில்லை.

" அப்போ டிராவிட், லக்ஷ்மண் தான் நல்ல ப்ளேயர் சொல்லுவ..."

"கண்டிப்பா ! எத்தனையோ மெட்சில வேகமா மூனு விக்கெட் விழுந்தா இவங்க இரண்டு பேரும் பொறுமையா நின்னு ஜெய்க்க வெச்சிருக்காங்க. குறைஞ்சது நல்ல ஸ்கோர் எடுப்பாங்க. விராத் கோலி, யுவராஜ் இருக்குற சில மெட்சில இந்தியா நூறுக் கூட தாண்டினதில்ல." என்றேன்.

" ஒன்டே மெட்சில டெஸ்ட் மெட்ச் மாதிரி ஆடுனா அவ்வளவு தான். ஆட்டம் காலி. ஆட்டத்துக்கு தகுந்த மாதிரி விளையாட சச்சினால தான் முடியும்" என்றான்.

இந்த கருத்தும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சச்சினை விட சிறந்த ஆட்டக்காரன் அவனின் பள்ளி நண்பன் வினோத் காம்லி தான். ஒரு பள்ளி விளையாட்டில் சச்சினும், காம்லியும் சேர்ந்து 700 ரன் மேல் குவித்துள்ளனர். இருவரும் ஒரே ஆட்டத்தில் தலா 400 ரன் மேல் அடித்திருக்கிறார்கள். ஆனால், இன்று சச்சின் புகழில் உச்சியில், வினோத் காம்லி இருக்கும் இடம்க் கூட தெரியவில்லை.



தொடர்ந்து இரண்டு டெஸ்ட் மெட்சில் இரட்டை சதம் அடித்தவன். தொடர்ந்து மூன்று ஆட்டத்தில் சதம் அடித்தவன். கங்குலி, டிராவிட் வரும் முன்பு நெ.4 சிறந்த இடம் வினோத் காம்லிக்கு தான் பொருந்தும். என் பள்ளி நாட்களில் வினோத் காம்லி தான் என் ஹீரோ என்று சொன்னால் சுந்தரோடு ரமா, கமலி கண்டிப்பாக சிரிப்பார்கள்.

" என்ன ராம் ! ஒரு பதிலுமே காணோம் " என்றான் சுந்தர்.

என் நல்ல நேரம் மேனேஜர் கார் நுழைவதை கமலி கவனித்தாள். எல்லோரும் அவரவர் இடத்துக்கு சென்று காலை வேலை செய்ய தொடங்கினர் அல்லது செய்வது போல் பாவனை செய்தனர். ஆனால், என்னால் மட்டும் வேலை செய்ய முடியவில்லை. பள்ளியில் படிக்கும் போது நான் ரசித்த வினோத் காம்லி நினைவுக்கு வந்தான்.

1996ல் நடந்த உலகக் கோப்பை அரை இறுதியில் எட்டு விக்கெட்டை இழந்து இந்தியா 120 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இருந்தும், வினோத் காம்லி தன் ஆட்டத்தை இழக்கவில்லை. நம்பிக்கையும் இழக்கவில்லை. கோல்கட்டா ரசிகர்கள் செய்த பிரச்சனையால் இலங்கை வெற்றிப் பெற்றதாக அறிவித்தனர். பள்ளியில் படித்த என்னால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்டிலில் விழுந்து அழுதேன். அன்று இரவு கூட சாப்பிடவில்லை. நம்பிக்கையுடன் இருந்த வினோத் காம்லிக்கு எப்படி இருந்திருக்கும். அழுதுக் கொண்டே மைதானத்தை விட்டு வெளியே வந்தான். ரசிகனின் கண்ணிரை ஒரு விளையாட்டு வீரரின் கண்ணிர் எவ்வளவு விலை மதிப்பற்றது என்று விளையாடுபவர்களுக்கு தான் தெரியும்.



அன்றைய மீடியாக்கள், காம்லியை மெச்சூரிட்டி இல்லாதவன் என்றே வர்ணித்தது. அழுவதுக்கு பதிலாக நன்றாக விளையாடி இருக்கலாம் என்று பல பத்திரிகை எழுதியது. முக்கியமான ஆட்டத்தில் அரை சதம் அடித்ததோடு தன் கடமை முடிந்தது என்று சச்சின் பெவுலியன் திரும்பினான். வெற்றிப் பெற காம்லியை பலர் விமர்சணம் செய்தனர். அதன் பிறகு இந்திய அணியில் காம்லிக்கு இடம் மறுக்கப்படது. கங்குலி, டிராவிட் வந்த பிறகு முன்னனி ஆட்டக்காரனாக இருந்த காம்லி வாய்ப்புக்காக ஏங்கும் சராசரி ஆட்டக்காரனாக நடத்தப்பட்டான்.

உப்பு சப்பில்லாத ஆட்டத்தில் தான் காம்லிக்கு வாய்ப்பு கொடுத்தனர். அதில் கூட 30,40 என்று ரன் எடுத்தான். தன் உண்மையான ஆட்டத்தை காட்ட டெஸ்ட்ப் போட்டியில் காம்லிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு கங்குலி, டிராவிட் தங்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

எல்லோர் மனதிலும் கோபம், அழுகை, வருத்தம் என்று இருக்கும். வெளியே காட்டுவது தான் மனித குணம். இதில் பெரிய தவறு இருபதாக தெரியவில்லை. எவ்வளவு திறமை இருந்தும், தன் உணர்வை கட்டுப்படுத்த தெரியாதவன் வெற்றிப்பெற்றாலும் நீடிக்க முடியாது என்பதற்கு காம்லி முன் உதாரணமாக இருந்தது கவலையான விஷயம் தான். இன்று குரங்கு சொன்ன ஹர்பஜன், கத்தியே விக்கெட் எடுக்கும் ஸ்ரீஷாந் போன்றவர்களுக்கு கொடுக்கும் வாய்ப்புக் கூட வினோத் காம்லிக்கு கிடைக்கவில்லை.

அலுவலகம் நேரம் முடிந்தும் வினோத் காம்லி பற்றிய நினைவு என்னால் அகற்ற முடியவில்லை. வண்டி ஓட்டும் போதுக் கூட "இவன் எல்லாம் விளையாடுறான். காம்லிக்கு வாய்ப்பு கொடுத்திருக்க கூடாத " என்ற ஆதங்கம் மனதில் இருந்துக் கொண்டே இருந்தது.

வீட்டை அடைந்ததும் என் வண்டி வைக்க முடியாத அளவிற்கு கார், டூ விலர் எல்லாம் என் வீட்டின் முன் நின்றுக் கொண்டு இருந்தது. இன்று, அப்பாவுக்கு ரிடையராகிறார் அப்போது தான் என் வீட்டு ஞாபகம் வந்தது. அம்மா வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கு காபி, ஸ்வீட் ஒவ்வொன்றாக கொடுத்தார். சம்பிரதாயத்துக்கு அப்பாவின் அலுவக நண்பர்களை பார்த்து சிரித்தேன்.

" மிஸ்டர் மாகாலிங்கம் ! இனிமே ஆபிஸ் டென்ஷன் கிடையாது. ஜாலியா லைப் எஞாய் பண்ணுங்க..." என்றார் அப்பாவின் சக நண்பர்.

"வேலை செய்றவனுக்கு ஓய்வு என்னைக்குமே சங்கடம் தான். அதுவும் சாதரன மேனேஜரா தான் ரிடையராகியிருக்கேன். பணம்னு பெருசா சேர்த்து வைக்கல " என்று தன் கவலையும், பயத்தையும் அப்பா காட்டினார்.

" நீங்க பெரிய மேனேஜர்ஸ் கிட்ட கொஞ்சம் பொறுமையா நடந்திருந்தா ஹெட் ஆபிஸ்ல உங்க பேர ரெகமென்ட் பண்ணியிருப்பாங்க. எல்லாகிட்டையும் கோபமா நடந்துக்கிட்டா " என்று அப்பாவின் கீழ் வேலை செய்பவர் சொன்னார். இனி அப்பா அவருக்கு மேனேஜர் இல்லை என்ற தைரியம் அவர் பேச்சில் தெரிந்தது.

"தப்பு பண்ணும் போது மேனேஜரா இருந்தா என்ன ? ப்யூனா இருந்தா என்ன ? தைரியமா கேக்கனும். அவன் தான் மனுஷன்." என்று கோபமாக அந்த நபரிடம் பேசினார். அந்த நபர் மேலும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார். அப்பா ரிட்டையர்ராகவிட்டால் அவர் அப்பா திட்டுவதை வாங்கி பொறுமையாக இருந்திருப்பார். அப்பா இனி தனக்கு மேலாளர் இல்லை என்பதால் அவனால் தன் உணர்வை தைரியமாக அப்பா முன் காட்ட முடிந்தது.

ஒவ்வொரு துறையிலும் ‘வினோத் காம்லி’ இருக்கத் தான் செய்கிறார்கள் என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

LinkWithin

Related Posts with Thumbnails