சுஜாதாவின் அத்மா ஷான்னின் பேனா வழிப்புகுந்து எழுத வைத்திருக்கிறது. உண்மையில் சுஜாதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நாவலை தொடராக எழுதியிருப்பார். வெட்டாட்டம்
எழுதிய ஷானை ஆயிரம் முறை பாராட்டலாம் !!
செம்பரப்பாக்கம், கூவத்தூர் ரெஸார்ட், மருத்துவமனையில் முதல்வர் என்று அனைத்து சமக்கால சம்பவ அரசியல் சம்பவங்களை புனைவுகளாக கோர்க்கப்பட்டு எழுதப்பட்ட த்ரில்லர் நாவல்.
ஆரம்பத்தில் நாவலின் ஒன் – லைன் பற்றி கேள்விப்படும் போது தெலுங்குபடம் Leader தான் நினைவுக்கு வந்தது. ( ஜகன் மோகன் ரெட்டி கொஞ்சம், ராகுல் காந்தி கொஞ்சம் மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம் அது). ஏறக்குறைய சில அத்தியாயங்கள் அந்தப்படத்தில் வரும் காட்சியை நினைவுப்படுத்தினாலும், பல விஷயத்தில் நாவலும், படமும் வேறுப்படுகிறது.
பல முறை விளையாடிய தாயக்கட்டை விளையாட்டு, வெட்ட வெட்ட தாயக்கட்டை உருட்ட இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது. எதிரிகளின் காய்களை வீழ்த்தும் போது ஒரு சந்தோஷம் பிறக்கிறது. எதிரிகள் முன்பு நமது காய்களை பழுக்க வைப்பதில் சுகம்.
நாம் வெற்றிப்பெற்றுவிட்டோம் என்பதை விட எதிரியை வீழ்த்திவிட்டோம் என்ற பூறிப்பு தான் தாயக்கட்டை விளையாட்டின் எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். அந்த அளவுக்கான சந்தோஷம் நாவலை முடிக்கும் போது வருகிறது.
இப்படி ஒவ்வொரு அத்தியாய தொடக்கத்திலும் தாயக்கட்டை ஆட்டத்தின் விதிமுறைகள் கூறப்படுகிறது. அந்த விதிமுறையும், அந்த அத்தியாயத்திற்கும் தொடர்புடையதாக இருக்கிறது. அரசியல் சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என்ன செய்யப்போகிறது, பிரச்சனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று விறுவிறுப்பாக செல்கிறது. மொத்தம் ஐந்து மணி நேரத்தில் வேகமாக படித்து முடிக்கலாம்.
ஒரு திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை இதில் இருக்கிறது. ஆனால், தற்போதிய ஆட்சி கலைக்கப்பட்டால் மட்டுமே இந்த நாவல் திரைப்படமாக மாறுவது சாத்தியம்.
ஷான்னுக்கு ஒரு வேண்டுக்கோள்,
தயவு செய்து தீவிர இலக்கியம் பக்கம் வந்துவிட வேண்டாம். அப்படி ஒரு ஆசை இருந்தால் மறந்துவிடுங்கள். தீவிர இலக்கிய எழுத்தை மேற்கொள்ள பலர் இருக்கிறார்கள். ஆனால், இதுப் போன்ற Pulf-Fiction எழுத ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள்.
**
வெட்டாட்டம்
- ஷான்
- யாவரும் பதிப்பகம்
- Rs.240
No comments:
Post a Comment