ஆளுக்கு ஒரு சாட்சியம். ஆளுக்கு ஒரு பார்வை. ஆளுக்கு ஒரு கருத்து சொன்னார்கள். இதில் நாம் எதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எதை விட வேண்டும் என்ற குழப்பம் வரலாம். இதை எல்லாம் படிக்கும் போது உங்களுக்கும் குழப்பம் வரலாம்.
ஒன்று மட்டும் உண்மை. முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்பு பிற்படுத்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடந்ததிருக்கிறது. அரசாங்கத்தாலும் இவர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்திருக்கிறது. முதுகுளத்தூர் கலவரத்திலும் தேவர்களை காட்டிலும் இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இன்றும் வரை இவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நாம் எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்பதற்கு சமீபத்திய தர்மபுரி, பரம்மக்குடி சம்பவங்களே அதற்கு சாட்சி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு செய்யும் உதவி, அந்த நிமிடம் வரை தான் என்பது நாம் பல வருடங்களாக கண்டு வரும் உண்மை.
முதுகுளத்தூர் கலவரத்தைப் பற்றி சட்டசபையில் விவாதிக்கும் போது அப்போதைய உள்துறை அமைச்சர் எம்.பக்தவச்சலம் அவர்கள் 1930ல் இருந்தே பிற்படுத்தப்பட்டவர்களின் நடந்த வன்முறையை மேற்கொள் காட்டினார். அமைதிப் பேச்சுவார்த்தையில் தேவரின் பேச்சு தான் கலவரங்களை தூண்டிவிட்டதாகவும், இம்மானுவேல் சேகரன் இறப்புக்கு தேவர் தான் காரணம் என்ற வகையில் பேசினார். ஆனால், அதுவரை ஆளும் கட்சியில் இருந்தவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களின் பாதுகாப்பு என்ன செய்தார்கள் ?.
தேவரை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தால், அதன் முன்பு எத்தனைப் பேர் பிற்படுத்தவர்களை காப்பாற்ற கைது செய்திருக்கிறார்கள்? இம்மாணுவேல் சேகரன் இறந்தது செப்.11, 1957ஆனால் அந்த கொலையில் முதல் குற்றவாளி என்று கருப்படும் தேவர் கைது செய்யப்பட்டது செப்..28,1957.
17 நாட்கள் விசாரனை நடத்தி தேவர் தான் கொலைக்கு காரணம் என்று கைது செய்தார்களா? அல்லது தேவர் காங்கிரஸ் கொடுக்கும் குடைச்சலை சமாளிக்க இம்மானுவேல் மரணத்தை பயன்படுத்திக் கொண்டார்களா? போன்ற கேள்வி எழுகிறது.
அந்த காலக்கட்டத்தில் தான் “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்று தேவர் கூறிக் கொண்டு வந்தார். நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்பது தனக்கு மட்டுமல்ல, நேருவுக்கும், அமெரிக்காவும், பிரிட்டனுக்கு தெரியும் என்று இறுதி வரை கூறியிருக்கிறார். நேதாஜியின் பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரஸோடு இணையும் முயற்சிக்கு தேவர் எதிராக இருந்தார். இதனால், மத்தியளவில் தேவர் மீது வெறுப்பு இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
இம்மானுவேல் சேகரன் காங்கிரஸில் கொடுக்கப்பட்ட பொறுப்பை பார்த்தால், காங்கிர்ஸ் அவரை எப்படி நடத்தியது என்பது புரியும். இம்மானுவேல் சேகரன் கக்கனின் அன்புக்கு பாத்திரமாக இருந்தவர். அவர் உதவியால் 1957 பொது தேர்தல் இம்மானுவேலுக்கு சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நபர். ஆனால், தனித் தொகுதி நாடாமன்ற வேட்பாளராக ஆர்.எஸ்.ஆறுமுக தேவேந்தரரையும், சட்டமன்ற வேட்பாளராக ஏ.கிருஷ்ணன் தேவேந்திரரையும் காங்கிரஸ் நிறுத்தியது.
தேர்தலில் தனக்கு சீட்டு கிடைக்காதது இம்மானுவேல் சேகரனுக்கு ஏமாற்றமாக இருந்தது. கக்கனுக்கும் பெரும் வருத்தமாக இருந்தது. பக்தவத்ச்சலம், சி.சுப்பிரமணியம் ஆகியரோடு வந்து கக்கன் தனது வருத்தத்தை தெரிவித்து தேர்தல் பிரச்சாரத்துக்கு இம்மானுவேலை அழைத்தார். இம்மானுவேலும் தனக்கு சீட்டு கிடைக்காததை எல்லாம் மறந்து காங்கிரஸூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
அன்றைய தேதியில், இம்மானுவேல் சேகரன் வளர்வது காமராசருக்கு பிடிக்கவில்லை என்று காங்கிரஸ் குள்ளே அப்படி ஒரு பேச்சு இருந்தது. இதைப் பற்றி இம்மானுவேல் எந்த கருத்தும் கூறவில்லை. (இதற்கான சரியான ஆதாரமும் இல்லை)
முதுகுளத்தூர் சமாதானப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினரும், வெற்றிப் பெற்ற வேட்பாளாருமான ஆறுமுகம் கலந்துக் கொள்ளவில்லை. மக்கள் இரத்தம் இரத்தமாக இறந்துக் கிடைக்கயில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பிற்படுத்தப்பட்டவர்களின் தொகுதியில் இருந்து வெற்றிப் பெற்ற பிரதிநிதி வரவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிற்படுத்த பிரதிநிதியாக இம்மானுவேல் சேகரன் கலந்துக் கொண்டுள்ளார்.
ஒரு பெரிய கலவரத்தை மக்கள் பிரதிநிதியாக காங்கிரஸ் இம்மானுவேல் சேகரனை அனுப்பியது என்றால், அப்போது ஏன் அவருக்கு தேர்தல் போட்டியிட சீட்டு கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. பெரிய கலவரத்தை அடக்க இம்மானுவேல் சேகரன் அனுப்பத் தெரிந்தவர்களுக்கு, தேர்தல் சீட்டு கொடுக்காததை ஆராய வேண்டும். காங்கிரஸ் இம்மானுவேலை எப்படி நடத்தியது என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டியதாக இருக்கிறது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்காக கண்ணீர் சிந்துபவர்கள் அன்றைய காங்கிரஸ், அவர்களின் தலைவராக இருந்த அம்பேத்கர் காங்கிரஸில் உறுப்பினராக சேரவில்லை என்பது தான் வரலாறு. அம்பேத்கரின் பல வேண்டுகோள்களை, நிபந்தனைகளை காந்தி தனது சத்தியாகிரக போராட்டத்தாலே முறியடித்தவர் என்பதை சரித்திரம் சொல்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் உதவுவதாக இருந்தால் அம்பேத்கரின் பல கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.
கரைப்படிந்த கையோடு அன்றைய காங்கிரஸ் அரசு தேவரின் கைது நடவடிக்கை மேற்கொண்டது. தேவர் ஜாதி வெறி தான் “முதுகுளத்தூர் கலவரத்துக்கு காரணம்” என்று கூறுபவர்கள், விடையளிக்கப்படாத பல கேள்விகளுக்கு விடையளிக்க முன் வர வேண்டும்.
**
”பசும்பொன் முத்துராமலிங்க தேவர்” வாழ்க்கை வரலாற்று நூலில் 21வது அத்தியாயத்தில் நீக்கப்பட்ட பகுதி.
இணையத்தில் வாங்க...
**
”பசும்பொன் முத்துராமலிங்க தேவர்” வாழ்க்கை வரலாற்று நூலில் 21வது அத்தியாயத்தில் நீக்கப்பட்ட பகுதி.
இணையத்தில் வாங்க...
No comments:
Post a Comment