வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, October 1, 2014

வருத்தம் தரும் அம்மாவுக்கு எதிரான தீர்ப்பு !

நான் கலைஞரின் அபிமானி என்பதால், அம்மாவுக்கு கிடைத்த தண்டனையை நினைத்து சந்தோஷப்படுவதாக பலர் நினைக்கிறார்கள்.

உண்மையில் அ.தி.மு.க கட்சியினர்களை விட எனக்கு தான் அதிக வருத்தம். (எனக்கு கண்ணீர் வரவில்லை என்றால் சொல்வது நடிப்பு என்பதில்லை.) அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது.

முதல் காரணம்.

91-96, 2001-06 காலக்கட்டத்தில் அம்மா எவ்வளவோ தவறு செய்திருக்கிறார். ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் பழி வாங்கும் அரசியல் நடவடிக்கை தவிர்த்து பார்த்தால் அம்மாவின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது. தவறு செய்த காலத்தில் கிடைக்க வேண்டிய தண்டனை, மனம் திருந்தி சிறப்பாக ஆட்சி செய்யும் போது அவருக்கு தண்டனை வழங்கியது வருத்தம் தான்.

தேசியளவில் தமிழகம் இப்படி ஒரு செய்தியை சந்திக்கும் போது என்னால் எப்படி சந்தோஷப்பட முடியும்.

2016 தேர்தலில் இது அனுதாப அலையாக மாறுமா அல்லது பாதகமாக மாறுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 



இரண்டாவது காரணம்.

பெங்களூர் தீர்ப்பு அ.தி.மு.க கட்சியின் எதிர்காலத்திற்கு பின்னடைவு என்பதை யாரும் மறுக்க முடியாது. அடுத்த மூன்று ஆண்டுகளில் எந்த வித கோஷ்டி புசல் வராமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அம்மாவிடம் இப்போது அதிகமாக இருக்கிறது.

தி.மு.க கட்சியின் தற்போதைய நிலைமைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. தனக்கு பிறகு ஸ்டாலின் தான் என்பதை அவர்கள் கட்சியினரை உறுதியாக நம்ப வைக்கும் முயற்சியை கலைஞர் செய்ய வேண்டும். இன்னும் அவர் காலம் கடத்தி செல்வது எந்த பலனும் அளிக்காது. அது மட்டுமில்லாமல் முந்தைய ஆட்சியில் இருந்த அதிருப்தி இன்னும் மக்கள் மீளவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தமிழகத்தில் எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. வைகோ, விஜயகாந்த் உட்பட மற்ற இதர கட்சிகள் பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். இதனால், தமிழகத்தில் மூன்றாவது இடத்தை பலமாக்கிக் கொள்ள பா.ஜ.கவுக்கு அதிக தான் வாய்ப்பு இருக்கிறது !!

மத்தியில் பா.ஜ.க ஆட்சி. மோடி அலை. திராவிடத்தால் ஏமாற்றப்பட்டோம் என்ற பிரச்சாரம். இந்த மூன்றும் அஸ்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களின் அடுத்த அஸ்திரம் நடிகர்கள் !!!

ரஜினி, விஜய் போன்றவர்கள் தங்களது கட்சியில் சேர்க்கும் முயற்சியை பா.ஜ.க செய்துவருவதாக சில தகவல்கள் வெளியாகிவருகிறது. நடிகர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுவதை நிறுத்தி நீண்ட நாட்கள் ஆகிறது. ஆனால், மக்கள் நடிகர்கள் மீது வைத்திருக்கும் கவர்ச்சியை நம்மால் மறுக்க முடியாது. (பெப்ஸி, கோக் ஒரு உதாரணம் !!)

முன்னனி நடிகர்கள் பா.ஜ.கவில் சேர்ந்தால், அந்த கவர்ச்சியாக செய்தியோடு மோடி அலையை சேர்த்து தங்கள் கட்சியை பலப்படுத்தலாம். இவ்வளவு ஏன் விஜயகாந்த் தனது கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.கவில் இணையலாம்.

நிச்சயமாக 2016 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க பலமான மூன்றாவது அணியாக மாற இந்த தீர்ப்பு வழிவகுக்கும். ‘பெரியார் பூமியில்’ இன வாதம் வளரக்கூடாது என்றால் அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே பலமான கட்சிகளாக இருக்க வேண்டும். தற்போதிய சூழ்நிலை அப்படி இல்லை என்பது தான் என் இரண்டாவது வருத்தம்.

2030 வரையிலான தமிழ்நாட்டின் அரசியலை 2016 தேர்தல் தான் தீர்மானிக்கப் போகிறது. பொருத்திருந்து பார்ப்போம் !!

அதலால், அம்மாவுக்கு எதிரான தீர்ப்பை நான் கொண்டாடுவதாக சொல்லி என்னை மேலும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

4 comments:

நேர்கோடு said...

Do you have any reasons to call this "நல்லாட்சி"? Price hikes all around and increased powercuts do not look like it.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கொள்ளையடித்தவன், இப்போ திருந்தி நல்லவனாக வாழ்ந்தால் அவனுக்கு விசாரணை தண்டனை இல்லையா? இப்படியே எல்லோரும் செய்யலாமா? இதே சலுகை கனிகளுக்கும்,ராசாக்களுக்கும், நிதிகளுக்குமுண்டா?
இதே சலுகை கொலை,கற்பழிப்புக்கும் உண்டா? நீங்கள் என்ன சொல்ல முற்படுகிறீர்கள்.
என் மனநிலை என்ன எனில், ஆயுள் சிறை, முழுச் சொத்தும் பறிமுதல்,வாழ்வில் பொதுவாழ்வில் பங்கேற்கத் தடை. அது ஆழும் கட்சியோ, எதிர்க் கட்சியோ.
சட்டமாற்றம் நம் நாடுகளில் வருமா? கொள்ளையடிக்க அரசியலைத் தேர்வு செய்த நாதாரிகள், உருப்படியான
சட்டம் கொண்டுவருவார்களா?
என்கவலை கருணாநிதி உயிர் சிறையிலிருந்து பிரியவேண்டும். முழுக்குடும்பமும் உள்ளே செல்ல வேண்டும்.எந்தச் சட்டம் இதைச் செய்யப் போகிறது.

ஆகவே நீங்களும் கூத்தாடிகளின் கோமாளி ஆட்டம் போல் கருத்துச் சொல்லாதீர்கள்.
ஜெயலலிதா செய்த தவருக்குத் தண்டனை அனுபவிக்கிறார். இது அவருக்குத் தெரியாததல்ல.
மமதை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
This comment has been removed by the author.
M.Mani said...

மமதை.... உண்மை. சில ஆண்டுகளுக்கு முன் இந்திரா காங்கிரஸ்காரர்கள் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று கூறியபோது (அது அவர்களால் முடியாது என்பது வேறு) இந்த அம்மையார் அவர் உயிருடன் இருக்கும் வரை எந்தத் தேர்தலிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவராலேயே அமைக்க முடியாத ஆட்சியை இவர்கள் அமைக்கப்போகிறார்களாம் என்று ஏளனமாகப் பேசியுள்ளார்.
ஆம். இந்த மக்கள் காமராஜரைத் தேர்தலில் தோற்கடித்தனர். ஆனால் அவர் குற்றவாளியாக எவர் முன்னரும் நின்றதில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails