அன்று.
கொத்தமங்களம் சுப்பு அவர்கள் எழுதிய “தில்லானா மோகனாம்பாள்” ஆனந்த விகடனில் தொடராக வந்தக் கதை. அந்த கதையின் உரிமையும் விகடன் உரிமையாளராக எஸ்.எஸ்.வாசனிடம் இருந்தது.
அந்த சமயத்தில், ஏ.பி.நாகராஜன் அதைப் படமாக எடுக்க விரும்பி எஸ்.எஸ்.வாசனிடம் அனுமதிக் கேட்டார்.
“இக்கதையை நாம் கூட்டாக சேர்ந்து எடுப்போம். உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறேன். படம் எடுக்கும்போது நான் தலையிடமாட்டேன்” என்று எஸ்.எஸ்.வாசன் கூறினார்.
ஆனால், ஏ.பி.நாகராஜம் மறுத்துவிட்டார். லாபமோ, நஷ்டமோ நானே ஏற்றுக் கொள்கிறேன். கதைக்கு என்ன விலை என்று மட்டும் கூறுங்கள் என்றார்.
எஸ்.எஸ்.வாசன் “நாகராஜன் ! ஆனந்த விகடன் கதையை தரம் குறையாமல் எடுப்பீர்கள் என்று உங்களை நம்புகிறேன்” என்று சொல்லி கதைக்கு ரூ.25 ஆயிரம் கேட்டார்.
ஏ.பி.நாகராஜனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கதைக்கு ரூ.50 ஆயிரம் கேட்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால், எஸ்.எஸ்.வாசன் 25 ஆயிரம் தான் கேட்டிருக்கிறார். அதனால், மீதம் ரூ.25 ஆயிரத்தை கதை எழுதிய கொத்தமங்களம் சுப்புவுக்கு கொடுக்கலாம் என்று நினைத்தார்.
அந்த சமயத்தில் உடல்நல குறைவால் கொத்தமங்களம் சுப்பு மருத்துவமனையில் இருந்தார். ஏ.பி.நாகராஜன் கொத்தமங்களம் சுப்புவிடம் ரூ. 25 ஆயிர கொடுக்கும் போது, “ இப்ப தான் வாசன் நீங்க அவரிடம் கொடுத்துட்டு போன 25 ஆயிர ரூபாய கொடுத்துட்டு போறார்” என்றார். எஸ்.எஸ்.வாசனின் பெருந்தன்மை பெருமைப்பட்டுக் கொண்ட ஏ.பி.நாகராஜனும் தான் கொண்டு வந்த ரூ.25 ஆயிரத்தையும் கொத்தமங்களம் சுப்புவிடம் கொடுத்தார்.
இதில், கொத்தமங்களம் சுப்புவுக்கு நியாயமாய் உதவியது எஸ்.எஸ்.வாசனா ? நாகராஜனா ? என்று பட்டிமன்றம் நடத்தினால் இருவருமே வெல்வார்கள்.
இன்று.
ஆங்கிலமோ, கோரியப்படத்திலோ திருடப்பட்ட கதையில் படத்தின் கதை முடிவாகிறது. ரியல் எஸ்டேட், கருப்பு பணம், கொள்ளையடித்த பணத்தில் அந்த கதையை திரைப்படமாக தயாரிக்கிறார்கள்.
படத்தை வாங்கி விநியோகஸ்தர்களும் கந்துவட்டி, ஆள்கடத்தல், ரௌடிசத்தில் வந்த பணத்தில் படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள். அதை திருட்டுத்தனமாக டி.வி.டி போட்டு விற்பனை செய்வது, இணையத்தில் ஏற்றி சம்பாதிப்பது இன்னொரு கூட்டம் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் கொள்ளையடிக்கும் மால்கள் இருக்கிறது.
இதில் யார் திருடர்கள், பாவம் என்று சொல்லுவது ?
அன்று, சினிமா எடுத்தவர்களிடம் அடிப்படையில் ஒரு நேர்மை இருந்தது. உதவும் மனமிருந்தது. இன்று, சினிமாவில் ஒவ்வொரு விஷயத்திலும் ஏதோ ஒரு திருட்டுத்தனம் இருக்கிறது. திருட்டுதனம் மனம் முழுக்க வைத்துக் கொண்டு எப்படி தரமான படைப்பை அவர்களிடம் இருந்து நாம் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்.
ரசிகர்கள் அன்னப்பறவையாய் இருந்து தரமான விஷயத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு, தரமற்றதை புறக்கணி வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
சினிமாவை டி.வி.டி, டவுன்லோட் செய்யும் ரசிகர்களால் அழியவில்லை. சினிமா எடுக்கும் சினிமாக்காரர்களால் தான் சினிமா அழிகிறது.