வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 17, 2011

உலக சினிமா : The Isle

ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் தனிமையில் இருக்க முடியும் ? ஒரு மணி நேரம், இரண்டு... ஒரு நாள் ...!! அதன் பிறகு பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தால் அந்த ஆள்ளிடம் எவ்வளவு நேரம் பேசுவோம் என்று நமக்கே தெரியாது. தனிமையின் வலி நம்மை அதிக நேரம் பேச வைக்கிறது என்று தெரியாமல் பேசுவோம். அப்படி தனிமையின் வலி, அதனால் வரும் காமம், குரோதம் என்று சொல்லும் படம் தான் ‘The Isle’.

ஊமைப் பெண்ணான ஹீ-ஜின் மிதவை படகு விடுதி நடத்தி வருபவள். தன் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை வாங்கி வந்து கொடுப்பாள். பெண்கள் உட்பட. சில சமயம் இவளே வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்துவாள். தனிமை, மௌனம் இரண்டும் அவள் உடன் பிறந்த சகோதரிகளாக அவளுடன் வாழ்கிறது.



சட்டத்திடம் தப்பித்து ஹியூன் ஷிக் ஹீ-ஜின் விடுதியில் வந்து தங்குகிறான். கம்பிகளை வலைத்து பொம்மை செய்வதில் வல்லவன். அவன் தன் காதலியை கொன்றதை நினைத்து தூங்க முடியாமல் தவிக்கிறான். ஹியூன் ஷிக் அழுவதும், அவனுக்காக வைத்த உணவு சாப்பிடாமல் இருப்பதை பார்த்தும் ஹீ ஜின் அவனும் தன்னைப் போல் தனிமையில் வாடுவதை புரிந்துக் கொள்கிறாள். குற்ற உணர்வில் ஹியூன் ஷிக் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது ஹீ ஜின் காப்பாற்றுகிறாள். அவன் தனிமையை போக்க ஹீ-ஜின் விலைமாதுவை வர வழைக்கிறாள். ஹியூன் ஷிக் அவளிடம் உடல் சுகத்தை விட பேசவே விரும்பினான். விலைமாது பெண்ணுக்கு ஹியூன் ஷிக் கம்பிகளால் வலைத்து செய்த பொம்மை மிகவும் பிடிக்கிறது. அவனுடன் அதிக நேரம் இருக்க விரும்புகிறாள். இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது விலைமாதுவின் தரகன் அடித்து இழுத்து செல்கிறான்.

ஹியூன் ஷிக் தேடி காவலர்கள் வரும் போது, ஹியூன் ஷிக் மீண்டும் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறான். மீன் பிடிக்கும் தூண்டிலை தொண்டையில் விழுங்கி இரத்த சொட்ட சொட்ட இறக்க நினைக்க, ஹீ-ஜின் மீண்டும் அவனை காப்பாற்றுகிறாள். அவனை காப்பாற்றிய பிறகு, அவனுடன் உறவுக் கொள்கிறாள் ஹீ-ஜின்.

அடுத்த நாள் விலைமாது ஹியூன் ஷிக் பார்க்க வருகிறாள். அன்று இரவு இருவரும் உடல் உறவு கொள்வதை ஹீ ஜின் மறைந்திருந்து பார்க்கிறாள். ஹியூன் ஷிக் விலைமாதுவுக்கு பணம் கொடுக்க, தான் விரும்பி வந்ததாக சொல்கிறாள். அவனிடம் இருந்து கம்பி பொம்மையை எடுத்துக் கொள்கிறாள். அந்த விலைமாது மீது ஹீ ஜின் பொறாமை ஒட்டிக் கொள்கிறது. அவளை அழைத்து கரைக்கு விட ஹீ ஜின் படகு செலுத்தாமல் இருக்கிறாள்.

ஒரு கட்டத்தில், ஹியூன் ஷிக் படகுக்கு செல்லாமல் வேறொரு படகு வீட்டுக்கு விலைமாதுவை அழைத்துச் சென்று கட்டி வைக்க, அதில் தப்பிக்க நினக்கும் போது விலைமாது இறக்கிறாள். அவளை தேடி வரும் தரகனும் ஹீ ஜின்னால் கொல்லப்படுகிறான். விலைமாது இல்லாத ஹியூன் ஷிக் தனிமையை பயன்படுத்தி ஹீஜின் அவனுடன் உறவுக் கொள்கிறாள்.

ஹீ ஜின் இரண்டு பேரைக் கொன்றது ஹியூன் ஷிக் தெரிய வர, அவன் படகு வீட்டை விட்டு செல்ல முயற்சிக்கிறான். ஆனால், ஹீ ஜின் அவனை செல்லவிடாமல் தடுகிறாள். ஹியூன் ஷிக் தண்ணீரில் விழுத்து நீந்திச் செல்கிறான். ஹியூன் ஷிக் தடுக்க மீன் தூண்டிலை தன் பெண் உருப்பில் சொருகிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறாள். ஹீஜின் அலறல் சத்தம் கேட்டு ஹியூன் ஷிக் ஹீஜின்னை காப்பாற்றி அவள் பெண் உருப்பில் இருக்கும் தூண்டில் கம்பிகளை அகற்றுகிறான்.

அந்த படகு விடுதியில் தங்கி இருக்கும் பணக்காரரின் ரோலெக்ஸ் வாட்ச் தண்ணீரில் விழ, அதை எடுப்பதற்கு உள்ளூர் ஆட்களை அழைக்கிறான். அப்போது, விலைமாதுவின் உடலும், அவளது தரகனின் உடலும் எடுக்கப்படுகிறது. இதை பார்த்த ஹீ ஜின் தன் படகில் இருக்கும் மோட்டாரை படகு வீட்டில் மாட்டி இருவரும் தப்பி செல்கின்றனர். ஹியூன் ஷிக் தண்ணீரில் இருந்து வெளியே வர, படகில் ஹீ ஜின் நிர்வாணமாய் இறந்து இருப்பதோடு படம் முடிகிறது.

பலருக்கு இறுதி கட்டம் புரிந்துக் கொள்வது சற்று கடினமாக இருக்கும். நாயகன் தன் காதலியை கொன்றதுப் போல் ஹீஜின்னை கொன்று இருக்கலாம் அல்லது பெண் உருப்பில் காயம் பட்ட நாயகி இறந்திருக்கலாம். இந்த இரண்டு யூகங்களில், முதல் யூகத்திற்கு தான் அதிக வாய்ப்புள்ளது.



மென்மையான மனம் கொண்டவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. சுயவதையை இந்த அளவுக்கு கொடூரமாக யோசிக்க முடியுமா என்று தெரியவில்லை. நாயகன், நாயகி இருவரும் தனிமையில் வாடும் போது தங்களை தாங்களே வருத்திக் கொள்கிறார்கள். நாயகன் தற்கொலை செய்துக் கொள்வதற்கு மீன் தூண்டிலை விழுங்குவதும், நாயகி தற்கொலை செய்துக் கொள்வதற்கு தன் பெண் உருப்பில் செழுத்துவதும் பார்ப்பவர்களால் ஜீரனிக்க முடியாத காட்சிகள்.

மீன்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சில காட்சிகள் சிறப்பாக இருக்க நிஜ மீன்களை அதிகம் துன்பப்படுத்தியிருக்கிறார்கள். சில மீன்கள் இறந்தும் இருக்கின்றன.

கிம் கி டுக் இயக்கத்தை பாராட்டுவது அமெரிக்காவுக்கே ஆயுதம் வழங்குவது போன்றது. இயற்கையோடு தன் கதையை நடக்க விட்டுயிருக்கிறார். அமைதியான பெரிய ஏரி. அதற்குள் மிதக்கும் சின்னச் சின்ன மிதவை வீடுகள். அவற்றில் தங்கி ஓய்வெடுக்கும், மீன்பிடிக்கும் வாடிக்கையாளர்கள் என்று நம்மையும் கொண்டு சென்றுயிருக்கிறார்.

பொதுவாக, முடிவை பார்வையாளனுக்கு விடுவதில் குறும்படத்திற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், முழு நீள படத்திற்கு இறுதி கட்டத்தை பார்வையாளனுக்கு விட்டதில் இந்த படம் உள்ளூரில் சரியாக போகததிற்கு காரணம். ஆனால், வென்னிஸ் திரைப்பட விழாவில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

Wednesday, November 16, 2011

ஹைக்கூ கவிதைகள் - 9

வரி பணம் வீணாகும் போது
ஊழல் தவறில்லை தோன்றியது
அண்ணா நூலகம் !

**

இரண்டு மாதம்
ஒரு முறை சம்பள உயர்வு
பெட்ரோலுக்கு !

**

கட்டப்பட்ட மேம்பாலங்கள்
அஞ்சி நடுங்குகிறது
அடுத்தது நாமோ !!

**

தமிழில் காஞ்சிபுரம்
தெலுங்கில் குண்டூர்
‘ஏழாம் அறிவு’ போதிதர்மர் !

Thursday, November 3, 2011

அண்ணா நூலகம் !!



எல்லோரும் அண்ணா நூலகத்தைப் பற்றி எழுதி விட்டதால், என் கண்ணீரை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

Wednesday, November 2, 2011

MKB நகரில் புத்தகக் கண்காட்சி

நாகரத்னா பதிப்பகம், We Can Books distributors மற்றும் முரண்களரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி.

இடம் : முரண்களரி புத்தக நிலையம்
ஆண்டாள் தையல் பயிற்சி மையம்
130, முதல் மாடி ( ஜானகி மகால் எதிரில்)
மகாகவி பாரதி நகர், சென்னை - 39


நேரம் : காலை 10 மணி முதல் இரண்வு 9 மணி வரை

கீழ் காணும் புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுகிறது.

1. நடைபாதை - குகன்
2. காந்தி வாழ்ந்த தேசம் - தொகுப்பு : குகன்
3. நீங்கதான் சாவி - சுரேகா
4. கலைஞரின் நினைவலைகள் 100 - தொகுப்பு : குகன்
5. கலாம் கண்ட கனவு - தொகுப்பு : குகன்
6. என்னை எழுதிய தேவதைக்கு - குகன்
7. உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி - கனியன் செல்வராஜ்
8. லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயண்
9. டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா
10. எனது கீதை - குகன்
11. 555 பொன்மொழிகள் – தொகுப்பு : சோலை தமிழினியன்
12. இரை தேடும் பறவை - கருவை ஷண்முகசுந்தரம்
13. சாமானியனின் கதை - என்.உலகநாதன்
14. வீணையடி நீ எனக்கு - என்.உலகநாதன்
15. மீண்டும் ஒரு காதல் கதை - சங்கர் நாராயண்
16. கொத்து பரோட்டா - சங்கர் நாராயண்
17. நாகம்மாள் - ஷண்முகசுந்தரம்
18. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
19. தூரன் கட்டுரைகள் - தூரன்
20. பசியின் நிறம் வெள்ளை
21. கீதாரகஸ்யம்
22. வாழ்வும் தியானமும் - 'யோசன்' மோகன பாலகிருஷ்ணன்
23. இணையதளம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ? - சந்திரசேகரன்
24. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் - சந்திரசேகரன்
25. பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி ? - சந்திரசேகரன்
26. வளமுடன் வாழ்வோம் வா - துருவன்
27. சிவபெருமானின் திருவிளையாடல்
28. புத்திர பாக்கியம் தரும் பரிகார தலங்கள்
29. எனது காத்திருப்பும் அவனின் கையசைப்பும்
30. மதுக்கடைகளை மூடு
31. நோய் தீர்க்கும் பாரம்பரிய வைத்தியம்
32. பாலபாரதி எழுத்து பயிற்சி – 1
33. பாலபாரதி எழுத்து பயிற்சி -2
34. பாலபாரதி எழுத்து பயிற்சி -3
35. பாலபாரதி எழுத்து பயிற்சி -4
36. பாலபாரதி எழுத்து பயிற்சி-5
37. அம்மன் பாடல்கள்
38. நினைவு திறன் வளர்த்தல் - பால சங்கரன்
39. தேர்வு செல்லும் மாணவர்களுக்கு - பால சங்கரன்
40. வள்ளுவர் காட்டும் வெற்றி நிர்வாகம் - பால சங்கரன்
41. சிந்திக்க வைக்கும் விடுகதைகள்
42. எம் மாணவனையும் பொன்னாக்கலாம்
43. மாணவர்களுக்கான யோகாசனங்கள்
44. புத்தி தரும் பஞ்சதந்திர கதைகள்
45. 10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
46. 9 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
47. படித்தவுடன் மனப்பாடம் - பால சங்கரன்

வட சென்னையில் புத்தக கடை இல்லை என்ற குறையை முரண்களரி புத்தக நிலையம் போக்கியுள்ளது. அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வடசென்னை பகுதியில் இருப்பவர்கள் புத்தக நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பெரம்பூர், வியாசர்பாடி, கண்ணதாசன் நகர், ரெட்டேரி போன்ற பகுதியில் இருப்பவர்கள் செல்லக்குடிய தொலைவில் தான் உள்ளது.

மேலும் விபரங்களுக்கு...

குகன் – 99404 48599
யாழினி முனுசாமி – 98413 74809

Thursday, October 20, 2011

முள்வலி : தொல். திருமாவளவன்

ஈழ நாடு மலர வேண்டும் என்று விரும்பிய கோட கோடி தமிழர்களில் நானும் ஒருவன். ஆயுத போராட்டம் சிறந்த வழி என்று எதிரிய நமக்கு உணர்த்திய பிறகு, அந்த பாதையில் ஈழம் மலரும் என்று இருந்தேன். 2009ல் தேர்தல் முடிவு அடுத்த ஐந்தாண்டுக்கான இந்திய வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியது போல், ஈழக் கனவையும் கேள்விக் குறியாக்கியது. பிரபாகரன் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் அவரை தவிர்த்து ஈழத்தை தனியாக பார்க்க முடியாது என்பது நிதர்சன உண்மை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா ? என்ற விவாதத்தை தவிர்த்து அடுத்து மிஞ்சிய உயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

அதே சமயம், ஈழத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்தும் எந்த ஒரு கட்சி (இந்த நூலின் ஆசிரியர் உட்பட) மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.

போருக்கு பிறகு இலங்கைக்கு சென்ற ஆறு பேர் கொண்ட குழுவில் திருமாவை தவிர வேறு யார் தகவல் சொன்னாலும் நம்பும் படியாக இருக்காது. காரணம், மற்ற ஐவர் காங்கிரஸ், தி.மு.க கட்சியினர். தங்கள் ஆட்சிக்கு பாதிக்க அளவில் தான் தகவல் வெளியே விடுவார்கள். இந்த நூலில் கூட, திருமா தி.மு.க வுடன் தனது உறவு பாதிக்க கூடாது என்பதில் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்.



அதிகம் பேச வேண்டும் என்று நினைத்த இடத்தில் கூட்டம் முடிந்து விட்டதாக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். திருமாவால் மாவட்ட ஆட்சியாளரை டி.ஆர்.பாலு கண்டித்துள்ளார். கலைஞரிடம் அதைப் பற்றி குறிப்பிடும் போது அவரை ‘டேரர்’ பாலு என்றே குறிப்பிட்டுள்ளார். கலைஞரும் நகைச்சுவை உணர்வுடனே எடுத்துக் கொண்டார்.
’போருக்கு பிறகு ஈழம்’ என்ற பதிவில் இந்த புத்தகம் இடம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . இதில் தகவல் மறைக்க பட்டிருக்கலாம். ஆனால், மிகைப்படுத்தி சொல்லப்பட்ட தாக தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராம சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரவூஸ் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள், ‘பிளாட்’ இயக்கத் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத் தலைவர் சிறீகரன் ஆகியோரையெல்லாம் 10-10-2009 அன்று மாலை ‘இந்தியா அவுஸ்’ என்ற தூதருக்கான இல்லத்தில் சந்தித்தோம். தனித்தனியே அந்த சந்திப்புகள் நடந்தன. தமிழினத்துக்கு இவ்வளவு பெரிய பாதிப்புகள் நேர்ந்துள்ள நிலையிலும், தமிழருக்கான இயக்கத் தலைவர்கள் நம்மை சந்திக்க ஒன்றாக வரவில்லையே என்று வருந்தினேன்.

என்ற திருமா மன வருத்தத்தோடு மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அவருக்கு மட்டுமல்ல, மிஞ்சிய உயிர்களை காப்பாற்ற நினைக்கும் அனைவருக்குமே இது வருத்தம் தரும். இவர்களது ஒற்றுமையின்மையில்லாமல் அகதி மீட்பு பணியில் கால தாமதம் ஏற்படலாம்.
பல இடங்களில் 2002, 2004ல் ஈழத்து வந்து சென்ற தன் பயண நினைவுகளை குறிப்பிடுகிறார். 2004 பயணத்திற்கும், 20009 பயணத்திற்கும் ஒரே வித்தியாசம், அன்று வரவேற்றது விடுதலை புலிகள், இன்று வரவேற்பவர் சிங்களவர்கள்.

சில முகாம்களை வீடியே பதிவு செய்வதை கண்டித்த போது அதை கவலைப்படாமல் படம் பிடித்தேன் என்கிறார். ஆனால், அதை ஊடகப்பார்வைக்கு கொடுக்கப்பட்டதா என்று இதுவரை தெரியவில்லை.

திருமா வீடியோ பதிவு செய்யும் போது, ஒரு பெரியவர் அவரிடம்,
”எங்களை வைத்து நீங்கள் அரசியல் பண்ணுகிறீர்கள். பிராந்திய நலனுக்காக எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறீர்கள். இந்தியாவும் உலக நாடுகளும் எங்களை ஏமாற்றிவிட்டன. நாங்கள் யாரும் புலிக்கொடி பிடித்தவர்கள் இல்லை. அப்பாவி சனங்கள் ! எங்களுக்குப் புலிச் சாயமில்லை. நான் சொல்லுவேன். திருமாவளவனுக்கு புலிச் சாயமுண்டு. புலிக்காக நீங்கள் இந்தியாவில் கொடி பிடிக்கிறவர், நாங்கள் அப்படியில்லை. ஆனாலும், எங்களை இப்படி முள்வேலிக்குள் ஏன் இந்த அரசாங்கம் அடைத்து வைத்துக் கொடுமை செய்கிறது. எங்களை எங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள்; அது போதும் !”.

” எங்களுக்கு நம்பிக்கையில்லை. காங்கிரசும் தி.மு.கவும் ஒன்று போலத்தான் தெரிகிறது”

”எங்கள் கை, காலை வைத்து நாங்கள் உழைத்துப் பிழைத்துக் கொள்வோம். எங்களை விட்டால் போதும். வேறொன்றுமே வேண்டாம். இப்படிக் கையேந்திப் பிழைக்க கேவலமாக இருக்கிறது !”

”பாம்புக் கடியால் பல பேர் இறந்திருக்கிறார்கள். ஏராளமான அளவில் பாம்புகள் உள்ளன. கொசுக்கடியும் தாங்க முடியவில்லை”


தன் உள்ள குமுறலைக் கொட்டியுள்ளார் அந்த பெரியவர். முகாமில் உள்ளவர்கள் தங்கள் முகாமில் வசதியின்மை பற்றி குறிப்பிட்டும் போது அங்குள்ள அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

ராஜபக்‌ஷேவுடன் சந்திப்பின் போது, இராணுவத்தைப் பற்றி பஷிலிடம் கேளுங்கள் என்றார். பஷில் குழு கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதில் தான் அளித்திருக்கிறார். இவர்களிடம் என்றைக்கும் தெளிவான பதில் வராது என்பது நாம் அறிந்த்து என்றாலும், அழித்தவனிடம் சென்று தமிழர் பாதுகாப்பை பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் வருத்ததுக்குரியது.

இந்த நூலை முடிக்கும் போது, ‘அண்ணன் இருக்கிறார்’, ‘ ஈழம் மலரும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகளில் முடிக்கிறார். இப்போது தேவை நம்பிக்கை வார்த்தையல்ல... இருக்கும் உயிர்களை காப்பாற்றும் செயல் திட்டங்கள். முகாமில் இருப்பவர்களுக்கான விடுதலை. அவர்களுக்கான வாழ்வாதாரம்.

முகாமில் ஒரு பெரியவர் திருமாவிடம், “”எங்கள் கை, காலை வைத்து நாங்கள் உழைத்துப் பிழைத்துக் கொள்வோம். எங்களை விட்டால் போதும். வேறொன்றுமே வேண்டாம். இப்படிக் கையேந்திப் பிழைக்க கேவலமாக இருக்கிறது !” என்றார்.

இந்த நிலைமை மாறினால் போதும்.


பக் : 142, விலை. ரூ.65/-
விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை,
சென்னை - 600 002

LinkWithin

Related Posts with Thumbnails