வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 27, 2012

கல்லூரி காதல் - டைரிக்குறிப்பு !!

ஒவ்வொருவனின் வாழ்க்கையில் மறக்க முடியாத புத்தகம் இருக்கும். கருத்தும், குணத்திற்கும் அந்த புத்தகம் மாறுபடலாம். ஆனால், எல்லோரும் மிக முக்கியமாக, பொக்கிஷமாக பாதுகாத்து வரும் ஒரு புத்தகம் ஒன்று உண்டு. அது, அவரவர் டைரி தான்.

பழைய புத்தகங்களை எல்லாம் எடுத்து வைக்கும் போது, கல்லூரியில் நான் எழுதிய ‘காதல் சோகப் பாடல்’ கண்ணில் பட்டது. என் நண்பன் ஒரு ட்யூன் சொல்ல, அதற்கு எதோ எழுதியிருக்கிறேன். நண்பன் சொன்ன ட்யூன் ஞாபகமில்லை. காதலை அதிகம் ரசிக்கும் பருவம் கல்லூரி காலங்கள் என்பது என் பழைய டைரிக்குறிப்புகளில் தெரிகிறது.

எல்லா உணர்வுகளை விட காதல் மட்டும் எப்படி கை ரேகைப் போல் உடம்பில் ஒட்டிக் கொள்கிறது என்று புரியவில்லை.

***


மனதென்பது அவளிலுள்ளது
காதலென்பது என்னிலுள்ளது
ஈருயிராலும் ஒர் காதல்
ஒருயிரானாலும் உயர்வனாது காதல்
காதலை நான் தான் சுமந்தேன்
கருத்தரிக்க சொன்னால்
உயிர் துறப்பேன்
(மனதென்பது



வந்தது வரட்டும் என்பதல்ல காதல்
வாழ்க்கையோடு வாழ தேவை காதல்
வருபவர்கள் எல்லாம் செய்வதல்ல காதல்
வலிக் கொடுத்தவளை செய்வது தான் காதல்

புதிரா ! புனிதாமா புரிவதில்லை
பலர் சொன்னாலும் விளங்குவதில்லை
தியாகம், துரோக,
தர்மம் , கர்மம்

எல்லாம் இருப்பது காதல் தான்...
காதல் தான்... காதல் தான் !
(மனதென்பது



ஓடி ஒதுங்கியவர்களை எல்லாம் விரும்பாது காதல்
விரும்பியவர்களை தேடி தேடி அழையும் காதல்
ஒப்பனை செய்தாலும் வருவதில்லை காதல்
வெற்றி தோல்வியிலும் இருப்பது காதல்

தொடங்கியது தொடங்கியது தான்
கல்லறை வரை தொடர்வது தான்
சொர்க்கம், நரகம்,
ஜனனம், மரணம்

எல்லாம் இருப்பது காதல் தான்
காதல் தான்... காதல் தான்...

(மனதென்பது


Thursday, April 26, 2012

ஞாயிறு - மருத்துவர் விடுமுறை ??

சென்ற சனிக்கிழமை (21.4.12), என் உறவினர் ஒருவர் (வயது 56) உடல் நலம் சரியில்லாமல் திருச்சி மூர்த்தி மருத்துவமனையில் அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தவர் என்பதால், நர்ஸ்க்கு தண்ணி அடித்திருப்பார் என்ற சந்தேகம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சேர்க்க முடியாது என்றார். ட்யூடி டாக்டர் பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை என்று சொன்னதால் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ( இவர் பெருமாளை பக்தன் என்பதால், சனிக்கிழமை மட்டும் தண்ணி அடிக்கமாட்டார் என்பது எங்கள் உறவினர்களுக்கு தெரியும். நர்ஸ் சொன்னதால் ஒரு சந்தேகம். அவர் தண்ணியடிக்கவில்லை என்பது தான் உண்மை).

அடுத்த நாள் (22.4.12) வரை, அவருக்கு நினைவு திரும்பாததால் மீண்டும் மூர்த்தி மருத்துவமனையில் அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனை ச்சீஃப் (Chief) டாக்டர் என் உறவினருக்கு நெருக்கமானவர். முதலில், இறுதய பிரச்சனை என்று பரிசோதித்தனர். எல்லாம் சரியாகவே இருந்தது. எதற்கும், Brain CT Scan எடுத்து பார்க்கலாம் என்று பார்த்த போது, 'Brain attack' வந்திருப்பதாக சொன்னார்கள். Neurologist ஞாயிற்றுகிழமை வர மாட்டார் என்பதால், தொலைப்பேசியிலே அவரை தொடர்பு கொண்டு சில மருந்து கொடுக்க சொன்னார். மருத்துவமனையில் இருக்கும் டியூட்டி டாக்டரும் பயப்படும் படி ஒன்று இல்லை என்றனர்.



திங்கள் (23.4.12) காலை வருவதாக சொன்ன Neurologist மதியம் வரை வரவில்லை. அவர் வர மாலை ஆகலாம் என்று சொன்ன பிறகு, ஊரில் இருந்து வந்த மகன் சென்னைக்கு அழைத்து வைத்தியம் பார்க்கலாம் என்று முடிவு செய்தார். பரிசோத்த டாக்டரும், தாராளமாக அழைத்து செல்லலாம். கவலைப்படும் நிலை இல்லை என்றே சொன்னார்.

ஆம்பிலென்ஸ் வண்டியில் அழைத்து வரும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நர்ஸ் பள்ஸ் பார்த்து சரியாக இருப்பதாக சொன்னார். சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததும், அவரை பார்த்த டாக்டர் உயிர் போய் இரண்டு மணி நேரமாகிறது என்றார். வரும் வழியில் உயிர் பிரிந்திருக்க வேண்டும்.

என் உறவினர் டெத் சர்ட்டிப்பிக்கெட்டில் 2005ல் இருந்து தற்போது வரை அவர் மேற்கொள்ள மருத்துவ பரிசோதனைகள் எல்லாம் நெருங்கி டாக்டர் குறிப்பிட்டு கொடுத்திருந்தார். அழைத்து செல்லும் போது இரண்டாவது Brain attack வந்து இறந்ததாக சொன்னார்.

Brain attrack என்று சொல்லப்படும் ஒரு நோயாளிக்கு ஒன்றரை நாள் வரை மருத்துவர் இல்லாததால் வைத்தியம் பார்க்கவில்லை. ஞாயிறு, ஒரு Neurologist வரவில்லை என்றால் இன்னொரு Neurologist ஏன் அந்த மருத்துவமனை ஏற்பாடு செய்யவில்லை ?

ஒரு மனிதர் தானே அவர் விடுமுறை எடுக்கக் கூடாதா என்று கேட்கலாம். ஒருவர் விடுப்பு எடுத்திருக்கும் போது மாற்று ஏற்பாடு செய்வது மருத்துவமனையின் கடமை. அதை ஏன் இவர்கள் செய்யவில்லை ?

இங்கு Neurologist இல்லை. வேறு மருத்துவமனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஏன் சொல்லவில்லை ? ( நோயாளி மூலம் வரும் பணம் வெளியே போய் விடக்கூடாது )

வழியில் உயிர் பிரிந்தது என்றால், உடன் இருந்த நர்ஸ் பள்ஸ் ஏன் சரியாக இருப்பதாக சொல்ல வேண்டும். ? ( இவர்கள் எங்கு நர்ஸிங் படித்தார்களோ ? ) 

இதைப் பற்றி நண்பர்களிடம் கூறிய போது, "தனியார் மருத்துவமனையில் ஞாயிறு டாக்டர்ஸ் வர மாட்டாங்க... ட்யூடி டாக்டர் வச்சி ஓட்டுவாங்க!! " என்று பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

இன்று (26 ஏப்ரல்) இறந்த என் உறவினரின் பிறந்தநாள்.

Heart attack, Brain attack எந்த வியாதியாக இருந்தாலும் இனிமேல் விடுமுறை நாட்களில் வரக் கூடாது. வந்தாலும் தனியார் மருத்துவமனையில் சேரக் கூடாது. ( G.Hயில் சேர்ப்பது வேறு விதமான பிரச்சனை. எங்க தான்டா போறது ??? )

கடவுள் நம்பிக்கையில்லாதவர்களும் மருத்துவர்களை நம்பிதான் ஆக வேண்டியுள்ளது. நீங்கள் தவறு செய்யக் கூடாது என்பதை தான் ஒவ்வொரு குடிமகனும் விரும்புவான். அதை தான் நானும் எதிர்பார்க்கிறேன்.

Wednesday, April 25, 2012

ஹைக்கூ கவிதைகள் - 11

சேவை செய்ய
அதிகம் தேவை
மருத்துவருக்கு பணம் !

**

உயிருக்கு ஆபத்தான
பகுதியில் வாழும் மக்கள்
இடிந்தக்கரை !

**

ஆற்று நீர் குடித்தும்
தாகம் அடங்கவில்லை
சூரியனுக்கு !

**

மாநிலத்தில் ஓர் கொள்கை
ஊருக்கு ஓர் பேச்சு
கம்யூனிஸ்ட் கட்சி

**

கடலுக்கு மாற்று நிறம்
இரத்த சிவப்பு
தமிழ் மீனவர்கள் !

**
ஆயுளை குறைக்கிறது
நாம் சாப்பிடும்
உணவு பொருள்

**

எந்த உறவும்
உண்மையானதில்லை
டி.வி மெகா தொடர்

Monday, April 23, 2012

ஏ.வி.எம் ஸ்டியோ ஏழாவது தளம் : தமிழ்மகன்

வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால் புகழ் ஆசிரியர் தமிழ்மகன் எழுதிய நாவல். இவரின் இரண்டு நாவலை வாசித்து விரும்பியதாலும், சினிமாவை கதைக்களனாக கொண்டதாலும் அதிக எதிர்ப்பார்ப்புடன் இந்த நாவலை வாசித்தேன்.

சினிமாவை கதை களனாக கொண்ட படமாகட்டும், சிறுகதை அல்லது நாவலாகட்டும் ஒரு பெண் சீரழிவதை காட்டும் விதியில் இருந்து இந்த நாவலும் தப்பவில்லை.

தமிழ்மகனுக்கு பால் என்றால் மிக பிடிக்குமோ ? வள்ளுவன் வழியில் இந்த நாவலை இன்பத்துபால். பொருட்பால், அறத்துபால் என மூன்று பாகங்களாக பிரித்துள்ளார். ஒரு நடிகையின் அறிமுக நிலை, ஏறுமுக நிலை, இறங்கு முக நிலை என மூன்று நிலையில் கதையை நகர்த்தி இருக்கிறார். :
சினிமாவில் நாயகியாக வேண்டும் கனவோடு வருகிறாள் சுந்தரி. மல்லிகை பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளன் ஸ்ரீதர் உதவியோடு சுந்தரி தீபிகா என பெயர் மாற்றி நாயகியாகிறாள். சினிமாவில் தன்னை இழக்க தயார் நிலையில் ஷூட்டிங் வருகிறாள். முதலில் புரோடியஸர், டைரக்டர் என ஒவ்வொருவரின் மனநிலையை புரிந்து வளைந்துக் கொடுக்கிறாள்.

முதல் படம் முடியும் முன்பே பெரிய நடிகரான பவன் சுந்தரின் பட வாய்ப்பு கிடைக்கிறது. அவருடனுன் அட்ஜெஸ்மண்ட் செய்துக் கொள்கிறாள். ஒரு பெரிய நடிகனின் கண்ட்ரோலில் இருப்பது தனக்கு நல்லது என்று பவனின் ஆசை நாயகியாக இருக்கிறாள்.

சினிமாவில் பெரிய நிலை அடைந்த பிறகு பவனின் பிடியில் இருந்து விடுப்படுகிறாள். தனது பத்திரிக்கை நண்பன் ஸ்ரீதரை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறாள். நடிகை திருமணம் செய்துக் கொள்ள யோசிக்கிறான். ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் அவளை காதலிப்பதை சொல்ல வர, தீபிகா ஒரு இயக்குனரை திருமணம் செய்துக் கொள்கிறாள்.

திருமணம் பிறகு அந்த இயக்குனர் சொந்தப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தீபிகா சொத்தையெல்லாம் அழிக்கிறான். இறுதியில் தீபிகா என்ன முடிவு எடுக்கிறாள் என்பது மீதி கதை.

தனது வழக்கமான எம்.ஜி.ஆர் துவேஷத்தை இந்த நாவலிலும் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது வழங்கியது, தனக்கு பிடிக்காத ஆளை எம்.ஜி.ஆர் என்ன செய்வார் போன்ற விஷயங்களில் கதாபாத்திரங்கள் வாயிலாக காட்டியுள்ளார்.ஆட்சி மாறினால் எம்.ஜி.ஆரை திட்டி ஒரு புத்தகம் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

கதாபாத்திரங்களின் குணாதிசயம் என்று பெரிதாக குறிப்பிடவில்லை. இயக்குனர் பரணிகுமார் நல்லவரா ? கெட்டவரா ? என்ற குழப்பதிலே அந்த பாத்திரப்படைப்பை முடித்திருக்கிறார். நாயகி தீபிகாக் கூட அட்ஜஸ்மெண்ட் செய்து கொள்வதற்கு தயாராக சினிமாவுக்குள் வரும் போது அவள் சோடை போகும் போது பெரிய பரிதாபமாக இல்லை.

ஒவ்வொரு நடிகை வாழ்க்கையிலும் இப்படி தான் நடக்கிறது கிசுகிசுவில் படித்து பழக்கப்பட்ட கதை என்பதாலோ தீபிகா நம்மை பாதிக்கவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. இந்த நாவலை ஒரு முறை ‘டைம் பாஸ்’ க்காக வாசிக்கலாம்.

**
நூல் விபரங்கள் :
ஏவி.எம் ஸ்டியோ ஏழாவது தளம்
தமிழ்மகன்
பக்.192, விலை.60
முற்றம் பதிப்பகம்
விற்பனை உரிமை : நிவேதிதா புத்தகப் பூங்கா
இராயப்பேட்டை, சென்னை – 14.
பேசி : 98847 14603

Friday, April 20, 2012

துப்பாக்கி : விஜய் படத்தின் கதையல்ல

”காவேரி... ஹரி..” என்று வீரிட்டப்படி தூக்கத்தில் இருந்து எழுந்தான் அஸ்வின். யாரோ தன் வீடு புகுந்து தன் மனைவி, மகனை துப்பாக்கியால் சுடுவது போல் இருந்தது.

அஸ்வின் விழித்து எழுந்த போது காவேரி ஹரியை ஸ்கூலுக்கு துணி மாட்டிக் கொண்டு இருந்தாள்.

“ சீக்கிரம் எழுந்திறீங்க... என்ன இவ்வளவு நேரம் தூக்கம். ஹரிய ஸ்கூல்ல விடனும்” கத்தியபடி காவேரி வீட்டு வேலை செய்தாள்.

“குட் மார்னிங் டாடி.. “ ஹரி ஸ்கூலுக்கு ஷூ மாட்டிக் கொண்டு இருந்தான்.

“என்ன இவ்வளவு சீக்கிரம் ஸ்கூலுக்கு...?”

“டாடி... இப்ப டைம் 8 ஆவுது...”

“வாட்... 9 மணிக்கு கமிஷனரை மீட் பண்ணனும் “ என்று சொல்லி அவசர அவசரமாக பல் விளக்கி குளித்தான். 8.20 க்குள் தன் காலை கடனையெல்லாம் முடித்துக் கொண்டு வெள்ளை, கருப்பு பெண்ட் போட்டுக் கொண்டான். தன் துப்பாக்கியை இருப்பில் சொருகி, அதற்கு மேல் கருப்பு ஜாக்கெட் ஒன்றை மாட்டான்.

”டாடி எனக்கு உங்க துப்பாக்கி சுடுறதுக்கு... சொல்லி தரீங்களா ? “

“ உனக்கு எதுக்கு துப்பாக்கி ஷூட் பண்ணுறது...?”

”நீ இல்லாத போது யாராவது வந்தா... நான் சண்டை போடுறதுக்கு...”

“ என்ன மீறி உங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது...” என்று ஆசையாய் சொன்னப்படி தன் மகனுக்கு முத்தம் கொடுத்தான்.

“காவேரி... நான் களம்புறேம். கமிஷ்னர் எனக்காக வெயிட் பண்ணுவாரு...”

”கொஞ்சம் சாப்பிட்டு போங்க...”

அஸ்வின் செல்போன் மணி ஒளித்தது.

“அஸ்வின் களம்பியாச்சா... உங்களுக்காக வழக்கமா மீட் பண்ணுற ரெஸ்டாரண்ட்ல வெயிட் பண்ணுறேன். இன்னும் ஹாப் நவர்ல பெரிய ஆபிஸர் எல்லாம் வருவாங்க... நீங்க இல்லாம நல்ல இருக்காது...”

“ஒகே ஸார்.... இன்னும் 10 நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்...” என்று சொல்லி போனை வைத்தான்.

“சாரிம்மா...! நான் சாரோட சாப்பிடுறேன். இன்னைக்கு ஹரிய ஆட்டோவில நீ ஸ்கூல்ல விட்டுடு..” என்று தன் போலீஸ் ஜிப்பில் ஏறினான்.

”டாடி...டாட்டா “ ஹரி கை அசைக்க அஸ்வின் கை அசைத்தப்படி வண்டியில் சென்றான்.



*

சுற்று புறம் பார்த்து, சற்று பதட்டத்துடன் ரெஸ்டாரண்ட்க்குள் நுழைந்தான்.

“குட் மார்னிங் சார் !”

“வெரி குட் மார்னிங் “ நாற்காலியில் அமர சொல்லுவது போல் கை காட்டி பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான் அந்தோனி.

“யுவர் ஆர்டர் ப்ளிஸ்” என்று வெய்ட்டர் நிற்க, “10 மினிட்ஸ் “ என்றான் அந்தோனி.

பசியிருந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் அஸ்வின்.

“சார்.. இந்த ஹோட்டல... தந்தூரி சிக்கன் நல்லா இருக்கும்”

அந்தோனி பேப்பர் படித்தப்படி தலையசைத்து, மீண்டும் பேப்பர் படித்தான்.

“கிரில் சிக்கன் கூட ரொம்ப நல்லா இருக்கும்”
“ம்ம்ம்..” என்று சொன்னப்படி மீண்டும் பேப்பர் படித்தான்.

“சாப்பிட்டு...சுடா காபி குடிச்சா..ரொம்ப சூப்பரா இருக்கும்”

படித்துக் கொண்டு இருந்த பேப்பரை எடுத்து வைத்து, “ஹாப் கிரில் சிக்கன் கொண்டு வாப்பா..” என்று வையிட்டரிடம் சொன்னார்.

“சரி..! ஏதாவது கத சொல்லு...” என்றார் அந்தோனி.

ஒன்றும் புரியாமல் விழித்தவாரு அஸ்வின் இருந்தான்.

“எப்படியும் சிக்கன் வர வரைக்கும் ஏதாவது பேசி என்ன பேப்பர் படிக்க விட மாட்ட. பேசாம ஒரு கதை சொல்லு..”

“ஒரு ஹாணஸ்ட் போலீஸ் ஆபிஸர்...”

“அக்‌ஷன் ஸ்டோரியா...?”

“அக்‌ஷன், செண்டிமெண்ட்...”

“ம்.. சொல்லு...”

“ துத்துக்குடியில பெரிய ரௌடிய போலிஸ் குருப்போட போய் நம்ம ஹீரோ அரஸ்ட் பண்ணுறாரு. அடுத்த நாள் அந்த ரௌடிய கோர்ட் கூட்டிட்டு போகும் ஒரு கேங் போலீஸ் வேன் அட்டாக் பண்ணுறாங்க. இரண்டு போலீஸ்காரங்க மேல் தலையில பலமான அடி. நம்ப ஹீரோ கன் எடுத்து இரண்டு பேரு ஷூட் பண்ணுறாரு... அதுல அந்த பெரிய ரௌடியும் ஒருத்தன்”

“என்னையா அக்‌ஷன் மட்டும் தான் இருக்கு. செண்டிமெண்ட் இல்ல..!”

“இருங்க.. நம்ப ஹீரோ ஹூட் பண்ணதுல அந்த ரௌடி செத்துட்டான். ஒரு வாரம் களிச்சு ஹீரோவுக்கு கமிஷ்னர் பார்ட்டி வைக்குறாங்க.. அந்த நேரத்துல, அந்த ரௌடியோட மச்சான் மதுரையில இருந்து பெரிய ரௌடி படைய வச்சி சரியா 10 மணிக்கு ஹீரோ வீட்டுல அடிக்க சொல்லுறான். ஹீரோவோட ஒயிப், பையன் செத்துடுறாங்க..”

“உடனே.. நம்ம ஹீரோ அந்த ரௌடியோட மச்சான கொல்லுறானா...?”

“இல்ல... ஒரு வருஷமா வேலைக்கு போகமா.. அவங்க செத்த அதே நாள்ல, அதே நேரத்துல, அன்னைக்கு போட்டிருந்த அதே ட்ரெஸ் போட்டுட்டு கொல்லனும் வெயிட் பண்ணுறான். அவன்கிட்டையே வேலை சேர்ந்து அவன் கூட இருந்த ஒவ்வொருத்தரையும் பிரித்து அவங்களை கொள்ளுறான்.

" அன்னைக்கு மட்டும் அந்த நேரத்துல, அவன் வீட்டுல இருந்திருந்தா அவங்கள சாக விட்டுருக்க மாட்டான்”

அந்தோனிக்கு சேலசாக எதோ போறி தலையில் தட்டுவது போல் இருந்தது.

9:59 மணி இருந்து சரியாக 10 மணியடிக்க...

தன் இடிப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து அஸ்வின் அமரை சுட்டுக் கொலை செய்கிறான்.

”டாடி எனக்கு உங்க துப்பாக்கி சுடுறதுக்கு... சொல்லி தரீங்களா ? “ என்று தன் மகன் அவனிடம் கேட்டது அவன் காதில் ஒளித்துக் கொண்டே இருந்தது.

தன் செல்போன் எடுத்து, “ கமிஷ்னர் சார் ! என்னோட லாங் லிவ் இன்னையோட முடியுது. நான் மறுபடியும் வேலையில ஜாயின் பண்ணுறேன்” என்ற சொன்னபடி நடந்தான்.

***

ஒரு குறும்படத்திற்காக சொன்ன கதை, படம் எடுக்காததால் சிறுகதையாக மாற்றிவிட்டேன்.

LinkWithin

Related Posts with Thumbnails