வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Kannada Cinema. Show all posts
Showing posts with label Kannada Cinema. Show all posts

Thursday, April 30, 2020

இரண்டு கன்னட திரில்லர் படங்கள்

Low Budgetல் படம் நல்ல திரைக்கதை அமைக்கும் படங்களில் கன்னடப் படங்களில் பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் வேறு மொழி படங்களில் உரிமை வாங்கி ரீ-மேக் செய்த காலம் சென்று, தற்போது குறைந்த செலவில் Minimum Guarantee படங்களை கொடுத்திருக்கிறார்கள்.



Nanna Prakara

நம்ம ஊர் கிஷோர், பிரியாமணி நடித்தது. விஸ்மா என்ற பெண் காணவில்லை என்று அவள் நண்பர்கள் போலீஸில் புகார் கொடுக்கிறார்கள். கார் அவள் விபத்தில் இறந்ததாக போலீஸ் நம்புகிறது. பின்பு, அது கொலை இருக்குமோ என்று சந்தேகம் வர, அது விபத்தாக இருக்கும் என்று அவளுடைய காதலன் கூறுகிறான். அவளுடைய காதலன் விஸ்மா கற்பமாக இருந்ததாக கூறியிருக்கிறான். ஆனால், போஸ்ட்மார்டன் ரிப்போட்டில் அவள் கற்பமாக இல்லை. அப்படியென்றால், நடந்தது விபத்தா? கொலையா? இறந்தது யார்? என்று பல முடிச்சுகள் இறுதியில் தெரியும்.

Birbal Case No. 1: Finding Vajramuni

படம் வெளியிடும்போது இது மூன்று பாகத்திற்கான படம் என்று தலைப்பு சொல்கிறது. ஆரம்பக்காட்சியில் ஒரு கால் டாக்ஸி டிரைவர் கொல்லப்பட, அதை வழியில் செல்லும் சென்ற இளைஞன் போலீஸிடம் தெரிவிக்கிறான். போலீஸ் அந்த இளைஞனை குற்றவாளியாக்கி கைது செய்து எட்டு வருட தண்டனை பெற்று தருகிறார்கள். எட்டு வருட சிறை வாழ்க்கை முடிந்து அந்த இளைஞன் வெளியே வருகிறான். முடிந்துப்போன இந்த வழக்கை வழக்கறிஞர் மகேஷ் தாஸ் உண்மை கண்டுபிடிக்கிறார். ஒரு வாரம் முன்பு நடந்ததே பலருக்கு நினைவில் இல்லாமல் இருக்கும்போது, எட்டு வருட முன்பு இருந்த சம்பவங்களை நினைவில் வைத்து கூறுவது கொஞ்சம் Logic உதைக்கலாம். ஆனால், இறுதி வரை யார் குற்றவாளி என்று நீங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டீர்கள். New Trial கோரியன் படத்தில் காபி என்பது இந்த இடத்தில் சொல்ல வேண்டும்.

இரண்டு படங்களுமே ரொம்ப சிம்பிள் திரில்லர் படம். ஒரு முறை பார்க்கலாம்.

Thursday, March 10, 2016

அபிநேத்திரி (2015) - கன்னடப்படம்

யுவகிருஷ்ணா எழுதிய ‘நடிகைகளின் கதை’ நூலின் மூலம் இப்படி ஒரு படம் வந்திருப்பதை அறிந்து கொண்டேன். அதுவும், ’தண்டுபாலயா’ படத்தில் பயமுருத்திய பூஜா காந்தி (அர்ஜுன் நடித்த ‘திருவண்ணாமலை’ படத்தின் நாயகி) நடித்தப்படம் என்பதால் டவுன்லோட் செய்து பார்த்தேன். 

கதை என்று பார்த்தால் மற்றுமொரு நடிகையைப் பற்றிய கதை என்று சொல்லலாம். ஆனால், வணிகத்தில் பின் தங்கிய கன்னடப்படத்தின் சகாப்தமாக இருந்த நடிகை கல்பனா பற்றியப்படம் என்பதால் இந்தப்படம் அதிக முக்கியத்துவம் பெருகிறது. தமிழில் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சோப்பு சீப்பு கண்ணாடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.


நாடக நடிகையான நந்தா நடித்த முதல் படமே படுத்தோல்வி. ராசியில்லாத நடிகை என்பதால் எல்லாப் பட நிறுவனங்களும் அவளுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறது. அறிமுக இயக்குனரால் மீண்டும் கன்னட சினிமாவில் நுழைந்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார். 

காலத்தின் ஓட்டத்தால் வாய்ப்புகள் குறைய தொடங்குகிறது. நடித்த படங்களும் தோல்வியை தழுவுகிறது. ஒரு கட்டத்தில் கையில் படமில்லை. கடன் தொல்லை. அதனால், மீண்டும் நாடகத்தில் நடிப்பதை தொடர்கிறார். 

சக நாடக நடிகர், கம்பெனி முதலாளியான சாய் ரவியை காதலிக்கிறார். ஏற்கனவே அவருக்கு திருமணமாகி, திருமண வயதில் ஒரு பெண் இருப்பதை நந்தா கவலைப்படவில்லை. கருத்துவேறுபாட்டால் அவரையும் விட்டு பிரிந்து தனிமையில் வாடுகிறாள். தற்கொலையும் செய்துக் கொள்கிறாள். 

60களில் கன்னடப் பெண்கள் நவீன உடை அலங்காரத்தில் நடிகை கல்பனாவை தான் காப்பி அடிப்பார்களாம். அவளுடைய உடை அலங்காரத்தில் மற்ற நடிகைகளால் ஈடுக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு புகழ் உச்சியில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவர், பட வாய்ப்பு குறைந்தவுடன் அதாளப்பாலத்தில் விழுந்திருக்கிறார் என்றால் சினிமா என்ற மாய உலகம் எப்படிப்பட்டது என்பதை யூகிக்கிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அன்றைய தேதியில் கன்னட திரையுலகம் எப்படிப்பட்டது என்பதை ஒரு சில காட்சிகளில் தெரிந்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இரவு நேர வாடகை குறைவாக இருக்கும் என்பதால் கன்னடப்படங்கள் படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடக்குமாம். 

பூஜா காந்தி வழக்கம் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பக் காட்சியில் மட்டும் தன்னை இளமையாக காட்டிக் கொள்ளும் போடும் மேக்-கப், ஆடை தான் பார்க்க சகிக்கவில்லை. ஆனால், போக போக ‘நந்தாவாகவே மாறியிருக்கிறார். 

கல்பனா என்ற சகாப்தத்திற்கு தனது நடிப்பால் உண்மையான காணிக்கை செலுத்திய பூஜா காந்திக்கு வாழ்த்துகள் !!

Wednesday, March 25, 2015

Naanu Avanalla, Avalu - கன்னடப் படத்திற்கு தேசிய விருது !

கன்னட சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் இரவல் வாங்குபவர்கள் என்ற கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

ஏற்கனவே, ‘லூசியா’ படம் என்னை மிகவும் பாதித்திருந்தது. 

இப்போது, ”Naanu Avanalla, Avalu” படம் தமிழில் “நான் வித்யா” புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. தோழி Living Smile Vidya பாத்திரத்தை ஏற்று நடித்த சஞ்சாரி விஜய்க்கு சிறந்த நடிகனுக்காக தேசிய விருது பெற்றிருக்கிறார். 

சஞ்சாரி விஜய் நடித்த மற்றொரு படமான “ஹரிவு” படத்திற்கு சிறந்த கன்னட படத்திற்கான விருது பெற்றுள்ளது. அந்த படத்தின் கதையை விக்கியில் படித்ததுமே, இது போன்ற படங்கள் கன்னடத்தில் எடுக்கிறார்களா ? என்று பிரமிக்க வைக்கிறது. 

”Naanu Avanalla, Avalu, Harivu இரண்டு படத்தை இந்த வார இறுதியில் பார்த்து விட வேண்டும்.

Monday, September 15, 2014

லூசியா (எனக்குள் ஒருவன்)

முதன் முதலாக நான் முழுமையாகவும், மிகவும் ரசித்து பார்த்த கன்னடப்படம்.

இதற்கு முன் கிரவுட் பண்ட்டில் பல படங்கள் வந்திருந்தாலும், பெரியளவில் வெற்றிப் பெற்ற படம் என்றால் ”லூசியா” தான்.

கனவுக்கும், நிஜத்திற்கும் இடையே மாட்டிதவக்கும் சராசரி மனிதனின் கதை தான். நிஜத்தில் சந்தித்த மனிதர்கள் தான் கனவிலும் வருகிறார்கள். நிஜத்தில் எப்படியெல்லாம் அவர்கள் தன்னுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தானோ, கனவில் அப்படி நடந்துக் கொள்கிறார்கள்.



ஒரு கட்டத்தில் கனவு நிஜத்தை வெல்லும் போது, இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் கனவிலே வாழ்ந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறான் நாயகன். அதில் இருந்து மீண்டு வந்தானா இல்லையா என்பது தான் கதை.

இரண்டு கதையிலும் நாயகன் ஒருவன் என்றாலும், இரண்டு பேரின் வாழ்க்கையும் நேர் எதிர்.

எல்லோருக்கும் வாழ விரும்பிய வாழ்க்கை ஒன்று இருக்கும். அதில் வாழ்ந்து பார்க்க வேண்டும் ஆசை இருக்கும். ஆனால், இயல்பு வாழ்க்கையை மாற்றிக் கொண்டு பிடித்தது போல் மாற்றி அமைத்துக் கொள்ளத் எல்லோராலும் முடிவதில்லை.

நம்முடைய சராசரி வாழ்க்கை அடுத்தவனுக்கு மிகப் பெரியதாக இருக்கும். அந்த சராசரி வாழ்க்கையை நமக்கு கீழ் இருப்பவன் மட்டுமல்ல, நமக்கு மேல் வசதியாக இருப்பவனும் விரும்புகிறான் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

தமிழில் சித்தார்த் இரண்டு பாத்திரத்தில் நடிக்க தன்னை அதிகம் மாற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது புகைப்படத்தில் தெரிகிறது. இயக்குனர் அத்தோடு நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கொஞ்சம் மாற்றினாலும் குழம்பிவிடக் கூடிய திரைக்கதை அது. மிக நேர்த்தியாக கன்னடத்தில் கையாண்டு இருப்பார்கள். தமிழில் அப்படியே இருந்தால் போதும். கன்னடப் படத்தில் இருக்கும் திரைக்கதை தமிழுக்கு மாற்ற வேண்டும் என்று நினைத்து அதி புத்திசாலித்தனத்தை காட்டக் கூடாது. (நாம சொன்னா கேக்கவா போறாங்க).

கன்னடத்தில் அதிகம் என்னை கவர்ந்ததால் “எனக்குள் ஒருவன்” படத்தை தமிழில் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன். வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails