“நாவலுக்கான நல்ல கண்டெண்ட் எடுத்துக் கொண்டு, வெகுஜன எழுத்துக்களில் உங்களை தொலைத்துவிட்டீர்கள்”.
சமிபத்தில் விஜய மகேந்திரன் எனது நாவலான “பெரியார் ரசிகன்” குறித்த உரையாடலில், அவர் கூறிய ஒரு விஷயம் இது.
என்னைப் போன்ற வரலாற்று எழுத்தாளர்கள் சந்திக்கும் பெரிய சிக்கல் இது. வெகுஜன நூல்கள், கட்டுரைகள், பத்திரிகைகளுக்கு எழுதி பழக்கப்பட்டவர்கள் ஒரு கட்டத்தில் இலக்கிய தாகத்தில் சீரியஸ் நாவல் எழுத ஆசை வரும். தீவிர இலக்கிய தாகத்திற்கும், வெகுஜன கட்டுரைகள் எழுதிய பழக்கத்திற்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பார்கள்.
வெகுஜன எழுத்தை இழந்தால் தான் இலக்கியப்படைப்பை சிறப்பாக உருவாக்க முடியும் என்ற எதார்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒரு படைப்பை எழுதிவிடுவார்கள்.
அப்படிப்பட்ட மனநிலை எழுதியது தான் “பெரியார் ரசிகன்”.
வெகுஜன எழுத்துகளில் வரும் வருமானம் இலக்கிய எழுத்துகளில் வருவதில்லை. ஆனால், பெரும்பாலான எழுத்தாளர்கள் விரும்புவது அந்த ’இலக்கிய எழுத்தாளர்’ என்ற பெயரை தான். வாழும் போது வயிற்றுக்கு உணவு தருவது 'வெகுஜன எழுத்து' என்று தெரிந்தும், நமது கல்லறைக்கு பிறகு வாழ்த்தும் இலக்கியத்தையே மனது விரும்பும்.
தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் தங்களுக்கான அங்கிகாரத்தை வாழ்க்கை இறுதிக்கட்டத்திலோ அல்லது மரணத்திற்கு பிறகோ தான் பெருகிறார்கள். அதைப்பற்றிய உண்மை அறிந்தும் தங்களது இலக்கிய படைப்பில் எத்தனையோ வரலாற்று பதிவுகளை தங்கள் படைப்பில் பதிவு செய்கிறார்கள். உலக பாரம்பரியத்தை தங்களது எழுத்தால் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறார்கள்.
அப்படி, உலக பாரம்பரியத்தை, நமது வரலாற்றை, நாவல் வழியாக பதிவு செய்து எழுதும் இலக்கிய எழுத்தாளர்களை ‘உலக பாரம்பரிய தினத்தில்’ வாழ்த்துவோம் !!
No comments:
Post a Comment