லிபர்டி புதல்வர்கள் லெக்சிகனில் இருப்பதாக தகவல் வந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அமெரிக்கர்கள் ரகசியமாக செயல்ப்படுகிறார்கள் என்பது ஜென்ரல் தாமஸ் கேஜ் அவ்வப்போது தகவல் வந்துக் கொண்டு தான் இருந்தது.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு முன் லிபர்டி புதல்வர்களை சிறு துசி என்று நினைக்க முடியாது. அமெரிக்க ரகசிய புரட்சி படையினர் எப்போது வேண்டுமானாலும் தலைவலியாக மாறக் கூடியவர்கள் என்பது ஜென்ரல் தாமஸூக்கு தெரியும். லிபட்டி புதல்வர்களை அப்படியே விட்டால் பெரிய புரட்சி இயக்கமாக மாறிவிடும். அவர்களை கைது செய்து’ ஒட்டிக்க வேண்டும் என்று ஒரு படையை ஜென்ரல் அனுப்பி வைத்தார்.
அமெரிக்காவில் புரட்சிப் படையினர், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் என்று குழம்ப வேண்டாம். இந்த உளவு ராணி இருந்த காலக்கட்டம் 18ஆம் நூற்றாண்டு. அப்போது, அமெரிக்காவும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் சாராசரி அடிமை தேசம் தான். தங்கள் விடுதலைக்காக ’லிபர்டி புதல்வர்கள்’ (Sons of Liberity) என்ற இயக்கத்தை நடத்திவந்தார்கள்.
ஜென்ரல் தாமஸின் இலக்கு லிபர்ட்டி புதர்வர்களான ஜான் ஹென்காக்கும், பால் அடம்ஸ் தான். இவர்களை கைது செய்து மற்ற லிபர்ட்டி புதல்வர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய வேண்டும். புரட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மரண தண்டனையை கொடுக்க வேண்டும் என்பது தான் ஜென்ரல் தாமஸின் திட்டமாக இருந்தது. ஒரு அடிமை தேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜென்ரல் இது கூட நினைக்கவில்லை என்றால் எப்படி. ஆனால், நடந்தது அனைத்து தலைக்கிழாக இருந்தது.
லிபர்ட்டி புதல்வர்களை கைது செய்ய சென்ற பிரிட்டிஷ் வீரர்களுக்கும், அமெரிக்க புரட்சிப் படையினர்களுக்கு கடுமையான துப்பாக்கி சுடு நடந்தது. பிரிட்டிஷ் வீரர்கள் வருகை அவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பது அவர்களின் தாக்குதலில் தெரிந்தது. அமெரிக்க புரட்சி படையினர்களை விட பிரிட்டிஷ் இராணுவ பக்கத்தில் அதிக இழப்புகள். மரணங்கள்.
எங்கிருந்து அமெரிக்கர்களுக்கு ஆயுதம் கிடைத்தது ? துப்பாக்கி பவுடர்களை எப்படிப் பெற்றார்கள் ? எப்படி இவர்களால துள்ளியாக தாக்க முடிந்தது ? என்று பல கேள்விகளை பிரிட்டிஷ் அரசிடம் இருந்து ஜென்ரல் தாமஸை கேட்டனர்.
அதற்கு பதில் அளிப்பதை விட அவர் மனது அவரிடம் ஒரு கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தது.
பிரிட்டன் இராணுவப் படை லிபர்ட்டி புதல்வர்களை கைது செய்ய வருவதை யார் தகவல் கொடுத்தார்கள் ? ரகசியமான தகவல் எப்படி கசிந்தது என்பது தான்.
அதற்கான விடையை அவருக்கு கிடைக்கும் போது அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளாக இருக்கக் கூடாது என்று தாமஸ் மனது நினைத்தது. ஆனால், அவளை தவிர வேறு யாரும் தகவல் கொடுத்திருக்க முடியாது.
"நான் லிபர்ட்டி புதல்வர்களை கைது செய்ய படைகளை அனுப்பியது அவளுக்கு மட்டுமே தெரியும்"
தாமஸ் ரகசிய திட்டத்தை உளவு பார்த்து கூறியது அவருடைய மனைவி மார்கிரேட் கெம்பில் கேஜ். தாங்கள் எதற்காக லெக்ஸிகன் செல்கிறோம் என்பதை சென்ற படைக்களுக்கு கூட தெரியாது. படையை நடத்தும் தளபதிகளுக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் தான் படையை வழி நடத்துபவர்கள். இந்த ரகசியத்தை வெளியே சொல்ல வாய்ப்பில்லை.
தளபதிகளிடம் திட்டத்தைப் பற்றி பேசும் போது அவரது மனைவியை தவிர வேறு யாருமில்லை. விளையாட்டாக வெளியே சொல்கிற விஷயமில்லை என்பது அவளுக்கு நன்றாக தெரியும். அதையும் மீறி எதற்காக வெளியே சொல்ல வேண்டும். தன் மனைவி தன்னுடைய வளர்ச்சி எதிராக செயல் பட்டுவிட்டாள் என்று தாமஸ் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.
தன் கணவனை விட அவளுக்கு அப்படி என்ன முக்கியமாக தெரிந்தது ? பணம், பொருள்... நிச்சயம் இல்லை. தாய் நாடு. அது தான் அவளுக்கு முக்கியமாக இருந்தது. தாமஸ் இங்கிலாந்தை சேர்ந்தவனாக இருந்தாலும், மார்கிரேட் கெம்பில் அமெரிக்காவை சேர்ந்தவள்.
மார்கிரேட் கெம்பில் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் பிறந்தவள். அவளது தந்தை நியூ ஜெர்ஸியின் முக்கிய தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என்பதால் தாமஸ் கேஜூடன் நல்ல நட்பு இருந்து வந்தது. அதனால், தனது மகள் மார்கிரேட்டை தாமஸூக்கு உறவை வலுவாக்கிக் கொண்டார்.
திருமணமாகி பதினெழு ஆண்டுகளாகிறது. பதினொரு குழந்தைகள். இருவருக்குள் பெரிய கருத்து வேறுபாடுகள் இல்லை. சண்டை சச்சரவு இல்லை. தன் நாட்டை அடிமையாக நடத்துகிறார் என்று மார்கிரேட் கணவர் மீது கோபமாக பேசியது இல்லை. ஆனால், நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வை தொடரவிட்டால் அமெரிக்கா பல ஆண்டுகளானாலும் அடிமையாக இருக்கும் என்று மார்கிரேட் கெம்பில் நினைத்தாள். அதனால், புரட்சியாளர்களை காப்பாற்ற தனது வாழ்க்கைப் பற்றிக் கூட கவலைப்படாமல் மருத்துவர் ஜோசப் வாரேன் என்பவரிடம் தகவலை கூறினாள்.
ஜோசப் வாரேன் விரைந்து செயல்ப்பட்டு லிபர்ட்டி புதல்வர்களை எச்சரித்ததோடு இல்லாமல் குறுகிய நேரத்திற்குள் தாக்குதலுக்கு தயார் செய்தனர். ஜென்ரல் தாமஸின் திட்டம் தவிடுப் போடியானது.
மார்கிரேட் கெம்பல் ஒரே இரவில் கணவனுக்கு எதிராக செயலப்பட வலுவான காரணம் இருக்கிறது.
1765 – 73 பிரிட்டன் ஏழு வருடங்களுக்கு மேல் யுத்தத்தில் ஈடுப்பட்டதால் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அதனால், 1773ல் தங்களது அடிமை தேசத்தில் வரியை பெருக்கிறது. அமெரிக்காவில் போஸ்டன் நகரத்தில் டீ உற்பத்தி மிகவும் பிரபலம். டீ ஏற்றுமதிக்கு கடுமையான வரி விதித்தது. இதை, அமெரிக்கர்கள் எதிர்த்தனர். போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க நினைத்து தாக்கினார். பிரிட்டிஷ் இராணுவம் ”போஸ்டன் டீ பார்ட்டி” என்னும் போராட்டத்தை வெற்றிக்கரமாக அடக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். அதில் போராடியவர்களுக்கு தண்டனைக் கூட தரவில்லை. ஆனால், ‘லிபர்ட்டி புதல்வர்கள்’ என்னும் புரட்சிப்படை உருவாகக் காரணமாக இருந்தது. பின்னர், அதுவே மிகப் பெரிய புரட்சி இயக்கமான வளர்ந்தது.
தனது தாய்நாட்டை காப்பாற்ற கணவனுக்கு எதிராக செயல்படுவதை நினைத்து மார்கிரேட் கவலைப்படவில்லை. வேறு யாராவது இப்படி ஒரு தவறு செய்திருந்தால் தாமஸ் மரண தண்டனை கொடுத்திருப்பார். ஆனால், உளவு பார்த்தது அவருடைய மனைவி. அவன் பதினொரு குழந்தைக்கு தாய். அவளை இங்கிலாந்து அனுப்பினார்.
நிலைமையை சரிச் செய்து தானும் இங்கிலாந்து செல்லலாம் என்று தாமஸ் நினைத்தார். ஆனால், நடந்தது எல்லாம் அவருக்கு எதிராக இருந்தது. பல வருடங்களாக பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த அமெரிக்கா தங்கள் பிடியில் இருந்து நழுவிக் கொண்டு இருந்தனர்.
லெக்ஸிகன் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் புரட்சித் தீப்பரவத் தொடங்கியது. பல இடங்களில் யுத்தம் மூண்டது. இங்லாந்தில் பல இராணுவ வீரர்கள், ஆயுத தடவாளங்கள் அனைத்தும் கொண்டு வந்தனர். ஆனால், பலனில்லை.
பிரான்ஸோடு யுத்தத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக சண்டைப் போட்ட அமெரிக்கர்கள் அல்ல இவர்கள். இப்போது தங்களுக்காக சண்டைப் போடுகிறார்கள். இவ்வளவு உத்வேகமாக, ஆக்ரோஷமாக அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள் என்று தாமஸ் நினைத்துப் பார்க்கவில்லை. இங்கிலாந்து பிடி தளர்ந்து விடக் கூடாது என்று பல வருடங்களாக போராடினார்.
ஒரு வருடம், இரண்டு வருடமல்ல… கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு மேல் இங்கிலாந்து இராணுவத்திற்கும், அமெரிக்க புரட்சியாளர்களுக்கும் யுத்தம் தொடர்ந்துக் கொண்டு இருந்தது. இறுதியில், அமெரிக்கப் புரட்சியினர் பக்கமே வெற்றி.
அமெரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க சுதந்திரப் போராட்டத்திற்கு ”போஸ்டன் டீ பார்ட்டி” புரட்சி தொடக்கப் புள்ளி என்றால், லெக்ஸிகன் தாக்குதல் சுதந்திரப் பாதைக்கு எடுத்துச் சென்ற வரைப்படம். வரலாற்று சிறப்பு மிக்க லெக்ஸிகன் தாக்குதல் அமெரிக்கர்களுக்கு சாதாகமாக அமைந்தது என்றால் அதற்கு தாமஸின் கைது நடவடிக்கையை உளவு கூறிய அவரது மனைவி மார்கிரேட் கெம்பல் ஒரு காரணம்.
அமெரிக்காவை சுதந்திர நாடானப் பிறகு தாமஸ் இங்லாந்துக்கு திரும்பினார். பல வருடங்களாக யுத்தத்தில் ஈடுப்பட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் தனது மனைவி மீது எந்த வருத்தமோ, கோபமோ அவருக்கு இல்லை. இறுதி வரை மார்கிரேட்டோடு தான் வாழ்ந்தார். 1787ல் உடல்நலக் குறைவால் இறந்தார்.
கணவர் இழந்து 37 வருடங்கள் சகல சௌபாக்கியங்களுடன் தனது பிள்ளைகளோடு வாழ்ந்து இறந்தாள்.
மருத்துவர் ஜோசப் வாரேனுக்கும், மார்கிரேட்டும் ரகசிய காதல் இருந்தது. அதனால் தான் கணவனுக்கு எதிராக இந்த தகவல் கொடுத்தார் என்ற கருத்து நிலவி வருகிறது. ஒரு தேசத்தை தலையெழுத்தை மாற்று வகையில் இந்த உளவு ராணி ஈடுப்பட்டிருக்கிறார். இதுப் போன்ற எதிர்மறையான கருத்துக்கள், பிரச்சாரங்கள் இருப்பது சகஜம் தான். அமெரிக்க சுதந்திர வரலாற்றில் மறக்க முடியாதப் பெண்மணியாக மார்கிரேட் கெம்பல் இருக்கிறார்.
உதவியது
http://www.biographi.ca/en/bio.php?BioId=36017
http://thehistoryjunkie.com/margaret-kemble-gage/
http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/1508330/General-who-lost-his-wife-to-the-American-Revolution.html
http://www.womenhistoryblog.com/2009/05/margaret-kemble-gage.html
https://en.wikipedia.org/wiki/Margaret_Kemble_Gage
1 comment:
ஒரு சரித்திர சம்பவம்....
ஒரு மர்மக் கதை போன்றே இருக்கின்றது...!
(சில எழுத்துப் பிழைகள் தென்படுகின்றன.)
.
.
Post a Comment