Children of Heaven, White Ballon, Turtles Can fly போன்ற படங்களில் குழந்தைகள் பிரதானப் பாத்திரங்கள், அவர்களுடைய மனநிலை என்று இம்மி அளவு கூட பிசராமல் காட்சிப்படுத்தப்பட்ட உலகப்படங்கள். அப்படி ஒரு படத்தை முதல் முறையாக தமிழில் சந்தோஷத்தை தருகிறது.
நம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் ‘பிஸ்சா’ விழும்பு நிலையில் வாழும் சிறுவர்களுக்கு பெரிய கனவாக இருக்கிறது. அந்த கனவை அடைய அவர்கள் உழைப்பதும், அதை நோக்கி செல்வது தான் கதை. ஆனால், அதை அவர்கள் அடையும் போது சந்தோஷத்தில், “இதற்காகவா ஆசைப்பட்டோம்?” என்று அவர்களில் அலட்சிய சிரிப்பில் நமக்கு பல விஷயங்களை சொல்லித் தருகிறார்கள்.
விழும்பு நிலையில் இருக்கும் வாழ்க்கை என்பதால் வசைப்பாடும் அம்மாவை காட்டவில்லை. தன் குழந்தைகள் மீது பாசத்தை காட்டும் தாயை காட்டியிருக்கிறார். ’பிஸ்சா’ சாப்பிடுவது தான் தங்கள் லட்சியமாக இருந்தாலும் அதற்காக தன்மானத்தை இழந்து எச்சில் பிஸ்சாவை சாப்பிடவில்லை. திருடி வாங்கவும் நினைக்கவில்லை. பிஸ்சாவுக்கான பணத்தை உழைத்து சேர்க்கிறார்கள். பிஸ்சா கடைக்கு உள்ளே செல்ல ஆடை தடையாக இருக்கும் போது, புது ஆடை வாங்குவதற்காக உழைக்கிறார்கள்.
இரண்டு சிறுவர்களின் பாத்திரங்களை அதிங்க பிரசங்கி போல் பேசாமல் சிறுவர்களை சிறுவர்களாக காட்டியது மிகப் பெரிய வெற்றி. தமிழ் சினிமா நீண்ட நாட்களுக்கு பிறகு நேர்மறை பாத்திரங்களை பார்க்கிறேன்.
இரண்டு சிறுவர்கள் உழைக்கும் போது இங்கு சட்டம் குழந்தை தொழிலாளிகளுக்கு தான் தடைப் போடுகிறது. குழந்தை முதலாளிகளில்லை என்பதை காட்டுகிறது.
விழும்பு நிலையில் வாழும் குழந்தைகள் வாழ்க்கை என்றதும் சோகத்தையும், கண்ணீரையும் காட்டாமல் அவர்களுக்குள் இருக்கும் கொண்டாட்டத்தை காட்டி வெகு ஜன ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம்.
இதுப் போன்ற படங்களுக்கு மெதுவான செல்லும் திரைக்கதை மரபை மீறி ஸ்வாரஸ்யமான திரைக்கதை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, ரமேஷ் திலக்கின் பாத்திரம். ’பிஸ்சா’ சாப்பிடுவதற்காக சேர்த்த பணத்தை அம்மாவிடம் கொடுக்கும் போதே படத்தை முடித்திருக்கலாம். ஆனால், அடுத்த அரை மணி நேரத்தை படத்தை ஸ்வாரஸ்யமாக நகர்த்துவது ரமேஷ் திலக் தான்.
இப்படி ஒரு படத்தை இயக்கியதற்காக இயக்குனர் மணிகண்டனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இந்தியாவின் மஜித் மஜினியாக வர வாழ்த்துவோம் !!
No comments:
Post a Comment