49வது தேசிய விருது விழங்கும் விழாவில் சோபனாவுக்கு சிறந்த நடிகை விருதும், சிறந்த ஆங்கிலப்படத்திற்கான தேசிய விருதும் பெற்றப்படம்.
லஷ்மி பிரித்வியை மணந்துக் கொண்டு இந்தியாவில் இருந்து கலிப்போர்னியாவில் குடி புகுகிறாள். அவர்களுக்கு மகள் பிறக்கிறது. அங்கையே வளர்வதால், லஷ்மியின் பருவ வயதில் மகள் திவ்யா வெளிநாட்டு கலாச்சாரத்தில் இருக்கிறாள். அம்மா லஷ்மியால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மகளுக்கும், அம்மாவுக்கும் நடக்கும் சண்டையில் அப்பா பிரித்வி புரிந்துக் கொண்டாலும், மனைவியின் உணர்வுக்கு அதிகம் மதிப்பு கொடுப்பதில்லை.
பல நாள் தனிமையில் இருக்கும் லஷ்மி இண்டர்நெட் சாட்டிங்யில் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. முகம் தெரியாத நபரோடு தனது மனக்கவலையை பகிர்கிறாள். பக்கத்து வீட்டில் குடிவந்திருக்கும் சிறுவனும், அவனது அண்ணன் ஸ்டிவ்வும் அவ்வப்போது பேசுகிறாள். ஒரு நாள் திவ்யா தனது ஆண் நண்பனை முத்தமிடுவதை பார்த்த லஷ்மி, அவளை அரைகிறாள். கோபத்தில் திவ்யா வீட்டை விட்டு செல்கிறாள். இதனால், பிரித்விக்கும், லஷ்மிக்கும் உள்ள இடைவேளை இன்னும் அதிகமாகிறது.
தனது தனிமையைப் போக்க இண்டர்நெட் நண்பன் சொன்னது போல் தனக்கு பிடித்த வேலையில் கனவம் செலுத்துகிறாள். மனைவி, அம்மா ஆனப் பிறகு தான் செய்ய மறந்ததையை எல்லாம் செய்து பார்க்கிறாள். தனது மனைவி மாற்றத்தை புரிந்துக் கொண்ட பிரித்வி அவளை சந்தேகப்படுகிறான். கோபத்தில் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு செல்கிறான்.
கணவன் வீட்டில் இல்லை. மகள் புரிந்துக் கொள்ளாமல் விட்டு சென்றுவிட்டாள். தனிமையில் வாடும் ஒரு நடுத்தர வயது பெண்ணின் சோகம், அதை எதிர்க்கொள்ளும் திறன் தான் படம்.
படம் வந்து பத்து வருடங்கள் மேலாகிறது. இன்றைய இணையப் புரட்சியில் ஏறக்குறைய கணவன் – மனைவி உறவு மட்டுமல்லாமல் பல உறவுகள் இணையத்தில் மட்டுமே வாழ்கிறது என்பதை இந்த படம் உணர்த்துகிறது. இணையத்தில் பிடித்தது கேட்கும் நாம் நேரில் பழகும் போது கேட்பதில்லை. விசாரிப்பதும் இல்லை. இணையம் / மோபைல் என்ற ‘Virtual’ உலகத்திற்கு நாம் பலகிவிட்டோம் என்பதை பல சம்பவங்கள் உணர்த்துகிறது.
கதையின் ஒரு வரி எடுத்துக் கொண்டால் English Vinglish படத்திற்கும் Mitr, my friend படத்திற்கும் எந்த வித்தியாசம் இல்லை. கணவன், மகளிடம் அங்கிகாரம் தேட நினைக்கும் குடும்பப் பெண்ணின் மனப் போராட்டம் தான் கதை. ஆனால், Mitr,My friend படத்தை இயக்கிய ரேவதி நேர்க்கோட்டில் கதையை சொல்லியிருக்கிறார். ஆனால், English Vinglish படத்தில் கமர்ஷியலாக ஆங்கிலம் பேச தெரியாத அம்மா பாத்திரத்தில் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.
இந்தப்படத்தில் 'நடிகை 'ரேவதி இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருது கிடைத்தது. ஆனால், அதன் பிறகு ரேவதி என்ற இயக்குனரை பார்க்க முடியவில்லை.
பெண் இயக்குனர்கள் சினிமாவில் தொடர்ந்து 'இயக்குனராக' ஏன் செயல்ப்பட முடியவில்லை என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment