தமிழ் செய்யுளுக்கு உரை எழுது இருக்கிறார்கள். தமிழ் நூல் இன்னொரு மறுப்பு நூலாக தமிழில் வெளிவந்திருக்கிறது. அதிகப்பட்சம் ஆங்கில நூலை அப்படி தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ஆனால், முதல் முறையாக ஆங்கிலத்தில் எழுதிய நூலுக்கு தமிழில் உரையை எழுதியதை பார்க்கிறேன். இதற்கு முன் இப்படி ஒரு முயற்சி மேற்க் கொள்ளப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
நூலில் இடம் பெற்றிருக்கும் 55 அத்தியாயங்களும் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை கோட்பாட்டை விளக்கியும், அந்த கோபாட்டு அடிப்படையாக கொண்ட தமிழ் சினிமா காட்சியை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
சினிமா அனுபவம் இல்லாத 'கருந்தேள்' ராஜேஷ் எழுதியிருப்பதால், ஸிட் ஃபீல்டின் கோட்பாட்டை சரியாக அப்படியே விளக்க முடிந்திருக்கிறது. சினிமா அனுபவஸ்தர்கள் யாராவது இதை செய்திருந்தால், "டைரக்டர் சங்கர் இந்த காட்சி அமைப்புக்கும் போது என்னை பாராட்டினார்" போன்ற சுய புராணமும், தங்கள் திரப்பட வாய்ப்புக்கு தேடும் முயற்சிக்கான புத்தகமாக அமைந்திருக்கும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஸிட் ஃபீல்ட்டின் தத்துவத்தை தான் முன் நிறுத்துகிறார்.
உண்மையில் திரைக்கதை அமைப்பதற்கான ஒரு கையேடு இந்த புத்தகம். இந்த புத்தகத்தை படித்துவிட்டால் திரைக்கதை 100% வடிவமத்துவிடலாம் என்பது எல்லாம் இல்லை. நமது கதைக்கு தேவையான வடிவத்தை தாயார் செய்வதில் நமது கையில் தான் இருக்கிறது. அதில் தவறு இருந்தால் நமது தேர்வில் தான் தவரே தவிர, கோட்பாட்டில் இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
முன்பு, சுஜாதா "திரைக்கதை எழுதுவது எப்படி ?" என்ற புத்தகம் எழுதியிருந்தார். இந்த புத்தகம் முதல் வகுப்பு சிலபஸ் என்றால், ராஜேஷின் புத்தகம் 1-3 க்ளாஸ்க்கான புத்தகம். நிறைய உதாரணங்கள் இந்த புத்தகத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது.
45வது அத்தியாயத்தில் நாவலில் இருந்து திரைக்கதை என்று எழுதியிருக்கிறார். அந்த அத்தியாயத்தில் சிறு வருத்தம், சிறுகதையை சேர்த்து சொல்லியிருக்கலாம். தமிழ்செல்வனின் சிறுகதையை வைத்து தான் 'பூ" திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால், தமிழ் சினிமாவில் இது போன்ற முயற்சிகள் மிக அறிதாகவே இருக்கிறது.
எதிர்காலத்தில் நாவலை சுருக்கி திரைப்படமாக எடுப்பதை விட, சிறுகதையில் காட்சிகளை சேர்த்து படமாக எடுக்கப்படுவது தான் அதிகம். (இப்போதும், சிறுகதையை படத்தில் பயன்படுத்துகிறார்கள். கதாசிரியர்களுக்கு க்ரேடிட் கொடுக்க தான் இயக்குனர்களுக்கு மனம் வரவில்லை.)
அடுத்த பதிப்பில் நூலின் உள்ளடக்க விவரங்களை சேர்த்துக் கொள்வது நல்லது.
’கருந்தேள்’ ராஜேஷ் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் !!!
**
இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது உதிர்த்த சிந்தனைகள்….
எந்த திரைக்கதை கோட்பாடு இல்லாமல் முந்தைய படங்களில் இருக்கும் காட்சிகளை உருவி எடுத்த வேலையில்லா பட்டதாரி, அரண்மனை போன்ற படங்கள் வெற்றி பெறுவதை பார்க்கிறோம். வித்தியாசமான திரைக்கதை வடிவத்தில் வந்த ஆரண்ய காண்டம் தோல்வியை பார்க்கிறோம்.
திரைக்கதை கோட்பாடு எல்லாம் வேறும் இலக்கணம் மட்டுமே. படத்தின் வெற்றி இலக்கை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் நாடி துடிப்பை அறிந்துக் கொள்ள புத்தகமும் உதவுவதில்லை
Call +91 90032 67399 - Cash on Delivery thro' VPP
or
2 comments:
//திரைக்கதை கோட்பாடு எல்லாம் வேறும் இலக்கணம் மட்டுமே. படத்தின் வெற்றி இலக்கை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களின் நாடி துடிப்பை அறிந்துக் கொள்ள புத்தகமும் உதவுவதில்லை //
100 % CORRECT..
உங்கள் கடைசி சிந்தனைகளோடு நானும் ஒத்துப் போகின்றேன்... எனினும், ஒன்றும் புரிபடாதவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு முதல் வழிகாட்டியாக கண்டிப்பாக இருக்கும்...
Post a Comment