ஒரு படைப்பு காலம் கடந்து நிற்கும் என்பதற்கு இந்த படைப்பு ஒரு உதாரணம். சுமார் நாற்பது வ்ருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நாவல், இன்றைய காலக்கட்டத்தில் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.
விஞ்ஞானிக்கு பிறகு நடக்கப்பதை கணித்து சொல்பவன் படைப்பாளியாக தான் இருக்க முடியும். விஞ்ஞானி கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கணித்து சொல்கிறான். ஆனால், ஒரு படைப்பாளி மனிதர்களை வைத்து எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க கூடும் என்ற சாத்தியங்களை முன்பே கணித்து எழுதுகிறான். அந்த காலக்கட்டத்தில் வாசிக்கும் போது ஒரு கற்பனை கதையாய் தெரியலாம். ஆனால், அந்த சம்பவம் நிகழும் போது எப்படி இவர் முன்பே கணித்து இருக்கிறார் என்பது எல்லோரையும் வியக்க வைக்கும்.
'சாயாவனம்' - அந்த வகையில் சேர்ந்த நாவல்.
ஒரு மனிதன் வனத்தை அழித்த கதையை, நாற்பது ஐந்து ருடங்கள் முன்பே எழுதப்பட்டிருக்கிறது. இன்று மனிதன் தனது சுயநலத்திற்காக எத்தனையோ மரங்களை, செடி கொடிகளை வெட்டி சாய்ப்பதற்கு நவீன கருவிகளை கண்டுபிடித்திருக்கிறான். ஆனால், நாற்பது ஐந்து வருடங்கள் முன்பு கோடாளி, அருவாள் மட்டுமே நம்பி வனத்தை அழிக்கும் காட்சியை கண் முன்னே கொண்டு வருகிறார்.
சக்கரை ஆலை தொடங்குவடற்காக சாயாவனத்தின் மரங்களை அழிக்கும் வேலையில் ஈடுப்படுகிறான் சிதம்பரம். அவனுக்கு உதவியாக அந்த ஊரில் தேவர் நட்பு கிடைக்கிறது. தனக்கு வேலை ஆக வேண்டும் என்பதற்காக தேவரின் அக்கா மகன் என்ற போர்வையில் சிதம்பரம் வருகிறான். தனது வனத்தில் வேலை செய்ய வெளியூரில் இருந்து ஆட்கள் கொண்டு வராமல், ஐயர் பண்ணையில் வேலை செய்பவர்களை வைத்து வேலையை முடிக்கிறான்.
முங்கில் மரங்களை வெட்ட காலத்தை குறைக்க, முங்கில் காட்டை எரிக்கிறான். அதற்கு, தேவரும் உதவி செய்கிறார். 'கறும்பு இந்த நிலத்தில் விளையாது' என்று ஆரம்பத்தில் ஒரு சிலர் சொல்லுவதை புரக்கணித்து, சக்கரை ஆலைக்காக வனம் அழிக்கப்படுகிறது. ஆனால், அந்த சக்கரை ஆலைக்காக கறும்பு கொண்டு வர நடை முறை சிக்களை சந்திக்கிறான்.
மனிதனுக்கும், மரத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் மனிதன் தான் வெல்கிறான். ஆனால், மரம் இறுதிவரை போராடி மனிதனை தோற்கடிக்க விரும்புகிறது. மரம் மனிதனை எளிதாக வெற்றிப் பெற செய்வதில்லை என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது.
சாகித்திய விருது பெற்ற சா.கந்தசாமி அவர்களின் 'முதல் நாவல்' என்பது குறிப்பிடதக்கது.
வாங்க....
காலச்சுவடு பதிப்பகம்
ரூ.150

சாயாவனம்
சா.கந்தசாமிகாலச்சுவடு பதிப்பகம்
ரூ.150