வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 21, 2011

கவிதை உலகம் – ஓர் எதிர்வினை



வணக்கம்.

என் 65வது வயது (8.6.11) அன்று உரத்தசிந்தனையாளர்கள் ‘கவிதை உலகம்’ எனும் நூல் பரிசளித்து அகமகிழ்ந்தனர். நூலை ஆழ்ந்து படித்துப் பார்த்தேன். சிறந்த தலைப்பு, தலைப்புக்கேற்ற முகப்போவியம், நூல் நேர்த்தி ஆகியன சிறப்புடையன.

சில இலக்கணப்பிழைகள் தவிர, இலக்கிய நோக்கில் படைப்பு மிக அருமை.

குறிப்பாக ”மணம் வீசும் மலர்கள்” கவிதை நல்கிய செல்வன். து.செ. கவியரசின் படைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. அந்த மலர் “பாரதி கோட்டுக்கு ரோஜா ! மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட்டு, பெருவெளிச்சம் காட்டப்பட வேண்டிய விளக்கு... “கனவு பலிக்குமா !” (அமுதா பாலகிருஷ்ணன்), தமிழன் கவிதைகள், வெகு நேர்த்தி !

தாய்மை காப்போம்” (அ.காசி) , “காகித ஆசை” (பி.காமகோடி), “என தருமை யாருக்கும் தெரியவில்லை” (புதுயுகன்), இம் மூன்றில் முன்னது பண்பட்ட கவிதை. மற்றிரெண்டில் புதிய கோணங்கள். மூன்றும் முழுமையான படைப்புகள். முதலைந்து ஹைக்கூக்கள், திரு. பிரதீப் பாண்டியனது நேர்த்திக் கோர்வைகள்.

பல படைப்புகளில் தனித்துவம் இருக்கின்றன. ஒரே சாயலில், இரு கவிதைகள் இல்லவே இல்லை.

மேன்மேலும் கவிதை உலகுக்கு காரியம் ஆற்றுங்கள், கருமமே கண் என; யுக கவிஞன் பாரதி, ஆசி தருவான் வாரிவாரி !!

இத்தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து கவிஞர்களுக்கும், ஏனைய பிற பங்கேற்பாளர்களுக்கும், நலம் நாளும் தர வேண்டி அரங்கன் அரண்மையில் என் அன்புத் தொழுகைகள்.

வாழிய நலம்.
பேரன்புடன்,

வை.முத்துகிருஷ்ணன்.
எழுத்தாளர் & பாடலாசிரியர்
திருச்சி – 620 006.

**

நூல் வாங்க.... இங்கே.

Monday, June 20, 2011

அவன் – இவன் எங்கே இருக்காங்க ??



பாலாப போல் படம் எடுக்க ஆசைப்பட்டு யாரோ ஒரு இயக்குனர் இயக்கியது போல் உள்ளது. இயற்கை காட்சிகள் நிறம்பிய இடம், அதை ஓட்டிய காட்சிகள், இடையில் கொஞ்சம் நகைச்சுவை, செண்டிமெண்ட், இறுதி காட்சியில் மரணம், சோகம்... எல்லாம் பாலா டெம்ளேட் தான். ஆனால், பாலா டச் இந்த படத்தில் இருப்பதாக தெரியவில்லை.

திருட்டு தொழில் செய்யும் குடும்பத்தில் இரண்டு தாரத்திற்கு பிறந்த இரண்டு மகன் தான் நாயகர்கள். முதல் தாரத்திற்கு பிறந்தவன் ஒண்டரை கண் விஷால். இரண்டாவது தாரத்திற்கு பிறந்தவன் ஆரியா. இவர்கள் குடும்பத்தில் ஒருவனாக பலகிவரும் பணக்கார ஜமீன் பெரியவர் ஐரிஸ். தன் வயதுக்கு மீறி ஆரியா, விஷாலிடம் நண்பனாக பழகுகிறார். ஒரு கட்டத்தில் வில்லன் ஆர்.கேவால் ஐரிஸ் கொலைச் செய்யப்பட, விஷால், ஆரியா என்ன செய்கிறார்கள் என்பது மீதி கதை.



பொதுவாக பாலா படத்தில் நாயகன் இறக்க வேண்டும். அல்லது நாயகி இறக்க வேண்டும். இந்த படத்தில் இரண்டுமில்லாமல் பெரியவர் ஐரிஸ் இறக்கிறார். அவரை நிர்வாணப்படுத்தி கொலைச் செய்யும் காட்சி முகம் சுழிக்க வைக்கிறது தவிர, அந்த பாத்திரத்தின் மீது இயல்பாக வர வேண்டிய பரிதாபம் எதுவும் வரவில்லை.

இடைவேளை வரை படம் எதை நோக்கி செல்கிறது என்று கூட தெரியவில்லை. பாடல்கள் இளையராஜா கைக் கொடுத்த அளவிற்கு கூட யுவன்சங்கர் பாலாவுக்கு கைக் கொடுக்கவில்லை.



நாயகர்களை அதிகம் பெண்டு எடுக்கும் பாலா அதையும் முழுதாக செய்யவில்லை.

ஆரியா விஷாலை கேலி செய்யவும், அம்மாவுடன் ஆட்டம் போடவும், குடிக்கவும் மட்டுமே செய்திருக்கிறார். சூர்யா முன் நடித்துக் காட்டும் போது விஷாலை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். மற்ற இடங்களில் விஷாலின் ஒண்டரைக் கண் க்ளோசப் மேக்கப் மென்னை தான் பாராட்ட வைக்கிறது. விஷால் ஆரியா மீது பாசமாக இருக்கிறா என்பதற்கான காட்சிகளும் படத்தில் வைக்கவில்லை.

இப்படி பல இல்லைகள் இருப்பதால்... பாலா படம் போல் இல்லை.

பாலா சார்... We want more emotions...!!

அவன் இவன் - எவனா இருந்தா எனக்கென்ன ?

Tuesday, June 14, 2011

"கலாம் கண்ட கனவு" தலைப்பில் கவிதை தேவை !!

நாகரத்னா பதிப்பகம் சார்பில் வெளியீட இருக்கும் 11வது நூல் – “கலாம் கண்ட கனவு”. எங்கள் பதிப்பக சார்பில் வரவிருக்கும் 4வது கவிதை நூல்.

“கலாம் கண்ட கனவு” தொகுப்பு நூலுக்கு கவிதைகள் தேவைப்படுகின்றன.ஆர்வமுள்ளவர்கள் இந்த தலைப்பில் கவிதை எழுதி அனுப்பலாம்.

கவிதை அனுப்புவதற்கான விதிகள்.

1. கவிதை 24 வரிகள் மேல் இருக்க கூடாது.

2. கலாமின் கனவு, இப்போதைய இந்தியா, கலாமின் இளைஞர்கள் என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் கவிதை இருக்கலாம்.

3. ஹைக்கூ, மரபு, புதுக்கவிதை, நவீனம் - எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 24 வரிகள் மேல் தாண்டக்கூடாது.

4. தேர்வு செய்யப்படும் கவிதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 20.6.11

நூல் அடுத்த மாதமே வெளியீட இருக்கிறோம். அதன் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
TO : nagarathna_publication@yahoo.in
CC : tmguhan@yahoo.co.in
போடவும்.

பொது விதிமுறைகள்.

நீங்கள் அனுப்பும் படைப்புகள் யுனி கோட்டில் இருக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்புபவர்கள் 'In-text' மெயிலாக அனுப்பவும். Download செய்யும் போது சில சமயம் பிரச்சனை வரலாம். உங்கள் படைப்பை Attachment யில் அனுப்புவதை தவிர்க்கவும்.


நன்றி,

அன்புடன்,
குகன்

பி.கு : மேலும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Friday, June 10, 2011

காமம் இருந்த பொழுது

கிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், கணவனால் திருப்தியடையாதவர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் என்று பலர் சஞ்சலிக்கும் இருப்பிடம். நானும் என் மனைவிக்கு துரோகம் செய்ய இங்கு வருவேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை.

என் பெயர் சேகர். மார்க்கெட்டிங் சேல்ஸ் எக்ஸ்கிட்டிவ். பல முறை மனைவியால் ஏமாற்றப்பட்டவன். மனைவியால் ஏமாற்றப்பட்டவன் என்றவுடன் என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டால் என்ற அர்த்தமில்லை. மனைவி செய்ய வேண்டிய சராசரி கடமை எனக்கு செய்யாததால் ஏமாற்றப்பட்டவன்.



எனக்கும், காமினிக்கும் திருமணமாகி ஐந்து வருடமாகிறது. பெற்றோர்களால் பார்த்து செய்த திருமணம். தஞ்சாவூர் அருகே இருக்கும் ஊரில் காமினி படித்து, வளர்ந்தவள். எங்களுக்கு திருமணமாகி 1825 நாட்களில் ஐம்பது முறை உறவு வைத்திருந்தாலே அதிகம். மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதை கணக்கு வைத்து சொல்கிறானே... மிக கேவலமான ஆள் என்று என்னை நீங்கள் நினைக்கலாம். தப்பில்லை. காம ஆசைகள் உச்சத்தில் இருக்கும் போது கூட மனைவி மறுத்தலால், என் ஏமாற்றத்தை எண்ணிக்கையை எண்ண வேண்டியதாகிவிட்டது.

திருமணம் ஆன இரண்டாவது மாதத்திலே காமினி கர்ப்பமாகிவிட்டாள். குழந்தைக்கு எதுவுமாகக் கூடாது என்று அவள் பயந்தாள். குழந்தை பிறக்கும் ஒன்பது மாதவரை எங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. குழந்தையை விட அந்த உறவு எனக்கு பெரிதாக தெரியவில்லை. சிஸ்ரிங் மூலம் பெண் குழந்தை பிறந்தது. கத்திப்பட்ட உடம்பு என்பதால் காமினியை நான் குழந்தை பிறந்து நான்கு மாதம் வரை தொந்தரவு செய்யவில்லை. அதன் பிறகு நான் தொட்டப்போது அவள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் கரு உருவாகிவிடுமோ பயந்தாள். காண்டம் பயன்படுத்தலாம் என்றேன். காண்டம் முழுமையான பாதுகாப்பு இல்லை என்று காண்டம் கவரில் குறிப்பிட்ட்தை காட்டினாள். 90 சதவிகிதம் பாதுகாப்பாக இருந்தாலும், 10 சதவிகிதத்தில் மீண்டும் கருவுற்றால் கரு கலைக்க வேண்டும் அல்லது குழந்தையை மீண்டும் சுமக்க வேண்டும் என்று பயந்தாள்.

மளிகைப் பொருள், மருந்துப் பொருள் வாங்கும் போதெல்லாம் எக்ஸ்பெரி டேட் பார்த்து வாங்கும் போது பாராட்டியதில் பின்விளைவு என்றே தோன்றியது.

டாக்டர் எக்ஸ், அந்தரங்கம் போன்ற சனிக்கிழமை இரவு டி.வி நிகழ்ச்சியை காட்டி காமினி சம்மதிக்க வைத்து உறவுக் கொள்வேன். ஒன்றை வருடம் கலித்து என் மனைவியுடன் நான் சந்தோஷமாக இருந்தேன். அதன் பிறகு பெரிய அவஸ்தை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலை நாங்கள் படுத்த படுக்கை துணி எல்லாம் தொய்க்கப் போட்டாள். பல் விளக்கும் முன்பே காலையில் என்னை குளிக்க சொன்னாள்.

”நாம என்ன பாவ காரியமா செய்தோம்”

“நாம சுத்தமா இல்லேனா குழந்தைக்கு ஆகாது” என்றாள்.

இத்தோடு முடியவில்லை. போட்டிருந்த துணி தலைக்கு குளிக்கும் முன்பு நனைக்க வேண்டும். மறந்துப் போய் வேறு துணியை தொட்டுவிட்டால் அதையும் நனைக்க வேண்டும். கிட்டதட்ட சாவு வீட்டுக்கு சென்று வந்தால் என்ன செய்ய வேண்டுமா உறவு வைத்த பிறகு செய்ய வேண்டும் என்றாள். அன்று இரவு அனுபவித்த சந்தோஷம் அடுத்த நாள் காமினி போடும் கேடுப்பிடியில் தொலைந்துவிடும். காமினி மனம் கஷ்டப்படக்கூடாது என்று அவள் சொல்லப்படியே செய்தேன். நாளாக நாளாக.... இரவு வைத்துக் கொண்ட உறவு விடியற்காலை 5, 6 மணியானது. உறவு வைத்துக் கொண்ட பிறகு போட்ட துணியை தவிற வேறு துணியை நனைக்க வேண்டாமே என்பதற்காக தான்.

காமம் வீட்டில் நேரம், காலம் கிடையாது என்பார்கள். என் வீட்டில் மட்டும் உறவு வைத்துக் கொள்ள நேரம் உண்டு. நாள் உண்டு. ஆம் ! மாத விலக்கு வந்து 25 நாட்கள் பிறகு உறவுக்கே சம்மதிப்பாள். 16-24 நாட்களில் உறவு வைத்துக் கொண்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புண்டாம்.

அடுத்த குழந்தை வேண்டாம் என்பதற்காக சராசரி கணவனுக்கு கிடைக்க வேண்டிய சந்தோஷம் எனக்கு கிடைக்கவில்லை. சந்தோஷம் கிடைத்த நாளில் அடுத்த நாளில் நிலைப்பதில்லை.

காமம் மட்டுமே திருமண வாழ்க்கை என்று நான் சொல்லவில்லை. அவளின் அன்பு மேல் துளிக் கூட எனக்கு சந்தேகமில்லை. என்னை தவிற இன்னொரு ஆண்ணை நினைத்துப் பார்க்க மாட்டாள். அவள் மீது எனக்கு என்று நம்பிக்கை உண்டு. ஆனால், உறவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காவிட்டால் திருமண வாழ்க்கை எப்படி கசந்து போகிறது என்பதை அனுபவப்புர்வமாக உணர்ந்தேன்.

உறவுக்காக இன்னொரு திருமணம் செய்து என் மனைவியை உயிருடன் கொலை செய்ய விரும்பவில்லை. இன்னொருத்தரின் மனைவியுடன் கள்ள உறவு வைத்து அடுத்த குடும்பத்தை கெடுக்க நினைக்கவில்லை. அதே சமயம் என் மனைவியின் பயத்தையும் என்னால் போக்கவும் முடியவில்லை. அந்த சந்தோஷம் பல நாட்களாக எனக்கு மறுக்கப்பட்டுயிருக்கிறது. அதன் விளைவு தான் இப்போது கிழக்கு கடற்கரை சாலை விடுதியில் இருக்கிறேன்.

என் நண்பன் குமார் அடிக்கடி விபச்சாரி வீடுகளுக்கு செல்வான். அவன் மூலமாக தான் கிழக்குக் கடற்கரை சாலையில் அறை எடுத்தேன். குமார் அனுப்பிய பெண் வந்தாள்.

அவள் பெயர் ? கேட்கவில்லை. கேட்டாலும் உண்மையான பெயர் வராது.

புதுப்பெண் போல வெட்கப்பட்டாள். அவளின் சேர்க்கைத்தனத்தில் அவள் புதியவள் அல்ல என்று தெரிந்தது. வாடிக்கையாளர் புதுப்பெண்ணை தொடுவதுப் போல் நினைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் வெட்கப்படுவாளாம்.

எதற்கு தேவையில்லாமல் வெட்க நடிப்பு என்றேன். வெட்கத்தை தூக்கிப் போட்டு என் தோள் மேல் கைப் போட்டு பேசினாள். வெட்கம் இல்லாமல் ஒரு பெண்ணை ரசிக்க முடியாது என்று அப்போது தான் உணர்ந்தேன். ஒர் இரவுக்கு வெட்கம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.

அவள் அனுமதியுடன் அவளின் ஆடைகளை கலைத்தேன். பெண்ணின் நிர்வாணம் எனக்கு புதியது இல்லை என்றாலும் மனைவியை தவிற இன்னொரு பெண்ணின் நிர்வாணத்தை பார்ப்பது முதல் முறை. அவளை கட்டில் படுக்க வைத்து பாம்புப் போல் அவள் உடல் மேல் எளிந்தேன். முத்தமிட்டேன். என் ஒவ்வொரு அசைவுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தாள். ஆனால், என்னுடைய எந்த தீண்டலுக்கும் அவள் தன் உணர்ச்சியை காட்டிக் கொள்ளவில்லை. வேறுமையாக படுத்துக் கிடந்தாள்.

” என்ன பிடிக்கலையா....!” என்றேன்.

அவள் சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“பணம் வாங்குனதுக்கு அப்புறம் பிடிக்கலைனு சொன்னா விட போறிங்களா...! இன்னைக்கு நீங்க நாலாவது கஸ்டமர் அதான் பிலிங் அதிகம் காட்ட முடியல...” என்றாள்.

எந்த உணர்வும் இல்லாமல் பிணம்ப் போல் படுப்பவளை அனுபவிக்க மனம் வரவில்லை. விபச்சாரியிடன் கூட நான் எதிர்பார்க்கும் சந்தோஷம் மறுக்கப்படுகிறது. என் ஆடையைப் போட்டுக் கொண்டு வெளியே அறையை விட்டு வெளியே வந்தேன்.

Tuesday, June 7, 2011

361 டிகிரி சிற்றிதழ் விமர்சனம்



விமர்சனத்திற்கு முன்பு 361 டிகிரி என்றால் என்ன என்பதை சொல்லிவிடுகிறேன். 360 டிகிரி வட்டத்தை குறிக்கிறது. 360 டிகிரி கொண்ட வட்டத்தை மீறி 361வது டிகிரியாக சிந்திக்கப்பட்ட படைப்புகள் இருப்பதை உணர்த்துகிறது. தலைப்பே நவீன படைப்பாளிகளுக்கான தளம் என்பதை காட்டுகிறது.

முதலில் புத்தகத்திற்கான வடிவமைப்பையும், அதன் படங்களையும் பாராட்டியாக வேண்டும். நவீன படைப்புகளுக்கு பொருத்தமான படங்களை தேர்வு செய்திருக்கிறது ஆசிரியர் குழு. ஒவ்வொரு ஓவியங்களும் பல அர்த்தங்களை சொல்லுகிறது. சில பக்கங்களின் கவிதையை விட ஓவியமே அதிகமாக பிரமிக்க வைக்கிறது.

அடியேனுக்கு நவீன படைப்பும் ஏழு கடல் தூரம். எழுத நான் முயற்சிக்க வில்லை என்றாலும், படித்து புரிந்துக் கொள்ள முயற்சிப்பேன். புரியவில்லை என்றால் என் சிற்றறிவை நினைத்து நொந்துக் கொள்வேன்.

மற்ற படைப்புகள் போல் கவிதைகள் இல்லை. கவிதைகளை ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் இரண்டு என்று தெளிவாக சொல்லிவிட முடியாது. ஒருவருக்கு புரியும் கவிதை, இன்னொருவருக்கு புரியாது. ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காது. ஒரு சிலருக்கு கவிதையாய் தெரியாதது, இன்னும் சிலருக்கு கவிதையாய் தெரியும். இப்படி பலருக்கு பல பார்வையை கொடுக்கக் கூடிய கவிதைகளை 361 டிகிரி முதல் இதழிலே கொடுத்துள்ளனர்.

”நீர்வழிப்புணை” தலைப்பில் சபரிநாதன் எழுதிய கவிதையில்..

நம் அளவிற்கு நம் கால்கள் நம்பத் தகுந்தவையல்ல
நம் அளவிற்கு நம் கண்களுக்கு நிதானமில்லை
நம்மைப் போல் செய்துமுடித்த பின் எதையும் யோசிப்பதில்லை நம் கைகள்


அஹமட் ஃபயாஸ் என்ற உருது கவிஞர் அவர் இறக்கும் முன்னர் எழுதிய கவிதை

மரணம் வந்துவிட்டது
கையில் ஒரு பட்டியலோடு
இன்றைய பட்டியலில்
யார் பெயர்கள் இருக்கின்றன் ?
எனக்கு தெரியவில்லை.


வேற்றுகிரக வாசிகள்” என்ற கவிதையில் திருப்தியாக வாழும் மனிதர்களை சொல்லி இறுதியில் ” நான் அவர்களில் ஒருவனல்ல” என்று சொல்லும் போது சராசரி மனிதனின் மனதை காட்டுகிறது.

பட்டியலை பற்றி “தவறிவிட்டது” என்ற தலைப்பில் அ.முத்துலிங்கம் அவருக்கு உரிய நகைச்சுவை பாணியில் எழுதியிருக்கிறார். குறிப்பாக சங்ககாலத்தில் கபிலரின் பட்டியலையும், கண்ணகி பட்டியலிட்ட்தையும் மேற்கோள் காட்டியிருக்கும் இடம் மிகவும் அருமை.

”யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு...!” என்ற தலைப்பில் இசை என்பவர் எஸ்.செந்தில்குமாரின் “முன் சென்ற காலத்தின் சுவை” நூல் விமர்சனம் செய்திருக்கிறார். நான் படித்த விமர்சன கட்டுரைகளில் கண்டிப்பாக இதுவும் ஒன்றாக இருக்கும். எழுத்தாளரின் கவிதையை விட கவிதைகளைப் பற்றி நல்ல அழமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

”பற்றற்றான்” தலைப்பில் செல்வ புவியரசன் சிறுகதை, பற்றற்ற மனிதனின் மனநிலை சொல்லும் போது இறுதியில் அவள் உடலில் பற்றோடு ஒட்டியிருக்கும் சிறுநீரை சொல்லு இடம் புன்முறுவல் செய்ய வைக்கிறது.

வெய்யில், இசை, நதியலை என்று பல எழுத்தாளர்கள் இந்த இதழ் மூலமே எனக்கு அறிமுகமாகிறார்கள். வரும் இதழில் பல புது எழுத்தாளர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று நம்புகிறேன்.

சந்தா, விளம்பரம் இரண்டும் ஒரு சிற்றிதழ் வளர்ச்சிக்கு இரு கண்கள். இந்த இரண்டையும் தவிர்த்து முதல் இதழ் கொண்டு வந்துள்ளனர்.

சிற்றிதழை நஷ்டமில்லாமல் நடத்த முடியாது. சந்தா, விளம்பரம் வைத்துதான் ஓரளவு நஷ்டத்தை தவிர்க்க முடியும். வரும் இதழ்களில் ஆசிரியர் குழு இதை ஏற்றால் தொடர்ந்து நடத்துவதில் சிரமம் இருக்காது.

முதல் இதழையே அட்டகாசமாக கொண்டு வந்த நண்பர் நிலாவுக்கும், நரனுக்கும் என் வாழ்த்துக்கள்.


நூலை வாங்க...

நரன் - 88258 25042
நிலாரசிகன் - 97910 43314

Friday, June 3, 2011

இளமை

முட்களை பொருட்படுத்தாமல்
பூக்கள் மீது அதிக கவனம் செலுத்தும்
ஒரு தீபம் ஏற்றும் போதே
நூறு தீபம் ஏற்றும் தொலை நோக்கு
பார்வை இருக்கும் !

முடிந்த பால்யத்தை நினைத்து கவலையில்லை
வரும் முதுமைப் பற்றி கனவுகளில்லை !
நடக்கும் வாழ்வை இனிமையாக
நடத்த நினைப்பது இளமை !!

வாய் சொல்லின் வீரர்கள் மத்தியில்
செயல் வீரனாய் செய்ய தூண்டுவது இளமை !
முதியவர்கள் பேச்சு வார்த்தை நடத்தும் போது
நாட்டுக்காக யுத்த களத்தில் செல்லுவது இளமை !
சனி தோஷம், செவ்வாய் தோஷம்
தூக்கி குப்பை தொட்டியில் போட வைக்கும் இளமை !
அல்லாவையும், ராமனையும் அழைத்து
அயோத்தியில் அமைதி நிலவ துடிப்பது இளமை !

உழைப்பை உதவியாகவும்
முயற்சியை நண்பனாகவும்
தன்னம்பிக்கையை ஊன்றுக் கோளாகவும்
வாழ்க்கை பாடத்தை சொல்லுவது இளமை !!

இயற்கையின் முக்கியத்துவத்தை
உணர்ந்தது இளமை !
ஒவ்வொரு மரங்கள் வெட்டப்படும் போது
வாதாட துடிப்பது இளமை !

உயிர் காப்பான் தோழன்
முயற்சி திருவிணையாக்கும்
இன்னும் பல பழமொழிகளுக்கு
உயிர் கொடுத்துக் கொண்டு இருப்பது இளமை !!

இளமை –
கன்னியரின் காதலை எழுதும்
கண்ணகியின் காவியத்தையும் எழுதும்
காமத்தை கொண்டாடும்
கர்மமென காரியத்தை செய்து முடிக்கும்

இளமை –
எட்டு திசை பார்த்த பின்பு
ஒன்பதாம் திசையை தட்டி எழுப்பும்
360 டிகிரி வட்டத்தில்
361வது டிகிரியை உருவாக்கும் !

இளமை –
இமயத்தின் உச்சியை
தொட்டு விட துடிக்கும்
இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும்
பாலம் கட்ட திட்டம் போடும் !

இளமை –
சோகங்களை சங்கீதமாக மாற்றும்
தோல்விகளை படிப்பினையாக்கும்
மூட நம்பிக்கையை தூக்கிப் போடும்
உழைப்பை உறுதுணையாக நம்பும் !

இளமை –
விரக்தியை விருந்தாளியாய் ஏற்றுக் கொள்ளாது
வறுமையை கண்டு வருத்தம் கொள்ளாது
கண்ணீரை நண்பனாய் கூட அருகில் சேர்க்காது
சோம்பலை தீண்ட சம்மதிக்காது !

பறவை இனத்தில்
பறப்பதில் கோழி விதிவிளக்கு
மீன் இனத்தில்
நீந்துவதில் டால்பின் விதிவிளக்கு
விதி இருக்கும் இடத்தில்
விதிவிளக்கை மாற்றுவது இளமை !

பீடல் காஸ்ட்ரோவில் இளமை கனவு
க்யூபாவின் புரட்சி விடுதலை !
காந்தியின் இளமை கனவு
இந்தியாவின் அகிம்சை விடுதலை !
நெல்சன் மண்டேலாவின் இளமை கனவு
கறுப்பு இனத்திற்கான விடுதலை !
பெரியாரின் இளமை கனவு
மூடநம்பிக்கையில் இருந்து விடுதலை !

புயலின் நடுவில் மீனவனின் புன்னகை
விஷ பாம்புகளின் நடுவில் இருளர்களின் புன்னகை
வெடிகுண்டு நிலத்தில் இராணுவ வீரனின் புன்னகை
மிருகங்கள் நடமாடும் காட்டில் ஆதிவாசி புன்னகை
எல்லாம் சாத்தியமாகிறது
இளமை வாழ்க்கையோடு பயணம் செய்வதால் !

இளைஞர்கள் ஆதரவில்லாமல்
யாரும் கோட்டை பிடித்ததில்லை !
இளைஞர்கள் உழைப்பில்லாமல்
போராட்டங்கள் முன்னேற்றம் அடைவதில்லை !
இளைய சமூதாயத்தை நினைக்காத
திட்டம் வெற்றி பெறுவதில்லை !
இளைஞர்களின் கருத்து இல்லாமல்
எந்த பொருளும் சந்தைக்கு வருவதில்லை !

இளைஞனின் பேனா முனை விழும் போது
ஒவ்வொருவரின் முதுகெலும்பு தட்டி எழுப்பும்
இளைஞன் தோல்வி அடையும் போது
சரித்திரத்தில் அவனுக்கான
பக்கத்தை முன்பதிவு செய்து கொள்ளும் !!

நாம் வாழும் போதே
அனுபவிக்கு அதிசயம் இளமை !!

***

சிறு கவிதை ஏற்படுத்தும் பாதிப்பை போல் பெரிய கவிதை அதிகம் பாதிப்பு ஏற்ற்ப்படுத்தாது என்பது என் கருத்து. அதனால், நீளமாக கவிதை எழுதுவதில்லை அதிகம் ஆர்வம் செலுத்துவதில்லை.

ஒரு டி.வி நிகழ்ச்சிக்காக ஐந்து நிமிடம் தொடர்ந்து கவிதை படிக்க வேண்டு என்று கேட்டுக் கொண்டதால் நீளமான கவிதையை எழுதினேன்.

Thursday, June 2, 2011

காதல் கவிதைகள் - 2

கோபத்தால்
என் இதயத்தை
துண்டு துண்டாக்குகிறாய் !

முத்தத்தால்
காந்தம் போல்
சிதறிய இதயத்தை
சேர்க்கிறாய் !

**

உன்னைப் பற்றி
எழுதும் போது
என் எழுத்துக்கள்
உன்னிடம் தவழ்ந்து வருகிறது
காரணம்
காதல் !

**



ஐம்பது கிலோ உருவம்
ஐந்து கிலோ காதல்
ஐந்து கிலோ காமம்
இரண்டு கிலோ கனவு
இரண்டு கிலோ ஆசை
ஒரு கிலோ முத்தம்
எல்லாம் சுமக்கிறேன்
எதையும் தாங்கும் இதயமடி !

**

சில சமயம் நான் முட்டாளாக இருக்கிறேன்
தெரிந்த பதிலுக்கு
வினா எழுப்புவதால்
முத்தமிடலாமா ?

**

மௌனம் முன்னுரை எழுத
கண்கள் அணிந்துரை வரைய
இதழ்கள் வாழ்த்துரை வழங்க
அச்சு செலவு இல்லாமல்
அரங்கெரிய புத்தகம்
காதல் !

Wednesday, June 1, 2011

காதல் கவிதைகள்

காதலர் தின வாழ்த்து மடல் வாங்குவதில்
உலகில் பெண்கள் 85 சதவிகிதமாம்
இந்த கணக்கை ஏற்ற
வாழ்த்து மடலை
என்று வாங்க போகிறாய் ?

**

என்னுடைய
சுறுசுறுப்பின் வடிவம் நீ
உன்னுடைய
சோம்பலின் வடிவம் நான் !



நம் இரண்டு வீட்டுக்கு நடுவில்
எழுப்பப்படும் சுவர்க் கூட
கண்ணாடியாய் தெரிகிறது
நீ சிரிப்பதால் !

**

உன்னை பார்த்ததும்
என் சைக்கில் டயர் வெடித்தது
அடைத்து வைத்த காற்றுக் கூட
பார்வையில் விடுதலை தருகிறாய்
எனக்கு ??

LinkWithin

Related Posts with Thumbnails