தமிழில் வர வேண்டிய புத்தகங்கள் இன்னும் பல உள்ளது. சொல்லப்படாத விஷயங்கள் இன்னும் இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி எழுத எழுத்தாளர்கள் தான் இங்கு இல்லை. வெளிநாட்டு சென்று லட்சக்கணக்கில் சம்பாதித்துக்கும் ஒருவனால் தன் அனுபவங்களை எழுத்தால் பதிவு செய்வதில்லை. எழுத தெரிந்தவனுக்கு வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கே.ஆர்.பி.செந்தில் போல் அரிதான சில பேருக்கு தான் வெளிநாட்டுக்கு செல்லும் தங்கள் அனுபவத்தை எழுத்தில் பதிவு செய்கிறார்கள். அதுவும் இந்த புத்தகம் யாரும் தொடாத சப்ஜெக்ட்.
“கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை” புத்தகத்தில் கலைவாணி என்ற பெண் தன் குழந்தையை காப்பாற்ற சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்காக செல்கிறாள். அங்கு சென்றதும் தான் அவளுக்கு தெரிகிறது, தன்னை ஏஜெண்ட் பாலியல் தொழிலுக்காக விற்றுவிட்டான் என்று. பல்லை கடித்துக் கொண்டு இரண்டு மூன்று மாத அந்த தொழில் செய்து இந்தியாவுக்கு வருகிறாள். பாலியல் தொழிலாளிப் பற்றிய புத்தகம் என்பதால், ஏமாற்றுக்கார ஏஜெண்ட்டுக்களை பற்றி பெரிதாக சொல்லவில்லை.
வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள், தங்கள் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப நினைக்கும் பெற்றோர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். யாரோ ஒருவனை நம்பி மூன்று லட்சம் பணம் கொடுத்து வெளிநாட்டுக்கு சென்று அதே பணத்தை சம்பாதிக்க நாய்ப்படும் பட வேண்டியதாக இருக்கிறது. வயிற்று கட்டி, வாய் கட்டி சேர்த்து வைத்தாலும் அதிகப்பட்சமாக மாதல் 10000 – 15000 ரூபாய் வரை தான் பணம் சேர்த்து வைக்க முடியும். அதற்கு, உள்ளூரிலே ஒரு தொழில் தொடங்கி இந்த பணத்தை சேர்க்கலாம் என்பதை பல இடங்கில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.
எப்படியாவது பணம் சம்பாதிக்க சட்டவிரோதமாக குடியேறும் போது நம் உழைப்பு பல இடங்களில் சுரண்டப்படுகிறது. பிரம்படி தண்டனை, சிறை அனுபவம் என்று பல சித்திரவதைகள் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை ஊருக்கு அனுப்பினால், சொந்தக்காரர்கள் தண்ட செலவு செய்கிறார்கள். இல்லை என்றால், சம்பாதித்தவர்கள் பணத்தை அங்கையே விட்டுவிடுகிறார்கள். பணம் சம்பாதிக்க பணத்தை செலவு செய்யும் மனிதர்கள் நம் நிஜ வாழ்க்கையில் பார்க்கிறோம். மற்றவர் அனுபவத்தில் நாம் கற்க வேண்டிய பாடத்தில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
கஷ்டத்தில் உதவிய நண்பனை போலீஸிடம் காட்டிக் கொடுப்பது, விபச்சாரிகளை நம்பி நம் உடைமைகளை தைரியமாக கொடுப்பது, சம்பாதித்த அத்தனை பணத்தையும் சோக்காளிகள் இந்தோனேஷியா, மலேஷியாவில் விடுவது, இறந்த பெரியவரின் உடலை செலவு செய்து வாங்க மறுக்கும் உறவினர்கள் அவர் சம்பாதித்த பணத்தை மட்டும் கேட்பது போன்ற பல சம்பவங்கள் நம்மை தூக்கி வாரி போடுகிறது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்க வைக்கிறது.
வெளிநாட்டுக்கு செல்ல ஆசைப்படுபவர்கள் சுற்றுலா பயணியாக சென்று ஒரு வாரத்தில் வந்துவிட வேண்டும். இல்லை ப்ரோபஷ்னல்ஸாக செல்ல வேண்டும். எந்த காரணத்திற்காகவும் சட்டவிரோதமாக இன்னொரு நாட்டில் குடியேறினால் நம் உயருக்கு உத்திரவாதம் இருக்காது. பணத்தை மறந்துவிட வேண்டியது தான் என்ற நூலின் ஆசிரியர் கருத்துக்கு நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.
நல்ல அட்டை வடிவமைப்பு. பொருத்தமான அட்டைப்படம். ஆனால், இந்த புத்தகத்தை பற்றின “sub-text” முன் பக்கமோ, பின் பக்கமோ எதுவும் குறிப்பிடவில்லை. புத்தகத்தில் இருக்கும் ஒரு அத்தியாயத்தின் ஒரு பகுதியை பின் பக்கம் சொல்லியிருந்தாலும், வாசகன் “பணம் சம்பாதிப்பது எப்படி ?” என்ற யுகத்தில் புத்தகத்தை வாங்கவோ, மறுக்கவோ வாய்ப்பிருக்கிறது.
இந்த புத்தகத்தில் வரும் “நான்... நானல்ல” என்ற ஆசிரியர் disclaimer செய்தாலும், இதில் அவர் எந்த “நானாக” இருப்பார் என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. செந்தில் சட்ட விரோதமாக தங்கிய பல குடியேறிகளை பேட்டி எடுத்திருக்கிறார். தன் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
பணத்தேவை அதிகமாகிவிட்டதால் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி பலரிடம் பார்க்க முடிகிறது. அந்த வெறியை வைத்து பணம் சம்பாதிக்கும் வெறி பிடித்த மனிதர்கள் நம்மை சுற்றி பலர் இருக்கிறார்கள். நம் பணம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அதை விட நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இணையத்தில் நூலை வாங்க.... இங்கே
பக் : 128, விலை : ரூ.90
ழ பதிப்பகம்
8 comments:
நல்ல விமர்சனம் குகன் . நன்றி
\\கலைவாணி என்ற பெண் தன் குழந்தையை காப்பாற்ற சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்காக செல்கிறான்\\
கலைவாணி,வீட்டு வேலைக்கு செல்கிற வழியில் ஆணாக மாறிவிட்டாளா..? அதிர்ச்சியாக இருக்கிறது.
நல்ல விமர்சனம்..
நல்ல விமர்சனம்..
மிக்க நன்றி தலைவரே..
என் புத்தகத்துக்கான முதல் விமர்சனம் உங்களுடையதுதான்..
வெளிநாட்டு மோகத்தில் திரியும் இளைஞ்ர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் ......
இளமையை விற்று எதை வாங்கி வர போகிறார்கள் ?
பாரின் ரிட்டன் என்ற உடன் கண்ணை மூடிக்கொண்டு பெண் குடுக்கும் பெற்றோர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ............
ம்ம்ம் அருமையான விமர்சனம், உங்களின் விமர்சனத்தை படிக்கும் போது புத்தகத்தையும் உடனே படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது, வாழ்த்துக்கள் உங்களுக்கும், செந்தில் சாருக்கும்...
விரிவான விமர்சனம், குகன்.
நன்றிகள்!
Post a Comment