எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா எழுத்துகளை வாசிக்கும் போது அடிக்கடி அவர்கள் சொல்லும் பெயர் தாஸ்தாயேவ்கி, ஹேமிங்வே, பாப்லோ நெருடா. இவர்கள் குறிப்பிடும் எழுத்தாளர்கள் அவ்வளவு பெரிய ஆளா...? சும்மா... இந்த எழுத்தாளர்கள் புராணமே பாடுகிறார்கள். படித்து பார்த்து விட வேண்டியது தான் என்று அவர்கள் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களை தேடிபார்த்தேன். அதிஷ்ட வசமாக பாப்லோ நெருடா, ஹேமிங்வே அவர்களை பற்றி தமிழ் புத்தகமே கிடைத்தது.
மஹாகவி பாப்லோ நெருடா
விலை.80
நிழல் வெளியீடு
வாழ்க்கை வரலாறு, கவிதைகள், நினைவலைகள், நேர்முகம், நோபல் பரிசு ஏற்புரை என்று பாப்லோ நெருடா சம்மந்தமான எல்லா கலவை சேர்ந்து தொகுத்த நூல். அதனால், கவிதை, கட்டுரை, வரலாறு என்று எந்த வகையிலும் பிடிப்படாத நூலாக இருக்கிறது. பலர் ஒவ்வொரு பகுதியை மொழிப்பெயர்த்து இருப்பதால், சில இடங்களில் மொழிப்பெயர்ப்பு சுமாராக தான் இருக்கிறது.
சில கவிதைகள் படிக்கும் போது என்னை அறியாமல் ஈழத்தில் நடக்கும் போராட்டத்தை ஒப்பிட தோன்றியது. அவர் கவிதைகளில் எனக்கு பிடித்த சில கவிதைகள்...
இன்றிரவு என்னால் எழுத முடியும்
இனி அவளை நான் காதலிப்பதில்லை. அது நிச்சயம்
எனினும் அவளை எவ்வளவு நேசித்திருந்தேன்
காற்றைத் தேடியலைந்தது என் குரல், அவள் செவிப்புலனைத்தோட
இன்னொருவனின் உரிமையாவாள் அவள்
எனது முந்திய முத்தங்கள் போல
அவளுடைய குரல், பிரகாசமான உடல் முடிவற்ற கண்கள்
இனி அவளை நான் கதலிப்பதில்லை
அது நிச்சயம் எனினும். காதலிக்க நேரலாம்.
நான் சில விஷயங்கள் விளக்குகிறேன்
ஸ்பெயினின் ஒவ்வொரு மூட்டிலிருந்தும்
ஸ்பெயின் வெளிவருகிறது
ஒவ்வொரு இறந்த குழந்தையிலிருந்தும்
கண்களுடன் ஒரு துப்பாக்கி
குண்டுகள் உருவாகின்றன ஒவ்வொரு குற்றத்திருந்தும்
அவை ஒரு நாள்
உம் இதயத்த்தின் மையத்தை தேடும்
தனிப்பாசுரம்
என்னைப் போல் உள்ள மற்ற மனிதரை
எப்பொழுதும் நேசித்தத் தாயாராய் உள்ள
ஏழை மனிதன் நான்
நாம் பலர்
முறையாக நானே எனக்கு
மெய்யாலும்மே தேவைப்பட்டால்
என்னை நானே மறைந்து கொள்ள
அனுமதிக்கக் கூடாதல்லவா ?
அமெரிக்காவின் வன்கொடுமையாளர்கள்
காலியான பாழ்நிலத்தில் எனது கவிதைக்குள்
கைதிகள் நிரப்பப்படுகின்றனர்
புத்தகம்
காதலின் உறுதியற்ற கணம்
தனது முத்தத்தை ஒரு பொதும் எழுதி வைக்காத
மனதின் சூறையாடல்
ஸ்பெயின் போராட்டமும், ஈழத்தில் போராட்டமும் நடக்கும் காலகட்டம் வேவ்வெறாக இருக்கலாம். ஆனால், போராட்டம் ஒன்று தான்.
--
கடலும் கிழவனும்
பல நாட்களாய் கடலுக்கு சென்று வெற்றுக்கையுடன் கரைக்கு திரும்புகிறான் கிழவன். அவனுக்கு ஆறுதல் கூறும் சிறுவன், அடுத்த பயணத்தில் தானும் வருவதாக கூறுகிறான்.
இருந்தும், மீண்டும் தன்ந்தனியாக கடலுக்கு செல்கிறான். நடுகடலில் மீனுக்காக காத்திருக்கிறான். தான் ஒரு துரதிஷ்டசாலி என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு, பெரிய மீன் அவன் வலையில் வந்து மாட்டிக் கொள்கிறது. இரண்டு நாட்களாக கடுமையாக போராடி அந்த மீன்னை கொள்கிறான்.
அந்த மீன் படகை விட பெரிதாக இருப்பதால், தன் படகில் கட்டி இழுத்து வருகிறான். கரைக்கு வரும் வழியில் அந்த பெரிய மீன்னை சுறா மீன் வருகிறது. அதனோடு யுத்தம் செய்து கரைக்கு மீனோடு திரும்புவது தான் கதை. இடையில், பேஸ்பால் போட்டியில் யார் வென்றிருப்பார்கள் என்று எண்ணுவதும், அந்த சிறுவன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பதும், தனியே உறக்க கத்துவதும் என்று நாவல் முழுக்க கிழவன் மட்டுமே தான் வாழ்கிறார்.
ஒரு கதாபாத்திரம் வைத்து நாவலின் பெரும் பகுதியை ஸ்வாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் ஹெமிங்வே.
உரையாடல் வசனங்கள் சுத்த தமிழில் இருப்பதால், மீனவர்கள் வாழும் இடத்தில் கொண்டு செல்ல நம்மை தடுக்கிறது. மொழிபெயர்ப்பு நாவல் என்று அவ்வபோது நியாபகம் படுத்தும் வசங்களாகவே இருக்கின்றன.
ஏர்னெஸ்ட் ஹெமிங்வே
வ.உ.சி.நூலகம்
விலை.50
****
மனதை தொடும் நிகழ்வுகளை மொழிபெயர்ப்பு செய்யும் போது கோட்டை விட்டது போல் உள்ளது. இதனால், நோபல் பரிசு பெற்ற இரண்டு பெரும் எழுத்தாளர்களில் படைப்பை படித்த திருப்தி முழுமையாக கிடைக்கவில்லை.
4 comments:
தலைவரே இந்த புக் எங்கே கிடைக்கும்....
higginbothams இல் இருக்குமா???
அதே போல் முருகவேல் எழுதியே எரியும் பனிக்காடு
பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.....
அதாவது பதிப்பகத்தின் பெயர்...
தகவுலுக்கு ந்னறி
குகன், எதற்கும் நேரம் கிடைத்தால் ஆங்கிலத்திலும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.தமிழுக்கு ஆங்கிலம்
பரவாயில்லை என நினைக்கிறேன்.
Post a Comment