வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 29, 2013

சாயாவனம் - சா.கந்தசாமி

ஒரு படைப்பு காலம் கடந்து நிற்கும் என்பதற்கு இந்த படைப்பு ஒரு உதாரணம். சுமார் நாற்பது வ்ருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நாவல், இன்றைய காலக்கட்டத்தில் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

விஞ்ஞானிக்கு பிறகு நடக்கப்பதை கணித்து சொல்பவன் படைப்பாளியாக தான் இருக்க முடியும். விஞ்ஞானி கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கணித்து சொல்கிறான். ஆனால், ஒரு படைப்பாளி மனிதர்களை வைத்து எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க கூடும் என்ற சாத்தியங்களை முன்பே கணித்து எழுதுகிறான். அந்த காலக்கட்டத்தில் வாசிக்கும் போது ஒரு கற்பனை கதையாய் தெரியலாம். ஆனால், அந்த சம்பவம் நிகழும் போது எப்படி இவர் முன்பே கணித்து இருக்கிறார் என்பது எல்லோரையும் வியக்க வைக்கும்.


'சாயாவனம்' - அந்த வகையில் சேர்ந்த நாவல்.

ஒரு மனிதன் வனத்தை அழித்த கதையை, நாற்பது ஐந்து  ருடங்கள் முன்பே எழுதப்பட்டிருக்கிறது. இன்று மனிதன் தனது சுயநலத்திற்காக எத்தனையோ மரங்களை, செடி கொடிகளை வெட்டி சாய்ப்பதற்கு நவீன கருவிகளை கண்டுபிடித்திருக்கிறான். ஆனால், நாற்பது ஐந்து வருடங்கள் முன்பு கோடாளி, அருவாள் மட்டுமே நம்பி வனத்தை அழிக்கும் காட்சியை கண் முன்னே கொண்டு வருகிறார்.

சக்கரை ஆலை தொடங்குவடற்காக சாயாவனத்தின் மரங்களை அழிக்கும் வேலையில் ஈடுப்படுகிறான் சிதம்பரம். அவனுக்கு உதவியாக அந்த ஊரில் தேவர் நட்பு கிடைக்கிறது. தனக்கு வேலை ஆக வேண்டும் என்பதற்காக தேவரின் அக்கா மகன் என்ற போர்வையில் சிதம்பரம் வருகிறான். தனது வனத்தில் வேலை செய்ய வெளியூரில் இருந்து ஆட்கள் கொண்டு வராமல், ஐயர் பண்ணையில் வேலை செய்பவர்களை வைத்து வேலையை முடிக்கிறான்.

முங்கில் மரங்களை வெட்ட காலத்தை குறைக்க, முங்கில் காட்டை எரிக்கிறான். அதற்கு, தேவரும் உதவி செய்கிறார். 'கறும்பு இந்த நிலத்தில் விளையாது' என்று ஆரம்பத்தில் ஒரு சிலர் சொல்லுவதை புரக்கணித்து, சக்கரை ஆலைக்காக வனம் அழிக்கப்படுகிறது. ஆனால், அந்த சக்கரை ஆலைக்காக கறும்பு கொண்டு வர நடை முறை சிக்களை சந்திக்கிறான். 

மனிதனுக்கும், மரத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் மனிதன் தான் வெல்கிறான். ஆனால், மரம் இறுதிவரை போராடி மனிதனை தோற்கடிக்க விரும்புகிறது. மரம் மனிதனை எளிதாக வெற்றிப் பெற செய்வதில்லை என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது.

சாகித்திய விருது பெற்ற சா.கந்தசாமி அவர்களின் 'முதல் நாவல்' என்பது குறிப்பிடதக்கது.


வாங்க....

சாயாவனம்

சா.கந்தசாமி
காலச்சுவடு  பதிப்பகம்
ரூ.150


Tuesday, May 28, 2013

ஹைக்கூ கவிதைகள் - 13

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
சதுரங்கங்கத்தில் !

**

ஊழலை ஒழிக்க
மக்கள் தற்கொலை
முந்தைய ஆட்சிக்கு ஓட்டு !!

**

குடும்பங்கள்
காந்தி வழியில்
பிரச்சனைக்கு உண்ணாவிரதம் !!

**

சமூகத்தில்
அங்கிகரிக்கப்படாத விதவை
முதிர்கன்னி !

**

என்னோடு இருந்தும்
என்னை தனிமையாக்கி விடுகிறாய்
செல்போன் உரையாடலில் !

Friday, May 24, 2013

ஹைக்கூ கவிதைகள் - 12

கூடாங்குளம்
ஒரு அரசியல்வாதியை உருவாக்கியது
அப்துல் கலாம் !

**

கூடாங்குளம்
ஒரு தலைவனை உருவாக்கியது
உதயகுமார் !

**

இருபதாம் நூற்றாண்டின்
ராஜபக்சே
ஹிட்லர் ! 

**
இருப்பதியன்றாம் நூற்றாண்டின்
ஹிட்லர்
ராஜபக்சே !

**
இரண்டு நாடுகள் ஆடும்
டென்னிஸ் பந்து
அகதி !

**
இன்றைய தேவை
இஸ்லாம் மதத்தில்
பெரியார்.

**
பல புத்தகங்களை படித்த
மனநிறைவு
பெரியாரின் பேச்சு !

Thursday, May 23, 2013

இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?

தமிழர்கள் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால்  "இராஜீவ் காந்தி படுகொலை" என்று எளிதில் பதிலளித்துவிடுவோம். அதேப் போல், சீக்கியர் வாழ்க்கையில் கருப்பு பக்கங்கள் எப்போது தொடங்கியது என்று கேட்டால் "இந்திரா காந்தியின் படுகொலை" என்று தான் சொல்ல வேண்டும்.



எண்பதுகளில், தொன்னூறு தொடக்கத்தில் ஆப்கானில் அமெரிக்கா இஸ்லாமியதீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டு இருந்த காலக்கட்டத்தில், பாகிஸ்தான் சீக்கிய தீவிரவாதத்தை இந்தியாவில் வளர்த்து வந்தது. பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதற்காகவும், தங்கள் தலைவரைக் கொன்றதற்காகவும், இரண்டு சீக்கியர்கள் இந்திரா காந்தியை கொலை செய்தனர்.ஆனால், அதன் பின்னால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ இருக்கிறது என்று இந்த நூல் சொல்கிறது.

இந்திரா காந்தி மீது என்ன விமர்சனங்கள் இருந்தாலும், இந்திய இறையாண்மையை அமெரிக்காவுக்கு தலைவனங்காமல் பாதுகாத்தவர். அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் சோவித்துடன் கைகோர்த்தவர். இந்தியா பாகிஸ்தான் அணு உலை சோதனையை தடுக்க திட்டமிடுவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. ஒரு வேலை இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், சோவியத்துக்கு எதிராக ஆப்கானுக்கு உதவ தங்களால் முடியாமல் போகுமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறார்கள்.

ஆப்கான் போராட்டம் பாதிக்கப்பட்டால், சோவியத் கை மேலோங்கும். அதனால்,சீக்கியர்களின் ஆதங்கத்தையும், கோபத்தையும் அந்நிய சக்திகள் தங்களுக்கு சாதகமாகபயன்படுத்தி கொன்றார்கள் என்கிறது இந்த நூல்.

விறுப்பு விறுப்பு நிறைந்த நாவல் போலவே எழுதியிருக்கிறார் தாரிக் அலி. இடையே , இந்திராகாந்தியின் பகடி செய்வது போல் வசனங்களும் எழுதியிருக்கிறார்.

இன்று, அமெரிக்காவுக்கு அடிவருடும் இந்தியா, முப்பது வருடங்கள் முன்பு அமெரிக்கா,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை எதிர்த்து போராடி இந்தியாவை நிமிர செய்த ஒரு இரும்பு பெண்மணி மரணத்தை திரை வடிவமாக காட்டுகிறார் இந்த நூலின் ஆசிரியர்.


நூலை வாங்க.....

இந்திரா காந்தியைக் கொன்றது யார் ?
தாரிக் அலி
மதுரை பிரஸ்
ரூ.160.

Monday, May 20, 2013

இரண்டு நூல் விமர்சனம்

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
கோபிநாத் 

சுயமுன்னேற்ற புத்தகங்கள் படிப்பதற்கு சரியான நேரம் வேண்டும், அதற்கான மனநிலையில் படிக்க வேண்டும் என்று சமீபத்திய கடலூர் பயணம் உணர்த்தியது. கடலூருக்கு சென்று ஒரு நாள் வீணாக்கிவிட்டோமோ என்ற மனநிலையில் தான் “ ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!” படித்தேன்.

இந்த உலகம் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. நாம் தான் எவ்வேறு கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து ஸ்வாரஸ்யமாக்கி கொள்ள வேண்டும் என்ற சிந்தனை பிடித்திருந்தது. குறிப்பாக, கோபியின் நண்பர் தாமஸ் “தினமும் செல்லும் பாதை இருந்து வேறு பாதையில் அலுவலகத்துக்கு சென்று பாருங்கள்” என்று சொல்லும் போது… சின்ன சின்ன விஷயங்கள் நம்மை ஸ்வாரய்மாக்க காத்துக் கொண்டு இருக்கிறது. பிறகு, ஏன் ஸ்வாரஸ்யம் இல்லை என்று வருந்த வேண்டும்.

“ஒன்றுமே செய்யாமல் ஒரு நாள் வீணாக்கி விட்டோமே!” என்று வருந்திய நேரத்தில் உருப்படியாக செய்தது இந்த புத்தகத்தை வாசித்தது தான். 

வாங்க.... 

 ***

அபிதா – 
லா.ச.ரா 

 தனது பழைய காதலி சகுந்தலை அழகை உரித்து வைத்தது போலவே அவளது மகள் ‘அபிதா’ இருக்கிறாள். மகள் வயதில் இருக்கும். ஆனால், மகளாக நினைக்க தோன்றவில்லை. காதலியின் மகளாக இருந்தாலும், அவளைப் போலவே இருப்பவளை எப்படி மகளாக பார்க்க முடியும் ?. காதலா ? காமமா ? என்று ஒன்றும் புரியாத உறவின் வெளிப்பாடு. காதலியிடம் பேச முடியாத வார்த்தைகளை அவள் மகள் உருவத்தில் இருப்பவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை.

இப்படி விபரித ஆசைகளுடன் வீட்டுக்கு விருந்தினராக வந்தவனை வெகுளிதனமாக உபசரிக்கிறாள் அபிதா. ஒரு கட்டத்தில் தான் காதலித்தது சகுந்தலையா ? அவளது மகள் அபிதாவா ? என்ற சந்தேகிறது மனம்.

தமிழில் வாசிக்க வேண்டிய நாவல் வரிசையில் ‘அபிதா’ வுக்கு மிக முக்கிய இடம் உண்டு. இலக்கிய ஆர்வமுடையவர்கள் கண்டிப்பாக இந்த நாவலை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்.

வாங்க....

LinkWithin

Related Posts with Thumbnails