வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label சத்யம். Show all posts
Showing posts with label சத்யம். Show all posts

Monday, January 12, 2009

முதலில் சத்யம்.. அடுத்து விப்ரோ

உலக வங்கி நிறுவனம் எட்டு வருடங்களுக்கு சத்யம் சேவையை தூண்டிப்பதாக அறிவித்திருந்தன. இதை அடுத்து, மேடாஸ் நிறுவனம் விவகாரம், கணக்கு மோசடி, ராமலிங்க ராஜூ வாக்குமூலம் என்று சத்யம் நிறுவனத்திற்கு எதிராக பல செய்திகள் நாளேடு வணிக பக்கங்களை நிரப்பிக் கொண்டு இருக்கிறது. இதை அடுத்து இன்று, உலக வங்கி நிறுவனம் ‘விப்ரோ’ நிறுவனத்தின் சேவை நான்கு வருடம் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த செய்தி ஐ.டி நிறுவனங்களுக்கு மேலும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

உலக வங்கியிடம் வணிகம் செய்யும் எந்த நிறுவனமும் அதன் வங்கி ஊழியர்களுக்கு தனிபட்ட முறையில் பரிசு, அன்பளிப்பு, பணம் என்று எதுவும் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் அந்த வங்கி நீதிப்படி ‘லஞ்சம் கொடுப்பது போல்’ ஆகும். விப்ரோ நிறுவனம் தங்கள் பங்குகளை குறைந்த விலையில் உலக வங்கி ஊழியர்களுக்கு விற்றுள்ளது. இதனால் உலக வங்கி விப்ரோ நிறுவனத்தின் சேவை உறவை தூண்டித்துள்ளது. இதே போல் மேகா ஸ்பாட் என்று இன்னொரு நிறுவனத்தின் உறவையும் நான்கு ஆண்டு தூண்டித்துள்ளது.
மேகா ஸ்பாட் நிறுவனம் உலக வங்கி வணிகம் செய்யும் அதே துறையில் கால் பதிக்க உள்ளதால், மேகா ஸ்டாப் நிறுவனத்தை போட்டி நிறுவனமாக கருதி உறவை முடித்துள்ளனர். உலக வங்கியின் இந்த அதிரடி முடிவால் விப்ரோவின் பங்குகள் 10 சதவீதமும், மேகா ஸாப்ட் பங்குகள் 8 சதவீதம் இறங்கியுள்ளது.

சத்யம் விவகாரம் முதலில் தொடங்கி வைத்தவர் 'உலக வங்கி' என்பது குறிப்பிடதக்கது. உலக வங்கி முடிவுக்கு பிறகு தான் சத்யம் நிறுவனத்துக்கு அடி மேல் அடி விழுந்தது. இப்போது உலக வங்கி இதே முடிவை விப்ரோ நிறுவனத்துக்கு எதிராக எடுத்திருப்பதால் ஐ.டி. துறையில் மேலும் தள்ளாட்டம் ஏற்ப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், உலக வங்கி உறவு முடித்துள்ள இந்த மூன்று நிறுவனங்களுமே இந்திய நிறுவனங்கள் என்பதால் இந்திய நிறுவனங்களுக்கு இன்னொரு கருப்பு புள்ளியாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இன்னும் என்ன நடக்க போகிறதோ என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Saturday, January 10, 2009

கை மாறிய சத்யம் நிறுவனம்

இரண்டு, மூன்று நாட்களாக முழு பக்க கட்டுரையாக வந்த 'சத்யம்' ராமலிங்க ராஜூ விவகாரம், ஒரு வழியாக கைது செய்யப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. எந்த நிறுவனமும் சத்யம் நிறுவனத்தை வாங்க முன் வராததால், மத்திய அரசு கட்டுப்பாட்டு கீழ் வந்துள்ளன. . பத்து போர்ட் மெம்பர்ஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி எப்படியும் நாளைய நாளிதழில், வாரயிதழில் வரும் (நாளடைவில் இது பெட்டி செய்தியாக மாறும்.) இன்று Times of India படித்த இரண்டு விஷயங்களை பற்றி சொல்லியாக வேண்டும். முதல் விஷயம் என் மனதை நெருடியது. அடுத்த விஷயம் அதிர்ச்சி உள்ளாக்கியது.

ஐ.டி துறையில் யூனியன் இருந்தால் இந்த பிரச்சனை வராமல் இருந்திருக்கும் என்று பலர் பேட்டி அளித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை யூனியன் இருந்திருந்தால், நிறுவனம் நஷ்டப்பட்டாலும் தங்களுக்கு மாத சம்பளம் வேண்டும் என்று எல்லா ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கி இருப்பார்கள். ஆனால், சத்யம் விஷயத்தில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அப்படி எதுவும் நடந்துக் கொள்ளவில்லை.


நேற்று, ஹைதிராபாத்தில் சத்யம் ஊழியர்கள் நிறுவனத்தின் முன்பு ‘Spirit of Satyam’ என்று வண்ண நிறங்களாலும், பேனாவாலும் கையெழுத்து போட்டனர். ஒரு நிறுவனம் வீழ்ச்சி காணும் நிலையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மேலும் தொந்தரவு கொடுக்காமல் ‘துணையாக இருப்போம்’ என்று கூறுவதை பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. (15,000 பேர் வெளியில் வேலை தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். தேடினாலும் வேலை கிடைக்க வேண்டுமே...!)

இது வரை வந்த செய்தி, ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது போல் எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. இரண்டு மாதம் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் நிறுவனம் இருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பது தெரியவில்லை. மீண்டும் 'சத்யம்' துடித்து எழுந்தால், 'இந்த கஷ்டத்தில் ஆதரவாய் இருந்த ஊழியர்களுக்கு நிச்சயமாக அதிக பங்கு இருக்கும்.

‘Spirit of Satyam’ மனதை நெருடிய செய்தியை படிக்கும் போது இன்னொரு செய்தியையும் படித்தேன். செப்டம்பர் 30,2008 முடிவில் சத்யமின் மொத்தம் ஊழியர்கள் 52,865. ஆனால், நேற்று வரை(ஜனவரி,2009) சத்யம் ஊழியர்கள் எண்ணிக்கை 47,570 பேர்கள். அதுவும் வெளியே துரத்தப்பட்ட ஊழியர்கள், தானாக வேலையை விட்டு சென்ற ஊழியர்கள் தகவல்கள் சரியாக டேடா பேஸ்யில் இல்லை என்பது தான். வங்கி கணக்குகள் ஊழியர்கள் பெயரில் இருக்கிறது. ஆனால், அந்த ஊழியர் அந்த நிறுவனத்தை விட்டு சென்று விட்டார் என்கிறார்கள். பெரும்பாலான ஊழியர்கள் கொத்தாக சென்றதால், அவர்களில் தகவல்கள் சரியான முறையில் அப்டேட் (update) செய்ய முடியவில்லை.

மேடாஸ் விவகாரத்தில் 30% வீழ்ச்சி, முக்கிய வாடிக்கையாளர் உலக வங்கி கொடுத்த புகார், ராமலிங்க ராஜூவின் வாக்குமுலத்தின் 78% வீழ்ச்சி என்று தினமும் எதாவது ஒரு அதிர்ச்சியான தகவல் சத்யம் நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் வருகிறது. ஜனவரி 7 அன்று புதன்கிழமை நிஃப்டி 700 புள்ளிகள் வீழ்ச்சிக்கு சத்யம் பங்குகள் இருந்ததால், ஜனவரி 12 முதல் சத்யம் நிறுவனம் நிஃப்டியில் இருந்து விலக்கப்படுகிறது. சத்யம் பங்குகளை வாங்கியவர்கள் இது வரை 13,000 கோடி இழந்துள்ளார்கள்.

கை மாறிய சத்யம், ஊழியர்களுக்கு மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ‘துணையாக இருப்போம்’ என்று கூறிய ஊழியர்களுக்கு மத்திய அரசும் துணையாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாக இருக்கும்.

Wednesday, January 7, 2009

எங்கு போகிறது சத்யம் நிறுவனம் ?

கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் அவர்களுடைய டிரீம் கம்பேனியை (கனவு நிறுவனம்) பற்றி கேட்டால் அவர்கள் கூறும் பதில் ‘Infosys, TCS, Satyam’. இந்த பதிலை கேட்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கும். காரணம், இந்த மூன்றுமே இந்திய நிறுவனங்கள் என்பதால் தான். ஆனால், இன்று ராமலிங்க ராஜூவின் ராஜினாமாவும், பல ஆண்டுகள் நடந்த மோசடிகளும் அதில் வேலை செய்யும் 50,000 ஊழிகளின் வாழ்க்கை கேள்வி குறியாக்கியுள்ளது.

நெற்று 178 ரூபாய் இருந்த சத்யம் பங்கு இன்று நாற்பது ரூபாயாக உள்ளது. அவரது சகோதரின் முன்னால் நிறுவனமான சிஃபி பங்குகள் கூட உலக பங்கு சந்தையில் வீழ்ச்சியை கண்டது. ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ மீண்டும் அதன் பங்கு ஏறலாம். முதலீட்டாளர்களுக்கு லாபம் வரலாம். ஆனால், அங்கு வேலை செய்பவர்கள் நிலை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எந்த பதிவுகளும் அவர்களுக்காக வருத்தம் கூட தெரியவில்லை. இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் அவர்களுக்கு வேலை போனால் பல பேரின் வாழ்க்கை என்னாகும், அவர்கள் வேலைக்கு பாதுகாப்பு உள்ளதா என்று எந்த ஊடகமும் செய்தி தரவில்லை.

இரண்டு மாதங்களாக சத்யம் ஊழியர்களை எப்படி வேலையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்று பலருக்கு தெரியாது. Dress Code அடிப்படையில் நூற்றுக்கு மேற்ப்பட்டவர்கள் வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினர். ஷூ போடாமல் அலுவலகத்திற்கு வருவது, ஷர்ட்டை டக் இன் செய்யாமல் இருப்பது, அரை மணி நேரம் காலதாமதம் போன்ற விஷயங்களை பெரிதாக்கி வேலையை விட்டு போக சொன்னார்கள். மதியம் 2 மணிக்கு தனிப்பட்ட முறையில், ஒரு ஊழியருக்கு ஹெச்.ஆரிடம் இருந்து போன் வரும், 'மாலை 5 மணிக்குள் வேலையை விட்டு போகவில்லை என்றால் உன்னை வேலையை விட்டு அனுப்பிவிடுவோம் (Termination)' என்று மிரட்டுவர்.

Termination கொடுத்து விட்டால் எந்த நிறுவனத்திற்கு சென்று வேலை வாங்க முடியாது. அதனால், தங்கள் பயம் காரணமாகவே பல சத்யம் ஊழியர்கள் வேலையை விட்டு சென்றனர். வேலையில்லாமல் சத்யம் நிறுவனத்தில் இருப்பவர்களின் நிலை இன்று வரை இது தான். எந்த நேரமும் தங்களுக்கு ஹெச்.ஆரிடம் இருந்து இப்படி ஒரு போன் வரலாம் என்ற பயத்தில் தான் அங்கு வேலை செய்கிறார்கள்.

மிக அமைதியாக பத்திரிக்கைகளுக்கு தெரியாமல், தொலைக்காட்சி மீடியாவை ஏமாற்றி தனது ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிய சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்க ராஜூ "எல்லா பணத்தை என் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக செலவு செய்தேன். அதில் இருந்து ஒரு பைசா கூட நான், என் உறவினர்கள் எடுக்கவில்லை” என்று கூறுகிறார். தனது நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாக இருந்தால் வளர்ந்த நிறுவனத்தோடு தங்களை இணைத்துக் (M&A) கொண்டு இருக்கலாம். பொய்யான லாபத்தை காட்டி சத்யம் பங்குகளின் விலையை உயர்த்தி மக்கள் பணத்தை ஏன் ஏப்பம் விட வேண்டும்? இனி தவறு மறைக்க முடியாத நிலையில் "ஊழியர்களின் பெயரை சொல்லி கருணை சம்பாதிக்க பார்க்கிறார்”. தன் தவறு தனது ஊழியர்களிடம் இருந்து ஆதரவு எதிர்பார்க்கிறார்.

தனது நிறுவனம் செய்த மோசடிக்கு யாரூக்கு சம்மந்தமில்லை என்பது எல்லோர் காதிலும் (செஃபி உட்பட) பூ சுத்துவது போல் தனது ராஜினாமா கடிதத்தில் ஒன்று குறிப்பிடுயிருந்தார். தன் நிறுவனத்தில் நடந்த மோசடி எந்த போர்ட் மெம்பர்ஸ்க்கும் தெரியாது என்று கூறியுள்ளார். சத்யம் ஆடிட் செய்த ஆடிட்டர்கள், போர்ட் மெம்பர்ஸ் எல்லோருக்கும் இதில் கண்டிப்பாக பங்கு இருக்க வேண்டும். மாதம் சம்பளம் வாங்கும் நாமே வீட்டு வரவு, செல்வை பார்க்கும் போது கோடி கணக்கில் முதலீட்டு செய்த போர்ட் மெம்பர்ஸ் ஆண்டு நிதி கணக்கை பார்க்காமல் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் என்பது மிக அபத்தமாக உள்ளது. படிக்காத பாமரன் கூட எவ்வளவு செலவானது என்று கேள்வி கேட்பான். அந்த கேள்வி கூட கேட்க தெரியாதவர்கள் போர்ட் மெம்பர்ஸ்யில் இருக்கிறார்களா ? அல்லது கேள்வி கேட்காதவர்களை போர்ட் மெம்பர்ஸாக வைத்திருக்கிறார்களா ? என்று புரியவில்லை.

சிறு முதலீட்டாளர்கள் சார்பில் கேள்வி கேட்க வேண்டிய சுதந்திர போர்ட் இயக்குநர் (Independent Board Director) சில நாட்களுக்கு முன்பு தான் தன் வேலையை ராஜினாமா செய்தார். பல ஆண்டுகள் நடந்த மோசடியை கேள்வியை கேட்காமல் அமைதியாக இருந்தவர், திடீர் நல்லவன் போல் சத்யம் விட்டு ஒதுங்கிய அந்த Independent Board Director மீதும் தவறு இருக்கிறது.

இப்படி சத்யம் நிறுவனத்தில் பல பேர்களுக்கு பங்கு உண்டு என்பது தெளிவாக புரிக்கிறது. ஆனால், ராமலிங்க ராஜூ தன் மீது தவறை சுமத்திக் கொண்டு மற்றவர்களை காப்பாற்ற நினைக்கிறார். சத்யம் நிறுவனத்தின் மோசடியால் உலக வர்த்தக பார்வையில் இந்திய ஐ.டி நிறுவனங்களின் நேர்மையை சந்தேகிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

முதலீட்டாளார்களின் பணத்திற்கு செஃபி தலையிட்டு ஒரு தீர்வு காணும். சத்யம் நிறுவனத்தை வாங்க வேறு ஒரு நிறுவனம் முன் வரும். ஆனால், அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலை போனால்...... இன்னும் வேலையில்லாத திண்டாட்டம் அதிகமாகும். பண மோசடி போன்ற போன்ற பிரச்சனை வரமால் செஃபி எடுக்கும் நடவடிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். வேலையில்லாத திண்டாட்டம் வரமால் இருக்க என்ன செய்ய போகிறார்கள் ????

கேள்விகள் மட்டுமே உள்ளன. பதில் பண முதலைகளிடம் உள்ளது. விழுங்கிய பணத்தை ஏப்பம் விட்டுக் கொண்டு இருப்பதால் விடைக்காக பலர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

( பின் குறிப்பு : இந்த வருடம் ஆரம்பமே சரியில்லை சார்...!)

LinkWithin

Related Posts with Thumbnails